பக்கம் -52-
படையை திரட்டுதல் - போர்க்களம் புறப்படுதல்
அன்று வெள்ளிக்கிழமை. ஜுமுஆ தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு நல்லுபதேசம்
செய்து உறுதியாகவும் நிலையாகவும் இருக்கும்படி கட்டளையிட்டார்கள். உங்களது பொறுமைக்கு
அல்லாஹ்வின் நல்லுதவி நிச்சயம் கிடைக்கும் என்று அறிவித்தார்கள். எதிரியைச் சந்திக்க
தயாராகும்படி முஸ்லிம்களைப் பணித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் உரையைக் கேட்டு முஸ்லிம்கள்
மிகவும் மகிழ்ந்தனர். அன்று நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்ளுக்கு அஸர் தொழுகையையும் தொழ
வைத்தார்கள். மதீனாவில் உள்ளவர்களும் மதீனாவின் மேட்டுப் பகுதியில் உள்ளவர்களும் பெருமளவில்
குழுமியிருந்தனர். தொழ வைத்ததற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் தங்கள் இல்லத்திற்குச்
சென்றார்கள். அவர்களுடன் அபூபக்ர்இ உமர் (ரழி) ஆகியோர் சென்று நபி (ஸல்) அவர்களுக்குத்
தலைப்பாகை அணிவித்து மற்ற ஆடைகளையும் அணிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முழுமையான
ஆயுதங்களுடனும் இரண்டு கவச ஆடைகளுடனும் வாளைக் கழுத்தில் தொங்கவிட்டவர்களாக முஸ்லிம்களுக்கு
முன் தோன்றினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வருகையை எதிர்பார்த்திருந்த மக்களிடம் ஸஅது இப்னு முஆத் (ரழி)
அவர்களும்இ உஸைத் இப்னு ஹுழைர் (ரழி) அவர்களும் “மதீனாவிலிருந்து வெளியேறிதான் போர்
செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களை நீங்கள் நிர்பந்தித்து விட்டீர்கள். எனவேஇ
உங்களது அபிப்ராயத்தை விட்டுவிட்டு அதிகாரத்தை நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்”
என்று கூறினார்கள். இதனால் அந்த மக்கள் தங்களின் செயல்களுக்காக வருந்தினர். பின்பு
நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு மாறு செய்வது எங்களுக்கு உசிதமல்ல.
நீங்கள் விரும்பியதையேஇ அதாவது மதீனாவில் தங்குவதுதான் உங்களுக்கு விருப்ப மானது என்றால்
அதையே நீங்கள் செய்யுங்கள்” என்று மக்கள் கூறினார்கள். ஆனால் நபி (ஸல்)இ “ஓர் இறைத்தூதர்
தனது கவச ஆடையை அணிந்தால்இ அதன் பிறகு அல்லாஹ் அவருக்கும் அவருடைய எதிரிகளுக்கும் மத்தியில்
தீர்ப்பளிக்கும் வரை அதைக் கழற்றுவது அவருக்கு ஆகுமானதல்ல” என்று கூறினார்கள். (ஸஹீஹுல்
புகாரிஇ முஸ்னது அஹ்மதுஇ ஸுனன் நஸாம்)
நபி (ஸல்) தனது படையை மூன்று பிரிவாக அமைத்தார்கள்:
1) முஹாஜிர்களின் பிரிவு: இப்பிரிவுக்குரிய கொடியை முஸ்அப் இப்னு உமைர் அல் அப்தரீயிடம்
கொடுத்தார்கள். (முஹாஜிர்கள் - மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய முஸ்லிம்கள்)
2) அன்சாரிகளில் அவ்ஸ் கூட்டத்தினரின் பிரிவு: இப்பிரிவுக்குரிய கொடியை உஸைத் இப்னு
ஹுளைடம் கொடுத்தார்கள். (அன்ஸாரிகள் - இஸ்லாமை ஏற்ற மதீனாவாசிகள்.)
3) அன்சாரிகளில் கஸ்ரஜ் கூட்டத்தினரின் பிரிவு: இப்பிரிவுக்குரிய கொடியை ஹுபாப் இப்னு
முன்திடம் கொடுத்தார்கள்.
படையில் 1இ000 வீரர்கள் இருந்தார்கள். அவர்களில் 100 நபர்கள் கவச ஆடை அணிந்திருந்தனர்.
அவர்களில் குதிரை வீரர் எவரும் இருக்கவில்லை. (ஃபத்ஹுல் பாரி)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தொழுகை நடத்துவதற்கு அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்
(ரழி) அவர்களை நியமித்தார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களின் ஆணைக்கிணங்க இஸ்லாமியப்
படை மதீனாவின் வடக்கு நோக்கிப் புறப்பட்டது. ஸஅது இப்னு உபாதாஇ ஸஅது இப்னு முஆத் ஆகியோர்
கவச ஆடை அணிந்துஇ நபி (ஸல்) அவர்களுக்கு முன் நடந்து சென்றார்கள்.
