டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 19. ஸூரத்து மர்யம்
மக்கீ, வசனங்கள்: 98
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
19:1 كٓهٰيٰـعٓـصٓ ۚ
كٓهٰيٰـعٓـصٓ ۚ காஃப் ஹா யா ஐன் ஸாத்
19:1. காFப்-ஹா-யா-'அய்ய்ய்ன்-ஸாத்
19:1. காஃப், ஹா, யா, ஐன், ஸாத்.
19:2 ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَـبْدَهٗ زَكَرِيَّا ۖ ۚ
ذِكْرُ நினைவு கூர்வது رَحْمَتِ அருள் செய்ததை رَبِّكَ உமது இறைவன் عَـبْدَهٗ தன் அடியார் زَكَرِيَّا ۖ ۚ ஸகரிய்யாவுக்கு
19:2. திக்ரு ரஹ்மதி ரBப்Bபிக 'அBப்தஹூ Zஜகரிய்யா
19:2. (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருளை நினைவு கூர்வதாகும்.
19:3 اِذْ نَادٰى رَبَّهٗ نِدَآءً خَفِيًّا
اِذْ نَادٰى அவர் அழைத்தபோது رَبَّهٗ தன் இறைவனை نِدَآءً அழைத்தல் خَفِيًّا மறைவாக
19:3. இத் னாதா ரBப்Bபஹூ னிதா'அன் கFபிய்யா
19:3. அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்தபோது.
19:4 قَالَ رَبِّ اِنِّىْ وَهَنَ الْعَظْمُ مِنِّىْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْۢ بِدُعَآٮِٕكَ رَبِّ شَقِيًّا
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் وَهَنَ பலவீனமடைந்து விட்டது الْعَظْمُ எலும்பு مِنِّىْ என்னில் وَاشْتَعَلَ வெளுத்து விட்டது الرَّاْسُ தலை شَيْبًا நரையால் وَّلَمْ اَكُنْۢ நான் ஆகமாட்டேன் بِدُعَآٮِٕكَ உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில் رَبِّ என் இறைவா شَقِيًّا துர்பாக்கியவனாக
19:4. கால ரBப்Bபி இன்னீ வஹனல் 'அள்மு மின்னீ வஷ்த 'அலர் ர'ஸு ஷய்Bப(ன்)வ் வ லம் அகுன் Bபிது'ஆ'இக ரBப்Bபி ஷகிய்யா
19:4. (அவர்) கூறினார்: "என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது; என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய் விடவில்லை."
19:5 وَاِنِّىْ خِفْتُ الْمَوَالِىَ مِنْ وَّرَآءِىْ وَكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا فَهَبْ لِىْ مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙ
وَاِنِّىْ நிச்சயமாக நான் خِفْتُ பயப்படுகிறேன் الْمَوَالِىَ உறவினர்களை مِنْ وَّرَآءِىْ எனக்குப் பின்னால் وَكَانَتِ இன்னும் இருக்கிறாள் امْرَاَتِىْ என் மனைவி عَاقِرًا மலடியாக فَهَبْ ஆகவே, தா! لِىْ எனக்கு مِنْ لَّدُنْكَ உன் புறத்திலிருந்து وَلِيًّا ۙ ஒரு வாரிசை
19:5. வ இன்னீ கிFப்துல் மவாலிய மி(ன்)வ் வரா'ஈ வ கானத் இம்ர அதீ 'அகிரன் Fப ஹBப்லீ மில் லதுன்க வலிய்யா
19:5. "இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப் பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு ஒரு வாரிசை அளிப்பாயாக!"
19:6 يَّرِثُنِىْ وَيَرِثُ مِنْ اٰلِ يَعْقُوْبَ ۖ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا
يَّرِثُنِىْ அவர் எனக்கும் வாரிசாக ஆகுவார் وَيَرِثُ இன்னும் வாரிசாக ஆகுவார் مِنْ اٰلِ கிளையினருக்கு يَعْقُوْبَ ۖ யஃகூபுடைய وَاجْعَلْهُ இன்னும் அவரை ஆக்கு رَبِّ என் இறைவா! رَضِيًّا பொருந்திக் கொள்ளப்பட்டவராக
19:6. யரிதுனீ வ யரிது மின் ஆலி யஃகூBப், வஜ்'அல்ஹு ரBப்Bபி ரளிய்யா
19:6. "அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார்; யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் ஆக்கி வைப்பாயாக!"
19:7 يٰزَكَرِيَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ اۨسْمُهٗ يَحْيٰى ۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِيًّا
يٰزَكَرِيَّاۤ ஸகரிய்யாவே! اِنَّا நிச்சயமாக நாம் نُبَشِّرُكَ உமக்கு நற்செய்தி தருகிறோம் بِغُلٰمِ ஒரு ஆண் குழந்தையைக் கொண்டு اۨسْمُهٗ அதன் பெயர் يَحْيٰى ۙ யஹ்யா لَمْ نَجْعَلْ நாம் படைக்கவில்லை لَّهٗ அதற்கு مِنْ قَبْلُ இதற்கு முன் سَمِيًّا ஒப்பானவரை
19:7. யா Zஜகரிய்யா இன்னா னுBபஷ்ஷிருக Bபி குலாமின் இஸ்முஹூ யஹ்யா லம் னஜ்'அல் லஹூ மின் கBப்லு ஸமிய்யா
19:7. "ஜகரிய்யாவே! ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம்; அவருடைய பெயர் 'யஹ்யா' என்பதாகும்; இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).
19:8 قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا وَّقَدْ بَلَـغْتُ مِنَ الْـكِبَرِ عِتِيًّا
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா اَنّٰى எப்படி? يَكُوْنُ கிடைக்கும் لِىْ எனக்கு غُلٰمٌ குழந்தை وَّكَانَتِ இருக்கிறாள் امْرَاَتِىْ என் மனைவி عَاقِرًا மலடியாக وَّقَدْ بَلَـغْتُ நானோ அடைந்து விட்டேன் مِنَ الْـكِبَرِ முதுமையின் عِتِيًّا எல்லையை
19:8. கால ரBப்Bபி அன்னா யகூனு லீ குலாமு(ன்)வ் வகானத் இம்ர அதீ 'ஆகிர(ன்)வ் வ கத் Bபலக்து மினல் கிBபரி 'இதிய்யா
19:8. (அதற்கு அவர்) "என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில், எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாவான்?" என அவர் கூறினார்.
19:9 قَالَ كَذٰلِكَۚ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْـٴًـــا
قَالَ கூறினான் كَذٰلِكَۚ அப்படித்தான் قَالَ கூறினான் رَبُّكَ உம் இறைவன் هُوَ அது عَلَىَّ எனக்கு هَيِّنٌ மிக எளிது وَّقَدْ திட்டமாக خَلَقْتُكَ நான் உன்னைப் படைத்திருக்கிறேன் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் وَلَمْ تَكُ நீர் இருக்காதபோது شَيْـٴًـــا ஒரு பொருளாக
19:9. கால கதாலிக கால ரBப்Bபுக ஹுவ 'அலய்ய ஹய்யினு(ன்)வ் வ கத் கலக்துக மின் கBப்லு வ லம் தகு ஷய்'ஆ
19:9. "(அது) அவ்வாறே (நடைபெறும்)" என்று அவன் கூறினான்; "இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் நானே உம்மைப் படைத்தேன்" என்று உமது இறைவன் கூறினான்.
19:10 قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً ؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَيَالٍ سَوِيًّا
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா اجْعَلْ لِّىْۤ எனக்கு ஏற்படுத்து اٰيَةً ؕ ஓர் அத்தாட்சியை قَالَ அவன் கூறினான் اٰيَتُكَ உமக்கு அத்தாட்சியாகும் اَلَّا تُكَلِّمَ பேசாமல் இருப்பது தான் النَّاسَ மக்களிடம் ثَلٰثَ மூன்று لَيَالٍ இரவுகள் سَوِيًّا நீர் சுகமாக இருக்க
19:10. கால ரBப்Bபிஜ் 'அல் லீ ஆயஹ்; கால ஆயதுக அல்லா துகல்லிமன் னாஸ தலாத லயாலின் ஸவிய்யா
19:10. (அதற்கவர்) "என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!" என்று வேண்டினார். "நீர் சௌக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு (பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்" என்று கூறினான்.
19:11 فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰٓى اِلَيْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِيًّا
فَخَرَجَ அவர் வெளியேறி வந்தார் عَلٰى قَوْمِهٖ தனது மக்களுக்கு முன் مِنَ இருந்து الْمِحْرَابِ தொழுமிடம் فَاَوْحٰٓى ஜாடை காண்பித்தார் اِلَيْهِمْ அவர்களை நோக்கி اَنْ سَبِّحُوْا துதியுங்கள் என்று بُكْرَةً காலையிலும் وَّعَشِيًّا மாலையிலும்
19:11. Fபகரஜ 'அலா கவ்மிஹீ மினல் மிஹ்ராBபி Fப-அவ்ஹா இலய்ஹிம் அன் ஸBப்Bபிஹூ Bபுக்ரத(ன்)வ் வ 'அஷிய்யா
19:11. ஆகவே, அவர் தொழுமிடத்தை விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில்) அவர், "காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத்) 'துதி' செய்யுங்கள்" என்று சைகை செய்தார்.
19:12 يٰيَحْيٰى خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ ؕ وَاٰتَيْنٰهُ الْحُكْمَ صَبِيًّا ۙ
يٰيَحْيٰى யஹ்யாவே خُذِ பற்றிப் பிடிப்பீராக الْكِتٰبَ வேதத்தை بِقُوَّةٍ ؕ பலமாக وَاٰتَيْنٰهُ இன்னும் அவருக்குக் கொடுத்தோம் الْحُكْمَ ஞானத்தை صَبِيًّا ۙ சிறு குழந்தை
19:12. யா யஹ்யா குதில் கிதாBப Bபிகுவ்வதி(ன்)வ் வ ஆதய்னாஹுல் ஹுக்ம ஸBபிய்யா
19:12. (அதன் பின்னர்) "யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் (பற்றிப்) பிடித்துக் கொள்ளும்" (எனக் கூறினோம்); இன்னும், அவர் குழந்தையாக இருக்கும்போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
19:13 وَّحَنَانًا مِّنْ لَّدُنَّا وَزَكٰوةً ؕ وَّكَانَ تَقِيًّا ۙ
وَّحَنَانًا இரக்கத்தையும் مِّنْ لَّدُنَّا நம்மிடமிருந்து وَزَكٰوةً ؕ தூய்மையையும் وَّكَانَ இன்னும் அவர் இருந்தார் تَقِيًّا ۙ இறையச்சமுடையவராக
19:13. வ ஹனானம் மில் லதுன்னா வ Zஜகாத(ன்)வ் வ கான தகிய்யா
19:13. அன்றியும், நாம் நம்மிடமிருந்து இரக்கத் தன்மையையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்); இன்னும், அவர் (நம்மை) அஞ்சுபவராகவும் இருந்தார்.
