763. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {نَحَرْتُ هَاهُنَا، وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ، فَانْحَرُوا فِي رِحَالِكُمْ، وَوَقَفْتُ هَاهُنَا وَعَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ، وَوَقَفْتُ هَاهُنَا وَجَمْعٌ كُلُّهَا مَوْقِفٌ} رَوَاهُ مُسْلِمٌ.
763. ``நான் இந்த இடத்தில் குர்பானீ கொடுத்தேன். மினாவில் எல்லா இடங்களிலும் குர்பானீ கொடுக்கலாம். நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே குர்பானீ கொடுத்துக் கொள்ளுங்கள். நான் இங்கு தங்கினேன். அரஃபா மைதானம் முழுவதும் தங்கும் இடம்தான். நான் இங்கு தங்கினேன். முஸ்தலிஃபா முழுவதுமே தங்கும் இடம்தான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
764. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا جَاءَ إِلَى مَكَّةَ دَخَلَهَا مِنْ أَعْلَاهَا، وَخَرَجَ مِنْ أَسْفَلِهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
764. ``இறைத்தூதர்(ஸல்) மக்காவில் அதன் மேல் திசையில் நுழைந்து கீழ்த்திசை வழியாக வெளியேறினார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
765. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: {أَنَّهُ كَانَ لَا يَقْدُمُ مَكَّةَ إِلَّا بَاتَ بِذِي طُوَى حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ، وَيَذْكُرُ ذَلِكَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
765. மக்காவில், தாம் நுழையும் போதெல்லாம் `தூத்துவா' எனும் இடத்தில் தங்கி இரவைக் கழித்துவிட்டு காலையானதும் குளித்தப் பின்னரே, மக்காவில் நுழைந்ததாகவும், அது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறியதாகவும் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
766. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: {أَنَّهُ كَانَ يُقَبِّلُ الْحَجَرَ الْأَسْوَدَ وَيَسْجُدُ عَلَيْهِ} رَوَاهُ الْحَاكِمُ مَرْفُوعًا، وَالْبَيْهَقِيُّ مَوْقُوفًا.
766. இறைத்தூதர்(ஸல்) ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். இன்னும், அதன் மீது தலையை வைத்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ``மர்ஃபூஃ'' எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் பைஹகீ(ரஹ்) இதனை `மவ்கூஃப்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
767. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: أَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَنْ يَرْمُلُوا ثَلَاثَةَ أَشْوَاطٍ وَيَمْشُوا أَرْبَعًا، مَا بَيْنَ الرُّكْنَيْنِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
767. (கஅபாவை தவாஃப் செய்யும்போது) மும்முறை விரைவாகவும், ஹஜருல் அஸ்வத்திற்கும், ருக்னுல் யமானிக்கும் நடுவில் நான்கு முறை சாதாரணமாக நடந்தும் வலம் வருமாறு இறைத்தூதர்(ஸல்) தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
768. عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا (أنَّهُ كَانَ إِذَا ظَافَ بِالْبَيْتِ الطَّوَافَ الْأَوَّلَ خَبَّ ثَلَاثًا وَمَشَى أَرْبَعًا. وَفِيْ رِوَايَةٍ: رَأيْتُ رَسُوُلَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ظَافَ فِي الْحَجِّ أوِ الْعُمْرَةِ أوَّلَ مَا يَقْدُمُ فَإنَّهُ يَسْعَى ثَلاَثَةَ أطْوافٍ بِالْبَيْتِ وَيَمْشِيْ أرْبَعَةً) مُتَّفَقٌ عَلَيْهِ.
768. இறைத்தூதர்(ஸல்) தவாஃப் செய்யும்போது முதல் மும்முறை வேகமாகவும், பின்னர், நான்கு முறை சாதாரணமாகவும் நடந்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பின்படி, ஹஜ் மற்றும் உம்ராவில். இறைத்தூதர்(ஸல்) அவர்களை தவாஃப் செய்கையில் நான் பார்த்தேன். அவர்கள் முதல் மும்முறை வேகமாகவும், பின்னர் நான்கு முறை சாதாரணமாகவும் நடந்தார்கள் என உள்ளது.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
769. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَمْ أَرَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُ مِنَ الْبَيْتِ غَيْرَ الرُّكْنَيْنِ الْيَمَانِيَيْنِ} رَوَاهُ مُسْلِمٌ.
