76. ஸூரத்துத் தஹ்ர் (காலம்)
மதனீ, வசனங்கள்: 31

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
76:1
76:1 هَلْ اَتٰى عَلَى الْاِنْسَانِ حِيْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْـٴًـــا مَّذْكُوْرًا‏
هَلْ اَتٰى வரவில்லையா عَلَى الْاِنْسَانِ மனிதனுக்கு حِيْنٌ ஒரு நேரம் مِّنَ الدَّهْرِ காலத்தில் இருந்து لَمْ يَكُنْ அவன் இருக்கவில்லை شَيْـٴًـــا ஒரு பொருளாக مَّذْكُوْرًا‏ நினைவு கூறப்படுகின்ற
76:1. ஹல் அதா 'அலல் இன்ஸானி ஹீனும் மினத் தஹ்ரி லம் யகுன் ஷய்'அம் மத்கூரா
76:1. திட்டமாக மனிதன் மீது காலத்திலிருந்து ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?
76:2
76:2 اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍۖ نَّبْتَلِيْهِ فَجَعَلْنٰهُ سَمِيْعًۢا بَصِيْرًا‏
اِنَّا நிச்சயமாக நாம் خَلَقْنَا படைத்தோம் الْاِنْسَانَ மனிதனை مِنْ نُّطْفَةٍ விந்துத் துளியிலிருந்து اَمْشَاجٍۖ கலக்கப்பட்ட نَّبْتَلِيْهِ அவனை நாம் சோதிக்கின்றோம் فَجَعَلْنٰهُ ஆகவே, அவனை ஆக்கினோம் سَمِيْعًۢا செவியுறுபவனாக بَصِيْرًا‏ பார்ப்பவனாக
76:2. இன்னா கலக்னல் இன்ஸான மின் னுத்Fபதின் அம்ஷாஜின் னBப்த லீஹி Fபஜ'அல்னாஹு ஸமீ'அம் Bபஸீரா
76:2. (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்; அவனை நாம் சோதிப்பதற்காக; அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
76:3
76:3 اِنَّا هَدَيْنٰهُ السَّبِيْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا‏
اِنَّا நிச்சயமாக நாம் هَدَيْنٰهُ அவனுக்கு வழிகாட்டினோம் السَّبِيْلَ பாதையை اِمَّا ஒன்று شَاكِرًا நன்றி உள்ளவனாக وَّاِمَّا كَفُوْرًا‏ அவர்கள் நன்றி கெட்டவனாக
76:3. இன்னா ஹதய்னாஹுஸ் ஸBபீல இம்மா ஷாகிர(ன்)வ் வ இம்மா கFபூரா
76:3. நிச்சயமாக நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றியுள்ளவனாக இருக்கின்றான்; அல்லது, (அதைப் புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.
76:4
76:4 اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ سَلٰسِلَا۟ وَاَغْلٰلًا وَّسَعِيْرًا‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَعْتَدْنَا தயார் செய்துள்ளோம் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு سَلٰسِلَا۟ சங்கிலிகளை(யும்) وَاَغْلٰلًا விலங்குகளையும் وَّسَعِيْرًا‏ கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும்
76:4. இன்னா அஃதத்னா லில்கா Fபிரீன ஸலாஸில வ அக்லால(ன்)வ் வ ஸ'ஈரா
76:4. நிராகரிப்பாளர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்துவிட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.
76:5
76:5 اِنَّ الْاَبْرَارَ يَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًا‌ۚ‏
اِنَّ நிச்சயமாக الْاَبْرَارَ நல்லவர்கள் يَشْرَبُوْنَ பருகுவார்கள் مِنْ كَاْسٍ ஒரு மது குவளையிலிருந்து كَانَ இருக்கும் مِزَاجُهَا அதன் கலப்பு كَافُوْرًا‌ۚ‏ காஃபூர் நறுமணத்தால்
76:5. இன்னல் அBப்ரார யஷ்ர Bபூன மின் கா'ஸின் கான மிZஜா ஜுஹா காFபூரா
76:5. நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளையிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும்.
