பொய் - பொய்யர்கள்
2:10   فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ وَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙۢ بِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏
2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கிவிட்டான்; மேலும், அவர்கள் பொய் சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையுமுண்டு.
2:39   وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِـاٰيٰتِنَآ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
2:39. "அன்றி, யார் (இதை ஏற்க) மறுத்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கியிருப்பர்."
2:87   وَ لَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْۢ بَعْدِهٖ بِالرُّسُلِ‌ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ‌ۚ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ‏
2:87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம்; அவருக்குப் பின் தொடர்ச்சியாகத் தூதர்களை நாம் அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து, ரூஹுல் குதுஸ் (என்னும் தூய ஆத்மாவான ஜிப்ரீல்) மூலம் அவரை நாம் பலப்படுத்தினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம், நீங்கள் கர்வம் கொள்ளவில்லையா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரைக் கொன்றீர்கள்.
3:11   كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَذَّبُوْا بِاٰيٰتِنَا ‌ۚ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ‌ؕ وَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ‏
3:11. (இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தவர்கள் நிலைபோன்று இருக்கிறது; அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கினர்; ஆகவே, அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக்கொண்டான் - அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன்.
3:61   فَمَنْ حَآجَّكَ فِيْهِ مِنْۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَآءَنَا وَاَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ اللّٰهِ عَلَى الْكٰذِبِيْنَ‏
3:61. (நபியே! இது பற்றிய உண்மையான) விளக்கம் உமக்கு வந்த பின்னரும், எவரேனும் ஒருவர் உம்மிடம் இது குறித்து தர்க்கம் செய்தால்; "வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும், உங்களையும் அழைத்துக்கொண்டு, பிறகு (அல்லாஹ்விடம்) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!' என்று நாம் பிரார்த்திப்போம்!" என நீர் கூறும்.
3:70   يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَاَنْـتُمْ تَشْهَدُوْنَ‏
3:70. "வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்?"
3:75   وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَاْمَنْهُ بِقِنْطَارٍ يُّؤَدِّهٖۤ اِلَيْكَ‌ۚ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَاْمَنْهُ بِدِيْنَارٍ لَّا يُؤَدِّهٖۤ اِلَيْكَ اِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآٮِٕمًا ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَيْسَ عَلَيْنَا فِىْ الْاُمِّيّٖنَ سَبِيْلٌۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَ هُمْ يَعْلَمُوْنَ‏
3:75. (நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை நம்பி ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல் கேட்கும் போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்; அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் (ஒரே) ஒரு தங்கக்காசை நம்பி ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்றிருந்தாலே தவிர, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்; அதற்குக் காரணம், "எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் நம்மைக் குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை" என்று அவர்கள் கூறுவதுதான்; மேலும், அவர்கள் அறிந்துகொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்கள்.
3:78   وَاِنَّ مِنْهُمْ لَـفَرِيْقًا يَّلْوٗنَ اَلْسِنَتَهُمْ بِالْكِتٰبِ لِتَحْسَبُوْهُ مِنَ الْكِتٰبِ‌ وَمَا هُوَ مِنَ الْكِتٰبِۚ وَيَقُوْلُوْنَ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَ هُمْ يَعْلَمُوْنَ‏
3:78. நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தைக் கொண்டு (ஓதும்போது அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து) - அதுவும் வேதத்திலுள்ளது தான் என நீங்கள் எண்ணிக்கொள்ளும் பொருட்டு, தங்கள் நாவுகளைச் சாய்த்துக் கொள்கின்றனர்: "அது வேதத்தில் உள்ளதல்ல; அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல; இன்னும், அறிந்துகொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுகிறார்கள்.
3:94   فَمَنِ افْتَرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ مِنْۢ بَعْدِ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَؔ‏
3:94. இதன் பின்னரும் எவரேனும் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தால் அவர்கள்தாம் அக்கிரமக்காரர்கள்.
3:137   قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ ۙ فَسِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ‏
3:137. உங்களுக்கு முன்னரும் பல நிகழ்ச்சிகள் திட்டமாகச் சென்றுவிட்டன; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பாருங்கள்.
3:184   فَاِنْ كَذَّبُوْكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّنْ قَبْلِكَ جَآءُوْ بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِ وَالْكِتٰبِ الْمُنِيْرِ‏
3:184. எனவே, உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் - (நீர் கவலையுற வேண்டாம்; ஏனெனில்,) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டுவந்த தூதர்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்கப்பட்டிருக்கின்றனர்.
4:50   اُنْظُرْ كَيْفَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ‌ؕ وَكَفٰى بِهٖۤ اِثْمًا مُّبِيْنًا‏
4:50. (நபியே!) அல்லாஹ்வின் மீது அவர்கள் எவ்வாறு பொய்யைக் கற்பனை செய்கிறார்கள் என்பதைக் கவனிப்பீராக! (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமானதாக இருக்கின்றது.
5:10   وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَاۤ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ‏
5:10. எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களையும் பொய்யாக்கினார்களோ அத்தகையோர் - அவர்களே நரகவாசிகள் ஆவார்கள்.
5:41   يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ لَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِ مِنَ الَّذِيْنَ قَالُوْۤا اٰمَنَّا بِاَ فْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ‌ ‌ۛۚ وَمِنَ الَّذِيْنَ هَادُوْا ‌ ۛۚ سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِيْنَۙ لَمْ يَاْتُوْكَ‌ؕ يُحَرِّفُوْنَ الْـكَلِمَ مِنْۢ بَعْدِ مَوَاضِعِهٖ‌ۚ يَقُوْلُوْنَ اِنْ اُوْتِيْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا‌ ؕ وَمَنْ يُّرِدِ اللّٰهُ فِتْنَـتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَيْــٴًـــا‌ؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَمْ يُرِدِ اللّٰهُ اَنْ يُّطَهِّرَ قُلُوْبَهُمْ‌ ؕ لَهُمْ فِىْ الدُّنْيَا خِزْىٌ ۚۖ وَّلَهُمْ فِىْ الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ‏
5:41. (நம்முடைய) தூதரே! அவர்களது இதயங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க, தங்களது வாய்களினால், 'நம்பிக்கை கொண்டோம்!' என்று கூறியோர் குறித்தும், இன்னும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைக் குறித்தும் நீர் கவலை கொள்ளவேண்டாம்; அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றவர்கள்; உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றவர்கள்; மேலும், அவர்கள் (வேத)வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி "இ(ன்ன)து உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்; அது உங்களுக்கு கொடுக்கப்படாவிட்டால் (அதை) தவிர்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறுகிறார்கள்; மேலும், அல்லாஹ் எவரை வழிகேட்டிலாக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒருபோதும் சக்திபெறமாட்டீர்; இத்தகையோருடைய இதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை; இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
5:42   سَمّٰعُوْنَ لِلْكَذِبِ اَ كّٰلُوْنَ لِلسُّحْتِ‌ؕ فَاِنْ جَآءُوْكَ فَاحْكُمْ بَيْنَهُمْ اَوْ اَعْرِضْ عَنْهُمْ‌ ۚ وَاِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ يَّضُرُّوْكَ شَيْــٴًـــا‌ ؕ وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ‌ ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏
5:42. அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்பவர்கள்; விலக்கப்பட்டதையே அதிகமாக உண்பவர்கள்: (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால் இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது, இவர்களைப் புறக்கணித்துவிடும்; அப்படி இவர்களை நீர் புறக்கணித்துவிடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது; ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நீதியைக்கொண்டு அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக! ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.
5:70   لَقَدْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَاَرْسَلْنَاۤ اِلَيْهِمْ رُسُلًا ؕ كُلَّمَا جَآءَهُمْ رَسُوْلٌ ۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُهُمْۙ فَرِيْقًا كَذَّبُوْا وَفَرِيْقًا يَّقْتُلُوْنَ‏
5:70. திட்டமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம்; அவர்களிடம் தூதர்களையும் அனுப்பிவைத்தோம்; எனினும், அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டுவந்தபோதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவினரைப் பொய்ப்பித்தும் இன்னும், ஒரு பிரிவினரைக் கொலை செய்தும் வந்தார்கள்.
5:86   وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَاۤ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ‏
5:86. ஆனால், எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றார்களோ, அ(த்தகைய)வர்கள் நரகவாசிகளேயாவார்கள்.
5:103   مَا جَعَلَ اللّٰهُ مِنْۢ بَحِيْرَةٍ وَّلَا سَآٮِٕبَةٍ وَّلَا وَصِيْلَةٍ وَّلَا حَامٍ‌ ۙ وَّلٰـكِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ‌ ؕ وَاَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ‏
5:103. பஹீரா (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ஸாயிபா (சுதந்திரமாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்), வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக, சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்), ஹாம் (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுதந்திரமாக திரியும்படி விடப்படும் ஆண் ஒட்டகம் முதலிய) இவைகளெல்லாம் (மார்க்கச் சின்னங்களாக) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. ஆனால், நிராகரித்தோர் தாம் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்து கூறுகின்றனர்; மேலும், அவர்களில் பெரும்பாலோர் விளங்க மாட்டார்கள்.
6:5   فَقَدْ كَذَّبُوْا بِالْحَـقِّ لَمَّا جَآءَهُمْ‌ؕ فَسَوْفَ يَاْتِيْهِمْ اَنْۢـبٰٓـؤُا مَا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
6:5. எனவே, சத்திய (வேத)த்தை - அது அவர்களிடம் வந்திருக்கும்போது, திட்டமாக அவர்கள் பொய்யாக்கினர்; ஆனால், எந்த விஷயங்களைப் (பொய்யென்று) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவைபற்றிய செய்திகள் அவர்களுக்கு வந்தேதீரும்.
6:11   قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ ثُمَّ انْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ‏
6:11. "பூமியில் நீங்கள் சுற்றிவந்து பின்னர், (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
6:21   وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ‏
6:21. அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனைவிட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனைவிட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெறவே மாட்டார்கள்.
