58. ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்)

மதனீ, வசனங்கள்: 22

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِیْ تُجَادِلُكَ فِیْ زَوْجِهَا وَتَشْتَكِیْۤ اِلَی اللّٰهِ ۖۗ وَاللّٰهُ یَسْمَعُ تَحَاوُرَكُمَا ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟
قَدْநிச்சயமாகسَمِعَசெவியேற்றான்اللّٰهُஅல்லாஹ்قَوْلَசொல்லைالَّتِیْஎவள்تُجَادِلُكَஉம்மிடம் தர்க்கம் செய்கிறாளோفِیْபற்றிزَوْجِهَاதன் கணவனைوَ تَشْتَكِیْۤமேலும் முறையிடுகிறாளோاِلَیபக்கம்اللّٰهِ ۖۗஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَسْمَعُசெவியேற்கிறான்تَحَاوُرَكُمَا ؕஉங்கள் இருவரின் உரையாடலைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِیْعٌۢசெவியேற்பவன்بَصِیْرٌபார்ப்பவன்
கத் ஸமி'அல் லாஹு கவ்லல் லதீ துஜாதிலுக Fபீ Zஜவ்ஜிஹா வ தஷ்தகீ இலல் லாஹி வல்லாஹு யஸ்ம'உ தஹாவுரகுமா; இன்னல் லாஹ ஸமீ'உம் Bபஸீர்
(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.
اَلَّذِیْنَ یُظٰهِرُوْنَ مِنْكُمْ مِّنْ نِّسَآىِٕهِمْ مَّا هُنَّ اُمَّهٰتِهِمْ ؕ اِنْ اُمَّهٰتُهُمْ اِلَّا الّٰٓـِٔیْ وَلَدْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَیَقُوْلُوْنَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُوْرًا ؕ وَاِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ ۟
اَلَّذِیْنَஎவர்கள்یُظٰهِرُوْنَழிஹார் செய்கிறார்களோمِنْكُمْஉங்களில்مِّنْஇருந்துنِّسَآىِٕهِمْதங்கள் மனைவியரிடம்مَّاஇல்லைهُنَّஅவர்கள்اُمَّهٰتِهِمْ ؕஅவர்களின் தாய்கள்اِنْஇல்லைاُمَّهٰتُهُمْஅவர்களின் தாய்கள்اِلَّاதவிரالّٰٓـِٔیْஎவர்கள்وَلَدْنَهُمْ ؕஅவர்களைப் பெற்றெடுத்தார்களோوَ اِنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்لَیَقُوْلُوْنَநிச்சயமாகச் சொல்கிறார்கள்مُنْكَرًاவெறுக்கத்தக்கதைمِّنَஇருந்துالْقَوْلِசொல்லில்وَ زُوْرًا ؕமேலும் பொய்யானதைوَ اِنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَعَفُوٌّநிச்சயமாக மன்னிப்பவன்غَفُوْرٌபிழை பொறுப்பவன்
அல்லதீன யுளாஹிரூன மின்கும் மின் னிஸா'இஹிம் மா ஹுன்னா உம்மஹாதிஹிம் இன் உம்மஹாதுஹும் இல்லல் லா'ஈ வலத்னஹும்; வ இன்னாஹும் ல யகூலூன முன்கரம் மினல் கவ்லி வ Zஜூரா; வ இன்னல் லாஹ ல'அFபுவ்வுன் கFபூர்
“உங்களில் சிலர் தம் மனைவியரைத் “தாய்கள்” எனக் கூறிவிடுகின்றனர்; அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன்.
