43. ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்)

மக்கீ, வசனங்கள்: 89

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالْكِتٰبِ الْمُبِیْنِ ۟ۙۛ
وَ الْكِتٰبِவேதத்தின் மீது சத்தியமாகالْمُبِیْنِۙۛதெளிவான
வல் கிதாBபில் முBபீன்
விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக.
اِنَّا جَعَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِیًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟ۚ
اِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنٰهُஅதனை ஆக்கினோம்قُرْءٰنًاகுர்ஆனாகعَرَبِیًّاஅரபு மொழியில்لَّعَلَّكُمْநீங்கள்تَعْقِلُوْنَۚவிளங்கிக் கொள்வதற்காக
இன்னா ஜ'அல்னாஹு குர்'ஆனன் 'அரBபிய்யல் ல'அல்லகும் தஃகிலூன்
நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்.
وَاِنَّهٗ فِیْۤ اُمِّ الْكِتٰبِ لَدَیْنَا لَعَلِیٌّ حَكِیْمٌ ۟ؕ
وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அதுفِیْۤஇல்اُمِّமூலالْكِتٰبِவேதத்தின்لَدَیْنَاநம்மிடம்لَعَلِیٌّநிச்சயமாக உயர்ந்ததுحَكِیْمٌؕஞானம் மிக்கது
வ இன்னஹூ Fபீ உம்மில் கிதாBபி லதய்னா ல'அலிய்யுன் ஹகீம்
இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள உம்முல் கிதாபில் (தாய் நூலில்) இருக்கிறது. (இதுவே வேதங்களில்) மிக்க மேலானதும், ஞானம் மிக்கதுமாகும்.
اَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا اَنْ كُنْتُمْ قَوْمًا مُّسْرِفِیْنَ ۟
اَفَنَضْرِبُநாம் விலக்கிவிடுவோமாعَنْكُمُஉங்களிடமிருந்துالذِّكْرَஅறிவுரையைصَفْحًاமுற்றாகاَنْஎன்பதால்كُنْتُمْநீங்கள் இருக்கிறீர்கள்قَوْمًاஒரு சமூகமாகمُّسْرِفِیْنَவரம்பு மீறியவர்களாக
அFப னள்ரிBபு 'அன்குமுத் திக்ர ஸFப்ஹன் அன் குன்தும் கவ்மன் முஸ்ரிFபீன்
நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகி விட்டீர்கள் என்பதற்காக, இந்த உபதேசத்தை உங்களைவிட்டு நாம் அகற்றி விடுவோமா?
وَكَمْ اَرْسَلْنَا مِنْ نَّبِیٍّ فِی الْاَوَّلِیْنَ ۟
وَ كَمْஇன்னும் எத்தனையோاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مِنْஇருந்துنَّبِیٍّநபிமார்களைفِیஇல்الْاَوَّلِیْنَமுன்னோர்கள்
வ கம் அர்ஸல்னா மின் னBபிய்யின் Fபில் அவ்வலீன்
அன்றியும், முன்னிருந்தோர்களிடமும் நாம் எத்தனையோ தூதர்களை அனுப்பியிருக்கிறோம்.
وَمَا یَاْتِیْهِمْ مِّنْ نَّبِیٍّ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைیَاْتِیْهِمْஅவர்களிடம் வரும்مِّنْஎந்த ஒருنَّبِیٍّஇறைத்தூதரும்اِلَّاஅன்றிكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்بِهٖஅவரைப்یَسْتَهْزِءُوْنَபரிகசிப்பவர்களாக
வமா யா'தீஹிம் மின் னBபிய்யின் இல்லா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
ஆனால் அவர்களிடம் வந்த நபி ஒவ்வொருவரையும் அவர்கள் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை.
فَاَهْلَكْنَاۤ اَشَدَّ مِنْهُمْ بَطْشًا وَّمَضٰی مَثَلُ الْاَوَّلِیْنَ ۟
فَاَهْلَكْنَاۤஎனவே நாம் அழித்தோம்اَشَدَّமிகக் கடுமையானவர்களைمِنْهُمْஅவர்களை விடبَطْشًاவலிமையில்وَّ مَضٰیமேலும் கடந்துவிட்டதுمَثَلُஉதாரணம்الْاَوَّلِیْنَமுன்னோர்களின்
Fப அஹ்லக்னா அஷத்த மின்ஹும் Bபத்ஷ(ன்)வ் வ மளா மதலுல் அவ்வலீன்
எனினும் இவர்களை விட மிக்க பலசாலிகளான அவர்களைப் பிடியாகப் பிடித்து நாம் அழித்து இருக்கிறோம்; (இவ்வாறாக உங்களுக்கு) முன்னிருந்தோரின் உதாரணம் நடந்தேறியிருக்கிறது.
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَیَقُوْلُنَّ خَلَقَهُنَّ الْعَزِیْزُ الْعَلِیْمُ ۟ۙ
وَ لَىِٕنْமேலும் நிச்சயமாகسَاَلْتَهُمْநீர் அவர்களிடம் கேட்டால்مَّنْயார்خَلَقَபடைத்ததுالسَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமற்றும் பூமியைلَیَقُوْلُنَّஅவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்خَلَقَهُنَّஅவற்றைப் படைத்தான்الْعَزِیْزُமிகைத்தவன்الْعَلِیْمُۙமுற்றறிந்தவன்
வ ல'இன் ஸ அல்தஹும் மன் கலகஸ் ஸமாவாதி வல் அர்ள ல யகூலுன்ன கலக ஹுன்னல் 'அZஜீZஜுல் 'அலீம்
(நபியே!) நீர் அவர்களிடம்: “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.
الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ مَهْدًا وَّجَعَلَ لَكُمْ فِیْهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟ۚ
الَّذِیْஅவன்தான்جَعَلَஆக்கினான்لَكُمُஉங்களுக்குالْاَرْضَபூமியைمَهْدًاஒரு விரிப்பாகوَّ جَعَلَமேலும் அமைத்தான்لَكُمْஉங்களுக்குفِیْهَاஅதில்سُبُلًاபாதைகளைلَّعَلَّكُمْநீங்கள்تَهْتَدُوْنَۚவழியறிந்து செல்வதற்காக
அல்லதீ ஜ'அல லகுமுல் அர்ள மஹ்த(ன்)வ் வ ஜ'அல லகும் Fபீஹா ஸுBபுலன் ல'அல்லகும் தஹ்ததூன்
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.
وَالَّذِیْ نَزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ ۚ فَاَنْشَرْنَا بِهٖ بَلْدَةً مَّیْتًا ۚ كَذٰلِكَ تُخْرَجُوْنَ ۟
وَ الَّذِیْமேலும் எவன்نَزَّلَஇறக்கினானோمِنَஇருந்துالسَّمَآءِவானத்தில்مَآءًۢநீரைبِقَدَرٍ ۚஅளவோடுفَاَنْشَرْنَاபின்னர் நாம் உயிர்ப்பித்தோம்بِهٖஅதைக் கொண்டுبَلْدَةًஒரு நிலத்தைمَّیْتًا ۚஇறந்தكَذٰلِكَஇவ்வாறேتُخْرَجُوْنَநீங்கள் எழுப்பப்படுவீர்கள்
வல்லதீ னZஜ்Zஜல மினஸ் ஸமா'இ மா'அம் Bபிகதரின் Fப அன்ஷர்னா Bபிஹீ Bபல்ததம் மய்தா' கதாலிக துக்ரஜூன்
அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.
وَالَّذِیْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا وَجَعَلَ لَكُمْ مِّنَ الْفُلْكِ وَالْاَنْعَامِ مَا تَرْكَبُوْنَ ۟ۙ
وَ الَّذِیْமேலும் எவன்خَلَقَபடைத்தானோالْاَزْوَاجَஇணைகளைكُلَّهَاஅனைத்தையும்وَ جَعَلَமேலும் ஆக்கினான்لَكُمْஉங்களுக்காகمِّنَஇருந்துالْفُلْكِகப்பல்களில்وَ الْاَنْعَامِமற்றும் கால்நடைகளில்مَاஎவற்றின் மீதுتَرْكَبُوْنَۙநீங்கள் சவாரி செய்கிறீர்களோ
வல்லதீ கலகல் அZஜ்வாஜ குல்லஹா வ ஜ'அல லகும் மினல் Fபுல்கி வல்-அன்'ஆமி மா தர்கBபூன்
அவன் தான் ஜோடிகள் யாவையும் படைத்தான்; உங்களுக்காக, கப்பல்களையும், நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான் -
لِتَسْتَوٗا عَلٰی ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَیْتُمْ عَلَیْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِیْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِیْنَ ۟ۙ
لِتَسْتَوٗاநீங்கள் அமர்வதற்காகعَلٰیமீதுظُهُوْرِهٖஅதன் முதுகுகளின்ثُمَّபின்னர்تَذْكُرُوْاநீங்கள் நினைவு கூர்வதற்காகنِعْمَةَஅருட்கொடையைرَبِّكُمْஉங்கள் இறைவனின்اِذَاபோதுاسْتَوَیْتُمْநீங்கள் அமர்ந்து விட்டால்عَلَیْهِஅதன் மீதுوَ تَقُوْلُوْاமேலும் நீங்கள் கூறுவதற்காகسُبْحٰنَமிகத் தூய்மையானவன்الَّذِیْஎவன்سَخَّرَவசப்படுத்திக் கொடுத்தானோلَنَاநமக்குهٰذَاஇதனைوَ مَاமேலும் இல்லைكُنَّاநாம் இருந்தோம்لَهٗஇதற்குمُقْرِنِیْنَۙகட்டுப்படுத்தக் கூடியவர்களாக
லிதஸ்தவூ 'அலா ளுஹூரிஹீ தும்ம தத்குரூ னிஃமத ரBப்Bபிகும் இதஸ்தவய்தும் 'அலய்ஹி வ தகூலூ ஸுBப்ஹானல் லதீ ஸக்கர லன ஹாத வமா குன்னா லஹூ முக்ரினீன்
அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக; அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து “இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்” என்று நீங்கள் கூறுவதற்காகவும்.
وَاِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ ۟
وَ اِنَّاۤமேலும் நிச்சயமாக நாம்اِلٰیநோக்கிرَبِّنَاஎங்கள் இறைவனைلَمُنْقَلِبُوْنَநிச்சயமாகத் திரும்புபவர்கள்
வ இன்னா இலா ரBப்Bபினா லமுன்கலிBபூன்
“மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள் (என்று பிரார்த்தித்துக் கூறவும் அவ்வாறு செய்தான்).
وَجَعَلُوْا لَهٗ مِنْ عِبَادِهٖ جُزْءًا ؕ اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ مُّبِیْنٌ ۟ؕ۠
وَ جَعَلُوْاமேலும் அவர்கள் ஆக்கினார்கள்لَهٗஅவனுக்குمِنْஇருந்துعِبَادِهٖஅவனுடைய அடியார்களில்جُزْءًا ؕஒரு பகுதியைاِنَّநிச்சயமாகالْاِنْسَانَமனிதன்لَكَفُوْرٌநிச்சயமாகப் பெரும் நன்றிகெட்டவன்مُّبِیْنٌؕ۠தெளிவானவன்
வ ஜ'அலூ லஹூ மின் 'இBபாதிஹீ ஜுZஜ்'ஆ; இன்னல் இன்ஸான ல கFபூருன் முBபீன்
இன்னும், அவர்கள் அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை அவனுக்கு(ப் பெண் சந்ததியை) ஆக்குகிறார்கள்; நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான்.  
اَمِ اتَّخَذَ مِمَّا یَخْلُقُ بَنٰتٍ وَّاَصْفٰىكُمْ بِالْبَنِیْنَ ۟
اَمِஅல்லதுاتَّخَذَஅவன் எடுத்துக் கொண்டானாمِمَّاஎவற்றிலிருந்துیَخْلُقُஅவன் படைக்கிறானோبَنٰتٍபெண் மக்களைوَّ اَصْفٰىكُمْமேலும் உங்களைத் தேர்ந்தெடுத்தானாبِالْبَنِیْنَஆண் மக்களைக் கொண்டு
அமித் தகத மிம்மா யக்லுகு Bபனாதி(ன்)வ் வ அஸ்Fபாகும் Bபில்Bபனீன்
அல்லது, தான் படைத்ததிலிருந்து அவன் தனக்கென பெண்மக்களை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு ஆண் மக்களை தேர்ந்தெடுத்து விட்டானா?
وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِمَا ضَرَبَ لِلرَّحْمٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِیْمٌ ۟
وَ اِذَاமேலும் எப்போதுبُشِّرَநற்செய்தி கூறப்பட்டால்اَحَدُهُمْஅவர்களில் ஒருவனுக்குبِمَاஎதனைضَرَبَஅவன் ஆக்கினானோلِلرَّحْمٰنِஅளவற்ற அருளாளனுக்குمَثَلًاஉதாரணமாகظَلَّஆகிவிடுகிறதுوَجْهُهٗஅவனுடைய முகம்مُسْوَدًّاகறுத்ததாகوَّ هُوَமேலும் அவன்كَظِیْمٌகோபத்தை அடக்கியவனாக
வ இதா Bபுஷ்ஷிர அஹதுஹும் Bபிமா ளரBப லிர் ரஹ்மானி மதலன் ளல்ல வஜ்ஹுஹூ முஸ்வத்த(ன்)வ் வ ஹுவ களீம்
அர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.
اَوَمَنْ یُّنَشَّؤُا فِی الْحِلْیَةِ وَهُوَ فِی الْخِصَامِ غَیْرُ مُبِیْنٍ ۟
اَوَ مَنْஎன்ன! எவர்یُّنَشَّؤُاவளர்க்கப்படுகிறாரோفِیஇல்الْحِلْیَةِஆபரணம்وَ هُوَமேலும் அவர்فِیஇல்الْخِصَامِவிவாதம்غَیْرُஅற்றவர்مُبِیْنٍதெளிவு
அவ மய் யுனஷ்ஷ'உ Fபில் ஹில்யதி வ ஹுவ Fபில் கிஸாமி கய்ரு முBபீன்
ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத ஒன்றினையா (இணையாக்குகின்றனர்).
وَجَعَلُوا الْمَلٰٓىِٕكَةَ الَّذِیْنَ هُمْ عِبٰدُ الرَّحْمٰنِ اِنَاثًا ؕ اَشَهِدُوْا خَلْقَهُمْ ؕ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَیُسْـَٔلُوْنَ ۟
وَ جَعَلُواமேலும் அவர்கள் ஆக்கினார்கள்الْمَلٰٓىِٕكَةَவானவர்களைالَّذِیْنَஎத்தகையோர் என்றால்هُمْஅவர்கள்عِبٰدُஅடியார்கள்الرَّحْمٰنِஅளவற்ற அருளாளனின்اِنَاثًا ؕபெண்களாகاَشَهِدُوْاஅவர்கள் சாட்சியாக இருந்தார்களா?خَلْقَهُمْ ؕஅவர்கள் படைக்கப்பட்டதைسَتُكْتَبُஎழுதப்படும்شَهَادَتُهُمْஅவர்களின் சாட்சியம்وَ یُسْـَٔلُوْنَமேலும் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்
வ ஜ'அலுல் மலா'இகதல் லதீன ஹும் 'இBபாதுர் ரஹ்மானி இனாதா; 'அ ஷஹிதூ கல்கஹும்; ஸதுக்தBபு ஷஹாததுஹும் வ யுஸ்'அலூன்
அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.
وَقَالُوْا لَوْ شَآءَ الرَّحْمٰنُ مَا عَبَدْنٰهُمْ ؕ مَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۗ اِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟ؕ
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்لَوْஒருவேளைشَآءَநாடியிருந்தால்الرَّحْمٰنُஅளவற்ற அருளாளன்مَاஇல்லைعَبَدْنٰهُمْ ؕஅவர்களை நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்مَاஇல்லைلَهُمْஅவர்களுக்குبِذٰلِكَஅதைப் பற்றிمِنْஎந்தعِلْمٍ ۗஅறிவும்اِنْஇல்லைهُمْஅவர்கள்اِلَّاதவிரیَخْرُصُوْنَؕகற்பனை செய்கிறார்கள்
வ காலூ லவ் ஷா'அர் ரஹ்மானு மா 'அBபத்னாஹும்; மா லஹும் Bபிதாலிக மின் 'இல்மின் இன் ஹும் இல்லா யக்ருஸூன்
மேலும், “அர் ரஹ்மான் நாடியிருந்தால், அவர்களை நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்; அவர்களுக்கு இதைப்பற்றி யாதோர் அறிவுமில்லை; அவர்கள் பொய்யே கூறுகிறார்கள்.
اَمْ اٰتَیْنٰهُمْ كِتٰبًا مِّنْ قَبْلِهٖ فَهُمْ بِهٖ مُسْتَمْسِكُوْنَ ۟
اَمْஅல்லதுاٰتَیْنٰهُمْநாம் அவர்களுக்கு வழங்கினோமாكِتٰبًاஒரு வேதத்தைمِّنْஅதற்குقَبْلِهٖமுன்னர்فَهُمْஎனவே அவர்கள்بِهٖஅதனைمُسْتَمْسِكُوْنَஉறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கிறார்களா
அம் ஆதய்னாஹும் கிதாBபன் மின் கBப்லிஹீ Fபஹும் Bபிஹீ முஸ்தம்ஸிகூன்
அல்லது, அவர்கள் ஆதாரமாகக் கொள்வதற்காக இதற்கு முன்னால் நாம் அவர்களுக்கு ஏதாவதொரு வேதத்தை கொடுத்திருக்கிறோமா?
بَلْ قَالُوْۤا اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّةٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِهِمْ مُّهْتَدُوْنَ ۟
بَلْமாறாகقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்وَجَدْنَاۤகண்டோம்اٰبَآءَنَاஎங்கள் முன்னோர்களைعَلٰۤیமீதுاُمَّةٍஒரு மார்க்கத்தின்وَّ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்عَلٰۤیமீதுاٰثٰرِهِمْஅவர்களின் அடிச்சுவடுகளின்مُّهْتَدُوْنَநேர்வழி பெறுபவர்கள்
Bபல் காலூ இன்னா வஜத்னா ஆBபா'அனா 'அலா உம்மதி(ன்)வ் வ இன்னா 'அலா ஆதாரிஹிம் முஹ்ததூன்
அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்.”
وَكَذٰلِكَ مَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِیْ قَرْیَةٍ مِّنْ نَّذِیْرٍ اِلَّا قَالَ مُتْرَفُوْهَاۤ ۙ اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّةٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِهِمْ مُّقْتَدُوْنَ ۟
وَ كَذٰلِكَஇவ்வாறேمَاۤஇல்லைاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مِنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னால்فِیْஇல்قَرْیَةٍஓர் ஊரில்مِّنْஎந்த ஒருنَّذِیْرٍஎச்சரிக்கையாளரைاِلَّاதவிரقَالَகூறினார்கள்مُتْرَفُوْهَاۤ ۙஅவ்வூரின் வசதி படைத்தவர்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்وَجَدْنَاۤகண்டோம்اٰبَآءَنَاஎங்களது முன்னோர்களைعَلٰۤیமீதுاُمَّةٍஒரு மார்க்கத்தின்وَّ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்عَلٰۤیமீதுاٰثٰرِهِمْஅவர்களது அடிச்சுவடுகளின்مُّقْتَدُوْنَபின்பற்றுபவர்கள்
வ கதாலிக மா அர்ஸல்னா மின் கBப்லிக Fபீ கர்யதிம் மின் னதீரின் இல்லா கால முத்ரFபூஹா இன்னா வஜத்னா ஆBபா'அனா 'அலா உம்மதி(ன்)வ் வ இன்னா 'அலா ஆதாரிஹிம் முக்ததூன்
இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்” என்று கூறாதிருக்கவில்லை.