19:14 وَّبَرًّۢا بِوَالِدَيْهِ وَلَمْ يَكُنْ جَبَّارًا عَصِيًّا
وَّبَرًّۢا இன்னும் நன்மை புரிபவராக بِوَالِدَيْهِ தன் பெற்றோருக்கு وَلَمْ يَكُنْ அவர் இருக்கவில்லை جَبَّارًا முரடராக عَصِيًّا மாறுசெய்பவராக
19:14. வ Bபர்ரம் Bபிவாலிதய்ஹி வ லம் யகும் ஜBப்Bபாரன் 'அஸிய்யா
19:14. மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.
19:15 وَسَلٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوْتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا
وَسَلٰمٌ இன்னும் ஈடேற்றம் عَلَيْهِ அவருக்கு يَوْمَ நாளிலும் وُلِدَ பிறந்த وَيَوْمَ நாளிலும் يَمُوْتُ அவர் மரணிக்கின்ற وَيَوْمَ يُبْعَثُ அவர் எழுப்பப்படுகின்ற நாளிலும் حَيًّا உயிர் பெற்றவராக
19:15. வ ஸலாமுன் 'அலய்ஹி யவ்ம வுலித வ யவ்ம யமூது வ யவ்ம யுBப்'அது ஹய்ய்யா
19:15. ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது சாந்தி உண்டாவதாக!
19:16 وَاذْكُرْ فِى الْـكِتٰبِ مَرْيَمَۘ اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا ۙ
وَاذْكُرْ இன்னும் நினைவு கூறுவீராக فِى الْـكِتٰبِ இவ்வேதத்தில் مَرْيَمَۘ மர்யமை اِذِ انْتَبَذَتْ ஒதுங்கியபோது مِنْ اَهْلِهَا தன் குடும்பத்தினரை விட்டு مَكَانًا இடத்திற்கு شَرْقِيًّا ۙ கிழக்கில்
19:16. வத்குர் Fபில் கிதாBபி மர்யம; இதின் தBபதத் மின் அஹ்லிஹா மகானன் ஷர்கிய்யா
19:16. (நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக! அவர் தம் குடும்பத்தினரை விட்டு(ம் நீங்கி) கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் தனித்தபோது,
19:17 فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا فَاَرْسَلْنَاۤ اِلَيْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا
فَاتَّخَذَتْ அவர் ஏற்படுத்திக் கொண்டார் مِنْ دُوْنِهِمْ அவர்களுக்கு முன்னாலிருந்து حِجَابًا ஒரு திரையை فَاَرْسَلْنَاۤ நாம் அனுப்பினோம் اِلَيْهَا அவரிடம் رُوْحَنَا நமது தூதரை فَتَمَثَّلَ அவர் தோன்றினார் لَهَا அவளுக்கு بَشَرًا ஒரு மனிதராக سَوِيًّا முழுமையான
19:17. Fபத்தகதத் மின் தூனிஹிம் ஹிஜாBபன் Fப அர்ஸல்னா இலய்ஹா ரூஹனா Fபதமத்தல லஹா Bபஷரன் ஸவிய்யா
19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் 'ரூஹை' (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; அவருக்கு நிறைவான ஒரு மனிதராக அவர் தோற்றமளித்தார்.
19:18 قَالَتْ اِنِّىْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِيًّا
قَالَتْ கூறினார் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَعُوْذُ பாதுகாவல் தேடுகிறேன் بِالرَّحْمٰنِ ரஹ்மானிடம் مِنْكَ உம்மிடமிருந்து اِنْ كُنْتَ நீர் இருந்தால் تَقِيًّا இறையச்சமுடையவராக
19:18. காலத் இன்னீ அ'ஊது Bபிர் ரஹ்மானி மின்க இன் குன்த தகிய்யா
19:18. (அப்படி அவரைக் கண்டதும்,) "நிச்சயமாக நான் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் காவல் தேடுகிறேன்; நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (நெருங்காதீர்!)" என்று அவர் கூறினார்.
19:19 قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ ۖ لِاَهَبَ لَـكِ غُلٰمًا زَكِيًّا
قَالَ அவர் கூறினார் اِنَّمَاۤ اَنَا நானெல்லாம் رَسُوْلُ தூதர்தான் رَبِّكِ ۖ உமது இறைவனின் لِاَهَبَ நான்வழங்குவதற்காக لَـكِ உமக்கு غُلٰمًا ஒரு குழந்தையை زَكِيًّا பரிசுத்தமான
19:19. கால இன்னமா அன ரஸூலு ரBப்Bபிகி லி அஹBப லகி குலாமன் Zஜகிய்யா
19:19. "நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்)" என்று கூறினார்.
19:20 قَالَتْ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِيًّا
قَالَتْ அவர் கூறினார் اَنّٰى எப்படி? يَكُوْنُ لِىْ எனக்கு ஏற்படும் غُلٰمٌ குழந்தை وَّلَمْ يَمْسَسْنِىْ இன்னும் என்னை தொடவில்லை بَشَرٌ ஓர் ஆடவர் وَّلَمْ اَكُ இன்னும் நான் இல்லையே بَغِيًّا விபச்சாரியாக
19:20. காலத் அன்ன யகூனு லீ குலாமு(ன்)வ் வ லம் யம்ஸஸ்னீ Bபஷ்ரு(ன்)வ் வ லம் அகு Bபகிய்யா
19:20. அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார்.
19:21 قَالَ كَذٰلِكِ ۚ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌ ۚ وَلِنَجْعَلَهٗۤ اٰيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا ۚ وَكَانَ اَمْرًا مَّقْضِيًّا
قَالَ அவர் கூறினார் كَذٰلِكِ ۚ அப்படித்தான் நடக்கும் قَالَ கூறுகிறான் رَبُّكِ உமது இறைவன் هُوَ அது عَلَىَّ தனக்கு هَيِّنٌ ۚ எளிதாகும் وَلِنَجْعَلَهٗۤ அவரை நாம் ஆக்குவதற்காகவும் اٰيَةً ஓர் அத்தாட்சியாக لِّلنَّاسِ மனிதர்களுக்கு وَرَحْمَةً ஓர் அருளாக مِّنَّا ۚ நம்புறத்திலிருந்து وَكَانَ இது இருக்கிறது اَمْرًا ஒரு காரியமாக مَّقْضِيًّا முடிவுசெய்யப்பட்ட
19:21. கால கதாலிகி கால ரBப்Bபுகி ஹுவ 'அலய்ய ஹய்யிமு(ன்)வ் வ லினஜ் 'அலஹூ ஆயதல் லின்னாஸி வ ரஹ்மதம் மின்னா; வ கான அம்ரம் மக்ளிய்யா
19:21. அவ்வாறேயாகும்; "இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஓர் அருளாகவும் நாம் அவரை ஆக்குவதற்காகவுமே (இவ்வாறு செய்தோம்) என்றும், இது விதிக்கப்பட்ட விஷயமாகும்" என்றும் உம் இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார்.
19:22 فَحَمَلَـتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا
فَحَمَلَـتْهُ பின்னர், அவர் அவரை கர்ப்பத்தில் சுமந்தாள் فَانْتَبَذَتْ بِهٖ அதனுடன் விலகிச் சென்றார் مَكَانًا இடத்திற்கு قَصِيًّا தூரமான
19:22. Fபஹமலத் ஹு Fபன்தBபதத் Bபிஹீ மகானன் கஸிய்யா
19:22. அப்பால், அவர் அவரைக் கருக்கொண்டார்; பின்னர், அ(க்கர்ப்ப)த்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தைச் சென்றடைந்தார்.
19:23 فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِۚ قَالَتْ يٰلَيْتَنِىْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْيًا مَّنْسِيًّا
فَاَجَآءَ கொண்டு சென்றது هَا அவரை الْمَخَاضُ பிரசவ வேதனை اِلٰى جِذْعِ மரத்தடிக்கு النَّخْلَةِۚ பேரிச்சமரம் قَالَتْ அவர் கூறினார் يٰلَيْتَنِىْ مِتُّ நான் மரணிக்க வேண்டுமே قَبْلَ முன்னரே هٰذَا இதற்கு وَكُنْتُ இன்னும் நான் இருக்க வேண்டுமே نَسْيًا مَّنْسِيًّا முற்றிலும் மறக்கப்பட்டவளாக
19:23. Fப அஜா 'அஹல் மகாளு இலா ஜித்'இன் னக்லதி காலத் யா லய்தனீ மித்து கBப்ல ஹாதா வ குன்து னஸ்யம் மன்ஸிய்யா
19:23. பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரைப் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தின்பால் கொண்டு வந்தது: "இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப்பட்டவளாகி இருக்கக் கூடாதா?" என்று அவர் கூறி(அரற்றி)னார்.
19:24 فَنَادٰٮهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِىْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا
فَنَادٰٮهَا அவரை அவர் கூவி அழைத்தார் مِنْ تَحْتِهَاۤ அதனுடைய அடிப்புறத்திலிருந்து اَلَّا تَحْزَنِىْ கவலைப்படாதீர் قَدْ جَعَلَ ஏற்படுத்தி இருக்கின்றான் رَبُّكِ உமது இறைவன் تَحْتَكِ உமக்குக் கீழ் سَرِيًّا ஓர் ஊற்றை
19:24. Fபனாதாஹா மின் தஹ்திஹா அல்லா தஹ்Zஜனீ கத் ஜ'அல ரBப்Bபுகி தஹ்தகி ஸரிய்யா
19:24. (அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: "(மர்யமே!) கவலைப்படாதீர்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்குக் கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கிறான்" என்று அழைத்துக் கூறினார்.