6:24   اُنْظُرْ كَيْفَ كَذَبُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ‌ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏
6:24. (நபியே!) அவர்கள் தங்களுக்கு எதிராக எவ்வாறு பொய் கூறிக்கொண்டார்கள் என்பதைப் பாரும்! ஆனால், (அல்லாஹ்வுக்கு இணையானவை என்று பொய்யாக) அவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்தவைகள் அவர்களை விட்டும் மறைந்துவிடும்.
6:27   وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلَى النَّارِ فَقَالُوْا يٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰيٰتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏
6:27. (நரக) நெருப்பின் முன் அவர்கள் நிறுத்தப்படும்போது, (நபியே! நீர் அவர்களைப் பார்ப்பீராயின்), "எங்கள் கேடே! நாங்கள் (உலகிற்கு) திரும்ப அனுப்பப்பட வேண்டுமே! அப்போது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்கமாட்டோம்; நாங்கள் நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்" என்று அவர்கள் கூறுவார்கள்.
6:28   بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُ‌ؕ وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
6:28. மாறாக, எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டுவிட்டது; இவர்கள் (உலகிற்குத்) திரு(ப்பி அனு)ப்பப்பட்டாலும் எதைவிட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
6:31   قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ‌ؕ حَتّٰٓى اِذَا جَآءَتْهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوْا يٰحَسْرَتَنَا عَلٰى مَا فَرَّطْنَا فِيْهَا ۙ وَهُمْ يَحْمِلُوْنَ اَوْزَارَهُمْ عَلٰى ظُهُوْرِهِمْ‌ؕ اَلَا سَآءَ مَا يَزِرُوْنَ‏
6:31. ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய்யாக்கியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகிவிட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது, "அ(வ்வுலகத்)தில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கைசேதமே!" என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளைத் தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள். அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
6:33   قَدْ نَـعْلَمُ اِنَّهٗ لَيَحْزُنُكَ الَّذِىْ يَقُوْلُوْنَ‌ فَاِنَّهُمْ لَا يُكَذِّبُوْنَكَ وَلٰـكِنَّ الظّٰلِمِيْنَ بِاٰيٰتِ اللّٰهِ يَجْحَدُوْنَ‏
6:33. (நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை; ஆனால், அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களை மறுக்கிறார்கள்.
6:34   وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ فَصَبَرُوْا عَلٰى مَا كُذِّبُوْا وَاُوْذُوْا حَتّٰٓى اَتٰٮهُمْ نَصْرُنَا‌ ۚ وَلَا مُبَدِّلَ لِكَلِمٰتِ اللّٰهِ‌ ۚ وَلَقَدْ جَآءَكَ مِنْ نَّبَاِى الْمُرْسَلِيْنَ‏
6:34. உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர்; அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப்பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும் அவர்கள் பொறுத்துக் கொண்டனர்: அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுகிறவர் எவரும் இல்லை: (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் (இத்தகைய) செய்தி உம்மிடம் வந்தேயிருக்கின்றது.
6:39   وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا صُمٌّ وَّبُكْمٌ فِى الظُّلُمٰتِ‌ؕ مَنْ يَّشَاِ اللّٰهُ يُضْلِلْهُ ؕ وَمَنْ يَّشَاْ يَجْعَلْهُ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
6:39. இன்னும், நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் எவரை நாடுகின்றானோ, அவரைத் தவறான வழியில் செல்ல விட்டுவிடுகிறான்; எவரை நாடுகின்றானோ அவரை நேரான வழியின் மீது ஆக்குகிறான்.
6:49   وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا يَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏
6:49. ஆனால், எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ, அவர்களை அவர்கள் செய்துவரும் பாவங்களின் காரணமாக வேதனை பிடித்துக்கொள்ளும்.
6:57   قُلْ اِنِّىْ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّىْ وَكَذَّبْتُمْ بِهٖ‌ؕ مَا عِنْدِىْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖؕ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ‌ؕ يَقُصُّ الْحَـقَّ‌ وَهُوَ خَيْرُ الْفٰصِلِيْنَ‏
6:57. பின்னும், நீர் கூறும்: "நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால், நீங்களோ அதைப் பொய்யாக்கினீர்கள்; நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என்னிடம் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான்; தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்."
6:93   وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ قَالَ اُوْحِىَ اِلَىَّ وَلَمْ يُوْحَ اِلَيْهِ شَىْءٌ وَّمَنْ قَالَ سَاُنْزِلُ مِثْلَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ‌ؕ وَلَوْ تَرٰٓى اِذِ الظّٰلِمُوْنَ فِىْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰٓٮِٕكَةُ بَاسِطُوْۤا اَيْدِيْهِمْ‌ۚ اَخْرِجُوْۤا اَنْفُسَكُمُ‌ؕ اَلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ غَيْرَ الْحَـقِّ وَكُنْتُمْ عَنْ اٰيٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ‏
6:93. அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்பவனைவிட; அல்லது வஹீயின் மூலம் அவனுக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டது" என்று கூறுபவனைவிட; அல்லது, "அல்லாஹ் இறக்கிவைத்த (இவ் வேதத்)தைப்போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவனை விடப் பெரிய அநியாயக்காரன் யார்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனைகளில் இருக்கும்போது நீங்கள் அவர்களைப் பார்த்தால்; வானவர்கள் தம் கைகளை விரித்தவர்களாக (இவர்களிடம்), "உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்: உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறிக்கொண்டிருந்ததின் காரணமாக இன்றையதினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறுவதை நீர் காண்பீர்).
6:144   وَمِنَ الْاِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ‌ ؕ قُلْ ءٰٓالذَّكَرَيْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَيَيْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ اَرْحَامُ الْاُنْثَيَيْنِ‌ ؕ اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ وَصّٰٮكُمُ اللّٰهُ بِهٰذَا‌ ۚ فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا لِّيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
6:144. இன்னும், ஒட்டகத்தில் (ஆண், பெண்) இரு வகை; மாட்டிலும் (பசு, காளை) இருவகையுண்டு - (இவற்றில்) இரு ஆண் இனங்களையா? அல்லது (இவற்றில்) இரு பெண் இனங்களையா? அல்லது இரு பெண்ணினங்களின் கர்ப்பக்கோளறைகள் எதனைப் பொதிந்து கொண்டிருக்கின்றனவோ அதனையா அவன் தடுத்திருக்கின்றான்? அல்லது இவ்வாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்ட (தாகக் கூறுகிறீர்களே அச்)சமயம் நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா?" என்றும் (நபியே!) நீர் கேளும்; மக்களை வழிகெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.
6:147   فَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ رَّبُّكُمْ ذُوْ رَحْمَةٍ وَّاسِعَةٍ‌ ۚ وَلَا يُرَدُّ بَاْسُهٗ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ‏
6:147. (நபியே!) "இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்; (எனினும்,) குற்றம் செய்தவர்களான கூட்டத்தாரைவிட்டு அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது" என்று நீர் கூறுவீராக!
6:148   سَيَـقُوْلُ الَّذِيْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَىْءٍ‌ ؕ كَذٰلِكَ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ حَتّٰى ذَاقُوْا بَاْسَنَا‌ ؕ قُلْ هَلْ عِنْدَكُمْ مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوْهُ لَـنَا ؕ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ اَنْـتُمْ اِلَّا تَخْرُصُوْنَ‏
6:148. (அல்லாஹ்வுக்கு) இணைவைப்பவர்கள், "அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணைவைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) விலக்கியிருக்கவும் மாட்டோம்" என்று கூறுவார்கள். இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) "இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள். (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை; நீங்கள் அனுமானம் செய்கிறீர்களேயன்றி வேறில்லை" என்று (நபியே!) நீர் கூறும்.
6:150   قُلْ هَلُمَّ شُهَدَآءَكُمُ الَّذِيْنَ يَشْهَدُوْنَ اَنَّ اللّٰهَ حَرَّمَ هٰذَا ‌ۚ فَاِنْ شَهِدُوْا فَلَا تَشْهَدْ مَعَهُمْ‌‌ ۚ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَهُمْ بِرَبِّهِمْ يَعْدِلُوْنَ‏
6:150. "நிச்சயமாக, அல்லாஹ்தான் இதனைத் தடுத்தான்" என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டுவாருங்கள்!" என்று கூறும்; அவர்கள் சாட்சி கூறினால், (அவர்கள் பொய்யராகவே இருப்பர்;) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்லவேண்டாம்; நம் வசனங்களைப் பொய்யாக்கியவர்கள், மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் மனோ இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம்; அவர்களோ தங்களுடைய இறைவனுக்கு (வணக்க வழிபாட்டில் பிறரை) சமமாக்குகின்றனர்.
6:157   اَوْ تَقُوْلُوْا لَوْ اَنَّاۤ اُنْزِلَ عَلَيْنَا الْـكِتٰبُ لَـكُنَّاۤ اَهْدٰى مِنْهُمْ‌ ۚ فَقَدْ جَآءَكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ‌  ۚ فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَّبَ بِاٰيٰتِ اللّٰهِ وَصَدَفَ عَنْهَا‌ ؕ سَنَجْزِى الَّذِيْنَ يَصْدِفُوْنَ عَنْ اٰيٰتِنَا سُوْٓءَ الْعَذَابِ بِمَا كَانُوْا يَصْدِفُوْنَ‏
6:157. அல்லது, "மெய்யாகவே எங்கள்மீது ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்வழிபெற்றவர்களாக இருப்போம்" என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை இறக்கினோம்); ஆகவே, உங்களுடைய இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரமும், நேர்வழியும், அருளும் திட்டமாக உங்களுக்கு வந்துவிட்டன; ஆகையால், அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்தவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டிருப்பவர்களுக்கு - அவர்கள் புறக்கணித்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால், நாம் கொடியவேதனையை விரைவில் கூலியாகக் கொடுப்போம்.