76:6
76:6 عَيْنًا يَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ يُفَجِّرُوْنَهَا تَفْجِيْرًا‏
عَيْنًا ஓர் ஊற்றாகும் يَّشْرَبُ அருந்துவார்கள் بِهَا அதில் இருந்து عِبَادُ அடியார்கள் اللّٰهِ அல்லாஹ்வின் يُفَجِّرُوْنَهَا அதை அவர்கள் ஓட வைப்பார்கள் تَفْجِيْرًا‏ ஓட வைத்தல்
76:6. 'அய்ன(ன்)ய் யஷ்ரBபு Bபிஹா 'இBபாதுல் லாஹி யுFபஜ்ஜிரூனஹா தFப்ஜீரா
76:6. (அது) ஒரு நீரூற்று; அதிலிருந்து அல்லாஹ்வின் அடியார்கள் அருந்துவார்கள்; அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடையாக ஓடச் செய்வார்கள்.
76:7
76:7 يُوْفُوْنَ بِالنَّذْرِ وَيَخَافُوْنَ يَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِيْرًا‏
يُوْفُوْنَ நிறைவேற்றுவார்கள் بِالنَّذْرِ நேர்ச்சையை وَيَخَافُوْنَ இன்னும் பயப்படுவார்கள் يَوْمًا ஒரு நாளை كَانَ இருக்கும் شَرُّهٗ அதன் தீமை مُسْتَطِيْرًا‏ சூழ்ந்ததாக, பரவியதாக, கடுமையானதாக
76:7. யூFபூன Bபின்னத்ரி வ யகாFபூன யவ்மன் கான ஷர்ருஹூ முஸ்ததீரா
76:7. அவர்கள்தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறைவேற்றி வந்தவர்கள்; ஒரு நாளை அவர்கள் அஞ்சுவார்கள்; அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.
76:8
76:8 وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏
وَيُطْعِمُوْنَ இன்னும் உணவளிப்பார்கள் الطَّعَامَ உணவை عَلٰى حُبِّهٖ அதன் பிரியம் இருப்பதுடன் مِسْكِيْنًا ஏழைகளுக்கும் وَّيَتِيْمًا அனாதைகளுக்கும் وَّاَسِيْرًا‏ கைதிகளுக்கும்
76:8. வ யுத்''இமூனத் த'ஆம 'அலா ஹுBப்Bபிஹீ மிஸ்கீன(ன்)வ் வ யதீம(ன்)வ் வ அஸீரா
76:8. மேலும், அவ்விறைவன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைக்கும், அநாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.
76:9
76:9 اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا‏
اِنَّمَا نُطْعِمُكُمْ நாங்கள் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் لِـوَجْهِ முகத்திற்காகத்தான் اللّٰهِ அல்லாஹ்வின் لَا نُرِيْدُ நாங்கள் நாடவில்லை مِنْكُمْ உங்களிடம் جَزَآءً கூலியையும் وَّلَا شُكُوْرًا‏ நன்றியையும்
76:9. இன்னாமா னுத்'இமுகும் லி வஜ்ஹில் லாஹி லா னுரீது மின்கும் ஜZஜா'அ(ன்)வ் வலா ஷுகூரா
76:9. "உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ, (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை" (என்று அவர்கள் கூறுவர்).
76:10
76:10 اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا يَوْمًا عَبُوْسًا قَمْطَرِيْرًا‏
اِنَّا நிச்சயமாக நாங்கள் نَخَافُ பயப்படுகின்றோம் مِنْ رَّبِّنَا எங்கள் இறைவனிடம் يَوْمًا ஒரு நாளை عَبُوْسًا கடுகடுக்கின்ற قَمْطَرِيْرًا‏ சுருங்கிவிடுகின்ற
76:10. இன்னா னகாFபு மிர் ரBப்Bபின யவ்மன் 'அBபூஸன் கம்தரீரா
76:10. "எங்கள் இறைவனிடமிருந்து (எங்கள்) முகங்கள் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்" (என்றும் கூறுவர்).
