60. ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்)

மதனீ, வசனங்கள்: 13

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا عَدُوِّیْ وَعَدُوَّكُمْ اَوْلِیَآءَ تُلْقُوْنَ اِلَیْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَآءَكُمْ مِّنَ الْحَقِّ ۚ یُخْرِجُوْنَ الرَّسُوْلَ وَاِیَّاكُمْ اَنْ تُؤْمِنُوْا بِاللّٰهِ رَبِّكُمْ ؕ اِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِیْ سَبِیْلِیْ وَابْتِغَآءَ مَرْضَاتِیْ تُسِرُّوْنَ اِلَیْهِمْ بِالْمَوَدَّةِ ۖۗ وَاَنَا اَعْلَمُ بِمَاۤ اَخْفَیْتُمْ وَمَاۤ اَعْلَنْتُمْ ؕ وَمَنْ یَّفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تَتَّخِذُوْاநீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள்عَدُوِّیْஎன் பகைவனைوَ عَدُوَّكُمْஇன்னும் உங்கள் பகைவனைاَوْلِیَآءَஉற்ற நண்பர்களாகتُلْقُوْنَநீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள்اِلَیْهِمْஅவர்களிடம்بِالْمَوَدَّةِஅன்பைوَ قَدْதிண்ணமாகكَفَرُوْاஅவர்கள் நிராகரிக்கிறார்கள்بِمَاஎதைجَآءَكُمْஉங்களிடம் வந்ததோمِّنَஇருந்துالْحَقِّ ۚசத்தியத்தைیُخْرِجُوْنَஅவர்கள் வெளியேற்றுகிறார்கள்الرَّسُوْلَஇத்தூதரைوَ اِیَّاكُمْஇன்னும் உங்களையும்اَنْஏனெனில்تُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுرَبِّكُمْ ؕஉங்கள் இறைவனாகியاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்خَرَجْتُمْநீங்கள் புறப்பட்டுجِهَادًاஅறப்போர் செய்தவாறுفِیْஇல்سَبِیْلِیْஎன் பாதையில்وَ ابْتِغَآءَஇன்னும் தேடியவாறுمَرْضَاتِیْ ۖۗஎன் பொருத்தத்தைتُسِرُّوْنَநீங்கள் ரகசியமாக்குகிறீர்கள்اِلَیْهِمْஅவர்களிடம்بِالْمَوَدَّةِ ۖۗஅன்பைوَ اَنَاமேலும் நான்اَعْلَمُநன்கறிபவன்بِمَاۤஎதைاَخْفَیْتُمْநீங்கள் மறைத்தீர்களோوَ مَاۤஇன்னும் எதைاَعْلَنْتُمْ ؕநீங்கள் வெளிப்படுத்தினீர்களோوَ مَنْஇன்னும் எவர்یَّفْعَلْهُஅதைச் செய்கிறாரோمِنْكُمْஉங்களில்فَقَدْநிச்சயமாக அவர்ضَلَّவழிதவறிவிட்டார்سَوَآءَநேரானالسَّبِیْلِபாதையிலிருந்து
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதூ 'அதுவ்வீ வ 'அதுவாகும் அவ்லியா'அ துல்கூன இலய்ஹிம் Bபில்மவத்ததி வ கத் கFபரூ Bபிம ஜா'அகும் மினல் ஹக்கி, யுக்ரிஜூனர் ரஸூல வ இய்யாகும் அன் து'மினூ Bபில்லாஹி ரBப்Bபிகும் இன் குன்தும் கரஜ்தும் ஜிஹாதன் Fபீ ஸBபீலீ வBப்திகா'அ மர்ளாதீ; துஸிர்ரூன இலய்ஹிம் Bபில்ம வத்ததி வ அன அஃலமு Bபிமா அக்Fபய்தும் வ மா அஃலன்தும்; வ ம(ன்)ய் யFப்'அல்ஹு மின்கும் Fபகத் ளல்ல ஸவா'அஸ் ஸBபீல்
ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.
