168. وَلِمُسْلِمٍ مِنْ حَدِيثِ أَبِي مُوسَى: {فَأَقَامَ الْفَجْرَ حِينَ اِنْشَقَّ الْفَجْرُ، وَالنَّاسُ لَا يَكَادُ يَعْرِفُ بَعْضُهُمْ بَعْضًا}
168. இறைத்தூதர்(ஸல்) கிழக்கு வெளுத்ததும் ஃபஜர் தொழுகையை தொழுவார்கள் (அப்போது) மக்கள் ஒருவரையொருவர் (இருளின் காரணமாக) அறிய முடியாத நிலையில் இருப்பார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
169. وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيُبْصِرُ مَوَاقِعَ نَبْلِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
169. நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுவோம். (அதன் பின்) எங்களில் எவராவது சென்றால் அவர் (தன்னால் வீசப்பட்ட) தம்முடைய அம்பின் இலக்கினை (அந்நேர வெளிச்சத்தில்) பார்ப்பர் என ராஃபிஃ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
170. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {أَعْتَمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ بِالْعَشَاءِ، حَتَّى ذَهَبَ عَامَّةُ اللَّيْلِ، ثُمَّ خَرَجَ، فَصَلَّى، وَقَالَ: "إِنَّهُ لَوَقْتُهَا لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي"} رَوَاهُ مُسْلِمٌ.
170. இரவின் பெரும் பகுதி, கழியும் அளவிற்கு இஷா தொழுகையை இறைத்தூதர்(ஸல்) பிற்படுத்தி, பின்னர் சென்று ஒரு இரவுத் தொழுகை நடத்திவிட்டு ``என் சமுதாயத்திற்குச் சிரமம் ஏற்படும என நான் அஞ்சவில்லை எனில், இதுவே இஷாவின் நேரமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
171. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا اِشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
171. ``கடும் வெப்ப காலத்தில், (வெப்பம் குறையும் வரை சற்று பிற்படுத்தி) குளிர்ந்த நேரத்தில் (லுஹரை) தொழுங்கள். ஏனெனில், கடும் வெப்பம் நிச்சயமாக நரகத்தின் பெருமூச்சினால் உண்டாவதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
172. وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَصْبِحُوا بِالصُّبْحِ فَإِنَّهُ أَعْظَمُ لِأُجُورِكُمْ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ.
172. ``ஃபஜ்ரின் நேரம் வந்துவிட்டது எனத் தெளிவாகத் தெரிந்தபின்பு தொழுங்கள். ஏனெனில், நிச்சயமாக அது உங்களுக்கு மகத்தான கூலியைப் பெற்றுத்தரும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ராஃபி இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, நஸயீ மற்றும் அஹ்மத்.
இமாம் திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
173. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلِ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
173. ``சூரிய உதயத்திற்கு முன்பு ஃபஜ்ரின் ஒரு ரக்அத்தை அடைந்தவர் ஃபஜ்ர் தொழுகையை (அதன் நேரத்தில்) அடைந்து விட்டார். இன்னும், அஸரின் ஒரு ரக் அத்தை சூரியன் மறைவதற்குள் அடைந்தவர், அஸ் ர் தொழுகையை (அதன் நேரத்தில்) அடைந்துவிட்டார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
174. وَلِمُسْلِمٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا نَحْوَهُ، وَقَالَ: "سَجْدَةً" بَدَلَ "رَكْعَةً". ثُمَّ قَالَ: وَالسَّجْدَةُ إِنَّمَا هِيَ الرَّكْعَةُ.
174. முஸ்லிமில் ஆயிஷா(ரலி) வாயிலாக இதே போன்று ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால், அங்கு ரக்அத்திற்குப் பதிலாக ஸஜ்தா எனப் பதிவாகியுள்ளது. பின்னர் ஸஜ்தா என்பது ரக்அத்(தில் உள்ளது) என ஆயிஷா(ரலி) விளக்கியதாகவும் உள்ளது.
175. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ اَلشَّمْسُ وَلَا صَلَاةَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ} مُتَّفَقٌ عَلَيْهِ. وَلَفْظُ مُسْلِمٍ: {لَا صَلَاةَ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ}.
175. ``ஃபஜ்ருக்குப் பின்னர் சூரியன் உதயமாகும் வரையிலும், அசருக்குப் பின்னர் சூரியன் மறையும் வரையிலும் எந்தத் தொழுகையும் இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றேன் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின் எந்தத் தொழுகையுமில்லை என முஸ்லிமில் பதிவிடப்பட்டுள்ளது.
176. وَلَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ: {ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَانَا أَنْ نُصَلِّي فِيهِنَّ، وَأَنْنَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا: حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَزُولَ الشَّمْسُ، وَحِينَ تَتَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ}.
176. சூரியன் ஒளிர்ந்து கொண்டு, உதயமாகி வரும் வேளையில், அது உயரும் வரையிலும், இன்னும் சூரியன் உச்சியிலிருந்து சாயும் வரையிலும், இன்னும் சூரியன் மறைவதற்காகத் தாழும் (மறையும்) வேளையிலும் ஆகிய மூன்று நேரங்களில் நாங்கள் தொழுவதையும், எங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் இறைத்தூதர்(ஸல்) தடை செய்துவந்தார்கள் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
177. وَالْحُكْمُ الثَّانِي عِنْدَ "الشَّافِعِيِّ" مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ بِسَنَدٍ ضَعِيفٍ. وَزَادَ: {إِلَّا يَوْمَ الْجُمْعَةِ}.
177. தொழுவது தடை செய்யப்பட்ட வேளைகளில் இரண்டாவது வேளை(யான சூரியன் உச்சி சாயும் நேரம்) பற்றிய செய்தி ஷாஃபிஈயில் அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக `ளயீஃப்' எனும் பலவீனமான தரத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் ``ஜுமுஆ நாளைத் தவிர'' என்னும் வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
ஜுமுஆ நாளில் மட்டும் சூரியனின் உச்சி நேரத்தில் தொழுதல் தடைசெய்யப்படவில்லை என்பது இதிலிருந்து தெரியவருகிறது. (சுபுலுஸ் ஸலாம்)
178. وَكَذَا لِأَبِي دَاوُدَ: عَنْ أَبِي قَتَادَةَ نَحْوُهُ.
178. இதே போன்று அபூ கதாதா(ரலி) வாயிலாக அபூ தாவூதிலும் பதிவாகியுள்ளது.
179. وَعَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لَا تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ.
179. ``அப்து மனாஃப் உடைய மக்களே! இரவாயினும், பகலாயினும் எந்நேரத்திலும் இந்த இறையில்லத்தில் யாரும் தொழுவதையோ, வலம் வருவதையோ தடுக்காதீர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ மற்றும் இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
180. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اَلشَّفَقُ الْحُمْرَةُ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ وَصَحَّحَ اِبْنُ خُزَيْمَةَ وَغَيْرُهُ وَقْفَهُ.
180. ``ஷஃபக் என்பது செவ்வானமாகும்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இமாம் இப்னு குஸைமா இதனைஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்கள் இதனை இப்னு உமர்(ரலி) அவர்களின் கருத்து எனக் கூறியுள்ளார்கள்..
181. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْفَجْرُ فَجْرَانِ: فَجْرٌ يُحَرِّمُ الطَّعَامَ وَتَحِلُّ فِيهِ الصَّلَاةُ، وَفَجْرٌ تَحْرُمُ فِيهِ الصَّلَاةُ - أَيْ: صَلَاةُ الصُّبْحِ - وَيَحِلَّ فِيهِ الطَّعَامُ} رَوَاهُ اِبْنُ خُزَيْمَةَ، وَالْحَاكِمُ، وَصَحَّحَاهُ.
181. ``ஃபஜ்ர் (நேரம்) இரண்டிருக்கிறது, ஒரு ஃபஜ்ரில் சாப்பிடுவது தடுக்கப்பட்டும், தொழுவது அனுமதிக்கப்பட்டும், மற்றொரு ஃபஜ்ரில் தொழுவது தடை செய்யப்பட்டும், சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டும் உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: இப்னு குஸைமா, ஹாகிம்
மேற்கண்ட இரண்டு இமாம்களும் இதனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
182. وَلِلْحَاكِمِ فِي حَدِيثِ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ نَحْوُهُ، وَزَادَ فِي الَّذِي يُحَرِّمُ الطَّعَامَ: {إِنَّهُ يَذْهَبُ مُسْتَطِيلاً فِي الْأُفُقِ} وَفِي الْآخَرِ: {إِنَّهُ كَذَنَبِ السِّرْحَان}.
