988. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- {أَنَّ رَجُلاً أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَا رَسُولَ اللهِ ! إِنَّ أُمِّي اُفْتُلِتَتْ نَفْسُهَا وَلَمْ تُوصِ، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، أَفَلَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا ؟ قَالَ: " نَعَمْ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
988. ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! என் தாய் திடீர் என மரணித்துவிட்டார். மரண சாசனம் (வஸிய்யத்) எதுவும் செய்யவில்லை. அவர் (மரண சாசனமாக) ஏதாவது பேசியிருந்தால் தர்மம் செய்திருப் பார் என நான் எண்ணுகிறேன். எனவே, அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அவருக்கு (அதற்கான) கூலியுண்டா?'' என கேட்டார்.
``ஆம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
989. وَعَنْ أَبِي أُمَامَةَ اَلْبَاهِلِيِّ رَضِيَ اللهُ عَنْهُ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {إِنَّ اللهُ قَدْ أَعْطَى كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ، فَلَا وَصِيَّةَ لِوَارِثٍ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُإِلَّا النَّسَائِيَّ، وَحَسَّنَهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ، وَقَوَّاهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ الْجَارُودِ.
989. ``உரிமையுள்ள ஒவ்வொருக்கும் அவருக்குரிய உரிமையை நிச்சயமாக அல்லாஹ் வழங்கிவிட்டான். எனவே, இனி எந்த வாரிசுக்கும் (மற்ற வாரிசைவிட அதிகப்படியாக) மரண சாசனம் எதையும் எழுதக் கூடாது என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் அஹ்மத் மற்றும் இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ``ஹஸன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் இப்னு குஸைமா மற்றும் இப்னுல்ஜாரூத்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
990. وَرَوَاهُ الدَّارَقُطْنِيُّ مِنْ حَدِيثِ اِبْنِ عَبَّاسٍ - رَضِيَ اللهُ عَنْهُمَا-، وَزَادَ فِي آخِرِهِ: {إِلَّا أَنْ يَشَاءَ الْوَرَثَةُ} وَإِسْنَادُهُ حَسَنٌ.
990. இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக தாரகுத்னீயின் அறிவிப்பின் இறுதியில், ``வாரிசுகள் நாடினால் தவிர'' எனும் வாசகம் அதிகப்படியாக உள்ளது. இது `ஹஸன்' எனும் தரத்தில் உள்ளது.
991. وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ اللهُ تَصَدَّقَ عَلَيْكُمْ بِثُلُثِ أَمْوَالِكُمْ عِنْدَ وَفَاتِكُمْ ؛ زِيَادَةً فِي حَسَنَاتِكُمْ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ.
991. ``நீங்கள் மரணிக்கும்போது உங்களின் நன்மையை அதிகமாக ஆக்குவதற்காக உங்களின் சொத்தின் மூன்றில் ஒரு பகுதியை (தர்மம் செய்யும் உரிமையை) இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
992. وَأَخْرَجَهُ أَحْمَدُ، وَالْبَزَّارُ مِنْ حَدِيثِ أَبِي الدَّرْدَاءِ.
992. மேற்கண்ட ஹதீஸ் , அபூ தர்தா(ரலி) வாயிலாக அஹ்மத் மற்றும் பஸ் ஸாரில் உள்ளது.
993. وَابْنُ مَاجَهْ: مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ. وَكُلُّهَا ضَعِيفَةٌ، لَكِنْ قَدْ يَقْوَى بَعْضُهَا بِبَعْضٍ. وَاللهُ أَعْلَمُ.بَابُ الْوَدِيعَةِ
993. மேற்கண்ட ஹதீஸ் அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக இப்னு மாஜாவிலும் உள்ளது. இவையனைத்தும் `ளயீஃப்' எனும் பலவீனமாக உள்ளன. ஆனாலும், இந்த அறிவிப்புகளில் ஒன்று மற்றொன்றை பலப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளனர். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
994. عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ أُودِعَ وَدِيعَةً، فَلَيْسَ عَلَيْهِ ضَمَانٌ} أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ، وَإِسْنَادُهُ ضَعِيفٌ.كِتَابُ النِّكَاحِ أَحَادِيثُ فِي النِّكَاحِ
994. ``யாரிடம் ஒரு பொருள் வதீஅத்தாக கொடுத்து வைக்கப்படுகிறதோ அதற்கு அவர், பிணை ஏற்க வேண்டியதில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
இமாம் இப்னு மாஜா(ரஹ்) இதனை `ளயீஃப்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
995. عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ لَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يَا مَعْشَرَ الشَّبَابِ ! مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ ؛ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ".} مُتَّفَقٌ عَلَيْهِ.
