71. ஸூரத்து நூஹ்

மக்கீ, வசனங்கள்: 28

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِنَّاۤ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاஅனுப்பினோம்نُوْحًاநூஹைاِلٰیபால்قَوْمِهٖۤஅவருடைய சமூகத்தாரின்اَنْஎன்றுاَنْذِرْஎச்சரிக்கை செய்வீராகقَوْمَكَஉமது சமூகத்தாரைمِنْக்குقَبْلِமுன்னர்اَنْஎன்றுیَّاْتِیَهُمْஅவர்களுக்கு வருவதற்குعَذَابٌவேதனைاَلِیْمٌநோவினை தரும்
இன்னா அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ அன் அன்திர் கவ்மக மின் கBப்லி அ(ன்)ய் யா'தியஹும் 'அதாBபுன் அலீம்
நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்: “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரஸூலாக) அனுப்பினோம்.
قَالَ یٰقَوْمِ اِنِّیْ لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۙ
قَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاِنِّیْநிச்சயமாக நான்لَكُمْஉங்களுக்குنَذِیْرٌஅச்சமூட்டி எச்சரிப்பவன்مُّبِیْنٌۙதெளிவான
கால யா கவ்மி இன்னீ லகும் னதீரும் முBபீன்
“என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்று கூறினார்.
اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ وَاَطِیْعُوْنِ ۟ۙ
اَنِஎன்றுاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اتَّقُوْهُமேலும் அவனுக்கு அஞ்சுங்கள்وَ اَطِیْعُوْنِۙமேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்
அனிஃ-Bபுதுல் லாஹ வத்த கூஹு வ அதீ'ஊன்
“அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்.
یَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُؤَخِّرْكُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَآءَ لَا یُؤَخَّرُ ۘ لَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
یَغْفِرْஅவன் மன்னிப்பான்لَكُمْஉங்களுக்குمِّنْஇருந்துذُنُوْبِكُمْஉங்கள் பாவங்களைوَ یُؤَخِّرْكُمْமேலும் உங்களை பிற்படுத்துவான்اِلٰۤیவரைاَجَلٍஒரு தவணைمُّسَمًّی ؕநிர்ணயிக்கப்பட்டاِنَّநிச்சயமாகاَجَلَதவணைاللّٰهِஅல்லாஹ்வின்اِذَاபோதுجَآءَவந்துவிட்டால்لَاமாட்டாதுیُؤَخَّرُ ۘபிற்படுத்தப்படلَوْஒருவேளைكُنْتُمْநீங்கள்تَعْلَمُوْنَஅறிந்திருந்தால்
யக்Fபிர் லகும் மின் துனூBபிகும் வ யு'அக்கிர்கும் இலா அஜலிம் முஸம்மா; இன்னா அஜலல் லாஹி இதா ஜா'அ லா யு'அக்கர்; லவ் குன்தும் தஃலமூன்
“(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்” (என்றும் கூறினார்).
قَالَ رَبِّ اِنِّیْ دَعَوْتُ قَوْمِیْ لَیْلًا وَّنَهَارًا ۟ۙ
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاِنِّیْநிச்சயமாக நான்دَعَوْتُஅழைத்தேன்قَوْمِیْஎன் சமூகத்தாரைلَیْلًاஇரவிலும்وَّ نَهَارًاۙபகலிலும்
கால ரBப்Bபி இன்னீ த'அவ்து கவ்மீ லய்ல(ன்)வ் வ னஹரா
பின்னர் அவர்: “என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.
فَلَمْ یَزِدْهُمْ دُعَآءِیْۤ اِلَّا فِرَارًا ۟
فَلَمْஆனால் இல்லைیَزِدْهُمْஅவர்களுக்கு அதிகரிக்கدُعَآءِیْۤஎனது அழைப்புاِلَّاதவிரفِرَارًاவெருண்டோடுவதை
Fபலம் யZஜித் ஹும் து'ஆ 'ஈ இல்லா Fபிராரா
“ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர்வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.
