புகழ்
1:1   بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1:1. அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே ஆகும்.
2:30   وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً ؕ قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَآءَۚ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَ‌ؕ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ‏
2:30. (நபியே!) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி, "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப்போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) அதில் குழப்பத்தை உண்டாக்கி இரத்தம் சிந்தக்கூடியவரையா நீ அமைக்கப்போகிறாய்? இன்னும், நாங்களோ உன் புகழைக்கொண்டு உன்னைத் துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றுபவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன், "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.
3:188   لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ يَفْرَحُوْنَ بِمَاۤ اَتَوْا وَّيُحِبُّوْنَ اَنْ يُّحْمَدُوْا بِمَا لَمْ يَفْعَلُوْا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ‌ۚ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
3:188. எவர்கள் தாம் செய்த (சொற்பமான) தைப் பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டி)க் கொண்டு புகழப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்துவிட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒருபோதும் எண்ணாதீர்! அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
4:131   وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ‌ؕ وَلَـقَدْ وَصَّيْنَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِيَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ‌ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَكَانَ اللّٰهُ غَنِيًّا حَمِيْدًا‏
4:131. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் 'அல்லாஹ்வையே பயந்துகொள்ளுங்கள்' என்று நாம் உபதேசம் செய்தோம்; நீங்கள் அவனுக்கு மாறுசெய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும், அல்லாஹ் தேவையற்றவனாகவும், புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.
6:1   اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَجَعَلَ الظُّلُمٰتِ وَالنُّوْرَ  ؕ ثُمَّ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ يَعْدِلُوْنَ‏
6:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் உண்டாக்கினான்; அதன் பின்னரும், நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.
6:45   فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِيْنَ ظَلَمُوْا‌ ؕ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
6:45. எனவே, அக்கிரமம் செய்துகொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
7:43   وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِىْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ‌ۚ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ هَدٰٮنَا لِهٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَاۤ اَنْ هَدٰٮنَا اللّٰهُ‌ ‌ۚ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَـقِّ‌ ؕ وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَـنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
7:43. மேலும், (உலகில் அவர்களுக்கு மத்தியில்) அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்த குரோதத்தையும் நாம் நீக்கிவிடுவோம்; அவர்களுக்குக் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்: இன்னும், அவர்கள் கூறுவார்கள்: "இ(ந்தப் பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்; எங்கள் இறைவனுடைய தூதர்கள் சத்தியத்தையே நிச்சயமாகக் கொண்டுவந்தார்கள்:" (அப்பொழுது) "இந்தச் சொர்க்கம் - (உலகில்) நீங்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, இதன் வாரிசுகளாக நீங்கள் ஆக்கப்பட்டிருக்கிறீர்கள்" என்று அழைக்கப்படுவார்கள்.
9:112   اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰــفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰه ِ‌ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏
9:112. மன்னிப்புக் கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஉ செய்பவர்கள், ஸஜ்தா செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையைவிட்டு விலக்குபவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய நம்பிக்கையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
10:10   دَعْوٰٮهُمْ فِيْهَا سُبْحٰنَكَ اللّٰهُمَّ وَ تَحِيَّـتُهُمْ فِيْهَا سَلٰمٌ‌ۚ وَاٰخِرُ دَعْوٰٮهُمْ اَنِ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
10:10. அதில் அவர்களுடைய பிரார்த்தனையாகிறது; "அல்லாஹ்வே! நீ மிகப்பரிசுத்தமானவன்" என்பதாகும்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களுடைய முகமன், "ஸலாமுன் (சாந்தி உண்டாவதாக!)" என்பதாகும்; "எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே" என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும்.
13:13   ‌وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰۤـٮِٕكَةُ مِنْ خِيْفَتِهٖ ‌ۚ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيْبُ بِهَا مَنْ يَّشَآءُ وَهُمْ يُجَادِلُوْنَ فِى اللّٰه‌ۚ ِ وَهُوَ شَدِيْدُ الْمِحَالِؕ‏
13:13. மேலும், இடி அவன் புகழைக் கொண்டும், வானவர்கள் அவனை அஞ்சியும் துதிக்கின்றனர்; இன்னும், அவனே இடிகளை அனுப்பி அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைப் பிடிக்கிறான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர்; அவனே மிகுந்த வல்லமை உடையவனாக இருக்கின்றான்.
