74. ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)

மக்கீ, வசனங்கள்: 56

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا الْمُدَّثِّرُ ۟ۙ
یٰۤاَیُّهَاالْمُدَّثِّرُۙபோர்த்திக் கொண்டிருப்பவரே
யா அய்யுஹல் முத்தத்திர்
(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
قُمْ فَاَنْذِرْ ۟
قُمْஎழுவீராகفَاَنْذِرْ۪ۙஎச்சரிப்பீராக
கும் Fப அன்திர்
நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
وَرَبَّكَ فَكَبِّرْ ۟
وَ رَبَّكَஉமது இறைவனைفَكَبِّرْ۪ۙபெருமைப்படுத்துவீராக
வ ரBப்Bபக FபகBப்Bபிர்
மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
وَثِیَابَكَ فَطَهِّرْ ۟
وَ ثِیَابَكَஉமது ஆடைகளைفَطَهِّرْ۪ۙதூய்மைப்படுத்துவீராக
வ தியாBபக Fபதஹ்ஹிர்
உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
وَالرُّجْزَ فَاهْجُرْ ۟
وَ الرُّجْزَமேலும் அசுத்தத்தைفَاهْجُرْ۪ۙஆகவே விலகி விடுவீராக
வர்ருஜ்Zஜ Fபஹ்ஜுர்
அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.
وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ ۟
وَ لَاமேலும் செய்யாதீர்تَمْنُنْஉபகாரம்تَسْتَكْثِرُ۪ۙஅதிகத்தை நாடி
வ லா தம்னுன் தஸ்தக்திர்
(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிகமாகப் பெறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.
وَلِرَبِّكَ فَاصْبِرْ ۟ؕ
وَ لِرَبِّكَமேலும் உமது இறைவனுக்காகفَاصْبِرْؕபொறுமை காப்பீராக
வ லி ரBப்Bபிக Fபஸ்Bபிர்
இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.
فَاِذَا نُقِرَ فِی النَّاقُوْرِ ۟ۙ
فَاِذَاஆகவே எப்போதுنُقِرَஊதப்படுமோفِیஇல்النَّاقُوْرِۙஎக்காளம்
Fப இதா னுகிர Fபின் னாகூர்
மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது-
فَذٰلِكَ یَوْمَىِٕذٍ یَّوْمٌ عَسِیْرٌ ۟ۙ
فَذٰلِكَஆகவே அதுیَوْمَىِٕذٍஅந்நாளில்یَّوْمٌஒரு நாள்عَسِیْرٌۙகடினமான
Fபதாலிக யவ்ம 'இதி(ன்)ய் யவ்முன் 'அஸீர்
அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.
عَلَی الْكٰفِرِیْنَ غَیْرُ یَسِیْرٍ ۟
عَلَیமீதுالْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்கள்غَیْرُஅல்லیَسِیْرٍஎளிதானது
'அலல் காFபிரீன கய்ரு யஸீர்
காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.
ذَرْنِیْ وَمَنْ خَلَقْتُ وَحِیْدًا ۟ۙ
ذَرْنِیْஎன்னை விட்டுவிடுவீராகوَ مَنْமேலும் எவனைخَلَقْتُநான் படைத்தேனோوَحِیْدًاۙதனித்தவனாக
தர்னீ வ மன் கலக்து வஹீதா
என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.
وَّجَعَلْتُ لَهٗ مَالًا مَّمْدُوْدًا ۟ۙ
وَّ جَعَلْتُமேலும் நான் ஆக்கினேன்لَهٗஅவனுக்குمَالًاசெல்வத்தைمَّمْدُوْدًاۙஏராளமான
வ ஜ'அல்து லஹூ மாலம் மம்தூதா
இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.
وَّبَنِیْنَ شُهُوْدًا ۟ۙ
وَّ بَنِیْنَபுதல்வர்களையும்شُهُوْدًاۙகண்முன் இருப்பவர்களாக
வ Bபனீன ஷுஹூதா
அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).
وَّمَهَّدْتُّ لَهٗ تَمْهِیْدًا ۟ۙ
وَّ مَهَّدْتُّமேலும் நான் வசதி செய்து கொடுத்தேன்لَهٗஅவனுக்குتَمْهِیْدًاۙதாராளமாக
வ மஹ்ஹத்து லஹூ தம்ஹீதா
இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.