19:25 وَهُزِّىْۤ اِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا
وَهُزِّىْۤ இன்னும் அசைப்பீராக اِلَيْكِ உம் பக்கம் بِجِذْعِ நடுத்தண்டை النَّخْلَةِ பேரிச்ச மரத்தின் تُسٰقِطْ கொட்டும் عَلَيْكِ உம்மீது رُطَبًا பழங்களை جَنِيًّا பழுத்த
19:25. வ ஹுZஜ்Zஜீ இலய்கி Bபிஜித் 'இன் னக்லதி துஸாகித் 'அலய்கி ருதBபன் ஜனிய்யா
19:25. "இன்னும், இந்தப் பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்து உம் அருகில் (இழுத்துக்) குலுக்கும்; பழுத்தப் பழங்களை உம்மீது அது உதிர்க்கும் (என்றும்)."
19:26 فَكُلِىْ وَاشْرَبِىْ وَقَرِّىْ عَيْنًا ۚ فَاِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ فَقُوْلِىْۤ اِنِّىْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْيَوْمَ اِنْسِيًّا ۚ
فَكُلِىْ இன்னும் நீர் புசிப்பீராக وَاشْرَبِىْ பருகுவீராக وَقَرِّىْ குளிர்வீராக عَيْنًا ۚ கண் فَاِمَّا تَرَيِنَّ ஆகவே நீர் பார்த்தால் مِنَ الْبَشَرِ மனிதரில் اَحَدًا ۙ யாரையும் فَقُوْلِىْۤ கூறுவீராக اِنِّىْ நிச்சயமாக நான் نَذَرْتُ நேர்ச்சை செய்துள்ளேன் لِلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு صَوْمًا நோன்பை فَلَنْ اُكَلِّمَ ஆகவே நான் அறவே பேசமாட்டேன் الْيَوْمَ இன்று اِنْسِيًّا ۚ எந்த மனிதனிடமும்
19:26. Fபகுலீ வஷ்ரBபீ வ கர்ரீ 'அய்னா; Fப இம்மா தரயின்ன்ன மினல் Bபஷரி அஹதன் Fபகூலீ இன்னீ னதர்து லிர் ரஹ்மானி ஸவ்மன் Fபலன் உகல்லிமல் யவ்ம இன்ஸிய்யா
19:26. "ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்றுநீரைப்) பருகி, கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர், மனிதர்களில் எவரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாக அளவற்ற அருளாளனுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின், இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேசவே மாட்டேன்' என்று கூறும்" (என்றும் கூறினார்).
19:27 فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗؕ قَالُوْا يٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـٴًـــا فَرِيًّا
فَاَتَتْ அவர் வந்தார் بِهٖ அதைக் கொண்டு قَوْمَهَا தனது மக்களிடம் تَحْمِلُهٗؕ அதைச் சுமந்தவராக قَالُوْا அவர்கள் கூறினார்கள் يٰمَرْيَمُ மர்யமே! لَقَدْ جِئْتِ நீ செய்து விட்டாய் شَيْـٴًـــا ஒரு காரியத்தை فَرِيًّا பெரிய
19:27. Fப அதத் Bபிஹீ கவ்மஹா தஹ்மிலுஹூ காலூ யா மர்யமூ லகத் ஜி'தி ஷய்'அன் Fபரிய்யா
19:27. (அக்குழந்தையைப் பிரசவித்த) பின்னர், அவர் அதைச் சுமந்து தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்: "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!"
19:28 يٰۤـاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَ بُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِيًّا ۖ ۚ
يٰۤـاُخْتَ சகோதரியே هٰرُوْنَ ஹாரூனுடைய مَا كَانَ இருக்கவில்லை اَ بُوْكِ உமது தந்தை امْرَاَ سَوْءٍ கெட்டவராக وَّمَا كَانَتْ இருக்கவில்லை اُمُّكِ உமது தாயும் بَغِيًّا ۖ ۚ நடத்தைகெட்டவளாக
19:28. யா உக்த ஹாரூன மா கான அBபூகிம்ர'அ ஸவ்'இ(ன்)வ் வமா கானத் உம்முகி Bபகிய்யா
19:28. "ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்).
19:29 فَاَشَارَتْ اِلَيْهِ ؕ قَالُوْا كَيْفَ نُـكَلِّمُ مَنْ كَانَ فِى الْمَهْدِ صَبِيًّا
فَاَشَارَتْ ஜாடை காண்பித்தார் اِلَيْهِ ؕ அதன் பக்கம் قَالُوْا அவர்கள் கூறினார்கள் كَيْفَ எப்படி نُـكَلِّمُ நாங்கள் பேசுவோம் مَنْ كَانَ இருக்கின்றவரிடம் فِى الْمَهْدِ மடியில் صَبِيًّا குழந்தையாக
19:29. Fப அஷாரத் இலய்ஹ்; காலூ கய்Fப னுகல்லிமு மன் கான Fபில் மஹ்தி ஸBபிய்யா
19:29. (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும்படி) அதன்பால் அவர் சுட்டிக் காட்டினார்; "நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கூறினார்கள்.
19:30 قَالَ اِنِّىْ عَبْدُ اللّٰهِ ؕ اٰتٰٮنِىَ الْكِتٰبَ وَجَعَلَنِىْ نَبِيًّا ۙ
قَالَ அவர் கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் عَبْدُ அடிமை اللّٰهِ ؕ அல்லாஹ்வின் اٰتٰٮنِىَ எனக்குக்கொடுப்பான் الْكِتٰبَ வேதத்தை وَجَعَلَنِىْ என்னை ஆக்குவான் نَبِيًّا ۙ நபியாக
19:30. கால இன்னீ 'அBப்துல்லாஹி ஆதானியல் கிதாBப வ ஜ'அலனீ னBபிய்யா
19:30. "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கிறேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாகவும் ஆக்கியிருக்கிறான்."
19:31 وَّجَعَلَنِىْ مُبٰـرَكًا اَيْنَ مَا كُنْتُ وَاَوْصٰنِىْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا ۖ
وَّجَعَلَنِىْ இன்னும் அவன் என்னை ஆக்குவான் مُبٰـرَكًا அருள்மிக்கவனாக اَيْنَ مَا كُنْتُ நான் எங்கிருந்தாலும் وَاَوْصٰنِىْ எனக்கு கட்டளையிட்டுள்ளான் بِالصَّلٰوةِ தொழுகையைக் கொண்டும் وَالزَّكٰوةِ ஸகாத்தைக் கொண்டும் مَا دُمْتُ நான்இருக்கின்றவரை حَيًّا ۖ உயிருள்ளவனாக
19:31. வ ஜ'அலனீ முBபாரகன் அய்ன மா குன்து வ அவ்ஸானீ Bபிஸ் ஸலாதி வZஜ் Zஜகாதி மா தும்து ஹய்யா
19:31. "இன்னும், நான் எங்கிருந்தாலும் அவன் என்னை (நற்)பாக்கியமுடையவனாக ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான்."
19:32 وَّبَرًّۢابِوَالِدَتِىْ وَلَمْ يَجْعَلْنِىْ جَبَّارًا شَقِيًّا
وَّبَرًّۢا நன்மைசெய்பவனாக بِوَالِدَتِىْ என் தாய்க்கு وَلَمْ يَجْعَلْنِىْ இன்னும் அவன் என்னை ஆக்கவில்லை جَبَّارًا பெருமையுடையவனாக شَقِيًّا தீயவனாக
19:32. வ Bபர்ரம் Bபிவாலிததீ வ லம் யஜ்'அல்னீ ஜBப்Bபாரன் ஷகிய்யா
19:32. "என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் (என்னை ஏவியிருக்கிறான்); நற்பேறு அற்றவனாகவும், பெருமைக்காரனாகவும் என்னை அவன் ஆக்கவில்லை."
19:33 وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا
وَالسَّلٰمُ ஈடேற்றம் உண்டாகுக عَلَىَّ எனக்கு يَوْمَ நாளிலும் وُلِدْتُّ நான் பிறந்த وَيَوْمَ اَمُوْتُ நான் மரணிக்கின்றநாளிலும் وَيَوْمَ اُبْعَثُ நான் எழுப்பப்படுகின்ற நாளிலும் حَيًّا உயிருள்ளவனாக
19:33. வஸ்ஸலாமு 'அலய்ய யவ்ம வுலித்து வ யவ்ம அமூது வ யவ்ம உBப்'அது ஹய்யா
19:33. "இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், (மறுமையில்) நான் உயிர் பெற்று எழுப்பப்படும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்றும் (அக் குழந்தை) கூறியது.
19:34 ذٰ لِكَ عِيْسَى ابْنُ مَرْيَمَ ۚ قَوْلَ الْحَـقِّ الَّذِىْ فِيْهِ يَمْتَرُوْنَ
ذٰ لِكَ இவர்தான் عِيْسَى ஈஸா ابْنُ மகன் مَرْيَمَ ۚ மர்யமுடைய قَوْلَ கூறுங்கள் الْحَـقِّ உண்மையானகூற்றை الَّذِىْ எது فِيْهِ இதில்தான் يَمْتَرُوْنَ அவர்கள் தர்க்கிக்கின்றனர்
19:34. தாலிக 'ஈஸBப்-னு மர்யம; கவ்லல் ஹக்கில் லதீ Fபீஹி யம்தரூன்
19:34. இவர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்): எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அது பற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
19:35 مَا كَانَ لِلّٰهِ اَنْ يَّتَّخِذَ مِنْ وَّلَدٍۙ سُبْحٰنَهٗؕ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُؕ
مَا كَانَ தகுந்ததல்ல لِلّٰهِ அல்லாஹ்விற்கு اَنْ يَّتَّخِذَ அவன் எடுத்துக் கொள்வது مِنْ وَّلَدٍۙ குழந்தையை سُبْحٰنَهٗؕ அவன் மகா பரிசுத்தமானவன் اِذَا قَضٰٓى அவன் முடிவு செய்தால் اَمْرًا ஒரு காரியத்தை فَاِنَّمَا يَقُوْلُ அவன் கூறுவதெல்லாம் لَهٗ அதற்கு كُنْ ஆகு فَيَكُوْنُؕ அது ஆகிவிடும்
19:35. மா கான லில்லாஹி அய் யத்தகித மி(ன்)வ் வலதின் ஸுBப்ஹானஹ்; இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fப யகூன்
19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்: அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், 'ஆகுக!' என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
19:36 وَاِنَّ اللّٰهَ رَبِّىْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ
وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ்தான் رَبِّىْ என் இறைவனும் وَرَبُّكُمْ உங்கள் இறைவனும் فَاعْبُدُوْهُ ؕ ஆகவே, அவனையே வணங்குங்கள்! هٰذَا இதுதான் صِرَاطٌ مُّسْتَقِيْمٌ நேரான பாதை
19:36. வ இன்னல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; ஹாதா ஸிராதும் முஸ்தகீம்
19:36. "நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும்" (என்று நபியே! நீர் கூறும்).