وَالَّذِیْنَ یُظٰهِرُوْنَ مِنْ نِّسَآىِٕهِمْ ثُمَّ یَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِیْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ یَّتَمَآسَّا ؕ ذٰلِكُمْ تُوْعَظُوْنَ بِهٖ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்یُظٰهِرُوْنَழிஹார் செய்கிறார்களோمِنْதம்نِّسَآىِٕهِمْமனைவியரிடம்ثُمَّபின்னர்یَعُوْدُوْنَஅவர்கள் மீளுகிறார்களோلِمَاஎதைقَالُوْاஅவர்கள் கூறினார்களோفَتَحْرِیْرُஎனவே விடுதலை செய்ய வேண்டும்رَقَبَةٍஓர் அடிமையைمِّنْஇருந்துقَبْلِமுன்னதாகاَنْஅவ்விருவரும்یَّتَمَآسَّا ؕதீண்டுவதற்குذٰلِكُمْஇதுتُوْعَظُوْنَஉங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறதுبِهٖ ؕஇதைக் கொண்டுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎதைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோخَبِیْرٌநன்கறிந்தவன்
வல்லதீன யுளாஹிரூன மின் னிஸா'இஹிம் தும்ம ய'ஊதூன லிமா காலூ Fபதஹ்ரீரு ரகBபதிம் மின் கBப்லி அ(ன்)ய்-யதமாஸ்ஸா; தாலிகும் தூ'அளூன Bபிஹ்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ شَهْرَیْنِ مُتَتَابِعَیْنِ مِنْ قَبْلِ اَنْ یَّتَمَآسَّا ۚ فَمَنْ لَّمْ یَسْتَطِعْ فَاِطْعَامُ سِتِّیْنَ مِسْكِیْنًا ؕ ذٰلِكَ لِتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ اَلِیْمٌ ۟
فَمَنْஎவர்لَّمْபெறவில்லையோیَجِدْவசதியைفَصِیَامُநோன்பு நோற்க வேண்டும்شَهْرَیْنِஇரண்டு மாதங்கள்مُتَتَابِعَیْنِதொடர்ச்சியாகمِنْ(அதற்கு)قَبْلِமுன்னர்اَنْ(அவர்கள்)یَّتَمَآسَّا ۚஒருவரையொருவர் தீண்டுவதற்குفَمَنْஎவர்لَّمْ(அதற்கு)یَسْتَطِعْஇயலவில்லையோفَاِطْعَامُஉணவளிக்க வேண்டும்سِتِّیْنَஅறுபதுمِسْكِیْنًا ؕஏழைகளுக்குذٰلِكَஇதுلِتُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொள்வதற்காகبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رَسُوْلِهٖ ؕஅவனது தூதர் மீதும்وَ تِلْكَமேலும் இவைحُدُوْدُவரம்புகளாகும்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ لِلْكٰفِرِیْنَமேலும் நிராகரிப்பவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌநோவினை தரும்
Fபமல் லம் யஜித் Fப ஸியாமு ஷஹ்ரய்னி முததாBபி'அய்னி மின் கBப்லி அ(ன்)ய்-யதமாஸ்ஸா Fபமல் லம் யஸ்ததிஃ Fப-இத்'ஆமு ஸித்தீன மிஸ்கீன; தாலிக லிது'மினூ Bபில்லாஹி வ ரஸூலிஹ்'வ தில்க ஹுதூதுல் லாஹ்; வ லில்காFபிரீன 'அதாBபுன் அலீம்
ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
اِنَّ الَّذِیْنَ یُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ كُبِتُوْا كَمَا كُبِتَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ وَقَدْ اَنْزَلْنَاۤ اٰیٰتٍ بَیِّنٰتٍ ؕ وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ مُّهِیْنٌ ۟ۚ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یُحَآدُّوْنَஎதிர்க்கிறார்களோاللّٰهَஅல்லாஹ்வைوَ رَسُوْلَهٗமேலும் அவனுடைய தூதரைكُبِتُوْاஅவர்கள் இழிவுபடுத்தப்பட்டனர்كَمَاபோலவேكُبِتَஇழிவுபடுத்தப்பட்டார்களோالَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்وَ قَدْமேலும் திண்ணமாகاَنْزَلْنَاۤநாம் அருளியுள்ளோம்اٰیٰتٍۭஅத்தாட்சிகளைبَیِّنٰتٍ ؕதெளிவானوَ لِلْكٰفِرِیْنَமேலும் நிராகரிப்பவர்களுக்குعَذَابٌவேதனைمُّهِیْنٌۚஇழிவு தரும்