ثُمَّ یَطْمَعُ اَنْ اَزِیْدَ ۟ۗۙ
ثُمَّபின்னர்یَطْمَعُஅவன் ஆசைப்படுகிறான்اَنْஎன்றுاَزِیْدَۗۙநான் அதிகமாக்க
தும்ம யத் ம'உ அன் அZஜீத்
பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.
كَلَّا ؕ اِنَّهٗ كَانَ لِاٰیٰتِنَا عَنِیْدًا ۟ؕ
كَلَّا ؕஅவ்வாறல்லاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்لِاٰیٰتِنَاநம் வசனங்களுக்குعَنِیْدًاؕபிடிவாதக்காரனாக
கல்லா இன்னஹூ கான லி ஆயாதினா 'அனீதா
அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.
سَاُرْهِقُهٗ صَعُوْدًا ۟ؕ
سَاُرْهِقُهٗவிரைவில் நான் அவனை ஆளாக்குவேன்صَعُوْدًاؕகடினமான ஏற்றத்திற்கு
ஸ உர்ஹிகுஹூ ஸ'ஊதா
விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.
اِنَّهٗ فَكَّرَ وَقَدَّرَ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக அவன்فَكَّرَசிந்தித்தான்وَ قَدَّرَۙமேலும் திட்டமிட்டான்
இன்னஹூ Fபக்கர வ கத்தர்
நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.
فَقُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ
فَقُتِلَஅவன் நாசமாகட்டும்كَیْفَஎவ்வாறுقَدَّرَۙஅவன் திட்டமிட்டான்
Fபகுதில கய்Fப கத்தர்
அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
ثُمَّ قُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ
ثُمَّமீண்டும்قُتِلَஅவன் நாசமாகட்டும்كَیْفَஎப்படிقَدَّرَۙஅவன் திட்டமிட்டான்
தும்ம குதில கய்Fப கத்தர்
பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
ثُمَّ عَبَسَ وَبَسَرَ ۟ۙ
ثُمَّபின்னர்عَبَسَமுகம் சுளித்தான்وَ بَسَرَۙமேலும் கடுகடுத்தான்
தும்ம 'அBபஸ வ Bபஸர்
பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான்; இன்னும் (முகஞ்) சுளித்தான்.
ثُمَّ اَدْبَرَ وَاسْتَكْبَرَ ۟ۙ
ثُمَّபின்னர்اَدْبَرَஅவன் பின்வாங்கினான்وَ اسْتَكْبَرَۙமேலும் பெருமையடித்தான்
தும்மா அத்Bபர வஸ்தக்Bபர்
அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.
فَقَالَ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ یُّؤْثَرُ ۟ۙ
فَقَالَபின்னர் அவர் கூறினார்اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியம்یُّؤْثَرُۙவழிவழியாக வரும்
Fபகால இன் ஹாதா இல்லா ஸிஹ்ரு(ன்)ய் யு'தர்
அப்பால் அவன் கூறினான்: “இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.
اِنْ هٰذَاۤ اِلَّا قَوْلُ الْبَشَرِ ۟ؕ
اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரقَوْلُசொல்الْبَشَرِؕமனிதனின்
இன் ஹாதா இல்லா கவ்லுல் Bபஷர்
“இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை” (என்றும் கூறினான்.)
سَاُصْلِیْهِ سَقَرَ ۟
سَاُصْلِیْهِநான் அவனைப் புகுத்துவேன்سَقَرَஸகரில்
ஸ உஸ்லீஹி ஸகர்
அவனை நான் “ஸகர்” (என்னும்) நரகில் புகச் செய்வேன்.
وَمَاۤ اَدْرٰىكَ مَا سَقَرُ ۟ؕ
وَ مَاۤமேலும் எதுاَدْرٰىكَஉமக்கு அறிவிக்கும்مَاஎன்னவென்றுسَقَرُؕஸகர்
வ மா அத்ராக மா ஸகர்
“ஸகர்” என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?
لَا تُبْقِیْ وَلَا تَذَرُ ۟ۚ
لَاஇல்லைتُبْقِیْஎஞ்சவைக்கும்وَ لَاமேலும் இல்லைتَذَرُۚவிட்டுவைக்கும்
லா துBப்கீ வலா ததர்
அது (எவரையும்) மிச்சம் வைக்காது; விட்டு விடவும் செய்யாது.
لَوَّاحَةٌ لِّلْبَشَرِ ۟ۚۖ
لَوَّاحَةٌகருகச் செய்வதுلِّلْبَشَرِۚۖமனிதர்களுக்கு
லவ்வாஹதுல் லில்Bபஷர்
(அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.