19:37 فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْۢ بَيْنِهِمْۚ فَوَيْلٌ لِّـلَّذِيْنَ كَفَرُوْا مِنْ مَّشْهَدِ يَوْمٍ عَظِيْمٍ
فَاخْتَلَفَ ஆனால் தர்க்கித்தனர் الْاَحْزَابُ பல பிரிவினர் مِنْۢ بَيْنِهِمْۚ தங்களுக்கு மத்தியில் فَوَيْلٌ ஆகவே கேடுதான் لِّـلَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்களுக்கு مِنْ مَّشْهَدِ அவர் காணும்போது يَوْمٍ நாளை عَظِيْمٍ மகத்தான
19:37. Fபக்தலFபல் அஹ்ZஜாBபு மின் Bபய்னிஹிம் Fபவய்லுல் லில்லதீன கFபரூ மின் மஷ்ஹதி யவ்மின் 'அளீம்
19:37. ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார் இது பற்றி (தங்களுக்குள்ளே) அபிப்பிராயபேதம் கொண்டனர்; (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் ஒன்று சேர்க்கப்படும் மகத்தான நாளில் கேடுதான்!
19:38 اَسْمِعْ بِهِمْ وَاَبْصِرْۙ يَوْمَ يَاْتُوْنَنَا لٰـكِنِ الظّٰلِمُوْنَ الْيَوْمَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
اَسْمِعْ நன்றாக செவிசாய்ப்பார்கள் بِهِمْ அவர்கள் وَاَبْصِرْۙ நன்றாக பார்ப்பார்கள் يَوْمَ நாளில் يَاْتُوْنَنَا நம்மிடம் அவர்கள் வருகின்ற لٰـكِنِ எனினும் الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள் الْيَوْمَ இன்றைய தினம் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில்தான் مُّبِيْنٍ தெளிவான
19:38. அஸ்மிஃ Bபிஹிம் வ அBப்ஸிர் யவ்ம ய'தூனனா லாகினிள் ளாலிமூனல் யவ்ம Fபீ ளலாலின் முBபீன்
19:38. அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும், அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள்.
19:39 وَاَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِىَ الْاَمْرُۘ وَهُمْ فِىْ غَفْلَةٍ وَّهُمْ لَا يُؤْمِنُوْنَ
وَاَنْذِرْهُمْ அவர்களை எச்சரிப்பீராக يَوْمَ நாளை(ப் பற்றி) الْحَسْرَةِ துயரமான اِذْ قُضِىَ الْاَمْرُۘ தீர்ப்பு முடிவு செய்யப்படும்போது وَهُمْ அவர்கள் இருக்கின்றனர் فِىْ غَفْلَةٍ அறியாமையில் وَّهُمْ அவர்கள் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
19:39. வ அன்திர்ஹும் யவ்மல் ஹஸ்ரதி இத் குளியல் அம்ர்; வ ஹும் Fபீ கFப்லதி(ன்)வ் வ ஹும் லா யு'மினூன்
19:39. மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும், அவர்கள் (அது பற்றி) மறதியிலுள்ளவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
19:40 اِنَّا نَحْنُ نَرِثُ الْاَرْضَ وَمَنْ عَلَيْهَا وَاِلَـيْنَا يُرْجَعُوْنَ
اِنَّا نَحْنُ நிச்சயமாக நாம்தான் نَرِثُ வாரிசாகுவோம் الْاَرْضَ وَمَنْ عَلَيْهَا பூமி/இன்னும் அதில் இருப்பவர்களுக்கு وَاِلَـيْنَا இன்னும் நம்மிடமே يُرْجَعُوْنَ அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்
19:40. இன்னா னஹ்னு னரிதுல் அர்ள வ மன் 'அலய்ஹா வ இலய்னா யுர்ஜ'ஊன்
19:40. நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும், நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள்.
19:41 وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِبْرٰهِيْمَ ۙ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا
وَاذْكُرْ நினைவு கூர்வீராக فِى الْكِتٰبِ இவ்வேதத்தில் اِبْرٰهِيْمَ ۙ இப்றாஹீமை اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் صِدِّيْقًا உண்மையாளராக نَّبِيًّا நபியாக
19:41. வத்குர் Fபில் கிதாBபி இBப்ராஹீம்; இன்னஹூ கான ஸித்தீகன் னBபிய்யா
19:41. (நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
19:42 اِذْ قَالَ لِاَبِيْهِ يٰۤـاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَ لَا يُغْنِىْ عَنْكَ شَيْــٴًـــا
اِذْ قَالَ (அந்த) சமயத்தை கூறினார் لِاَبِيْهِ தனது தந்தைக்கு يٰۤـاَبَتِ என் தந்தையே لِمَ تَعْبُدُ ஏன் வணங்குகிறீர்? مَا لَا يَسْمَعُ கேட்காதவற்றை وَلَا يُبْصِرُ இன்னும் பார்க்காதவற்றை وَ لَا يُغْنِىْ இன்னும் தடுக்காதவற்றை عَنْكَ உம்மை விட்டு شَيْــٴًـــا எதையும்
19:42. இத் கால லி அBபீஹி யா அBபதி லிம தஃBபுது மா லா யஸ்ம'உ வலா யுBப்ஸிரு வலா யுக்னீ 'அன்க ஷய்'ஆ
19:42. "என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத, உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்யாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?" என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்.
19:43 يٰۤـاَبَتِ اِنِّىْ قَدْ جَآءَنِىْ مِنَ الْعِلْمِ مَا لَمْ يَاْتِكَ فَاتَّبِعْنِىْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِيًّا
يٰۤـاَبَتِ என் தந்தையே اِنِّىْ நிச்சயமாக நான் قَدْ جَآءَنِىْ எனக்கு வந்திருக்கிறது مِنَ الْعِلْمِ கல்வியில் مَا لَمْ يَاْتِكَ உமக்கு வரவில்லை فَاتَّبِعْنِىْۤ ஆகவே, என்னைப் பின்பற்றுவீராக اَهْدِكَ நான் உமக்கு வழிகாட்டுவேன் صِرَاطًا பாதையை سَوِيًّا நேரான
19:43. யா அBபதி இன்னீ கத் ஜா'அனீ மினல் 'இல்மி மா லம் ய'திக Fபத்தBபி'னீ அஹ்திக ஸிராதன் ஸவிய்யா
19:43. "என் அருமைத் தந்தையே! மெய்யாக உங்களிடம் வந்திராத ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்."
19:44 يٰۤـاَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطٰنَ ؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِيًّا
يٰۤـاَبَتِ என் தந்தையே لَا تَعْبُدِ வணங்காதீர் الشَّيْطٰنَ ؕ ஷைத்தானை اِنَّ நிச்சயமாக الشَّيْطٰنَ ஷைத்தான் كَانَ இருக்கிறான் لِلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு عَصِيًّا மாறுசெய்பவனாக
19:44. யா அBபதி லா தஃBபுதிஷ் ஷய்தான்; இன்னஷ் ஷய்தான கான லிர் ரஹ்மானி 'அஸிய்யா
19:44. என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவன்.
19:45 يٰۤاَبَتِ اِنِّىْۤ اَخَافُ اَنْ يَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّيْطٰنِ وَلِيًّا
يٰۤاَبَتِ என் தந்தையே اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ நான் பயப்படுகிறேன் اَنْ يَّمَسَّكَ உம்மைவந்தடைந்தால் عَذَابٌ ஒரு வேதனை مِّنَ இருந்து الرَّحْمٰنِ பேரருளாளன் فَتَكُوْنَ நீர் ஆகிவிடுவீர் لِلشَّيْطٰنِ ஷைத்தானுக்கு وَلِيًّا நண்பராக
19:45. யா அBபதி இன்னீ அகாFபு அய் யமஸ்ஸக 'அதாBபும் மினர் ரஹ்மானி Fபதகூன லிஷ் ஷய்தானி வலிய்யா
19:45. "என் அருமைத் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்துள்ள வேதனை உங்களைத் தொட்டுவிடுமென்றும், அப்போது நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகிவிடுவீர் என்றும், நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்" (என்றார்).
19:46 قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِىْ يٰۤاِبْرٰهِيْمُۚ لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِىْ مَلِيًّا
قَالَ கூறினார் اَرَاغِبٌ நீ வெறுக்கிறாயா? اَنْتَ நீ عَنْ اٰلِهَتِىْ என் தெய்வங்களை يٰۤاِبْرٰهِيْمُۚ இப்றாஹீமே لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ நீர் விலகவில்லை என்றால் لَاَرْجُمَنَّكَ நிச்சயமாக நான் உன்னை கடுமையாக ஏசுவேன் وَاهْجُرْنِىْ இன்னும் என்னை விட்டு விலகிவிடு مَلِيًّا பாதுகாப்புப் பெற்றவராக
19:46. கால அராகிBபுன் அன்த 'அன் ஆலிஹதீ யா இBப்ராஹீமு ல 'இல் லம் தன்தஹி ல அர்ஜுமன்னக வஹ்ஜுர்னீ மலிய்யா
19:46. (அதற்கு அவர்) "இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களைப் புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லால் எறிந்து கொல்வேன்; இனி, நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்" என்றார்.
19:47 قَالَ سَلٰمٌ عَلَيْكَۚ سَاَسْتَغْفِرُ لَـكَ رَبِّىْؕ اِنَّهٗ كَانَ بِىْ حَفِيًّا
قَالَ கூறினார் سَلٰمٌ பாதுகாப்பு உண்டாகுக عَلَيْكَۚ உமக்கு سَاَسْتَغْفِرُ பாவமன்னிப்புக் கோருவேன் لَـكَ உமக்காக رَبِّىْؕ என் இறைவனிடம் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் بِىْ என் மீது حَفِيًّا அருளுடையவனாக
19:47. கால ஸலாமுன் 'அலய்க ஸ அஸ்தக்Fபிரு லக ரBப்Bபீ இன்னஹூ கான Bபீ ஹFபிய்யா
19:47. (அதற்கு இப்ராஹீம்) "உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும், விரைவில் நான் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கிறான்" என்று கூறினார்.