இன்னல் லதீன யுஹாத்தூனல் லாஹ வ ரஸூலஹூ குBபிதூ கமா குBபிதல் லதீன மின் கBப்லிஹிம்; வ கத் அன்Zஜல்னா ஆயாதிம் Bபய்யினாத்; வலில் காFபிரீன 'அதாBபும் முஹீன்
எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப்பட்டதைப் போல் இழிவாக்கப்படுவார்கள் - திட்டமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். காஃபிர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
یَوْمَ یَبْعَثُهُمُ اللّٰهُ جَمِیْعًا فَیُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ اَحْصٰىهُ اللّٰهُ وَنَسُوْهُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟۠
یَوْمَஅந்நாளில்یَبْعَثُهُمُஅவர்களை எழுப்புவான்اللّٰهُஅல்லாஹ்جَمِیْعًاஅனைவரையும்فَیُنَبِّئُهُمْபின்னர் அவர்களுக்கு அவன் அறிவிப்பான்بِمَاஎவற்றைعَمِلُوْا ؕஅவர்கள் செய்தார்களோاَحْصٰىهُஅதனை அவன் கணக்கிட்டுள்ளான்اللّٰهُஅல்லாஹ்وَ نَسُوْهُ ؕஅவர்கள் அதனை மறந்துவிட்டனர்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்شَهِیْدٌ۠சாட்சியாக இருக்கிறான்
யவ்ம யBப்'அதுஹுமுல் லாஹு ஜமீ'அன் FபயுனBப்Bபி'உஹும் Bபிமா 'அமிலூ; அஹ்ஸாஹுல் லாஹு வ னஸூஹ்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீத்
அல்லாஹ் அவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ مَا یَكُوْنُ مِنْ نَّجْوٰی ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰی مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَیْنَ مَا كَانُوْا ۚ ثُمَّ یُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا یَوْمَ الْقِیٰمَةِ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
اَلَمْஇல்லையாتَرَநீர் கவனிக்கاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்مَاஎவைفِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ مَاமேலும் எவைفِیஇல்الْاَرْضِ ؕபூமிمَاஇல்லைیَكُوْنُநடைபெறுவதுمِنْஎந்தنَّجْوٰیஇரகசியப் பேச்சுثَلٰثَةٍமூவர்اِلَّاதவிரهُوَஅவன்رَابِعُهُمْஅவர்களின் நான்காமவனாகوَ لَاமேலும் இல்லைخَمْسَةٍஐவர்اِلَّاதவிரهُوَஅவன்سَادِسُهُمْஅவர்களின் ஆறாமவனாகوَ لَاۤமேலும் இல்லைاَدْنٰیகுறைவானவர்கள்مِنْவிடذٰلِكَஅதைوَ لَاۤமேலும் இல்லைاَكْثَرَஅதிகமானவர்கள்اِلَّاதவிரهُوَஅவன்مَعَهُمْஅவர்களுடன்اَیْنَஎங்குمَاஇருந்தாலும்كَانُوْا ۚஅவர்கள் இருந்தார்களோثُمَّபின்னர்یُنَبِّئُهُمْஅவர்களுக்கு அறிவிப்பான்بِمَاஎவற்றைعَمِلُوْاஅவர்கள் செய்தார்களோیَوْمَநாளில்الْقِیٰمَةِ ؕமறுமைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُلِّஅனைத்துشَیْءٍபொருட்களையும்عَلِیْمٌநன்கறிந்தவன்
அலம் தர அன்னல் லாஹ யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி மா யகூனு மின் னஜ்வா தலாததின் இல்லா ஹுவ ராBபி'உஹும் வலா கம்ஸதின் இல்லா ஹுவ ஸாதிஸுஹும் வ லா அத்னா மின் தாலிக வ லா அக்தர இல்லா ஹுவ ம'அஹும் அய்ன, மா கானூ தும்ம யுனBப்Bபி'உஹும் Bபிமா 'அமிலூ யவ்மல் கியாமஹ்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை; இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை; இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ نُهُوْا عَنِ النَّجْوٰی ثُمَّ یَعُوْدُوْنَ لِمَا نُهُوْا عَنْهُ وَیَتَنٰجَوْنَ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِیَتِ الرَّسُوْلِ ؗ وَاِذَا جَآءُوْكَ حَیَّوْكَ بِمَا لَمْ یُحَیِّكَ بِهِ اللّٰهُ ۙ وَیَقُوْلُوْنَ فِیْۤ اَنْفُسِهِمْ لَوْلَا یُعَذِّبُنَا اللّٰهُ بِمَا نَقُوْلُ ؕ حَسْبُهُمْ جَهَنَّمُ ۚ یَصْلَوْنَهَا ۚ فَبِئْسَ الْمَصِیْرُ ۟