قٰلَ اَوَلَوْ جِئْتُكُمْ بِاَهْدٰی مِمَّا وَجَدْتُّمْ عَلَیْهِ اٰبَآءَكُمْ ؕ قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
قٰلَகூறினார்اَوَ لَوْஎன்ன! இருந்தாலுமாجِئْتُكُمْநான் உங்களிடம் கொண்டு வந்தேன்بِاَهْدٰیமேலான நேர்வழியைمِمَّاஎதை விடوَجَدْتُّمْநீங்கள் கண்டீர்களோعَلَیْهِஅதன் மீதுاٰبَآءَكُمْ ؕஉங்கள் மூதாதையர்களைقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்بِمَاۤஎதனைக் கொண்டுاُرْسِلْتُمْநீங்கள் அனுப்பப்பட்டீர்களோبِهٖஅதைக் கொண்டுكٰفِرُوْنَநிராகரிப்பவர்கள்
கால அவ லவ் ஜி'துகும் Bபி அஹ்தா மிம்மா வஜத்த்தும் 'அலய்ஹி ஆBபா'அகும் காலூ இன்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ காFபிரூன்
(அப்பொழுது அத்தூதர்,) “உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள்: “நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்” என்று சொல்கிறார்கள்.
فَانْتَقَمْنَا مِنْهُمْ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟۠
فَانْتَقَمْنَاஆகவே நாம் பழிவாங்கினோம்مِنْهُمْஅவர்களிடமிருந்துفَانْظُرْஆகவே நீர் பார்ப்பீராகكَیْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُكَذِّبِیْنَ۠பொய்ப்பித்தவர்களின்
Fபன்தகம்னா மின்ஹும் Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முகத்திBபீன்
ஆகவே, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக!
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ لِاَبِیْهِ وَقَوْمِهٖۤ اِنَّنِیْ بَرَآءٌ مِّمَّا تَعْبُدُوْنَ ۟ۙ
وَ اِذْஇன்னும் (நினைவுகூருங்கள்)قَالَகூறினார்اِبْرٰهِیْمُஇப்ராஹீம்لِاَبِیْهِதம் தந்தையிடம்وَ قَوْمِهٖۤதம் சமூகத்தாரிடமும்اِنَّنِیْநிச்சயமாக நான்بَرَآءٌமுற்றிலும் விலகியவன்مِّمَّاஎவற்றிலிருந்துتَعْبُدُوْنَۙநீங்கள் வணங்குகிறீர்களோ
வ இத் கால இBப்ராஹீமு லிஅBபீஹி வ கவ்மிஹீ இன்னனீ Bபரா'உம் மிம்மா தஃBபுதூன்
அன்றியும், இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்;
اِلَّا الَّذِیْ فَطَرَنِیْ فَاِنَّهٗ سَیَهْدِیْنِ ۟
اِلَّاதவிரالَّذِیْஎவன்فَطَرَنِیْஎன்னைப் படைத்தானோفَاِنَّهٗஎனவே நிச்சயமாக அவன்سَیَهْدِیْنِஎனக்கு நேர்வழி காட்டுவான்
இல்லல் லதீ Fபதரனீ Fப இன்னஹூ ஸ யஹ்தீன்
“என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்). அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான்” (என்றும் கூறியதை நினைவு கூர்வீராக)!
وَجَعَلَهَا كَلِمَةً بَاقِیَةً فِیْ عَقِبِهٖ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَ جَعَلَهَاமேலும் அவன் அதனை ஆக்கினான்كَلِمَةًۢஒரு வார்த்தையாகبَاقِیَةًநிலைத்திருக்கக்கூடியதாகفِیْஇல்عَقِبِهٖஅவனது சந்ததியினர்لَعَلَّهُمْஅவர்கள்یَرْجِعُوْنَதிரும்புவதற்காக
வ ஜ'அலஹா கலிமதன் Bபாகியதன் Fபீ 'அகிBபிஹீ ல 'அல்லஹும் யர்ஜி'ஊன்
இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்ராஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.
بَلْ مَتَّعْتُ هٰۤؤُلَآءِ وَاٰبَآءَهُمْ حَتّٰی جَآءَهُمُ الْحَقُّ وَرَسُوْلٌ مُّبِیْنٌ ۟
بَلْமாறாகمَتَّعْتُநான் சுகமனுபவிக்கச் செய்தேன்هٰۤؤُلَآءِஇவர்களைوَ اٰبَآءَهُمْஇவர்களுடைய மூதாதையர்களையும்حَتّٰیவரைجَآءَهُمُஅவர்களிடம் வரும்الْحَقُّசத்தியம்وَ رَسُوْلٌஒரு தூதரும்مُّبِیْنٌதெளிவான
Bபல் மத்தஃது ஹா'உலா'இ வ ஆBபா'அஹும் ஹத்தா ஜா'அ ஹுமுல் ஹக்கு வ ரஸூலுன் முBபீன்
எனினும், இவர்களிடம் உண்மையும் தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டு வைத்தேன்.
وَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ قَالُوْا هٰذَا سِحْرٌ وَّاِنَّا بِهٖ كٰفِرُوْنَ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுجَآءَهُمُஅவர்களிடம் வந்ததோالْحَقُّசத்தியம்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்هٰذَاஇதுسِحْرٌசூனியம்وَّ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்بِهٖஅதனைكٰفِرُوْنَநிராகரிப்பவர்கள்
வ லம்மா ஜா'அஹுமுல் ஹக்கு காலூ ஹாதா ஸிஹ்ரு(ன்)வ் வ இன்னா Bபிஹீ காFபிரூன்
ஆனால், உண்மை (வேதம்) அவர்களிடம் வந்த போது “இது சூனியமே தான்; நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கின்றோம்” என்று அவர்கள் கூறினர்.
وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰی رَجُلٍ مِّنَ الْقَرْیَتَیْنِ عَظِیْمٍ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்لَوْ لَاஏன்نُزِّلَஇறக்கப்படவில்லைهٰذَاஇந்தالْقُرْاٰنُகுர்ஆன்عَلٰیமீதுرَجُلٍஒரு மனிதர்مِّنَஇருந்துالْقَرْیَتَیْنِஇரு ஊர்களில்عَظِیْمٍகண்ணியமிக்க
வ காலூ லவ் லா னுZஜ்Zஜில ஹாதல் குர்'ஆனு 'அலா ரஜுலின் மினல் கர்யதய்னி 'அளீம்
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?”
اَهُمْ یَقْسِمُوْنَ رَحْمَتَ رَبِّكَ ؕ نَحْنُ قَسَمْنَا بَیْنَهُمْ مَّعِیْشَتَهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّیَتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِیًّا ؕ وَرَحْمَتُ رَبِّكَ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟
اَهُمْஅவர்களாیَقْسِمُوْنَபங்கிடுகிறார்கள்رَحْمَتَஅருளைرَبِّكَ ؕஉமது இறைவனின்نَحْنُநாமேقَسَمْنَاபங்கிட்டோம்بَیْنَهُمْஅவர்களுக்கு இடையில்مَّعِیْشَتَهُمْஅவர்களுடைய வாழ்வாதாரத்தைفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَاஉலகوَ رَفَعْنَاமேலும் நாம் உயர்த்தினோம்بَعْضَهُمْஅவர்களில் சிலரைفَوْقَமேல்بَعْضٍசிலருக்குدَرَجٰتٍஅந்தஸ்துகளில்لِّیَتَّخِذَஆக்கிக் கொள்வதற்காகبَعْضُهُمْஅவர்களில் சிலர்بَعْضًاசிலரைسُخْرِیًّا ؕஊழியர்களாகوَ رَحْمَتُமேலும் அருள்رَبِّكَஉமது இறைவனின்خَیْرٌமேலானதுمِّمَّاஎதைவிடیَجْمَعُوْنَஅவர்கள் சேகரிக்கிறார்களோ
'அ ஹும் யக்ஸிமூன ரஹ்மத ரBப்Bபிக்; னஹ்னு கஸம்னா Bபய்னஹும் ம'ஈஷதஹும் Fபில் ஹயாதித் துன்யா வ ரFபஃனா Bபஃளஹும் Fபவ்க Bபஃளின் தரஜாதின் லி யத்தகித Bபஃளுஹும் Bபஃளன் ஸுக்ரிய்யா; வ ரஹ்மது ரBப்Bபிக கய்ருன் மிம்மா யஜ்ம'ஊன்
உமது இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம்.” இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.