اِنْ یَّثْقَفُوْكُمْ یَكُوْنُوْا لَكُمْ اَعْدَآءً وَّیَبْسُطُوْۤا اِلَیْكُمْ اَیْدِیَهُمْ وَاَلْسِنَتَهُمْ بِالسُّوْٓءِ وَوَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ ۟ؕ
اِنْஎனின்یَّثْقَفُوْكُمْஅவர்கள் உங்களை அகப்படுத்திக் கொண்டால்یَكُوْنُوْاஅவர்கள் ஆகிவிடுவார்கள்لَكُمْஉங்களுக்குاَعْدَآءًபகைவர்களாகوَّ یَبْسُطُوْۤاமேலும் அவர்கள் நீட்டுவார்கள்اِلَیْكُمْஉங்களை நோக்கிاَیْدِیَهُمْதங்கள் கைகளைوَ اَلْسِنَتَهُمْமேலும் தங்கள் நாவுகளைبِالسُّوْٓءِதீமையைக் கொண்டுوَ وَدُّوْاமேலும் அவர்கள் விரும்புவார்கள்لَوْநீங்கள்تَكْفُرُوْنَؕநிராகரிப்பதை
இ(ன்)ய் யத்கFபூகும் யகூனூ லகும் அஃதா'அ(ன்)வ் வ யBப்ஸுதூ இலய்கும் அய்தியஹும் வ அல்ஸினதஹும் Bபிஸ்ஸூ'இ வ வத்தூ லவ் தக்Fபுரூன்
அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள்; தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.
لَنْ تَنْفَعَكُمْ اَرْحَامُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ ۛۚ یَوْمَ الْقِیٰمَةِ ۛۚ یَفْصِلُ بَیْنَكُمْ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
لَنْஒருபோதும்تَنْفَعَكُمْஉங்களுக்குப் பயனளிக்காதுاَرْحَامُكُمْஉங்கள் உறவினர்களும்وَ لَاۤமேலும் இல்லைاَوْلَادُكُمْ ۛۚஉங்கள் பிள்ளைகளும்یَوْمَநாளில்الْقِیٰمَةِ ۛۚமறுமைیَفْصِلُஅவன் தீர்ப்பளிப்பான்بَیْنَكُمْ ؕஉங்களுக்கிடையேوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோبَصِیْرٌஉற்று நோக்குபவன்
லன் தன்Fப'அகும் அர்ஹாமுகும் வ லா அவ்லாதுகும்; யவ்மல் கியாமதி யFப்ஸிலு Bபய்னகும்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
உங்கள் உறவினரும்; உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான்; அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
قَدْ كَانَتْ لَكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِیْۤ اِبْرٰهِیْمَ وَالَّذِیْنَ مَعَهٗ ۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؗ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَیْنَنَا وَبَیْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰی تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ لَاَسْتَغْفِرَنَّ لَكَ وَمَاۤ اَمْلِكُ لَكَ مِنَ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ رَبَّنَا عَلَیْكَ تَوَكَّلْنَا وَاِلَیْكَ اَنَبْنَا وَاِلَیْكَ الْمَصِیْرُ ۟
قَدْநிச்சயமாகكَانَتْஇருந்ததுلَكُمْஉங்களுக்குاُسْوَةٌஒரு முன்மாதிரிحَسَنَةٌஅழகியفِیْۤஇடத்தில்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்مَعَهٗ ۚஅவருடன் இருந்தார்களோاِذْபோதுقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لِقَوْمِهِمْதங்கள் சமூகத்தாரிடம்اِنَّاநிச்சயமாக நாங்கள்بُرَءٰٓؤُاவிலகியவர்கள்مِنْكُمْஉங்களை விட்டும்وَ مِمَّاமேலும் எவற்றிலிருந்தும்تَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்களோمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِ ؗஅல்லாஹ்வைكَفَرْنَاநாங்கள் நிராகரிக்கிறோம்بِكُمْஉங்களைوَ بَدَاமேலும் வெளிப்பட்டுவிட்டதுبَیْنَنَاஎங்களுக்கும்وَ بَیْنَكُمُஉங்களுக்கும் இடையில்الْعَدَاوَةُபகைமைوَ الْبَغْضَآءُமேலும் வெறுப்புاَبَدًاஎன்றென்றும்حَتّٰیவரைتُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொள்ளும்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَحْدَهٗۤஅவன் ஒருவன் மீது மட்டும்اِلَّاதவிரقَوْلَகூற்றைاِبْرٰهِیْمَஇப்ராஹீம்لِاَبِیْهِதன் தந்தையிடம்لَاَسْتَغْفِرَنَّநிச்சயமாக நான் பாவமன்னிப்புத் தேடுவேன்لَكَஉனக்காகوَ مَاۤமேலும் இல்லைاَمْلِكُநான் அதிகாரம் பெற்றிருக்கிறேன்لَكَஉனக்காகمِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்مِنْஎந்தشَیْءٍ ؕஒரு பொருளையும்رَبَّنَاஎங்கள் இறைவனேعَلَیْكَஉன் மீதேتَوَكَّلْنَاநாங்கள் பொறுப்புச் சாட்டினோம்وَ اِلَیْكَமேலும் உன்னிடமேاَنَبْنَاநாங்கள் திரும்பினோம்وَ اِلَیْكَமேலும் உன்னிடமேالْمَصِیْرُமீளுதல் உள்ளது
கத் கானத் லகும் உஸ்வதுன் ஹஸனதுன் Fபீ இBப்ராஹீம வல்லதீன ம'அஹூ இத் காலூ லிகவ்மிஹிம் இன்னா Bபுர 'ஆ'உ மின்கும் வ மிம்மா தஃBபுதூன மின் தூனில் லாஹி கFபர்னா Bபிகும் வ Bபதா Bபய்னனா வ Bபய்னகுமுல் 'அதாவது வல் Bபக்ளா'உ அBபதன் ஹத்தா து'மினூ Bபில்லாஹி வஹ்தஹூ இல்லா கவ்ல இBப்ரஹீம லி அBபீஹி ல அஸ்தக்Fபிரன்ன லக வ மா அம்லிகு லக மினல் லாஹி மின் ஷய்; ரBப்Bபனா 'அலய்க தவக்கல்னா வ இலய்க அனBப்னா வ இலய்கல் மஸீர்
இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِیْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَا ۚ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
رَبَّنَاஎங்கள் இறைவாلَاஆக்கிவிடாதேتَجْعَلْنَاஎங்களைفِتْنَةًசோதனையாகلِّلَّذِیْنَஎவர்களுக்குكَفَرُوْاநிராகரித்தார்களோوَ اغْفِرْமேலும் மன்னிப்பாயாகلَنَاஎங்களுக்குرَبَّنَا ۚஎங்கள் இறைவாاِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
ரBப்Bபன லா தஜ்'அல்னா Fபித்னதல் லில்லதீன கFபரூ வக்Fபிர் லனா ரBப்Bபனா இன்னக அன்தல் அZஜீZஜுல் ஹகீம்
“எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்” (என்றும் வேண்டினார்).
لَقَدْ كَانَ لَكُمْ فِیْهِمْ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ یَرْجُوا اللّٰهَ وَالْیَوْمَ الْاٰخِرَ ؕ وَمَنْ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟۠
لَقَدْநிச்சயமாகكَانَஇருக்கிறதுلَكُمْஉங்களுக்குفِیْهِمْஅவர்களிடத்தில்اُسْوَةٌமுன்மாதிரிحَسَنَةٌஅழகியلِّمَنْஎவருக்குكَانَஇருக்கிறாரோیَرْجُواஆதரவு வைக்கிறாரோاللّٰهَஅல்லாஹ்வைوَ الْیَوْمَமேலும் நாளைالْاٰخِرَ ؕஇறுதிوَ مَنْஇன்னும் எவர்یَّتَوَلَّபுறக்கணிக்கிறாரோفَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவனேالْغَنِیُّதேவையற்றவன்الْحَمِیْدُ۠புகழுக்குரியவன்
லகத் கான லகும் Fபீஹிம் உஸ்வதுன்ஹஸனதுல் லிமன் கான யர்ஜுல் லாஹ வல் யவ்மல் ஆகிர்; வ ம(ன்)ய் யதவல்ல Fப இன்னல் லாஹ ஹுவல் கனிய்யுல் ஹமீத்
உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும், நம்புகிறார்களோ. அவர்களுக்கு திடமாக இவர்களில் ஓர் அழகிய முன்மாதிரியிருக்கிறது; ஆனால், எவர் (இந்நம்பிக்கையிலிருந்து) பின் வாங்குகிறாரோ: (அது அவருக்கு இழப்புதான்; ஏனெனில், எவரிடமிருந்தும்) அல்லாஹ் நிச்சயமாக எந்தத் தேவையுமில்லாதவன், புகழ் மிக்கவன்.  