عَلَیْهَا تِسْعَةَ عَشَرَ ۟ؕ
عَلَیْهَاஅதன் மீதுتِسْعَةَஒன்பதுعَشَرَؕபத்து
'அலய்ஹா திஸ்'அத 'அஷர்
அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
وَمَا جَعَلْنَاۤ اَصْحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓىِٕكَةً ۪ وَّمَا جَعَلْنَا عِدَّتَهُمْ اِلَّا فِتْنَةً لِّلَّذِیْنَ كَفَرُوْا ۙ لِیَسْتَیْقِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَیَزْدَادَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِیْمَانًا وَّلَا یَرْتَابَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْمُؤْمِنُوْنَ ۙ وَلِیَقُوْلَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْكٰفِرُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ؕ كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ وَمَا یَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَ ؕ وَمَا هِیَ اِلَّا ذِكْرٰی لِلْبَشَرِ ۟۠
وَ مَاமேலும் இல்லைجَعَلْنَاۤநாம் ஆக்கினோம்اَصْحٰبَகாவலர்களைالنَّارِநரகத்தின்اِلَّاதவிரمَلٰٓىِٕكَةً ۪வானவர்களைوَّ مَاமேலும் இல்லைجَعَلْنَاநாம் ஆக்கினோம்عِدَّتَهُمْஅவர்களின் எண்ணிக்கையைاِلَّاதவிரفِتْنَةًஒரு சோதனையாகلِّلَّذِیْنَஎவர்களுக்குكَفَرُوْا ۙநிராகரித்தார்களோلِیَسْتَیْقِنَஉறுதி கொள்வதற்காகالَّذِیْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்களோالْكِتٰبَவேதத்தைوَ یَزْدَادَமேலும் அதிகரிப்பதற்காகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاஈமான் கொண்டார்களோاِیْمَانًاநம்பிக்கையைوَّ لَاமேலும் கூடாதுیَرْتَابَசந்தேகம் கொள்ளالَّذِیْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்களோالْكِتٰبَவேதத்தைوَ الْمُؤْمِنُوْنَ ۙமேலும் முஃமின்களும்وَ لِیَقُوْلَமேலும் கூறுவதற்காகالَّذِیْنَஎவர்கள்فِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்களில்مَّرَضٌநோய் உள்ளதோوَّ الْكٰفِرُوْنَமேலும் காஃபிர்களும்مَا ذَاۤஎன்னاَرَادَநாடினான்اللّٰهُஅல்லாஹ்بِهٰذَاஇதன் மூலம்مَثَلًا ؕஉதாரணமாகكَذٰلِكَஅவ்வாறேیُضِلُّவழிகேட்டில் விடுகிறான்اللّٰهُஅல்லாஹ்مَنْயாரைیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یَهْدِیْமேலும் நேர்வழி காட்டுகிறான்مَنْயாரைیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ مَاமேலும் இல்லைیَعْلَمُஅறிவார்جُنُوْدَசேனைகளைرَبِّكَஉமது இறைவனின்اِلَّاதவிரهُوَ ؕஅவனைத்وَ مَاமேலும் இல்லைهِیَஅதுاِلَّاதவிரذِكْرٰیஒரு நினைவுறுத்தல்لِلْبَشَرِ۠மனிதர்களுக்கு
வ மாஜ'அல்னா அஸ்-ஹாBபன் னாரி இல்லா மலா 'இகத(ன்)வ் வமா ஜ'அல்னா 'இத்ததஹும் இல்லா Fபித்னதல் லில்லதீன கFபரூ லியஸ்தய்கினல் லதீன ஊதுல் கிதாBப வ யZஜ்தாதல் லதீன ஆமனூ ஈமான(ன்)வ் வலா யர்தாBபல் லதீன ஊதுல் கிதாBப வல்மு'மினூன வ லியகூலல் லதீன Fபீ குலூ Bபிஹிம் மரளு(ன்)வ் வல்காFபிரூன மாதா அராதல் லாஹு Bபிஹாதா மதலா; கதாலிக யுளில்லுல் லாஹு மய் யஷா'உ வ யஹ்தீ மய் யஷா'; வமா யஃலமு ஜுனூத ரBப்Bபிக இல்லா ஹூ; வமா ஹிய இல்லா திக்ரா லில் Bபஷர்
அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்: “அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?” என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்; அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.  