7:36   وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَاۤ اُولٰۤٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
7:36. ஆனால், எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து (அவற்றை ஏற்பதை) விட்டும் பெருமையடித்தார்களோ அவர்கள், நரகவாசிகளேயாவார்கள்; அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
7:37   فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖ ؕ اُولٰۤٮِٕكَ يَنَالُهُمْ نَصِيْبُهُمْ مِّنَ الْـكِتٰبِ‌ؕ حَتّٰٓى اِذَا جَآءَتْهُمْ رُسُلُـنَا يَتَوَفَّوْنَهُمْ ۙ قَالُوْۤا اَيْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ‏
7:37. அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தவனைவிட, அல்லது அவனுடைய வசனங்களை நிராகரித்தவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும், அத்தகையவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, செல்வம் முதலிய) வைகளிலிருந்து அவர்களுடைய பங்கு (இவ்வுலகில்) அவர்களுக்குக் கிடைக்கும்: இறுதியில் நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும்போது (அவ்வான தூதர்கள்), "அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைத்துக் கொண்டிருந்தவை எங்கே?" எனக் கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், "எங்களைவிட்டு அவர்கள் மறைந்துவிட்டார்கள்" என்று கூறி, மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக இருந்ததாக தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
7:40   اِنَّ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا يَدْخُلُوْنَ الْجَـنَّةَ حَتّٰى يَلِجَ الْجَمَلُ فِىْ سَمِّ الْخِيَاطِ‌ ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُجْرِمِيْنَ‏
7:40. எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து, இன்னும் அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டா; மேலும், ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில், அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்குக் கூலி கொடுப்போம்.
7:64   فَكَذَّبُوْهُ فَاَنْجَيْنٰهُ وَالَّذِيْنَ مَعَهٗ فِى الْفُلْكِ وَاَغْرَقْنَا الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا‌ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا عَمِيْنَ‏
7:64. அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும், நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மையைக் காணமுடியாக்) குருட்டுக் கூட்டத்தாராகவே இருந்தனர்.
7:66   قَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَــنَرٰٮكَ فِىْ سَفَاهَةٍ وَّاِنَّا لَــنَظُنُّكَ مِنَ الْـكٰذِبِيْنَ‏
7:66. அவருடைய சமூகத்தாரில் நிராகரித்த தலைவர்கள், "(அவரை நோக்கி) நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும், நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்" என்று கூறினார்கள்.
7:72   فَاَنْجَيْنٰهُ وَالَّذِيْنَ مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَ قَطَعْنَا دَابِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا‌ وَمَا كَانُوْا مُؤْمِنِيْنَ‏
7:72. ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் நம்முடைய அருளைக் கொண்டு காப்பாற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்துவிட்டோம்.
7:89   قَدِ افْتَرَيْنَا عَلَى اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِىْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰٮنَا اللّٰهُ مِنْهَا‌ ؕ وَمَا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّعُوْدَ فِيْهَاۤ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّنَا‌ ؕ وَسِعَ رَبُّنَا كُلَّ شَىْءٍ عِلْمًا‌ؕ عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا‌ ؕ رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَـقِّ وَاَنْتَ خَيْرُ الْفٰتِحِيْنَ‏
7:89. உங்கள் மார்க்கத்திற்கு - அதிலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிவிட்டபின் - நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தவர்களாகிவிடுவோம்; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் திரும்புவதற்கு எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; அல்லாஹ்வையே நாங்கள் சார்ந்திருக்கின்றோம்; "எங்கள் இறைவா! எங்களுக்கும் எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக! தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்!" (என்றும் பிரார்த்தித்தார்).
7:92   الَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا‌‌ ۛۚ اَ لَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِيْنَ‌‌‏
7:92. ஷுஐபை பொய்யாக்கியவர்கள் - அவற்றில் (தம் வீடுகளில்) ஒருபோதும் வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர்; ஷுஐபை பொய்யாக்கியவர்கள் - அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்களாகிவிட்டார்கள்.
7:96   وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى اٰمَنُوْا وَاتَّقَوْا لَـفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰـكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏
7:96. நிச்சயமாக அவ்வூர்வாசிகள் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால், நாம் அவர்களுக்காக வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால், அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர்; ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
7:101   تِلْكَ الْقُرٰى نَقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَآٮِٕهَا‌ ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ‌ ۚ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُ‌ ؕ كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الْكٰفِرِيْنَ‏
7:101. (நபியே!) இந்த ஊர்கள் - அவற்றின் செய்திகளிலிருந்து நாம் உமக்குக் கூறுகிறோம்; நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுவந்தார்கள்; எனினும், அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை; இவ்வாறே அல்லாஹ் நிராகரிப்பவர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டுவிடுகிறான்.
7:136   فَانْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ فِى الْيَمِّ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِيْنَ‏
7:136. ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்து, அவற்றை அவர்கள் பொருட்படுத்தாதவர்களாகவும் இருந்த காரணத்தால் அவர்களை நாம் தண்டித்தோம்; ஆகவே, அவர்களை நாம் கடலில் மூழ்கடித்தோம்.
7:146   سَاَصْرِفُ عَنْ اٰيٰتِىَ الَّذِيْنَ يَتَكَبَّرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ ؕ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا‌ ۚ وَاِنْ يَّرَوْا سَبِيْلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوْهُ سَبِيْلًا‌ ۚ وَّاِنْ يَّرَوْا سَبِيْلَ الْغَىِّ يَتَّخِذُوْهُ سَبِيْلًا‌ ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِيْنَ‏
7:146. (எவ்வித) நியாயமுமின்றி, பூமியில் பெருமையடிப்பவர்களை, என் அத்தாட்சிகளை (விளங்கிக் கொள்வதை) விட்டும் திருப்பிவிடுவேன்; அவர்கள் அத்தாட்சிகள் யாவையும் கண்டபோதிலும் அவற்றை நம்பமாட்டார்கள்; அவர்கள் நேர்வழியைக் கண்டால் அதனை (தங்களுக்குரிய) வழியாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்; ஆனால், தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியாக எடுத்துக்கொள்வார்கள்; அது (ஏனெனில்), அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறினார்கள்; இன்னும், அவற்றை விட்டும் அலட்சியமானவர்களாக இருந்தார்கள் என்ற காரணத்தினாலாகும்.
7:147   وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَلِقَآءِ الْاٰخِرَةِ حَبِطَتْ اَعْمَالُهُمْ‌ؕ هَلْ يُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
7:147. எவர்கள் நம் வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய (நற்) செயல்கள் (யாவும்) அழிந்துவிடும்; அவர்கள் செய்துகொண்டிருந்ததைத் தவிர (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்படமாட்டார்கள்.
7:176   وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰـكِنَّهٗۤ اَخْلَدَ اِلَى الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰٮهُ‌ ۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْـكَلْبِ‌ ۚ اِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ اَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ؕ ذٰ لِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا‌ ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏
7:176. நாம் நாடியிருந்தால், அவற்றைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; ஆனால், அவன் (இந்த) உலகத்தின் பக்கம் சாய்ந்து தன் மனோ இச்சையைப் பின்பற்றினான்; ஆகவே, அவனுக்கு உதாரணம் நாயைப் போன்றதாகும்; அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்கவிடுகிறது; அல்லது அதை நீர் விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிடுகிறது; இதுவே, நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கு உதாரணமாகும்; ஆகவே, அவர்கள் சிந்திப்பதற்காக (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக!
7:177   سَآءَ مَثَلَاْ ۨالْقَوْمُ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاَنْفُسَهُمْ كَانُوْا يَظْلِمُوْنَ‏
7:177. நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும்; அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
7:182   وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَ ‌ۖ ‌ ۚ‏
7:182. எவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ, அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியாத வண்ணம் நாம் பிடிப்போம்.
8:54   كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ‌ۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَذَّبُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ‌ۚ وَكُلٌّ كَانُوْا ظٰلِمِيْنَ‏
8:54. ஃபிர்அவ்னின் கூட்டத்தார் - இன்னும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடைய நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்கள் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள்; ஆகவே, நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும், ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம்; அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
9:42   لَوْ كَانَ عَرَضًا قَرِيْبًا وَّسَفَرًا قَاصِدًا لَّاتَّبَعُوْكَ وَلٰـكِنْۢ بَعُدَتْ عَلَيْهِمُ الشُّقَّةُ ‌ ؕ وَسَيَحْلِفُوْنَ بِاللّٰهِ لَوِ اسْتَطَعْنَا لَخَـرَجْنَا مَعَكُمْ ۚ يُهْلِكُوْنَ اَنْفُسَهُمْ‌ ۚ وَاللّٰهُ يَعْلَمُ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
9:42. (நபியே! நீர் எதன்பால் அவர்களை அழைத்தீரோ) அது சமீபமான (உடனே கிடைக்கக்கூடியதான) பொருளாகவும், நடுநிலையான பயணமாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள்; எனினும், மிகத் தூரமான பயணம் அவர்களுக்குப் பெரும் சிரமத்தைத் தந்தது; 'நாங்கள் சக்தி பெற்றிருந்தால் நிச்சயமாக உங்களுடன் புறப்பட்டிருப்போம்' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்(து கூறு)வார்கள்; அவர்கள் தங்களையே அழித்துக்கொள்கின்றனர்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
9:43   عَفَا اللّٰهُ عَنْكَ‌ۚ لِمَ اَذِنْتَ لَهُمْ حَتّٰى يَتَبَيَّنَ لَكَ الَّذِيْنَ صَدَقُوْا وَتَعْلَمَ الْـكٰذِبِيْنَ‏
9:43. (நபியே!) அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக! (அவர்களில்) உண்மை சொன்னவர்கள் யார் என்பது உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும் வரை (போருக்குப் புறப்படாதிருக்க) அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்?
9:77   فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِىْ قُلُوْبِهِمْ اِلٰى يَوْمِ يَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏
9:77. எனவே, அல்லாஹ்வுக்கு அவனுக்கு வாக்களித்ததில் அவர்கள் மாறுசெய்ததாலும், அவர்கள் பொய் சொல்லிக்கொண்டே இருந்ததினாலும், அவன் அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைத் தொடரச் செய்துவிட்டான்.
