1155. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {طَلَاقُ الْأَمَةِ تَطْلِيقَتَانِ، وَعِدَّتُهَا حَيْضَتَانِ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ. وَأَخْرَجَهُ مَرْفُوعًا وَضَعَّفَهُ.
1155. ``அடிமைப் பெண்ணின் தலாக் இரண்டாகும். அவளின் இத்தா காலம் இரண்டு மாதவிடாயாகும்'' என இப்னு உமர்(ரலி) கூறினார்.
இது `மர்ஃபூஃ' மற்றும் `ளயீஃப்' எனும் தரத்தில் தாரகுத்னீயில் பதிவிடப்பட்டுள்ளது.
1156. وَأَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ، وَابْنُ مَاجَهْ: مِنْ حَدِيثِ عَائِشَةَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ، وَخَالَفُوهُ، فَاتَّفَقُوا عَلَى ضَعْفِهِ.
1156. ஆயிஷா(ரலி) வாயிலாக அபூ தாவூத், திர்மிதீ, இப்னு மாஜாவிலும் உள்ளது. இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது `ளயீஃப்' என்பதில் அனைவரும் ஒருமித்தக் கருத்தில் உள்ளனர்.
1157. وَعَنْ رُوَيْفِعِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللهُ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَسْقِيَ مَاءَهُ زَرْعَ غَيْرِهِ.} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَحَسَّنَهُ الْبَزَّارُ. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ - {فِي اِمْرَأَةِ الْمَفْقُودِ- تَرَبَّصُ أَرْبَعَ سِنِينَ، ثُمَّ تَعْتَدُّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا}. أَخْرَجَهُ مَالِكٌ، وَالشَّافِعِيُّ.
1157. ``தன் தண்ணீரை அந்நியனின் பயிரில் பாய்ச்சுவது (கர்ப்பமுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் அல்லது அடிமைப் பெண்ணுடன் பாலுறவு கொள்வது) அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிற எந்த ஆணுக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ருவைஃபி இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் பஸ்ஸார்(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
``ஒரு பெண்ணின் கணவன் காணாமல் போனால், அப்பெண் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்குப் பின் நான்கு மாதம் பத்து நாள் இத்தா இருக்க வேண்டும் என உமர்(ரலி) கூறினார்கள்.
நூல்கள்: மாலிக், ஷாஃபியீ
1159. وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اِمْرَأَةُ الْمَفْقُودِ اِمْرَأَتُهُ حَتَّى يَأْتِيَهَا الْبَيَانُ.} أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ.
1159. ``ஒரு பெண்ணின் கணவன் காணாமல் போனால், அவளிடம் அவனைக் குறித்துத் தெளிவான செய்தி வரும் வரை அவனுடைய மனைவியாகவே இருப்பாள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
இமாம் தாரகுத்னீ(ரஹ்) இதனை `ளயீஃப்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளார்.
1160. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَبِيتَنَّ رَجُلٌ عِنْدَ اِمْرَأَةٍ، إِلَّا أَنْ يَكُونَ نَاكِحًا، أَوْ ذَا مَحْرَمٍ.} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1160. ஒரு பெண்ணுடன் அவளை மணந்தவரோ, அவளை மணக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ள (நெருங்கிய) உறவினரோ, அன்றி, வேறு யாரும் இரவு நேரத்தில் (தனியாகத்) தங்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1161. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِاِمْرَأَةٍ، إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ.} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1161. ``திருமண உறவு தடைசெய்யப்பட்டவருடன் அல்லாமல் வேறு எந்த ஆணும், ஒரு பெண்ணுடன் ஒருபோதும் தனித்திருக்கக் கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1162. وَعَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي سَبَايَا أَوْطَاسٍ: {لَا تُوطَأُ حَامِلٌ حَتَّى تَضَعَ، وَلَا غَيْرُ ذَاتِ حَمْلٍ حَتَّى تَحِيضَ حَيْضَةً} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1162. ``(போர்க் கைதியாக அல்லது விலைக்கு வாங்கப்பட்ட அடிமையாக வரும்) கர்ப்பிணியாய் இருப்பவள், தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை உறவு கொள்ள வேண்டாம். இன்னும், கர்ப்பிணியாக இல்லாதவள் ஒரு முறை மாதவிலக்காகி தூய்மை அடையாதவரை உறவு கொள்ள வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவ்தாஸ் யுத்தக் கைதிகள் பற்றிக் குறிப்பிடுகையில் கூறினார்கள் என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்..
