தேடல்


26:160
26:160 كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ اۨلْمُرْسَلِيْنَ‌ ۖ ‌ۚ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَوْمُ மக்கள் لُوْطٍ லூத்துடைய اۨلْمُرْسَلِيْنَ ۖ ۚ‏ தூதர்களை
26:160. லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
26:161
26:161 اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை لَهُمْ அவர்களுக்கு اَخُوْ சகோதரர் هُمْ அவர்களது لُوْطٌ லூத்து اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
26:161. அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது,
26:167
26:167 قَالُوْا لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ يٰلُوْطُ لَـتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ நீர் விலகவில்லை என்றால் يٰلُوْطُ லூத்தே! لَـتَكُوْنَنَّ நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர் مِنَ الْمُخْرَجِيْنَ‏ வெளியேற்றப்பட்டவர்களில்
26:167. அதற்கவர்கள்; “லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்” எனக் கூறினர்.
27:54
27:54 وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْـفَاحِشَةَ وَاَنْـتُمْ تُبْصِرُوْنَ‏
وَلُوْطًا இன்னும் லூத்தையும் اِذْ கூறிய சமயத்தை قَالَ நினைவு கூறுவீராக! لِقَوْمِهٖۤ அவர் தம் மக்களுக்கு اَتَاْتُوْنَ நீங்கள் செய்கிறீர்களா? الْـفَاحِشَةَ மகா அசிங்கமான وَاَنْـتُمْ நீங்கள் تُبْصِرُوْنَ‏ அறியத்தான் செய்கிறீர்கள்
27:54. லூத்தையும் (நினைவு கூர்வீராக!) அவர் தம் சமூகத்தாரிடம்; “நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா?” என்று கூறினார்.
27:56
27:56 فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُـوْۤا اَخْرِجُوْۤا اٰلَ لُوْطٍ مِّنْ قَرْيَتِكُمْ‌ۚ اِنَّهُمْ اُنَاسٌ يَّتَطَهَّرُوْنَ‏
فَمَا كَانَ இருக்கவில்லை جَوَابَ பதிலோ قَوْمِهٖۤ அவருடைய மக்களின் اِلَّاۤ தவிர اَنْ قَالُـوْۤا கூறுவதாகவே اَخْرِجُوْۤا வெளியேற்றுங்கள் اٰلَ குடும்பத்தாரை لُوْطٍ லூத்துடைய مِّنْ قَرْيَتِكُمْ‌ۚ உங்கள் ஊரிலிருந்து اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اُنَاسٌ அந்த மக்கள் يَّتَطَهَّرُوْنَ‏ அசூசைப்படுகிறார்கள்
27:56. அதற்கவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தாரிடம்) “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே!” என்று (பரிகாசமாகக்) கூறினார்களே தவிர வேறொரு பதிலும் அவர்களிடமில்லை.
29:26
29:26 فَاٰمَنَ لَهٗ لُوْطٌ‌ۘ وَقَالَ اِنِّىْ مُهَاجِرٌ اِلٰى رَبِّىْ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
فَاٰمَنَ ஆக, நம்பிக்கைகொண்டார் لَهٗ அவரை لُوْطٌ‌ۘ லூத் وَقَالَ இன்னும் அவர் கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் مُهَاجِرٌ வெளியேறிசெல்கிறேன் اِلٰى رَبِّىْ ؕ என் இறைவனின் பக்கம் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
29:26. (இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம்): “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார்.
29:28
29:28 وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اِنَّكُمْ لَـتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَـقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِيْنَ‏
وَلُوْطًا இன்னும் லூத்தை اِذْ قَالَ அவர் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! لِقَوْمِهٖۤ தனது மக்களுக்கு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَـتَاْتُوْنَ செய்கிறீர்கள் الْفَاحِشَةَ மானக்கேடான செயலை مَا سَبَـقَكُمْ உங்களுக்கு முன் செய்ததில்லை بِهَا مِنْ اَحَدٍ இதை/ஒருவரும் مِّنَ الْعٰلَمِيْنَ‏ அகிலத்தாரில்
29:28. மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
29:32
29:32 قَالَ اِنَّ فِيْهَا لُوْطًا ‌ؕ قَالُوْا نَحْنُ اَعْلَمُ بِمَنْ فِيْهَا‌ لَـنُـنَجِّيَـنَّهٗ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ كَانَتْ مِنَ الْغٰبِرِيْنَ‏
قَالَ அவர் கூறினார் اِنَّ நிச்சயமாக فِيْهَا அதில் இருக்கிறார் لُوْطًا ؕ லூத் قَالُوْا அவர்கள் கூறினார்கள் نَحْنُ நாங்கள் اَعْلَمُ நன்கறிந்தவர்கள் بِمَنْ فِيْهَا‌ அதில்உள்ளவர்களை لَـنُـنَجِّيَـنَّهٗ நிச்சயமாக அவரையும் நாம் பாதுகாப்போம் وَاَهْلَهٗۤ அவருடைய குடும்பத்தாரையும் اِلَّا தவிர امْرَاَتَهٗ அவருடைய மனைவியை كَانَتْ அவள்ஆகிவிடுவாள் مِنَ الْغٰبِرِيْنَ‏ மீதம் இருப்பவர்களில்
29:32. “நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்ராஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
29:33
29:33 وَلَمَّاۤ اَنْ جَآءَتْ رُسُلُـنَا لُوْطًا سِىْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالُوْا لَا تَخَفْ وَلَا تَحْزَنْ‌ اِنَّا مُنَجُّوْكَ وَاَهْلَكَ اِلَّا امْرَاَتَكَ كَانَتْ مِنَ الْغٰبِرِيْنَ‏
وَلَمَّاۤ اَنْ جَآءَتْ வந்த போது رُسُلُـنَا நமது தூதர்கள் لُوْطًا லூத்திடம் سِىْٓءَ அவர் மனம் புண்பட்டார் بِهِمْ அவர்களால் وَضَاقَ இன்னும் அவர் நெருக்கடிக்கு உள்ளானார் بِهِمْ அவர்களால் ذَرْعًا மன وَّقَالُوْا அவர்கள் கூறினார்கள் لَا تَخَفْ பயப்படாதீர் وَلَا تَحْزَنْ‌ இன்னும் கவலைப்படாதீர்! اِنَّا நிச்சயமாக நாம் مُنَجُّوْكَ உம்மைபாதுகாப்போம் وَاَهْلَكَ உமது குடும்பத்தையும் اِلَّا தவிர امْرَاَتَكَ உமது மனைவியை كَانَتْ அவள்ஆகிவிடுவாள் مِنَ الْغٰبِرِيْنَ‏ மீதம் இருப்பவர்களில்
29:33. இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
37:133
37:133 وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِيْنَؕ‏
وَاِنَّ நிச்சயமாக لُوْطًا லூத் لَّمِنَ الْمُرْسَلِيْنَؕ‏ தூதர்களில்
37:133. மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.