பொருள்
11:12 فَلَعَلَّكَ تَارِكٌۢ بَعْضَ مَا يُوْحٰٓى اِلَيْكَ وَضَآٮِٕقٌ ۢ بِهٖ صَدْرُكَ اَنْ يَّقُوْلُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ كَنْزٌ اَوْ جَآءَ مَعَهٗ مَلَكٌ ؕ اِنَّمَاۤ اَنْتَ نَذِيْرٌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ ؕ
11:12. (நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சலித்து) 'வஹீ' மூலம் உமக்கு அறிவிக்கப்படுகின்றவற்றில் சிலவற்றை விட்டுவிடுபவராய் நீர் ஆகிவிடுவீர் போலும்! "அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?" என்று அவர்கள் கூறுவதினால் உம்முடைய நெஞ்சம் அது பற்றி நெருக்கடியானதாக ஆகிவிடக்கூடும்: நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே! அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.
18:82 وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَيْنِ يَتِيْمَيْنِ فِى الْمَدِيْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًـا ۚ فَاَرَادَ رَبُّكَ اَنْ يَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا ۖ رَحْمَةً مِّنْ رَّبِّكَ ۚ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِىْ ؕ ذٰ لِكَ تَاْوِيْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًا ؕ
18:82. "(நான் நிமிர்த்து வைத்த) அந்தச் சுவர், அந்தப் பட்டினத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்து தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்து)க் கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான்; உம் இறைவனிடமிருந்துள்ள அருளாக! இதனை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை; எதைப்பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இதுதான்."
25:8 اَوْ يُلْقٰٓى اِلَيْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ يَّاْكُلُ مِنْهَا ؕ وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا
25:8. "அல்லது, இவருக்கு ஒரு புதையல் போடப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது, எதிலிருந்து அவர் உண்பாரோ அவ்விதத் தோட்டம், அவருக்கு உண்டாகியிருக்கவேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்;) அன்றியும், இந்த அநியாயக்காரர்கள்: (நம்பிக்கையாளர்களை நோக்கி) "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை" என்று கூறுகிறார்கள்.
26:58 وَّكُنُوْزٍ وَّمَقَامٍ كَرِيْمٍۙ
26:58. இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).
28:76 اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰى فَبَغٰى عَلَيْهِمْ وَاٰتَيْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَـتَـنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْفَرِحِيْنَ
28:76. நிச்சயமாக, 'காரூன்' மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும், அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான கருவூலங்களைக் கொடுத்திருந்தோம்; நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம், "நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! நிச்சயமாக அல்லாஹ் (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்" என்று கூறினார்கள்.