19:48 وَ اَعْتَزِلُـكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّىْ ۖ عَسٰٓى اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّىْ شَقِيًّا
وَ اَعْتَزِلُـكُمْ இன்னும் உங்களை விட்டு விலகி விடுகின்றேன் وَمَا تَدْعُوْنَ இன்னும் நீங்கள் வணங்குகின்றவற்றை مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَاَدْعُوْا நான் பிரார்த்திப்பேன் رَبِّىْ ۖ என் இறைவனிடம் عَسٰٓى اَلَّاۤ اَكُوْنَ ஆகாமல் இருப்பேன் بِدُعَآءِ பிரார்த்திப்பதில் رَبِّىْ என் இறைவனிடம் شَقِيًّا நம்பிக்கை அற்றவனாக
19:48. வ அஃதZஜிலுகும் வமா தத்'ஊன மின் தூனில் லாஹி வ அத்'ஊ ரBப்Bபீ 'அஸா அல்லா அகூன Bபிது'ஆ'இ ரBப்Bபீ ஷகிய்யா
19:48. "நான் உங்களை விட்டும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்; மேலும், நான் என் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் துர்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும்" (என்றார்).
19:49 فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ ؕ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا
فَلَمَّا اعْتَزَلَهُمْ அவர் அவர்களை விட்டு விலகியபோது وَمَا يَعْبُدُوْنَ இன்னும் அவர்கள் வணங்கியதை مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ ۙ அல்லாஹ்வை وَهَبْنَا வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَ ؕ இன்னும் யஃகூபை وَكُلًّا இன்னும் ஒவ்வொருவரையும் جَعَلْنَا ஆக்கினோம் نَبِيًّا நபியாக
19:49. Fப லம் மஃதZஜலஹும் வமா யஃBபுதூன மின் தூனில் லாஹி வஹBப்னா லஹூ இஸ்-ஹாக வ யஃகூBப்; வ குல்லன் ஜ'அல்னா னBபிய்யா
19:49. (இவ்வாறு) அவர் அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலக்கிக் கொண்ட போது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும், (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
19:50 وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا
وَوَهَبْنَا வழங்கினோம் لَهُمْ அவர்களுக்கு مِّنْ رَّحْمَتِنَا நமது அருளிலிருந்து وَجَعَلْنَا இன்னும் ஏற்படுத்தினோம் لَهُمْ அவர்களுக்கு لِسَانَ புகழை صِدْقٍ உண்மையான عَلِيًّا உயர்வான
19:50. வ வஹBப்னா லஹும் மிர்ரஹ்மதினா வ ஜ'அல்னா லஹும் லிஸான ஸித்கின் 'அலிய்யா
19:50. மேலும், நாம் அவர்களுக்கு நம் அருளிலிருந்தும் நன்கொடைகளை அளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.
19:51 وَاذْكُرْ فِى الْكِتٰبِ مُوْسٰٓى اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِيًّا
وَاذْكُرْ நினைவு கூர்வீராக فِى الْكِتٰبِ இவ்வேதத்தில் مُوْسٰٓى மூஸாவை اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் مُخْلَصًا தேர்ந்தெடுக்கப்பட்டவராக وَّكَانَ இன்னும் இருக்கிறார் رَسُوْلًا தூதராக نَّبِيًّا நபியாக
19:51. வத்குர் Fபில் கிதாBபி மூஸா; இன்னஹூ கான முக்லஸ(ன்)வ் வ கான ரஸூலன் னBபிய்யா
19:51. (நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக (தூயவராக) இருந்தார்; இன்னும், நம்முடைய தூதராகவும் அவர் நபியாகவும் இருந்தார்.
19:52 وَنَادَيْنٰهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَيْمَنِ وَقَرَّبْنٰهُ نَجِيًّا
وَنَادَيْنٰهُ இன்னும் அவரை அழைத்தோம் مِنْ جَانِبِ பக்கத்தில் الطُّوْرِ மலை الْاَيْمَنِ வலது وَقَرَّبْنٰهُ அவரை நாம் நெருக்கமாக்கினோம் نَجِيًّا அவரை இரகசியம் பேசுகிறவராக
19:52. வ னாதய்னாஹு மின் ஜானிBபித் தூரில் அய்மனி வ கர்ரBப்னாஹு னஜிய்யா
19:52. இன்னும், நாம் அவரை 'தூர்' (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும், இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம்.
19:53 وَ وَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِيًّا
وَ وَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗ அவருக்கு مِنْ رَّحْمَتِنَاۤ நமது அருளால் اَخَاهُ அவருடைய சகோதரர் هٰرُوْنَ ஹாரூனை نَبِيًّا நபியாக
19:53. வ வஹBப்னா லஹூ மிர் ரஹ்மதினா அகாஹு ஹாரூன னBபிய்யா
19:53. மேலும், நம்முடைய அருளிலிருந்து அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம்.
19:54 وَاذْكُرْ فِى الْـكِتٰبِ اِسْمٰعِيْلَ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا ۚ
وَاذْكُرْ நினைவு கூர்வீராக فِى الْـكِتٰبِ இவ்வேதத்தில் اِسْمٰعِيْلَ இஸ்மாயீலை اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் صَادِقَ உண்மையாளராக الْوَعْدِ வாக்கில் وَكَانَ இன்னும் இருக்கிறார் رَسُوْلًا தூதராக نَّبِيًّا ۚ நபியாக
19:54. வத்குர் Fபில் கிதாBபி இஸ்மா'ஈல்; இன்னஹூ கான ஸாதிகல் வஃதி வ கான ரஸூலன் னBபிய்யா
19:54. (நபியே) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும், அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
19:55 وَ كَانَ يَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِيًّا
وَ كَانَ இருந்தார் يَاْمُرُ ஏவுகின்றவராக اَهْلَهٗ தனது குடும்பத்தினரை بِالصَّلٰوةِ தொழுகையைக் கொண்டு وَالزَّكٰوةِ ஸகாத்தைக் கொண்டு وَكَانَ இருந்தார் عِنْدَ رَبِّهٖ தன் இறைவனிடம் مَرْضِيًّا திருப்திக்குரியவராக
19:55. வ கான ய'முரு அஹ்லஹூ Bபிஸ் ஸலாதி வZஜ் Zஜகாதி வ கான 'இன்த ரBப்Bபிஹீ மர்ளிய்யா
19:55. அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கொண்டும், ஜகாத்தைக் கொண்டும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
19:56 وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِدْرِيْسَ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا ۙ
وَاذْكُرْ நினைவு கூர்வீராக فِى الْكِتٰبِ இவ்வேதத்தில் اِدْرِيْسَ இத்ரீஸை اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் صِدِّيْقًا உண்மையாளராக نَّبِيًّا ۙ நபியாக
19:56. வத்குர் Fபில் கிதாBபி இத்ரீஸ்; இன்னஹூ கான ஸித்தீகன் னBபிய்யா
19:56. (நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராக, நபியாக இருந்தார்.
19:57 وَّرَفَعْنٰهُ مَكَانًا عَلِيًّا
وَّرَفَعْنٰهُ இன்னும் அவரை உயர்த்தினோம் مَكَانًا இடத்திற்கு عَلِيًّا உயர்ந்த
19:57. வ ரFபஃனாஹு மகானன் 'அலிய்யா
19:57. மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்.
19:58 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ مِنْ ذُرِّيَّةِ اٰدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ وَّمِنْ ذُرِّيَّةِ اِبْرٰهِيْمَ وَاِسْرَآءِيْلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا ؕ اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا ۩
اُولٰٓٮِٕكَ இவர்கள்தான் الَّذِيْنَ எவர்கள் اَنْعَمَ அருள் புரிந்திருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ இவர்கள் மீது مِّنَ النَّبِيّٖنَ நபிமார்களில் مِنْ ذُرِّيَّةِ சந்ததிகளில் اٰدَمَ ஆதமுடைய وَمِمَّنْ حَمَلْنَا இன்னும் நாம் ஏற்றியவர்களிலும் مَعَ نُوْحٍ நூஹூடன் وَّمِنْ ذُرِّيَّةِ சந்ததிகளிலும் اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاِسْرَآءِيْلَ இன்னும் இஸ்ராயீல் وَمِمَّنْ هَدَيْنَا நாம் நேர்வழிகாட்டி وَاجْتَبَيْنَا ؕ தேர்ந்தெடுத்தவர்கள் اِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتُ வசனங்கள் الرَّحْمٰنِ பேரருளாளனுடைய خَرُّوْا விழுந்து விடுவார்கள் سُجَّدًا சிரம்பணிந்தவர்களாக وَّبُكِيًّا ۩ அழுதவர்களாக
19:58. உலா'இகல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன மின் துர்ரிய்யதி ஆதம வ மிம்மன் ஹமல்னா ம'அ னூஹி(ன்)வ் வ மின் துர்ரிய்யதி இBப்ராஹீம வ இஸ்ரா'ஈல வ மிம்மன் ஹதய்னா வஜ்த Bபய்னா; இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுர் ரஹ்மானி கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ Bபுகிய்யா
19:58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக்கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் செலுத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள்; இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அளவற்ற அருளாளனின் வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
19:59 فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ
فَخَلَفَ தோன்றினார்கள் مِنْۢ بَعْدِ பின் هِمْ அவர்களுக்கு خَلْفٌ ஒரு கூட்டம் اَضَاعُوا பாழாக்கினர் الصَّلٰوةَ தொழுகையை وَاتَّبَعُوا இன்னும் பின்பற்றினர் الشَّهَوٰتِ மன இச்சைகளை فَسَوْفَ يَلْقَوْنَ அவர்கள் சந்திப்பார்கள் غَيًّا ۙ கய்யை
19:59. FபகலFப மின் Bபஃதிஹிம் கல்Fபுன் அளா'உஸ் ஸலாத வத்தBப'உஷ் ஷஹவாதி Fபஸவ்Fப யல்கவ்ன கய்ய்யா
19:59. ஆனால், இவர்களுக்குப் பின் (வழிகெட்ட) தீய பின்தோன்றல்கள் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான) மனோ இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
19:60 اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ
اِلَّا தவிர مَنْ تَابَ திருந்தியவர்கள் وَاٰمَنَ நம்பிக்கை கொண்டு وَعَمِلَ இன்னும் செய்தவரை صَالِحًـا நல்லது فَاُولٰٓٮِٕكَ அவர்கள் يَدْخُلُوْنَ நுழைவார்கள் الْجَـنَّةَ சொர்க்கத்தில் وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்
19:60. இல்லா மன் தாBப வ ஆமன வ 'அமில ஸாலிஹன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத வலா யுள்லமூன ஷய்'ஆ
19:60. (எனினும்) எவர் பாவமன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு, நற்செயலைச் செய்தாரோ அவரைத் தவிர - அத்தகையவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்கள் சிறிதும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
19:61 جَنّٰتِ عَدْنٍ اۨلَّتِىْ وَعَدَ الرَّحْمٰنُ عِبَادَهٗ بِالْغَيْبِ ؕ اِنَّهٗ كَانَ وَعْدُهٗ مَاْتِيًّا
جَنّٰتِ சொர்க்கங்களில் عَدْنٍ அத்ன் اۨلَّتِىْ எது وَعَدَ வாக்களித்துள்ளான் الرَّحْمٰنُ பேரருளாளன் عِبَادَهٗ தன் அடியார்களுக்கு بِالْغَيْبِ ؕ மறைவில் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கிறது وَعْدُهٗ அவனுடைய வாக்கு مَاْتِيًّا நிகழக்கூடியதாக
19:61. ஜன்னாதி 'அத்னினில் லதீ வ'அதர் ரஹ்மானு இBபாதஹூ Bபில்கய்Bப்; இன்னஹூ கான வஃதுஹூ ம'திய்யா
19:61. நிலையான சொர்க்கங்களில் (அவர்கள் பிரவேசிப்பார்கள்); அது எத்தகையதென்றால், அளவற்ற அருளாளன், தன் அடியார்களுக்கு (அவை) மறைவாக இருக்கும் நிலையில் வாக்களித்துள்ளான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேற்றப்படக்கூடியதாகும்.