769. இறைத்தூதர்(ஸல்) ஹஜ்ருல் அஸ்வத் மற்றும் ருக்னுல் யமானியைத் தவிர வேறு எதையும் முத்தமிட நான் பார்க்கவில்லை என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
770. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ قَبَّلَ الْحَجَرَ الْأَسْوَدَ فَقَالَ: إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لَا تَضُرُّ وَلَا تَنْفَعُ، وَلَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
770. நிச்சயமாக உமர்(ரலி) ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்டபோது, ``நீ கல் என்பதை நான் நன்றாகவே அறிவேன். உன்னால் தீங்கும் செய்ய முடியாது. பலனும் தரமுடியாது. இறைத்தூதர்(ஸல்) உன்னை முத்தமிட நான் பார்க்கவில்லை என்றால் நான் உன்னை முத்தமிட மாட்டேன்'' என்று கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
771. وَعَنْ أَبِي الطُّفَيْلِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَطُوفُ بِالْبَيْتِ وَيَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ مَعَهُ، وَيُقْبِّلُ الْمِحْجَنَ} رَوَاهُ مُسْلِمٌ.
771. இறைத்தூதர்(ஸல்) பைத்துல்லாஹ்வை வலம் வரும்போது, அங்குள்ள கல்லைத் தம் கைத்தடியால் தொட்டு முத்தமிட்டத்தை நான் பார்த்தேன் என அபூ துஃபைல்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
772. وَعَنْ يَعْلَى بْنَ أُمَيَّةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {طَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُضْطَبِعًا بِبُرْدٍ أَخْضَرَ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ.
772. இறைத்தூதர்(ஸல்) ஒரு பச்சை நிறப் போர்வையை இடத் தோளை மூடியபடி வலப்பக்க அக்குளில் நுழைந்து வலத் தோள் தெரிய தவாஃப் செய்தார்கள் என யஃலா இப்னு உமையா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
773. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ يُهِلُّ مِنَّا اَلْمُهِلُّ فَلَا يُنْكِرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ مِنَّا الْمُكَبِّرُ فَلَا يُنْكِرُ عَلَيْهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
773. எங்களில் `தஹ்லீல்' சொல்பவர்கள் தஹ்லீலும், `தக்பீர்' சொல்பவர்கள் தக்பீரும் கூறிக் கொண்டிருந்தார்கள். அதற்காக அவர்கள் கண்டிக்கப்படவில்லை என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: தஹ்லீல் என்பது லா இலாஹ இல்லல்லாஹ் என்பதாகும். தக்பீர் என்பது அல்லாஹு அக்பர் என்பதாகும்.
774. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {بَعَثَنِي رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي اَلثَّقَلِ، أَوْ قَالَ فِي اَلضَّعَفَةِ مِنْ جَمْعٍ بِلَيْلٍ} مُتَّفَقٌ عَلَيْهِ.
774. பயணச்சுமைகளுடன் (அதனைப் பராமரிக்கவும்) அல்லது பலவீனர்களுடன் முஸ்தலிஃபாவிலிருந்து இரவு நேரத்திலேயே என்னை இறைத்தூதர்(ஸல்) அனுப்பி வைத்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
775. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {اِسْتَأْذَنَتْ سَوْدَةُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْمُزْدَلِفَةِ: أَنْ تَدْفَعَ قَبْلَهُ، وَكَانَتْ ثَبِطَةً -تَعْنِي: ثَقِيلَةً- فَأَذِنَ لَهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
775. இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னதாகத் மினா திரும்புவதற்கு முஸ்தலிஃபா இரவில் ஸவ்தா(ரலி) அனுமதி கேட்டார். ஏனெனில், அவர் மிகவும் தடித்தவராக (அதனால் நின்று நின்று செல்பவராக) இருந்தார். எனவே, அவருக்கு இறைத்தூதர்(ஸல்) சலுகை அளித்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
776. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ لَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَرْمُوا الْجَمْرَةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ، وَفِيهِ اِنْقِطَاعٌ.
776. ``சூரியன் உதயமாகாத வரை கல் எறியாதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இது `முன்கதிஃ' எனும் அறிவிப்புத் தொடர் துண்டிக்கப்பட்டதாக உள்ளது.
777. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأُمِّ سَلَمَةَ لَيْلَةَ النَّحْرِ، فَرَمَتِ الْجَمْرَةَ قَبْلَ الْفَجْرِ، ثُمَّ مَضَتْ فَأَفَاضَتْ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَإِسْنَادُهُ عَلَى شَرْطِ مُسْلِمٍ.
