பக்கம் -86-
நஜார் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
நத்தா பகுதியிலிருந்த கோட்டைகளில் மிக வலிமையானது இக்கோட்டையே ஆகும். எவ்வளவு முயற்சி
செய்தாலும், உயிர் தியாகம் செய்தாலும் முஸ்லிம்களால் இக்கோட்டையை வெற்றி கொள்ள முடியாது
என்று யூதர்கள் உறுதியாக நம்பியிருந்தனர். எனவேதான் இக்கோட்டையில் தங்களது மனைவி மக்களை
தங்க வைத்திருந்தனர். மேற்கூறிய நான்கு கோட்டைகள் எதிலும் தங்களது மனைவி மக்களைத் தங்க
வைக்கவில்லை.
இக்கோட்டையைச் சுற்றி முஸ்லிம்கள் முற்றுகையிட்டு யூதர்களுக்கு மிகக் கடுமையான நெருக்கடியை
ஏற்படுத்தினார்கள். இக்கோட்டை உயரமான மலை மீது இருந்ததால் முஸ்லிம்களால் அதற்குள் நுழைய
முடியவில்லை. யூதர்கள் கோட்டையிலிருந்து வெளியேறி முஸ்லிம்களுடன் நேருக்கு நேர் மோதுவதற்குத்
துணிவு இல்லாமல் கோட்டையை விட்டு வெளியே வராமலிருந்தனர். கோட்டைக்குள் இருந்தவாறே முஸ்லிம்கள்
மீது அம்புகளாலும் கற்களாலும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
இக்கோட்டையை வெற்றி கொள்வது முஸ்லிம்களுக்குச் சிரமமாகி விடவே, மின்ஜனிக் கருவிகளைப்
பயன்படுத்தி கற்களை எறிந்து, கோட்டை மதில்களைத் தகர்க்குமாறு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள்.
முஸ்லிம் படையினரும் அவ்வாறே செய்தனர். கோட்டை மதில்களில் ஓட்டைகள் ஏற்பட்டதும் முஸ்லிம்கள்
அதன் வழியாக கோட்டைக்குள் நுழைந்து யூதர்களுடன் கடும் போர் புரிந்தார்கள். இதில் யூதர்கள்
பெரும் தோல்வியைத் தழுவினார்கள். மற்ற கோட்டைகளிலிருந்து தப்பித்துச் சென்றது போன்று
இக்கோட்டையிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை. தங்களது மனைவி மக்களை விட்டுவிட்டு
கோட்டையை விட்டு வெருண்டோடினர். இக்கோட்டையும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
கைபரின் முதல் பகுதியிலுள்ள அனைத்து பெரிய கோட்டைகளும் இத்துடன் முழுமையாக முஸ்லிம்களுடைய
கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. மற்ற சிறிய கோட்டைகளுக்குள் இருந்த யூதர்களும் அவற்றைக்
காலி செய்துவிட்டு ஊரின் இரண்டாவது பகுதிக்கு வெருண்டோடினர்.
இரண்டாவது பகுதியை வெற்றி கொள்ளுதல்
நபியவர்கள் ‘நத்தா’ பகுதியிலுள்ள கோட்டைகளை முழுமையாக வெற்றி கொண்டபின் இரண்டாவது பகுதியான
‘கத்தீபா“விற்கு தங்களது படையுடன் வந்தார்கள். அங்கு யூதர்களின் கமூஸ், அபூ ஹுகைக்
குடும்பத்தினர் கோட்டை, வத்தீஹ் சுலாலிம் ஆகிய மூன்று கோட்டைகள் இருந்தன. நத்தா பகுதியில்
தோல்வியுற்று ஓடிய யூதர்களெல்லாம் இக்கோட்டைகளுக்குள் புகுந்து கொண்டனர்.
நபி (ஸல்) அவர்கள் செய்த போர்களைப் பற்றி குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்கள் இம்மூன்று
கோட்டைகளை வெற்றி கொள்வதில் சண்டை ஏதும் நடந்ததா? இல்லையா? என்பதில் பல கருத்துகள்
கூறுகிறார்கள். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதிலிருந்து ‘கமூஸ்’ கோட்டையை மட்டும் பேச்சுவார்த்தையின்றி
முழுமையாக சண்டையைக் கொண்டே வெற்றி கொள்ளப்பட்டது என்று தெரியவருகிறது.
“அல்வாகிதி’ (ரஹ்) என்ற வரலாற்று ஆசிரியர் கூறுவதாவது: இம்மூன்று கோட்டைகளும் பேச்சுவார்த்தைக்குப்
பின்தான் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. ‘கமூஸ்’ கோட்டையைத் தவிர மற்ற இரண்டு
கோட்டைகளும் எவ்வித சண்டையுமின்றி பேச்சுவார்த்தையைக் கொண்டே முஸ்லிம்களிடம் சரணடைந்தன.
