1565. وَعَنْ مُعَاوِيَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا، يُفَقِّهْهُ فِي الدِّينِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1565. ``அல்லாஹ் யாருக்கு நல்லதை நாடுகிறானோ, அவருக்கு மார்க்க (சட்ட நுணுக்க) அறிவைக் கொடுக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஆவியா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1566. وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا مِنْ شَيْءٍ فِي الْمِيزَانِ أَثْقَلُ مِنْ حُسْنِ الْخُلُقِ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.
1566. ``நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாய் இருக்காது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்தா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1567. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1567. ``வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1568. وَعَنْ أَبِي مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النُّبُوَّةِ الْأُولَى: إِذَا لَمْ تَسْتَحِ، فَاصْنَعْ مَا شِئْتَ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1568. ``நீ வெட்கம் கொள்ளவில்லை எனில் நீ விரும்பியதைச் செய்து கொள்! என்பது முந்தைய இறைத்தூதுத்துவ மொழிகளில் ஒன்றாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1569. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ، اِحْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللَّهِ، وَلَا تَعْجَزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ: لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ: قَدَّرَ اللهُ وَمَا شَاءَ فَعَلَ؛ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1569. பலமான இறைநம்பிக்கையாளன் பலமற்ற இறைநம்பிக்கையாளனைவிட அல்லாஹ்விடம் சிறந்தவனும் விருப்பத்திற்குரியவனும் ஆவான். (இறைநம்பிக்கையுள்ள) ஒவ்வொருவரிலும் நன்மை உண்டு. இன்னும், உனக்கு பயனளிப்பதை நீ ஆசைப்படு. இன்னும், அல்லாஹ்விடமே உதவி தேடு! உனக்கு ஏதாவது நேர்ந்துவிடின், நான் இன்னின்னவாறு? செய்திருந்தால், இப்படி ஆகியிருக்குமே! எனக் கூறாதே!'' அல்லாஹ் எதை நாடினானோ, எது விதியோ அது நடந்துவிட்டது எனக் கூறிக்கொள்! ஏனெனில், (லவ் - இவ்வாறு நடந்திருந்தால்)அந்த வார்த்தை ஷைத்தானின் சூழ்ச்சிக்கு வழி திறக்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1570. وَعَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ اللهُ أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا، حَتَّى لَا يَبْغِيَ أَحَدٌ عَلَى أَحَدٍ، وَلَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1570. ``ஒருவர் மற்றவர் மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாமல் பணிந்தவர்களாய் இருங்கள் என்று எனக்கு வஹீ (இறைச் செய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இயாள் இப்னு ஹிமார்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1571. وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ بِالْغَيْبِ، رَدَّ اللهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ الْقِيَامَةِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَحَسَّنَهُ.
1571. ``தன் சகோதரனின் மானத்தை அவன் அறியாத நிலையிலும் காப்பவரின் முகத்தை, அல்லாஹ் மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்தா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1572. وَلِأَحْمَدَ، مِنْ حَدِيثِ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ نَحْوُهُ.
1572. அஸ்மா பின்த் யஸீத் வாயிலாக 1571 வது ஹதீஸ் போன்றே அஹ்மதில் பதிவிடப்பட்டுள்ளது.
1573. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1573. ``தர்மம் செய்தல் செல்வத்தில் எதையும் குறைத்துவிடாது. அடியான் மன்னிப்புக் கோருவதால் அல்லாஹ் அவனுடைய மதிப்பை (மேலும்) அதிகப்படுத்தவே செய்கிறான். அல்லாஹ்வுக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொண்ட எந்த மனிதனையும் அல்லாஹ் உயர்த்தாமல் இருக்க மாட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1574. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ سَلَامٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يَا أَيُّهَا النَّاسُ! أَفْشُوا السَّلَام، وَصِلُوا الْأَرْحَامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ، وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ، تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.
1574. ``மக்களே! ஸலாமை (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் கூறி) பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்! மேலும், இரவில் மக்கள் தூங்கும்போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போதுதான் நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அறிவித்தார்.
ஆதாரப்பூர்வமான அறிவிப்புத் தொடரில் இமாம் திர்மிதீ(ரஹ்) இதனைப் பதிவிட்டுள்ளார்.
1575. وَعَنْ تَمِيمٍ الدَّارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ {اَلدِّينُ النَّصِيحَةُ" ثَلَاثًا. قُلْنَا: لِمَنْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ:" لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1575. ``நலம் நாடுவதே மார்க்கமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) மும்முறை கூறினார்கள். அப்போது,
``இறைத்தூதர் அவர்களே! யாருக்கு நலம் நாடுவது?'' என நாங்கள் வினவினோம்.
