பொறாமை
2:109 وَدَّ کَثِيْرٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يَرُدُّوْنَكُمْ مِّنْۢ بَعْدِ اِيْمَانِكُمْ كُفَّارًا ۖۚ حَسَدًا مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَـقُّ ۚ فَاعْفُوْا وَاصْفَحُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى کُلِّ شَىْءٍ قَدِيْرٌ
2:109. வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால், நீங்கள் நம்பிக்கை கொண்ட பின் உங்களை நிராகரிப்போராக மாற்றிவிட வேண்டுமென விரும்புகிறார்கள்; ஆனால் அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டுவரும் வரை அவர்களை நீங்கள் மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்.
4:54 اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۚ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا
4:54. அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின் மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம், நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
48:15 سَيَـقُوْلُ الْمُخَلَّفُوْنَ اِذَا انْطَلَقْتُمْ اِلٰى مَغَانِمَ لِتَاْخُذُوْهَا ذَرُوْنَا نَـتَّبِعْكُمْ ۚ يُرِيْدُوْنَ اَنْ يُّبَدِّلُوْا كَلٰمَ اللّٰهِ ؕ قُلْ لَّنْ تَتَّبِعُوْنَا كَذٰلِكُمْ قَالَ اللّٰهُ مِنْ قَبْلُ ۚ فَسَيَقُوْلُوْنَ بَلْ تَحْسُدُوْنَـنَا ؕ بَلْ كَانُوْا لَا يَفْقَهُوْنَ اِلَّا قَلِيْلًا
48:15. போரில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் சென்றீர்களாயின், (போருக்கு உம்முடன் சேர்ந்துவராமல்) பின் தங்கி விட்டவர்கள், "நாங்களும் உங்களைப் பின்பற்றிவர, எங்களையும் (அனுமதித்து) விடுங்கள்" என்று கூறுவார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மாற்றிவிட நாடுகிறார்கள்; "நீங்கள் எங்களைப் பின்தொடர வேண்டாம்; இவ்வாறே அல்லாஹ் முன்னர் கூறியிருக்கின்றான்" என்று (நபியே! அவர்களிடம்) சொல்லிவிடுவீராக! ஆனால், அவர்கள், "அல்ல! நீங்கள் எங்கள்மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்" எனக் கூறுவார்கள்: அப்படியல்ல! அவர்கள் மிகச் சொற்பமாகவே அன்றி (பெரும்பாலானதை) விளங்காமலேயே இருக்கிறார்கள்.
113:5 وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ
113:5. பொறாமைக்காரனின் தீங்கைவிட்டும் - அவன் பொறாமைகொள்ளும் போது (நான் பாதுகாவல் தேடுகிறேன்).