وَلَوْلَاۤ اَنْ یَّكُوْنَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً لَّجَعَلْنَا لِمَنْ یَّكْفُرُ بِالرَّحْمٰنِ لِبُیُوْتِهِمْ سُقُفًا مِّنْ فِضَّةٍ وَّمَعَارِجَ عَلَیْهَا یَظْهَرُوْنَ ۟ۙ
وَ لَوْ لَاۤமற்றும் இல்லையென்றால்اَنْஎன்றுیَّكُوْنَஆகிவிடுவார்கள்النَّاسُமனிதர்கள்اُمَّةًசமுதாயமாகوَّاحِدَةًஒரேلَّجَعَلْنَاநாம் ஆக்கியிருப்போம்لِمَنْஎவர்یَّكْفُرُநிராகரிக்கிறாரோبِالرَّحْمٰنِஅளவற்ற அருளாளனைلِبُیُوْتِهِمْஅவர்களின் வீடுகளுக்குسُقُفًاகூரைகளைمِّنْஇலிருந்துفِضَّةٍவெள்ளிوَّ مَعَارِجَமற்றும் படிக்கட்டுகளையும்عَلَیْهَاஅவற்றின் மீதுیَظْهَرُوْنَۙஅவர்கள் ஏறிச் செல்வார்கள்
வ லவ் லா அ(ன்)ய் யகூனன் னாஸு உம்மத(ன்)வ் வாஹிததன் லஜ'அல்னா லிம(ன்)ய் யக்Fபுரு Bபிர் ரஹ்மானி லி Bபுயூதிஹிம் ஸுகுFபன் மின் Fபிள்ளதி(ன்)வ் வ ம'ஆரிஜ 'அலய்ஹா யள்ஹரூன்
நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.
وَلِبُیُوْتِهِمْ اَبْوَابًا وَّسُرُرًا عَلَیْهَا یَتَّكِـُٔوْنَ ۟ۙ
وَ لِبُیُوْتِهِمْமேலும் அவர்களுடைய வீடுகளுக்குاَبْوَابًاகதவுகளையும்وَّ سُرُرًاமேலும் கட்டில்களையும்عَلَیْهَاஅவற்றின் மீதுیَتَّكِـُٔوْنَۙஅவர்கள் சாய்ந்திருப்பார்கள்
வ லி Bபுயூதிஹிம் அBப்வாBப(ன்)வ் வ ஸுருரன் 'அலய்ஹா யத்தகி'ஊன்
அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).
وَزُخْرُفًا ؕ وَاِنْ كُلُّ ذٰلِكَ لَمَّا مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَالْاٰخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِیْنَ ۟۠
وَ زُخْرُفًا ؕமேலும் பொன்னையும்وَ اِنْமேலும் இல்லைكُلُّஅனைத்தும்ذٰلِكَஅதுلَمَّاஅன்றிمَتَاعُஅற்ப சுகமேالْحَیٰوةِவாழ்க்கையின்الدُّنْیَا ؕஇவ்வுலகوَ الْاٰخِرَةُமேலும் மறுமையோعِنْدَஇடத்தில்رَبِّكَஉமது இறைவனின்لِلْمُتَّقِیْنَ۠இறையச்சமுடையோருக்கே
வ Zஜுக்ருFபா; வ இன் குல்லு தாலிக லம்மா மதா'உல் ஹயாதித் துன்யா; வல் ஆகிரது 'இன்த ரBப்Bபிக லில்முத்தகீன்
தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வேறில்லை. ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம்.  
وَمَنْ یَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَیِّضْ لَهٗ شَیْطٰنًا فَهُوَ لَهٗ قَرِیْنٌ ۟
وَ مَنْமேலும் எவர்یَّعْشُபுறக்கணிக்கிறாரோعَنْவிட்டுذِكْرِநினைவைالرَّحْمٰنِஅளவற்ற அருளாளனின்نُقَیِّضْநாம் சாட்டுவோம்لَهٗஅவருக்குشَیْطٰنًاஒரு ஷைத்தானைفَهُوَஎனவே அவன்لَهٗஅவருக்குقَرِیْنٌஉற்ற தோழன்
வ மய் யஃஷு 'அன் திக்ரிர் ரஹ்மானி னுகய்யிள் லஹூ ஷய்தானன் Fபஹுவ லஹூ கரீன்
எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
وَاِنَّهُمْ لَیَصُدُّوْنَهُمْ عَنِ السَّبِیْلِ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ۟
وَ اِنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்لَیَصُدُّوْنَهُمْஅவர்களைத் தடுக்கின்றனர்عَنِஇருந்துالسَّبِیْلِநேர்வழியைوَ یَحْسَبُوْنَமேலும் அவர்கள் எண்ணுகின்றனர்اَنَّهُمْதாங்கள்مُّهْتَدُوْنَநேர்வழி பெற்றவர்கள்
வ இன்னஹும் ல யஸுத்தூ னஹும் 'அனிஸ் ஸBபீலி வ யஹ்ஸBபூன அன்னஹும் முஹ்ததூன்
இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.
حَتّٰۤی اِذَا جَآءَنَا قَالَ یٰلَیْتَ بَیْنِیْ وَبَیْنَكَ بُعْدَ الْمَشْرِقَیْنِ فَبِئْسَ الْقَرِیْنُ ۟
حَتّٰۤیவரைاِذَاபோதுجَآءَنَاஅவன் நம்மிடம் வரும்قَالَஅவன் கூறுவான்یٰلَیْتَஅந்தோبَیْنِیْஎனக்கும்وَ بَیْنَكَஉனக்கும் இடையில்بُعْدَதொலைவுالْمَشْرِقَیْنِஇரு கிழக்குகளின்فَبِئْسَமிகவும் கெட்டالْقَرِیْنُகூட்டாளி
ஹத்தா இதா ஜா'அனா கால யா லய்த Bபய்னீ வ Bபய்னக Bபுஃதல் மஷ்ரிகய்னி FபBபி'ஸல் கரீன்
எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்):- “ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்” என்று கூறுவான்.
وَلَنْ یَّنْفَعَكُمُ الْیَوْمَ اِذْ ظَّلَمْتُمْ اَنَّكُمْ فِی الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ۟
وَ لَنْமேலும் ஒருபோதும்یَّنْفَعَكُمُஉங்களுக்குப் பயனளிக்காதுالْیَوْمَஇன்றுاِذْஏனெனில்ظَّلَمْتُمْநீங்கள் அநீதி இழைத்தீர்கள்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்فِیஇல்الْعَذَابِவேதனைمُشْتَرِكُوْنَபங்கு கொள்பவர்கள்
வ லய் யன்Fப'அகுமுல் யவ்ம இத் ளலம்தும் அன்னகும் Fபில் 'அதாBபி முஷ்தரிகூன்
(அப்போது) “நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).
اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ اَوْ تَهْدِی الْعُمْیَ وَمَنْ كَانَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
اَفَاَنْتَஎன்ன, நீராتُسْمِعُகேட்கச் செய்வீராالصُّمَّசெவிடர்களைاَوْஅல்லதுتَهْدِیநேர்வழி காட்டுவீராالْعُمْیَகுருடர்களைوَ مَنْமேலும் எவர்كَانَஇருக்கிறாரோفِیْஉள்ளضَلٰلٍவழிகேட்டில்مُّبِیْنٍதெளிவான
அFப அன்த துஸ்மி'உஸ் ஸும்ம அவ் தஹ்தில் 'உம்ய வ மன் கான Fபீ ளலாலின் முBபீன்
ஆகவே (நபியே!) நீர் செவிடனை கேட்குமாறு செய்ய முடியுமா? அல்லது குருடனையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவனையும் நேர்வழியில் செலுத்த முடியுமா?
فَاِمَّا نَذْهَبَنَّ بِكَ فَاِنَّا مِنْهُمْ مُّنْتَقِمُوْنَ ۟ۙ
فَاِمَّاஎனவே ஒருவேளைنَذْهَبَنَّநாம் கொண்டு சென்றாலும்بِكَஉம்மைفَاِنَّاநிச்சயமாக நாம்مِنْهُمْஅவர்களிடமிருந்துمُّنْتَقِمُوْنَۙபழிவாங்குவோம்
Fப இம்மா னத்ஹBபன்ன Bபிக Fப இன்னா மின்ஹும் முன்தகிமூன்
எனவே உம்மை நாம் (இவ்வுலகை விட்டும்) எடுத்துக் கொண்ட போதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி தீர்ப்போம்.
اَوْ نُرِیَنَّكَ الَّذِیْ وَعَدْنٰهُمْ فَاِنَّا عَلَیْهِمْ مُّقْتَدِرُوْنَ ۟
اَوْஅல்லதுنُرِیَنَّكَஉமக்குக் காண்பிப்போம்الَّذِیْஎதைوَعَدْنٰهُمْஅவர்களுக்கு நாம் வாக்களித்தோமோفَاِنَّاஆகவே நிச்சயமாக நாம்عَلَیْهِمْஅவர்கள் மீதுمُّقْتَدِرُوْنَபேராற்றலுடையவர்கள்
அவ் னுரியன்னகல் லதீ வ'அத்னாஹும் Fப இன்னா 'அலய்ஹிம் முக்ததிரூன்
அல்லது நாம் அவர்களுக்கு (எச்சரித்து) வாக்களித்துள்ளதை (வேதனையை) நீர் காணும் படிச் செய்வோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றலுடையோராய் இருக்கின்றோம்.
فَاسْتَمْسِكْ بِالَّذِیْۤ اُوْحِیَ اِلَیْكَ ۚ اِنَّكَ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
فَاسْتَمْسِكْஎனவே நீர் உறுதியாகப் பற்றிக்கொள்வீராகبِالَّذِیْۤஎதனைاُوْحِیَவஹீ அறிவிக்கப்பட்டதோاِلَیْكَ ۚஉமக்குاِنَّكَநிச்சயமாக நீர்عَلٰیமீதுصِرَاطٍபாதையின்مُّسْتَقِیْمٍநேரான
Fபஸ்தம்ஸிக் Bபில்லதீ ஊஹிய இலய்க இன்னக 'அலா ஸிராதின் முஸ்தகீம்
(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர்.
