215. وَلِأَبِي دَاوُدَ: فِي حَدِيثِ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ أَنَّهُ قَالَ: أَنَا رَأَيْتُهُ - يَعْنِي: اَلْأَذَانُ - وَأَنَا كُنْتُ أُرِيدُهُ. قَالَ: "فَأَقِمْ أَنْتَ " وَفِيهِ ضَعْفٌ أَيْضًا.
215. நான் (பாங்கு சொல்ல வேண்டும் என) விரும்பிக் கொண்டிருந்த நிலையில் பாங்கு சொல்லும் முறையைக் கனவில் கண்டேன். (நான் அதை நபியவர்களிடம் தெரிவித்தவுடன் அதனை பிலால்(ரலி) அவர்களுக்குக் கற்றுத் தர உத்தரவிட்டு என்னிடம்) ``நீ `இகாமத்' சொல்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஜைத் வாயிலாக அபூ தாவூதில் உள்ளது.
இது `ளயீஃப்' எனும் பலவீனமான தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
216. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْمُؤَذِّنُ أَمْلَكُ بِالْأَذَانِ، وَالْإِمَامُ أَمْلَكُ بِالْإِقَامَةِ} رَوَاهُ اِبْنُ عَدِيٍّ وَضَعَّفَهُ.
216. முஅத்தின் அதான் (பாங்கு) கூறுவதற்கும், இமாம் `இகாமத்' கூறுவதற்கும் உரிமை பெற்றவர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அவிவித்தார்.
நூல்: இப்னு அதீ
இது பலவீமான தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
குறிப்பு: அதாவது தொழுகை நேரம் வந்ததும் முஅத்தின் தான் அதைக் கவனித்து பாங்கு சொல்ல வேண்டும். தொழுகைக்கு நிற்கும்போது, இமாம்தான் `இகாமத்' கூறுவதற்கு உத்தரவிடும் பொறுப்பேற்க வேண்டும்.
217. وَلِلْبَيْهَقِيِّ نَحْوُهُ: عَنْ عَلِيٍّ مِنْ قَوْلِهِ.
217. அலீ(ரலி) வாயிலாக மேற்கண்ட ஹதீஸ் பைஹகீயிலும் பதிவிடப்பட்டுள்ளது.
218. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ} رَوَاهُ النَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
218. `பாங்கிற்கும், `இகாமத்'திற்கும் இடைப்பட்ட நேரத்தில் துஆ (கேட்டால்) அது நிராகரிக்கப்படுவதில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: நஸயீ
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்.
219. وَعَنْ جَابِرٍ- رَضِيَ اللهُ عَنْهُ- أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اَللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ} أَخْرَجَهُ الْأَرْبَعَةُ.بَـــابُ شُــرُوطِ الصَّلَاةِ
219. ``பாங்கை செவியுற்றுப் பின்பு, ``முழுமையான இந்த அழைப்பிற்குச் சொந்தக்காரனே! நிலையான தொழுகைக்கும் உரியவனே! முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்கு வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் எழுப்புவாயாக!'' என (பாங்கு துஆ கூறி) பிரர்த்திப்பவருக்கு என் பரிந்துரை (மறுமையில் உறுதியாக) ஆகுமானதாகிறது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார். என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னுமாஜா.
தொழுகையின் நிபந்தனைகள்
220. عَنْ عَلِيِّ بْنِ طَلْقٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلْيَنْصَرِفْ، وَلْيَتَوَضَّأْ، وَلْيُعِدِ الصَّلَاةَ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
220. ``உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் காற்று பிரிந்தால் அவர் தொழுகையை விட்டுவிட்டு, `உளூ'ச் செய்து, பின்னர், தொழுகையை திரும்ப தொழட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ இப்னு தல்க்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னு மாஜா, திர்மிதீ மற்றும் அபூ தாவூத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
221. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَقْبَلُ اللهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
221. ``பருவமடைந்த பெண்களின் தொழுகை (கழுத்து, தலை, மார்பு ஆகியவற்றை) மறைக்கும் முக்காட்டுத் துணி இன்றி ஏற்கப்படாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: திர்மிதீ, அபூ தாவூத், இப்னு மாஜா மற்றும் அஹ்மத்.
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
222. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: {إِنْ كَانَ الثَّوْبُ وَاسِعًا فَالْتَحِفْ بِهِ"} - يَعْنِي: فِي الصَّلَاةِ - وَلِمُسْلِمٍ: {فَخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ - وَإِنْ كَانَ ضَيِّقًا فَاتَّزِرْ بِهِ}. مُتَّفَقٌ عَلَيْهِ.