நபி (ஸல்) அவர்களின் ராணுவம் ‘ஸன்யத்துல் வதா’ என்ற இடத்தைக் கடந்தபோதுஇ தனது படையிலிருந்து
சற்று விலகி வந்து கொண்டிருக்கும் நன்கு ஆயுதம் தத்த ஒரு படையை நபியவர்கள் பார்த்தார்கள்.
நபியவர்கள் “நம்முடன் வரும் இந்தப் படை யாருடையது?” என்று வினவினார்கள். அதற்கு கஸ்ரஜ்
இனத்தவர்களின் நண்பர்களான யூதர்கள் “இணைவைப்பவர்களுக்கு எதிரான போரில் கலந்துகொள்ள
ஆர்வத்துடன் நம்முடன் வந்துள்ளார்கள்” என்று கூறப்பட்டது. “அவர்கள் இஸ்லாமைத் தழுவியிருக்கிறார்களா?”
என்று நபி (ஸல்) கேட்கஇ தோழர்கள் “இல்லை” என்றனர். ஆனால்இ இணைவைப்போருக்கு எதிரான போரில்
நிராகரிப்போரை தங்களின் உதவிக்கு அழைத்துச் செல்ல நபி (ஸல்) மறுத்துவிட்டார்கள்.
படையைப் பார்வையிடுதல்
“ஷைகான்” என்ற இடத்தை அடைந்தவுடன் நபி (ஸல்) தனது படையை நிறுத்தி பார்வையிட்டார்கள்.
அதில் வயது குறைந்தவர்களாகவும் போர் செய்வதற்கு வலிமையற்றவர் களாகவும் இருந்தவர்களை
மதீனாவிற்குத் திருப்பி அனுப்பினார்கள். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் அப்துல்லாஹ்
இப்னு உமர்இ உஸாமா இப்னு ஜைதுஇ உஸைது இப்னு ளுஹைர்இ ஜைது இப்னு ஸாபித்இ ஜைது இப்னு
அர்கம்இ அராபா இப்னு அவ்ஸ்இ அம்ர் இப்னு ஹஸ்ம்இ அபூ ஸயீத் அல்குத்இ ஜைது இப்னு ஹாஸா
அல்அன்சாரிஇ ஸஅத் இப்னு ஹப்பா ஆவர். மேலும்இ இவர்களில் பரா இப்னு ஆஜிபும் இருந்தார்
என்று சிலர் கூறுகின்றனர். ஆனால்இ ஸஹீஹ் புகாரியில் வரும் இவர்களின் ஹதீஸை நாம் கவனிக்கும்
போது இவர் போரில் கலந்தார் என தெரியவருகிறது.
ராஃபி இப்னு கதீஜ்இ ஸமுரா இப்னு ஜுன்துப் (ரழி) ஆகிய இருவரின் வயது குறைவாக இருந்தும்
நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் போரில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள். அதற்குக் காரணம்
ராஃபி இப்னு கதீஜ் (ரழி) அம்பெறிவதில் மிகத் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். அதனால்
அவரைப் போரில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள். அப்போது ஸமுரா (ரழி) “ராஃபியை விட நான்
பலமிக்கவன். நான் அவரைச் சண்டையிட்டு வீழ்த்துமளவுக்கு ஆற்றலுள்ளவன்” என்றார். நபியவர்கள்
அவ்விருவரையும் தனக்கெதிரில் மல்யுத்தம் செய்யப் பணித்தார்கள். அவ்விருவரும் சண்டையிட்ட
போது ஸமுராஇ ராஃபியை வீழ்த்தினார். இதனால் நபியவர்கள் சமுராவும் போரில் கலந்து கொள்ள
அனுமதித்தார்கள்.
உஹுதுக்கும் மதீனாவுக்குமிடையில்
மாலை நேரமாகவே நபி (ஸல்) அவர்கள் ஷைகானில் மஃரிப் தொழுதார்கள். பின்பு இஷாவும் தொழுது
அங்கேயே இரவை கழித்திட ஏற்பாடு செய்தார்கள். தனது ராணுவத்தைப் பாதுகாப்பதற்காக ராணுவ
முகாமைச் சுற்றிலும் ஐம்பது வீரர்களை நியமித்தார்கள். அவர்களுக்குத் தலைவராக கஅப் இப்னு
அஷ்ரஃபைக் கொலைச் செய்ய சென்ற குழுவுக்கு தளபதியாக இருந்த முஹம்மது இப்னு மஸ்லமாவை
நியமித்தார்கள். தக்வான் இப்னு அப்து கைஸ் (ரழி) நபி (ஸல்) அவர்களைப் பாதுகாக்கும்
பொறுப்பில் இருந்தார்கள்.
