73. ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)

மக்கீ, வசனங்கள்: 20

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا الْمُزَّمِّلُ ۟ۙ
یٰۤاَیُّهَاالْمُزَّمِّلُۙபோர்த்திக் கொண்டிருப்பவரே
யா அய்யுஹல் முZஜ்Zஜம்மில்
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
قُمِ الَّیْلَ اِلَّا قَلِیْلًا ۟ۙ
قُمِஎழுந்து நிற்பீராகالَّیْلَஇரவில்اِلَّاதவிரقَلِیْلًاۙசிறிது
குமில் லய்ல இல்லா கலீலா
இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;
نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِیْلًا ۟ۙ
نِّصْفَهٗۤஅதன் பாதியைاَوِஅல்லதுانْقُصْகுறைப்பீராகمِنْهُஅதிலிருந்துقَلِیْلًاۙசிறிதளவு
னிஸ்Fபஹூ அவின்குஸ் மின்ஹு கலீலா
அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!
اَوْ زِدْ عَلَیْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِیْلًا ۟ؕ
اَوْஅல்லதுزِدْஅதிகப்படுத்துவீராகعَلَیْهِஅதன் மீதுوَ رَتِّلِமேலும் ஓதுவீராகالْقُرْاٰنَகுர்ஆனைتَرْتِیْلًاؕநிறுத்தி நிதானமாக
அவ் Zஜித் 'அலய்ஹி வ ரத்திலில் குர்'ஆன தர்தீலா
அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
اِنَّا سَنُلْقِیْ عَلَیْكَ قَوْلًا ثَقِیْلًا ۟
اِنَّاநிச்சயமாக நாம்سَنُلْقِیْநாம் இறக்குவோம்عَلَیْكَஉம் மீதுقَوْلًاஒரு வார்த்தையைثَقِیْلًاகனமான
இன்னா ஸனுல்கீ 'அலய்க கவ்லன் தகீலா
நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான - ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.
اِنَّ نَاشِئَةَ الَّیْلِ هِیَ اَشَدُّ وَطْاً وَّاَقْوَمُ قِیْلًا ۟ؕ
اِنَّநிச்சயமாகنَاشِئَةَவிழித்தெழுவதுالَّیْلِஇரவில்هِیَஅதுاَشَدُّமிக வலுவானதுوَطْاًஅடக்குவதற்குوَّ اَقْوَمُமேலும் மிக நேரானதுقِیْلًاؕசொல்லுக்கு
இன்ன் னாஷி'அதல் லய்லி ஹிய அஷத்த்து வத் அ(ன்)வ் வ அக்வமு கீலா
நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.
اِنَّ لَكَ فِی النَّهَارِ سَبْحًا طَوِیْلًا ۟ؕ
اِنَّநிச்சயமாகلَكَஉமக்குفِیஇல்النَّهَارِபகல்سَبْحًاவேலைطَوِیْلًاؕநீண்ட
இன்ன லக Fபின் னஹாரி ஸBப்ஹன் தவீலா
நிச்சயமாகப் பகலில் உமக்கு நெடிய (கடினமான) வேலைகள் இருக்கின்றன.
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ اِلَیْهِ تَبْتِیْلًا ۟ؕ
وَ اذْكُرِமேலும் நினைவு கூர்வீராகاسْمَபெயரைرَبِّكَஉமது இறைவனின்وَ تَبَتَّلْமேலும் திரும்புவீராகاِلَیْهِஅவனிடமேتَبْتِیْلًاؕமுற்றிலுமாக
வத்குரிஸ் ம ரBப்Bபிக வ தBபத்தல் இலய்ஹி தBப்தீலா
எனினும் (இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக! இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.
رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِیْلًا ۟
رَبُّஇறைவன்الْمَشْرِقِகிழக்கிற்கும்وَ الْمَغْرِبِமேற்கிற்கும்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவன்فَاتَّخِذْهُஎனவே அவனை ஆக்கிக்கொள்வீராகوَكِیْلًاபொறுப்பாளனாக
ரBப்Bபுல் மஷ்ரிகி வல் மக்ரிஇBபி லா இலாஹ இல்லா ஹுவ Fபத்தகித்ஹு வகீலா
(அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை; ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.
وَاصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِیْلًا ۟
وَ اصْبِرْமேலும் பொறுமையைக் கடைப்பிடிப்பீராகعَلٰیமீதுمَاஎதைیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களோوَ اهْجُرْهُمْமேலும் அவர்களை விட்டு விலகி விடுவீராகهَجْرًاவிலகுதலாகجَمِیْلًاஅழகிய முறையில்
வஸ்Bபிர் 'அலா மா யகூ லூன வஹ்ஜுர்ஹும் ஹஜ்ரன் ஜமீலா
அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக; மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.
وَذَرْنِیْ وَالْمُكَذِّبِیْنَ اُولِی النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِیْلًا ۟
وَ ذَرْنِیْஎன்னையும் விட்டுவிடுவீராகوَ الْمُكَذِّبِیْنَபொய்ப்பிப்பவர்களையும்اُولِیஉடையالنَّعْمَةِசுகபோகங்களைوَ مَهِّلْهُمْமேலும் அவர்களுக்கு அவகாசம் அளிப்பீராகقَلِیْلًاசிறிது காலம்
வ தர்னீ வல்முகத் திBபீன உலின் னஃமதி வ மஹ்ஹில்ஹும் கலீலா
என்னையும், பொய்ப்பிப்வர்களாகிய அந்தச் சுக வாசிகளையும் விட்டுவிடும்; அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.
اِنَّ لَدَیْنَاۤ اَنْكَالًا وَّجَحِیْمًا ۟ۙ
اِنَّநிச்சயமாகلَدَیْنَاۤநம்மிடம்اَنْكَالًاவிலங்குகள்وَّ جَحِیْمًاۙசுட்டெரிக்கும் நெருப்பும்
இன்ன லதய்னா அன்கால(ன்)வ் வ ஜஹீமா
நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.
وَّطَعَامًا ذَا غُصَّةٍ وَّعَذَابًا اَلِیْمًا ۟ۗ
وَّ طَعَامًاஉணவையும்ذَاஉடையغُصَّةٍதொண்டையில் சிக்கும்وَّ عَذَابًاமேலும் வேதனையையும்اَلِیْمًاۗநோவினை தரும்
வ த'ஆமன் தா குஸ்ஸ தி(ன்)வ் வ'அதாBபன் அலீமா
(தொண்டையில்) விக்கிக் கொள்ளும் உணவும், நோவினை செய்யும் வேதனையும் இருக்கின்றன.
یَوْمَ تَرْجُفُ الْاَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِیْبًا مَّهِیْلًا ۟
یَوْمَஅந்நாளில்تَرْجُفُஅதிரும்الْاَرْضُபூமிوَ الْجِبَالُமலைகளும்وَ كَانَتِஆகிவிடும்الْجِبَالُமலைகள்كَثِیْبًاமணற்குவியலாகمَّهِیْلًاசரிந்துவிழும்
யவ்ம தர்ஜுFபுல் அர்ளு வல்ஜிBபாலு வ கானதில் ஜிBபாலு கதீBபம் மஹீலா
அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும்.
اِنَّاۤ اَرْسَلْنَاۤ اِلَیْكُمْ رَسُوْلًا ۙ۬ شَاهِدًا عَلَیْكُمْ كَمَاۤ اَرْسَلْنَاۤ اِلٰی فِرْعَوْنَ رَسُوْلًا ۟ؕ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاۤஅனுப்பினோம்اِلَیْكُمْஉங்களிடம்رَسُوْلًا ۙ۬ஒரு தூதரைشَاهِدًاசாட்சியாகعَلَیْكُمْஉங்கள் மீதுكَمَاۤஎப்படிاَرْسَلْنَاۤநாம் அனுப்பினோமோاِلٰیநோக்கிفِرْعَوْنَஃபிர்அவ்னைرَسُوْلًاؕஒரு தூதரை
இன்னா அர்ஸல்னா இலய்கும் ரஸூலன் ஷாஹிதன் 'அலீய்கும் கமா அர்ஸல்னா இலா Fபிர்'அவ்ன ரஸூலா
நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்.
فَعَصٰی فِرْعَوْنُ الرَّسُوْلَ فَاَخَذْنٰهُ اَخْذًا وَّبِیْلًا ۟
فَعَصٰیஆனால் மாறுசெய்தான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்الرَّسُوْلَஅத்தூதருக்குفَاَخَذْنٰهُஎனவே நாம் அவனைப் பிடித்தோம்اَخْذًاஒரு பிடியாகوَّبِیْلًاகடுமையான
Fப'அஸா Fபிர்'அவ்னுர் ரஸூல Fப அகத்னாஹு அக்த(ன்)வ் வBபீலா
எனினும் ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான்; எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.
فَكَیْفَ تَتَّقُوْنَ اِنْ كَفَرْتُمْ یَوْمًا یَّجْعَلُ الْوِلْدَانَ شِیْبَا ۟ۗۖ
فَكَیْفَஆகவே எவ்வாறுتَتَّقُوْنَதற்காத்துக் கொள்வீர்கள்اِنْஎன்றால்كَفَرْتُمْநீங்கள் நிராகரித்தீர்கள்یَوْمًاஒரு நாளைیَّجْعَلُஆக்கிவிடும்الْوِلْدَانَசிறுவர்களைشِیْبَاۗۖநரைத்தவர்களாக
Fபகய்Fப தத்தகூன இன் கFபர்தும் யவ்ம(ன்)ய் யஜ்'அலுல் வில்தான ஷீBபா
எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.
لسَّمَآءُ مُنْفَطِرٌ بِهٖ ؕ كَانَ وَعْدُهٗ مَفْعُوْلًا ۟
لسَّمَآءُவானம்مُنْفَطِرٌۢபிளந்துவிடும்بِهٖ ؕஅதனால்كَانَஆகும்وَعْدُهٗஅவனுடைய வாக்குறுதிمَفْعُوْلًاநிறைவேற்றப்படுவதாக
அஸ்ஸமா'உ முன்Fபதிரும் Bபிஹ்; கான வஃதுஹூ மFப்'ஊலா
அதில் வானம் பிளந்து விடும்; அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்.
اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟۠
اِنَّநிச்சயமாகهٰذِهٖஇதுتَذْكِرَةٌ ۚஓர் அறிவுரைفَمَنْஎனவே எவர்شَآءَநாடுகிறாரோاتَّخَذَஆக்கிக்கொள்ளட்டும்اِلٰیநோக்கிرَبِّهٖதனது இறைவனைسَبِیْلًا۠ஒரு வழியை
இன்ன ஹாதிஹீ தத்கிரதுன் Fப மன் ஷா'அத் தகத இலா ரBப்Bபிஹீ ஸBபீலா
நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபதேசமாகும்; ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக.  