اَلَمْஇல்லையாتَرَநீர் பார்த்தீராاِلَیபக்கம்الَّذِیْنَஎவர்கள்نُهُوْاதடுக்கப்பட்டார்களோعَنِஇருந்துالنَّجْوٰیஇரகசிய ஆலோசனைثُمَّபிறகுیَعُوْدُوْنَஅவர்கள் மீளுகின்றனர்لِمَاஎதற்குنُهُوْاஅவர்கள் தடுக்கப்பட்டார்களோعَنْهُஅதிலிருந்துوَ یَتَنٰجَوْنَமேலும் அவர்கள் இரகசியமாகப் பேசுகிறார்கள்بِالْاِثْمِபாவத்தைக் கொண்டுوَ الْعُدْوَانِமேலும் வரம்பு மீறுதலைக் கொண்டுوَ مَعْصِیَتِமேலும் மாறு செய்வதைக் கொண்டுالرَّسُوْلِ ؗதூதருக்குوَ اِذَاமேலும் எப்போதுجَآءُوْكَஅவர்கள் உம்மிடம் வருகிறார்களோحَیَّوْكَஅவர்கள் உமக்கு முகமன் கூறுகிறார்கள்بِمَاஎதைக் கொண்டுلَمْஇல்லைیُحَیِّكَஅவன் உமக்கு முகமன் கூறுகிறான்بِهِஅதைக் கொண்டுاللّٰهُ ۙஅல்லாஹ்وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்فِیْۤஇல்اَنْفُسِهِمْதங்களுக்குள்ளேயேلَوْ لَاஏன் இல்லைیُعَذِّبُنَاஅவன் நம்மைத் தண்டிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِمَاஎதைக் கொண்டுنَقُوْلُ ؕநாம் கூறுகிறோமோحَسْبُهُمْஅவர்களுக்குப் போதுமானதுجَهَنَّمُ ۚநரகம்یَصْلَوْنَهَا ۚஅதில் அவர்கள் எரிவார்கள்فَبِئْسَஅது மிகவும் கெட்டதுالْمَصِیْرُசேருமிடம்
அலம் தர இலல் லதீன னுஹூ 'அனின் னஜ்வா தும்ம ய'ஊதூன லிமா னுஹூ 'அன்ஹு வ யதனாஜவ்ன Bபில் இத்மி வல்'உத்வானி வ மஃஸியதிர் ரஸூலி வ இதா ஜா'ஊக ஹய்யவ்க Bபிமா லம் யுஹய் யிக Bபிஹில் லாஹு வ யகூலூன Fபீ அன்Fபுஸிஹிம் லவ் லா யு'அத்திBபுனல் லாஹு Bபிமா னகூல்; ஹஸ்Bபுஹும் ஜஹன்ன்னமு யஸ்லவ்னஹா FபBபி'ஸல் மஸீர்
இரகசியம் பேசுவதை விட்டுத்தடுக்கப்பட்டிருந்தும், எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன் பால் மீண்டு பாவத்தையும் வரம்பு மீறுதலையும், ரஸூலுக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியமாக ஆலோசனை செய்கிறார்களே அவர்களை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? பின்னர் அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உம்மை எ(வ்வாசகத்)தைக் கொண்டு ஸலாம் (முகமன்) கூறவில்லையோ அதைக் கொண்டு (முகமன்) கூறுகிறார்கள். பிறகு, அவர்கள் தங்களுக்குள் “நாம் (இவ்வாறு) சொல்லியதற்காக ஏன் அல்லாஹ் நம்மை வேதனைக்குள்ளாக்கவில்லை” என்றும் கூறிக் கொள்கின்றனர். நரகமே அவர்களுக்கு போதுமானதாகும்; அவர்கள் அதில் நுழைவார்கள் - மீளும் தலத்தில் அது மிகக் கெட்டதாகும்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا تَنَاجَیْتُمْ فَلَا تَتَنَاجَوْا بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِیَتِ الرَّسُوْلِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوٰی ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِذَاபொழுதுتَنَاجَیْتُمْநீங்கள் இரகசியமாகப் பேசிக்கொண்டால்فَلَاஎனவேتَتَنَاجَوْاஇரகசியமாகப் பேசாதீர்கள்بِالْاِثْمِபாவத்தைப் பற்றிوَ الْعُدْوَانِமேலும் வரம்பு மீறுவதைப் பற்றியும்وَ مَعْصِیَتِமேலும் மாறு செய்வதைப் பற்றியும்الرَّسُوْلِதூதருக்குوَ تَنَاجَوْاமேலும் இரகசியமாகப் பேசுங்கள்بِالْبِرِّநன்மையைப் பற்றிوَ التَّقْوٰی ؕமேலும் இறையச்சத்தைப் பற்றியும்وَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைالَّذِیْۤஎத்தகையவனென்றால்اِلَیْهِஅவனிடமேتُحْشَرُوْنَநீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா தனாஜய்தும் Fபலா ததனாஜவ் Bபில் இத்மி வல் 'உத்வானி வ மஃஸியதிர் ரஸூலி வ தனாஜவ் Bபில் Bபிர்ரி வத்தக்வா வத்தகுல் லாஹல் லதீ இலய்ஹி துஹ்ஷரூன்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள்; ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு - எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ - அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