وَاِنِّیْ كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوْۤا اَصَابِعَهُمْ فِیْۤ اٰذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِیَابَهُمْ وَاَصَرُّوْا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا ۟ۚ
وَ اِنِّیْமேலும் நிச்சயமாக நான்كُلَّمَاஒவ்வொரு முறையும்دَعَوْتُهُمْநான் அவர்களை அழைத்தلِتَغْفِرَநீ மன்னிப்பதற்காகلَهُمْஅவர்களுக்குجَعَلُوْۤاஅவர்கள் வைத்துக் கொண்டார்கள்اَصَابِعَهُمْதங்களது விரல்களைفِیْۤஇல்اٰذَانِهِمْதங்களது காதுகளில்وَ اسْتَغْشَوْاமேலும் அவர்கள் போர்த்திக் கொண்டார்கள்ثِیَابَهُمْதங்களது ஆடைகளைوَ اَصَرُّوْاமேலும் அவர்கள் பிடிவாதம் பிடித்தார்கள்وَ اسْتَكْبَرُواமேலும் அவர்கள் பெருமையடித்தார்கள்اسْتِكْبَارًاۚபெரும் பெருமையாக
வ இன்னீ குல்லமா த'அவ்துஹும் லிதக்Fபிர லஹும் ஜ'அலூ அஸாBபி'அஹும் Fபீ ஆதானிஹிம் வஸ்தக்ஷவ் தியாBபஹும் வ அஸார்ரூ வஸ்தக்Bபருஸ் திக்Bபாரா
“அன்றியும்: நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர்; மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.
ثُمَّ اِنِّیْ دَعَوْتُهُمْ جِهَارًا ۟ۙ
ثُمَّபின்னர்اِنِّیْநிச்சயமாக நான்دَعَوْتُهُمْஅவர்களை அழைத்தேன்جِهَارًاۙபகிரங்கமாக
தும்ம இன்னீ த'அவ் துஹும் ஜிஹாரா
“பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.
ثُمَّ اِنِّیْۤ اَعْلَنْتُ لَهُمْ وَاَسْرَرْتُ لَهُمْ اِسْرَارًا ۟ۙ
ثُمَّபின்னர்اِنِّیْۤநிச்சயமாக நான்اَعْلَنْتُபகிரங்கமாக அறிவித்தேன்لَهُمْஅவர்களுக்குوَ اَسْرَرْتُமேலும் இரகசியமாகக் கூறினேன்لَهُمْஅவர்களுக்குاِسْرَارًاۙமுற்றிலும் இரகசியமாக
தும்மா இன்னீ அஃலன்து லஹும் வ அஸ்ரர்து லஹும் இஸ்ராரா
“அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.
فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ؕ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۟ۙ
فَقُلْتُஎனவே நான் கூறினேன்اسْتَغْفِرُوْاமன்னிப்புத் தேடுங்கள்رَبَّكُمْ ؕஉங்கள் இறைவனிடம்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கிறான்غَفَّارًاۙமிகவும் மன்னிப்பவனாக
Fபகுல்துஸ் தக்Fபிரூ ரBப்Bபகும் இன்னஹூ கான கFப்Fபாரா
மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன்.
یُّرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًا ۟ۙ
یُّرْسِلِஅனுப்புவான்السَّمَآءَவானத்தைعَلَیْكُمْஉங்கள் மீதுمِّدْرَارًاۙதாரை தாரையாக
யுர்ஸிலிஸ் ஸமா'அ 'அலய்கும் மித்ராரா
“(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.
وَّیُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِیْنَ وَیَجْعَلْ لَّكُمْ جَنّٰتٍ وَّیَجْعَلْ لَّكُمْ اَنْهٰرًا ۟ؕ
وَّ یُمْدِدْكُمْமேலும் உங்களுக்கு அவன் உதவி செய்வான்بِاَمْوَالٍசெல்வங்களைக் கொண்டுوَّ بَنِیْنَஇன்னும் புதல்வர்களைக் கொண்டுوَ یَجْعَلْமேலும் அவன் உண்டாக்குவான்لَّكُمْஉங்களுக்குجَنّٰتٍசோலைகளைوَّ یَجْعَلْமேலும் அவன் உண்டாக்குவான்لَّكُمْஉங்களுக்குاَنْهٰرًاؕஆறுகளை
வ யும்தித்கும் Bபி அம் வாலி(ன்)வ் வ Bபனீன வ யஜ்'அல் லகும் ஜன்னாதி(ன்)வ் வ யஜ்'அல் லகும் அன்ஹாரா
“அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.
مَا لَكُمْ لَا تَرْجُوْنَ لِلّٰهِ وَقَارًا ۟ۚ
مَاஎன்னلَكُمْஉங்களுக்குلَاஇல்லைتَرْجُوْنَஎதிர்பார்க்கிறீர்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குوَقَارًاۚமகத்துவத்தை
மா லகும் லா தர்ஜூன லில்லாஹி வகாரா
“உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும், மேன்மையையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.
وَقَدْ خَلَقَكُمْ اَطْوَارًا ۟
وَ قَدْமேலும் நிச்சயமாகخَلَقَكُمْஅவன் உங்களைப் படைத்தான்اَطْوَارًاபல நிலைகளில்
வ கத் கலககும் அத் வாரா
“நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்.
اَلَمْ تَرَوْا كَیْفَ خَلَقَ اللّٰهُ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا ۟ۙ
اَلَمْநீங்கள்تَرَوْاபார்க்கவில்லையாكَیْفَஎவ்வாறுخَلَقَபடைத்தான்اللّٰهُஅல்லாஹ்سَبْعَஏழுسَمٰوٰتٍவானங்களைطِبَاقًاۙஅடுக்கடுக்காக
அலம் தரவ் கய்Fப கலகல் லாஹு ஸBப்'அ ஸமாவாதின் திBபாகா
“ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா,
وَّجَعَلَ الْقَمَرَ فِیْهِنَّ نُوْرًا وَّجَعَلَ الشَّمْسَ سِرَاجًا ۟
وَّ جَعَلَமேலும் ஆக்கினான்الْقَمَرَசந்திரனைفِیْهِنَّஅவற்றில்نُوْرًاஒளியாகوَّ جَعَلَமேலும் ஆக்கினான்الشَّمْسَசூரியனைسِرَاجًاவிளக்காக
வ ஜ'அலல் கமர Fபீஹின்ன னூர(ன்)வ் வ ஜ'அலஷ் ஷம்ஸ ஸிராஜா
“இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.
وَاللّٰهُ اَنْۢبَتَكُمْ مِّنَ الْاَرْضِ نَبَاتًا ۟ۙ
وَ اللّٰهُமேலும் அல்லாஹ்اَنْۢبَتَكُمْஉங்களை முளைக்கச் செய்தான்مِّنَஇருந்துالْاَرْضِபூமிنَبَاتًاۙஒரு செடியைப் போல்
வல்லாஹு அம்Bபதகும் மினல் அர்ளி னBபாதா
“அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.
ثُمَّ یُعِیْدُكُمْ فِیْهَا وَیُخْرِجُكُمْ اِخْرَاجًا ۟
ثُمَّபின்னர்یُعِیْدُكُمْஉங்களை மீளச் செய்வான்فِیْهَاஅதனுள்وَ یُخْرِجُكُمْமேலும் உங்களை வெளியேற்றுவான்اِخْرَاجًاஒரு வெளியேற்றமாக
தும்ம யு'ஈதுகும் Fபீஹா வ யுக்ரிஜுகும் இக்ராஜா
“பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான்.
وَاللّٰهُ جَعَلَ لَكُمُ الْاَرْضَ بِسَاطًا ۟ۙ
وَ اللّٰهُமேலும் அல்லாஹ்جَعَلَஆக்கினான்لَكُمُஉங்களுக்குالْاَرْضَபூமியைبِسَاطًاۙஒரு விரிப்பாக
வல்லாஹு ஜ'அல லகுமுல் அர்ள Bபிஸாதா
“அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
لِّتَسْلُكُوْا مِنْهَا سُبُلًا فِجَاجًا ۟۠
لِّتَسْلُكُوْاநீங்கள் செல்வதற்காகمِنْهَاஅதில்سُبُلًاபாதைகளில்فِجَاجًا۠விசாலமான
லிதஸ்லுகூ மின்ஹா ஸுBபுலன் Fபிஜாஜா
“அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்” (என்றும் போதித்தார்).  
قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِیْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ یَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًا ۟ۚ
قَالَகூறினார்نُوْحٌநூஹ்رَّبِّஎன் இறைவனேاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்عَصَوْنِیْஎனக்கு மாறுசெய்தார்கள்وَ اتَّبَعُوْاமேலும் பின்பற்றினார்கள்مَنْஎவரைلَّمْஇல்லைیَزِدْهُஅவருக்கு அதிகப்படுத்தியதுمَالُهٗஅவருடைய செல்வம்وَ وَلَدُهٗۤமேலும் அவருடைய பிள்ளைகள்اِلَّاதவிரخَسَارًاۚநஷ்டத்தை
கால னூஹுர் ரBப்Bபி இன்னஹும் 'அஸவ்னீ வத்தBப'ஊ மல் லம் யZஜித் ஹு மாலுஹூ வ வலதுஹூ இல்லா கஸாரா
நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர்; அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.
وَمَكَرُوْا مَكْرًا كُبَّارًا ۟ۚ
وَ مَكَرُوْاமேலும் அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்مَكْرًاஒரு சூழ்ச்சியைكُبَّارًاۚமாபெரும்
வ மகரூ மக்ரன் குBப்Bபாரா
“மேலும் (எனக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்.”
وَقَالُوْا لَا تَذَرُنَّ اٰلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَّلَا سُوَاعًا ۙ۬ وَّلَا یَغُوْثَ وَیَعُوْقَ وَنَسْرًا ۟ۚ
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்لَاஒருபோதும்تَذَرُنَّவிட்டுவிடாதீர்கள்اٰلِهَتَكُمْஉங்கள் தெய்வங்களைوَ لَاமேலும் ஒருபோதும்تَذَرُنَّவிட்டுவிடாதீர்கள்وَدًّاவத்தைوَّ لَاமேலும் விட்டுவிடாதீர்கள்سُوَاعًا ۙ۬ஸுவாவைوَّ لَاமேலும் விட்டுவிடாதீர்கள்یَغُوْثَயகூஸைوَ یَعُوْقَமேலும் யஊக்கைوَ نَسْرًاۚமேலும் நஸ்ரை
வ காலூ லா ததருன்ன ஆலிஹதகும் வலா ததருன்ன வத்த(ன்)வ் வலா ஸுவா'அ(ன்)வ் வலா யகூத வ ய'ஊக வ னஸ்ரா
மேலும் அவர்கள்: “உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் சொல்கின்றனர்.
وَقَدْ اَضَلُّوْا كَثِیْرًا ۚ۬ وَلَا تَزِدِ الظّٰلِمِیْنَ اِلَّا ضَلٰلًا ۟
وَ قَدْமேலும் நிச்சயமாகاَضَلُّوْاஅவர்கள் வழிகெடுத்தார்கள்كَثِیْرًا ۚ۬பலரைوَ لَاஇன்னும் நீ வேண்டாம்تَزِدِஅதிகப்படுத்தالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குاِلَّاதவிரضَلٰلًاவழிகேட்டை
வ கத் அளல்லூ கதீ ர(ன்)வ் வலா தZஜிதிள் ளாலிமீன இல்லா ளலாலா
“நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர்; ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே.”