1163. وَلَهُ شَاهِدٌ: عَنِ ابْنِ عَبَّاسٍ فِي الدَّارَقُطْنِيِّ.
1163. மேற்கண்ட ஹதீஸிற்குச் சான்றாக இப்னு அப்பாஸ் (ரலி) வாயிலாக தாரகுத்னீயில் ஒரு ஹதீஸ் உள்ளது.
1164. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اَلْوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الْحَجَرُ.} مُتَّفَقٌ عَلَيْهِ مِنْ حَدِيثِهِ.
1164. ``(பெண்ணின்) படுக்கைக்குச் சொந்தக்காரருக்கே (அவளின்) குழந்தை உரியதாகும். (அப்பெண்ணுடன்) விபச்சாரம் செய்தவருக்கு இழப்பு (தண்டனை)தான் உரியதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: அடிமைப் பெண் ஒருத்தி விபச்சாரம் செய்து அதன் மூலம் குழந்தை உண்டானால் அந்தக் குழந்தை அவளின் எஜமானனுக்கே உரியதாகும். ஒருவனின் மனைவி விபச்சாரம் செய்து அதன் மூலம் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை அவளின் கணவனுக்கே உரியதாகும். விபச்சாரம் செய்தவனுக்கு அல்லாஹ் விதித்த தண்டனைதான் கதியாகும். இதற்கு மாற்றமாக எந்த முடிவு எடுத்தாலும் இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் ஆதரவற்றுப் போனால் சமூகத்தில் குற்றவாளிகள் பெறுகுவதற்குக் காரணமாகும்.
1165. وَمِنْ حَدِيثِ عَائِشَةَ فِي قِصَّةٍ.
1165. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா(ரலி) வாயிலாக நஸயீயில் ஒரு சம்பவத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.
1166. وَعَنِ ابْنِ مَسْعُودٍ، عِنْدَ النَّسَائِيِّ.
1166. இப்னு மஸ்வூத்(ரலி) வாயிலாகவும் நஸயீயில் பதிவிடப்பட்டுள்ளது.
1167. وَعَنْ عُثْمَانَ عِنْدَ أَبِي دَاوُدَ. بَابُ الرَّضَاعِ
1167. அபூ தாவூதில் உஸ்மான்(ரலி) வாயிலாகவும் பதிவிடப்பட்டுள்ளது.
1168. عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تُحَرِّمُ الْمَصَّةُ وَالْمَصَّتَانِ.} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1168. ``ஒரு பெண்ணிடம், ஒரு முறை அல்லது இரண்டு முறை (குழந்தை பாலை) சிறிது உறிஞ்சுவதால், திருமண உறவு விலக்கப்பட்டதாய் ஆகாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1169. وَعَنْهَا قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اُنْظُرْنَ مَنْ إِخْوَانُكُنَّ، فَإِنَّمَا الرَّضَاعَةُ مِنَ المَجَاعَةِ.} مُتَّفَقٌ عَلَيْهِ.
1169. ``பெண்களே! உண்மையில் உங்களின் (பால்குடிச்) சகோதரர்கள் யார் யார் என ஆராய்ந்து (அறிந்து வைத்துக்) கொள்ளுங்கள். ஏனெனில், (குழந்தை) பசியினால் (ஒரு பெண்ணிடம்) பால்குடிப்பதன் மூலமாகவே பால்குடி உறவு ஏற்படும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1170. وَعَنْهَا قَالَتْ: {جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ. فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ! إِنَّ سَالِمًا مَوْلَى أَبِي حُذَيْفَةَ مَعَنَا فِي بَيْتِنَا، وَقَدْ بَلَغَ مَا يَبْلُغُ الرِّجَالُ. قَالَ: "أَرْضِعِيهِ. تَحْرُمِي عَلَيْهِ".} رَوَاهُ مُسْلِمٌ.
1170. ஸஹ்லா பின்த் ஸுஹைல்(ரலி) வந்து, ``இறைத்தூதர் அவர்களே! அபூ ஹுதைஃபாவால் விடுதலை செய்யப்பட்ட அடிமை ஸாலிம் எங்கள் வீட்டில் இருக்கிறார். அவர் இப்போது மற்ற மனிதர்களைப் போன்று பருவம் அடைந்துவிட்டார்'' எனக் கூறினார்.