اِنَّ رَبَّكَ یَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰی مِنْ  الَّیْلِ وَنِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآىِٕفَةٌ مِّنَ الَّذِیْنَ مَعَكَ ؕ وَاللّٰهُ یُقَدِّرُ الَّیْلَ وَالنَّهَارَ ؕ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَیْكُمْ فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنَ الْقُرْاٰنِ ؕ عَلِمَ اَنْ سَیَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰی ۙ وَاٰخَرُوْنَ یَضْرِبُوْنَ فِی الْاَرْضِ یَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ ۙ وَاٰخَرُوْنَ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۖؗ فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنْهُ ۙ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَیْرًا وَّاَعْظَمَ اَجْرًا ؕ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்یَعْلَمُஅறிகிறான்اَنَّكَநிச்சயமாக நீர்تَقُوْمُநிற்கிறீர்اَدْنٰیகுறைவாகمِنْவிடثُلُثَیِமூன்றில் இரண்டுالَّیْلِஇரவின்وَ نِصْفَهٗஇன்னும் அதன் பாதியிலும்وَ ثُلُثَهٗஇன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதியிலும்وَ طَآىِٕفَةٌஇன்னும் ஒரு கூட்டத்தினரும்مِّنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்مَعَكَ ؕஉம்முடன் இருக்கிறார்களோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یُقَدِّرُநிர்ணயிக்கிறான்الَّیْلَஇரவையும்وَ النَّهَارَ ؕபகலையும்عَلِمَஅவன் அறிகிறான்اَنْஎன்றுلَّنْமாட்டீர்கள்تُحْصُوْهُஅதனை கணக்கிடفَتَابَஎனவே அவன் மன்னித்தான்عَلَیْكُمْஉங்கள் மீதுفَاقْرَءُوْاஆகவே ஓதுங்கள்مَاஎதைتَیَسَّرَஎளிதானதோمِنَஇருந்துالْقُرْاٰنِ ؕகுர்ஆனில்عَلِمَஅவன் அறிகிறான்اَنْஎன்றுسَیَكُوْنُஇருப்பார்கள்مِنْكُمْஉங்களில்مَّرْضٰی ۙநோயாளிகள்وَ اٰخَرُوْنَஇன்னும் மற்றவர்கள்یَضْرِبُوْنَபயணம் செய்கிறார்கள்فِیஇல்الْاَرْضِபூமியில்یَبْتَغُوْنَதேடுகிறார்கள்مِنْஇருந்துفَضْلِஅருளைاللّٰهِ ۙஅல்லாஹ்வின்وَ اٰخَرُوْنَஇன்னும் மற்றவர்கள்یُقَاتِلُوْنَபோர் செய்கிறார்கள்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِ ۖؗஅல்லாஹ்வின்فَاقْرَءُوْاஆகவே ஓதுங்கள்مَاஎதைتَیَسَّرَஎளிதானதோمِنْهُ ۙஅதிலிருந்துوَ اَقِیْمُواஇன்னும் நிலைநாட்டுங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتُواஇன்னும் கொடுங்கள்الزَّكٰوةَஜகாத்தைوَ اَقْرِضُواஇன்னும் கடன் கொடுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குقَرْضًاகடனாகحَسَنًا ؕஅழகியوَ مَاஇன்னும் எதைتُقَدِّمُوْاமுற்படுத்துகிறீர்களோلِاَنْفُسِكُمْஉங்களுக்காகمِّنْஇருந்துخَیْرٍநன்மையில்تَجِدُوْهُஅதனை காண்பீர்கள்عِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்هُوَஅதுخَیْرًاசிறந்ததாகوَّ اَعْظَمَஇன்னும் மகத்தானதாகاَجْرًا ؕகூலியாகوَ اسْتَغْفِرُواஇன்னும் மன்னிப்புத் தேடுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்விடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌ۠மிக்க கிருபையுடையவன்
இன்ன ரBப்Bபக யஃலமு அன்னக தகூமு அத்னா மின் துலுத யில் லய்லி வ னிஸ்Fபஹூ வ துலுதஹூ வ தா'இFபதும் மினல் லதீன ம'அக்; வல் லாஹு யுகத்திருல் லய்ல வன்ன ஹார்; 'அலிம அல் லன் துஹ்ஸூஹு FபதாBப 'அலய்கும் Fபக்ர'ஊ மா தயஸ்ஸர மினல் குர்'ஆன்; 'அலிம அன் ஸ யகூனு மின்கும் மர்ளா வ ஆகரூன யள்ரிBபூன Fபில் அர்ளி யBப்தகூன மின் Fபள்லில் லாஹி வ ஆகரூன யுகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி Fபக்ர'ஊ ம தயஸ்ஸர மின்ஹு வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வ அக்ரிளுல் லாஹ கர்ளன் ஹஸனா; வமா துகத்திமூ லி அன்Fபுஸிகும் மின் கய்ரின் தஜிதூஹு 'இன்தல் லாஹி ஹுவ கய்ர(ன்)வ் வ அஃளம அஜ்ரா; வஸ்தக்Fபிருல் லாஹா இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்.
நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.