19:62 لَّا يَسْمَعُوْنَ فِيْهَا لَـغْوًا اِلَّا سَلٰمًاؕ وَلَهُمْ رِزْقُهُمْ فِيْهَا بُكْرَةً وَّعَشِيًّا
لَّا يَسْمَعُوْنَ செவிமடுக்க மாட்டார்கள் فِيْهَا அவற்றில் لَـغْوًا வீணானவற்றை اِلَّا எனினும் سَلٰمًاؕ ஸலாமை وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு رِزْقُهُمْ அவர்களுடைய உணவு فِيْهَا அவற்றில் بُكْرَةً காலையிலும் وَّعَشِيًّا மாலையிலும்
19:62. லா யஸ்ம'ஊன Fபீஹா லக்வன் இல்லா ஸலாமா; வ லஹும் ரிZஜ்குஹும் Fபீஹா Bபுக்ரத(ன்)வ் வ 'அஷிய்யா
19:62. அவற்றில் 'ஸலாம்' (சாந்தி) என்பதைத் தவிர அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும், அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது.
19:63 تِلْكَ الْجَـنَّةُ الَّتِىْ نُوْرِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِيًّا
تِلْكَ இந்த الْجَـنَّةُ சொர்க்கம் الَّتِىْ نُوْرِثُ வாரிசாக ஆக்குவோம் مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் مَنْ எவர் كَانَ இருக்கின்றார் تَقِيًّا இறையச்சமுடையவராக
19:63. தில்கல் ஜன்னதுல் லதீ னூரிது மின் 'இBபாதினா மன் கான தகிய்யா
19:63. இத்தகைய சுவர்க்கத்திற்கு நம் அடியார்களில் (நம்மை) அஞ்சுவோரை நாம் வாரிசாக்கி விடுவோம்.
19:64 وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمْرِ رَبِّكَ ۚ لَهٗ مَا بَيْنَ اَيْدِيْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذٰ لِكَ ۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا ۚ
وَمَا نَتَنَزَّلُ இறங்க மாட்டோம் اِلَّا بِاَمْرِ உத்தரவைக் கொண்டே தவிர رَبِّكَ ۚ உமது இறைவனின் لَهٗ அவனுக்கே சொந்தம் مَا بَيْنَ اَيْدِيْنَا எங்களுக்கு முன் இருப்பவையும் وَمَا خَلْفَنَا எங்களுக்கு பின் இருப்பவையும் وَمَا بَيْنَ ذٰ لِكَ ۚ அவற்றுக்கு மத்தியில் இருப்பவையும் وَمَا كَانَ இருக்கவில்லை رَبُّكَ உமது இறைவன் نَسِيًّا ۚ மறதியாளனாக
19:64. வமா னதனZஜ்Zஜலு இல்லா Bபி அம்ரி ரBப்Bபிக லஹூ மா Bபய்ன அய்தீனா வமா கல்Fபனா வமா Bபய்ன தாலிக்; வமா கான ரBப்Bபுக னஸிய்யா
19:64. (மலக்குகள் கூறுகிறார்கள்: "நபியே!) உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்குப் பின்னிருப்பதும், இவ்விரண்டிற்கும் இடையில் இருப்பதும் அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன; உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்."
19:65 رَّبُّ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِـعِبَادَتِهٖؕ هَلْ تَعْلَمُ لَهٗ سَمِيًّا
رَّبُّ இறைவன் السَّمٰوٰتِ وَ الْاَرْضِ வானங்கள்/இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவை فَاعْبُدْهُ ஆகவே, அவனை வணங்குவீராக وَاصْطَبِرْ இன்னும் பொறுமையாக இருப்பீராக لِـعِبَادَتِهٖؕ அவனை வணங்குவதில் هَلْ تَعْلَمُ நீர் அறிவீரா لَهٗ அவனுக்கு سَمِيًّا ஒப்பானவரை
19:65. ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா FபஃBபுத் ஹு வஸ்தBபிர் லி'இBபாததிஹ்; ஹல் தஃலமு லஹூ ஸமிய்யா
19:65. "(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான்; ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் சிரமங்களை) சகிப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மையில்) அவனுக்கு நிகரானவனை நீர் அறிவீரா?"
19:66 وَيَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا
وَيَقُوْلُ கூறுகிறான் الْاِنْسَانُ மனிதன் ءَاِذَا مَا مِتُّ நான் மரணித்து விட்டால் لَسَوْفَ اُخْرَجُ கண்டிப்பாக எழுப்பப்படுவேனா حَيًّا உயிருள்ளவனாக
19:66. வ யகூலுல் இன்ஸானு 'அ இதா மா மித்து லஸவ்Fப உக்ரஜு ஹய்யா
19:66. (எனினும்) மனிதன் கேட்கிறான்: "நான் இறந்து போனால், உயிருள்ளவனாக எழுப்பப்படுவேனா?" என்று.
19:67 اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا
اَوَلَا يَذْكُرُ சிந்திக்க வேண்டாமா! الْاِنْسَانُ மனிதன் اَنَّا நிச்சயமாக நாம் خَلَقْنٰهُ அவனைப் படைத்ததை مِنْ قَبْلُ முன்னர் وَلَمْ يَكُ அவன் இருக்கவில்லை شَيْـٴًـــا எந்த ஒரு பொருளாகவும்
19:67. 'அ வலா யத்குருல் இன்ஸானு அன்னா கலக்னாஹு மின் கBப்லு வ லம் யகு ஷய்'ஆ
19:67. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
19:68 فَوَرَبِّكَ لَـنَحْشُرَنَّهُمْ وَالشَّيٰطِيْنَ ثُمَّ لَــنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَـنَّمَ جِثِيًّا ۚ
فَوَرَبِّكَ உம் இறைவன் மீது சத்தியமாக لَـنَحْشُرَنَّهُمْ நிச்சயமாக நாம் அவர்களை எழுப்புவோம் وَالشَّيٰطِيْنَ இன்னும் ஷைத்தான்களை ثُمَّ பிறகு لَــنُحْضِرَنَّهُمْ அவர்களைக் கொண்டு வருவோம் حَوْلَ சுற்றி جَهَـنَّمَ நரகத்தை جِثِيًّا ۚ முழந்தாளிட்டவர்களாக
19:68. Fபவ ரBப்Bபிக லனஹ்ஷு ரன்னஹும் வஷ் ஷயாதீன தும்ம லனுஹ்ளிரன்னஹும் ஹவ்ல ஜஹன்னம ஜிதிய்யா
19:68. ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக! நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர், அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.
19:69 ثُمَّ لَـنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِيْعَةٍ اَيُّهُمْ اَشَدُّ عَلَى الرَّحْمٰنِ عِتِيًّا ۚ
ثُمَّ பிறகு لَـنَنْزِعَنَّ கழட்டி எடுப்போம் مِنْ كُلِّ ஒவ்வொரு شِيْعَةٍ கூட்டத்திலும் اَيُّهُمْ அவர்களில் اَشَدُّ கடுமையானவரை عَلَى الرَّحْمٰنِ ரஹ்மானுக்கு عِتِيًّا ۚ பாவம் செய்வதில்
19:69. தும்ம லனன் Zஜி'அன்ன மின் குல்லி ஷீ'அதின் அய்யுஹும் அஷத்து 'அலர் ரஹ்மானி 'இதிய்யா
19:69. பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்வதில் கடினமாக இருந்தவர்கள் யாவரையும் நிச்சயமாகப் பிரித்து விடுவோம்.
19:70 ثُمَّ لَـنَحْنُ اَعْلَمُ بِالَّذِيْنَ هُمْ اَوْلٰى بِهَا صِلِيًّا
ثُمَّ பிறகு لَـنَحْنُ நாம் اَعْلَمُ மிக அறிந்தவர்கள் بِالَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் اَوْلٰى மிகவும் தகுதியானவர்கள் بِهَا அதில் صِلِيًّا கடுமையாக வேதனை அனுபவிப்பதற்கு
19:70. தும்ம லனஹ்னு அஃலமு Bபில்லதீன ஹும் அவ்லா Bபிஹா ஸிலிய்யா
19:70. பின்னர், அந்நரகத்தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதியுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
19:71 وَاِنْ مِّنْکُمْ اِلَّا وَارِدُهَا ؕ كَانَ عَلٰى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ۚ
وَاِنْ مِّنْکُمْ உங்களில் (ஒவ்வொருவரும்) இல்லை اِلَّا وَارِدُهَا ؕ தவிர/அதில் நுழையக்கூடியவராக كَانَ இருக்கிறது عَلٰى رَبِّكَ உமது இறைவன் மீது حَتْمًا தீர்ப்பாக مَّقْضِيًّا ۚ முடிவு செய்யப்பட்ட
19:71. வ இன் மின்கும் இல்லா வாரிதுஹா; கான 'அலா ரBப்Bபிக ஹத்மம் மக்ளிய்யா
19:71. மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் இருக்க முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.