முரண்டுபிடிக்கிறான் இப்னு உபை
ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையின் நேரம் வருவதற்கு முன்பே அங்கிருந்து தனது படையை அழைத்துக்
கொண்டு புறப்பட்டார்கள். ‘அஷ்ஷவ்த்’ என்ற இடத்தை அடைந்து அங்கு ஃபஜ்ர் தொழுகை நடத்தினார்கள்.
ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் அளவு எதிரிகளுக்கு நெருக்கமாக இஸ்லாமியப் படை
இருந்தது. அந்நேரத்தில் நயவஞ்சகனான இப்னு உபை படையில் மூன்றில் ஒரு பகுதியினரான 300
வீரர்களை அழைத்துக் கொண்டு போர் செய்யாமல் திரும்ப முரண்டு பிடித்தான். “நாங்கள் எதற்காக
எங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வோம்? நபியவர்களோ தனது கருத்தை விட்டுவிட்டு மற்றவன்
கருத்தை ஏற்று இங்கு வந்திருக்கிறார்” என்று காரணம் கூறி தனது வீரர்களுடன் படையிலிருந்து
திரும்பினான்.
நபி (ஸல்) அவர்கள் தனது கருத்தை விட்டுவிட்டு பிறர் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பது
இவன் விலகிச் சென்றதற்கான உண்மை காரணமல்ல. ஏனெனில்இ அவனது நோக்கம் இதுவாகவே இருந்திருந்தால்
இந்த இடம் வரை நபியவர்களின் படையுடன் அவன் வந்திருக்க மாட்டான். இதையே காரணமாகக் கூறி
முஸ்லிம்களுடன் புறப்படாமல் மதீனாவிலேயே தங்கியிருப்பான்.
மாறாகஇ இந்தச் சங்கடமான நேரத்தில் அவன் இவ்வாறு செய்ததற்கான முக்கிய நோக்கமாவது: எதிரிகள்
பார்க்குமளவுக்கு அருகில் வந்துவிட்ட முஸ்லிம் படைகளுக்கு மத்தியில் குழப்பத்தையும்
சலசலப்பையும் ஏற்படுத்த வேண்டும் அதனால் நபி (ஸல்) அவர்களை விட்டு மற்ற பல முஸ்லிம்களும்
விலகிக் கொள்வார்கள் நபியவர்களுடன் மீதம் இருப்பவர்களின் வீரம் குறைந்து விடும் அப்போது
எதிரிகள் இக்காட்சியைப் பார்த்து துணிவு கொண்டு நபியவர்களின் மீது தாக்குதல் தொடுத்துஇ
வெகு விரைவில் நபியவர்களையும் அவர்களது உற்ற உண்மை தோழர்களையும் அழித்து விடுவார்கள்
இதற்குப் பின்பு தலைமைத்துவம் அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் திரும்ப கிடைத்து விடும்
என்பதே அந்த நயவஞ்சகனின் நோக்கமாக இருந்தது.
உண்மையில் அந்த நயவஞ்சகன் தனது இலட்சியத்தை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டான். இந்நிலையில்
அவ்ஸ் குலத்தவல் ‘ஹாஸா’ என்ற குடும்பத்தினரும் கஸ்ரஜ் கூட்டத்தினல் ‘ஸலமா’ என்ற குடும்பத்தினரும்
கோழைகளாகி போரிலிருந்து திரும்பிடலாம் என்று உறுதியாக எண்ணினர். ஆனால்இ அல்லாஹ் அவ்விரு
குடும்பத்தினரையும் பாதுகாத்து அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சலசலப்பை அகற்றி அவர்களின்
உள்ளங்களில் துணிவையும் வீரத்தையும் ஏற்படுத்தினான். இதை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
(அந்த போரில்) உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்து (ம்உஹுத்’ போர்க் களத்தை விட்டுச்
சென்று) விட(லாமா என்று) இருந்த சமயத்தை நினைத்துப் பாருங்கள்! (ஆனால்இ அல்லாஹ் அவர்களை
அதிலிருந்து காத்துக் கொண்டான். ஏனெனில்இ) அல்லாஹ்வே அவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கின்றான்.