مِمَّا خَطِیْٓـٰٔتِهِمْ اُغْرِقُوْا فَاُدْخِلُوْا نَارًا ۙ۬ فَلَمْ یَجِدُوْا لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَنْصَارًا ۟
مِمَّاகாரணமாகخَطِیْٓـٰٔتِهِمْஅவர்களின் பாவங்களின்اُغْرِقُوْاஅவர்கள் மூழ்கடிக்கப்பட்டனர்فَاُدْخِلُوْاபின்னர் அவர்கள் நுழைக்கப்பட்டனர்نَارًا ۙ۬நெருப்பில்فَلَمْஎனவே இல்லைیَجِدُوْاஅவர்கள் கண்டார்கள்لَهُمْதங்களுக்குمِّنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைاَنْصَارًاஉதவியாளர்களை
மிம்மா கதீ' ஆதிஹிம் உக்ரிகூ Fப உத்கிலூ னாரன் Fபலம் யஜிதூ லஹும் மின் தூனில் லாஹி அன்ஸாரா
ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.
وَقَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَی الْاَرْضِ مِنَ الْكٰفِرِیْنَ دَیَّارًا ۟
وَ قَالَமேலும் கூறினார்نُوْحٌநூஹ்رَّبِّஎன் இறைவனேلَاவிடாதேتَذَرْவிட்டுவைக்கعَلَیமீதுالْاَرْضِபூமியின்مِنَஇருந்துالْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்களில்دَیَّارًاவசிப்பவர் ஒருவரையும்
வ கால னூஹுர் ரBப்Bபி லா ததர் 'அலல் அர்ளி மினல் காFபிரீன தய்யாரா
அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
اِنَّكَ اِنْ تَذَرْهُمْ یُضِلُّوْا عِبَادَكَ وَلَا یَلِدُوْۤا اِلَّا فَاجِرًا كَفَّارًا ۟
اِنَّكَநிச்சயமாக நீاِنْஒருவேளைتَذَرْهُمْஅவர்களை விட்டுவைத்தால்یُضِلُّوْاஅவர்கள் வழிகெடுப்பார்கள்عِبَادَكَஉமது அடியார்களைوَ لَاமேலும் இல்லைیَلِدُوْۤاஅவர்கள் பெற்றெடுப்பார்கள்اِلَّاதவிரفَاجِرًاபாவியைكَفَّارًاபெரும் நிராகரிப்பாளனை
இன்னக இன் ததர்ஹும் யுளில் லூ 'இBபாதக வலா யலிதூ இல்லா Fபாஜிரன் கFப்Fபாரா
“நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.
رَبِّ اغْفِرْ لِیْ وَلِوَالِدَیَّ وَلِمَنْ دَخَلَ بَیْتِیَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ وَلَا تَزِدِ الظّٰلِمِیْنَ اِلَّا تَبَارًا ۟۠
رَبِّஎன் இறைவாاغْفِرْமன்னிப்பாயாகلِیْஎனக்குوَ لِوَالِدَیَّஎன் பெற்றோர்களுக்கும்وَ لِمَنْமேலும் எவருக்கும்دَخَلَநுழைந்தாரோبَیْتِیَஎன் வீட்டிற்குள்مُؤْمِنًاநம்பிக்கையாளராகوَّ لِلْمُؤْمِنِیْنَமேலும் நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும்وَ الْمُؤْمِنٰتِ ؕமேலும் நம்பிக்கைகொண்ட பெண்களுக்கும்وَ لَاமேலும் வேண்டாம்تَزِدِஅதிகப்படுத்தالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குاِلَّاதவிரتَبَارًا۠அழிவை
ரBப்Bபிக் Fபிர் லீ வ லிவா லிதய்ய வ லிமன் தகல Bபய்திய மு'மின(ன்)வ் வ லில் மு'மினீன வல் மு'மினாதி வலா தZஜிதிள் ளாலிமீன இல்லா தBபாரா
“என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).