19:72 ثُمَّ نُـنَجِّى الَّذِيْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِيْنَ فِيْهَا جِثِيًّا
ثُمَّ பிறகு نُـنَجِّى பாதுகாப்போம் الَّذِيْنَ اتَّقَوْا இறையச்சமுடையவர்களை وَّنَذَرُ இன்னும் விட்டுவிடுவோம் الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களை فِيْهَا அதில் جِثِيًّا முழந்தாளிட்ட வர்களாக
19:72. தும்ம னுனஜ்ஜில் லதீனத் தகவ் வ னதருள் ளாலிமீன Fபீஹா ஜிதிய்யா
19:72. அதன் பின்னர், (நம்மை) அஞ்சியோரை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டுவிடுவோம்.
19:73 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْۤا ۙ اَىُّ الْفَرِيْقَيْنِ خَيْرٌ مَّقَامًا وَّاَحْسَنُ نَدِيًّا
وَاِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتُنَا நமது வசனங்கள் بَيِّنٰتٍ தெளிவான قَالَ கூறுகின்றனர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لِلَّذِيْنَ اٰمَنُوْۤا ۙ நம்பிக்கையாளர்களுக்கு اَىُّ யார்? الْفَرِيْقَيْنِ இரு பிரிவினரில் خَيْرٌ சிறந்தவர் مَّقَامًا தங்குமிடத்தால் وَّاَحْسَنُ மிக அழகானவர் نَدِيًّا சபையால்
19:73. வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் காலல் லதீன கFபரூ லில்லதீன ஆமனூ அய்யுல் Fபரீகய்னி கய்ரும் மகாம(ன்)வ் வ அஹ்ஸனு னதிய்யா
19:73. இன்னும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள் முன் ஓதப்படும்போது நிராகரிப்பாளர்கள், நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி, "(நம்) இரு வகுப்பாரில் வசிக்குமிடத்தால் சிறந்தவர் யார்? கூடும் சபையினால் அழகானவர் யார்?" என்று கேட்கின்றனர்.
19:74 وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِءْيًا
وَكَمْ எத்தனையோ اَهْلَكْنَا நாம் அழித்தோம் قَبْلَهُمْ அவர்களுக்கு முன் مِّنْ قَرْنٍ தலைமுறையினரை هُمْ அவர்கள் اَحْسَنُ மிக அழகானவர்கள் اَثَاثًا பொருட்களாலும் وَّرِءْيًا தோற்றத்தாலும்
19:74. வ கம் அஹ்லக்னா கBப்லஹும் மின் கர்னின் ஹும் அஹ்ஸனு அதாத(ன்)வ் வ ரி'யா
19:74. இன்னும், இவர்களைவிட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.
19:75 قُلْ مَنْ كَانَ فِى الضَّلٰلَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ۚ حَتّٰٓى اِذَا رَاَوْا مَا يُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ؕ فَسَيَـعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا
قُلْ கூறுவீராக مَنْ யார் كَانَ இருக்கின்றாரோ فِى الضَّلٰلَةِ வழிகேட்டில் فَلْيَمْدُدْ நீட்டிவிடட்டும் لَهُ அவருக்கு الرَّحْمٰنُ பேரருளாளன் مَدًّا ۚ நீட்டிவிடுதல் حَتّٰٓى இறுதியாக اِذَا رَاَوْا அவர்கள் பார்த்தால் مَا يُوْعَدُوْنَ அவர்கள் வாக்களிக்கப்பட்டதை اِمَّا ஒன்று الْعَذَابَ வேதனையை وَاِمَّا அல்லது السَّاعَةَ ؕ மறுமையை فَسَيَـعْلَمُوْنَ அறிவார்கள் مَنْ யார் هُوَ என்பதை شَرٌّ மிகக் கெட்டவர் مَّكَانًا தங்குமிடத்தால் وَّاَضْعَفُ மிகப் பலவீனமானவர் جُنْدًا படையால்
19:75. குல் மன் கான Fபிள்ள லாலதி Fபல்யம்துத் லஹுர் ரஹ்மானு மத்தா; ஹத்தா இதா ர அவ் மா யூ'அதூன இம்மல் 'அதாBப வ இம்மஸ் ஸா'அத Fபஸ யஃலமூன மன் ஹுவ ஷர்ரும் மகான(ன்)வ் வ அத்'அFபு ஜுன்தா
19:75. யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையைக் காணும் வரை, அளவற்ற அருளாளன் அவர்களுக்குக் கால அவகாசத்தை நீட்டிவிடுகிறான்; அப்பொழுது, இடத்தால் கெட்டவர் யார்? படையால் பலவீனமானவர் யார்? என்பதைத் திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்" என்று (நபியே) நீர் கூறுவீராக!
19:76 وَيَزِيْدُ اللّٰهُ الَّذِيْنَ اهْتَدَوْا هُدًىؕ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ مَّرَدًّا
وَيَزِيْدُ அதிகப்படுத்துவான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اهْتَدَوْا நேர்வழி நடப்போருக்கு هُدًىؕ நேர்வழியை وَالْبٰقِيٰتُ நிரந்தரமான الصّٰلِحٰتُ நன்மைகள்தான் خَيْرٌ மிகச் சிறந்தது عِنْدَ رَبِّكَ உங்கள் இறைவனிடம் ثَوَابًا நற்கூலியால் وَّخَيْرٌ இன்னும் மிகச் சிறந்தது مَّرَدًّا முடிவால்
19:76. வ யZஜீதுல் லாஹுல் லதீனஹ் ததவ் ஹுதா; வல் Bபாகியாதுஸ் ஸாலிஹாது கய்ருன் 'இன்த ரBப்Bபிக தவாBப(ன்)வ் வ கய்ரும் மரத்தா
19:76. நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிலைத்திருக்கக்கூடிய நற்செயல்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலியாகவும், சிறந்த தங்குமிடமாகவும் அமையும்.
19:77 اَفَرَءَيْتَ الَّذِىْ كَفَرَ بِاٰيٰتِنَا وَقَالَ لَاُوْتَيَنَّ مَالًا وَّوَلَدًا ؕ
اَفَرَءَيْتَ நீர் பார்த்தீரா? الَّذِىْ كَفَرَ நிராகரித்தவனை بِاٰيٰتِنَا நமது வசனங்களை وَقَالَ கூறுகின்றான் لَاُوْتَيَنَّ நிச்சயமாக நான் கொடுக்கப்படுவேன் مَالًا செல்வமும் وَّوَلَدًا ؕ சந்ததியும்
19:77. அFபர'அய்தல் லதீ கFபர Bபி ஆயாதினா வ கால ல ஊத யன்ன மால(ன்)வ் வ வலதா
19:77. நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, "(மறுமையில்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன்" என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?
19:78 اَطَّلَعَ الْغَيْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۙ
اَطَّلَعَ அறிந்துகொண்டானா الْغَيْبَ மறைவானதை اَمِ அல்லது اتَّخَذَ ஏற்படுத்திக் கொண்டானா عِنْدَ الرَّحْمٰنِ ரஹ்மானிடம் عَهْدًا ۙ ஓர் ஒப்பந்தத்தை
19:78. 'அத் தல'அல் கய்Bப 'அமித் தகத 'இன்தர் ரஹ்மானி 'அஹ்தா
19:78. (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் தெரிந்து கொண்டானா? அல்லது, அளவற்ற அருளாளனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?
19:79 كَلَّا ؕ سَنَكْتُبُ مَا يَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا ۙ
كَلَّا ؕ ஒருக்காலும் அவ்வாறல்ல سَنَكْتُبُ பதிவு செய்கிறோம் مَا يَقُوْلُ அவன் கூறுவதை وَنَمُدُّ இன்னும் அதிகப்படுத்துவோம் لَهٗ அவனுக்கு مِنَ الْعَذَابِ வேதனையில் مَدًّا ۙ அதிகப்படுத்துதல்
19:79. கல்லா; ஸனக்துBபு மா யகூலு வ னமுத்து லஹூ மினல் 'அதாBபி மத்தா
19:79. அப்படியல்ல! அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம்; இன்னும், நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.
19:80 وَّنَرِثُهٗ مَا يَقُوْلُ وَيَاْتِيْنَا فَرْدًا
وَّنَرِثُهٗ இன்னும் வாரிசாகி விடுவோம் مَا يَقُوْلُ அவன் கூறியவற்றுக்கு وَيَاْتِيْنَا இன்னும் நம்மிடம் வருவான் فَرْدًا தனியாக
19:80. வ னரிதுஹூ மா யகூலு வ ய'தீனா Fபர்தா
19:80. இன்னும், அவன் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரம் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.
19:81 وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّيَكُوْنُوْا لَهُمْ عِزًّا ۙ
وَاتَّخَذُوْا இன்னும் ஏற்படுத்திக் கொண்டனர் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اٰلِهَةً பல தெய்வங்களை لِّيَكُوْنُوْا அவை இருக்கும் என்பதற்காக لَهُمْ தங்களுக்கு عِزًّا ۙ பாதுகாப்பாக
19:81. வத்தகதூ மின் தூனில் லாஹி ஆலிஹதல் லியகூனூ லஹும் 'இZஜ்Zஜா
19:81. தங்களுக்காக (அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு) உதவியுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
19:82 كَلَّا ؕ سَيَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَيَكُوْنُوْنَ عَلَيْهِمْ ضِدًّا
كَلَّا ؕ அவ்வாறல்ல سَيَكْفُرُوْنَ அவை நிராகரித்து விடும் بِعِبَادَتِهِمْ அவர்களின் வழிபாட்டை وَيَكُوْنُوْنَ இன்னும் அவை மாறிவிடும் عَلَيْهِمْ அவர்களுக்கு ضِدًّا எதிரானவையாக
19:82. கல்லா; ஸ யக்Fபுரூன Bபி'இBபாததிஹிம் வ யகூனூன 'அலய்ஹிம் ளித்தா
19:82. அப்படியல்ல! தங்களை இவர்கள் வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் ஆகிவிடும்.
