لَقَدْநிச்சயமாகحَقَّஉறுதியாகிவிட்டதுالْقَوْلُவாக்குعَلٰۤیமீதுاَكْثَرِهِمْஅவர்களில் பெரும்பாலோர்فَهُمْஎனவே அவர்கள்لَاமாட்டார்கள்یُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள
லகத் ஹக்கல் கவ்லு 'அலா அக்தரிஹிம் Fபஹும் லா யு'மினூன்
இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகிவிட்டது; ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
وَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்مِنْۢஇருந்துبَیْنِமுன்னால்اَیْدِیْهِمْஅவர்களின் கைகளுக்குسَدًّاஒரு தடையைوَّ مِنْமேலும் இருந்துخَلْفِهِمْஅவர்களுக்குப் பின்னால்سَدًّاஒரு தடையைفَاَغْشَیْنٰهُمْஆகவே அவர்களை மூடினோம்فَهُمْஎனவே அவர்கள்لَاஇல்லைیُبْصِرُوْنَபார்க்கிறார்கள்
வ ஜ'அல்னா மின் Bபய்னி அய்தீஹிம் ஸத்த(ன்)வ்-வ மின் கல்Fபிஹிம் ஸத்தன் Fப அக்ஷய் னாஹும் Fபஹும் லா யுBப்ஸிரூன்
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
وَ سَوَآءٌமேலும் சமமேعَلَیْهِمْஅவர்களுக்குءَاَنْذَرْتَهُمْநீர் அவர்களை எச்சரித்தாலும்اَمْஅல்லதுلَمْஇல்லைتُنْذِرْهُمْநீர் அவர்களை எச்சரிப்பதுلَاமாட்டார்கள்یُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்ள
வ ஸவா'உன் 'அலய்ஹிம் 'அ-அன்தர்தஹும் அம் லம் துன்திர்ஹும் லா யு'மினூன்
இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
اِنَّاநிச்சயமாக நாம்نَحْنُநாமேنُحْیِஉயிர்ப்பிக்கிறோம்الْمَوْتٰیமரணித்தோரைوَ نَكْتُبُமேலும் நாம் எழுதுகிறோம்مَاஎதைقَدَّمُوْاஅவர்கள் முற்படுத்தினார்களோوَ اٰثَارَهُمْ ؔؕமேலும் அவர்களின் அடிச்சுவடுகளையும்وَ كُلَّமேலும் ஒவ்வொருشَیْءٍபொருளையும்اَحْصَیْنٰهُநாம் அதனைக் கணக்கிட்டுள்ளோம்فِیْۤஇல்اِمَامٍபதிவேடுمُّبِیْنٍ۠தெளிவான
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
اِذْபோதுاَرْسَلْنَاۤநாம் அனுப்பினோம்اِلَیْهِمُஅவர்களிடம்اثْنَیْنِஇருவரைفَكَذَّبُوْهُمَاஅவ்விருவரையும் அவர்கள் பொய்ப்பித்தார்கள்فَعَزَّزْنَاஎனவே நாம் வலுப்படுத்தினோம்بِثَالِثٍமூன்றாமவரைக் கொண்டுفَقَالُوْۤاஅப்போது அவர்கள் கூறினார்கள்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلَیْكُمْஉங்களிடம்مُّرْسَلُوْنَஅனுப்பப்பட்ட தூதர்கள்
இத் அர்ஸல்னா இலய்ஹிமுத்னய்னி Fபகத்தBபூஹுமா Fப'அZஜ்ZஜZஜ்னா Bபிதாலிதின் Fபகாலூ இன்னா இலய்கும் முர்ஸலூன்
நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
வ ஜா'அ மின் அக்ஸல் மதீனதி ரஜுலு(ன்)ய் யஸ்'ஆ கால யா கவ்மித் தBபி'உல் முர்ஸலீன்
(அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); “என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.
'அ-அத்தகிது மின் தூனிஹீ ஆலிஹதன் இ(ன்)ய்-யுரித்னிர் ரஹ்மானு Bபிளுர்ரில்-லா துக்னி 'அன்னீ ஷFபா 'அதுஹும் ஷய் 'அ(ன்)வ்-வ லா யுன்கிதூன்
“அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியாது.
قِیْلَகூறப்பட்டதுادْخُلِநுழைவீராகالْجَنَّةَ ؕசுவனத்தில்قَالَகூறினார்یٰلَیْتَஆ! நான் ஆசைப்படுகிறேனேقَوْمِیْஎன் சமூகத்தினர்یَعْلَمُوْنَۙஅறிந்து கொள்ள வேண்டுமே
கீலத் குலில் ஜன்னத கால யா லய்த கவ்மீ யஃலமூன்
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) “நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக” என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.”
தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை; அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
“அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்” என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
وَ اٰیَةٌமேலும் ஓர் அத்தாட்சிلَّهُمُஅவர்களுக்குالْاَرْضُபூமிالْمَیْتَةُ ۖۚஇறந்தاَحْیَیْنٰهَاஅதனை நாம் உயிர்ப்பித்தோம்وَ اَخْرَجْنَاமேலும் நாம் வெளிக்கொணர்ந்தோம்مِنْهَاஅதிலிருந்துحَبًّاதானியத்தைفَمِنْهُபின்னர் அதிலிருந்துیَاْكُلُوْنَஅவர்கள் உண்கிறார்கள்
அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
وَ جَعَلْنَاமேலும் நாம் உருவாக்கினோம்فِیْهَاஅதில்جَنّٰتٍதோட்டங்களைمِّنْகொண்டنَّخِیْلٍபேரீச்சைوَّ اَعْنَابٍமற்றும் திராட்சைوَّ فَجَّرْنَاமேலும் நாம் பீறிடச் செய்தோம்فِیْهَاஅதில்مِنَஇருந்துالْعُیُوْنِۙநீரூற்றுகளை
மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
ஸுBப்ஹானல் லதீ கலகல் அZஜ்வாஜ குல்லஹா மிம்மா தும்Bபிதுல் அர்ளு வ மின் அன்Fபுஸிஹிம் வ மிம்மா லா யஃலமூன்
பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
வ இன் னஷா னுக்ரிக்ஹும் Fபலா ஸரீக லஹும் வலா ஹும் யுன்கதூன்
அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
“அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.
فَالْیَوْمَஎனவே இன்றைய தினம்لَاஇல்லைتُظْلَمُஅநீதி இழைக்கப்படும்نَفْسٌஎந்த ஓர் ஆத்மாவும்شَیْـًٔاசிறிதளவும்وَّ لَاமேலும் இல்லைتُجْزَوْنَநீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள்اِلَّاதவிரمَاஎதைكُنْتُمْநீங்கள்تَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தீர்களோ
Fபல்-யவ்ம லா துள்லமு னFப்ஸுன் ஷய்'அ(ன்)வ்-வ லா துஜ்Zஜவ்ன இல்லா மா குன்தும் தஃமலூன்
அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
هُمْஅவர்கள்وَ اَزْوَاجُهُمْமற்றும் அவர்களின் துணைகளும்فِیْஇல்ظِلٰلٍநிழல்கள்عَلَیமீதுالْاَرَآىِٕكِஅலங்கரிக்கப்பட்ட கட்டில்களின்مُتَّكِـُٔوْنَசாய்ந்திருப்பார்கள்
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
وَ لَوْஇன்னும்نَشَآءُநாம் நாடியிருந்தால்لَمَسَخْنٰهُمْஅவர்களை உருமாற்றியிருப்போம்عَلٰیமீதுمَكَانَتِهِمْஅவர்களின் இடங்களிலேயேفَمَاஅப்போதுاسْتَطَاعُوْاஅவர்களால் இயலாதுمُضِیًّاமுன்னேறிச் செல்லوَّ لَاமேலும் இல்லைیَرْجِعُوْنَ۠அவர்கள் திரும்ப
வ லவ் னஷா'உ லமஸக்னாஹும் 'அலா மகானதிஹிம் Fபமஸ்-ததா'ஊ முளிய்ய(ன்)வ்-வ லா யர்ஜி'ஊன்
அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
وَ مَاமேலும் நாம் இல்லைعَلَّمْنٰهُஅவருக்குக் கற்றுக்கொடுத்தோம்الشِّعْرَகவிதையைوَ مَاமேலும் அது இல்லைیَنْۢبَغِیْதகுதியானதுلَهٗ ؕஅவருக்குاِنْஇல்லைهُوَஇதுاِلَّاதவிரذِكْرٌஒரு நினைவூட்டல்وَّ قُرْاٰنٌமேலும் ஒரு குர்ஆன்مُّبِیْنٌۙதெளிவான
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.
وَ ذَلَّلْنٰهَاமேலும் அவற்றை நாம் வசப்படுத்தினோம்لَهُمْஅவர்களுக்குفَمِنْهَاஆகவே அவற்றில்رَكُوْبُهُمْஅவர்களின் வாகனங்கள்وَ مِنْهَاமேலும் அவற்றில்یَاْكُلُوْنَஅவர்கள் உண்கிறார்கள்
மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
وَ اتَّخَذُوْاமேலும் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்مِنْவேறுدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைاٰلِهَةًதெய்வங்களைلَّعَلَّهُمْஅவர்கள்یُنْصَرُوْنَؕஉதவி செய்யப்படுவார்கள் என்பதற்காக
வத்தகதூ மின் தூனில் லாஹி ஆலிஹதல் ல'அல்லஹும் யுன்ஸரூன்
எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
(நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
وَ ضَرَبَமேலும் அவன் எடுத்துக்காட்டினான்لَنَاநமக்குمَثَلًاஓர் உதாரணத்தைوَّ نَسِیَமேலும் அவன் மறந்துவிட்டான்خَلْقَهٗ ؕதன் படைப்பைقَالَஅவன் கூறினான்مَنْயார்یُّحْیِஉயிர்ப்பிப்பார்الْعِظَامَஎலும்புகளைوَ هِیَஅவைرَمِیْمٌமட்கிப் போனவையாக இருக்கும் நிலையில்
மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.
“முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!