995. ``இளைஞர் கூட்டமே! உங்களில் திருமணம் செய்து கொள்ளும் தகுதியைப் பெற்றவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், திருமணம் பார்வையைத் தாழ்த்தக் கூடியதாகவும், வெட்கத் தலத்தைப் பாதுகாப்புதாகவும் உள்ளது. இன்னும், வாழ்க்கைக்கான தேவைகளை நிறைவேற்றும் திறணற்றவர் நோன்பு நோற்கட்டும். ஏனெனில், நோன்பு இச்சையை அடக்கக் கூடியதாய் உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் எங்களிடம் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
996. وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَمِدَ اللهَ، وَأَثْنَى عَلَيْهِ، وَقَالَ: " لَكِنِّي أَنَا أُصَلِّي وَأَنَامُ، وَأَصُومُ وَأُفْطِرُ، وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي} مُتَّفَقٌ عَلَيْهِ.
996. ``இறைத்தூதர்(ஸல்) இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு (சிறிது நேர உரைக்குப் பின்பு) ``ஆனால், நான் தொழுகிறேன். மேலும், தூங்குகிறேன், மேலும் நோன்பும் நோற்கிறேன். நோன்பு நோற்காமலும் இருக்கிறேன். நான் பெண்களைத் திருமணமும் செய்கிறேன். என் வழிமுறையைப் புறக்கணிப்பவர் என்னைச் சேர்ந்தவரல்லர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
997. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِالْبَاءَةِ، وَيَنْهَى عَنِ التَّبَتُّلِ نَهْيًا شَدِيدًا، وَيَقُولُ:" تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ. إِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأَنْبِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ} رَوَاهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
997. திருமணத்திற்குத் தேவையான வாழ்வாதாரங்களைத் திரட்டுமாறு இறைத்தூதர்(ஸல்) கட்டளையிட்டார்கள். திருமணம் செய்யாமல் இருப்பதை வன்மையாகத் தடை செய்தார்கள். மேலும், ``அதிகம் குழந்தை பெறுகிற அதிக அன்பு நிறைந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். (ஏனெனில்) நிச்சயமாக மறுமை நாளில் நீங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது குறித்து மற்ற நபிமார்களிடம் பெருமையுடன் பேசுவேன். மற்ற (உம்மத்) விட நான் உங்களை அதிகமாகக் காண்பேன்'' என்றும் கூறுவார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
998. وَلَهُ شَاهِدٌ: عِنْدَ أَبِي دَاوُدَ، وَالنَّسَائِيِّ، وَابْنِ حِبَّانَ أَيْضًا مِنْ حَدِيثِ مَعْقِلِ بْنِ يَسَارٍ.
998. மஃகில் இப்னு யஸார் வாயிலாக அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னு ஹிப்பானில் இதற்கு சான்றாக ஹதீஸ் உள்ளது.
999. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ: لِمَالِهَا، وَلِحَسَبِهَا، وَلِجَمَالِهَا، وَلِدِينِهَا، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ} مُتَّفَقٌ عَلَيْهِ مَعَ بَقِيَّةِ السَّبْعَةِ.
999. ``பெண் நான்கு காரணங்களுக்காகத் திருமணம் செய்யப்படுகிறாள்: 1. அவளின் சொத்துக்காக 2. அவளின் குலச் சிறப்புக்காக 3. அவளின் அழகுக்காக 4. அவளின் மார்க்கத்திற்காக. உன் இரண்டு கைகளும் மண்ணாகட்டும்! மார்க்கமுடையவளை மணந்து வெற்றியடைந்து கொள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, இப்னு மாஜா மற்றும் நஸயீ
1000. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ ؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ إِنْسَانًا إِذَا تَزَوَّجَ قَالَ: {بَارَكَ اللهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ خُزَيْمَةَ، وَابْنُ حِبَّانَ.
1000. ``அல்லாஹ் உமக்கு வளத்தை அளிப்பானாக, இன்னும், அருட்பேற்றை உன் மீது பொழிவானாக! இன்னும், நல்லவற்றில் உங்கள் இருவரையும் ஒன்றிணைப்பானாக!'' என திருமணம் செய்தவருக்காக இறைத்தூதர்(ஸல்) துஆச் செய்துவந்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ, இமாம் இப்னு குஸைமா மற்றும் இமாம் இப்னு ஹிப்பா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1001. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {عَلَّمَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّشَهُّدَ فِي الْحَاجَةِ: " إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ، وَنَسْتَعِينُهُ، وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللهُ مِنْ شُرُورِ أَنْفُسِنَا، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَيَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ".} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ، وَالْحَاكِمُ.