كَلَّا وَالْقَمَرِ ۟ۙ
كَلَّاஅவ்வாறல்லوَ الْقَمَرِۙசந்திரனின் மீது சத்தியமாக
கல்லா வல்கமர்
(ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
وَالَّیْلِ اِذْ اَدْبَرَ ۟ۙ
وَ الَّیْلِஇரவின் மீது சத்தியமாகاِذْஅதுاَدْبَرَۙபின்வாங்கிச் செல்லும்போது
வல்லய்லி இத் அத்Bபர்
இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.
وَالصُّبْحِ اِذَاۤ اَسْفَرَ ۟ۙ
وَ الصُّبْحِவிடியற்காலையின் மீது சத்தியமாகاِذَاۤஅதுاَسْفَرَۙபிரகாசிக்கும்போது
வஸ்ஸுBப் ஹி இதா அஸ்Fபர்
விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,
اِنَّهَا لَاِحْدَی الْكُبَرِ ۟ۙ
اِنَّهَاநிச்சயமாக அதுلَاِحْدَیநிச்சயமாக ஒன்றாகும்الْكُبَرِۙமிகப்பெரியவைகளில்
இன்னஹா ல இஹ்தல் குBபர்
நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.
نَذِیْرًا لِّلْبَشَرِ ۟ۙ
نَذِیْرًاஎச்சரிக்கையாகلِّلْبَشَرِۙமனிதர்களுக்கு
னதீரல் லில்Bபஷர்
(அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-
لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ یَّتَقَدَّمَ اَوْ یَتَاَخَّرَ ۟ؕ
لِمَنْஎவருக்குشَآءَநாடுகிறாரோمِنْكُمْஉங்களில்اَنْஎன்றுیَّتَقَدَّمَமுன்னேறاَوْஅல்லதுیَتَاَخَّرَؕபின்தங்க
லிமன் ஷா'அ மின்கும் அ(ன்)ய் யதகத்தம அவ் யத அக்கர்
உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).
كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِیْنَةٌ ۟ۙ
كُلُّஒவ்வொருنَفْسٍۭஆத்மாவும்بِمَاதான்كَسَبَتْசம்பாதித்ததற்குرَهِیْنَةٌۙபிணையாகும்
குல்லு னFப்ஸிம் Bபிம கஸBபத் ரஹீனஹ்
ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.
اِلَّاۤ اَصْحٰبَ الْیَمِیْنِ ۟ؕۛ
اِلَّاۤதவிரاَصْحٰبَதோழர்களைالْیَمِیْنِؕۛவலப்பக்கத்து
இல்லா அஸ் ஹாBபல் யமீன்
வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர
فِیْ جَنّٰتٍ ۛ۫ یَتَسَآءَلُوْنَ ۟ۙ
فِیْஇல்جَنّٰتٍ ۛؕ۫சுவனங்கள்یَتَسَآءَلُوْنَۙவிசாரித்துக் கொள்வார்கள்
Fபீ ஜன்னாதி(ன்)ய் யத ஸா'அலூன்
(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-
مَا سَلَكَكُمْ فِیْ سَقَرَ ۟
مَاஎதுسَلَكَكُمْஉங்களை நுழையச் செய்ததுفِیْஇல்سَقَرَஸகர்
மா ஸலககும் Fபீ ஸகர்
“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)
قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّیْنَ ۟ۙ
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்لَمْஇல்லைنَكُநாங்கள் இருந்தோம்مِنَஇருந்துالْمُصَلِّیْنَۙதொழுபவர்கள்
காலூ லம் னகு மினல் முஸல்லீன்
அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِیْنَ ۟ۙ
وَلَمْமேலும் இல்லைنَكُநாங்கள் இருந்தோம்نُطْعِمُஉணவளிப்பவர்களாகالْمِسْكِیْنَۙஏழைகளுக்கு
வ லம் னகு னுத்'இமுல் மிஸ்கீன்
“அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.
وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَآىِٕضِیْنَ ۟ۙ
وَ كُنَّاமேலும் நாங்கள் இருந்தோம்نَخُوْضُவீணானவற்றில் மூழ்கிக்கொண்டுمَعَஉடன்الْخَآىِٕضِیْنَۙவீணானவற்றில் மூழ்கியவர்கள்
வ குன்னா னகூளு ம'அல் கா'இளீன்
“(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.
وَكُنَّا نُكَذِّبُ بِیَوْمِ الدِّیْنِ ۟ۙ
وَ كُنَّاமேலும் நாம் இருந்தோம்نُكَذِّبُபொய்ப்பித்துக் கொண்டிருந்தோம்بِیَوْمِநாளைالدِّیْنِۙதீர்ப்பு
வ குன்னா னுகத்திBபு Bபி யவ்மித் தீன்
“இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.