9:90   وَ جَآءَ الْمُعَذِّرُوْنَ مِنَ الْاَعْرَابِ لِيُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ الَّذِيْنَ كَذَبُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ ؕ سَيُصِيْبُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
9:90. கிராமவாசிகளில் சிலர் உம்மிடம் புகல்சொல்லிக்கொண்டு, (போரில் கலந்துகொள்ளாமலிருக்கத்) தங்களுக்கு அனுமதி அளிக்கப்படவேண்டுமென்று (கேட்க) வந்தனர்: இன்னும், அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கேட்காமலே வீடுகளில்) உட்கார்ந்து கொண்டார்கள்: அவர்களில் நிராகரித்தவர்களை வெகுவிரைவில் நோவினைசெய்யும் வேதனை வந்தடையும்.
9:107   وَالَّذِيْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِيْقًۢا بَيْنَ الْمُؤْمِنِيْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ‌ؕ وَلَيَحْلِفُنَّ اِنْ اَرَدْنَاۤ اِلَّا الْحُسْنٰى‌ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
9:107. இன்னும் (முஸ்லிம்களுக்குத்) தீங்கிழைக்கவும், நிராகரிப்பதற்காகவும், நம்பிக்கையாளர்களிடையே பிளவு உண்டுபண்ணவும், இதற்குமுன் அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் செய்தவனுக்கு ஒரு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் ஏற்படுத்திக்கொண்டவர்கள்: "நாங்கள் நல்லதையேயன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை" என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள்; ஆனால், அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
10:17   فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖ ؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الْمُجْرِمُوْنَ‏
10:17. அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்பவனைவிட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குபவனைவிட மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடையமாட்டார்கள்.
10:39   بَلْ كَذَّبُوْا بِمَا لَمْ يُحِيْطُوْا بِعِلْمِهٖ وَلَمَّا يَاْتِهِمْ تَاْوِيْلُهٗ ‌ؕ كَذٰلِكَ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِيْنَ‏
10:39. அப்படியல்ல! அவர்கள் (குர்ஆனாகிய) அதன் அறிவை(ப் பற்றி) அறிந்துகொள்ள இயலாததை, அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள். இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக!
10:41   وَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ لِّىْ عَمَلِىْ وَلَـكُمْ عَمَلُكُمْ‌ۚ اَنْـتُمْ بَرِيْٓـــٴُـوْنَ مِمَّاۤ اَعْمَلُ وَاَنَا بَرِىْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ‏
10:41. உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால், "எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு; நான் செய்வதைவிட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதைவிட்டும் நான் விலகியவன்" என்று கூறுவீராக!
10:45   وَيَوْمَ يَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ يَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ يَتَعَارَفُوْنَ بَيْنَهُمْ‌ؕ قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ‏
10:45. அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப நேரமே (இவ்வுலகில்) தங்கியிருந்ததைப் போன்று (அவர்கள் எண்ணுவார்கள்; அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வார்கள்; அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்துவிட்டார்கள்; மேலும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
10:60   وَمَا ظَنُّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَشْكُرُوْنَ‏
10:60. அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்பவர்கள் மறுமை நாளைப் பற்றி என்ன எண்ணுகின்றனர்? (அது பொய்யென எண்ணிக்கொண்டனரா?) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவனாக இருக்கின்றான்; எனினும், அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
10:69   قُلْ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ لَا يُفْلِحُوْنَؕ‏
10:69. "நிச்சயமாக அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக்கட்டுபவர்கள் வெற்றிபெறமாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறிவிடும்.
10:73   فَكَذَّبُوْهُ فَنَجَّيْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِى الْـفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰٓٮِٕفَ وَاَغْرَقْنَا الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا‌ ۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَ‏
10:73. அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் ஏற்றிக் காப்பாற்றினோம்; மேலும், அவர்களை (முன்னவர்களுக்குப் பூமியில்) பின் தோன்றல்களாகவும் ஆக்கினோம்; நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை நாம் மூழ்கடித்தோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக!
10:74   ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهٖ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَيِّنٰتِ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ‌ ؕ كَذٰلِكَ نَطْبَعُ عَلٰى قُلُوْبِ الْمُعْتَدِيْنَ‏
10:74. அவருக்குப் பின், தூதர்களை அவர்களுடைய சமூகத்தினருக்கு நாம் அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டுவந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எதைப் பொய்யெனக் கூறிக்கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை; வரம்பு மீறுபவர்களின் இதயங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.
10:95   وَلَا تَكُوْنَنَّ مِنَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ فَتَكُوْنَ مِنَ الْخٰسِرِيْنَ‏
10:95. அன்றியும், அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யாக்கியவர்களில் ஒருவராக நீர் திண்ணமாக ஆகிவிடவேண்டாம்; அவ்வாறாயின், நஷ்டமடைவோரில் நீர் ஆகிவிடுவீர்.
11:18   وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا‌ ؕ اُولٰٓٮِٕكَ يُعْرَضُوْنَ عَلٰى رَبِّهِمْ وَ يَقُوْلُ الْاَشْهَادُ هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ كَذَبُوْا عَلٰى رَبِّهِمْ‌ ۚ اَلَا لَـعْنَةُ اللّٰهِ عَلَى الظّٰلِمِيْنَۙ‏
11:18. அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள்: "இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்" என்று 'சாட்சிகள்' சொல்வார்கள்; அறிந்துகொள்ளுங்கள்! இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்.
11:27   فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰٮكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰٮكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِيْنَ هُمْ اَرَاذِلُــنَا بَادِىَ الرَّاْىِ‌ۚ وَمَا نَرٰى لَـكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِيْنَ‏
11:27. அவருடைய சமூகத்தாரிலிருந்து நிராகரித்த தலைவர்கள் (அவரை நோக்கி), "நாம் உம்மை எங்களைப்போன்ற ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாகக்) காணவில்லை; எங்களுக்குள்ளே ஆழ்ந்து யோசனை செய்யாத இழிவானவர்களேயன்றி (வேறெவரும்) உம்மைப் பின்பற்றியதாகவும் நாம் உம்மைக் காணவில்லை; எங்களைவிட உங்களுக்கு எந்தவிதமான மேன்மை இருப்பதாகவும் நாம் காணவில்லை; மாறாக, உங்களை(யெல்லாம்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்" என்று கூறினார்கள்.
11:65   فَعَقَرُوْهَا فَقَالَ تَمَتَّعُوْا فِىْ دَارِكُمْ ثَلٰثَةَ اَ يَّامٍ ‌ؕذٰ لِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوْبٍ‏
11:65. ஆனால், அவர்கள் அதைக் கொன்று விட்டார்கள்; ஆகவே, அவர் (அம்மக்களிடம்): "நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாட்கள் சுகம் அனுபவியுங்கள்; (பின்னர், உங்களுக்கு அழிவு வந்துவிடும்;) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும்" என்று கூறினார்.
11:93   وَيٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّىْ عَامِلٌ‌ ؕ سَوْفَ تَعْلَمُوْنَ ۙ مَنْ يَّاْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَمَنْ هُوَ كَاذِبٌ‌ ؕ وَارْتَقِبُوْۤا اِنِّىْ مَعَكُمْ رَقِيْبٌ‏
11:93. "என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்கள் நிலையிலேயே செயல்படுங்கள்; நானும் செயல்படுகிறேன்; இழிவுதரும் வேதனை யாரை வந்தடையும்? என்பதையும், பொய்யர் யார்? என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்: நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" (என்றும் கூறினார்).
12:18   وَجَآءُوْ عَلٰى قَمِيـْصِهٖ بِدَمٍ كَذِبٍ‌ؕ قَالَ بَلْ سَوَّلَتْ لَـكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا‌ؕ فَصَبْرٌ جَمِيْلٌ‌ؕ وَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ‏
12:18. (மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; "இல்லை, உங்களுடைய மனங்கள் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது; எனவே, (எனக்கு இந்நிலையில்) அழகிய பொறுமையை மேற்கொள்வதே (நலமாக இருக்கும்); மேலும், நீங்கள் வர்ணிக்கின்றவற்றின் மீது அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்" என்று கூறினார்.
12:26   قَالَ هِىَ رَاوَدَتْنِىْ عَنْ نَّـفْسِىْ‌ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَا‌ۚ اِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِيْنَ‏
12:26. (இதை மறுத்து யூஸுஃப்) "அவள்தான் என்னை என் விருப்பத்திற்கு மாறாக மயக்கினாள்" என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: "அவருடைய சட்டை முன்புறத்தில் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை சொல்கிறாள்; அவரோ பொய்யர்களில் உள்ளவர்."
12:27   وَاِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِيْنَ‏
12:27. "அன்றியும், அவருடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் சொல்கிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்."
12:74   قَالُوْا فَمَا جَزَاۤؤُهٗۤ اِنْ كُنْتُمْ كٰذِبِيْنَ‏
12:74. (அதற்கு) அவர்கள், "நீங்கள் பொய்யர்களாக இருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?" என்று கேட்டார்கள்.
12:110   حَتّٰۤى اِذَا اسْتَيْــٴَــسَ الرُّسُلُ وَظَنُّوْۤا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَآءَهُمْ نَصْرُنَا ۙ فَـنُجِّىَ مَنْ نَّشَآءُ ‌ؕ وَلَا يُرَدُّ بَاْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ‏
12:110. (நம்) தூதர்கள் நிச்சயமாகப் பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி, நம்பிக்கை இழந்து விடும்பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர்; நமது தண்டனை குற்றவாளிகளான கூட்டத்தாரை விட்டும் நீக்கப்படாது.
15:80   وَلَـقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِيْنَۙ‏
15:80. (இவ்வாறே 'ஸமூது' சமூகத்தாரான) ஹிஜ்ர்வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினர்.
16:36   وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ‌ۚ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلٰلَةُ‌ ؕ فَسِيْرُوْا فِىْ الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ‏
16:36. மெய்யாக நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களைவிட்டும் நீங்கள் விலகிச்செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதரை அனுப்பிவைத்தோம்; எனவே, அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழிகாட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று? என்பதைக் கவனியுங்கள்.
16:82   فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ الْمُبِيْنُ‏
16:82. எனினும், இவர்கள் (உம்மைப்) புறக்கணித்துத் திரும்பிவிடுவார்களாயின் (நபியே! அதற்காகக் கவலைப்படாதீர்; ஏனெனில்,) உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் (இறைக் கட்டளைகளை அவர்களுக்கு)த் தெளிவாகச் சேர்ப்பிப்பதுதான்.