``அல்லாஹ்வுக்கும் அவனுடைய வேதத்திற்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் மற்றும் முஸ்லிம் பொது மக்களுக்கும் நலம் நாடுவதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) பதிலளித்தார்கள் என தமீமுத்தாரி(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1576. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَكْثَرُ مَا يُدْخِلُ الْجَنَّةَ تَقْوى اللهُ وَحُسْنُ الْخُلُقِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1576. ``அதிகமாக சுவர்க்கத்தில் (மக்களை) புகுத்துபவைவ இறையச்சமும் நற்குணமும்தாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1577. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّكُمْ لَا تَسَعُونَ النَّاسَ بِأَمْوَالِكُمْ، وَلَكِنْ لِيَسَعْهُمْ بَسْطُ الْوَجْهِ، وَحُسْنُ الْخُلُقِ} أَخْرَجَهُ أَبُو يَعْلَى، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1577. ``நீங்கள் உங்கள் சொத்துக்களால் மக்களைக் கவர முடியாது. மாறாக, உங்களின் மலர்ந்த முகம் மற்றும் நற்குணத்தால்தான் (அவர்களைக்) கவர முடியும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ யஃலா
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1578. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ حَسَنٍ.
1578. ``இறைநம்பிக்கையாளன் இறைநம்பிக்கை கொண்டுள்ள தன் சகோதரனுக்குக் கண்ணாடி ஆவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1579. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْمُؤْمِنُ الَّذِيْ يُخَالِطُ النَّاسَ، وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ خَيْرٌ مِنَ الَّذِيْ لَا يُخَالِطُ النَّاسَ وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ} أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ بِإِسْنَادٍ حَسَنٍ، وَهُوَ عِنْدَ التِّرْمِذِيِّ: إِلَّا أَنَّهُ لَمْ يُسَمِّ الصِّحَابِيَّ.
1579. ``மக்களுடன் உறவாடி அவர்களிடமிருந்து வரக்கூடிய துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இறைநம்பிக்கையாளன், மக்களுடன் உறவாடாத, அவர்களிடமிருந்து வரக்கூடிய துன்பங்களைச் சகிக்காத இறைநம்பிக்கையாளனைவிட, மேலானவன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இது இப்னு மாஜாவில் `ஹஸன்' எனும் தரத்திலும் மற்றும் திர்மிதீயில் ஸஹாபியின் பெயர் இல்லாமலும் உள்ளது.
1580. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَللَّهُمَّ كَمَا أَحْسَنْتَ خَلْقِي، فَحَسِّنْ خُلُقِي} رَوَاهُ أَحْمَدُ وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.بَابُ الذِّكْرِ وَالدُّعَاءِ
1580. ``என் இரட்சகனே! என்னை அழகாகப் படைத்தது போன்று என் குணநலன்களையும் அழகுபடுத்துவாயாக!'' என்று இறைத்தூதர்(ஸல்) பிராத்தித்து வந்தார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1581. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يَقُولُ اللهُ -تَعَالَى-: أَنَا مَعَ عَبْدِي مَا ذَكَرَنِي، وَتَحَرَّكَتْ بِي شَفَتَاهُ} أَخْرَجَهُ ابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ، وَذَكَرَهُ الْبُخَارِيُّ تَعْلِيقًا.
1581. ``என் அடியான் என்னை நினைவு கூர்ந்து கொண்டும், என் தியானத்தால் தன் உதடுகளை அசைத்துக் கொண்டு இருக்கும் வரையில் நான் அவனுடன் இருக்கிறேன் என அல்லாஹ் கூறுகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இமாம் இப்னுஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். புகாரீயில் இது முஅல்லக் ஆக உள்ளது.
1582. وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا عَمِلَ ابْنُ آدَمَ عَمَلاً أَنْجَى لَهُ مِنْ عَذَابِ اللهُ مِنْ ذِكْرِ اللهِ} أَخْرَجَهُ ابْنُ أَبِي شَيْبَةَ، وَالطَّبَرَانِيُّ بِإِسْنَادٍ حَسَنٍ.
1582. ``அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தன்னை அதிகமாகக் காக்கக் கூடிய வெறு எந்த நற்செயலையும் ஆதமின் மகன் செய்வதில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.
இப்னு அபீ ஷைபா மற்றும் தப்ரானீயில் இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1583. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا، يَذْكُرُونَ اللهُ إِلَّا حَفَّتْ بِهِمُ الْمَلَائِكَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1583. ``அல்லாஹ்வை நினைவு கூர்ந்தபடி மக்கள் ஒரு சபையில் அமரும்போது வானவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறார்கள். இறைவனின் கருணை அவர்களை அரவணைத்துக் கொள்கிறது. அல்லாஹ் அவர்களைப் பற்றி (புகழ்ந்து தன் அவையில்) தன்னிடம் இருப்பவர்களிடம் நினைவு கூர்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1584. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا قَعَدَ قَوْمٌ مَقْعَدًا لَمْ يَذْكُرُوا اللهَ، وَلَمْ يُصَلُّوا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا كَانَ عَلَيْهِمْ حَسْرَةً يَوْمَ الْقِيَامَةِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَقَالَ:"حَسَنٌ".
1584. ``மக்கள் ஓரிடத்தில் அமர்ந்து அங்கு அல்லாஹ்வை நினைவுகூராமலும், இறைத்தூதர்(ஸல்) மீது ஸலவாத் கூறாமலும் இருப்பார்களாயின், அதுவே மறுமை நாளில் அவர்கள் மீது பேரிழப்பாகவே வந்து முடியும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.