وَاِنَّهٗ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ ۚ وَسَوْفَ تُسْـَٔلُوْنَ ۟
وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அதுلَذِكْرٌஒரு நினைவூட்டலாகும்لَّكَஉமக்கும்وَ لِقَوْمِكَ ۚஉம்முடைய சமூகத்தாருக்கும்وَ سَوْفَமேலும் விரைவில்تُسْـَٔلُوْنَநீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்
வ இன்னஹூ ல திக்ருன் லக வ லிகவ்மிக வ ஸவ்Fப துஸ்'அலூன்
நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
وَسْـَٔلْ مَنْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُّسُلِنَاۤ اَجَعَلْنَا مِنْ دُوْنِ الرَّحْمٰنِ اٰلِهَةً یُّعْبَدُوْنَ ۟۠
وَ سْـَٔلْமேலும் நீர் கேட்பீராகمَنْஎவரைاَرْسَلْنَاநாம் அனுப்பினோமோمِنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னர்مِنْஇருந்துرُّسُلِنَاۤநம்முடைய தூதர்கள்اَجَعَلْنَاநாம் ஆக்கினோமாمِنْஇருந்துدُوْنِஅன்றிالرَّحْمٰنِஅளவற்ற அருளாளனைاٰلِهَةًதெய்வங்களைیُّعْبَدُوْنَ۠வணங்கப்படக்கூடிய
வஸ்'அல் மன் அர்ஸல்னா மின் கBப்லிக மிர் ருஸுலினா 'அ ஜ'அல்னா மின் தூனிர் ரஹ்மானி ஆலிஹத(ன்)ய் யுஃBபதூன்
நம்முடைய தூதர்களில் உமக்கு முன்னே நாம் அனுப்பியவர்களை “அர் ரஹ்மானையன்றி வணங்கப்படுவதற்காக (வேறு) தெய்வங்களை நாம் ஏற்படுத்தினோமா?” என்று நீர் கேட்பீராக.  
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَقَالَ اِنِّیْ رَسُوْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰیமூஸாவைبِاٰیٰتِنَاۤநம் அத்தாட்சிகளுடன்اِلٰیபால்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்وَ مَلَاۡىِٕهٖஅவனுடைய தலைவர்களிடமும்فَقَالَஅப்போது அவர் கூறினார்اِنِّیْநிச்சயமாக நான்رَسُوْلُதூதர்رَبِّஇறைவனின்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Fபகால இன்னீ ரஸூலு ரBப்Bபில் 'ஆலமீன்
மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமுதாய தலைவர்களிடமும் திட்டமாக நாம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி:) “நிச்சயமாக நாம் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று கூறினார்.
فَلَمَّا جَآءَهُمْ بِاٰیٰتِنَاۤ اِذَا هُمْ مِّنْهَا یَضْحَكُوْنَ ۟
فَلَمَّاஎனவே எப்போதுجَآءَهُمْஅவர்களிடம் அவர் வந்தாரோبِاٰیٰتِنَاۤநம்முடைய அத்தாட்சிகளுடன்اِذَاஉடனேهُمْஅவர்கள்مِّنْهَاஅவற்றைக் கண்டுیَضْحَكُوْنَசிரிக்கலானார்கள்
Fபலம்ம ஜா'அஹும் Bபி ஆயாதினா இதா ஹும் மின்ஹா யள்ஹகூன்
ஆனால், அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்தபோது, அவர்கள் அவற்றைக் கொண்டு (பரிகசித்துச்) சிரித்தனர்.
وَمَا نُرِیْهِمْ مِّنْ اٰیَةٍ اِلَّا هِیَ اَكْبَرُ مِنْ اُخْتِهَا ؗ وَاَخَذْنٰهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைنُرِیْهِمْநாம் அவர்களுக்குக் காண்பிக்கும்مِّنْஎந்த ஒருاٰیَةٍஅத்தாட்சியையும்اِلَّاதவிரهِیَஅதுاَكْبَرُமிகப் பெரியதாகمِنْவிடاُخْتِهَا ؗஅதன் சகோதரியைوَ اَخَذْنٰهُمْமேலும் நாம் அவர்களைப் பிடித்தோம்بِالْعَذَابِவேதனையைக் கொண்டுلَعَلَّهُمْஅவர்கள்یَرْجِعُوْنَமீளுவதற்காக
வமா னுரீஹிம் மின் ஆயதின் இல்லா ஹிய அக்Bபரு மின் உக்திஹா வ அகத்னாஹும் Bபில்'அதாBபி ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
ஆனால் நாம் அவர்களுக்குக் காட்டிய ஒவ்வோர் அத்தாட்சியும், அடுத்ததை விட மிகவும் பெரிதாகவே இருந்தது; எனினும் அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக நாம் அவர்களை வேதனையைக் கொண்டே பிடித்தோம்.
وَقَالُوْا یٰۤاَیُّهَ السّٰحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ ۚ اِنَّنَا لَمُهْتَدُوْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்یٰۤاَیُّهَالسّٰحِرُசூனியக்காரரேادْعُபிரார்த்திப்பீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉமது இறைவனிடம்بِمَاஎதைக் கொண்டுعَهِدَஅவன் வாக்குறுதி அளித்துள்ளானோعِنْدَكَ ۚஉம்மிடம்اِنَّنَاநிச்சயமாக நாங்கள்لَمُهْتَدُوْنَநேர்வழி பெறுபவர்களாவோம்
வ காலூ யா அய்யுஹஸ் ஸாஹிருத்'உ லனா ரBப்Bபக Bபிமா 'அஹித 'இன்தக இன்னனா லமுஹ்ததூன்
மேலும், அவர்கள்: “சூனியக்காரரே (உம் இறைவன்) உம்மிடம் அறுதிமானம் செய்திருப்பதால், நீர் எங்களுக்காக உம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தனை செய்)யும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை பெற்று விடுவோம்” என்று கூறினார்கள்.
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ اِذَا هُمْ یَنْكُثُوْنَ ۟
فَلَمَّاஆனால் எப்போதுكَشَفْنَاநாம் நீக்கினோமோعَنْهُمُஅவர்களிடமிருந்துالْعَذَابَவேதனையைاِذَاஉடனேهُمْஅவர்கள்یَنْكُثُوْنَவாக்கு மீறினார்கள்
Fபலம்மா கஷFப்னா 'அன்ஹுமுல் 'அதாBப இதா ஹும் யன்குதூன்
எனினும், நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியதும், அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்து விட்டார்கள்.
وَنَادٰی فِرْعَوْنُ فِیْ قَوْمِهٖ قَالَ یٰقَوْمِ اَلَیْسَ لِیْ مُلْكُ مِصْرَ وَهٰذِهِ الْاَنْهٰرُ تَجْرِیْ مِنْ تَحْتِیْ ۚ اَفَلَا تُبْصِرُوْنَ ۟ؕ
وَ نَادٰیஇன்னும் அழைத்தான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்فِیْமத்தியில்قَوْمِهٖதனது மக்களிடம்قَالَகூறினான்یٰقَوْمِஎன் மக்களேاَلَیْسَஇல்லையாلِیْஎனக்குمُلْكُஆட்சிمِصْرَஎகிப்தின்وَ هٰذِهِமேலும் இந்தالْاَنْهٰرُஆறுகள்تَجْرِیْஓடுகின்றனمِنْஇருந்துتَحْتِیْ ۚஎனக்குக் கீழேاَفَلَاஅப்படியிருக்கتُبْصِرُوْنَؕநீங்கள் பார்க்கவில்லையா
வ னாதா Fபிர்'அவ்னு Fபீ கவ்மிஹீ கால யா கவ்மி அலய்ஸ லீ முல்கு மிஸ்ர வ ஹாதிஹில் அன்ஹாரு தஜ்ரீ மின் தஹ்தீ அFபலா துBப்ஸிரூன்
மேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்: “என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்ரு (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா? என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா?
اَمْ اَنَا خَیْرٌ مِّنْ هٰذَا الَّذِیْ هُوَ مَهِیْنٌ ۙ۬ وَّلَا یَكَادُ یُبِیْنُ ۟
اَمْஅல்லதுاَنَاநான்خَیْرٌசிறந்தவன்مِّنْவிடهٰذَاஇவனைالَّذِیْஎவன்هُوَஅவன்مَهِیْنٌ ۙ۬இழிவானவனோوَّ لَاமேலும் இல்லைیَكَادُஇயலுகிறதோیُبِیْنُதெளிவாகப் பேச
அம் அன கய்ருன் மின் ஹாதல் லதீ ஹுவ மஹீனு(ன்)வ் வலா யகாது யுBபீன்
“அல்லது, இழிவானவரும், தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா?
فَلَوْلَاۤ اُلْقِیَ عَلَیْهِ اَسْوِرَةٌ مِّنْ ذَهَبٍ اَوْ جَآءَ مَعَهُ الْمَلٰٓىِٕكَةُ مُقْتَرِنِیْنَ ۟
فَلَوْ لَاۤஏன் இல்லைاُلْقِیَஅணிவிக்கப்படعَلَیْهِஅவருக்குاَسْوِرَةٌவளையல்கள்مِّنْஆனذَهَبٍதங்கம்اَوْஅல்லதுجَآءَவந்திருக்கمَعَهُஅவருடன்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்مُقْتَرِنِیْنَஅணிவகுத்து
Fபலவ் லா உல்கிய 'அலய்ஹி அஸ்விரதுன் மின் தஹBபின் அவ் ஜா'அ ம'அஹுல் மலா'இகது முக்தரினீன்
“(என்னைவிட இவர் மேலாயிருப்பின்) ஏன் இவருக்கு பொன்னாலாகிய கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது அவருடன் மலக்குகள் கூட்டமாக வர வேண்டாமா?”