16:105   اِنَّمَا يَفْتَرِى الْـكَذِبَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ‌ۚ وَاُولٰۤٮِٕكَ هُمُ الْكٰذِبُوْنَ‏
16:105. நிச்சயமாகப் பொய்யை இட்டுக்கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள்தாம்; இன்னும், அவர்கள்தாம் பொய்யர்கள்.
16:113   وَلَـقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْهُمْ فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمُ الْعَذَابُ وَهُمْ ظٰلِمُوْنَ‏
16:113. இன்னும், நிச்சயமாக அவர்களிடத்தில் அவர்களிலிருந்தே (இறைத்) தூதர் வந்தார்; ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, அவர்கள் அநியாயம் செய்தவர்களாக இருக்கிற நிலையில் அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது.
16:116   وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَـتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّـتَفْتَرُوْا عَلَى اللّٰهِ الْكَذِبَ‌ؕ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَؕ‏
16:116. அல்லாஹ்வின் மீது பொய்யை நீங்கள் கற்பனைச் செய்வதற்காக உங்களுடைய நாவுகள் பொய்யாக வர்ணிப்பதை "இது அனுமதிக்கப்பட்டது (ஹலால்), இது தடுக்கப்பட்டது (ஹராம்)" என்பதாக நீங்கள் கூறவேண்டாம்; நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடையமாட்டார்கள்.
17:59   وَمَا مَنَعَنَاۤ اَنْ نُّرْسِلَ بِالْاٰيٰتِ اِلَّاۤ اَنْ كَذَّبَ بِهَا الْاَوَّلُوْنَ‌ؕ وَاٰتَيْنَا ثَمُوْدَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوْا بِهَا‌ؕ وَمَا نُرْسِلُ بِالْاٰيٰتِ اِلَّا تَخْوِيْفًا‏
17:59. (நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை: (இதற்குமுன்) நாம் ஸமூது கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ, (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.
18:5   مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ وَّلَا لِاٰبَآٮِٕهِمْ‌ؕ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ اَفْوَاهِهِمْ‌ؕ اِنْ يَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا‏
18:5. அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப்பற்றி எவ்வித அறிவுமில்லை; அவர்களுடைய வாய்களிலிருந்து வெளியாகும் வார்த்தையால் இது (பாவத்தில்) மிகப் பெரிதாகிவிட்டது; பொய்யைத் தவிர (வேறெதையும்) அவர்கள் கூறுவதில்லை.
18:15   هٰٓؤُلَاۤءِ قَوْمُنَا اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً‌ ؕ لَوْ لَا يَاْتُوْنَ عَلَيْهِمْ بِسُلْطٰنٍۢ بَيِّنٍ‌ ؕ فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا ؕ‏
18:15. எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு தெய்வங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே, அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனைவிட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்.)
20:48   اِنَّا قَدْ اُوْحِىَ اِلَـيْنَاۤ اَنَّ الْعَذَابَ عَلٰى مَنْ كَذَّبَ وَتَوَلّٰى‏
20:48. "எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து, புறக்கணிக்கிறானோ அவன்மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது" (என்று நீங்களிருவரும் அவனுக்குக் கூறுங்கள்).
20:56   وَلَـقَدْ اَرَيْنٰهُ اٰيٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَاَبٰى‏
20:56. நாம் நம்முடைய அத்தாட்சிகளை எல்லாம் அவனுக்குக் காண்பித்தோம்; ஆனால், அவன் (அவற்றையெல்லாம்) பொய்யெனக் கூறி (நம்பிக்கை கொள்ள) மறுத்துவிட்டான்.
20:61   قَالَ لَهُمْ مُّوْسٰى وَيْلَكُمْ لَا تَفْتَرُوْا عَلَى اللّٰهِ كَذِبًا فَيُسْحِتَكُمْ بِعَذَابٍ‌ۚ وَقَدْ خَابَ مَنِ افْتَرٰى‏
20:61. (அப்பொழுது) மூஸா சூனியக்காரர்களிடம் "உங்களுக்குக் கேடுதான்; அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்; (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்துவிடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திட்டமாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்துவிட்டான்" என்று கூறினார்.
21:77   وَنَصَرْنٰهُ مِنَ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِيْنَ‏
21:77. இன்னும், நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிடமிருந்து அவருக்கு நாம் உதவிசெய்தோம்; நிச்சயமாக அவர்கள் மிகக் கெட்ட சமூகத்தாராக இருந்தனர்; ஆதலால், அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
22:42   وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّثَمُوْدُ ۙ‏
22:42. (நபியே!) இவர்கள் உம்மைப் பொய்யாக்க முற்பட்டால் (அதற்காகக் கவலைப்படாதீர்; ஏனெனில்,) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹின் சமூகத்தினரும், ஆதும், ஸமூதும் (தத்தம் நபிமார்களைப்) பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்.
22:44   وَّاَصْحٰبُ مَدْيَنَ‌ۚ وَكُذِّبَ مُوْسٰى فَاَمْلَيْتُ لِلْكٰفِرِيْنَ ثُمَّ اَخَذْتُهُمْ‌ۚ فَكَيْفَ كَانَ نَكِيْرِ‏
22:44. (இவ்வாறே) மத்யன் வாசிகளும் (முற்பட்டனர்); இன்னும், மூஸாவும் பொய்ப்பிக்கப்பட்டார். எனினும், நான் நிராகரிப்பவர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பின்னர், அவர்களை நான் பிடித்துக் கொண்டேன்; என் தண்டனை எப்படியிருந்தது? (என்பதைக் கவனிப்பீராக!)
22:57   وَالَّذِيْنَ كَفَرُوْا وَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا فَاُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏
22:57. (ஆனால்) எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களோ, அவர்களுக்குத்தான் இழிவுமிக்க வேதனையுண்டு.
23:26   قَالَ رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏
23:26. "என் இறைவா! இவர்கள் என்னைப் பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!" என்று கூறினார்.
23:33   وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهِ الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِلِقَآءِ الْاٰخِرَةِ وَاَتْرَفْنٰهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۙ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ يَاْكُلُ مِمَّا تَاْكُلُوْنَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُوْنَ ۙ‏
23:33. ஆனால், அவருடைய சமூகத்தாரிலிருந்து (அவரை) நிராகரித்து, மறுமையின் சந்திப்பை பொய்யாக்கி, இவ்வுலக வாழ்வில் அவர்களுக்கு நாம் சுகமளித்தோமே அத்தகைய தலைவர்கள் (தம் சமூகத்தாரிடம்), "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்" என்று கூறினார்கள்.
23:38   اِنْ هُوَ اِلَّا رَجُلُ اۨفْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا وَّمَا نَحْنُ لَهٗ بِمُؤْمِنِيْنَ‏
23:38. 'இவர் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டும் மனிதரேயன்றி வேறில்லை; எனவே, இவரை நாம் நம்பமாட்டோம்' (என்றும் கூறினர்).
23:44   ثُمَّ اَرْسَلْنَا رُسُلَنَا تَتْـرَا‌ ؕ كُلَّ مَا جَآءَ اُمَّةً رَّسُوْلُهَا كَذَّبُوْهُ‌ فَاَتْبَـعْنَا بَعْـضَهُمْ بَعْـضًا وَّجَعَلْنٰهُمْ اَحَادِيْثَ‌ ۚ فَبُـعْدًا لِّـقَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ‏
23:44. பின்னரும், நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பிவைத்தோம்; ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்தபோதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே, (அழிவில்) அவர்களில் சிலரைச் சிலருக்கு (ஒருவருக்குப்பின் ஒருவராக) நாம் தொடரச்செய்தோம்; இன்னும், அவர்களைப் (பிற்காலத்தவர் பேசும்) வெறுங்கதைகளாக ஆக்கிவிட்டோம்; எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் அருள்) நெடுந்தொலைவேயாகும்.
23:48   فَكَذَّبُوْهُمَا فَكَانُوْا مِنَ الْمُهْلَـكِيْنَ‏
23:48. ஆகவே, இவ்விருவரையும் அவர்கள் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; (அதன் விளைவாக) அவர்கள் அழிந்தோராயினர்.
23:90   بَلْ اَتَيْنٰهُمْ بِالْحَـقِّ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ‏
23:90. எனினும், நாம் அவர்களிடம் உண்மையையே கொண்டுவந்தோம்; ஆனால், நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள்.
23:105   اَلَمْ تَكُنْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏
23:105. "என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்" (என்று கூறப்படும்).
24:7   وَالْخَـامِسَةُ اَنَّ لَـعْنَتَ اللّٰهِ عَلَيْهِ اِنْ كَانَ مِنَ الْكٰذِبِيْنَ‏
24:7. ஐந்தாவது முறை, (இதில்) தான் பொய்யர்களில் உள்ளவனாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும் என்றும் (அவன் கூற வேண்டும்).
24:8   وَيَدْرَؤُا عَنْهَا الْعَذَابَ اَنْ تَشْهَدَ اَرْبَعَ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ‌ۙ اِنَّهٗ لَمِنَ الْكٰذِبِيْنَۙ‏
24:8. இன்னும், (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) நிச்சயமாக அவன் பொய்யர்களில் உள்ளவன் என்று அல்லாஹ்வைக் கொண்டு (சத்தியம் செய்து) நான்கு முறை அவள் சாட்சி கூறுவது, அவளைவிட்டும் (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையைத் தடுத்துவிடும்.
24:13   لَوْلَا جَآءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ ۚ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْـكٰذِبُوْنَ‏
24:13. அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டாமா? எனவே, அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவரவில்லையெனில், அவர்கள்தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.