19:83 اَلَمْ تَرَ اَنَّاۤ اَرْسَلْنَا الشَّيٰـطِيْنَ عَلَى الْكٰفِرِيْنَ تَؤُزُّهُمْ اَزًّا ۙ
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنَا ஏவி விட்டுள்ளோம் الشَّيٰـطِيْنَ ஷைத்தான்களை عَلَى الْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்கள் மீது تَؤُزُّ பிடித்துஅசைக்கின்றன هُمْ அவர்களை اَزًّا ۙ பிடித்து அசைத்தல்
19:83. அலம் தர அன்னா அர்ஸல்னஷ் ஷயாதீன 'அலல் காFபிரீன த'உZஜ்Zஜுஹும் அZஜ்Zஜா
19:83. நிராகரிப்பாளர்களை (வழிகேட்டில் செல்லும்படி) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பி இருக்கிறோம் என்பதை நீர் பார்க்கவில்லையா?
19:84 فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ ؕ اِنَّمَا نَـعُدُّ لَهُمْ عَدًّا ۚ
فَلَا تَعْجَلْ ஆகவே அவசரப்படாதீர் عَلَيْهِمْ ؕ அவர்கள் மீது اِنَّمَا நிச்சயமாக நாம் نَـعُدُّ எண்ணுகிறோம் لَهُمْ அவர்களுக்காக عَدًّا ۚ எண்ணுதல்
19:84. Fபலா தஃஜல் அலய்ஹிம் இன்னமா ன 'உத்து லஹும் 'அத்தா
19:84. எனவே, அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர்! அவர்களுக்கு (வேதனைக்குரிய தவணையின்) கணக்கை நாம் கணக்கிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
19:85 يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِيْنَ اِلَى الرَّحْمٰنِ وَفْدًا ۙ
يَوْمَ நாளில்... نَحْشُرُ நாம் ஒன்று திரட்டுகின்றோம் الْمُتَّقِيْنَ இறையச்சமுள்ளவர்களை اِلَى الرَّحْمٰنِ ரஹ்மானின் பக்கம் وَفْدًا ۙ குழுவாக
19:85. யவ்ம னஹ்ஷுருல் முத்தகீன இலர் ரஹ்மானி வFப்தா
19:85. (இறை) அச்சமுடையவர்களை அளவற்ற அருளாளனிடம் (கண்ணியமிக்க விருந்தினர்) குழுவாக நாம் ஒன்று திரட்டும் நாளில் -
19:86 وَّنَسُوْقُ الْمُجْرِمِيْنَ اِلٰى جَهَـنَّمَ وِرْدًا ۘ
وَّنَسُوْقُ இன்னும் நாம் ஓட்டிக் கொண்டு வருகின்றோம் الْمُجْرِمِيْنَ பாவிகளை, குற்றவாளிகளை اِلٰى جَهَـنَّمَ நரகத்தின் பக்கம் وِرْدًا ۘ தாகித்தவர்களாக
19:86. வ னஸூகுல் முஜ்ரிமீன இலா ஜஹன்னம விர்தா
19:86. குற்றவாளிகளை (அவர்கள்) தாகித்தவர்களாக நரகை நோக்கி நாம் விரட்டுவோம்.
19:87 لَا يَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۘ
لَا يَمْلِكُوْنَ அவர்கள் உரிமை பெறமாட்டார்கள் الشَّفَاعَةَ சிபாரிசுக்கு اِلَّا தவிர مَنِ اتَّخَذَ ஏற்படுத்தியவரை عِنْدَ الرَّحْمٰنِ ரஹ்மானிடம் عَهْدًا ۘ ஓர் ஒப்பந்தத்தை
19:87. லா யம்லிகூனஷ் ஷFபா'அத இல்லா மனித்தகத 'இன்தர் ரஹ்மானி 'அஹ்தா
19:87. அளவற்ற அருளாளனிடம் உடன்படிக்கை செய்துகொண்டோரைத் தவிர, எவரும் பரிந்துரை செய்ய அதிகாரம் பெறமாட்டார்கள்.
19:88 وَقَالُوْا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ؕ
وَقَالُوْا இன்னும் கூறுகிறார்கள் اتَّخَذَ எடுத்துக் கொண்டான் الرَّحْمٰنُ பேரருளாளன் وَلَدًا ؕ குழந்தையை
19:88. வ காலுத் தகதர் ரஹ்மானு வலதா
19:88. இன்னும், "அளவற்ற அருளாளன் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்" என்று அவர்கள் கூறுகிறார்கள்.
19:89 لَـقَدْ جِئْتُمْ شَيْــٴًـــا اِدًّا ۙ
لَـقَدْ திட்டமாக جِئْتُمْ சொல்லி விட்டீர்கள் شَيْــٴًـــا ஒரு காரியத்தை اِدًّا ۙ பெரிய
19:89. லகத் ஜி'தும் ஷய்'அன் இத்தா
19:89. நிச்சயமாக நீங்கள் பெரும் அபாண்டத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
19:90 تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَـنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۙ
تَكَادُ நெருங்கி விட்டன السَّمٰوٰتُ வானங்கள் يَتَفَطَّرْنَ مِنْهُ துண்டு துண்டாகி விடுவதற்கு وَتَـنْشَقُّ இன்னும் பிளந்து விடுவதற்கு الْاَرْضُ பூமி وَتَخِرُّ இன்னும் விழுந்து விடுவதற்கு الْجِبَالُ மலைகள் هَدًّا ۙ விழுவது
19:90. தகாதுஸ் ஸமாவாது யதFபத்தர்ன மின்ஹு வ தன்ஷக் குல் அர்ளு வ தகிர்ருல் ஜிBபாலு ஹத்தா
19:90. இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து, மலைகள் சிதறுண்டுவிடும் போலும்.
19:91 اَنْ دَعَوْا لِـلرَّحْمٰنِ وَلَدًا ۚ
اَنْ دَعَوْا அவர்கள் ஏற்படுத்தியதால் لِـلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு وَلَدًا ۚ குழந்தையை
19:91. அன் த'அவ் லிர் ரஹ்மானி வலதா
19:91. அவர்கள் அளவற்ற அருளாளனுக்கு ஒரு குமாரன் உண்டென்று வாதிடுவதினால் (அவை நிகழக் கூடும்).
19:92 وَمَا يَنْۢبَـغِىْ لِلرَّحْمٰنِ اَنْ يَّتَّخِذَ وَلَدًا ؕ
وَمَا يَنْۢبَـغِىْ தகுந்ததல்ல لِلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு اَنْ يَّتَّخِذَ ஏற்படுத்திக்கொள்வது وَلَدًا ؕ குழந்தையை
19:92. வமா யம்Bபகீ லிர் ரஹ்மானி அய் யத்தகித வலதா
19:92. ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அளவற்ற அருளாளனுக்குத் தேவையில்லாதது.
19:93 اِنْ كُلُّ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّاۤ اٰتِى الرَّحْمٰنِ عَبْدًا ؕ
اِنْ இல்லை كُلُّ ஒவ்வொருவரும் مَنْ فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ள وَالْاَرْضِ இன்னும் பூமியில் اِلَّاۤ தவிர اٰتِى வருவாரே الرَّحْمٰنِ பேரருளாளனிடம் عَبْدًا ؕ அடிமையாக
19:93. இன் குல்லு மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி இல்லா ஆதிர் ரஹ்மானி 'அBப்தா
19:93. ஏனென்றால், வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை.
19:94 لَـقَدْ اَحْصٰٮهُمْ وَعَدَّهُمْ عَدًّا
لَـقَدْ திட்டமாக اَحْصٰٮهُمْ அவர்களை கணக்கிட்டு வைத்திருக்கிறான் وَعَدَّهُمْ இன்னும் அவர்களை எண்ணி வைத்திருக்கிறான் عَدًّا எண்ணுதல்
19:94. லகத் அஹ்ஸாஹும் வ அத்தஹும் 'அத்தா
19:94. நிச்சயமாக அவர்களை அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும், அவர்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான்.
19:95 وَكُلُّهُمْ اٰتِيْهِ يَوْمَ الْقِيٰمَةِ فَرْدًا
وَكُلُّهُمْ அவர்கள் ஒவ்வொருவரும் اٰتِيْهِ அவனிடம் வருவார் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் فَرْدًا தனியாக
19:95. வ குல்லுஹும் ஆதீஹி யவ்மல் கியாமதி Fபர்தா
19:95. மறுமை நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர்.
19:96 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை سَيَجْعَلُ ஏற்படுத்துவான் لَهُمُ அவர்களுக்கு الرَّحْمٰنُ பேரருளாளன் وُدًّا அன்பை
19:96. இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸ யஜ்'அலு லஹுமுர் ரஹ்மானு வுத்தா
19:96. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ, அவர்களுக்கு அளவற்ற அருளாளன் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.
19:97 فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِيْنَ وَتُنْذِرَ بِهٖ قَوْمًا لُّدًّا
فَاِنَّمَا يَسَّرْنٰهُ இதை நாம் இலகுவாக்கியதெல்லாம் بِلِسَانِكَ உமது நாவில் لِتُبَشِّرَ நீர் நற்செய்தி கூறுவதற்காகவும் بِهِ இதன் மூலம் الْمُتَّقِيْنَ இறையச்சமுள்ளவர்களுக்கு وَتُنْذِرَ நீர் எச்சரிப்பதற்காகவும் بِهٖ இதன் மூலம் قَوْمًا மக்களை لُّدًّا தர்க்கிக்கின்ற(வர்கள்)
19:97. Fப இன்னமா யஸ்ஸர்னாஹு Bபிலிஸானிக லிதுBபஷ்ஷிர Bபிஹில் முத்தகீன வ துன்திர Bபிஹீ கவ்மல் லுத்தா
19:97. (நபியே!) நாம் இ(வ்வேதத்)தை உம்முடைய மொழியில் (அரபியில்) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு (நம்மை) அஞ்சுவோருக்கு நீர் நன்மாராயம் கூறவும், வீண் வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்.
19:98 وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍؕ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِّنْ اَحَدٍ اَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا
وَكَمْ எத்தனையோ اَهْلَكْنَا நாம் அழித்தோம் قَبْلَهُمْ இவர்களுக்கு முன் مِّنْ قَرْنٍؕ தலைமுறையினரை هَلْ تُحِسُّ நீர் பார்க்கிறீரா? مِنْهُمْ அவர்களில் مِّنْ اَحَدٍ யாரையும் اَوْ அல்லது تَسْمَعُ நீர் கேட்கிறீரா لَهُمْ அவர்களுடைய رِكْزًا சப்தத்தை
19:98. வ கம் அஹ்லக்னா கBப்ல ஹும் மின் கர்னின் ஹல் துஹிஸ்ஸு மின்ஹும் மின் அஹதின் அவ் தஸ்ம'உ லஹும் ரிக்Zஜா
19:98. அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்: அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது, அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?