فَاسْتَخَفَّ قَوْمَهٗ فَاَطَاعُوْهُ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟
فَاسْتَخَفَّஆகவே அவன் ஏமாற்றினான்قَوْمَهٗதன் சமூகத்தைفَاَطَاعُوْهُ ؕஎனவே அவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَوْمًاஒரு சமூகமாகفٰسِقِیْنَவரம்பு மீறியவர்களாக
Fபஸ்தகFப்Fப கவ்மஹூ Fப அதா'ஊஹ்; இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
(இவ்வாறாக) அவன் தன் சமூகத்தாரை (அவர்களுடைய அறிவை) இலேசாக மதித்தான்; அவனுக்கு அவர்களும் கீழ்ப்படிந்து விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வரம்பை மீறிய சமூகத்தாராகவும் ஆகி விட்டார்கள்.
فَلَمَّاۤ اٰسَفُوْنَا انْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
فَلَمَّاۤஆகவே எப்போதுاٰسَفُوْنَاஅவர்கள் நம்மை கோபப்படுத்தினார்களோانْتَقَمْنَاநாம் பழிவாங்கினோம்مِنْهُمْஅவர்களிடமிருந்துفَاَغْرَقْنٰهُمْஆகவே அவர்களை நாம் மூழ்கடித்தோம்اَجْمَعِیْنَۙஅனைவரையும்
Fபலம்மா ஆஸFபூனன் தகம்னா மின்ஹும் Fப அக்ரக்னாஹும் அஜ்ம'ஈன்
பின்னர், அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம்.
فَجَعَلْنٰهُمْ سَلَفًا وَّمَثَلًا لِّلْاٰخِرِیْنَ ۟۠
فَجَعَلْنٰهُمْஎனவே நாம் அவர்களை ஆக்கினோம்سَلَفًاமுன்சென்றவர்களாகوَّ مَثَلًاமேலும் ஓர் உதாரணமாகلِّلْاٰخِرِیْنَ۠பின்வருபவர்களுக்கு
Fபஜ'அல்னாஹும் ஸலFப(ன்)வ் வ மதலன் லில் ஆகிரீன்
இன்னும், நாம், அவர்களை (அழிந்து போன) முந்தியவர்களாகவும், பின் வருவோருக்கு உதாரணமாகவும் ஆக்கினோம்.  
وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْیَمَ مَثَلًا اِذَا قَوْمُكَ مِنْهُ یَصِدُّوْنَ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுضُرِبَஎடுத்துக்காட்டப்பட்டாரோابْنُமகன்مَرْیَمَமர்யமின்مَثَلًاஉதாரணமாகاِذَاஅப்போதுقَوْمُكَஉமது சமூகத்தினர்مِنْهُஅதைக் கேட்டுیَصِدُّوْنَஆரவாரம் செய்கின்றனர்
வ லம்மா ளுரிBபBப் னு மர்யம மதலன் இதா கவ்முக மின்ஹு யஸித்தூன்
இன்னும் மர்யமுடைய மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது, உம்முடைய சமூகத்தார் (பரிகசித்து) ஆர்ப்பரித்தார்கள்.
وَقَالُوْۤا ءَاٰلِهَتُنَا خَیْرٌ اَمْ هُوَ ؕ مَا ضَرَبُوْهُ لَكَ اِلَّا جَدَلًا ؕ بَلْ هُمْ قَوْمٌ خَصِمُوْنَ ۟
وَ قَالُوْۤاமேலும் அவர்கள் கூறினார்கள்ءَاٰلِهَتُنَاஎங்கள் தெய்வங்களாخَیْرٌசிறந்தவைاَمْஅல்லதுهُوَ ؕஅவராمَاஇல்லைضَرَبُوْهُஅவர்கள் அதனை முன்வைத்தனர்لَكَஉமக்குاِلَّاதவிரجَدَلًا ؕதர்க்கத்திற்காகவேبَلْமாறாகهُمْஅவர்கள்قَوْمٌஒரு கூட்டத்தினர்خَصِمُوْنَவீண் தர்க்கம் செய்பவர்கள்
வ காலூ 'அஆலிஹதுனா கய்ருன் அம் ஹூ; மா ளரBபூஹு லக இல்லா ஜதலா; Bபல்ஹும் கவ்முன் கஸிமூன்
மேலும்: “எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; அவரை வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்.
اِنْ هُوَ اِلَّا عَبْدٌ اَنْعَمْنَا عَلَیْهِ وَجَعَلْنٰهُ مَثَلًا لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
اِنْஇல்லைهُوَஅவர்اِلَّاதவிரعَبْدٌஓர் அடியார்اَنْعَمْنَاநாம் அருள்புரிந்தோம்عَلَیْهِஅவர் மீதுوَ جَعَلْنٰهُமேலும் அவரை நாம் ஆக்கினோம்مَثَلًاஓர் உதாரணமாகلِّبَنِیْۤசந்ததியினருக்குاِسْرَآءِیْلَؕஇஸ்ராயீல்
இன் ஹுவ இல்லா 'அBப்துன் அன்'அம்னா 'அலய்ஹி வ ஜ'அல்னாஹு மதலன் லி Bபனீ இஸ்ரா'ஈல்
அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
وَلَوْ نَشَآءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَّلٰٓىِٕكَةً فِی الْاَرْضِ یَخْلُفُوْنَ ۟
وَ لَوْமேலும், (நாம்) நாடியிருந்தால்نَشَآءُநாம் நாடினால்لَجَعَلْنَاநிச்சயமாக நாம் ஆக்கியிருப்போம்مِنْكُمْஉங்களுக்குப் பதிலாகمَّلٰٓىِٕكَةًவானவர்களைفِیஇல்الْاَرْضِபூமியில்یَخْلُفُوْنَஅவர்கள் பிரதிநிதிகளாக இருப்பார்கள்
வ லவ் னஷா'உ லஜ'அல்னா மின்கும் மலா'இகதன் Fபில் அர்ளி யக்லுFபூன்
நாம் விரும்புவோமாயின் உங்களிடையே பூமியில் நாம் மலக்குகளை ஏற்படுத்தி, அவர்களை பின்தோன்றல்களாக்கி இருப்போம்.
وَاِنَّهٗ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوْنِ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அவர்لَعِلْمٌஓர் அடையாளமாவார்لِّلسَّاعَةِஇறுதி நாளுக்குفَلَاஆகவேتَمْتَرُنَّசிறிதும் சந்தேகிக்காதீர்கள்بِهَاஅதைப் பற்றிوَ اتَّبِعُوْنِ ؕமேலும் என்னைப் பின்பற்றுங்கள்هٰذَاஇதுவேصِرَاطٌவழியாகும்مُّسْتَقِیْمٌநேரான
வ இன்னஹூ ல 'இல்முன் லிஸ் ஸா'அதி Fப லா தம்தருன்ன Bபிஹா வத்தBபி'ஊன்; ஹாதா ஸிராதுன் முஸ்தகீம்
நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம்) நேரான வழி (என்று நபியே! நீர் கூறுவீராக!)
وَلَا یَصُدَّنَّكُمُ الشَّیْطٰنُ ۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
وَ لَاமேலும் வேண்டாம்یَصُدَّنَّكُمُஉங்களைத் தடுத்துவிடالشَّیْطٰنُ ۚஷைத்தான்اِنَّهٗநிச்சயமாக அவன்لَكُمْஉங்களுக்குعَدُوٌّபகைவன்مُّبِیْنٌபகிரங்கமான
வ லா யஸுத்தன் னகுமுஷ் ஷய்தானு இன்னஹூ லகும் 'அதுவ்வுன் முBபீன்
அன்றியும் ஷைத்தான் உங்களை (நேர்வழியை விட்டும்) தடுத்து விடாதிருக்கட்டும் - நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாகவே இருக்கிறான்.
وَلَمَّا جَآءَ عِیْسٰی بِالْبَیِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَیِّنَ لَكُمْ بَعْضَ الَّذِیْ تَخْتَلِفُوْنَ فِیْهِ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுجَآءَவந்தாரோعِیْسٰیஈஸாبِالْبَیِّنٰتِதெளிவான சான்றுகளுடன்قَالَஅவர் கூறினார்قَدْநிச்சயமாகجِئْتُكُمْநான் உங்களிடம் வந்துள்ளேன்بِالْحِكْمَةِஞானத்துடன்وَ لِاُبَیِّنَமேலும் தெளிவுபடுத்துவதற்காகلَكُمْஉங்களுக்குبَعْضَசிலவற்றைالَّذِیْஎதைتَخْتَلِفُوْنَநீங்கள் முரண்படுகிறீர்களோفِیْهِ ۚஅதில்فَاتَّقُواஎனவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِیْعُوْنِமேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்
வ லம்மா ஜா'அ 'ஈஸா Bபில்Bபய்யினாதி கால கத் ஜி'துகும் Bபில் ஹிக்மதி வ லி-உBபய்யின லகும் Bபஃளல் லதீ தக்தலிFபூன Fபீஹி Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.
اِنَّ اللّٰهَ هُوَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவனேرَبِّیْஎன் இறைவன்وَ رَبُّكُمْமேலும் உங்கள் இறைவன்فَاعْبُدُوْهُ ؕஎனவே அவனையே வணங்குங்கள்هٰذَاஇதுவேصِرَاطٌவழிمُّسْتَقِیْمٌநேரான
இன்னல் லாஹ ஹுவ ரBப்Bபீ வ ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; ஹாத ஸிராதும் முஸ்தகீம்
நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).
فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْ بَیْنِهِمْ ۚ فَوَیْلٌ لِّلَّذِیْنَ ظَلَمُوْا مِنْ عَذَابِ یَوْمٍ اَلِیْمٍ ۟
فَاخْتَلَفَஆனால் மாறுபட்டனர்الْاَحْزَابُபிரிவினர்مِنْۢஇருந்துبَیْنِهِمْ ۚதங்களுக்கு இடையேفَوَیْلٌஎனவே கேடுதான்لِّلَّذِیْنَஅத்தகையோருக்குظَلَمُوْاஅநீதி இழைத்தார்களோمِنْஇருந்துعَذَابِவேதனைیَوْمٍஒரு நாளின்اَلِیْمٍநோவினை தரும்
Fபக்தலFபல் அஹ்ZஜாBபு மின் Bபய்னிஹிம் Fப வய்லுன் லில் லதீன ளலமூ மின் 'அதாBபி யவ்மின் அலீம்
ஆனால், அவர்களிடையே (ஏற்பட்ட பல) பிரிவினர் தமக்குள் மாறுபட்டனர்; ஆதலின், அநியாயம் செய்தார்களே அவர்களுக்கு நோவினை தரும் நாளுடைய வேதனையின் கேடுதான் உண்டாகும்.
هَلْ یَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِیَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
هَلْஎதைیَنْظُرُوْنَஅவர்கள் எதிர்பார்க்கிறார்கள்اِلَّاதவிரالسَّاعَةَமறுமை வேளையைاَنْஅதுتَاْتِیَهُمْஅவர்களிடம் வருவதைبَغْتَةًதிடீரென்றுوَّ هُمْமேலும் அவர்கள்لَاஉணராதیَشْعُرُوْنَநிலையில்
ஹல் யன்ளுரூன இல்லஸ் ஸா'அத அன் த'தியஹும் Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
தங்களுக்கே தெரியாத விதத்தில் திடுகூறாக இவர்களுக்கு (இறுதி நாளின்) வேளை வருவதைத் தவிர, (வேறெதையும்) இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா?
اَلْاَخِلَّآءُ یَوْمَىِٕذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ اِلَّا الْمُتَّقِیْنَ ۟ؕ۠
اَلْاَخِلَّآءُஉற்ற நண்பர்கள்یَوْمَىِٕذٍۭஅந்நாளில்بَعْضُهُمْஅவர்களில் சிலர்لِبَعْضٍசிலருக்குعَدُوٌّபகைவர்கள்اِلَّاதவிரالْمُتَّقِیْنَؕ۠இறையச்சமுடையவர்களை
அல் அகில்லா'உ யவ்ம'இதின் Bபஃளுஹும் லிBபஃளின் 'அதுவ்வுன் இல்லல் முத்தகீன்
பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள்.  
یٰعِبَادِ لَا خَوْفٌ عَلَیْكُمُ الْیَوْمَ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ ۟ۚ
یٰعِبَادِஎன் அடியார்களேلَاஇல்லைخَوْفٌஅச்சம்عَلَیْكُمُஉங்கள் மீதுالْیَوْمَஇன்றுوَ لَاۤமேலும் இல்லைاَنْتُمْநீங்கள்تَحْزَنُوْنَۚகவலைப்படுவீர்கள்
யா 'இBபாதி லா கவ்Fபுன் 'அலய்குமுல் யவ்ம வ லா அன்தும் தஹ்Zஜனூன்
“என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்).
اَلَّذِیْنَ اٰمَنُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا مُسْلِمِیْنَ ۟ۚ
اَلَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோبِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைوَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்مُسْلِمِیْنَۚமுஸ்லிம்களாக
அல்லதீன ஆமனூ Bபி ஆயாதினா வ கானூ முஸ்லிமீன்
இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர்.
اُدْخُلُوا الْجَنَّةَ اَنْتُمْ وَاَزْوَاجُكُمْ تُحْبَرُوْنَ ۟
اُدْخُلُواநுழையுங்கள்الْجَنَّةَசுவனத்தில்اَنْتُمْநீங்கள்وَ اَزْوَاجُكُمْஉங்கள் துணைகளும்تُحْبَرُوْنَமகிழ்விக்கப்படுவீர்கள்
உத்குலுல் ஜன்னத அன்தும் வ அZஜ்வாஜுகும் துஹ்Bபரூன்
நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).
یُطَافُ عَلَیْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّاَكْوَابٍ ۚ وَفِیْهَا مَا تَشْتَهِیْهِ الْاَنْفُسُ وَتَلَذُّ الْاَعْیُنُ ۚ وَاَنْتُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟ۚ
یُطَافُசுற்றிக் கொண்டு வரப்படும்عَلَیْهِمْஅவர்களுக்குبِصِحَافٍதட்டுகளும்مِّنْஆனذَهَبٍதங்கம்وَّ اَكْوَابٍ ۚமற்றும் கிண்ணங்களும்وَ فِیْهَاமேலும் அதில்مَاஎவற்றைتَشْتَهِیْهِவிரும்புகின்றனவோالْاَنْفُسُமனங்கள்وَ تَلَذُّமேலும் இன்பமடையுமோالْاَعْیُنُ ۚகண்கள்وَ اَنْتُمْமேலும் நீங்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَۚநிரந்தரமாக இருப்பவர்கள்
யுதாFபு 'அலய்ஹிம் Bபிஸிஹா Fபிம் மின் தஹBபி(ன்)வ் வ அக்வாBப், வ Fபீஹா மாதஷ்தஹீஹில் அன்Fபுஸு வ தலத்துல் அஃயுனு வ அன்தும் Fபீஹா காலிதூன்
பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், “நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.)
وَتِلْكَ الْجَنَّةُ الَّتِیْۤ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَ تِلْكَமேலும் அந்தالْجَنَّةُசுவர்க்கம்الَّتِیْۤஎதனைاُوْرِثْتُمُوْهَاநீங்கள் வாரிசாகப் பெற்றீர்களோبِمَاஎதன் காரணமாகவென்றால்كُنْتُمْநீங்கள்تَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தீர்களோ (அதனால்)
வ தில்கல் ஜன்னதுல் லதீ ஊரித்துமூஹா Bபிமா குன்தும் தஃமலூன்
“நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள்.
لَكُمْ فِیْهَا فَاكِهَةٌ كَثِیْرَةٌ مِّنْهَا تَاْكُلُوْنَ ۟
لَكُمْஉங்களுக்குفِیْهَاஅதில்فَاكِهَةٌகனிகள்كَثِیْرَةٌஏராளமானمِّنْهَاஅதிலிருந்துتَاْكُلُوْنَநீங்கள் உண்பீர்கள்
லகும் Fபீஹா Fபாகிஹதுன் கதீரதுன் மின்ஹா த'குலூன்
“உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்” (எனக் கூறப்படும்).
اِنَّ الْمُجْرِمِیْنَ فِیْ عَذَابِ جَهَنَّمَ خٰلِدُوْنَ ۟ۚۖ
اِنَّநிச்சயமாகالْمُجْرِمِیْنَகுற்றவாளிகள்فِیْஇல்عَذَابِவேதனைجَهَنَّمَநரகத்தின்خٰلِدُوْنَۚۖநிலைத்திருப்பார்கள்
இன்னல் முஜ்ரிமீன Fபீ 'அதாBபி ஜஹன்னம காலிதூன்
நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
لَا یُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِیْهِ مُبْلِسُوْنَ ۟ۚ
لَاஇல்லைیُفَتَّرُதணிக்கப்படும்عَنْهُمْஅவர்களை விட்டுوَ هُمْமேலும் அவர்கள்فِیْهِஅதில்مُبْلِسُوْنَۚநம்பிக்கையிழந்தவர்கள்
லா யுFபத்தரு 'அன்ஹும் வ ஹும் Fபீஹி முBப்லிஸூன்
அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது; அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள்.
وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْا هُمُ الظّٰلِمِیْنَ ۟
وَ مَاமேலும் இல்லைظَلَمْنٰهُمْஅவர்களுக்கு நாம் அநீதி இழைத்தோம்وَ لٰكِنْஆனால்كَانُوْاஅவர்கள் இருந்தார்கள்هُمُஅவர்களேالظّٰلِمِیْنَஅநீதியாளர்கள்
வமா ளலம்னாஹும் வ லாகின் கானூ ஹுமுள் ளாலிமீன்
எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே.
وَنَادَوْا یٰمٰلِكُ لِیَقْضِ عَلَیْنَا رَبُّكَ ؕ قَالَ اِنَّكُمْ مّٰكِثُوْنَ ۟
وَ نَادَوْاஅவர்கள் அழைப்பார்கள்یٰمٰلِكُமாலிக்கே!لِیَقْضِமுடிவு கட்டட்டும்عَلَیْنَاஎங்கள் மீதுرَبُّكَ ؕஉமது இறைவன்قَالَஅவர் கூறுவார்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مّٰكِثُوْنَதங்கியிருப்பவர்களே
வ னாதவ் யா மாலிகு லியக்ளி 'அலய்னா ரBப்Bபுக கால இன்னகும் மாகிதூன்
மேலும், அவர்கள் (நரகத்தில்) “யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் “நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார்.
لَقَدْ جِئْنٰكُمْ بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَكُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ ۟
لَقَدْநிச்சயமாகجِئْنٰكُمْநாம் உங்களிடம் வந்தோம்بِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ لٰكِنَّஆனால்اَكْثَرَكُمْஉங்களில் பெரும்பாலோர்لِلْحَقِّசத்தியத்தைكٰرِهُوْنَவெறுப்பவர்கள்
லகத் ஜி'னாகும் Bபில்ஹக்கி வ லாகின்ன அக்தரகும் லில் ஹக்கி காரிஹூன்
நிச்சயமாக, நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம்; ஆனால் உங்களில் பெரும்பாலோர் சத்தியத்தை வெறுக்கிறவர்களாக இருந்தார்கள் (என்றும் கூறப்படும்).