25:11   بَلْ كَذَّبُوْا بِالسَّاعَةِ‌ وَاَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيْرًا‌ ۚ‏
25:11. எனினும், அவர்கள் மறுமை நாளையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; ஆனால், நாம் மறுமை நாளைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
25:19   فَقَدْ كَذَّبُوْكُمْ بِمَا تَقُوْلُوْنَۙ فَمَا تَسْتَطِيْعُوْنَ صَرْفًا وَّلَا نَـصْرًا‌ۚ وَمَنْ يَّظْلِمْ مِّنْكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيْرًا‏
25:19. "நீங்கள் சொல்லியதையெல்லாம் திட்டமாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர்; ஆகவே, (இப்போது வேதனையைத்) தடுத்துக்கொள்ளவோ, உதவி பெற்றுக்கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும், உங்களில் எவன் அநியாயம் செய்துகொண்டிருந்தானோ அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச் செய்வோம்" (என்று இறைவன் கூறுவான்).
25:36   فَقُلْنَا اذْهَبَاۤ اِلَى الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَاؕ فَدَمَّرْنٰهُمْ تَدْمِيْرًاؕ‏
25:36. ஆகவே நாம், "நீங்கள் இருவரும் - நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தார்களே, அக்கூட்டத்தாரிடம் செல்லுங்கள்" என்று கூறினோம்; பின்னர், அ(வ்வாறு பொய்ப்பித்த)வர்களை முற்றும் அழித்தோம்.
25:37   وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنٰهُمْ وَجَعَلْنٰهُمْ لِلنَّاسِ اٰيَةً ‌ ؕ وَاَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ عَذَابًا اَ لِيْمًا ‌ۖ‌ ۚ‏
25:37. இன்னும், நூஹின் சமூகத்தாரை அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கியபோது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம். மேலும், அநியாயக்காரர்களுக்கு நோவினைசெய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.
26:6   فَقَدْ كَذَّبُوْا فَسَيَاْتِيْهِمْ اَنْۢـبٰٓــؤُا مَا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
26:6. திடீரென அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனைப் பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமாக வந்துசேரும்.
26:12   قَالَ رَبِّ اِنِّىْۤ اَخَافُ اَنْ يُّكَذِّبُوْنِؕ‏
26:12. (இதற்கு அவர்,) "என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.
26:105   كَذَّبَتْ قَوْمُ نُوْحِ ۨالْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏
26:105. நூஹுடைய சமூகத்தாரும் (இறைத்) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்.
26:117   قَالَ رَبِّ اِنَّ قَوْمِىْ كَذَّبُوْنِ‌ ۖ‌ۚ‏
26:117. அவர் கூறினார்: "என் இறைவனே! என்னுடைய சமூகத்தார் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கிவிட்டார்கள்."
26:123   كَذَّبَتْ عَادُ اۨلْمُرْسَلِيْنَ ‌ۖ ‌ۚ‏
26:123. ஆது (கூட்டத்தினரும் இறைத்) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
26:139   فَكَذَّبُوْهُ فَاَهْلَـكْنٰهُمْ‌ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاَيَةً‌ ؕ وَ مَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
26:139. (இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின், நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும், அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:141   كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏
26:141. சமூத் - (கூட்டத்தாரும் இறைத்) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
26:160   كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ اۨلْمُرْسَلِيْنَ‌ ۖ ‌ۚ‏
26:160. லூத்துடைய சமூகத்தாரும் (இறைத்) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
26:176   كَذَّبَ اَصْحٰبُ لْئَيْكَةِ الْمُرْسَلِيْنَ ‌ۖ‌ۚ‏
26:176. தோப்புவாசிகளும் (இறைத்) தூதர்களைப் பொய்ப்படுத்தினார்கள்.
26:186   وَمَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا وَ اِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكٰذِبِيْنَ‌ۚ‏
26:186. "நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி (வேறு) இல்லை; உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே நிச்சயமாக நாங்கள் எண்ணுகிறோம்."
26:189   فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ‌ؕ اِنَّهٗ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
26:189. பின்னரும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, (அடர்ந்திருண்ட) மேகத்துடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக்கொண்டது; நிச்சயமாக அது கடினமான நாளின் வேதனையாகவே இருந்தது.
26:223   يُّلْقُوْنَ السَّمْعَ وَاَكْثَرُهُمْ كٰذِبُوْنَؕ‏
26:223. தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும், அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே.
27:27   قَالَ سَنَـنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِيْنَ‏
27:27. (அதற்கு ஸுலைமான்:) "நீ உண்மை கூறுகிறாயா? அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா? என்பதை நாம் விரைவிலேயே கண்டுகொள்வோம்" என்று கூறினார்.
27:83   وَ يَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ اُمَّةٍ فَوْجًا مِّمَّنْ يُّكَذِّبُ بِاٰيٰتِنَا فَهُمْ يُوْزَعُوْنَ‏
27:83. (அவர்களிலுள்ள) ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக!); பின்னர் (மறுமையில் முன்னுள்ளவர்கள், பின்னுள்ளவர்களுடன் சேர்ந்துகொள்வதற்காக) அவர்கள் நிறுத்திவைக்கப்படுவர்.
27:84   حَتّٰٓى اِذَا جَآءُوْ قَالَ اَكَذَّبْتُمْ بِاٰيٰتِىْ وَلَمْ تُحِيْطُوْا بِهَا عِلْمًا اَمَّاذَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
27:84. அவர்கள் வந்ததும் "நீங்கள் என் வசனங்களை - அவற்றைப் பற்றி சூழ்ந்தறியாத நிலையில் பொய்யாக்கினீர்களா? அல்லது, நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?" என்று கேட்பான்.
28:34   وَاَخِىْ هٰرُوْنُ هُوَ اَفْصَحُ مِنِّىْ لِسَانًا فَاَرْسِلْهُ مَعِىَ رِدْاً يُّصَدِّقُنِىْٓ‌ اِنِّىْۤ اَخَافُ اَنْ يُّكَذِّبُوْنِ‏
28:34. இன்னும், "என் சகோதரர் ஹாரூன் அவர் என்னைவிடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே, என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பிவைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார்; நிச்சயமாக அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்).
28:38   وَقَالَ فِرْعَوْنُ يٰۤـاَيُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرِىْ‌ ۚ فَاَوْقِدْ لِىْ يٰهَامٰنُ عَلَى الطِّيْنِ فَاجْعَلْ لِّىْ صَرْحًا لَّعَلِّىْۤ اَطَّلِعُ اِلٰٓى اِلٰهِ مُوْسٰى ۙ وَاِنِّىْ لَاَظُنُّهٗ مِنَ الْـكٰذِبِيْنَ‏
28:38. இன்னும், ஃபிர்அவ்ன் சொன்னான்: "பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறொரு கடவுள் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை; ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயை மூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு, எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனை எட்டிப் பார்க்க வேண்டும்; மேலும், நிச்சயமாக நான் இவரைப் பொய்யர்களில் உள்ளவர் என்றே கருதுகிறேன்."
29:3   وَلَقَدْ فَتَـنَّا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ فَلَيَـعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ صَدَقُوْا وَلَيَعْلَمَنَّ الْكٰذِبِيْنَ‏
29:3. நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம்; ஆகவே, உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும், பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.
29:12   وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوا اتَّبِعُوْا سَبِيْلَـنَا وَلْـنَحْمِلْ خَطٰيٰكُمْ ؕ وَمَا هُمْ بِحٰمِلِيْنَ مِنْ خَطٰيٰهُمْ مِّنْ شَىْءٍ‌ؕ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
29:12. நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்: "நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்துகொள்கிறோம்" என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லை; எனவே, (உங்கள் குற்றங்களைச் சுமப்பதாகச் சொல்லும்) நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
29:37   فَكَذَّبُوْهُ فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِىْ دَارِهِمْ جٰثِمِيْنَ‏
29:37. எனினும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலால், அவர்களைப் பூகம்பம் பிடித்துக்கொண்டது; ஆகவே, அவர்கள் தம் வீடுகளில் அதிகாலையில் (மரணித்து) முகங்குப்புற வீழ்ந்து கிடந்தார்கள்.
29:68   وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِالْحَـقِّ لَمَّا جَآءَهٗ‌ؕ اَلَيْسَ فِىْ جَهَـنَّمَ مَثْوًى لِّلْكٰفِرِيْنَ‏
29:68. அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட, அல்லது தன்னிடம் சத்தியம் வந்தபோது அதைப் பொய்ப்பிப்பவனை விட அநியாயக்காரன் யார்? (இத்தகைய) நிராகரிப்பாளர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது?
30:10   ثُمَّ كَانَ عَاقِبَةَ الَّذِيْنَ اَسَآءُوا السُّوْٓآٰى اَنْ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ وَكَانُوْا بِهَا يَسْتَهْزِءُوْنَ‏
30:10. பிறகு, அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டு அவற்றைப் பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால், தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவே ஆயிற்று.
30:16   وَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَا وَلِقَآئِ الْاٰخِرَةِ فَاُولٰٓٮِٕكَ فِى الْعَذَابِ مُحْضَرُوْنَ‏
30:16. இன்னும், எவர்கள் நிராகரித்து நம்முடைய வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ அ(த்தகைய)வர்கள், வேதனைக்காகக் கொண்டுவரப்படுவார்கள்.
32:20   وَاَمَّا الَّذِيْنَ فَسَقُوْا فَمَاْوٰٮهُمُ النَّارُ‌ؕ كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ يَّخْرُجُوْا مِنْهَاۤ اُعِيْدُوْا فِيْهَا وَ قِيْلَ لَهُمْ ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ‏
32:20. ஆனால், எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும்போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு, "எதனை நீங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
34:8   اَ فْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَمْ بِهٖ جِنَّةٌ  ؕ بَلِ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ فِى الْعَذَابِ وَالضَّلٰلِ الْبَعِيْدِ‏
34:8. அன்றியும், இவ்வாறு கூறுகின்றவர் "அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறாரா? அல்லது இவருக்குப் பைத்தியமா?" (என்றும் கேட்கிறார்கள்); அவ்வாறல்ல! மறுமையின் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் வேதனையிலும் வெகுதூரமான வழிகேட்டிலுமே இருக்கிறார்கள்.
34:42   فَالْيَوْمَ لَا يَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍ نَّفْعًا وَّلَا ضَرًّا ؕ وَنَـقُوْلُ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّتِىْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏
34:42. "இன்றைய தினம் உங்களில் சிலர் (உங்களில் மற்றும்) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்யச் சக்தி பெற மாட்டார்கள்: நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப் பாருங்கள்" என்றும், அநியாயம் செய்தவர்களிடம் நாம் கூறுவோம்.
