475. وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا، {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَجْلِسُ، ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ قَائِمًا، فَمَنْ أَنْبَأَك َأَنَّهُ كَانَ يَخْطُبُ جَالِسًا، فَقَدْ كَذَبَ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
475. இறைத்தூதர்(ஸல்) ஜுமுஆ நாளில்) நின்று கொண்டு உரையாற்றுவார்கள். பின்னர் (சிறிது நேரம்) அமர்வார்கள். பின்னர், எழுந்து நின்று உரையாற்றுவாக்hள். அவர்கள் அமர்ந்து உரையாற்றினார்கள் என உனக்குச் செய்தி கொடுத்தவர் பொய்யே உரைத்தார் என ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
476. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ، احْمَرَّتْ عَيْنَاهُ، وَعَلَا صَوْتُهُ، وَاشْتَدَّ غَضَبُهُ، حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ: صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ، وَيَقُولُ: "أَمَّا بَعْدُ، فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ} رَوَاهُ مُسْلِمٌ.وَفِيْ رِوَايَةٍ لَهُ كَانَتْ خُطْبَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ: {يَحْمَدُ اللهُ وَيُثْنِي عَلَيْهِ، ثُمَّ يَقُولُ عَلَى إِثْرِ ذَلِكَ، وَقَدْ عَلَا صَوْتُهُ}وَفِي رِوَايَةٍ لَهُ: {مَنْ يَهْدِه ِاللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ}.وَلِلنَّسَائِيِّ: {وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ}.
476. இறைத்தூதர்(ஸல்) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும். சத்தம் உயர்ந்து விடும். கோபம் அதிகரித்துவிடும். காலையிலோ, மாலையிலோ தாக்குதல் நடத்த வரும் பகைவர்களைப் பற்றி ஒரு படை குறித்து எச்சரிப்பவரைப்போல உரையாற்றுவார்கள். பின்னர், ``வேதத்தில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் வழியாகும். (மார்க்கத்தில்) புதிதாகத் தோற்றுவிக்கப்படும் ஒவ்வொரு செயலும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும்'' என்று கூறுவார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், வெள்ளிக்கிழமை உரையில், இறைத்தூதர்(ஸல்) அல்லாஹ்வைப் புகழ்ந்து பாராட்டி, அதற்குப் பின்னர் உரத்த குரலில் உரையாற்றுவார்கள் என உள்ளது.
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், ``யாரை அல்லாஹ் நேர்வழிப்படுத்தியவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. இன்னும், அல்லாஹ் வழிகெடுத்தவரை நேர்வழிப்படுத்துபவர் யாரும் இல்லை'' என உள்ளது.
நஸயீயில் ``ஒவ்வொரு வழிகேடும் நரகத்தையே சேரும்'' என உள்ளது.
477. وَعَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {إِنَّ طُولَ صَلَاةِ الرَّجُلِ، وَقِصَرَ خُطْبَتِهِ مَئِنَّةٌ مِنْ فِقْهِهِ} رَوَاهُ مُسْلِمٌ.
477. ``தொழுகையை நீட்டி, உரையைச் சுருக்கிக் கொள்வது மார்க்க அறிவின் அடையாளமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுள்றேன் என அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
478. وَعَنْ أُمِّ هِشَامٍ بِنْتِ حَارِثَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {مَا أَخَذْتُ: "ق وَالْقُرْآنِ الْمَجِيدِ"، إِلَّا عَنْ لِسَانِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَؤُهَا كُلَّ جُمُعَةٍ عَلَى الْمِنْبَرِ إِذَا خَطَبَ النَّاسَ} رَوَاهُ مُسْلِمٌ.
478. இறைத்தூதர்(ஸல்) காஃப் வல் குர்ஆனில் மஜீத் (50 வது அத்தியாயம்) என்பதை ஒவ்வொரு ஜுமுஆவிலும் மக்களுக்கு உரையாற்றும்போது மிம்பரில் இருந்தபடி ஓதுவார்கள். நான் இதனை (அங்கு) அவர்களிடமே தவிர வேறு யாரிடமும் கேட்டு மனனம் செய்யவில்லை என உம்மு ஹிஷாம் பின்த் ஹாரிஸா இப்னு அன்னுஃமான்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
479. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ تَكَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ فَهُوَ كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا، وَالَّذِيْ يَقُولُ لَهُ: أَنْصِتْ، لَيْسَتْ لَهُ جُمُعَةٌ} رَوَاهُ أَحْمَدُ، بِإِسْنَادٍ لَا بَأْسَ بِهِ.وَهُوَ يُفَسِّرُ. حَدِيثَ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ فِي "اَلصَّحِيحَيْنِ" مَرْفُوعًا:
479. ``ஜுமுஆ நாளன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், பேசுபவர் (வேத) புத்தகங்களைச் சுமக்கும் கழுதை போலாவார். மேலும், அவரிடம்; `அமைதியாய் இரு!'' எனக் கூறியவருக்கும் ஜுமுஆ இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இதன் அறிவிப்பாளர் தொடரில் எவ்விதக் குறையுமில்லை. மேலும், இது அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக புகாரீ மற்றும் முஸ்லிமில் அறிவிக்கப்பட்டுள்ள பின் வரும் நபிமொழிக்கு விளக்கமாக அமைந்துள்ளது.