76:11
76:11 فَوَقٰٮهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْيَوْمِ وَ لَقّٰٮهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا‌ۚ‏
فَوَقٰٮهُمُ ஆகவே அவர்களை பாதுகாப்பான் اللّٰهُ அல்லாஹ் شَرَّ தீமையில் இருந்து ذٰلِكَ الْيَوْمِ وَ لَقّٰٮهُمْ அந்நாளின்/இன்னும் அவர்களுக்கு கொடுப்பான் نَضْرَةً முக செழிப்பையும் وَّسُرُوْرًا‌ۚ‏ மன மகிழ்ச்சியையும்
76:11. Fப வகாஹுமுல் லாஹு ஷர்ர தாலிகல் யவ்மி வ லக்காஹும் னள்ரத(ன்)வ் வ ஸுரூரா
76:11. எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு முகச் செழுமையையும் மகிழ்ச்சியையும் அளிப்பான்.
76:12
76:12 وَجَزٰٮهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًا ۙ‏
وَجَزٰٮهُمْ இன்னும் அவன் அவர்களுக்கு கூலியாகக் கொடுப்பான் بِمَا صَبَرُوْا அவர்கள் பொறுமையாக இருந்ததால் جَنَّةً சொர்க்கத்தையும் وَّحَرِيْرًا ۙ‏ பட்டையும்
76:12. வ ஜZஜாஹும் Bபிமா ஸBபரூ ஜன்னத(ன்)வ் வ ஹரீரா
76:12. மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்குச் சுவர்க்கத்தையும், பட்டாடையையும் அவன் (நற்)கூலியாகக் கொடுத்தான்.
76:13
76:13 مُّتَّكِـِٕـيْنَ فِيْهَا عَلَى الْاَرَآٮِٕكِ‌ۚ لَا يَرَوْنَ فِيْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِيْرًا‌ۚ‏
مُّتَّكِـِٕـيْنَ சாய்ந்தவர்களாக فِيْهَا அதில் عَلَى الْاَرَآٮِٕكِ‌ۚ கட்டில்களில் لَا يَرَوْنَ காண மாட்டார்கள் فِيْهَا அதில் شَمْسًا சூரியனையோ وَّلَا زَمْهَرِيْرًا‌ۚ‏ குளிரையோ
76:13. முத்தகி'ஈன Fபீஹா 'அலல் அரா 'இகி லா யரவ்ன Fபீஹா ஷம்ஸ(ன்)வ் வலா Zஜம்ஹரீரா
76:13. அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங்குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.
76:14
76:14 وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِيْلًا‏
وَدَانِيَةً அருகில் இருக்கும் عَلَيْهِمْ அவர்களுக்கு ظِلٰلُهَا அதன் நிழல்கள் وَذُلِّلَتْ மிக தாழ்வாக ஆக்கப்பட்டிருக்கும் قُطُوْفُهَا அவற்றின் கனிகள் تَذْلِيْلًا‏ மிக தாழ்வாக
76:14. வ தானியதன் 'அலய்ஹிம் ளிலாலுஹா வ துல்லிலத் குதூFபு ஹா தத்லீலா
76:14. மேலும், அதன் (மர) நிழல்கள் அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.
76:15
76:15 وَيُطَافُ عَلَيْهِمْ بِاٰنِيَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِيْرَا۟ؔ ۙ‏
وَيُطَافُ عَلَيْهِمْ அவர்கள் முன் சுற்றி வரப்படும் بِاٰنِيَةٍ பாத்திரங்கள் مِّنْ فِضَّةٍ வெள்ளியினால் وَّاَكْوَابٍ கெண்டிகள் كَانَتْ இருக்கின்ற قَوَارِيْرَا۟ؔ ۙ‏ கண்ணாடிகளாக
76:15. வ யுதாFபு 'அலய்ஹிம் Bபி ஆனியதிம் மின் Fபிள்ளதி(ன்)வ் வ அக்வாBபின் கானத் கவாரீரா
76:15. (பானங்கள் -) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் அவர்களைச் சுற்றிக் கொண்டுவரப்படும்.
76:16
76:16 قَوَارِيْرَا۟ؔ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِيْرًا‏
قَوَارِيْرَا۟ؔ கண்ணாடிகளாகும் مِنْ فِضَّةٍ வெள்ளிகலந்த قَدَّرُوْهَا அவற்றை நிர்ணயிப்பார்கள் تَقْدِيْرًا‏ துல்லியமாக
76:16. கவாரீர மின் Fபிள்ளதின் கத்தரூஹா தக்தீரா
76:16. வெள்ளியினாலான பளிங்குக் கிண்ணங்கள் - அவற்றைத் தக்க அளவாக அமைத்திருப்பார்கள்.