اِنَّمَا النَّجْوٰی مِنَ الشَّیْطٰنِ لِیَحْزُنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَلَیْسَ بِضَآرِّهِمْ شَیْـًٔا اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகالنَّجْوٰیஇரகசியப் பேச்சுمِنَஇருந்துالشَّیْطٰنِஷைத்தானின்لِیَحْزُنَகவலையடையச் செய்வதற்காகவேالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோوَ لَیْسَமேலும் அவன் இல்லைبِضَآرِّهِمْஅவர்களுக்குத் தீங்கு செய்பவனாகشَیْـًٔاசிறிதும்اِلَّاதவிரبِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ عَلَیமேலும் மீதேاللّٰهِஅல்லாஹ்வின்فَلْیَتَوَكَّلِஎனவே நம்பிக்கை வைக்கட்டும்الْمُؤْمِنُوْنَமுஃமின்கள்
இன்னமன் னஜ்வா மினஷ் ஷய்தானி லியஹ்Zஜுனல் லதீன ஆமனூ வ லய்ஸ Bபிளார்ரிஹிம் ஷய்'அன் இல்லா Bபி-இத்னில் லாஹ்; வ 'அலல் லாஹி Fபல்யதவக்கலில் மு'மினூன்
ஈமான் கொண்டவர்களைக் கவலைப்படச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்துள்ளதே (இந்த) இரகசிய(ப் பேச்சாகு)ம்; ஆனால், அல்லாஹ்வுடையை அனுமதியின்றி (அவர்களுக்கு) அவனால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது; எனவே முஃமின்கள் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருக்க வேண்டும்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قِیْلَ لَكُمْ تَفَسَّحُوْا فِی الْمَجٰلِسِ فَافْسَحُوْا یَفْسَحِ اللّٰهُ لَكُمْ ۚ وَاِذَا قِیْلَ انْشُزُوْا فَانْشُزُوْا یَرْفَعِ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاஈமான் கொண்டார்களோاِذَاஎப்பொழுதுقِیْلَசொல்லப்பட்டால்لَكُمْஉங்களுக்குتَفَسَّحُوْاஇடங்கொடுங்கள்فِیஇல்الْمَجٰلِسِசபைகளில்فَافْسَحُوْاஎனவே இடங்கொடுங்கள்یَفْسَحِஇடமளிப்பான்اللّٰهُஅல்லாஹ்لَكُمْ ۚஉங்களுக்குوَ اِذَاமேலும் எப்பொழுதுقِیْلَசொல்லப்பட்டால்انْشُزُوْاஎழுந்திருங்கள்فَانْشُزُوْاஎனவே எழுந்திருங்கள்یَرْفَعِஉயர்த்துவான்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்களைاٰمَنُوْاஈமான் கொண்டார்களோمِنْكُمْ ۙஉங்களில்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اُوْتُواவழங்கப்பட்டார்களோالْعِلْمَகல்விدَرَجٰتٍ ؕஅந்தஸ்துகளைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎதைتَعْمَلُوْنَசெய்கிறீர்களோخَبِیْرٌநன்கறிந்தவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா கீல லகும் தFபஸ்ஸஹூ Fபில் மஜாலிஸி FபFப்ஸஹூ யFப்ஸஹில் லாஹு லகும் வ இதா கீலன் ஷுZஜூ Fபன்ஷுZஜூ யர்Fப'இல் லாஹுல் லதீன ஆமனூ மின்கும் வல்லதீன ஊதுல் 'இல்ம தரஜாத்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்” என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَیْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَیْنَ یَدَیْ نَجْوٰىكُمْ صَدَقَةً ؕ ذٰلِكَ خَیْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ؕ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِذَاஎப்பொழுதுنَاجَیْتُمُநீங்கள் இரகசியமாகப் பேசுகிறீர்களோالرَّسُوْلَஇறைத்தூதரிடம்فَقَدِّمُوْاமுன்வையுங்கள்بَیْنَமுன்பாகیَدَیْமுன்னிலையில்نَجْوٰىكُمْஉங்கள் இரகசியப் பேச்சுக்குصَدَقَةً ؕஒரு தர்மத்தைذٰلِكَஅதுخَیْرٌசிறந்ததுلَّكُمْஉங்களுக்குوَ اَطْهَرُ ؕமேலும் தூய்மையானதுفَاِنْஆனால் ஒருவேளைلَّمْஇல்லைتَجِدُوْاநீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா னாஜய்துமுர் ரஸூல Fபகத்திமூ Bபய்ன யதய் னஜ்வாகும் ஸதகஹ்; தாலிக கய்ருல் லகும் வ அத்ஹர்; Fப இல் லம் தஜிதூ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
ءَاَشْفَقْتُمْ اَنْ تُقَدِّمُوْا بَیْنَ یَدَیْ نَجْوٰىكُمْ صَدَقٰتٍ ؕ فَاِذْ لَمْ تَفْعَلُوْا وَتَابَ اللّٰهُ عَلَیْكُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠
ءَاَشْفَقْتُمْநீங்கள் அஞ்சுகிறீர்களாاَنْஎன்றுتُقَدِّمُوْاமுற்படுத்துவதற்குبَیْنَமுன்னால்یَدَیْமுன்னிலையில்نَجْوٰىكُمْஉங்கள் இரகசிய ஆலோசனைக்குصَدَقٰتٍ ؕதர்மங்களைفَاِذْஆகவேلَمْஇல்லைتَفْعَلُوْاநீங்கள் செய்யوَ تَابَமேலும் மன்னித்துவிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْكُمْஉங்கள் மீதுفَاَقِیْمُواஎனவே நிலைநாട്ടുங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتُواமேலும் வழங்குங்கள்الزَّكٰوةَஜகாத்தைوَ اَطِیْعُواமேலும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلَهٗ ؕமேலும் அவனுடைய தூதருக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்خَبِیْرٌۢநன்கு அறிந்தவன்بِمَاஎதைتَعْمَلُوْنَ۠நீங்கள் செய்கிறீர்களோ
'அ-அஷ்Fபக்தும் அன் துகத்திமூ Bபய்ன யதய் னஜ்வாகும் ஸதகாத்; Fப-இத் லம் தFப்'அலூ வ தாBபல் லாஹு 'அலய்கும் Fப அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வ அதீ'உல் லாஹ வ ரஸூலஹ்; வல்லாஹு கBபீரும் Bபிமா தஃமலூன்
நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ ؕ مَا هُمْ مِّنْكُمْ وَلَا مِنْهُمْ ۙ وَیَحْلِفُوْنَ عَلَی الْكَذِبِ وَهُمْ یَعْلَمُوْنَ ۟ۚ
اَلَمْஇல்லையாتَرَநீர் பார்த்தீராاِلَیநோக்கிالَّذِیْنَஎவர்கள்تَوَلَّوْاநேசர்களாக ஆக்கிக் கொண்டார்களோقَوْمًاஒரு சமூகத்தினரைغَضِبَகோபம் கொண்டானோاللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْ ؕஅவர்கள் மீதுمَاஇல்லைهُمْஅவர்கள்مِّنْكُمْஉங்களைச் சேர்ந்தவர்களும்وَ لَاமேலும் இல்லைمِنْهُمْ ۙஅவர்களைச் சேர்ந்தவர்களும்وَ یَحْلِفُوْنَமேலும் அவர்கள் சத்தியம் செய்கிறார்கள்عَلَیமீதுالْكَذِبِபொய்யின்وَ هُمْஅவர்கள்یَعْلَمُوْنَநன்கு அறிந்து கொண்டே
அலம் தர இலல் லதீன தவல்லவ் கவ்மன் களிBபல் லாஹு 'அலய்ஹிம் மா ஹும் மின்கும் வலா மின்ஹும் வ யஹ்லிFபூன 'அலல் கதிBபி வ ஹும் யஃலமூன்
எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.
اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِیْدًا ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اَعَدَّதயார் செய்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْஅவர்களுக்குعَذَابًاவேதனையைشَدِیْدًا ؕகடுமையானاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்سَآءَமிகக் கெட்டதுمَاஎதனைكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
அ'அத்தல் லாஹு லஹும் 'அதாBபன் ஷதீதன் இன்னஹும் ஸா'அ மா கானூ யஃமலூன்
அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை யெல்லாம் மிகவும் கெட்டவையே.