கமூஸ் கோட்டைக்கு மட்டும் முதலில் சண்டை நடந்தது. அதற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடந்து
கைவசமாகி இருக்கலாம்.
ஆக, கருத்து எதுவாக இருப்பினும் நபி (ஸல்) இப்பகுதியை சுற்றி மட்டும் பதினான்கு நாட்கள்
முற்றுகையிட்டிருந்தார்கள். யூதர்கள் கோட்டையை விட்டு வெளியேறவில்லை. இறுதியாக, நபி
(ஸல்) அவர்கள் மின்ஜனிக் கருவிகளை நிறுவி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார்கள். இதையறிந்த
யூதர்கள் நிச்சயமாக நாம் அழிந்தே தீருவோம் என்பதை அறிந்துகொண்ட பின்புதான் ஒப்பந்தம்
செய்து கொள்ள முன்வந்தார்கள்.
பேச்சுவார்த்தை
இப்னு அபூஹுகைக் என்ற யூதர் “நீங்கள் வாருங்கள் நான் உங்களிடம் பேசுகிறேன்” என்று நபியவர்களிடம்
தூதனுப்பவே, அவர்களும் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டார்கள்.
“கோட்டைக்குள் உள்ள வீரர்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் அவர்களது குடும்பத்தார்களை
அவர்களுடன் விட்டுவிட வேண்டும் அந்த வீரர்கள் தங்களின் மனைவி மக்களுடன் கைபர் பூமியிலிருந்து
வெளியேறி விடுவார்கள் கைபர் பூமியும் அதிலுள்ள செல்வங்களும், பொருட்களும், தங்கங்களும்,
வெள்ளிகளும், ஆயுதங்களும், கால்நடைகளும் முஸ்லிம்களுக்குச் சொந்தமாகும் தேவையான துணிமணிகளை
மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். நபி
(ஸல்) அவர்கள் அனைத்து அம்சங்களையும் ஒப்புக் கொண்டார்கள்.
“ஒப்பந்தம் செய்து கொடுத்த பின் நீங்கள் ஏதாவதொரு பொருளை மறைத்தால் அல்லாஹ்வும் அவனது
தூதரும் கொடுத்த இந்தப் பொறுப்பு நீங்கிவிடும்” என்று கூறினார்கள். இந்த ஒப்பந்தத்திற்குப்
பின் கோட்டைகள் முஸ்லிம்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.
அபூ ஹுகைகின் மகன்களைக் கொல்லுதல்
மேற்படி ஒப்பந்தத்திற்குப் பிறகும் அபுல் ஹுகைகின் இரண்டு மகன்களும் அதிகமான செல்வங்களை
மறைத்து விட்டனர். ஒரு தோல் பையில் நிறைய பொருட்களையும், ஹையிப் இப்னு அக்தப்பிற்கு
சொந்தமான நகைகளையும் மறைத்து வைத்திருந்தனர். இந்த ‘ஹை’ என்பவர் நளீர் வமிச யூதர்களின்
தலைவராவார். நபி (ஸல்) இவரை மதீனாவிலிருந்து நாடு கடத்திய போது அந்த நகைகளுடன் இங்கு
வந்து தங்கியிருந்தார்.
இந்நிகழ்ச்சியைப் பற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) குறிப்பிடுவதாவது: நபியவர்களிடம் ‘கினானா
அர்ரபீ’ என்பவன் அழைத்து வரப்பட்டான். அவனிடம்தான் நளீர் வமிச யூதர்களுக்குச் சொந்தமான
பொக்கிஷங்கள் இருந்தன. நபி (ஸல்) அவனிடம் அதைப் பற்றி விசாரிக்கவே, அவன் “அந்தப் பொக்கிஷம்
உள்ள இடம் எனக்குத் தெரியாது” என்று பொய்யுரைத்தான். அப்போது மற்றொரு யூதன் நபியவர்களிடம்
வந்து “கினானா ஒவ்வொரு நாள் காலையிலும் இந்த பாழடைந்த வீட்டிற்கு வந்து போவதை நான்
பார்த்திருக்கிறேன்” என்று கூறினான். உடனே நபி (ஸல்) அவர்கள் கினானாவிடம் “அவர் கூறுவது
போன்று அப்பொருள் உம்மிடம் இருந்தால் நான் உன்னை கொன்று விடட்டுமா?” என்று கேட்க அவன்
“சரி!” என்றான். நபியவர்களின் கட்டளைக்கிணங்க அந்த பாழடைந்த வீடு தோண்டப்பட்டு அதில்
பொக்கிஷங்களின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. நபி (ஸல்) “மீதமுள்ள பொக்கிஷங்கள் எங்கே?”