عَسَی اللّٰهُ اَنْ یَّجْعَلَ بَیْنَكُمْ وَبَیْنَ الَّذِیْنَ عَادَیْتُمْ مِّنْهُمْ مَّوَدَّةً ؕ وَاللّٰهُ قَدِیْرٌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
عَسَیகூடும்اللّٰهُஅல்லாஹ்اَنْஎன்றுیَّجْعَلَஏற்படுத்திடبَیْنَكُمْஉங்களுக்கும்وَ بَیْنَமற்றும் இடையில்الَّذِیْنَஎவர்களைعَادَیْتُمْநீங்கள் பகைத்தீர்களோمِّنْهُمْஅவர்களில்مَّوَدَّةً ؕநேசத்தைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்قَدِیْرٌ ؕபேராற்றல் மிக்கவன்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
அஸல் லாஹு அ(ன்)ய் யஜ்'அல Bபய்னகும் வ Bபய்னல் லதீன 'ஆதய்தும் மின்ஹும் மவத்தஹ்; வல்லஹு கதீர்; வல்லஹு கFபூருர் ரஹீம்
உங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
لَا یَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِیْنَ لَمْ یُقَاتِلُوْكُمْ فِی الدِّیْنِ وَلَمْ یُخْرِجُوْكُمْ مِّنْ دِیَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَتُقْسِطُوْۤا اِلَیْهِمْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
لَاஇல்லைیَنْهٰىكُمُஉங்களை அவன் தடுக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَنِகுறித்துالَّذِیْنَஎவர்கள்لَمْஇல்லைیُقَاتِلُوْكُمْஉங்களுடன் அவர்கள் போர் செய்யفِیஇல்الدِّیْنِமார்க்கம்وَ لَمْமேலும் இல்லைیُخْرِجُوْكُمْஉங்களை அவர்கள் வெளியேற்றمِّنْஇருந்துدِیَارِكُمْஉங்கள் இல்லங்கள்اَنْஎன்பதைتَبَرُّوْهُمْஅவர்களுக்கு நீங்கள் நன்மை செய்யوَ تُقْسِطُوْۤاமேலும் நீங்கள் நீதியாக நடக்கاِلَیْهِمْ ؕஅவர்களிடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُقْسِطِیْنَநீதியாளர்களை
லா யன்ஹாகுமுல் லாஹு 'அனில் லதீன லம் யுகாதிலூகும் Fபித் தீனி வ லம் யுக்ரிஜூகும் மின் தியாரிகும் அன் தBபர்ரூஹும் வ துக்ஸிதூ இலய்ஹிம்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முக்ஸிதீன்
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
اِنَّمَا یَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِیْنَ قٰتَلُوْكُمْ فِی الدِّیْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِیَارِكُمْ وَظٰهَرُوْا عَلٰۤی اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْ ۚ وَمَنْ یَّتَوَلَّهُمْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகیَنْهٰىكُمُஉங்களைத் தடுக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَنِஇருந்துالَّذِیْنَஎவர்கள்قٰتَلُوْكُمْஉங்களுடன் போரிட்டார்களோفِیஇல்الدِّیْنِமார்க்கம்وَ اَخْرَجُوْكُمْமேலும் உங்களை வெளியேற்றினார்களோمِّنْஇருந்துدِیَارِكُمْஉங்கள் இல்லங்கள்وَ ظٰهَرُوْاமேலும் உதவி செய்தார்களோعَلٰۤیமீதுاِخْرَاجِكُمْஉங்கள் வெளியேற்றம்اَنْஎன்றுتَوَلَّوْهُمْ ۚஅவர்களை நீங்கள் நேசர்களாக்குவதைوَ مَنْஇன்னும் எவர்یَّتَوَلَّهُمْஅவர்களை நேசர்களாக்குகிறாரோفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்கள் தாம்الظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