777. உம்முல் முஃமினீன் உம்மு ஸலமா(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) குர்பானீ (துல்ஹஜ் 10ன்) இரவன்று அனுப்பினார்கள். அவர் ஃபஜ்ருக்கு முன்னதாக கல் எறிந்தார். பின்னர், சென்று அவர் `தவாஃபுல் இஃபாளா'ச் செய்தார் என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது முஸ்லிமின் நிபந்தனைகளுக்குட்பட்ட ஹதீஸ் ஆகும்.
778. وَعَنْ عُرْوَةَ بْنِ مُضَرِّسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ شَهِدَ صَلَاتَنَا هَذِهِ -يَعْنِي: بِالْمُزْدَلِفَةِ- فَوَقَفَ مَعَنَا حَتَّى نَدْفَعَ، وَقَدْ وَقَفَ بِعَرَفَةَ قَبْلَ ذَلِكَ لَيْلاً أَوْ نَهَارًا، فَقَدْ تَمَّ حَجُّهُ وَقَضَى تَفَثَهُ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ خُزَيْمَةَ.
778. முஸ்தலிஃபாவில் நம்முடன் இந்தத் தொழுகையை (ஃபஜ்ரை) தொழுதவர், அதற்கு முன் நம்முடன் அரஃபா சென்று இரவு அல்லது பகலில் தங்கியிருந்தால் அவரின் ஹஜ் முழுமையாகிவிட்டது. அவர் தம் அழுக்குகளைப் போக்கிக் கொண்டார் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உர்வா இப்னு முனர்ரஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ மற்றும் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்..
779. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {إِنَّ الْمُشْرِكِينَ كَانُوا لَا يُفِيضُونَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَيَقُولُونَ: أَشْرِقْ ثَبِيرُ وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالَفَهُمْ، ثُمَّ أَفَاضَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ} رَوَاهُ الْبُخَارِيُّ.
779. இணைவைப்பாளர்கள் சூரியன் உதயமாகாதவரை (முஸ் தலிஃபாவிலிருந்து) திரும்பமாட்டார்கள். ``ஸபீர் மலை ஒளிரட்டும் (சூரியன் உதிக்கட்டும்)'' என்றும் அவர்கள் கூறுவார்கள். ஆனால், அவர்களுக்கு மாறாக, சூரியன் உதிக்கும் முன்பே இறைத்தூர்(ஸல்) திரும்பிவிடுவார்கள் என உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
780. وَعَنِ ابْنِ عَبَّاسٍ وَأُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُمْ قَالَا: {لَمْ يَزَلِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
780. இறைத்தூதர்(ஸல்) ஜம்ரத்துல் அகபா) கல் எறியும் வரை தொடர்ந்து, `லப்பைக்' என தல்பியா முழங்குபவர்களாய் இருந்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) மற்றும் உஸாமா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்: புகாரீ
781. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ جَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِهِ، وَمِنًى عَنْ يَمِينِهِ، وَرَمَى الْجَمْرَةَ بِسَبْعِ حَصَيَاتٍ وَقَالَ: هَذَا مَقَامُ الَّذِيْ أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
781. கஅபத்துல்லாஹ் தமக்கு இடப்புறமாகவும் மினாவை தமக்கு வலப்புறமாகவும் ஆக்கிக் கொண்டு நின்று, ஜம்ராவின மீது ஏழு கற்களை அப்துல்லாஹ் இப்னு மஸ் வூத்(ரலி) எறிந்தார்கள். பின்னர், ``இது சூரத்துல் பகரா இறக்கப்பட்டவர் நின்று கல்லெறிந்த இடமாகும்'' எனக் கூறினார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
782. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {رَمَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْجَمْرَةَ يَوْمَ النَّحْرِ ضُحًى، وَأَمَّا بَعْدَ ذَلِكَ فَإِذَا زَادَتِ الشَّمْسُ} رَوَاهُ مُسْلِمٌ.
782. குர்பானீ நாளன்று சூரியன் உயர்ந்த முற்பகல் நேரத்திலும், அதன் பின்னர் மற்ற நாள்களில், சூரியன் உச்சி சாய்ந்ததும் ஜம்ராவின் மீது இறைத்தூதர்(ஸல்) கல் எறிந்தார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்