முத்திரை
2:7   خَتَمَ اللّٰهُ عَلَىٰ قُلُوْبِهِمْ وَعَلٰى سَمْعِهِمْ‌ؕ وَعَلٰىٓ اَبْصَارِهِمْ غِشَاوَةٌ  وَّلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ‏
2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்களின் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்; இன்னும், அவர்களின் பார்வை மீது திரை இருக்கிறது; மேலும், அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
6:46   قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَخَذَ اللّٰهُ سَمْعَكُمْ وَ اَبْصَارَكُمْ وَخَتَمَ عَلٰى قُلُوْبِكُمْ مَّنْ اِلٰـهٌ غَيْرُ اللّٰهِ يَاْتِيْكُمْ بِهؕ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُوْنَ‏
6:46. 'அல்லாஹ் உங்களுடைய செவிப்புலன்களையும், பார்வைகளையும் எடுத்துவிட்டு, உங்கள் இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டால்-அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இறைவன் கொண்டுவருவான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக! (நம்) அத்தாட்சிகளை நாம் எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (இவ்வாறு இருந்தும்) பின்னர் அவர்கள் புறக்கணிக்கின்றனர்.
36:65   اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டுவிடுவோம்; அன்றியும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
42:24   اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا‌ ۚ فَاِنْ يَّشَاِ اللّٰهُ يَخْتِمْ عَلٰى قَلْبِكَ‌ ؕ وَيَمْحُ اللّٰهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمٰتِهٖۤ‌ ؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
42:24. அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்: "அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டிக் கூறுகிறார்" என்று சொல்கிறார்களா? அல்லாஹ் நாடினால், அவன் உம் இதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும், அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக்கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்.
45:23   اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةً  ؕ فَمَنْ يَّهْدِيْهِ مِنْۢ بَعْدِ اللّٰهِ‌ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ‏
45:23. (நபியே!) எவன் தன்னுடைய மனோ இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக்கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும், இதயத்தின் மீதும் முத்திரையிட்டு - இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான்; எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
83:25   يُسْقَوْنَ مِنْ رَّحِيْقٍ مَّخْتُوْمٍۙ‏
83:25. (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
83:26   خِتٰمُهٗ مِسْكٌ ‌ؕ وَفِىْ ذٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَ‏
83:26. அதன் முத்திரை கஸ்தூரியாகும்; எனவே, அதற்காக முந்திக்கொள்பவர்கள், முந்திக்கொள்ளட்டும்.