என்று கேட்க, அவன் அதைக் கொடுப்பதற்கு மறுத்து விட்டான். அவனை நபியவர்கள் ஜுபைடம் கொடுத்து
“இவனிடமுள்ள அனைத்தையும் வாங்கும் வரை இவனை வேதனை செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
ஜுபைர் (ரழி) அம்பின் கூய பகுதியால் அவனது நெஞ்சில் குத்தினார்கள். அவனது உயிர் போகும்
தருவாயில் அவனை முஹம்மது இப்னு மஸ்லமாவிடம் ஜுபைர் கொடுத்து விட்டார்கள். முஹம்மது
இப்னு மஸ்லமாவின் சகோதரர் மஹ்மூத், நா” கோட்டையின் சுவல் நிழலுக்காக அமர்ந்திருந்த
போது கோட்டையின் மேலிருந்து திருகைக் கல்லைத் தள்ளிவிட்டு யூதர்களால் கொல்லப்பட்டார்.
எனவே, முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) இவனைக் கொலை செய்தார்.
அபுல் ஹுகைகின் இரண்டு மகன்களும் பொருட்களை மறைத்து வைத்திருந்ததால் அவர்களை கொல்லும்படி
நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
புதுமணப் பெண்ணாக இருந்த ஹையின் மகள் ஸஃபிய்யாவை நபியவர்கள் சிறை பிடித்தார்கள். இவரைக்
‘கினானா இப்னு அபூ ஹுகைக்’ மணந்திருந்தான்.
கனீமத்தை பங்கு வைக்கப்படுதல்
நபி (ஸல்) யூதர்களைக் கைபரிலிருந்து வெளியேற்றி நாடு கடத்தத் திட்டமிட்டார்கள். ஆனால்
அவர்கள், “முஹம்மதே எங்களை இப்பூமியில் தங்கவிடுங்கள் நாங்கள் இப்பூமியை சீர்படுத்து
கிறோம் உங்களைவிட இந்த பூமியைப் பற்றி நாங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.” என்று
கூறினார்கள். நபியவர்களுக்கும், அவர்களது தோழர்களுக்கும் இப்பூமியைச் சீர்செய்வதற்கு
அடிமைகள் யாரும் இல்லை. சீர் செய்வதற்கு ஓய்வோ அவகாசமோ இவர்களுக்கும் இல்லை. எனவே,
விவசாயத்திலும் தோட்டங்களிலும் மகசூலில் ஒரு பகுதியைத் தர வேண்டும் என்ற நிபந்தனையிலும்,
நபி (ஸல்) கூறும் காலம் மட்டுமே இங்கு தங்கவேண்டும் என்ற நிபந்தனையிலும் கைபர் பூமியை
நபி (ஸல்) யூதர்களிடம் கொடுத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) கைபருடைய விளைச்சல்களின்
கண்காணிப்பாளராக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கைபர் பூமியை 36 பங்காகப் பிரித்தார்கள். பின்பு ஒவ்வொரு பங்கையும்
100 பங்காகப் பிரித்தார்கள். ஆக மொத்தம் 3600 பங்குகளாயின. அதிலிருந்து சமப்பாதி பங்கு
நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகும். அதாவது 1800 பங்குககளில் மற்ற
முஸ்லிம்களுக்குக் கிடைப்பதைப் போன்றே நபியவர்களுக்கும் ஒரு பங்கு என்று முடிவானது.
மீதமுண்டான 1800 பங்குகளைப் பொதுவாக முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காகவும்,
தேவைகளுக்காகவும் நபி (ஸல்) தனியாக ஒதுக்கி விட்டார்கள். நபி (ஸல்) இதை 1800 பங்குகளாக
ஆக்கியிருந்ததற்குக் காரணம்: இந்த கைபரின் வெற்றி அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஹுதைபிய்யாவில்
கலந்து கொண்டவர்களுக்காக வழங்கப்பட்டதாகும். அவர்கள் இங்கு இருப்பினும் ச, இல்லை என்றாலும்
ச. ஹுதைபிய்யாவில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 1400 நபர்களாவர். இவர்களில் 200 பேர்
குதிரை வீரர்கள். ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பங்குகள், குதிரை வீரருக்கு ஒரு பங்கு
என மொத்தம் மூன்று பங்குகள் கொடுக்கப்பட்டன. அதாவது 600 பங்குகள் 200 குதிரை வீரர்களுக்கும்,
1200 பங்குகள் 1200 காலாட்படை வீரர்களுக்கும் வழங்கப்பட்டன. (ஜாதுல் மஆது)
ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ள இப்னு உமரின் அறிவிப்பின் மூலம் கைபரில் அதிகம்
கனீமத்து பொருட்கள் கிடைக்கப் பெற்றன என்று தெரிய வருகிறது.