``அவருக்குப் பால் (கறந்து) கொடுத்துவிடு! நீ அவருக்கு ஹராமாகிவிடுவாய்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
குறிப்பு: இது, ஸாலிம்(ரலி) அவர்களுக்கும் அவர்களின் வளர்ப்புத் தாய்க்கும் நபி(ஸல்) அளித்த சிறப்புச் சலுகையாகும். அதற்கும் முன்னரும் சரி அதற்குப் பின்னரும் சரி, இது வேறு யாருக்கும் எக்காலத்திலும் பொருந்தாது.
1171. وَعَنْهَا: {أَنْ أَفْلَحَ -أَخَا أَبِي الْقُعَيْسِ- جَاءَ يَسْتَأْذِنُ عَلَيْهَا بَعْدَ الْحِجَابِ. قَالَتْ: فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ، فَلَمَّا جَاءَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرْتُهُ بِالَّذِيْ صَنَعْتُ، فَأَمَرَنِي أَنْ آذَنَ لَهُ عَلَيَّ. وَقَالَ: "إِنَّهُ عَمُّكِ".} مُتَّفَقٌ عَلَيْهِ.
1171. அபுல் குஅய்ஸின் சகோதரர் பர்தா சட்டம் வந்த பின்பு என்னிடம் வந்து (பார்க்க) அனுமதி கேட்டார். நான் அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டேன். இறைத்தூதர்(ஸல்) வந்ததும் நான் செய்ததை தெரிவித்தேன். இறைத்தூதர்(ஸல்) அவரை, என் முன்பு வர அனுமதித்து, அவர் (பால் குடி உறவால்) உனக்கு சிறிய தந்தை (உறவு) ஆவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1172. وَعَنْهَا قَالَتْ: {كَانَ فِيمَا أُنْزِلُ فِي الْقُرْآنِ: عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ، ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ، فَتُوُفِّيَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَفِيمَا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ}. رَوَاهُ مُسْلِمٌ.
1172. ``உறுதியாக பத்து தடவை வாய் வைத்துப் பாலருந்துவது (தான் திருமண உறவைத்) தடை செய்யக் கூடியதாகும்'' என்று குர்ஆனில் (சட்டம்) இருந்தது. பின்னர், அது உறுதியாக ஐந்து தடவையாக மாற்றப்பட்டது. பின்னர், இறைத்தூதர்(ஸல்) இறந்துவிட்டார்கள். அது (ஓதப்படக் கூடாத வசனம் என மக்கள் அறியாததால் இப்போதும்) குர்ஆனிலிருந்து ஒதப்படுகிறது என்று ஆயிஷா(ரலி) கூறினார்.
நூல்: முஸ்லிம்
குறிப்பு: இந்த வசனம் நபி(ஸல்) காலத்திலேயே அவர்களால் ரத்துச் செய்யப்பட்டுவிட்டது.
1173. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيدُ عَلَى اِبْنَةِ حَمْزَةَ. فَقَالَ: "إِنَّهَا لَا تَحِلُّ لِي؛ إِنَّهَا اِبْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ} وَيَحْرُمُ مِنَ الرَّضَاعَةِمَا يَحْرُمُ مِنَ النَّسَبِ. مُتَّفَقٌ عَلَيْهِ.
1173. ஹம்ஸாவின் மகளை இறைத்தூதர்(ஸல்) திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு, ``ஹம்ஸா என் பால்குடி சகோதரராய் இருப்பதால் அவள் எனக்கு அனுமதிக்கப்பட்டவளல்ல. இரத்த சம்பந்தமான உறவுகளில் யாரெரல்லாம் (மணம் செய்ய) விலக்கப்பட்டவர்களோ, பாலூட்டும் உறவுகளிலும் அவர்கள் (மணம் செய்ய) விலக்கப்பட்டவர்களே'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1174. وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يُحَرِّمُ مِنَ الرَّضَاعَةِ إِلَّا مَا فَتَقَ الْأَمْعَاءَ، وَكَانَ قَبْلَ الْفِطَامِ.} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ هُوَ وَالْحَاكِمُ.
1174. ``பால்குடிப் பருவத்தில் இரைப்பையைச் சென்றடையும் விதமான பாலூட்டுதலைத் தவிர மற்றவை (திருமண உறவை) விலக்கிவிடாது. இது பால்குடி மறக்கடிப்பதற்கு முன்பு நிகழ்ந்திருக்க வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உம்மு ஸலாமா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.