இன்னமா யன்ஹாகுமுல் லாஹு 'அனில் லதீன காதலூகும் Fபித் தீனி வ அக்ரஜூகும் மின் தியாரிகும் வ ளாஹரூ 'அலா இக்ராஜிகும் அன் தவல்லவ்ஹும்; வ ம(ன்)ய் யதவல்லஹும் Fப உலா'இக ஹுமுள் ளாலிமூன்
நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا جَآءَكُمُ الْمُؤْمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامْتَحِنُوْهُنَّ ؕ اَللّٰهُ اَعْلَمُ بِاِیْمَانِهِنَّ ۚ فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَی الْكُفَّارِ ؕ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ یَحِلُّوْنَ لَهُنَّ ؕ وَاٰتُوْهُمْ مَّاۤ اَنْفَقُوْا ؕ وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ ؕ وَلَا تُمْسِكُوْا بِعِصَمِ الْكَوَافِرِ وَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقْتُمْ وَلْیَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقُوْا ؕ ذٰلِكُمْ حُكْمُ اللّٰهِ ؕ یَحْكُمُ بَیْنَكُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِذَاபோதுجَآءَكُمُஉங்களிடம் வந்தால்الْمُؤْمِنٰتُநம்பிக்கை கொண்ட பெண்கள்مُهٰجِرٰتٍஹிஜ்ரத் செய்தவர்களாகفَامْتَحِنُوْهُنَّ ؕஅவர்களைச் சோதித்துப் பாருங்கள்اَللّٰهُஅல்லாஹ்اَعْلَمُநன்கறிந்தவன்بِاِیْمَانِهِنَّ ۚஅவர்களின் நம்பிக்கையைفَاِنْஎனவேعَلِمْتُمُوْهُنَّஅவர்களை நீங்கள் அறிந்து கொண்டால்مُؤْمِنٰتٍநம்பிக்கை கொண்ட பெண்கள் என்றுفَلَاஆகவே வேண்டாம்تَرْجِعُوْهُنَّஅவர்களைத் திருப்பி அனுப்பாதீர்கள்اِلَیபக்கம்الْكُفَّارِ ؕநிராகரிப்பாளர்களிடம்لَاஇல்லைهُنَّஅவர்கள்حِلٌّஅனுமதிக்கப்பட்டவர்கள்لَّهُمْஅவர்களுக்குوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَحِلُّوْنَஅனுமதிக்கப்பட்டவர்கள்لَهُنَّ ؕஅவர்களுக்குوَ اٰتُوْهُمْஅவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்مَّاۤஎதைاَنْفَقُوْا ؕஅவர்கள் செலவு செய்தார்களோوَ لَاமேலும் இல்லைجُنَاحَகுற்றம்عَلَیْكُمْஉங்கள் மீதுاَنْஎன்றுتَنْكِحُوْهُنَّஅவர்களை நீங்கள் மணந்து கொள்வதில்اِذَاۤபோதுاٰتَیْتُمُوْهُنَّஅவர்களுக்கு நீங்கள் கொடுத்துவிட்டால்اُجُوْرَهُنَّ ؕஅவர்களின் மஹர்களைوَ لَاமேலும் வேண்டாம்تُمْسِكُوْاபிடித்து வைத்திருக்காதீர்கள்بِعِصَمِதிருமண