62. ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)

மதனீ, வசனங்கள்: 11

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟
یُسَبِّحُதுதிக்கின்றனلِلّٰهِஅல்லாஹ்வைمَاஎவையெல்லாம்فِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاஇன்னும் எவையெல்லாம்فِیஉள்ளதோالْاَرْضِபூமியில்الْمَلِكِபேரரசன்الْقُدُّوْسِமகா பரிசுத்தமானவன்الْعَزِیْزِமிகைத்தவன்الْحَكِیْمِஞானமிக்கவன்
யுஸBப்Bபிஹு லிலாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளில் மலிகில் குத்தூஸில் 'அZஜீZஜில் ஹகீம்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன; (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
هُوَ الَّذِیْ بَعَثَ فِی الْاُمِّیّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِهٖ وَیُزَكِّیْهِمْ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ ۗ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟ۙ
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவன் என்றால்بَعَثَஅனுப்பினான்فِیமத்தியில்الْاُمِّیّٖنَஎழுதப்படிக்கத் தெரியாதவர்கள்رَسُوْلًاஒரு தூதரைمِّنْهُمْஅவர்களிலிருந்தேیَتْلُوْاஅவர் ஓதிக்காட்டுகிறார்عَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتِهٖஅவனுடைய வசனங்களைوَ یُزَكِّیْهِمْமேலும் அவர்களைத் தூய்மைப்படுத்துகிறார்وَ یُعَلِّمُهُمُமேலும் அவர்களுக்குக் கற்பிக்கிறார்الْكِتٰبَவேதத்தைوَ الْحِكْمَةَ ۗமேலும் ஞானத்தைوَ اِنْஇன்னும் நிச்சயமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்مِنْஇருந்துقَبْلُமுன்னால்لَفِیْநிச்சயமாகضَلٰلٍவழிகேட்டில்مُّبِیْنٍۙதெளிவான
ஹுவல் லதீ Bப'அத Fபில் உம்மிய்யீன ரஸூலம் மின் ஹும் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதிஹீ வ யுZஜக்கீஹிம் வ யு'அல்லிமுஹுமுல் கிதாBப வல் ஹிக்மத வ இன் கானூ மின் கBப்லு லFபீ ளலாலிம் முBபீன்
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
وَّاٰخَرِیْنَ مِنْهُمْ لَمَّا یَلْحَقُوْا بِهِمْ ؕ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
وَّ اٰخَرِیْنَஇன்னும் மற்றவர்களுக்கும்مِنْهُمْஅவர்களில்لَمَّاஇதுவரைیَلْحَقُوْاவந்து சேராதவர்களுக்கும்بِهِمْ ؕஅவர்களுடன்وَ هُوَமேலும் அவன்الْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
வ ஆகரீன மின்ஹும் லம்மா யல்ஹகூ Bபிஹிம் வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
ذٰلِكَஅதுفَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்یُؤْتِیْهِஅதை வழங்குகிறான்مَنْஎவருக்குیَّشَآءُ ؕநாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்ذُوஉடையவன்الْفَضْلِஅருளைالْعَظِیْمِமகத்தான
தாலிக Fபள்லுல் லாஹி யு'தீஹி ம(ன்)ய்-யஷா; வல்லாஹு துல் Fபள்லில் 'அளீம்
அதுவே அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான்; மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
مَثَلُ الَّذِیْنَ حُمِّلُوا التَّوْرٰىةَ ثُمَّ لَمْ یَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ یَحْمِلُ اَسْفَارًا ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
مَثَلُஉதாரணம்الَّذِیْنَஎவர்கள்حُمِّلُواசுமத்தப்பட்டார்களோالتَّوْرٰىةَதவ்ராத்தைثُمَّபின்னர்لَمْஇல்லைیَحْمِلُوْهَاஅதைச் சுமக்கிறார்களோكَمَثَلِஉதாரணத்தைப் போன்றதாகும்الْحِمَارِகழுதையின்یَحْمِلُசுமக்கின்றاَسْفَارًا ؕபுத்தகங்களைبِئْسَமிகக் கெட்டதாகும்مَثَلُஉதாரணம்الْقَوْمِமக்களின்الَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِاٰیٰتِவசனங்களைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاஇல்லைیَهْدِیநேர்வழி காட்டுகிறான்الْقَوْمَமக்களுக்குالظّٰلِمِیْنَஅநியாயக்கார
மதலுல் லதீன ஹும் மிலுத் தவ்ராத தும்ம லம் யஹ்மிலூஹா கமதலில் ஹிமாரி யஹ் மிலு அஸ்Fபாரா; Bபி'ஸ மதலுல் கவ்மில் லதீன காத்தBபூ Bபி ஆயாதில் லாஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள்ளாலிமீன்
எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
قُلْ یٰۤاَیُّهَا الَّذِیْنَ هَادُوْۤا اِنْ زَعَمْتُمْ اَنَّكُمْ اَوْلِیَآءُ لِلّٰهِ مِنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
قُلْகூறுவீராகیٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்هَادُوْۤاயூதர்களாகிவிட்டார்களோاِنْஒருவேளைزَعَمْتُمْநீங்கள் கருதினால்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்اَوْلِیَآءُநேசர்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குمِنْவிடدُوْنِஅன்றிالنَّاسِமனிதர்களைفَتَمَنَّوُاஎனவே விரும்புங்கள்الْمَوْتَமரணத்தைاِنْஒருவேளைكُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
குல் யா அய்யுஹல் லதீன ஹாதூ இன் Zஜ'அம்தும் அன்னகும் அவ்லியா' உலிலாஹி மின் தூனின் னாஸி Fபதமன்னவுல் மவ்த இன் குன்தும் ஸாதிகீன்
(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.”
