முதுகு
2:101   وَلَمَّا جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِيْقٌ مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَۙ کِتٰبَ اللّٰهِ وَرَآءَ ظُهُوْرِهِمْ كَاَنَّهُمْ لَا يَعْلَمُوْنَ‏
2:101. அவர்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்துவிட்டார்கள்.
3:187   وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ الَّذِيْنَ اُوْتُوْا الْكِتٰبَ لَتُبَيِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗ فَنَبَذُوْهُ وَرَآءَ ظُهُوْرِهِمْ وَ اشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًاؕ فَبِئْسَ مَا يَشْتَرُوْنَ‏
3:187. தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்; அதை மறைக்கக்கூடாது என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக!); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாக சொற்ப கிரயத்தை வாங்கிக் கொண்டார்கள்; அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக்கெட்டதாகும்.
6:94   وَلَقَدْ جِئْتُمُوْنَا فُرَادٰى كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّتَرَكْتُمْ مَّا خَوَّلْنٰكُمْ وَرَآءَ ظُهُوْرِكُمْ‌ۚ وَمَا نَرٰى مَعَكُمْ شُفَعَآءَكُمُ الَّذِيْنَ زَعَمْتُمْ اَنَّهُمْ فِيْكُمْ شُرَكٰٓؤُا‌ ؕ لَقَدْ تَّقَطَّعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنْكُمْ مَّا كُنْتُمْ تَزْعُمُوْنَ‏
6:94. அன்றியும், (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), "நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று, நீங்கள் (எதுவும் இல்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும், நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டுவிட்டீர்கள்; நிச்சயமாக எவர்கள் உங்களில் கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, அத்தகைய உங்களுடைய பரிந்துரையாளர்களை உங்களுடன் நாம் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்) முறிந்துவிட்டன; இன்னும், நீங்கள் கற்பனை செய்துகொண்டிருந்தவை உங்களைவிட்டும் மறைந்துவிட்டன" (என்று கூறுவான்).
6:146   وَعَلَى الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا كُلَّ ذِىْ ظُفُرٍ‌‌ ۚ وَمِنَ الْبَقَرِ وَالْغَـنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُوْمَهُمَاۤ اِلَّا مَا حَمَلَتْ ظُهُوْرُهُمَاۤ اَوِ الْحَـوَايَاۤ اَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍ‌ ؕ ذٰ لِكَ جَزَيْنٰهُمْ بِبَـغْيِهِمْ‌‌ ۖ وَاِنَّا لَصٰدِقُوْنَ‏
6:146. (பிராணிகள் மற்றும் பறவைகளில் விரல்கள் பிளந்த) நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் தடுத்திருந்தோம்; இன்னும், மாட்டிலிருந்தும், ஆட்டிலிருந்தும் அவ்விரண்டினுடைய கொழுப்புகளையும் அவர்களின் மீது தடுத்திருந்தோம்; (எனினும்) அவ்விரண்டின் முதுகுகளோ அல்லது குடல்களோ சுமந்திருக்கின்றதையும், அல்லது எலும்புடன் கலந்திருப்பதையும் தவிர - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களை நாம் தண்டித்தோம்; நிச்சயமாக நாம் உண்மையாளராவோம்.
7:172   وَ اِذْ اَخَذَ رَبُّكَ مِنْۢ بَنِىْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّيَّتَهُمْ وَ اَشْهَدَهُمْ عَلٰٓى اَنْفُسِهِمْ‌ ۚ اَلَسْتُ بِرَبِّكُمْ‌ ؕ قَالُوْا بَلٰى‌ ۛۚ شَهِدْنَا ‌ۛۚ اَنْ تَقُوْلُوْا يَوْمَ الْقِيٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِيْنَ ۙ‏
7:172. உம் இறைவன் ஆதமுடைய மக்களில் அவர்களுடைய முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: "நான் உங்களுடைய இறைவன் அல்லவா?" என்று கேட்டதற்கு, அவர்கள், "மெய்தான்; நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்று கூறியதை நினைவூட்டுவீராக! "(ஏனெனில், நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து)விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம்" என்று மறுமைநாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருப்பதற்காக-
8:50   وَ لَوْ تَرٰٓى اِذْ يَتَوَفَّى الَّذِيْنَ كَفَرُوا‌ ۙ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏
8:50. வானவர்கள் நிராகரிப்பாளர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், அவர்களுடைய முகங்களிலும், பின்புறங்களிலும் அடிப்பார்கள். மேலும், "எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்" என்றும் கூறுவார்கள்.
9:35   يَّوْمَ يُحْمٰى عَلَيْهَا فِىْ نَارِ جَهَـنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ‌ؕ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ‏
9:35. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் நரகநெருப்பில் அவை காய்ச்சப்பட்டு, அவற்றைக்கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடுபோடப்படும்; (இன்னும்) "இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்துவைத்தது; ஆகவே, நீங்கள் சேமித்து வைத்திருந்ததைச் சுவைத்துப்பாருங்கள்" (என்று கூறப்படும்).
11:92   قَالَ يٰقَوْمِ اَرَهْطِىْۤ اَعَزُّ عَلَيْكُمْ مِّنَ اللّٰهِ ؕ وَ اتَّخَذْتُمُوْهُ وَرَآءَكُمْ ظِهْرِيًّا‌ ؕ اِنَّ رَبِّىْ بِمَا تَعْمَلُوْنَ مُحِيْطٌ‏
11:92. (அதற்கு) அவர் கூறினார்: "(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களா? நீங்கள் அவனை முதுகுக்குப்பின் தள்ளி(ப் புறக்கணித்து)விட்டீர்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்பவற்றை சூழ்ந்து அறிகிறவன்."
21:39   لَوْ يَعْلَمُ الَّذِيْنَ كَفَرُوْا حِيْنَ لَا يَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ يُنْصَرُوْنَ‏
21:39. தம் முகங்களைவிட்டும், தம் முதுகுகளை விட்டும் (நரக) நெருப்பைத் தடுத்துக்கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படாமலும் இருப்பார்களே அந்த நேரத்தை நிராகரிப்பாளர்கள் அறிந்து கொள்வார்களானால், (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்).
43:13   لِتَسْتَوٗا عَلٰى ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِىْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَۙ‏
43:13. அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் சரியாக அமர்ந்து கொள்வதற்காகவும், அவற்றின் மீது நீங்கள் சரியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவுகூர்ந்து "இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் இறை)வன் மிக்க பரிசுத்தமானவன்" என்று நீங்கள் கூறுவதற்காகவும்.
47:25   اِنَّ الَّذِيْنَ ارْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَى‌ۙ الشَّيْطٰنُ سَوَّلَ لَهُمْ ؕ وَاَمْلٰى لَهُمْ‏
47:25. நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் பின்புறங்களின் மீது திரும்பிச் சென்றுவிட்டார்களே அத்தகையோர் - (அவ்வாறு போவதை) ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கிவிட்டான்.
47:27   فَكَيْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ‏
47:27. ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) வானவர்கள் அவர்களை மரணமடையச் செய்யும்போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்?
84:10   وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖۙ‏
84:10. இன்னும், எவன் அவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றானோ -
86:7   يَّخْرُجُ مِنْۢ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَآٮِٕبِؕ‏
86:7. (ஆணின்) முதுகுத்தண்டிற்கும், (பெண்ணின் மார்பகங்களுக்கு மேல்) நெஞ்செலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.