حَتّٰۤی اَتٰىنَا الْیَقِیْنُ ۟ؕ
حَتّٰۤیவரைاَتٰىنَاஎங்களிடம் வரும்الْیَقِیْنُؕஉறுதியான மரணம்
ஹத்தா அதானல் யகீன்
“உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்” எனக் கூறுவர்).
فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشّٰفِعِیْنَ ۟ؕ
فَمَاஆகவேتَنْفَعُهُمْஅவர்களுக்குப் பயனளிக்காதுشَفَاعَةُபரிந்துரைالشّٰفِعِیْنَؕபரிந்துரைப்பவர்களின்
Fபமா தன்Fப'உஹும் ஷFபா'அதுஷ் ஷாFபி'ஈன்
ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.
فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِیْنَ ۟ۙ
فَمَاஎனவே என்னلَهُمْஅவர்களுக்குعَنِவிட்டுالتَّذْكِرَةِநினைவூட்டலைمُعْرِضِیْنَۙபுறக்கணிப்பவர்களாக
Fபமா லஹும் 'அனித்தத்கிரதி முஃரிளீன்
நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?
كَاَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنْفِرَةٌ ۟ۙ
كَاَنَّهُمْஅவர்கள் ... போன்றிருக்கிறார்கள்حُمُرٌகாட்டுக்கழுதைகள்مُّسْتَنْفِرَةٌۙமிரண்டோடும்
க அன்னஹும் ஹுமுரும் முஸ்தன்Fபிரஹ்
அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-
فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ ۟ؕ
فَرَّتْவெருண்டோடினمِنْஇருந்துقَسْوَرَةٍؕசிங்கம்
Fபர்ரத் மின் கஸ்வரஹ்
(அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).
بَلْ یُرِیْدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ یُّؤْتٰی صُحُفًا مُّنَشَّرَةً ۟ۙ
بَلْமாறாகیُرِیْدُவிரும்புகிறான்كُلُّஒவ்வொருامْرِئٍமனிதனும்مِّنْهُمْஅவர்களில்اَنْதான்یُّؤْتٰیவழங்கப்படصُحُفًاஏடுகள்مُّنَشَّرَةًۙவிரிக்கப்பட்ட
Bபல் யுரீது குல்லும் ரி'இம் மின்ஹும் அ(ன்)ய் யு'தா ஸுஹுFபம் முனஷ்ஷரஹ்
ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.
كَلَّا ؕ بَلْ لَّا یَخَافُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ
كَلَّا ؕஅவ்வாறல்லبَلْமாறாகلَّاஇல்லைیَخَافُوْنَஅவர்கள் அஞ்சுகிறார்கள்الْاٰخِرَةَؕமறுமையை
கல்லா Bபல் லா யகாFபூனல் ஆகிரஹ்
அவ்வாறில்லை: மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை.
كَلَّاۤ اِنَّهٗ تَذْكِرَةٌ ۟ۚ
كَلَّاۤஅவ்வாறல்லاِنَّهٗநிச்சயமாக இதுتَذْكِرَةٌۚஒரு நினைவூட்டலாகும்
கல்லா இன்னஹூ தத்கிரஹ்
அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.
فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ؕ
فَمَنْஎனவே எவர்شَآءَநாடுகிறாரோذَكَرَهٗؕஅதை நினைவுகூர்வார்
Fப மன் ஷா'அ தகரஹ்
(எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,
وَمَا یَذْكُرُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ هُوَ اَهْلُ التَّقْوٰی وَاَهْلُ الْمَغْفِرَةِ ۟۠
وَ مَاமேலும் இல்லைیَذْكُرُوْنَஅவர்கள் படிப்பினை பெறுவார்கள்اِلَّاۤஅன்றிاَنْஎன்றுیَّشَآءَநாடினால்اللّٰهُ ؕஅல்லாஹ்هُوَஅவனேاَهْلُதகுதியானவன்التَّقْوٰیபயபக்திக்குوَ اَهْلُமேலும் தகுதியானவன்الْمَغْفِرَةِ۠மன்னிப்பிற்கு
வமா யத்குரூன இல்லா அ(ன்)ய் யஷா'அல் லாஹ்; ஹுவ அஹ்லுத் தக்வா வ அஹ்லுல் மக்Fபிரஹ்
இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன்; அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.