اَمْ اَبْرَمُوْۤا اَمْرًا فَاِنَّا مُبْرِمُوْنَ ۟ۚ
اَمْஅல்லதுاَبْرَمُوْۤاஅவர்கள் தீர்மானித்தனராاَمْرًاஒரு காரியத்தைفَاِنَّاஆகவே நிச்சயமாக நாம்مُبْرِمُوْنَۚதீர்மானிப்பவர்கள்
அம் அBப்ரமூ அம்ரன் Fபய்ன்னா முBப்ரிமூன்
அல்லது அவர்கள் (மக்கத்து காஃபிர்கள்) ஏதாவது முடிவு கட்டியிருக்கிறார்களா? ஆனால் (அனைத்துக் காரியங்களுக்கும்) முடிவு கட்டுகிறது நாம் தான்.
اَمْ یَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ ؕ بَلٰی وَرُسُلُنَا لَدَیْهِمْ یَكْتُبُوْنَ ۟
اَمْஅல்லதுیَحْسَبُوْنَஅவர்கள் எண்ணுகிறார்களாاَنَّاநிச்சயமாக நாம்لَاஇல்லைنَسْمَعُசெவியுறுகிறோம்سِرَّهُمْஅவர்களின் இரகசியத்தைوَ نَجْوٰىهُمْ ؕமேலும் அவர்களின் அந்தரங்க ஆலோசனையையும்بَلٰیஅவ்வாறல்லوَ رُسُلُنَاமேலும் நம் தூதர்கள்لَدَیْهِمْஅவர்களிடம்یَكْتُبُوْنَஎழுதுகிறார்கள்
அம் யஹ்ஸBபூன அன்னா லா னஸ்ம'உ ஸிர்ரஹும் வ னஜ்வாஹும்; Bபலா வ ருஸுலுனா லதய்ஹிம் யக்துBபூன்
அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்து கூடிப் பேசுவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா? அல்ல: மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்கள் (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்.
قُلْ اِنْ كَانَ لِلرَّحْمٰنِ وَلَدٌ ۖۗ فَاَنَا اَوَّلُ الْعٰبِدِیْنَ ۟
قُلْகூறுவீராகاِنْஒருவேளைكَانَஇருந்தால்لِلرَّحْمٰنِஅளவற்ற அருளாளனுக்குوَلَدٌ ۖۗபிள்ளைفَاَنَاஅப்படியானால் நானேاَوَّلُமுதன்மையானவன்الْعٰبِدِیْنَவணங்குபவர்களில்
குல் இன் கான லிர் ரஹ்மானி வலத்; Fப-அன அவ்வலுல் 'ஆBபிதீன்
(நபியே!) நீர் கூறும்: “அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!”
سُبْحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ رَبِّ الْعَرْشِ عَمَّا یَصِفُوْنَ ۟
سُبْحٰنَதூயவன்رَبِّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்رَبِّஇறைவன்الْعَرْشِஅர்ஷின்عَمَّاஎதைவிட்டும்یَصِفُوْنَஅவர்கள் வர்ணிக்கிறார்களோ
ஸுBப்ஹான ரBப்Bபிஸ் ஸமாவாதி வல் அர்ளி ரBப்Bபில் அர்ஷி 'அம்மா யஸிFபூன்
வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன்; அர்ஷுக்கும் இறைவன். (அத்தகைய இறைவன் அவனுக்கு சந்ததி உண்டென்று) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மகா பரிசுத்தமானவன்.
فَذَرْهُمْ یَخُوْضُوْا وَیَلْعَبُوْا حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟
فَذَرْهُمْஎனவே அவர்களை விட்டுவிடுவீராகیَخُوْضُوْاஅவர்கள் வீணானவற்றில் மூழ்கியிருக்கட்டும்وَ یَلْعَبُوْاமேலும் விளையாடிக் கொண்டிருக்கட்டும்حَتّٰیவரைیُلٰقُوْاஅவர்கள் சந்திக்கும்یَوْمَهُمُஅவர்களுடைய நாளைالَّذِیْஎதுیُوْعَدُوْنَஅவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிறதோ
Fபதர்ஹும் யகூளூ வ யல்'அBபூ ஹத்தா யுலாகூ யவ்மஹுமுல் லதீ யூ'அதூன்
ஆகையால், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய (வேதனையின்) நாளை அவர்கள் சந்திக்கும் வரை, அவர்களை (வீண் விவாதத்தில்) மூழ்கியிருக்கவும், விளையாட்டில் கழிக்கவும் (நபியே!) நீர் விட்டு விடும்.
وَهُوَ الَّذِیْ فِی السَّمَآءِ اِلٰهٌ وَّفِی الْاَرْضِ اِلٰهٌ ؕ وَهُوَ الْحَكِیْمُ الْعَلِیْمُ ۟
وَ هُوَமேலும் அவன்الَّذِیْஎத்தகையவன்فِیஉள்ளالسَّمَآءِவானத்தில்اِلٰهٌவணக்கத்திற்குரியவன்وَّ فِیமேலும் உள்ளالْاَرْضِபூமியில்اِلٰهٌ ؕவணக்கத்திற்குரியவன்وَ هُوَமேலும் அவன்الْحَكِیْمُஞானமிக்கவன்الْعَلِیْمُநன்கு அறிந்தவன்
வ ஹுவல் லதீ Fபிஸ்ஸமா'இ இலாஹு(ன்)வ் வ Fபில் அர்ளி இலாஹ்; வ ஹுவல் ஹகீமுல் 'அலீம்
அன்றியும், அவனே வானத்தின் நாயனும் பூமியின் நாயனும் ஆவான்; மேலும், அவனே ஞானம் மிக்கோன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
وَتَبٰرَكَ الَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۚ وَعِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
وَ تَبٰرَكَமேலும் அவன் பாக்கியமிக்கவன்الَّذِیْஎத்தகையவன் என்றால்لَهٗஅவனுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ مَاமற்றும் எவைبَیْنَهُمَا ۚஅவையிரண்டிற்கும் இடையில்وَ عِنْدَهٗமேலும் அவனிடமேعِلْمُஅறிவுالسَّاعَةِ ۚஇறுதி வேளையின்وَ اِلَیْهِமேலும் அவன்பாலேتُرْجَعُوْنَநீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்
வ தBபாரகல் லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா வ 'இன்தஹூ 'இல்முஸ் ஸா'அதி வ இலய்ஹி துர்ஜ'ஊன்
அவன் பெரும் பாக்கியம் உடையவன்; வானங்கள், பூமி, இவை இரண்டிற்குமிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆட்சி அவனுக்குடையதே, அவனிடம் தான் (இறுதி) வேளைக்குரிய ஞானமும் இருக்கிறது; மேலும், அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
وَلَا یَمْلِكُ الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الشَّفَاعَةَ اِلَّا مَنْ شَهِدَ بِالْحَقِّ وَهُمْ یَعْلَمُوْنَ ۟
وَ لَاமேலும் இல்லைیَمْلِكُஅதிகாரம் பெற்றிருக்கالَّذِیْنَஎவர்களைیَدْعُوْنَஅவர்கள் அழைக்கிறார்களோمِنْஅன்றிدُوْنِهِஅவனையல்லாமல்الشَّفَاعَةَபரிந்துரையைاِلَّاதவிரمَنْஎவர்شَهِدَசாட்சி கூறினாரோبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ هُمْஇன்னும் அவர்கள்یَعْلَمُوْنَஅறிந்தவர்களாக
வ லா யம்லிகுல் லதீன யத்'ஊன மின் தூனிஹிஷ் ஷFபா'அத இல்லா மன் ஷஹித Bபில்ஹக்கி வ ஹும் யஃலமூன்
அன்றியும், அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ, அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். ஆனால் எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்காளாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதி கொண்டு பரிந்து பேசுவர்).
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَهُمْ لَیَقُوْلُنَّ اللّٰهُ فَاَنّٰی یُؤْفَكُوْنَ ۟ۙ
وَ لَىِٕنْஇன்னும் நிச்சயமாகسَاَلْتَهُمْஅவர்களிடம் நீர் கேட்டால்مَّنْயார்خَلَقَهُمْஅவர்களைப் படைத்ததுلَیَقُوْلُنَّஅவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்اللّٰهُஅல்லாஹ்فَاَنّٰیஅவ்வாறிருக்க எங்குیُؤْفَكُوْنَۙஅவர்கள் திருப்பப்படுகிறார்கள்
வ ல'இன் ஸ அல்தஹும் மன் கலகஹும் ல யகூலுன் னல்லாஹு Fப அன்னா யு'Fபகூன்
மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?
وَقِیْلِهٖ یٰرَبِّ اِنَّ هٰۤؤُلَآءِ قَوْمٌ لَّا یُؤْمِنُوْنَ ۟ۘ
وَ قِیْلِهٖஅவருடைய கூற்றையும்یٰرَبِّஎன் இறைவனேاِنَّநிச்சயமாகهٰۤؤُلَآءِஇவர்கள்قَوْمٌஒரு சமூகத்தினர்لَّاஇல்லைیُؤْمِنُوْنَۘநம்பிக்கை கொள்கிறார்கள்
வ கீலிஹீ யா ரBப்Bபி இன்ன ஹா'உலா'இ கவ்முல் லா யு'மினூன்
“என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள்” என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்).
فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلٰمٌ ؕ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟۠
فَاصْفَحْஎனவே புறக்கணிப்பீராகعَنْهُمْஅவர்களைوَ قُلْமேலும் கூறுவீராகسَلٰمٌ ؕஸலாம்فَسَوْفَபின்னர் விரைவில்یَعْلَمُوْنَ۠அவர்கள் அறிந்து கொள்வார்கள்
Fபஸ்Fபஹ் 'அன்ஹும் வ குல் ஸலாம்; Fபஸவ்Fப யஃலமூன்
ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (உங்களுக்கு) 'சாந்தி' என்று கூறிவிடும். பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள்.