اِتَّخَذُوْۤا اَیْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟
اِتَّخَذُوْۤاஆக்கிக்கொண்டார்கள்اَیْمَانَهُمْதங்கள் சத்தியங்களைجُنَّةًஒரு கேடயமாகفَصَدُّوْاஆகவே தடுத்தார்கள்عَنْஇருந்துسَبِیْلِபாதையைاللّٰهِஅல்லாஹ்வின்فَلَهُمْஎனவே அவர்களுக்குعَذَابٌவேதனைمُّهِیْنٌஇழிவான
இத்தகதூ அய்மானஹும் ஜுன்னதன் Fபஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி Fபலஹும் 'அதாBபும் முஹீன்
அவர்கள் தங்கள் சத்தியங்களைக் கேடயமாக ஆக்கிக்கொண்டு, (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள்; ஆகவே அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ؕ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
لَنْஒருபோதும்تُغْنِیَபயனளிக்காதுعَنْهُمْஅவர்களுக்குاَمْوَالُهُمْஅவர்களுடைய செல்வங்கள்وَ لَاۤமேலும் இல்லைاَوْلَادُهُمْஅவர்களுடைய பிள்ளைகள்مِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்شَیْـًٔا ؕஎதனையும்اُولٰٓىِٕكَஅவர்கள்தாம்اَصْحٰبُதோழர்கள்النَّارِ ؕநரகத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَஎன்றென்றும் தங்குபவர்கள்
லன் துக்னிய 'அன்ஹும் அம்வாலுஹும் வ லா அவ்லாதுஹும் மினல் லாஹி ஷய்'ஆ; உலா 'இக அஸ் ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
அவர்களுடைய சொத்துக்களும், அவர்களுடைய மக்களும், அல்லாஹ் வி(திக்கும் வேதனையி)லிருந்து (காப்பாற்ற) உதவாது; அவர்கள் நரகவாதிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
یَوْمَ یَبْعَثُهُمُ اللّٰهُ جَمِیْعًا فَیَحْلِفُوْنَ لَهٗ كَمَا یَحْلِفُوْنَ لَكُمْ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ عَلٰی شَیْءٍ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْكٰذِبُوْنَ ۟
یَوْمَஅந்நாளில்یَبْعَثُهُمُஅவர்களை உயிர்த்தெழுப்புவான்اللّٰهُஅல்லாஹ்جَمِیْعًاஅனைவரையும்فَیَحْلِفُوْنَஅப்போது அவர்கள் சத்தியம் செய்வார்கள்لَهٗஅவனிடம்كَمَاபோலவேیَحْلِفُوْنَஅவர்கள் சத்தியம் செய்கிறார்களோلَكُمْஉங்களிடம்وَ یَحْسَبُوْنَமேலும் அவர்கள் எண்ணுகிறார்கள்اَنَّهُمْதாங்கள்عَلٰیமீதுشَیْءٍ ؕஏதோ ஒன்றின்اَلَاۤஅறிந்து கொள்ளுங்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்هُمُஅவர்களேالْكٰذِبُوْنَபொய்யர்கள்
யவ்ம யBப்'அதுஹுமுல் லாஹுஜமீ'அன் Fப யஹ்லிFபூன லஹூ கமா யஹ்லிFபூன லகும் வ யஹ்ஸBபூன அன்னஹும் 'அலா ஷய்'; அலா இன்னஹும் ஹுமுல் காதிBபூன்
அவர்கள் அனைவரையும் அல்லாஹ் எழுப்பும் நாளில் அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்தது போல், அவனிடமும் சத்தியம் செய்வார்கள்; அன்றியும், அவர்கள் (அதன் மூலம் தப்பித்துக் கொள்வதற்கு) ஏதோ ஒன்றின் மீது நிச்சயமாகத் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள்; அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
اِسْتَحْوَذَ عَلَیْهِمُ الشَّیْطٰنُ فَاَنْسٰىهُمْ ذِكْرَ اللّٰهِ ؕ اُولٰٓىِٕكَ حِزْبُ الشَّیْطٰنِ ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ الشَّیْطٰنِ هُمُ الْخٰسِرُوْنَ ۟
اِسْتَحْوَذَஆதிக்கம் செலுத்திவிட்டான்عَلَیْهِمُஅவர்கள் மீதுالشَّیْطٰنُஷைத்தான்فَاَنْسٰىهُمْஎனவே அவர்களுக்கு மறக்கச் செய்தான்ذِكْرَநினைவைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اُولٰٓىِٕكَஅவர்கள்தாம்حِزْبُகூட்டத்தினர்الشَّیْطٰنِ ؕஷைத்தானின்اَلَاۤஅறிந்து கொள்கاِنَّநிச்சயமாகحِزْبَகூட்டத்தினர்الشَّیْطٰنِஷைத்தானின்هُمُஅவர்களேالْخٰسِرُوْنَநஷ்டவாளிகள்
இஸ்தஹ்வத 'அலய்ஹிமுஷ் ஷய்தானு Fப அன்ஸாஹும் திக்ரல் லாஹ்; உலா'இக ஹிZஜ்Bபுஷ் ஷய்தான்; அலா இன்னா ஹிZஜ்Bபஷ் ஷய்தானி ஹுமுல் காஸிரூன்
அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர்; அறிந்து கொள்க; ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்!
اِنَّ الَّذِیْنَ یُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اُولٰٓىِٕكَ فِی الْاَذَلِّیْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یُحَآدُّوْنَஎதிர்க்கிறார்களோاللّٰهَஅல்லாஹ்வைوَ رَسُوْلَهٗۤஅவனுடைய தூதரையும்اُولٰٓىِٕكَஅவர்கள்தாம்فِیஇருப்பார்கள்الْاَذَلِّیْنَமிகவும் இழிந்தவர்களில்
இன்னல் லதீன யுஹாத்தூனல் லாஹ வ ரஸூலஹூ உலா'இக Fபில் அதல்லீன்
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, நிச்சயமாக அவர்களே மிகவும் தாழ்ந்தவர்கள்.
