237. وَعَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِيهِ قَالَ: {رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، وَفِي صَدْرِهِ أَزِيْزٌ كَأَزِيْزِ الْمِرْجَلِ، مِنَ الْبُكَاءِ}أَخْرَجَهُ الْخَمْسَةُ، إِلَّا اِبْنَ مَاجَهْ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
237. தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெஞ்சில் அழுகையிலினால் சட்டி கொதிக்கும்போது ஏற்படுவது போன்ற சத்தம் ஏற்படுவதை நான் பார்த்துள்ளேன் என அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் தன் தந்தை வழியாக அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ.
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: நரகத்தின் கொடுமைகள் குறித்த வசனங்களை குர்ஆனிலிருந்து ஓதும்போது அழுகை வந்தால் தொழுகைக்கு எவ்விதத் தீங்கும் இல்லை என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.
238. وَعَنْ عَلَيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ لِي مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَدْخَلَانِ، فَكُنْتُ إِذَا أَتَيْتُهُ وَهُوَ يُصَلِّي تَنَحْنَحَ لِي} رَوَاهُ النَّسَائِيُّ، وَابْنُ مَاجَهْ.
238. நபி(ஸல்) அவர்களிடம் நான் செல்வதற்கு எனக்கு (தினமும்) இரண்டு நேரங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன. நான் அவர்களிடம் செல்லும்போது அவர்கள் தொழுது கொண்டிருந்தால் அஹ், அஹ் என்று செருமி சமிக்ஞை செய்வார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: நஸயீ, இப்னு மாஜா
239. وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {قُلْتُ لِبِلَالٍ: كَيْفَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرُدَّ عَلَيْهِمْ حِينَ يُسَلِّمُونَ عَلَيْهِ، وَهُوَ يُصَلِّي ؟ قَالَ: يَقُولُ هَكَذَا، وَبَسَطَ كَفَّهُ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.
239. ``இறைத்தூதர்(ஸல்) தொழுது கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஸலாம் சொல்லப்பட்டால் அவர்கள் எவ்வாறு பதில் கொடுப்பார்கள்?'' என பிலால்(ரலி) அவர்களிடம் நான் வினவினேன்.
அவர் தம் கையை நீட்டி, ``இவ்வாறு செய்வார்கள்'' என்று கூறினார் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது திர்மிதீயில் ஆதாரப்பூர்வமான எனப் பதிவிடப்பட்டுள்ளது.
240. وَعَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَهُوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتِ زَيْنَبَ، فَإِذَا سَجَدَ وَضَعَهَا، وَإِذَا قَامَ حَمَلَهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.وَلِمُسْلِمٍ: {وَهُوَ يَؤُمُّ النَّاسَ فِي الْمَسْجِدِ}.
240. ``உமாமா பின்த் ஜைனபை இறைத்தூதர்(ஸல்) தூக்கிக் கொண்டு தொழுவார்கள். ஸஜ்தாவிற்குப் போகும்போது இறக்கிவிடுவார்கள். பின்னர் நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள்'' என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
அப்போது, `இறைத்தூதர்(ஸல்) மக்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள் எனும் வாசகம் முஸ்லிமில் உள்ளது.
241. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اُقْتُلُوا الْأَسْوَدَيْنِ فِي الصَّلَاةِ: اَلْحَيَّةَ، وَالْعَقْرَبَ} أَخْرَجَهُ الْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.بَـــابُ سُــتْرَةِ الْمُصَــلِّي
241. ``தொழுகையில் பாம்பு மற்றும் தேள் ஆகிய இரண்டு கரும் ஊர்வினங்களைக் கண்டால் அவற்றைக் கொன்றுவிடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நூல்கள்: அபூ தாவூத் திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னுமாஜா.
இமாம் இப்னு ஹிப்பான் இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியவற்றைத் தொழுது கொண்டிருந்தாலும் அப்போதைக்கு தொழுகையை நிறுத்திவிட்டுத் அதைத் தடுக்க வேண்டும்.
242. عَنْ أَبِي جُهَيْمِ بْنِ الْحَارِثِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ مِنَ الْإِثْمِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.وَوَقَعَ فِي "اَلْبَزَّارِ" مِنْ وَجْهٍ آخَرَ: {أَرْبَعِينَ خَرِيفًا}
242. ``தொழுது கொண்டிருப்பவரின், குறுக்கே செல்வதால் ஏற்படும் பாவத்தை ஒருவர் அறிந்து கொண்டால், அதைவிட நாற்பது(ஆண்டுகளு)க்கு நிற்பதே மேல் எனக் கருதுவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஜுஹைம்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
பஸ்ஸாரின் மற்றோர் அறிவிப்பில் நாற்பது ஆண்டுகள் என உள்ளது.
243. وَعَنْ عَائِشَةَ - رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: {سُئِلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي غَزْوَةِ تَبُوكَ - عَنْ سُتْرَةِ الْمُصَلِّي. فَقَالَ: "مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
243. தொழுகைக்கு வைக்கும் தடுப்பு (சுத்ராவைப்) பற்றி தபூக் போரின்போது நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது.