1001. இறைத்தூதர்(ஸல்) எங்களுக்கு (நிக்காஹ்) ஃகுத்பாவை இவ்வாறு கற்றுக் கொடுத்தார்கள்; ``நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! நாம் அவனைப் புகழ்கிறோம். மேலும், அவனிடமே உதவி தேடுகிறோம். இன்னும், அவனிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம். இன்னும், நம் உள்ளங்களில் தோன்றும் தீய எண்ணங்களைவிட்டும் அவனிடமே பாதுகாவல் தேடுகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழிப்படுத்தி விட்டானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அல்லாஹ் யாரை வழி கெடுத்துவிட்டானோ அவரை நேர்வழிப்படுத்துபவர் யாரும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என நான் சாட்சி அளிக்கிறேன். இன்னும், முஹம்மத்(ஸல்) அவனுடைய நல்லடியார் மற்றும் அவனுடைய தூதர் என்றும் நான் சாட்சி அளிக்கிறேன்'' எனக் கூறிவிட்டு, (3:102, 4:1, 4:70 ஆகிய) மூன்று வசனங்களை ஓதுவார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1002. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا خَطَبَ أَحَدُكُمُ الْمَرْأَةَ، فَإِنْ اِسْتَطَاعَ أَنْ يَنْظُرَ مِنْهَا مَا يَدْعُوهُ إِلَى نِكَاحِهَا، فَلْيَفْعَلْ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَرِجَالُهُ ثِقَاتٌ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1002. ``உங்களில் ஒருவர் (திருமணத்திற்காக) பெண் பேசினால் அவளை மணக்கத் தூண்டும் அம்சம் எதையேனும் அவளிடமிருந்து அவரால் காண இயன்றால், அவ்வாறே பார்த்துக் கொள்ளட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத் மற்றும் அபூ தாவூத்
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1003. وَلَهُ شَاهِدٌ: عِنْدَ التِّرْمِذِيِّ، وَالنَّسَائِيِّ ؛ عَنِ الْمُغِيرَةِ..
1003. முஙீரா வாயிலாக 1001வது ஹதீஸிற்குச் சான்றாக திர்மிதீ மற்றும் நஸயீயில் (ஹதீஸ்) உள்ளது.
1004. وَعِنْدَ اِبْنِ مَاجَهْ، وَابْنِ حِبَّانَ: مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ.
1004. முஹம்மத் இப்னு மஸ்லமா வாயிலாக இப்னு மாஜா மற்றும் இப்னு ஹிப்பானில் இந்த (1001வது) ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
1005. وَلِمُسْلِمٍ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ تَزَوَّجَ اِمْرَأَةً: أَنَظَرْتَ إِلَيْهَا ؟ " قَالَ: لَا. قَالَ: " اِذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا}.
1005. ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய நாடிய ஒருவரிடம், ``அவளை நீ பார்த்துவிட்டாயா?'' எனக் இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``இல்லை'' என அவர் கூறினார்.
``செல்! அவளைப் பார்த்துக் கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1006. وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَخْطُبْ بَعْضُكُمْ عَلَى خِطْبَةِ أَخِيهِ، حَتَّى يَتْرُكَ الْخَاطِبُ قَبْلَهُ، أَوْ يَأْذَنَ لَهُ الْخَاطِبُ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
1006. ``உங்கள் சகோதரர் (திருமணத்திற்காக) பெண் பேசும்போது திருமண ஒப்பந்தத்தை அவர் விட்டுவிலகாதவரை அல்லது அனுமதி அளிக்காதவரை (இடையில் குறுக்கிட்டு) நீங்கள் பெண் பேச வேண்டாம்; (திருமண ஒப்பந்தம் செய்ய வேண்டாம்)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1007. وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ - رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ ! جِئْتُ أَهَبُ لَكَ نَفْسِي، فَنَظَرَ إِلَيْهَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَعَّدَ النَّظَرَ فِيهَا، وَصَوَّبَهُ، ثُمَّ طَأْطَأَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ، فَلَمَّا رَأَتِ الْمَرْأَةُ أَنَّهُ لَمْ يَقْضِ فِيهَا شَيْئًاجَلَسَتْ، فَقَامَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ. فَقَالَ: يَا رَسُولَ اللهِ ! إِنْ لَمْ يَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيهَا. قَالَ: " فَهَلْ عِنْدكَ مِنْ شَيْءٍ ؟ ". فَقَالَ: لَا، وَاللهِ يَا رَسُولَ اللهِ. فَقَالَ: " اِذْهَبْ إِلَى أَهْلِكَ، فَانْظُرْ هَلْ تَجِدُ شَيْئًا ؟ " فَذَهَبَ، ثُمَّ رَجَعَ ؟ فَقَالَ: لَا، وَاللهِ يَا رَسُولَ اللهِ، مَا وَجَدْتُ شَيْئًا. فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " انْظُرْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ "، فَذَهَبَ، ثُمَّ رَجَعَ. فَقَالَ: لَا وَاللهِ، يَا رَسُولَ اللهِ، وَلَا خَاتَمًا مِنْ حَدِيدٍ، وَلَكِنْ هَذَا إِزَارِي - قَالَ سَهْلٌ: مَالُهُ رِدَاءٌ - فَلَهَا نِصْفُهُ. فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " مَا تَصْنَعُ بِإِزَارِكَ ؟ إِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَيْءٌ، وَإِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ شَيْءٌ " فَجَلَسَ الرَّجُلُ، وَحَتَّى إِذَا طَالَ مَجْلِسُهُ قَامَ ؛ فَرَآهُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُوَلِّيًا، فَأَمَرَ بِهِ، فَدُعِيَ لَهُ، فَلَمَّا جَاءَ. قَالَ: " مَاذَا مَعَكَ مِنَ الْقُرْآنِ ؟ ". قَالَ: مَعِي سُورَةُ كَذَا، وَسُورَةُ كَذَا، عَدَّدَهَا. فَقَالَ: " تَقْرَؤُهُنَّ عَنْ ظَهْرِ قَلْبِكَ ؟". قَالَ: نَعَمْ، قَالَ: "اِذْهَبْ، فَقَدَ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ. وَفِي رِوَايَةٍ لَهُ: {اِنْطَلِقْ، فَقَدْ زَوَّجْتُكَهَا، فَعَلِّمْهَا مِنَ الْقُرْآنِ}. وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: {أَمْكَنَّاكَهَابِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ}.
1007. நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! நான் என்னைத் தங்களுக்கு அர்ப்பணிக்க வந்திருக்கிறேன்'' எனக் கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) அப்பெண்ணைப் பார்த்தார்கள், பின்னர் அப்பெண்ணை மேலும், கீழுமாகப் பார்த்தார்கள். பின்னர், தம் தலையைத் தாழ்த்திக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) எந்த முடிவும் செய்யவில்லை என்பதை அறிந்த அப்பெண் அங்கேயே அமர்ந்திருந்தார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்தார்.
``இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அப்பெண் தேவையில்லை எனில் அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என அவர் கூறினார்.
``உன்னிடம் ஏதாவது இருக்கிறதா?'' என இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் எதுவும் இல்லை'' என அவர் கூறினார்.
``நீ உன் வீட்டாரிடம் சென்று அங்கு உனக்கு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
அவர் சென்றார். பின்னர் திரும்பி வந்து ``இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு எதுவும் கிடைக்கவில்லை'' எனக் கூறினார்.
``ஒரு இரும்பு மோதிரமாவது இருக்கிறதா என்று பார்!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
அவர் சென்றார். பின்னர் திரும்பி வந்து ``இறைத்தூதர் அவர்களே! இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இரும்பு மோதிரம்கூட இல்லை. ஆனால், என்னிடம் என்னுடைய இந்தக் கீழங்கி உள்ளது. (ஸஹ்ல் தொடர்ந்து கூறினார்). ``அவருக்கு மேலாடை இல்லை!'' என்று இதில் அவளுக்குப் பாதியை கொடுத்து விடுகிறேன்'' என அவர் கூறினார்.
``நீ கீழாடைக்கு என்ன செய்வாய்? நீ உடுத்திக் கொண்டால் அவளுக்கு எதுவும் இல்லாது போய்விடும். இதனை அவள் உடுத்திக் கொண்டால் உனக்கு எதுவும் இல்லாது போய்விடும்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர் அவர் நீண்ட நேரம் அமர்ந்துவிட்டு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதைப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவரை அழைத்து வரக் கட்டளையிட்டார்கள். அவரும் வந்தார்.
``குர்ஆனிலிருந்து உன்னிடம் எது (மனனமாக) உள்ளது?'' என இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``என்னிடம் இன்னின்ன அத்தியாயங்கள் உள்ளன'' என அவர் எண்ணிக் காண்பித்தார்.
``இவற்றை நீ மனனமாக ஓதுவாயா?'' என இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்.
``ஆம்'' என அவர் கூறினார்.
``செல்! குர்ஆனிலிருந்து உன்னிடம் உள்ளவற்றிற்குப் பதிலாக அவளை உனக்கு உரியவளாக்கிவிட்டேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாயிதீ(ரலி) அவிறித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்றோர் அறிவிப்பில், ``திரும்பிச் செல்! அவளை உனக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். அவளுக்குக் குர்ஆனிலிருந்து கற்றுக் கொடு!'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என உள்ளது.
புகாரீயின் மற்றோர் அறிவிப்பில் குர்ஆனிலிருந்து உன்னிடம் உள்ளவற்றிற்காக அவளை உனக்கு உரியவளாய் ஆக்கிவிட்டோம் என உள்ளது.