34:45   وَكَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۙ وَمَا بَلَـغُوْا مِعْشَارَ مَاۤ اٰتَيْنٰهُمْ فَكَذَّبُوْا رُسُلِىْ فَكَيْفَ كَانَ نَكِيْرِ‏
34:45. மேலும், இவர்களுக்கு முன்னிருந்த (ஏனைய சமூகத்த)வர்களும் (இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டனர்; அன்றியும், அவர்களுக்கு நாம் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக்கூட இவர்கள் அடையவில்லை; ஆகவே, அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; மறுப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது? (என்பதை இவர்கள் நினைவு கூரட்டும்).
35:4   وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ‏
35:4. இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்); இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாகப் பொய்ப்பித்தனர்; அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்கப்படும்.
35:25   وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ۚ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتٰبِ الْمُنِيْرِ‏
35:25. இன்னும், அவர்கள் உம்மைப் பொய்ப்பித்தார்களானால் (விசனப்படாதீர்); இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர்; அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.
36:14   اِذْ اَرْسَلْنَاۤ اِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوْهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُـوْۤا اِنَّاۤ اِلَيْكُمْ مُّرْسَلُوْنَ‏
36:14. நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே, (அவர்களை) மூன்றாவது தூதரைக்கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
36:15   قَالُوْا مَاۤ اَنْـتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا ۙ وَمَاۤ اَنْزَلَ الرَّحْمٰنُ مِنْ شَىْءٍۙ اِنْ اَنْـتُمْ اِلَّا تَكْذِبُوْنَ‏
36:15. (அதற்கு அம்மக்கள்) "நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அளவற்ற அருளாளன் (உங்களுக்கு) எதனையும் இறக்கிவைக்கவில்லை; நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.
36:55   اِنَّ اَصْحٰبَ الْجَـنَّةِ الْيَوْمَ فِىْ شُغُلٍ فٰكِهُوْنَ‌ۚ‏
36:55. அந்நாளில், நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடையோராக இருப்பார்கள்.
37:21   هٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ‏
37:21. "நீங்கள் எதைப் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, அந்தத் தீர்ப்புநாள் இதுதான்!" (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)
37:152   وَلَدَ اللّٰهُۙ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
37:152. "அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான்" - (என்று கூறும்) நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
38:4   وَعَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ‌ وَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا سٰحِرٌ كَذَّابٌ‌ ۖ‌ۚ‏
38:4. அன்றியும், தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்; "இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!" என்றும் நிராகரித்தவர்கள் கூறினர்.
38:12   كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّفِرْعَوْنُ ذُو الْاَوْتَادِۙ‏
38:12. (இவ்வாறே) இவர்களுக்கு முன் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ஆது (சமூகத்தாரு)ம், முளைகளுடைய (- பெரும்படைகளுடைய) ஃபிர்அவ்னும் நம் தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
38:14   اِنْ كُلٌّ اِلَّا كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقَابِ‏
38:14. இவர்கள் ஒவ்வொருவரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்படாமல் இல்லை; எனவே, என்னுடைய தண்டனை (அவர்கள் மீது) உறுதியாயிற்று.
39:3   اَلَا لِلّٰهِ الدِّيْنُ الْخَالِصُ‌ ؕ وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ‌ ۘ مَا نَعْبُدُهُمْ اِلَّا لِيُقَرِّبُوْنَاۤ اِلَى اللّٰهِ زُلْفٰى ؕ اِنَّ اللّٰهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِىْ مَا هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ كٰذِبٌ كَفَّارٌ‏
39:3. அறிந்து கொள்வீராக! கலப்பற்ற மார்க்கம் (வழிபாடு யாவும்) அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், "அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை" (என்கின்றனர்); அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
39:25   كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتٰٮهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَ‏
39:25. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வேத வசனங்களைப்) பொய்ப்பிக்க முற்பட்டனர், ஆகவே, அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனை வந்தது.
39:32   فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَبَ عَلَى اللّٰهِ وَكَذَّبَ بِالصِّدْقِ اِذْ جَآءَهٗ‌ ؕ اَ لَيْسَ فِىْ جَهَنَّمَ مَثْـوًى لِّـلْـكٰفِرِيْنَ‏
39:32. எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து இன்னும், உண்மையை அது தன்னிடம் வந்தபோது பொய்ப்பிப்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) நிராகரிப்பாளர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா?
39:59   بَلٰى قَدْ جَآءَتْكَ اٰيٰتِىْ فَكَذَّبْتَ بِهَا وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكٰفِرِيْنَ‏
39:59. (பதில் கூறப்படும்:) "மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால், அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; நிராகரிப்போரில் ஒருவனாகி இருந்தாய்."
39:60   وَيَوْمَ الْقِيٰمَةِ تَرَى الَّذِيْنَ كَذَبُوْا عَلَى اللّٰهِ وُجُوْهُهُمْ مُّسْوَدَّةٌ ؕ اَلَيْسَ فِىْ جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِيْنَ‏
39:60. அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே அவர்களுடைய முகங்கள் மறுமை நாளில் கறுத்துப்போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
40:5   كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّ الْاَحْزَابُ مِنْۢ بَعْدِهِمْ وَهَمَّتْ كُلُّ اُمَّةٍۢ بِرَسُوْلِهِمْ لِيَاْخُذُوْهُ ؕ وَجَادَلُوْا بِالْبَاطِلِ لِيُدْحِضُوْا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ‏
40:5. இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும், ஒவ்வொரு சமுதாயமும் தன்னிடம் வந்த தூதர்களைப் (குற்றம் கண்டு) பிடிக்கக் கருதி, உண்மையை அழித்துவிடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது; ஆனால், நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப்பெற்ற என் தண்டனை எவ்வாறு இருந்தது?)
40:24   اِلٰى فِرْعَوْنَ وَ هَامٰنَ وَقَارُوْنَ فَقَالُوْا سٰحِرٌ كَذَّابٌ‏
40:24. ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம்; ஆனால், அவர்களோ "(இவர்) பொய்யுரைப்பவர், சூனியக்காரர்" என்று கூறினர்.
40:28   وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ ‌ۖ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَكْتُمُ اِيْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ يَّقُوْلَ رَبِّىَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَيِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ؕ وَاِنْ يَّكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهٗ ؕ وَاِنْ يَّكُ صَادِقًا يُّصِبْكُمْ بَعْضُ الَّذِىْ يَعِدُكُمْ ۚ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ‏
40:28. ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் நம்பிக்கையை மறைத்துவைத்திருந்த, நம்பிக்கை கொண்ட மனிதர் ஒருவர் கூறினார்: "என் இறைவன் அல்லாஹ்வேதான்!" என்று ஒரு மனிதர் கூறியதற்காக அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? மேலும், அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டுவந்துள்ளார்; எனவே, அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால், அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்புமீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
40:37   اَسْبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰٓى اِلٰهِ مُوْسٰى وَاِنِّىْ لَاَظُنُّهٗ كَاذِبًا ؕ وَكَذٰلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوْٓءُ عَمَلِهٖ وَصُدَّ عَنِ السَّبِيْلِ ؕ وَمَا كَيْدُ فِرْعَوْنَ اِلَّا فِىْ تَبَابٍ‏
40:37. "(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய இறைவனை நான் காணவேண்டும்; எனினும், அவர் பொய்சொல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்" (என ஃபிர்அவ்ன் கூறினான்); இவ்வாறே, ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீயசெயல் அழகாக்கப்பட்டது; இன்னும், (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவிலேயே தவிர இல்லை.
40:70   الَّذِيْنَ كَذَّبُوْا بِالْكِتٰبِ وَبِمَاۤ اَرْسَلْنَا بِهٖ رُسُلَنَا ۛ  فَسَوْفَ يَعْلَمُوْنَ ۙ‏
40:70. எவர்கள் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்.
42:24   اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا‌ ۚ فَاِنْ يَّشَاِ اللّٰهُ يَخْتِمْ عَلٰى قَلْبِكَ‌ ؕ وَيَمْحُ اللّٰهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمٰتِهٖۤ‌ ؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
42:24. அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்: "அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டிக் கூறுகிறார்" என்று சொல்கிறார்களா? அல்லாஹ் நாடினால், அவன் உம் இதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும், அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக்கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்.
43:25   فَانْتَقَمْنَا مِنْهُمْ‌ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ‏
43:25. ஆகவே, நாம் அவர்களிடம் பழிதீர்த்தோம்; எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக!
50:5   بَلْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِىْۤ اَمْرٍ مَّرِيْجٍ‏
50:5. இருப்பினும், சத்திய (வேத)த்தை - அது தம்மிடம் வந்தபோது பொய்ப்பிக்க (முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.
50:14   وَّاَصْحٰبُ الْاَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍ‌ؕ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيْدِ‏
50:14. (அவ்வாறே, மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவுடைய கூட்டத்தாரும் - ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்; எனவே, (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று.
52:11   فَوَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّـلْمُكَذِّبِيْنَۙ‏
52:11. (சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
52:14   هٰذِهِ النَّارُ الَّتِىْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏
52:14. (அந்நாளில், அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் எதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பு இதுதான்."
53:11   مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰى‏
53:11. (நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றிப் பொய்யுரைக்கவில்லை.
54:3   وَكَذَّبُوْا وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ‌ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ‏
54:3. அன்றியும், அவர்கள் (காண்பிக்கப்படும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும், தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர்; ஆயினும், ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
54:9   كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ‏
54:9. இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே, அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) 'பைத்தியக்காரர்' என்று கூறினர்; அவர் விரட்டவும்பட்டார்.
54:18   كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ‏
54:18. ஆது (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினார்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கைகளும் எப்படி இருந்தன (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)
54:23   كَذَّبَتْ ثَمُوْدُ بِالنُّذُرِ‏
54:23. ஸமூது (கூட்டமும்) எச்சரிக்கையாளர்களைப் பொய்ப்பித்தது.