كَتَبَ اللّٰهُ لَاَغْلِبَنَّ اَنَا وَرُسُلِیْ ؕ اِنَّ اللّٰهَ قَوِیٌّ عَزِیْزٌ ۟
كَتَبَவிதித்துவிட்டான்اللّٰهُஅல்லாஹ்لَاَغْلِبَنَّநிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்اَنَاநான்وَ رُسُلِیْ ؕமேலும் எனது தூதர்களும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَوِیٌّவலிமைமிக்கவன்عَزِیْزٌமிகைத்தவன்
கதBபல் லாஹு ல அக்லிBபன்ன அன வ ருஸுலீ; இன்னல் லாஹ கவிய்யுன் 'அZஜீZஜ்
“நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்” என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன்; யாவரையும் மிகைத்தவன்.
لَا تَجِدُ قَوْمًا یُّؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ یُوَآدُّوْنَ مَنْ حَآدَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَوْ كَانُوْۤا اٰبَآءَهُمْ اَوْ اَبْنَآءَهُمْ اَوْ اِخْوَانَهُمْ اَوْ عَشِیْرَتَهُمْ ؕ اُولٰٓىِٕكَ كَتَبَ فِیْ قُلُوْبِهِمُ الْاِیْمَانَ وَاَیَّدَهُمْ بِرُوْحٍ مِّنْهُ ؕ وَیُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ رَضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ اُولٰٓىِٕكَ حِزْبُ اللّٰهِ ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْمُفْلِحُوْنَ ۟۠
لَاஇல்லைتَجِدُநீர் காண்பீர்قَوْمًاஒரு சமூகத்தவரைیُّؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளில்الْاٰخِرِஇறுதிیُوَآدُّوْنَஅவர்கள் நேசிப்பவர்களாகمَنْஎவர்حَآدَّபகைக்கிறாரோاللّٰهَஅல்லாஹ்வைوَ رَسُوْلَهٗமேலும் அவனது தூதரைوَ لَوْஇருந்தாலும்كَانُوْۤاஅவர்கள் இருந்தபோதிலும்اٰبَآءَهُمْஅவர்களின் தந்தையர்களாகاَوْஅல்லதுاَبْنَآءَهُمْஅவர்களின் புதல்வர்களாகاَوْஅல்லதுاِخْوَانَهُمْஅவர்களின் சகோதரர்களாகاَوْஅல்லதுعَشِیْرَتَهُمْ ؕஅவர்களின் உறவினர்களாகاُولٰٓىِٕكَஅத்தகையோர்كَتَبَஅவன் பதித்துவிட்டான்فِیْஇல்قُلُوْبِهِمُஅவர்களின் இதயங்கள்الْاِیْمَانَஈமானைوَ اَیَّدَهُمْமேலும் அவர்களை பலப்படுத்தினான்بِرُوْحٍஓர் அருளைக் கொண்டுمِّنْهُ ؕஅவனிடமிருந்துوَ یُدْخِلُهُمْமேலும் அவர்களை அவன் புகுத்துவான்جَنّٰتٍசுவனங்களில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَஎன்றென்றும் இருப்பவர்களாகفِیْهَا ؕஅவற்றில்رَضِیَபொருந்திக் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்عَنْهُمْஅவர்களைப் பற்றிوَ رَضُوْاமேலும் அவர்கள் திருப்தியடைந்தனர்عَنْهُ ؕஅவனிடம்اُولٰٓىِٕكَஅத்தகையோர்حِزْبُகூட்டத்தினர்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اَلَاۤஅறிந்து கொள்கاِنَّநிச்சயமாகحِزْبَகூட்டத்தினர்اللّٰهِஅல்லாஹ்வின்هُمُஅவர்கள் தான்الْمُفْلِحُوْنَ۠வெற்றியாளர்கள்
லா தஜிது கவ்ம(ன்)ய் யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி யுவாத்தூன மன் ஹாத்தல் லாஹ வ ரஸூலஹூ வ லவ் கானூ ஆBபா'அஹும் அவ் அBப்னா'அஹும் அவ் இக்வா னஹும் அவ் 'அஷீரதஹும்; உலா'இக கதBப Fபீ குலூBபிஹி முல் ஈமான வ அய்யதஹும் Bபிரூஹிம்மின்ஹு வ யுத்கிலு ஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; ரளியல் லாஹு 'அன்ஹும் வ ரளூ 'அன்ஹு; உலா 'இக ஹிZஜ்Bபுல் லாஹ்; அலா இன்ன ஹிZஜ்Bபல் லாஹி ஹுமுல் முFப்லிஹூன்
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.