222. ஆடை விசாலமாய் இருப்பின், தொழும்போது அந்த ஆடையால் (உடல் முழுவதையும்) போர்த்திக் கொள்ளுமாறு தம்மிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
அதன் இரண்டு ஓரங்களையும் ஒன்றுக் கொன்று குறுக்காக (தோளில்) போட்டுக் கொள். அது சிறியதாய் இருந்தால் அதைக் கீழ் அங்கியாக அணிந்து கொள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஸ்லிமில் அதிகப்படியாக உள்ளது.
223. وَلَهُمَا مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {لَا يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ لَيْسَ عَلَى عَاتِقِهِ مِنْهُ شَيْءٌ}
223. ``உங்களில் ஒருவர், ஒரே துணியை மட்டும் அணிந்து தொழுதால், அவர் தன் தோளில் துணி இல்லாமல் தொழ வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
224. وَعَنْ أُمِّ سَلَمَةَ - رَضِيَ اللهُ عَنْهَا- ؛ أَنَّهَا سَأَلَتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَتُصَلِّي الْمَرْأَةُ فِي دِرْعٍ وَخِمَارٍ، بِغَيْرِ إِزَارٍ ؟ قَالَ: "إِذَا كَانَ الدِّرْعُ سَابِغًا يُغَطِّي ظُهُورَ قَدَمَيْهَا} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَصَحَّحَ الْأَئِمَّةُ وَقْفَهُ.
224. ``கீழாடை (தனியாக) இல்லாமல், தலைக் கழுத்தை மறைக்கும் முழு நீளமான ஒரே அங்கியுடனும், முகத்திரையுடனும் ஒரு பெண் தொழலாமா?'' என நான் வினவினேன்.
``ஆடை கீழே வரை நீண்டு பாதங்களை மறைத்துக் கொண்டால் (தொழலாம்)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது `மவ்கூஃப்' எனும் தரத்தில் அமைந்துள்ள உம்மு ஸலமா(ரலி) அவர்களின் கருத்தாகும் என அறிஞர்கள் கூறியுள்ளனர்.
225. وَعَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ مَظْلَمَةٍ، فَأَشْكَلَتْ عَلَيْنَا الْقِبْلَةُ، فَصَلَّيْنَا. فَلَمَّا طَلَعَتِ الشَّمْسُ إِذَا نَحْنُ صَلَّيْنَا إِلَى غَيْرِ الْقِبْلَةِ، فَنَزَلَتْ: (فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللهِ)} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ وَضَعَّفَهُ.
225. (மிகவும்) இருட்டான ஓர் இரவில், நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது எங்களுக்கு கிப்லா (திசையைக் கண்டறிவது) கடினமாகிவிட்டது. (ஒரு திசையை நோக்கி) நாங்கள் தொழுதுவிட்டோம். பின்னர் சூரியன் உதித்ததும், நாங்கள் கிப்லா அல்லாத திசை நோக்கி தொழுதுவிட்டோம் என்பது தெரிய வந்தது. அப்போது தான், ``நீங்கள் உங்கள் முகங்களை எங்கு திருப்பினும் அங்கு இறைவனின் முகத்தை அடைவீர்கள்'' (2:115) எனும் வசனம் அருளப்பட்டது என ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ இதனை பலவீனமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்.
226. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَقَوَّاهُ الْبُخَارِيُّ.
226. ``கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையில் கிப்லா உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
``இது வலுவான ஹதீஸ்'' என இமாம் புகாரீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
227. وَعَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.زَادَ الْبُخَارِيُّ: {يُومِئُ بِرَأْسِهِ، وَلَمْ يَكُنْ يَصْنَعُهُ فِي الْمَكْتُوبَةِ}.
227. ``எத்திசையை நோக்கி (வாகனம்) சென்றதோ அத்திசையை நோக்கி, அதன் மீது அமர்ந்த வண்ணம் இறைத்தூதர்(ஸல்) தொழுவதை நான் பார்த்துள்ளேன்'' என ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
``இறைத்தூதர்(ஸல்) தம் தலையின் சமிக்ஞை மூலம் இவ்வாறு தொழுதார்கள். ஆனால், கடமையான தொழுகையை இவ்வாறு வாகனத்தில் அமர்ந்தவாறு தொழமாட்டார்கள்'' எனும் வாசகம் புகாரீயில் அதிகப்படியாக உள்ளது.
228. وَلِأَبِي دَاوُدَ: مِنْ حَدِيثِ أَنَسٍ: {كَانَ إِذَا سَافَرَ فَأَرَادَ أَنْ يَتَطَوَّعَ اِسْتَقْبَلَ بِنَاقَتِهِ الْقِبْلَةِ، فَكَبَّرَ، ثُمَّ صَلَّى حَيْثُ كَانَ وَجْهَ رِكَابِهِ} وَإِسْنَادُهُ حَسَنٌ.