14:1   الۤرٰ‌ كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ لِـتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ  ۙ بِاِذْنِ رَبِّهِمْ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ‏
14:1. அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்: மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து பிரகாசத்தின்பால் (- அதாவது) புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகியவனின் பாதையில் நீர் வெளியேற்றிக் கொண்டுவருவதற்காக, இ(வ்வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்.
14:8   وَقَالَ مُوْسٰٓى اِنْ تَكْفُرُوْۤا اَنْـتُمْ وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۙ فَاِنَّ اللّٰهَ لَـغَنِىٌّ حَمِيْدٌ‏
14:8. மேலும், மூஸா (தம் சமூகத்தாரிடம்) "நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்தபோதிலும் (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது); நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்" என்றும் கூறினார்.
14:39   اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ وَهَبَ لِىْ عَلَى الْـكِبَرِ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ‌ؕ اِنَّ رَبِّىْ لَسَمِيْعُ الدُّعَآءِ‏
14:39. "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்."
16:75   ضَرَبَ اللّٰهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوْكًا لَّا يَقْدِرُ عَلٰى شَىْءٍ وَّمَنْ رَّزَقْنٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنْفِقُ مِنْهُ سِرًّا وَّجَهْرًا‌ؕ هَلْ يَسْتَوٗنَ‌ؕ اَ لْحَمْدُ لِلّٰهِ‌ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ‏
16:75. அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடைமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களும் கொடுத்திருக்கிறோம்; அவனும், அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கின்றான்; இவர்கள் (இருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; என்றாலும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை.
16:98   فَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏
16:98. மேலும், (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்வீராக!
17:44   تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّ‌ؕ وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰـكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْ‌ؕ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا‏
17:44. ஏழு வானங்களும், பூமியும் அவற்றில் உள்ளவைகளும் அவனைத் தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டிருக்கின்றன; இன்னும், அவன் புகழைக் கொண்டு தஸ்பீஹ் (துதி) செய்யாத பொருள் (எதுவும்) இல்லை; எனினும், அவை துதி செய்வதை நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்கள்; நிச்சயமாக அவன் சகிப்புத்தன்மை உடையவனாகவும் மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
17:52   يَوْمَ يَدْعُوْكُمْ فَتَسْتَجِيْبُوْنَ بِحَمْدِهٖ وَتَظُنُّوْنَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِيْلًا‏
17:52. உங்களை (இறுதியில்) அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவன் புகழை ஓதியவர்களாகப் பதில் கூறுவீர்கள்; (மரணத்திற்குப் பின்) சொற்ப(கால)மே தங்கியிருந்ததாக நீங்கள் நினைப்பீர்கள்.
17:79   وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ ‌ۖ  عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا‏
17:79. இன்னும், இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழுவீராக! (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், (மகாமம் மஹ்மூதா என்னும்) புகழ் பெற்ற தலத்தில் உம்மை எழுப்பப் போகிறான்.
17:111   وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ لَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهٗ وَلِىٌّ مِّنَ الذُّلِّ‌ وَكَبِّرْهُ تَكْبِيْرًا‏
17:111. "அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக்கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எவ்வித பலஹீனத்தைக்கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கின்றானே அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக! இன்னும், அவனை எப்பொழுதும் பெரிதும் பெருமைப்படுத்துவீராக!
18:1   اَ لْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَنْزَلَ عَلٰى عَبْدِهِ الْكِتٰبَ وَلَمْ يَجْعَلْ لَّهٗ عِوَجًا ٚ  ؕ
18:1. தன் அடியார்மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கிவைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.
20:130   فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا‌ ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰى‏
20:130. ஆகவே, (நபியே!) அவர்கள் சொல்வதை (யெல்லாம்) நீர் பொறுத்துக்கொள்வீராக! இன்னும், சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது மறைவதற்கு முன்னும், இரவு நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக! இன்னும், பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்வீராக! இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்திபெறலாம்.
22:24   وَهُدُوْۤا اِلَى الطَّيِّبِ مِنَ الْقَوْلِ‌ ۖۚ وَهُدُوْۤا اِلٰى صِرَاطِ الْحَمِيْدِ‏
22:24. ஏனெனில், அவர்கள் (கலிமா தய்யிபா எனும்) பரிசுத்தமான சொல்லின் பக்கம் (இம்மையில்) வழிகாட்டப்பட்டிருந்தார்கள்; இன்னும், புகழுக்குரிய (இறை)வனின் பாதையின் பக்கமும் அவர்கள் செலுத்தப்பட்டிருந்தார்கள்.