وَلَا یَتَمَنَّوْنَهٗۤ اَبَدًا بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
وَ لَاமேலும் மாட்டார்கள்یَتَمَنَّوْنَهٗۤஅதை அவர்கள் விரும்பاَبَدًۢاஒருபோதும்بِمَاஎதன் காரணமாகقَدَّمَتْமுற்படுத்தியதோاَیْدِیْهِمْ ؕஅவர்களின் கைகள்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களை
வ லா யதமன்னவ் னஹூ அBபதம் Bபிமா கத்தமத் அய்தீஹிம்; வல்லாஹு 'அலீமும் Bபிள் ளாலிமீன்
ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِیْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِیْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟۠
قُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகالْمَوْتَமரணம்الَّذِیْஎதனைتَفِرُّوْنَநீங்கள் தப்பியோடுகிறீர்களோمِنْهُஅதிலிருந்துفَاِنَّهٗஆகவே நிச்சயமாக அதுمُلٰقِیْكُمْஉங்களைச் சந்திக்கும்ثُمَّபின்னர்تُرَدُّوْنَநீங்கள் திருப்பப்படுவீர்கள்اِلٰیநோக்கிعٰلِمِநன்கறிபவனைالْغَیْبِமறைவானவற்றைوَ الشَّهَادَةِமற்றும் வெளிப்படையானவற்றைفَیُنَبِّئُكُمْஅப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்بِمَاஎவற்றைكُنْتُمْநீங்கள்تَعْمَلُوْنَ۠செய்து கொண்டிருந்தீர்களோ
குல் இன்னல் மவ்தல் லதீ தFபிர்ரூன மின்ஹு Fப இன்னஹூ முலாகீகும் தும்ம துரத்தூன இலா 'ஆலிமில் கய்Bபி வஷ் ஷஹாததி Fப யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِیَ لِلصَّلٰوةِ مِنْ یَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰی ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَیْعَ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِذَاபொழுதுنُوْدِیَஅழைக்கப்பட்டால்لِلصَّلٰوةِதொழுகைக்காகمِنْஅன்றுیَّوْمِநாளில்الْجُمُعَةِஜுமுஆفَاسْعَوْاவிரைந்து செல்லுங்கள்اِلٰیநோக்கிذِكْرِநினைவுகூர்வதற்குاللّٰهِஅல்லாஹ்வின்وَ ذَرُواமேலும் விட்டுவிடுங்கள்الْبَیْعَ ؕவியாபாரத்தைذٰلِكُمْஅதுவேخَیْرٌமிகச் சிறந்ததுلَّكُمْஉங்களுக்குاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْلَمُوْنَஅறிந்தவர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா னூதிய லிஸ்-ஸலாதி மி(ன்)ய் யவ்மில் ஜுமு'அதி Fபஸ்'அவ் இலா திக்ரில் லாஹி வ தருல் Bபய்'; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
فَاِذَا قُضِیَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِی الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِیْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
فَاِذَاஎனவே எப்போதுقُضِیَتِமுடிக்கப்படுமோالصَّلٰوةُதொழுகைفَانْتَشِرُوْاபரவிச் செல்லுங்கள்فِیஇல்الْاَرْضِபூமிوَ ابْتَغُوْاமேலும் தேடுங்கள்مِنْஇருந்துفَضْلِஅருட்கொடைاللّٰهِஅல்லாஹ்வின்وَ اذْكُرُواமேலும் நினைவு கூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைكَثِیْرًاஅதிகமாகلَّعَلَّكُمْநீங்கள்تُفْلِحُوْنَவெற்றி பெறுவீர்கள்
Fப-இதா குளியதிஸ் ஸலாது Fபன்தஷிரூ Fபில் அர்ளி வBப்தகூ மின் Fபள்லில் லாஹி வத்குருல் லாஹ கதீரல் ல'அல்லகும் துFப்லிஹூன்
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا نْفَضُّوْۤا اِلَیْهَا وَتَرَكُوْكَ قَآىِٕمًا ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ ؕ وَاللّٰهُ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟۠
وَ اِذَاமேலும் எப்போதுرَاَوْاஅவர்கள் கண்டார்களோتِجَارَةًஒரு வியாபாரத்தையோاَوْஅல்லதுلَهْوَاஒரு வேடிக்கையையோِ۟انْفَضُّوْۤاஅவர்கள் கலைந்து சென்றார்கள்اِلَیْهَاஅதன் பக்கம்وَ تَرَكُوْكَமேலும் உம்மை விட்டுவிட்டார்கள்قَآىِٕمًا ؕநின்ற நிலையில்قُلْநீர் கூறுவீராகمَاஎதுعِنْدَஉள்ளதோاللّٰهِஅல்லாஹ்விடம்خَیْرٌஅதுவே மேலானதுمِّنَவிடاللَّهْوِவேடிக்கையைوَ مِنَமேலும் விடالتِّجَارَةِ ؕவியாபாரத்தைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்خَیْرُமிகச் சிறந்தவன்الرّٰزِقِیْنَ۠உணவளிப்பவர்களில்
வ இதா ர'அவ் திஜாரதன் அவ் லஹ்வனின் Fபள்ளூ இலய்ஹா வ தரகூக கா'இமா; குல் மா 'இன்தல் லாஹி கய்ரும் மினல் லஹ்வி வ மினத் திஜாரஹ்; வல்லாஹு கய்ருர் ராZஜிகீன்
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.