480. {إِذَا قُلْتَ لِصَاحِبِكَ: أَنْصِتْ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامِ يَخْطُبُ، فَقَدْ لَغَوْتَ}.
480. ``ஜுமுஆ நாளன்று இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில் உன் நண்பரிடம், ``அமைதியாக இரு!'' என நீர் கூறினால், உன் ஜுமுஆவை நீ வீணடித்துவிட்டாய்''
நூல்: புகாரீ, முஸ்லிம்
481. وَعَنْ جَابِرٍ قَالَ: {دَخَلَ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ. فَقَالَ: "صَلَّيْتَ؟" قَالَ: لَا. قَالَ: "قُمْ فَصَلِّ رَكْعَتَيْنِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
481. ஜுமுஆ நாளன்று (இறைஇல்லத்தில்) இறைத்தூதர்(ஸல்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் (உள்ளே) நுழைந்தார். அவரிடம் ``நீர் தொழுதுவிட்டீரா?'' என இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``இல்லை'' என அவர் கூறினார்.
``ஏழு! இரண்டு ரக்அத்துக்கள் தொழு!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
482. وَعَنِ ابْنِ عَبَّاسٍ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي صَلَاةِ الْجُمُعَةِ سُورَةَ الْجُمُعَةِ، وَالْمُنَافِقِينَ} رَوَاهُ مُسْلِمٌ.
482. இறைத்தூதர்(ஸல்) ஜுமுஆத் தொழுகையில் சூரத்துல் ஜுமுஆ மற்றும் சூரத்துல் முனாஃபிகீன் ஆகியவற்றை ஓதுபவராக இருந்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
483. وَلَهُ: عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ: {كَانَ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ وَفِي الْجُمُعَةِ: بِـ "سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى"، وَ: "هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ"}.
483. இறைத்தூதர்(ஸல்) இரண்டு பெருநாள்கள் மற்றும் ஜுமுஆவில் `ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா மற்றும் `ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா' (ஆகிய இரண்டு அத்தியாயங்களை) ஓதுவார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
484. وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِيدَ، ثُمَّ رَخَّصَ فِي الْجُمُعَةِ، فَقَالَ: "مَنْ شَاءَ أَنْ يُصَلِّيَ فَلْيُصَلِّ"} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا اَلتِّرْمِذِيَّ، وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ.
484. (பெருநாளும் ஜுமுஆ நாளும் ஒரே நாளாக அமைந்துவிடும் போது) இறைத்தூதர்(ஸல்) பெருநாள் தொழுகையை தொழுதுவிட்டு ஜுமுஆவிற்கு சலுகை அளித்தார்கள். பின்னர், `` (ஜுமுஆ) தொழ விரும்புபவர் தொழுது கொள்ளட்டும்'' என்று கூறினார்கள் என ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
485. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا صَلَّى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبَعًا} رَوَاهُ مُسْلِمٌ.
485. ``உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுதுவிட்டால், அதன் பின்னர், நான்கு ரக்அத்துகள் (சுன்னத்) தொழட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்
486. وَعَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّ مُعَاوِيَةَ قَالَ لَهُ: {إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ، حَتَّى تُكَلَّمَ أَوْ تَخْرُجَ، فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا بِذَلِكَ: أَنْ لَا نُوصِلَ صَلَاةً بِصَلَاةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ} رَوَاهُ مُسْلِمٌ.
486. ``நீ ஜுமுஆ தொழுதுவிட்டால், நீ பேசாத வரை அல்லது (இறைஇல்லத்தை விட்டு) வெளியேறாத வரை அதனுடன் வேறு எந்தத் தொழுகையையும் இணைக்காதே! நாங்கள் பேசாத வரை அல்லது வெளியேறாத வரை ஒரு தொழுகையுடன் மற்றொரு தொழுகையை இணைக்கக் கூடாது என்றே இறைத்தூதர்(ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்பதையும் ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
487. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنِ اغْتَسَلَ، ثُمَّ أَتَى الْجُمُعَةَ، فَصَلَّى مَا قُدِّرَ لَهُ، ثُمَّ أَنْصَتَ، حَتَّى يَفْرُغَ اَلْإِمَامُ مِنْ خُطْبَتِهِ، ثُمَّ يُصَلِّي مَعَهُ: غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى، وَفَضْلُ ثَلَاثَةِ أَيَّامٍ} رَوَاهُ مُسْلِمٌ.