76:17
76:17 ‌ ‌ وَيُسْقَوْنَ فِيْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيْلًا ۚ‏
وَيُسْقَوْنَ இன்னும் அவர்களுக்கு புகட்டப்படும் فِيْهَا அதில் كَاْسًا மதுக் குவளையில் كَانَ இருக்கும் مِزَاجُهَا அதன் கலவை زَنْجَبِيْلًا ۚ‏ இஞ்சியாக
76:17. வ யுஸ்கவ்ன Fபீஹா காஸன் கான மிZஜாஜுஹா Zஜன்ஜBபீலா
76:17. மேலும், அ(ச் சுவர்க்கத்)தில் ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்; அதன் கலவை இஞ்சியாக இருக்கும்.
76:18
76:18 عَيْنًا فِيْهَا تُسَمّٰى سَلْسَبِيْلًا‏
عَيْنًا ஓர் ஊற்றாகும் فِيْهَا அதில் உள்ள تُسَمّٰى பெயர் கூறப்படும் سَلْسَبِيْلًا‏ சல்சபீல்
76:18. 'அய்னன் Fபீஹா துஸம்மா ஸல்ஸBபீலா
76:18. 'ஸல்ஸபீல்' என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.
76:19
76:19 وَيَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ‌ۚ اِذَا رَاَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُـؤْلُـؤًا مَّنْثُوْرًا‏
وَيَطُوْفُ இன்னும் சுற்றி வருவார்(கள்) عَلَيْهِمْ அவர்களை وِلْدَانٌ சிறுவர்கள் مُّخَلَّدُوْنَ‌ۚ நிரந்தரமானவர்கள் اِذَا رَاَيْتَهُمْ நீர் அவர்களைப் பார்த்தால் حَسِبْتَهُمْ அவர்களை எண்ணுவீர் لُـؤْلُـؤًا முத்துக்களாக مَّنْثُوْرًا‏ பரப்பி வைக்கப்பட்ட
76:19. வ யதூFபு 'அலய்ஹிம் வில்தானும் முகல்லதூன இதா ர அய்தஹும் ஹஸிBப்தஹும் லு'லு 'அம் மன்தூரா
76:19. இன்னும், எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி(ச் சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் பரத்தப்பட்ட முத்துக்களாக அவர்களை நீர் எண்ணுவீர்.
76:20
76:20 وَاِذَا رَاَيْتَ ثَمَّ رَاَيْتَ نَعِيْمًا وَّمُلْكًا كَبِيْرًا‏
وَاِذَا رَاَيْتَ நீர் பார்த்தாலும் ثَمَّ எந்த இடத்தை رَاَيْتَ நீர் பார்ப்பீர் نَعِيْمًا பேரின்பத்தை(யும்) وَّمُلْكًا ஆட்சியையும் كَبِيْرًا‏ பெரிய
76:20. வ இதா ர அய்த தம்ம ர அய்த ன'ஈம(ன்)வ் வ முல்கன் கBபீரா
76:20. அன்றியும், அங்கு நீர் பார்த்தீராயின், இன்பபோக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்குக் காண்பீர்.
76:21
76:21 عٰلِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ‌ وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ‌ۚوَسَقٰٮهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا‏
عٰلِيَهُمْ அவர்களுக்கு மேல் ثِيَابُ ஆடைகளும் سُنْدُسٍ மென்மையான பட்டும் خُضْرٌ பச்சை நிற وَّاِسْتَبْرَقٌ‌ இன்னும் தடிப்பான பட்டு وَّحُلُّوْۤا இன்னும் அலங்கரிக்கப் படுவார்கள் اَسَاوِرَ காப்புகளால் مِنْ فِضَّةٍ வெள்ளியினால் ۚوَسَقٰٮهُمْ புகட்டுவான்/ அவர்களுக்கு رَبُّهُمْ அவர்களின் இறைவன் شَرَابًا பானத்தை طَهُوْرًا‏ மிகத் தூய்மையான
76:21. ஆலியஹும் தியாBபு ஸுன்துஸின் குள்ரு(ன்)வ் வ இஸ்தBப்ரக், வ ஹுல்லூ அஸாவிர மின் Fபிள்ளதி(ன்)வ் வ ஸகாஹும் ரBப்Bபுஹும் ஷராBபன் தஹூரா
76:21. அவர்களின் மீது 'ஸுன்துஸு', 'இஸ்தப்ரக்' போன்ற பச்சை நிற பட்டாடைகள் இருக்கும்; இன்னும், அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.
76:22
76:22 اِنَّ هٰذَا كَانَ لَـكُمْ جَزَآءً وَّكَانَ سَعْيُكُمْ مَّشْكُوْرًا
اِنَّ நிச்சயமாக هٰذَا இவை كَانَ இருக்கும் لَـكُمْ உங்களுக்கு جَزَآءً கூலியாக وَّكَانَ இன்னும் இருக்கும் سَعْيُكُمْ உங்கள் உழைப்புகள் مَّشْكُوْرًا‏ நன்றிஅறியப்பட்டதாக
76:22. இன்னா ஹாதா கான லகும் ஜZஜா 'அ(ன்)வ் வ கான ஸஃயுகும் மஷ்கூரா
76:22. "நிச்சயமாக இது உங்களுக்கு (நற்)கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் நன்றிக்குரியதாகி (அங்கீகரிக்கப்பட்டு)விட்டது" (என்று அவர்களிடம் கூறப்படும்).
76:23
76:23 اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْاٰنَ تَنْزِيْلًا ۚ‏
اِنَّا நிச்சயமாக نَحْنُ நாம்தான் نَزَّلْنَا இறக்கினோம் عَلَيْكَ உம்மீது الْقُرْاٰنَ இந்த குர்ஆனை تَنْزِيْلًا ۚ‏ கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்
76:23. இன்னா னஹ்னு னZஜ்Zஜல்னா 'அலய்கல் குர்'ஆன தன்Zஜீலா
76:23. நிச்சயமாக நாம்தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.
76:24
76:24 فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًا‌ۚ‏
فَاصْبِرْ நீர் சகித்திருப்பீராக! لِحُكْمِ தீர்ப்புக்காக رَبِّكَ உமது இறைவனின் وَلَا تُطِعْ நீர் கீழ்ப்படியாதீர்! مِنْهُمْ அவர்களில் اٰثِمًا பாவிக்கும் اَوْ அல்லது كَفُوْرًا‌ۚ‏ நிராகரிப்பாளருக்கும்
76:24. Fபஸ்Bபிர் லிஹுக்மி ரBப்Bபிக வலா துதிஃ மின்ஹும் ஆதிமன் அவ் கFபூரா
76:24. ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர்பார்த்து) இருப்பீராக! அன்றியும், அவர்களிலிருந்து எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் கீழ்ப்படியாதீர்!
76:25
76:25 وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِيْلًا ۚ  ۖ‏
وَاذْكُرِ நினைவு கூர்வீராக اسْمَ பெயரை رَبِّكَ உமது இறைவனின் بُكْرَةً காலையிலும் وَّاَصِيْلًا ۚ  ۖ‏ மாலையிலும்
76:25. வத்குரிஸ் ம ரBப்Bபிக Bபுக்ரத(ன்)வ் வ அஸீலா
76:25. காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை நினைவுகூர்வீராக!
76:26
76:26 وَمِنَ الَّيْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيْلًا‏
وَمِنَ الَّيْلِ இரவில் فَاسْجُدْ சிரம் பணிந்து தொழுவீராக! لَهٗ அவனுக்காக وَسَبِّحْهُ இன்னும் அவனை தொழுது வணங்குவீராக! لَيْلًا இரவில் طَوِيْلًا‏ நீண்ட நேரம்
76:26. வ மினல் லய்லி Fபஸ்ஜுத் லஹூ வ ஸBப்Bபிஹ்ஹு லய்லன் தவீலா
76:26. இன்னும், இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக! அன்றியும், இரவில் நெடுநேரம் அவனைத் தஸ்பீஹ் (துதி) செய்வீராக!