182. ஜாபிர்(ரலி) வாயிலாக, இதே போன்ற ஹதீஸ் உள்ளது. அதில், `ஸஹர்' உணவு உண்பதற்குத் தடைசெய்யப்பட்ட அந்நேரம் பற்றிக் குறிப்பிடுகையில், கீழ்வானத்தில் நீளநீளமாக கோடுகள் தோன்றும் நேரம் என்றும், ஹாகிமின் மற்றோர் அறிவிப்பில், ஓநாயின் வாலைப் போல கீழ்வானம் வெள்ளையாய் இருக்கும் நேரம் என்றும் அதிகப்படியாக உள்ளது.
குறிப்பு: அந்த நேரம் என்பது கிழக்கு வெளுப்பதைக் குறிக்கிறது.
183. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَفْضَلُ الْأَعْمَالِ الصَّلَاةُ فِي أَوَّلِ وَقْتِهَا} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَالْحَاكِمُ وَصَحَّحَاهُ.وَأَصْلُهُ فِي "الصَّحِيحَيْنِ".
183. ``செயல்களில் சிறந்தது (தொழுகையை) அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இமாம் திர்மிதீ மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் மூலம் புகாரீ மற்றும் முஸ்லிமில் உள்ளது.
184. وَعَنْ أَبِي مَحْذُورَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {أَوَّلُ الْوَقْتِ رِضْوَانُ اللهِ، وَأَوْسَطُهُ رَحْمَةُ اللهِ؛ وَآخِرُهُ عَفْوُ اللهِ} أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ بِسَنَدٍ ضَعِيفٍ جِدًّا.
184. ``(தொழுகையின்) ஆரம்ப நேரம் அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும் நேரமாகும். நடுநேரம் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் நேரமாகும், இறுதி நேரம் அல்லாஹ்வின் மன்னிப்புக் கிடைக்கும் நேரமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ மஃக்தூரா(ரலி) அறிவித்தார்.
மிகவும் `ளயீஃப்' எனும் பலவீனமான தரத்தில் தாரகுத்னீயில் பதிவிடப்பட்டுள்ளது.
185. وَلِلتِّرْمِذِيِّ مِنْ حَدِيثِ اِبْنِ عُمَرَ نَحْوُهُ، دُونَ الْأَوْسَطِ، وَهُوَ ضَعِيفٌ أَيْضًا
185. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர்(ரலி) அவர்களின் வாயிலாக திர்மிதீயில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், நடு நேரம் பற்றிய குறிப்பு இல்லை. அதுவும் `ளயீஃப்' எனும் பலவீனமான தரத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது.
186. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا صَلَاةَ بَعْدَ الْفَجْرِ إِلَّا سَجْدَتَيْنِ} أَخْرَجَهُ الْخَمْسَةُ، إِلَّا النَّسَائِيُّ. وَفِي رِوَايَةِ عَبْدِ الرَّزَّاقِ: {لَا صَلَاةَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ إِلَّا رَكْعَتَي الْفَجْرِ}.
186. ``ஃபஜ்ர் உதித்தப் பின்பு, இரண்டு ஸஜ்தாக்கள் (முன் சுன்னத் மற்றும் கடமையான ஃபர்ள்) தவிர்த்து வேறு எந்தத் தொழுகையும் இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
``ஃபஜ்ர் உதித்தப் பின்பு ஃபஜ்ரின் இரண்டு ரக்அத்துகள் (முன் சுன்னத் மற்றும் கடமையான ஃபர்ள்) தவிர்த்து வேறு தொழுகையே இல்லை'' என அப்துர் ரஸ்ஸாக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
குறிப்பு: கடமையான ஃபஜ்ர் இரண்டு ரக்அத்துக்களும், அதற்கு முன்பாக முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்துகளும் உள்ளன. எனவே, இவை தவிர்த்து வேறு எந்தத் தொழுகையும் இல்லை'' என்றே இதற்குப் பொருள். இந்நூலின் விளக்கவுரையான சுபுலுஸ்ஸலாம் எனும் நூலிலும் இவ்வாறே கருத்து உள்ளது.
187. وَمِثْلُهُ لِلدَّارَقُطْنِيّ عَنِ ابْنِ عَمْرِو بْنِ الْعَاصِ.
187. அம்ர் இப்னு ஆஸ் வாயிலாக தாரகுத்னீயிலும் மேற்கண்ட ஹதீஸ் பதிவிடப்பட்டுள்ளது.