பந்தங்களைالْكَوَافِرِநிராகரிக்கும் பெண்களின்وَ سْـَٔلُوْاமேலும் கேளுங்கள்مَاۤஎதைاَنْفَقْتُمْநீங்கள் செலவு செய்தீர்களோوَ لْیَسْـَٔلُوْاமேலும் அவர்கள் கேட்கட்டும்مَاۤஎதைاَنْفَقُوْا ؕஅவர்கள் செலவு செய்தார்களோذٰلِكُمْஅதுவேحُكْمُதீர்ப்புاللّٰهِ ؕஅல்லாஹ்வின்یَحْكُمُஅவன் தீர்ப்பளிக்கிறான்بَیْنَكُمْ ؕஉங்களுக்கிடையேوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா ஜா'அகுமுல் மு'மினாது முஹாஜிராதின் Fபம்தஹினூ ஹுன்ன்; அல்லாஹு அஃலமு Bபி ஈமானி ஹின்ன்; Fப இன் 'அலிம்துமூ ஹுன்ன மு'மினாதின் Fபலா தர்ஜி'ஊ ஹுன்ன இலல் குFப்Fபார்; லா ஹுன்ன ஹில்லுல் லஹும் வலா ஹும் யஹில்லூன லஹுன்ன வ ஆதூஹும் மா அன்Fபகூ வலா ஜுனாஹ 'அலய்கும் அன் தன்கிஹூஹுன்ன இதா ஆதய்துமூஹுன்ன உஜூரஹுன்ன்; வலா தும்ஸிகூ Bபி 'இஸமில் கவாFபிர்; வஸ்'அலூ மா அன்Fபக்தும் வல்யஸ்'அலூ மா அன்Fபகூ; தாலிகும் ஹுக்முல் லாஹி யஹ்குமு Bபய்னகும்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்; (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
وَاِنْ فَاتَكُمْ شَیْءٌ مِّنْ اَزْوَاجِكُمْ اِلَی الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَاٰتُوا الَّذِیْنَ ذَهَبَتْ اَزْوَاجُهُمْ مِّثْلَ مَاۤ اَنْفَقُوْا ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
وَ اِنْமேலும் ஒருவேளைفَاتَكُمْஉங்களை விட்டுப் போய்விட்டால்شَیْءٌஎவரேனும்مِّنْஇருந்துاَزْوَاجِكُمْஉங்கள் மனைவியரில்اِلَیநோக்கிالْكُفَّارِநிராகரிப்பவர்களிடம்فَعَاقَبْتُمْநீங்கள் போரிட்டு வெற்றி பெற்றால்فَاٰتُواஅப்போது கொடுங்கள்الَّذِیْنَஎவர்களுக்குذَهَبَتْசென்றுவிட்டதோاَزْوَاجُهُمْஅவர்களின் மனைவியர்مِّثْلَசமமானதைمَاۤஎதைاَنْفَقُوْا ؕஅவர்கள் செலவு செய்தார்களோوَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைالَّذِیْۤஎவனைاَنْتُمْநீங்கள்بِهٖஅவன் மீதுمُؤْمِنُوْنَநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறீர்களோ
வ இன் Fபாதகும் ஷய்'உன் மின் அZஜ்வாஜிகும் இலல் குFப்Fபாரி Fப 'ஆகBப்தும் Fப ஆதுல் லதீன தஹBபத் அZஜ்வாஜுஹும் மித்ல மா அன்Fபகூ; வத்தகுல் லாஹல் லதீ அன்தும் Bபிஹீ மு'மினூன்
மேலும் உங்கள் மனைவியரிலிருந்து எவரேனும் உங்களைவிட்டுத் தப்பி, காஃபிர்களிடம் சென்ற பின்னர், நீங்கள் போர்ப்பொருள்களை அடைந்தால், எவர்கள் மனைவியர் சென்று விட்டனரோ, அவர்களுக்கு அவர்கள் செலவு செய்தது போன்றதை நீங்கள் கொடுங்கள்; அன்றியும், நீங்கள் எவன் மீது நம்பிக்கை கொண்டு முஃமின்களாக இருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِذَا جَآءَكَ الْمُؤْمِنٰتُ یُبَایِعْنَكَ عَلٰۤی اَنْ لَّا یُشْرِكْنَ بِاللّٰهِ شَیْـًٔا وَّلَا یَسْرِقْنَ وَلَا یَزْنِیْنَ وَلَا یَقْتُلْنَ اَوْلَادَهُنَّ وَلَا یَاْتِیْنَ بِبُهْتَانٍ یَّفْتَرِیْنَهٗ بَیْنَ اَیْدِیْهِنَّ وَاَرْجُلِهِنَّ وَلَا یَعْصِیْنَكَ فِیْ مَعْرُوْفٍ فَبَایِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேاِذَاபொழுதுجَآءَكَஉம்மிடம் வந்தால்الْمُؤْمِنٰتُஇறைநம்பிக்கைகொண்ட பெண்கள்یُبَایِعْنَكَஉம்மிடம் உறுதிப்பிரமாணம் செய்யعَلٰۤیமீதுاَنْஎன்றுلَّاஇல்லைیُشْرِكْنَஅவர்கள் இணைவைக்கبِاللّٰهِஅல்லாஹ்வுக்குشَیْـًٔاஎதனையும்وَّ لَاமேலும் இல்லைیَسْرِقْنَஅவர்கள் திருடوَ لَاமேலும் இல்லைیَزْنِیْنَஅவர்கள் விபச்சாரம் செய்யوَ لَاமேலும் இல்லைیَقْتُلْنَஅவர்கள் கொல்லاَوْلَادَهُنَّதங்களது குழந்தைகளைوَ لَاமேலும் இல்லைیَاْتِیْنَஅவர்கள் கொண்டுவரبِبُهْتَانٍஅவதூறைیَّفْتَرِیْنَهٗஅவர்கள் அதை இட்டுக்கட்டிبَیْنَஇடையேاَیْدِیْهِنَّதங்களது கைகள்وَ اَرْجُلِهِنَّமேலும் தங்களது கால்கள்وَ لَاமேலும் இல்லைیَعْصِیْنَكَஉமக்கு மாறுசெய்யفِیْஇல்مَعْرُوْفٍநன்மையான காரியத்தில்فَبَایِعْهُنَّஎனவே அவர்களிடம் உறுதிப்பிரமாணம் வாங்குவீராகوَ اسْتَغْفِرْமேலும் பாவமன்னிப்புத் தேடுவீராகلَهُنَّஅவர்களுக்காகاللّٰهَ ؕஅல்லாஹ்விடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்رَّحِیْمٌபெருங்கிருபையாளன்
யா அய்யுஹன் னBப்Bபிய்யு இதா ஜா'அகல் மு'மினாது யுBபாயிக்ஃனக 'அலா அல்லா யுஷ்ரிக்ன Bபில்லாஹி ஷய் 'அ(ன்)வ் வலா யஸ்ரிக்ன வலா யZஜ்னீன வலா யக்துல்ன அவ்லாதஹுன்ன வலா ய'தீன BபிBபுஹ்தானி(ன்)ய் யFப்தரீ னஹூ Bபய்ன அய்தீஹின்ன வ அர்ஜுலிஹின்ன வலா ய'ஸீனக Fபீ மஃரூFபின் Fப Bபாயிக்ஃ ஹுன்ன வஸ்தக்Fபிர் லஹுன்னல்ல ஹுன்ன் அல்லாஹ்; இன்னல்லாஹ கFபூருர் ரஹீம்
நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ قَدْ یَىِٕسُوْا مِنَ الْاٰخِرَةِ كَمَا یَىِٕسَ الْكُفَّارُ مِنْ اَصْحٰبِ الْقُبُوْرِ ۟۠
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تَتَوَلَّوْاநேசர்களாக ஆக்கிக் கொள்ளقَوْمًاஒரு சமூகத்தினரைغَضِبَகோபம் கொண்டானோاللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْஅவர்கள் மீதுقَدْநிச்சயமாகیَىِٕسُوْاஅவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்مِنَபற்றிالْاٰخِرَةِமறுமையைكَمَاஎவ்வாறுیَىِٕسَநம்பிக்கை இழந்தார்களோالْكُفَّارُநிராகரிப்பாளர்கள்مِنْபற்றிاَصْحٰبِவாசிகளைالْقُبُوْرِ۠மண்ணறைகளின்
யா அய்யுஹல் லதீன அமனூ லா ததவல்லவ் கவ்மன் களிBபல் லாஹு 'அலய்ஹிம் கத் ய'இஸூ மினல் ஆகிரதி கமா ய'இஸல் குFப்Fபாரு மின் அஸ் ஹாBபில் குBபூர்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.