228. இறைத்தூதர்(ஸல்) பயணத்திலிருக்கும்போது நஃபில் தொழ நாடினால் தம்முடைய ஒட்டகத்தை கிப்லா திசையை நோக்கித் திருப்பி, தக்பீர் கூறுவார்கள். பின்னர் ஒட்டகம் எத்திசை நோக்கிச் செல்கிறாதோ, அதே திசையில் தொழுவார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
குறிப்பு: வாகனம் செல்லும் திசையை நோக்கி உபரித் தொழுகைகளைத் தொழலாம் என்பதையும், கடமையான தொழுகைகளை வாகனத்திலிருந்து இறங்கித்தான் தொழவேண்டும் என்பதையும் 227 மற்றும் 228 ஹதீஸ் கள் தெளிவுபடுத்துகின்றன. வாகனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும்போது மட்டுமே இச்சட்டம் பொருந்தும். வாகனம் நம் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, அதாவது பேருந்து, இரயில், வானவூர்தி போன்ற நம் கட்டுப்பாட்டில் இல்லாத வாகனங்களில் பயணிக்கும்போது, தொழுகையின் நேரம் தவறிவிடும் என அஞ்சினால் வாகனம் எத்திசையை நோக்கிச் சென்றாலும் அத்திசையை நோக்கியே கடமையான தொழுகைகளையும் தொழுது கொள்ளலாம் என்பதை அறிக!
229. وَعَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلَّا الْمَقْبَرَةَ وَالْحَمَّامَ} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَلَهُ عِلَّةٌ.
229. ``இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே (அல்லாஹ்வைத்) தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
230. وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُصَلَّى فِي سَبْعِ مَوَاطِنَ: اَلْمَزْبَلَةِ، وَالْمَجْزَرَةِ، وَالْمَقْبَرَةِ، وَقَارِعَةِ اَلطَّرِيقِ، وَالْحَمَّامِ، وَمَعَاطِنِ الْإِبِلِ، وَفَوْقَ ظَهْرِ بَيْتِ اللهِ} رَوَاهُ التِّرْمِذِيُّ وَضَعَّفَهُ.
230. 1. குப்பைக் கிடங்கு 2. பிராணிகளை அறுக்கும் இடம் 3. அடக்கத்தலம் 4. பொதுவழி 5. குளியலறை 6. ஒட்டகம் கட்டுமிடம் 7. கஅபத்துல்லாஹ்வின் மேற்பகுதி ஆகிய ஏழு இடங்களில் தொழ வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) தடை செய்துள்ளார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை பலவீனமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
231. وَعَنْ أَبِي مَرْثَدٍ اَلْغَنَوِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {لَا تُصَلُّوا إِلَى الْقُبُورِ، وَلَا تَجْلِسُوا عَلَيْهَا} رَوَاهُ مُسْلِمٌ.
231. ``அடக்கத் தலங்களின் அருகே தொழாதீர்கள்'' அதன் மீது உட்காராதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூ ற நான் கேட்டிருக்கிறேன் என அபூ மர்ஸத் அல் கனவீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
232. وَعَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا جَاءَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيَنْظُرْ، فَإِنْ رَأَى فِي نَعْلَيْهِ أَذًى أَوْ قَذَرًا فَلْيَمْسَحْهُ، وَلْيُصَلِّ فِيهِمَا} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
232. ``உங்களில் ஒருவர் காலணிகளுடன் இறைஇல்லத்திற்கு வந்து, அவற்றில் ஏதேனும் அசுத்தத்தைக் கண்டால், அதனைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அவற்றுடன் தொழட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) இதனை பலவீனமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்.
233. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا وَطِئَ أَحَدُكُمُ الْأَذَى بِخُفَّيْهِ فَطَهُورُهُمَا التُّرَابُ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
233. ``உங்கள் காலணிகளில் அசுத்தம் பட்டுவிட்டால் (அடுத்து வரும்) மண் அதனை தூய்மையாக்கிவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமனது எனக் குறிப்பிட்டுள்ளார்.
234. وَعَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ، إِنَّمَا هُوَ التَّسْبِيحُ، وَالتَّكْبِيرُ، وَقِرَاءَةُ الْقُرْآنِ} رَوَاهُ مُسْلِمٌ.
234. ``தொழுகையில் தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) கூறுதல், அல்லாஹ் அக்பர் என்று கூறுதல், குர்ஆன் ஓதுதல் ஆகியவற்றைத் தவிர்த்து வேறு எதுவும்ம் மக்கள் பேசுவது சரியல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஆவியா இப்னு ஹகம்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்