487. ``குளித்து, பின்னர் ஜுமுஆவிற்கு வந்து, தம்மால் இயன்ற அளவு தொழுதுவிட்டு, பின்னர் இமாம் உரையை முடிக்கும் வரையிலும் அமைதியாய் இருந்து, பின்னர், அவருடன் தொழுபவரின் அந்த ஜுமுஆவிற்கும் அதற்கு அடுத்து வரும் ஜுமுஆவிற்கும் இடையில் அவர் செய்யும் சிறுபிழைகள் மற்றும் மேலதிகமாக மூன்று நாள்கள் அவர் செய்யும் சிறுபிழைகள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
488. وَعَنْهُ؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ: {فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي، يَسْأَلُ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ، وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا} مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: {وَهِيَ سَاعَةٌ خَفِيفَةٌ}.
488. ``இதில் ஒரு நேரம் இருக்கிறது; ஒரு முஸ்லிம் அடியான் தொழுதபடி நின்றிருக்கும் நேரம் அதன் நேரத்துடன் ஒத்து அமைந்துவிடுமாயின், அப்போது அவன் அல்லாஹ்விடம் அவன் கேட்பதை அடல்லாஹ் அவனுக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை என்று ஜுமுஆ நாள் குறித்து இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். இன்னும் தம் கையால் அதன் அளவைக் குறைவாகக் சுட்டிக் காண்பித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
``அந்த நேரம் சொற்பமான நேரம்'' என முஸ்லிமில் உள்ளது.
489. وَعَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ} رَوَاهُ مُسْلِمٌ، وَرَجَّحَ اَلدَّارَقُطْنِيُّ أَنَّهُ مِنْ قَوْلِ أَبِي بُرْدَةَ.
489. ``அந்நேரம் இமாம் (மிம்பரில்) அமர்ந்ததிலிருந்து தொழுகையை முடிக்கும் வரை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றேன். என அபூ புர்தா தம் தந்தை வாயிலாக அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
இது அபூ புர்தாவின் கூற்று என்பதே சரி என இமாம் தாரகுத்னீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
490. وَفِي حَدِيثِ عَبْدِ اللهِ بْنِ سَلَامٍ عِنْدَ ابْنِ مَاجَهْ.
490. ``அந்நேரம் அஸ் ர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரை'' என அப்துல்லாஹ் இப்னு ஸலாம் வாயிலாக இப்னு மாஜாவில் உள்ளது.
491. وَعَنْ جَابِرِ عِنْدَ أَبِي دَاوُدَ، وَالنَّسَائِيّ ِ: {أَنَّهَا مَا بَيْنَ صَلَاةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ}. وَقَدْ اِخْتُلَفَ فِيهَا عَلَى أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ قَوْلًا، أَمْلَيْتُهَا فِي "شَرْحِ الْبُخَارِيِّ".
491. ``அந்நேரம் அஸ் ர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரை'' என ஜாபிர்(ரலி) வாயிலாக அபூ தாவூத் மற்றும் நஸயீயில் உள்ளது.
இது சம்பந்தமாக 40க்கும் மேற்பட்ட மாறுபட்ட கூற்றிரனை புகாரீயின் விரிவுரையில் நான் இடம் பெறச் செய்துள்ளேன் என தொகுப்பாசிரியர் இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
492. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {مَضَتِ السُّنَّةُ أَنَّ فِي كُلِّ أَرْبَعِينَ فَصَاعِدًا جُمُعَةً} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ.
492. நாற்பது அல்லது அதற்கும் அதிகமான நபர்கள் இருந்தாலே ஜுமுஆத் தொழுகை உண்டு என்பது சுன்னத்தாய் இருந்தது என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என இமாம் தாரகுத்னீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
493. وَعَنْ سَمُرَةَ بنِ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْتَغْفِرُ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ كُلَّ جُمُعَةٍ} رَوَاهُ الْبَزَّارُ بِإِسْنَادٍ لَيِّنٍ.
493. ஒவ்வொரு ஜுமுஆவிலும், முஃமினான (இறைநம்பிக்கையுள்ள) ஆண்களுக்கும், பெண்களுக்கும் இறைத்தூதர்(ஸல்) பாவமன்னிப்புக் கோருபவர்களாய் இருந்தார்கள் என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நூல்: பஸ்ஸார்
இதன் அறிவிப்பாளர் தொடர் `லய்யின்' எனும் பலவீனமானது என இமாம் பஸ் ஸார்(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
494. وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي الْخُطْبَةِ يَقْرَأُ آيَاتٍ مِنَ الْقُرْآنِ، وَيُذَكِّرُ النَّاسَ} رَوَاهُ أَبُو دَاوُدَ. وَأَصْلُهُ فِي مُسْلِمٍ.
494. குத்பா எனும் உரையில், இறைத்தூதர்(ஸல்) குர்ஆன் வசனங்களில் சிலவற்றை ஓதுவார்கள். மேலும், மக்களுக்கு அறிவுரை வழங்குவார்கள் என ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது.