788. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَيْسَ عَلَى النِّسَاءِ حَلْقٌ، وَإِنَّمَا يُقَصِّرْنَ} رَوَاهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ حَسَنٍ.
788. ``மொட்டையடித்தல் பெண்களுக்கு (கடமை) இல்லை. அவர்கள் முடியைக் குறைத்துக் கொண்டாலே போதும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இமாம் அபூ தாவூத்(ரஹ்) `ஹஸன்' எனும் தரத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
789. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: {أَنَّ الْعَبَّاسَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللهُ عَنْهُ اِسْتَأْذَنَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيتَ بِمَكَّةَ لَيَالِيَ مِنًى، مِنْ أَجْلِ سِقَايَتِهِ، فَأَذِنَ لَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
789. மினாவில் தங்கும் இரவுகளில் (அங்கு தங்காமல்) மக்களுக்கு ஜம்ஜம் தண்ணீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்குவதற்கு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அனுமதி கேட்டார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அனுமதித்தார்கள் என உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
790. وَعَنْ عَاصِمِ بْنِ عَدِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْخَصَ لِرُعَاة الْإِبِلِ فِي الْبَيْتُوتَةِ عَنْ مِنًى، يَرْمُونَ يَوْمَ النَّحْرِ، ثُمَّ يَرْمُونَ الْغَدِ لِيَوْمَيْنِ، ثُمَّ يَرْمُونَ يَوْمَ النَّفْرِ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ.
790. ஒட்டகம் மேய்ப்பவர் பத்தாம் நாள் கல் எறிவதற்காக அன்று இரவு மினாவில் தங்காமல் வேறு இடத்தில் தங்குவதற்கும் பத்தாம் நாளுக்குப் பின்னர் இரண்டு நாள்களில் எறியவேண்டிய கற்களை (மினாவிலிருந்து) புறப்படும் (பதிமூன்றாம்) நாளன்று எறிவதற்கும் இறைத்தூதர்(ஸல்) அனுமதி அளித்தார்கள் என ஆஸிம் இப்னு ஆதீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
791. وَعَنْ أَبِي بِكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {خَطَبَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ...} اَلْحَدِيثَ. مُتَّفَقٌ عَلَيْهِ.
791. குர்பானீ நாளன்று எங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) உரை நிகழ்த்தினார்கள் என அபூ பக்ரா (ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
792. وَعَنْ سَرَّاءَ بِنْتِ نَبْهَانَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {خَطَبَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الرُّءُوسِ فَقَالَ: "أَلَيْسَ هَذَا أَوْسَطَ أَيَّامِ التَّشْرِيقِ؟"} اَلْحَدِيثَ رَوَاهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ حَسَنٍ.
792. தலையை மழிக்கும் நாளன்று இறைத்தூதர்(ஸல்) எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ``இது அய்யாமுத் தஷ்ரீக்கின் நடு நாள் அல்லவா?'' எனக் கூறினார்கள் என ஸர்ரா பின்த்து நப்ஹான்(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்: அபூ தாவூத்
இதன் அறிவிப்புத் தொடர் ``ஹஸன்'' என இமாம் அபூ தாவூத்(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
793. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: {طَوَافُكِ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ يَكْفِيكَ لِحَجِّكِ وَعُمْرَتِكِ} رَوَاهُ مُسْلِمٌ.
793. ``இறைஇல்லம் கஅபாவை நீ ஒரு முறை வலம் வருவதும், ஸஃபா மர்வாவுக்கு இடையே ஓடுவதும், உன் ஹஜ் மற்றும் உம்ராவிற்குப் போதுமானது'' என்று இறைத்தூதர்(ஸல்) என்னிடம் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
794. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَمْ يَرْمُلْ فِي السَّبْعِ الَّذِيْ أَفَاضَ فِيهِ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا التِّرْمِذِيَّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
794. இறைத்தூதர்(ஸல்) தவாஃபுஸ் ஸியாரத் செய்தபோது ஏழு சுற்றுகளிலும் விரைவாகச் செல்லவில்லை என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னுமாஜா.
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
795. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ، ثُمَّ رَقَدَ رَقْدَةً بِالْمُحَصَّبِ، ثُمَّ رَكِبَ إِلَى الْبَيْتِ فَطَافَ بِهِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
795. இறைத்தூதர்(ஸல்) முஹஸ்ஸப் எனும் இடத்தில் லுஹர், அஸர், மக்ரிப் மற்றும் இஷா தொழுதார்கள். இன்னும் சிறிதும் நேரம் அங்கு தூங்கினார்கள். பின்னர், தம் வாகனத்தில் ஏறி கஅபத்துல்லாஹ் சென்று தவாஃப் செய்தார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
796. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: {أَنَّهَا لَمْ تَكُنْ تَفْعَلُ ذَلِكَ - أَيْ: النُّزُولَ بِالْأَبْطَحِ - وَتَقُولُ: إِنَّمَا نَزَلَهُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَنَّهُ كَانَ مَنْزِلاً أَسْمَحَ لِخُرُوجِهِ} رَوَاهُ مُسْلِمٌ.
796. ``ஆயிஷா(ரலி) முஹஸ்ஸபில் இறங்க மாட்டார்கள்'' இது இறைத்தூதர்(ஸல்) மக்காவிலிருந்து மதீனா புறப்படத் தோதுவான இடம் என்பதைத் தவிர (இந்த இடத்தில்) வேறு ஒன்றுமில்லை. அதனால்தான் இறைத்தூதர்(ஸல்) அங்கு இறங்கினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களே கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்
797. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرَ عَهْدِهِمْ بِالْبَيْتِ، إِلَّا أَنَّهُ خَفَّفَ عَنِ الْحَائِضِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
797. ஹஜ்ஜில் இறுதியாக கஅபத்துல்லாஹ்வை தவாஃப் செய்து வரவேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளது. ஆனால், மாதவிடாய்ப் பெண்களுக்குச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
798. وَعَنِ ابْنِ الزُّبَيْرِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ، وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ صَلَاةٍ فِي مَسْجِدِي بِمِائَةِ صَلَاةٍ} رَوَاهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.بَابُ الْفَوَاتِ وَالْإِحْصَارِ
798. ``என்னுடைய இந்த இறைஇல்லத்தில் (மஸ்ஜிதுன் னபவி) தொழுவது, மஸ்ஜித் ஹராமைத் தவிர மற்ற இறைஇல்லங்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்தது. இன்னும், மஸ்ஜித் ஹராமில் தொழுவது, என்னுடைய இந்த இறைஇல்லத்தில் தொழும் நூறு தொழுகைகளை விடச் சிறந்தது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு ஜுபைர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
799. عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {قَدْ أُحْصِرَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَلَقَ وَجَامَعَ نِسَاءَهُ، وَنَحَرَ هَدْيَهُ، حَتَّى اِعْتَمَرَ عَامًا قَابِلًا} رَوَاهُ الْبُخَارِيُّ.
799. இறைத்தூதர்(ஸல்) (உம்ராவிற்குச் சென்றபோது) தடுக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் தம் தலையை மழித்துக் கொண்டார்கள். மேலும், தம் மனைவியருடன் கூடினார்கள். மேலும், தம் குர்பானீயை அறுத்தார்கள். பின்னர், மறு ஆண்டு உம்ராச் செய்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
800. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللهُ عَنْهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ! إِنِّي أُرِيدُ الْحَجَّ، وَأَنَا شَاكِيَةٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "حُجِّي وَاشْتَرِطِي: أَنَّ مَحَلِّيحَيْثُ حَبَسْتَنِي"} مُتَّفَقٌ عَلَيْهِ.
800. ளபாஆ பின்த் ஜுபைர் இப்னி அப்தில் முத்தலிபிடம் இறைத்தூதர்(ஸல்) சென்றார்கள். அவர், ``இறைத்தூதர் அவர்களே! நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன். ஆனால், நான் நோயாளியாக உள்ளேன்?'' எனக் கூறினார்.
``(இறைவா!) நீ எங்கு விரும்புகிறாயோ, அது உன் இஹ்ராம் உடையைக் களையும் இடமாகும் என்ற நிபந்தனையுடன் ஹஜ் செய்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
801. وَعَنْ عِكْرِمَةَ، عَنِ الْحَجَّاجِ بْنِ عَمْرٍو اَلْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ كُسِرَ، أَوْ عُرِجَ، فَقَدَ حَلَّ وَعَلَيْهِ الْحَجُّ مِنْ قَابِلٍ قَالَ عِكْرِمَةُ. فَسَأَلْتُ اِبْنَ عَبَّاسٍ وَأَبَا هُرَيْرَةَ عَنْ ذَلِكَ؟ فَقَالَا: صَدَقَ} رَوَاهُ الْخَمْسَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ.كِتَابُ الْبُيُوعِبَابُ شُرُوطِهِ وَمَا نُهِيَ عَنْهُ مِنْهُ
801. ``(இஹ்ராம் கட்டிய நிலையில்) யாருடைய காலேனும் ஒடிக்கப்பட்டால் அல்லது நொண்டியாகிவிட்டால் அவர் இஹ்ராமை விட்டு வெளியாகிவிட்டார். மறு ஆண்டு ஹஜ் செய்வது அவர் மீது கடமையாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். ஹஜ்ஜாஜ் இப்னு அம்ரிடமிருந்து இக்ரிமா(ரலி) அறிவித்தார். மேலும் இது குறித்து அபூ ஹுரைரா(ரலி) மற்றும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் தான் கேட்டதற்கு ஹஜ்ஜாஜ் உண்மையே கூறினார் என்று கூறியதாகவும் அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
802. عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ: أَيُّ الْكَسْبِ أَطْيَبُ؟ قَالَ: {عَمَلُ الرَّجُلِ بِيَدِهِ، وَكُلُّ بَيْعٍ مَبْرُورٍ} رَوَاهُ الْبَزَّارُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
802. ``எவ்வகை சம்பாத்தியம் மிகத் தூயது?'' என இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது.
``மனிதன் தன் கையால் உழைத்துச் சம்பாதிக்கும் சம்பாத்தியமும், ஏமாற்றமில்லாமல் (நியாயமாகச்) செய்யும் வியாபார(த்தின் மூலம் கிடைக்கும் லாப)மும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ரிஃபாஆ இப்னுராஃபிஃ(ரலி) அறிவித்தார்.
நூல்: பஸ்ஸார்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
803. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ -رَضِيَ اللهُ عَنْهُمَا-؛ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَامَ الْفَتْحِ، وَهُوَ بِمَكَّةَ: {إِنَّ اللهُ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ، وَالْمَيْتَةِ، وَالْخِنْزِيرِ، وَالْأَصْنَامِ.فَقِيلَ: يَا رَسُولَ اللهِ ! أَرَأَيْتَ شُحُومَ الْمَيْتَةِ، فَإِنَّهُ تُطْلَىبِهَا السُّفُنُ، وَتُدْهَنُ بِهَا الْجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ؟ فَقَالَ: " لَا. هُوَ حَرَامٌ "، ثُمَّ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: " قَاتَلَ اللهُ الْيَهُودَ، إِنَّ اللهُ لَمَّا حَرَّمَ عَلَيْهِمْ شُحُومَهَا جَمَلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
803. ``மதுபானம், தானாய் இறந்தவை, பன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை இறைவன் தடுத்துவிட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் மக்காவில் இருந்தபோது கூறினார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! தானாய் இறந்தவற்றின் கொழுப்புக் குறித்துக் கூறுங்கள். ஏனெனில், அதைக் கொண்டு படகுகளை வழவழப்பாக்கவும், தோல்களைப் பதப்படுத்தவும் செய்கிறார்கள். இன்னும் மக்கள் அதன் மூலம் விளக்கும் எரிக்கின்றனர்'' என கேட்கப்பட்டது.
``கூடாது. அதுவும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்'' என இறைத்தூதர்(ஸல்) கூறிவிட்டு, ``யூதர்களை அல்லாஹ் நாசமாக்கட்டும்! அல்லாஹ் அவர்களுக்கு (தானாய் இறந்த) அதன் கொழுப்புகளைத் தடை செய்தபோது, அவர்கள் அதனை உருக்கி விற்றார்கள், அதன் கிரயத்தை உண்டார்கள் என்றும் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
804. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {إِذَا اخْتَلَفَ الْمُتَبَايِعَانِ لَيْسَبَيْنَهُمَا بَيِّنَةٌ، فَالْقَوْلُ مَا يَقُولُ رَبُّ السِّلْعَةِ أَوْ يَتَتَارَكَانِ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
804. ``விற்பவர் மற்றும் வாங்குபவருக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டு, அதற்கான எவ்வித ஆதாரமும் இருவரில் ஒருவரிடம்கூட இல்லை எனில், பொருளுக்கு உரியவரின் பேச்சே ஏற்கத் தக்கதாகும்; அல்லது அப்பொருளை விட்டுவிட வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றேன் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
805. وَعَنْ أَبِي مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ، وَمَهْرِ الْبَغِيِّ، وَحُلْوَانِ الْكَاهِنِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
805. நாய் விற்ற கிரயத்தையும், விபச்சாரியின் சம்பாத்தியத்தையும், குறிகாரனின் தட்சிணையையும் இறைத்தூதர்(ஸல்) தடை செய்தார்கள் என அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
806. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ -رَضِيَ اللهُ عَنْهُمَا-؛ {أَنَّهُ كَانَ يَسِيرُ عَلَى جَمَلٍ لَهُ أَعْيَا. فَأَرَادَ أَنْ يُسَيِّبَهُ. قَالَ: فَلَحِقَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا لِي، وَضَرَبَهُ، فَسَارَ سَيْراً لَمْ يَسِرْ مِثْلَهُ، قَالَ: " بِعْنِيهِ بِوُقِيَّةٍ " قُلْتُ: لَا. ثُمَّ قَالَ: " بِعْنِيهِ " فَبِعْتُهُ بِوُقِيَّةٍ، وَاشْتَرَطْتُ حُمْلَانَهُ إِلَى أَهْلِي، فَلَمَّا بَلَغْتُ أَتَيْتُهُ بِالْجَمَلِ، فَنَقَدَنِي ثَمَنَهُ، ثُمَّ رَجَعْتُ فَأَرْسَلَ فِي أَثَرِي. فَقَالَ: " أَتُرَانِي مَاكَسْتُكَ لِآخُذَ جَمَلَكَ؟ خُذْ جَمَلَكَ وَدَرَاهِمَكَ. فَهُوَ لَكْ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَهَذَا السِّيَاقُ لِمُسْلِمٍ.
806. ``நான் என்னுடைய ஒட்டகத்தில் அமர்ந்திருந்தேன். ஒட்டகம் களைத்துவிட்டது. நான் அதனை விட்டுவிட விரும்பினேன்.'' அதே நேரத்தில் இறைத்தூதர்(ஸல்) என்னை வந்தடைந்தார்கள். பின்னர், எனக்காகப் பிரார்த்தித்து, ஒட்டகத்தை அடித்தார்கள். உடனே அது இதற்கு முன்னர் செல்லாத அளவு (வேகமாகச்) செல்ல ஆரம்பித்தது.
அப்போது, ``அதை என்னிடம் ஒரு ஊக்கியாவிற்கு விற்றுவிடு'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``இல்லை'' என நான் கூறினேன்.
பின்னரும், ``என்னிடம் விற்றுவிடு!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``இதில் நான் என் வீடு வரை சவாரி செய்து கொள்வேன்'' என நிபந்தனையிட்டு நான் அதனை ஒரு ஊக்கியாவிற்கு விற்றுவிட்டேன். நான் வீடு சென்றதும் ஒட்டகத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அவர்கள் அதன் கிரயத்தை என்னிடம் கொடுத்தார்கள். நான் (அதைப் பெற்றுக் கொண்டு) திரும்பியபோது, எனக்குப் பின்னால் ஆள் அனுப்பிய இறைத்தூதர்(ஸல்), ``உன்னுடைய ஒட்டகத்தை எடுத்துக் கொள்ள நான் உனக்குத் குறைந்த விலை கொடுத்துவிட்டேன் என எண்ணுகிறாயா? உன்னுடைய ஒட்டகத்தையும் திர்ஹம்களையும் வாங்கிக் கொள். அது உனக்கே உரியது'' எனக் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
807. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {أَعْتَقَ رَجُلٌ مِنَّا عَبْداً لَهُ عَنْ دُبُرٍ لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ. فَدَعَا بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَاعَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
807. எங்களில் ஒருவர் தன் அடிமையிடம், ``என் மரணத்திற்குப் பின்பு விடுதலை பெற்றுக் கொள்'' எனக் கூறியிருந்தார். (ஆனால், அவர் கடன்பட்டிருந்தார். எனவே) இறைத்தூதர்(ஸல்) அந்த அடிமையை அழைத்து வரச் செய்து அவனை விற்பனை செய்தார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்