22:64   لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏
22:64. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியனவாகும்; நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் தேவையற்றவனாகவும் புகழ்மிக்கோனாகவும் இருக்கின்றான்.
23:28   فَاِذَا اسْتَوَيْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَى الْـفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ نَجّٰٮنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
23:28. நீரும் உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும், "அநியாயக்காரர்களான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறுவீராக!
25:58   وَتَوَكَّلْ عَلَى الْحَـىِّ الَّذِىْ لَا يَمُوْتُ وَسَبِّحْ بِحَمْدِهٖ‌ ؕ وَكَفٰى بِهٖ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِيْرَ ا‌ ۛۚ ۙ‏
25:58. எனவே, மரணிக்காமாட்டானே அந்த நித்திய ஜீவனை (அல்லாஹ்வை)யே சார்ந்திருப்பீராக! இன்னும், அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்துகொண்டிருப்பீராக! இன்னும், அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பது அவனுக்குப் போதுமானதாகும்.
27:15   وَلَـقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَ سُلَيْمٰنَ عِلْمًا‌ ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ‏
27:15. தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வியைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன்தான் நம்பிக்கையாளர்களான தன் அடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்" என்று கூறினார்கள்.
27:59   قُلِ الْحَمْدُ لِلّٰهِ وَسَلٰمٌ عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰىؕ ءٰۤللّٰهُ خَيْرٌ اَمَّا يُشْرِكُوْنَؕ‏
27:59. (நபியே!) நீர் கூறுவீராக: "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது சாந்தி உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?"
27:93   وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ سَيُرِيْكُمْ اٰيٰتِهٖ فَتَعْرِفُوْنَهَا‌ ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
27:93. இன்னும், கூறுவீராக!: "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்;" மேலும், உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதைவிட்டும் பராமுகமானவனாக இல்லை.
28:70   وَهُوَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ؕ لَـهُ الْحَمْدُ فِى الْاُوْلٰى وَالْاٰخِرَةِ وَلَـهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ‏
28:70. மேலும், அவனே அல்லாஹ்! அவனை அன்றி (வேறு) தெய்வம் இல்லை; இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது; தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது; ஆதலின், அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
29:63   وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ مِنْۢ بَعْدِ مَوْتِهَا لَيَقُوْلُنَّ اللّٰهُ‌ؕ قُلِ الْحَمْدُ لِلّٰهِ‌ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ‏
29:63. இன்னும் அவர்களிடம் "வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக்கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) செத்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?" என்று நீர் கேட்பீராகில், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு) "புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று நீர் கூறுவீராக! எனினும், இவர்களில் பெரும்பாலோர் விளங்கமாட்டார்கள்.
30:18   وَلَـهُ الْحَمْدُ فِىْ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَعَشِيًّا وَّحِيْنَ تُظْهِرُوْنَ‏
30:18. இன்னும், வானங்களிலும், பூமியிலும் அவனுக்கே புகழனைத்தும்; இன்னும் முன்னிரவிலும், நீங்கள் நடுப்பகலை அடையும் பொழுதும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்).
31:12   وَلَقَدْ اٰتَيْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ اَنِ اشْكُرْ لِلّٰهِ‌ؕ وَمَنْ يَّشْكُرْ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ‏
31:12. இன்னும், நாம் லுக்மானுக்கு நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்தோம்; அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால், எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தன(து நன்மை)க்காகவே நன்றி செலுத்துகிறான்; இன்னும், எவன் நிராகரிக்கின்றானோ, (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்;) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்திலிருந்தும்) தேவையில்லாதவன்; புகழப்படுபவன்.
31:25   وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَـقُوْلُنَّ اللّٰهُ‌ ؕ قُلِ الْحَمْدُ لِلّٰهِ‌ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ‏
31:25. "வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?" என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின், அவர்கள் "அல்லாஹ்" என்றே நிச்சயமாகச் சொல்வார்கள்; "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே" என்று நீர் கூறுவீராக! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.
31:26   لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ اِنَّ اللّٰهَ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏
31:26. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன; நிச்சயமாக, அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன், புகழப்படுபவன்.
32:15   اِنَّمَا يُؤْمِنُ بِاٰيٰتِنَا الَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِهَا خَرُّوْا سُجَّدًا وَّسَبَّحُوْا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ۩
32:15. நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரெனில், அவர்கள் அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பார்கள்; அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள்.
34:6   وَيَرَى الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ الَّذِىْۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ هُوَ الْحَـقَّ ۙ وَيَهْدِىْۤ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِ‏
34:6. எவர்களுக்குக் கல்வி அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட (இவ்வேதத்)தை - இதுவே உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான இறைவ)னின் வழியின்பால் வழிகாட்டுகிறது என்பதையும் காண்கிறார்கள்.
35:1   اَ لْحَمْدُ لِلّٰهِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَاعِلِ الْمَلٰٓٮِٕكَةِ رُسُلًا اُولِىْۤ اَجْنِحَةٍ مَّثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ ؕ يَزِيْدُ فِى الْخَـلْقِ مَا يَشَآءُ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
35:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நான்நான்கும் இறக்கை உள்ளவர்களாக வானவர்களைத் தன் தூதை எடுத்துச்செல்வோராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதிப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
35:15   يٰۤاَيُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَآءُ اِلَى اللّٰهِۚ وَاللّٰهُ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏
35:15. மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வின்பால் தேவையுடையவர்கள்; ஆனால், அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
35:34   وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَذْهَبَ عَـنَّا الْحَزَنَ ؕ اِنَّ رَبَّنَا لَـغَفُوْرٌ شَكُوْرُ ۙ‏
35:34. "எங்களை விட்டுக் கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக்கொள்பவன்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
37:182   وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‌‏
37:182. இன்னும், புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்.
39:29   ضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلًا فِيْهِ شُرَكَآءُ مُتَشٰكِسُوْنَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ ؕ هَلْ يَسْتَوِيٰنِ مَثَلًا ‌ؕ اَلْحَمْدُ لِلّٰهِ ‌ ۚ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ‏
39:29. (ஒருவருடன் ஒருவர்) கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல கூட்டுக்காரர்களைக் கொண்ட ஒரு மனிதனையும், ஒரே மனிதனுக்குச் சொந்தமான வேறொரு மனிதனையும் அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான்; உதாரணத்தால் இவர்கள் இருவரும் சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
39:74   وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ صَدَقَنَا وَعْدَهٗ وَاَوْرَثَنَا الْاَرْضَ نَتَبَوَّاُ مِنَ الْجَـنَّةِ حَيْثُ نَشَآءُ ‌ۚ فَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَ‏
39:74. அதற்கு (சுவர்க்கவாசிகள்): "தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கிவைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்)பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தானே அத்தகைய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று அவர்கள் கூறுவார்கள்; எனவே, நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது.
39:75   وَتَرَى الْمَلٰٓٮِٕكَةَ حَآفِّيْنَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ‌ۚ وَقُضِىَ بَيْنَهُمْ بِالْحَـقِّ وَقِيْلَ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
39:75. இன்னும், வானவர்கள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்த வண்ணம் அர்ஷை (அரியாசனத்தை) சூழ்ந்து நிற்பதை நீர் காண்பீர். அப்பொழுது அவர்களுக்கிடையே சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிக்கப்படும்; "அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்" என்று (யாவராலும்) கூறப்படும்.
40:7   اَلَّذِيْنَ يَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُوْنَ بِهٖ وَيَسْتَغْفِرُوْنَ لِلَّذِيْنَ اٰمَنُوْا‌ ۚ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِيْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِيْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيْمِ‏
40:7. அர்ஷை (அரியாசனத்தை)ச் சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக்கொண்டு அவனைத் துதி செய்துகொண்டு இருக்கிறார்கள்; அவன் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்; மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்; "எங்கள் இறைவனே! நீ அருளாலும், ஞானத்தாலும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக! இன்னும், அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!"
40:55   فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِىِّ وَالْاِبْكَارِ‏
40:55. ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக! மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
40:65   هُوَ الْحَىُّ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَادْعُوْهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَؕ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
40:65. அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) தெய்வமில்லை; ஆகவே, வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றவர்களாக்கி வைக்கின்றவர்களாய், அவனையே நீங்கள் அழையுங்கள்; அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
41:42   لَّا يَاْتِيْهِ الْبَاطِلُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهٖ‌ؕ تَنْزِيْلٌ مِّنْ حَكِيْمٍ حَمِيْدٍ‏
41:42. அதனிடம் அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ அசத்தியம் வராது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவனிடமிருந்து இறங்கியுள்ளது.
42:5   تَـكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ‌ وَالْمَلٰٓٮِٕكَةُ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُوْنَ لِمَنْ فِى الْاَرْضِ‌ؕ اَلَاۤ اِنَّ اللّٰهَ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏
42:5. வானங்கள் - அவற்றின் மேற்புறத்திலிருந்து பிளந்துவிட நெருங்கும்; வானவர்கள் தங்களுடைய இறைவனின் புகழைக்கொண்டு துதிசெய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர்: அறிந்துகொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
42:28   وَهُوَ الَّذِىْ يُنَزِّلُ الْغَيْثَ مِنْۢ بَعْدِ مَا قَنَطُوْا وَيَنْشُرُ رَحْمَتَهٗ‌ ؕ وَهُوَ الْوَلِىُّ الْحَمِيْدُ‏
42:28. அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கிவைப்பவன் அவனே; மேலும், அவன் தன் அருளைப் பரப்புகிறான்; இன்னும், அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
45:36   فَلِلّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الْاَرْضِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
45:36. ஆகவே, வானங்களுக்கும் இறைவனான, பூமிக்கும் இறைவனான, அகிலத்தாருக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
50:39   فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوْبِ‌ۚ‏
50:39. எனவே, (நபியே) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக! இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் துதிப்பீராக!
52:48   وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْيُنِنَا‌ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِيْنَ تَقُوْمُۙ‏
52:48. எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும், நீர் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறி (தஸ்பீஹ்) துதி செய்வீராக!
57:24   اۨلَّذِيْنَ يَبْخَلُوْنَ وَيَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ‌ؕ وَمَنْ يَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏
57:24. அவர்கள் எத்தகையோரென்றால், (தாமும்) கஞ்சத்தனம் செய்வதுடன், பிற மனிதர்களுக்கும் கஞ்சத்தனத்தை ஏவுகின்றனர்; இன்னும், எவன் (தன் மீதுள்ள கடமைகளை) புறக்கணிக்கின்றானோ, அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் அவனே (எவரிடமும்) தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
60:6   لَقَدْ كَانَ لَـكُمْ فِيْهِمْ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ‌ ؕ وَمَنْ يَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏
60:6. உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ, அவர்களுக்குத் திடமாக இவர்களில் ஓர் அழகிய முன்மாதிரியிருக்கிறது; ஆனால், எவர் (இந் நம்பிக்கையை விட்டும்) புறக்கணிக்கிறாரோ (அது அவருக்கே இழப்புதான்; ஏனெனில், எவரிடமிருந்தும்) அல்லாஹ் நிச்சயமாக எந்தத் தேவையுமில்லாதவன், புகழ்மிக்கவன்.
64:1   يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ۚ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ‌ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
64:1. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹ் (துதி) செய்கின்றன; அவனுக்கே ஆட்சி உரியது; இன்னும், புகழனைத்தும் அவனுக்குரியதே; அன்றியும், எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன்.
64:6   ذٰ لِكَ بِاَنَّهٗ كَانَتْ تَّاْتِيْهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالُوْۤا اَبَشَرٌ يَّهْدُوْنَـنَا فَكَفَرُوْا وَتَوَلَّوْا‌ وَّاسْتَغْنَى اللّٰهُ‌ ؕ وَاللّٰهُ غَنِىٌّ حَمِيْدٌ‏
64:6. இதற்குக் காரணம்: நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்துகொண்டுதான் இருந்தனர்; ஆனால், அப்போது அவர்களோ, "(நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?" என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் புறக்கணித்தார்கள்; அல்லாஹ்வோ (அவர்களிலிருந்து) தேவையற்றவனாகிவிட்டான்; அன்றியும், அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்; புகழ்மிக்கவன்.
85:8   وَمَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ يُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ‏
85:8. (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள் என்பதற்காக அன்றி (வேறெதற்கும்) அவர்கள் அவர்களைப் பழிவாங்கவில்லை.
110:3   فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا‏
110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹ் (துதி) செய்வீராக! மேலும், அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக! நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக்கொள்பவனாக இருக்கின்றான்.