(ஆகவே!) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் 3:122)
போரைப் புறக்கணித்துஇ புறமுதுகிட்டு போகும் நயவஞ்சகர்களை அப்துல்லாஹ் இப்னு ஹராம் (ரழி)
பின்தொடர்ந்து சென்று அவர்களிடம் “இந்த இக்கட்டான சூழலில் உங்களின் கடமை என்ன? அதனை
உணராமல் போகின்றீர்களே! வாருங்கள் போர்முனைக்கு! இறைவழியில் போரிடுங்கள்! அல்லது எதிரிகளிடமிருந்து
எங்களைக் காக்கும் அரணாக நில்லுங்கள்” என்று எவ்வளவோ எடுத்துக் கூறி புரிய வைக்க முயன்றார்.
ஆனால்இ அவர்கள் “உண்மையில் நீங்கள் போருக்குத்தான் வந்திருக்கிறீர்கள் என்று எங்களுக்கு
உறுதியாக தெரிந்திருந்தால் நாங்கள் உங்களை விட்டு திரும்பியிருக்க மாட்டோம்” (அதாவது
நீங்கள் போருக்கு வரவில்லை. மாறாகஇ தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள வந்திருக்கிறீர்கள்)
என்று கூறினர். இதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு ஹராம் (ரழி)இ “அல்லாஹ்வின் எதிரிகளே!
அல்லாஹ் உங்களை அவனது கருணையிலிருந்து தூரமாக்கட்டும்! உங்களை விட்டும் அல்லாஹ் தனது
நபியை முற்றிலும் தேவையற்றவராக ஆக்கி விடுவான்” என்று கூறி அவர்களை விட்டு திரும்பிவிட்டார்கள்.
இந்த நயவஞ்சகர்கள் குறித்துதான் அல்லாஹ் கூறுகிறான்:
(நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில்
போர் புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப) வர்களை (எங்களை விட்டும்) தடுத்துக்
கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு “(இதனை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக
உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள்
நம்பிக்கையை விட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கியிருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவற்றையே
அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை
அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் 3:167)
மீதமுள்ள இஸ்லாமியப் படை உஹுதை நோக்கி...
அப்துல்லாஹ் இப்னு உபை இஸ்லாமியப் படையிலிருந்து அத்துமீறி விலகிச் சென்றபின்இ மீதமுள்ள
700 வீரர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் எதிரியை நோக்கிப் புறப்பட்டார்கள்.
எதிரிகளின் படை நபியவர்கள் சென்றடைய வேண்டிய உஹுதுக்கு மத்தியில் தடையாக இருந்தது.
எனவேஇ நபியவர்கள் “எதிரிகளுக்கு அருகில் செல்லாமல் வேறு சுருக்கமான வழியில் யார் நம்மை
உஹுத் வரையிலும் அழைத்துச் செல்வார்கள்?” என்று கேட்டார்கள்.
அப்போது அபூ கைஸமா (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! நான் இருக்கிறேன்” என்று கூறிஇ ஹாஸா கிளையினருக்கு
சொந்தமான விவசாய நிலங்கள் வழியாகவும் அவர்களின் களத்து மேடுகளின் வழியாகவும் அழைத்துச்
சென்றார். இப்போது எதிரிகளின் படை மேற்குத் திசையில் இருந்தது.
வழியில் மிர்பா இப்னு கைழிக்கு சொந்தமான தோட்டத்தின் வழியாக முஸ்லிம்களின் படை செல்ல
வேண்டிய நிலை ஏற்பட்டது. இவன் குருடனாகவும் நயவஞ்சகனாகவும் இருந்தான். முஸ்லிம்களின்
படை தனது தோட்டத்தைக் கடந்து செல்கிறார்கள் என்று தெரிந்தவுடன் மண்ணை வாரி முஸ்லிம்களின்
முகத்தில் எறிந்தான். மேலும்இ “நீ அல்லாஹ்வின் தூதராக இருந்தால் எனது தோட்டத்தில் நுழைய
உனக்கு அனுமதியளிக்க மாட்டேன்” என்று கத்தினான். இதனால் கோபமடைந்த முஸ்லிம்கள் அவனைக்
கொல்ல விரைந்தனர். நபி (ஸல்) அவர்களை அதிலிருந்து தடுத்துஇ “இவன் குருடன் இவனது உள்ளமும்
குருடு இவனது பார்வையும் குருடு” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) இறுதியாக ‘உத்வத்துல் வாதி“யில் உஹுத் மலைக்கு அருகிலுள்ள கணவாயில் தனது
படையுடன் இறங்கினார்கள். பிறகு மதீனாவை முன்னோக்கியவாறு தங்களது கூடாரங்களை அமைத்தார்கள்.
படையின் பிற்பகுதி உஹுத் மலையை நோக்கி இருந்தது. இந்த அமைப்பின்படி முஸ்லிம்களின் படைக்கும்
மதீனா நகரத்துக்கும் மத்தியில் எதிரிகளின் படை தங்கியிருந்தது.