76:27
76:27 اِنَّ هٰٓؤُلَاۤءِ يُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَيَذَرُوْنَ وَرَآءَهُمْ يَوْمًا ثَقِيْلًا‏
اِنَّ நிச்சயமாக هٰٓؤُلَاۤءِ இவர்கள் يُحِبُّوْنَ நேசிக்கின்றனர் الْعَاجِلَةَ உலக வாழ்க்கையை وَيَذَرُوْنَ இன்னும் விட்டுவிடுகின்றனர் وَرَآءَهُمْ அவர்களுக்கு முன்னர் يَوْمًا ஒரு நாளை ثَقِيْلًا‏ மிக கனமான
76:27. இன்ன ஹா'உலா'இ யுஹிBப்Bபூன 'ஆஜிலத வ யதரூன வரா'அஹும் யவ்மன் தகீலா
76:27. நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்றுவிடுவர்; (தாம் இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர்; அப்பால், பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.
76:28
76:28 نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَاۤ اَسْرَهُمْ‌ۚ وَاِذَا شِئْنَا بَدَّلْنَاۤ اَمْثَالَهُمْ تَبْدِيْلًا‏
نَحْنُ நாம்தான் خَلَقْنٰهُمْ அவர்களை படைத்தோம் وَشَدَدْنَاۤ இன்னும் உறுதிப்படுத்தினோம் اَسْرَهُمْ‌ۚ அவர்களின் படைப்பை وَاِذَا شِئْنَا நாம் நாடினால் بَدَّلْنَاۤ பதிலாக கொண்டுவருவோம் اَمْثَالَهُمْ அவர்கள் போன்றவர்களை تَبْدِيْلًا‏ பதிலாக
76:28. னஹ்னு கலக்னாஹும் வ ஷதத்னா அஸ்ரஹும் வ இதா ஷி'னா Bபத்தல்னா அம்தால ஹும் தBப்தீலா
76:28. நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய படைப்பின் அமைப்பையும் உறுதிப்படுத்தினோம்; அன்றியும், நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டுவருவோம்.
76:29
76:29 اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ‌ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا‏
اِنَّ நிச்சயமாக هٰذِهٖ இது تَذْكِرَةٌ ۚ ஓர் அறிவுரையாகும் فَمَنْ شَآءَ யார் நாடுகிறாரோ اتَّخَذَ அவன் ஏற்படுத்திக் கொள்ளட்டும் اِلٰى رَبِّهٖ தன் இறைவனின் பக்கம் سَبِيْلًا‏ ஒரு பாதையை
76:29. இன்ன ஹாதிஹீ தத்கிரதுன் Fப மன் ஷா'அத் தகத இலா ரBப்Bபிஹீ ஸBபீலா
76:29. நிச்சயமாக இது ஓர் உபதேசமாகும்; எனவே, யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன்பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக!
76:30
76:30 وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا  ۖ‏
وَمَا تَشَآءُوْنَ நீங்கள் நாடமுடியாது اِلَّاۤ தவிர اَنْ يَّشَآءَ நாடினால் اللّٰهُ ؕ அல்லாஹ் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கின்றான் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا  ۖ‏ மகா ஞானவானாக
76:30. வமா தஷா'ஊன இல்லா அ(ன்)ய்யஷா'அல் லாஹ்; இன்னல் லாஹா கான'அலீமன் ஹகீமா
76:30. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
76:31
76:31 يُّدْخِلُ مَنْ يَّشَآءُ فِىْ رَحْمَتِهٖ‌ؕ وَالظّٰلِمِيْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِيْمًا
يُّدْخِلُ நுழைக்கின்றான் مَنْ يَّشَآءُ அவன் நாடுகின்றவர்களை فِىْ رَحْمَتِهٖ‌ؕ தனது அருளில் وَالظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள் اَعَدَّ தயார்செய்து வைத்துள்ளான் لَهُمْ அவர்களுக்காக عَذَابًا தண்டனையை اَلِيْمًا‏ வலி தரக்கூடிய
76:31. யுத்கிலு மய் யஷா'உ Fபீ ரஹ்மதிஹ்; வள்ளாலிமீன அ'அத்த லஹும் 'அதாBபன் அலீமா
76:31. அவன் தான் விரும்புவோரை தன்னுடைய அருளில் புகுத்துகிறான்; அன்றியும், அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.