54:25   ءَاُلْقِىَ الذِّكْرُ عَلَيْهِ مِنْۢ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ اَشِرٌ‏
54:25. "நம்மிடையே இருந்து இவர்மீது தானா (நினைவுறுத்தும்) உபதேசம் இறக்கப்பட வேண்டும்? அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்" (என்றும் அவர்கள் கூறினர்).
54:26   سَيَعْلَمُوْنَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْاَشِرُ‏
54:26. ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்? என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
54:33   كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ ۢ بِالنُّذُرِ‏
54:33. லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கையாளர்களைப் பொய்ப்பித்தனர்.
55:43   هٰذِهٖ جَهَنَّمُ الَّتِىْ يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُوْنَ‌ۘ‏
55:43. அன்று அவர்களிடம் "இது தான் குற்றவாளிகள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்).
56:2   لَيْسَ لِـوَقْعَتِهَا كَاذِبَةٌ‌ ۘ‏
56:2. அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
56:51   ثُمَّ اِنَّكُمْ اَيُّهَا الضَّآلُّوْنَ الْمُكَذِّبُوْنَۙ‏
56:51. அதற்குப் பின்னர்: பொய்யர்களாகிய வழிகேடர்களே! நிச்சயமாக நீங்கள்-
56:82   وَتَجْعَلُوْنَ رِزْقَكُمْ اَنَّكُمْ تُكَذِّبُوْنَ‏
56:82. நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியத்திற்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
56:92   وَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِيْنَ الضَّآلِّيْنَۙ‏
56:92. ஆனால், அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் ஒருவனாக இருந்தால்,
56:93   فَنُزُلٌ مِّنْ حَمِيْمٍۙ‏
56:93. கொதிக்கும் நீரே, (அவனுக்கு) விருந்தாகும்.
57:19   وَالَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖۤ اُولٰٓٮِٕكَ هُمُ الصِّدِّيْقُوْنَۖ وَالشُّهَدَآءُ عِنْدَ رَبِّهِمْؕ لَهُمْ اَجْرُهُمْ وَنُوْرُهُمْ‌ؕ وَ الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَاۤ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ‏
57:19. மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள்தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர்த் தியாகிகளாகவும் இருப்பார்கள்; அவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியும் (நேர்வழி காட்டும்) பேரொளியும் உண்டு; எவர்கள் நிராகரித்துக் கொண்டும், நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் நரக வாசிகள்தான்.
58:14   اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْؕ مَّا هُمْ مِّنْكُمْ وَلَا مِنْهُمْۙ وَيَحْلِفُوْنَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُوْنَ‏
58:14. எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்கள் அறிந்துகொண்டே (உங்களுடன் இருப்பதாக) பொய்யின் மீது சத்தியம் செய்கின்றனர்.
58:18   يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيَحْلِفُوْنَ لَهٗ كَمَا يَحْلِفُوْنَ لَـكُمْ‌ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ عَلٰى شَىْءٍ‌ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْكٰذِبُوْنَ‏
58:18. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் எழுப்பும் நாளில் அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்தது போல், அவனிடமும் சத்தியம் செய்வார்கள்; அன்றியும், அவர்கள் (அதன் மூலம் தப்பித்துக் கொள்வதற்கு) ஏதோ ஒன்றின் மீது நிச்சயமாகத் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள்; அறிந்து கொள்க! நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
59:11   اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ نَافَقُوْا يَقُوْلُوْنَ لِاِخْوَانِهِمُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ لَٮِٕنْ اُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا نُطِيْعُ فِيْكُمْ اَحَدًا اَبَدًاۙ وَّاِنْ قُوْتِلْتُمْ لَـنَـنْصُرَنَّكُمْ ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
59:11. (நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துவிட்ட தம் சகோதரர்களிடம் "நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்; அன்றியும், உங்கள் விஷயத்தில் நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் கட்டுப்படமாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் தொடுக்கப்பட்டால் நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்" என்று கூறுகின்றனர்; ஆனால், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான்.
62:5   مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا‌ ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
62:5. எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பட்டு, பின்னர் அதைச் சுமக்க (அதன்படி நடக்க) வில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும். எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும்; அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தினரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
63:1   اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ‌ۘ وَاللّٰهُ يَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِيْنَ لَـكٰذِبُوْنَ‌ ۚ‏
63:1. (நபியே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால் "நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர் என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்" என்று கூறுகின்றனர்; மேலும், அல்லாஹ் நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர் என்பதை நன்கு அறிவான்; ஆனால், அல்லாஹ் "நிச்சயமாக நயவஞ்சகர்கள் பொய்யுரைப்பவர்கள்" என்பதாகச் சாட்சி சொல்கிறான்.
67:9   قَالُوْا بَلٰى قَدْ جَآءَنَا نَذِيْرٌ  ۙ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللّٰهُ مِنْ شَىْءٍ ۖۚ اِنْ اَنْتُمْ اِلَّا فِىْ ضَلٰلٍ كَبِيْرٍ‏
67:9. அதற்கவர்கள் கூறுவார்கள்: "ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார். ஆனால், நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, 'அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை' என்று சொன்னோம்."
67:18   وَلَـقَدْ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيْرِ‏
67:18. அன்றியும், அவர்களுக்குமுன் இருந்தவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர்; எனவே, என் மறுப்பு எவ்வாறு இருந்தது?
68:8   فَلَا تُطِعِ الْمُكَذِّبِيْنَ‏
68:8. எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்.
68:44   فَذَرْنِىْ وَمَنْ يُّكَذِّبُ بِهٰذَا الْحَـدِيْثِ‌ؕ سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙ‏
68:44. எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டுவிடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் அவர்களை நாம் படிப்படியாகப் பிடிப்போம்.
69:4   كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌۢ بِالْقَارِعَةِ‏
69:4. ஸமூது (கூட்டத்தாரு)ம் ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
69:49   وَاِنَّا لَنَعْلَمُ اَنَّ مِنْكُمْ مُّكَذِّبِيْنَ‏
69:49. ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
72:5   وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ تَقُوْلَ الْاِنْسُ وَالْجِنُّ عَلَى اللّٰهِ كَذِبًا ۙ‏
72:5. மேலும், மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள் என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.
73:11   وَذَرْنِىْ وَالْمُكَذِّبِيْنَ اُولِى النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيْلًا‏
73:11. என்னையும், பொய்ப்பிப்பவர்களாகிய அந்தச் சுகவாசிகளையும் விட்டுவிடும்; அவர்களுக்குச் சிறிது அவகாசம் கொடுப்பீராக!
74:22   ثُمَّ عَبَسَ وَبَسَرَۙ‏
74:22. பின்னர், (அது பற்றிக் குறைகூற இயலாதவனாக) கடுகடுத்தான்; இன்னும், (முகம்) சுளித்தான்.
74:46   وَ كُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّيْنِۙ‏
74:46. "இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்."
75:32   وَلٰڪِنْ كَذَّبَ وَتَوَلّٰىۙ‏
75:32. ஆனால், அவன் பொய்ப்பித்து முகம் திருப்பிக்கொண்டான்.
77:15   وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
77:15. (நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
77:19   وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
77:19. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:24   وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
77:24. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:28   وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
77:28. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:29   اِنْطَلِقُوْۤا اِلٰى مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ‌ۚ‏
77:29. "நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன்பால் நடப்பீர்களாக!" (என்றும்.)
77:34   وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
77:34. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:37   وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
77:37. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:40   وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
77:40. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:45   وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
77:45. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:47   وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
77:47. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:49   وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
77:49. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
78:28   وَّكَذَّبُوْا بِاٰيٰتِنَا كِذَّابًا ؕ‏
78:28. அன்றியும், அவர்கள் நம் வசனங்களை மிக்க அதிகமாகப் பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
78:35   لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَـغْوًا وَّلَا كِذّٰبًا‌ ۚ‏
78:35. அங்கு அவர்கள் வீணானவற்றையும் பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
79:21   فَكَذَّبَ وَعَصٰى ۖ‏
79:21. ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
82:9   كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّيْنِۙ‏
82:9. இவ்வாறிருந்தும், நீங்கள் நியாயத்தீர்ப்பு நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
83:10   وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَۙ‏
83:10. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
83:11   الَّذِيْنَ يُكَذِّبُوْنَ بِيَوْمِ الدِّيْنِؕ‏
83:11. அவர்கள் எத்தகையோரென்றால், நியாயத்தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
83:12   وَمَا يُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِيْمٍۙ‏
83:12. வரம்பு மீறிய பெரும்பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
83:17   ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَؕ‏
83:17. "எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
84:22   بَلِ الَّذِيْنَ كَفَرُوْا يُكَذِّبُوْنَ ۖ‏
84:22. அன்றியும், நிராகரிப்பவர்கள் (அதைப்) பொய்ப்பிக்கின்றனர்.
85:19   بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِىْ تَكْذِيْبٍۙ‏
85:19. எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
91:11   كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰٮهَآ  ۙ‏
91:11. ஸமூது (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
91:14   فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا   ۙفَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰٮهَا  ۙ‏
91:14. ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால்நரம்பைத் தறித்துவிட்டனர்; ஆகவே, அவர்களின் (இந்தப்) பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள்மீது வேதனையை இறக்கி வைத்து, பிறகு அதனைச் (சகலருக்கும்) சரியாக்கிவிட்டான்.
92:9   وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ‏
92:9. இன்னும், நல்லவற்றைப் பொய்யாக்குகிறானோ,
92:16   الَّذِىْ كَذَّبَ وَتَوَلّٰىؕ‏
92:16. அவன் எத்தகையவனென்றால், (நம்) வசனங்களைப் பொய்யாக்கிப் புறக்கணித்தான்.
95:7   فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِ‏
95:7. எனவே, (இதற்குப்) பின்னர், நியாயத்தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
96:16   نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ‌ ۚ‏
96:16. தவறிழைத்துப் பொய்யுரைக்கும் முன் நெற்றி ரோமத்தை,
107:1   اَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ‏
107:1. (நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கிறானே அவனை நீர் பார்த்தீரா?