இப்னு உமர் (ரழி) கூறினார்கள்: “கைபரை வெற்றி கொள்ளும் வரை நாங்கள் வயிறாற உண்டதில்லை.
கைபர் வெற்றி கொள்ளப்பட்டதற்கு பிறகுதான் நாங்கள் வயிறாற பேரீத்தம் பழம் சாப்பிடுகிறோம்.”
(ஸஹீஹுல் புகாரி)
முஹாஜிர்களுக்குக் கைபரில் பேரீத்த மரங்களும், சொத்துகளும் கிடைத்துவிட்டதால் மதீனா
திரும்பியவுடன் அன்சாரிகள், முஹாஜிர்களுக்குக் கொடுத்திருந்த பேரீத்த மரங்களையெல்லாம்
அவர்களிடமே நபியவர்கள் திரும்பக் கொடுத்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)
ஜஅஃபர் மற்றும் அஷ்அரி கிளையினர் வருகை
இப்போர் முடிந்த பின்னர் ஜஅஃபர் (ரழி) அவர்களும், அபூமூஸா அல்அஷ்அரி (ரழி) அவர்களும்
தங்கள் தோழர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
இதைப் பற்றி அபூமூஸா (ரழி) கூறுகிறார்கள்: “நாங்கள் யமனில் வசித்து வந்தோம். முஹம்மது
(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த செய்தியை நாங்கள் அறிந்தோம். நானும் எனது சகோதரர்களும்,
50க்கும் மேற்பட்ட எங்களது கூட்டத்தினரும் நபியவர்களைச் சந்திக்கப் புறப்பட்டோம். ஆனால்,
எங்களது கப்பல் திசைமாறி ‘ஹபஷா’ சென்று விட்டது. அங்கு நஜ்ஜாஷியிடம் ஜஅஃபர் (ரழி) அவர்களும்
அவரது தோழர்களும் இருக்கக் கண்டோம். அவர் எங்களை இங்கு தங்குமாறு “நபி (ஸல்) அனுப்பி
இருக்கிறார்கள். எனவே, நீங்களும் எங்களுடன் தங்குங்கள்” என்று கூறினார். நாங்களும்
அவருடன் தங்கியிருந்தோம்.
பிறகு அவர் நபியவர்களை சந்திக்கப் புறப்பட்டபோது நாங்களும் அவருடன் புறப்பட்டோம். நாங்கள்
நபியவர்களை சந்திக்க மதீனா வந்தபோது அவர்கள் மதீனாவிலிருந்து கைபருக்கு புறப்பட்டு
விட்டார்கள். நாங்களும் கைபர் சென்றோம். கைபர் போரில் கலந்து கொள்ளாத எவருக்கும் கைபரில்
கிடைத்த கனீமத்தில் பங்கு கொடுக்கவில்லை. ஆனால், எங்களுக்கும் ஜஅஃபர் மற்றும் அவரது
தோழர்களுக்கும் நபி (ஸல்) கைபரின் கனீமத்தில் பங்கு கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
ஜஅஃபர் (ரழி) வந்தபோது அவரை வரவேற்று அவரது இரு கண்களுக்கிடையில் நபி (ஸல்) அவர்கள்
முத்தமிட்டார்கள். பின்பு “எனது அதிக மகிழ்ச்சிக்கு என்ன காரணம்? கைபரின் வெற்றியா?
ஜஅஃபன் வருகையா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அறியேன்” என்று கூறினார்கள். (முஃஜமுத்
தப்ரானி, ஜாதுல் மஆது)
குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் அம்ர் இப்னு உமைய்யா ழம் (ரழி) அவர்களை நஜ்ஜாஷியிடம் அனுப்பி
ஜஅஃபரையும் அவரது தோழர்களையும் அழைத்து வருமாறு கூறினார்கள். நஜ்ஜாஷி அவர்களை நபியவர்களிடம்
அனுப்பி வைத்தார். அந்நேரத்தில் அவர்கள் மொத்தம் 16 நபர்கள் இருந்தனர். மற்றவர்களெல்லாம்
இதற்கு முன்னதாகவே மதீனா வந்து விட்டனர். இந்த சமயத்தில் தான் அபூ மூஸாவும் ஜஅஃபருடன்
வந்தார்.