``(ஒட்டக) வாகனத்தின் பிற்பகுதியிலுள்ள குச்சியின் அளவு'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
244. وَعَنْ سَبْرَةَ بْنِ مَعْبَدٍ اَلْجُهَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لِيَسْتَتِرْ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ وَلَوْ بِسَهْمٍ} أَخْرَجَهُ الْحَاكِمُ
244. ``உங்களில் ஒவ்வொருவரும் ஓர் அம்பையேனும் நட்டு வைத்து; தொழுகையில் ஒரு தடுப்பை (சுத்ராவை) ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸப்ரா இப்னு மஅபத்(ரலி) அறிவித்தார்.
நூல்: ஹாகிம்.
245. وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يَقْطَعُ صَلَاةَ الْمَرْءِ الْمُسْلِمِ - إِذَا لَمْ يَكُنْ بَيْنَ يَدَيْهِ مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ - اَلْمَرْأَةُ، وَالْحِمَارُ، وَالْكَلْبُ الْأَسْوَدُ... " اَلْحَدِيثَ.} وَفِيهِ {اَلْكَلْبُ الْأَسْوَدِ شَيْطَانٌ}. أَخْرَجَهُ مُسْلِمٌ.
245. ``ஓர் ஒட்டக சேணத்தின் பின்னாலுள்ள குச்சியளவு கூட தொழுகைக்கான தடுப்பு இல்லையெனில், பெண், கழுதை, கருப்பு நாய் ஆகியவை ஒரு முஸ்லிமின் தொழுகையை முறித்து விடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர் அல் கிஃபாரி(ரலி) அறிவித்தார்.
கருப்பு நாய் என்பது ஷைத்தானாகும் என்றும் (ஒர் அறிவிப்பில்) உள்ளது.
நூல்: முஸ்லிம்
246. وَلَهُ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ نَحْوُهُ دُونَ: "اَلْكَلْبِ"
246. `நாய்' என்பதைத் தவிர்த்து இந்த ஹதீஸ் அபூ ஹுரைரா(ரலி) வாயிலாகவும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
247. وَلِأَبِي دَاوُدَ، وَالنَّسَائِيِّ: عَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللهُ عَنْهُمَا- نَحْوُهُ، دُونَ آخِرِهِ. وَقَيَّدَ الْمَرْأَةَ بِالْحَائِضِ.
247. கடைசி வார்த்தையைத் தவிர்த்து வெறும் `பெண்' என்பதற்கு பதிலாக `மாதவிடாய்ப் பெண்' என்னும் வாசகத்துடன் மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் வாயிலாக அபூ தாவூத் மற்றும் நஸயீயில் இடம் பெற்றுள்ளது.
குறிப்பு: 245 முதல் 247 உள்ள ஹதீஸிற்கு விளக்கம் அவசியம்
248. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنَ النَّاسِ، فَأَرَادَ أَحَدٌ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ فَلْيَدْفَعْهُ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ} مُتَّفَقٌ عَلَيْهِ.وَفِي رِوَايَةٍ: {فَإِنَّ مَعَهُ الْقَرِينَ}.
248. உங்களில் ஒருவர் மக்களிடமிருந்து தடுப்பாக (சுத்ரா) ஒரு பொருளை வைத்துத் தொழுது கொண்டிருக்கும்போது, அதனுள் நுழைந்து செல்ல விரும்புபவரை உங்கள் கைகளால் (தொழுது கொண்டே) தடுங்கள். அவன் அதையும் மீறினால், (தொழுது கொண்டே) அவனைத் தள்ளிவிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக அவன் ஷைத்தான் ஆவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பில் ``அவனுடன் அவனுடைய துணைவன் (ஷைத்தான்) இருக்கிறான்'' என உள்ளது.
249. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَجْعَلْ تِلْقَاءَ وَجْهِهِ شَيْئًا، فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَنْصِبْ عَصًا، فَإِنْ لَمْ يَكُنْ فَلْيَخُطَّ خَطًّا، ثُمَّ لَا يَضُرُّهُ مَنْ مَرَّ بَيْنَ يَدَيْهِ} أَخْرَجَهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَلَمْ يُصِبْ مَنْ زَعَمَ أَنَّهُ مُضْطَرِبٌ، بَلْ هُوَ حَسَنٌ.
249. ``நீங்கள் தொழும்போது உங்கள் முகத்திற்கு முன்பாக எதையேனும் ஒரு பொருளை (சுத்ரா) தடுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதும் கிடைக்கவில்லையெனில் ஒரு குச்சியை நட்டுக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு கோட்டைக் கிழித்துக் கொள்ளுங்கள். பின்னர் தமக்கு முன்னால் நடந்து செல்பவரால் தமக்குத் தீங்கு ஏற்படாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், இப்னு மாஜா
இமாம் இப்னு ஹிப்பான் இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.. இந்த ஹதீஸில் குளறுபடியுள்ளது எனக் கருதுவோர் சரியாக எதையும் கூறவில்லை. இதன் `ஹஸன்' எனும் தரத்தில் உள்ளதாகும்.
250. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ، وَادْرَأْ مَا اِسْتَطَعْتَ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَفِي سَنَدِهِ ضَعْفٌ.بَابُ الْحَثِّ عَلَى الْخُشُوعِ فِي الصَّلَاةِ
250. ``தொழுகையை (முன்னால் கடந்து செல்லும்) எந்தப் பொருளும் முறித்துவிடாது. (இருப்பினும்) உங்களால் முடிந்த வரை தடுப்பு வைத்துத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானதாகும்.
உள்ளச்சத்துடன் தொழும் படி தூண்டுதல்
251. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ مُخْتَصِرًا} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.وَمَعْنَاهُ: أَنْ يَجْعَلَ يَدَهُ عَلَى خَاصِرَتِهِ
251. ``இடுப்பில் கை வைத்த நிலையில் தொழுவதை இறைத்தூதர்(ஸல்) தடை செய்துள்ளார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் இடுப்பில் கையை வைத்துக் கொள்வதாகும்.
252. وَفِي الْبُخَارِيِّ: عَنْ عَائِشَةَ - رَضِيَ اللهُ عَنْهَا- أَنَّ ذَلِكَ فِعْلُ الْيَهُودِ
252. ``(இடுப்பில் கை வைத்துத் தொழும்) இச்செயல் யூதர்கள் தங்களின் தொழுகையில் செய்யும் செயல்'' என ஆயிஷா(ரலி) கூறினார்.
253. وَعَنْ أَنَسٍ- رَضِيَ اللهُ عَنْهُ- أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا قُدِّمَ الْعَشَاءُ فَابْدَءُوا بِهِ قَبْلَ أَنْ تُصَلُّوا الْمَغْرِبَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
253. ``இரவு உணவு முன்னதாகவே கொண்டு வரப்பட்டால், மக்ரிப் தொழுவதற்கு முன்னரே அதனை (உண்ணத்) தொடங்குங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
254. وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا قَامَ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلَا يَمْسَحِ الْحَصَى، فَإِنَّ الرَّحْمَةَ تُوَاجِهُهُ} رَوَاهُ الْخَمْسَةُ بِإِسْنَادٍ صَحِيحٍ.وَزَادَ أَحْمَدُ: "وَاحِدَةً أَوْ دَعْ"
254. ``உங்களில் ஒருவர் தொழுகைக்கு நின்றால், அவர் (ஸஜ்தாச் செய்யும் இடத்தில் கிடக்கும்) சிறுகற்களை அகற்ற வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அதில் அல்லாஹ்வின் அருள் உள்ளது.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னு மாஜா.
இதனை ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடரில் அறிவித்துள்ளனர்.
``(அவசியத் தேவை எனில்) ஒருமுறை செய்து கொள்ளட்டும் அல்லது அப்படியே விட்டுவிடட்டும்'' என்னும் வாசகம் அஹ்மதில் அதிகப்படியாக உள்ளது.
255. وَفِي "اَلصَّحِيحِ" عَنْ مُعَيْقِيبٍ نَحْوُهُ بِغَيْرِ تَعْلِيلٍ.
255. முஅய்கிப் (ரலி) வாயிலாக இதே போன்ற ஹதீஸ் உள்ளது. ஆனால், (அல்லாஹ்வின் அருள் உள்ளது) என்ற விளக்கம் அதில் இல்லை.
256. عَنْ عَائِشَةَ --رَضِيَ اللهُ عَنْهَا-- قَالَتْ: {سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الِالْتِفَاتِ فِي الصَّلَاةِ ؟ فَقَالَ: "هُوَ اِخْتِلَاسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلَاةِ الْعَبْدِ} رَوَاهُ الْبُخَارِيُّ.*وَلِلتِّرْمِذِيِّ: عَنْ أَنَسٍ - وَصَحَّحَهُ - {إِيَّاكَ وَالِالْتِفَاتَ فِي الصَّلَاةِ، فَإِنَّهُ هَلَكَةٌ، فَإِنْ كَانَ فَلَا بُدَّ فَفِي التَّطَوُّعِ}
256. ``தொழுது கொண்டிருக்கும் நிலையில் திரும்பிப் பார்த்தல் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் நான் வினவினேன்.
``அது அடியானின் (கவனம் சிதறும்போது) அவனுடைய தொழுகையில் ஷைத்தான் செய்யும் திருட்டாகும்'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
``தொழுகையில் திரும்பிப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அது அழிவைத் தரும் பின்னர் அவசியம் ஏதும் ஏற்பட்டால் நஃபில் (தொழுகையில்) திரும்பிப் பார்த்துக் கொள்ளலாம்'' என அனஸ் (ரலி) வாயிலாக திர்மிதீயில் உள்ளது.
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.