66. ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)

மதனீ, வசனங்கள்: 12

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا النَّبِیُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَكَ ۚ تَبْتَغِیْ مَرْضَاتَ اَزْوَاجِكَ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேلِمَஏன்تُحَرِّمُவிலக்கிக் கொள்கிறீர்مَاۤஎதனைاَحَلَّஆகுமாக்கினானோاللّٰهُஅல்லாஹ்لَكَ ۚஉமக்குتَبْتَغِیْநாடிمَرْضَاتَதிருப்தியைاَزْوَاجِكَ ؕஉம் மனைவியரின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
யா அய்யுஹன் னBபிய்யு லிம துஹர்ரிமு மா அஹல்லல் லாஹு லக தBப்தகீ மர்ளாத அZஜ்வாஜிக்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
قَدْ فَرَضَ اللّٰهُ لَكُمْ تَحِلَّةَ اَیْمَانِكُمْ ۚ وَاللّٰهُ مَوْلٰىكُمْ ۚ وَهُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
قَدْநிச்சயமாகفَرَضَவிதியாக்கிவிட்டான்اللّٰهُஅல்லாஹ்لَكُمْஉங்களுக்குتَحِلَّةَபரிகாரத்தைاَیْمَانِكُمْ ۚஉங்கள் சத்தியங்களின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்مَوْلٰىكُمْ ۚஉங்கள் பாதுகாவலன்وَ هُوَமேலும் அவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
கத் Fபரளல் லாஹு லகும் தஹில்லத அய்மானிகும்; வல்லாஹு மவ்லாகும் வ ஹுவல் 'அலீமுல் ஹகீம்
அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
وَاِذْ اَسَرَّ النَّبِیُّ اِلٰی بَعْضِ اَزْوَاجِهٖ حَدِیْثًا ۚ فَلَمَّا نَبَّاَتْ بِهٖ وَاَظْهَرَهُ اللّٰهُ عَلَیْهِ عَرَّفَ بَعْضَهٗ وَاَعْرَضَ عَنْ بَعْضٍ ۚ فَلَمَّا نَبَّاَهَا بِهٖ قَالَتْ مَنْ اَنْۢبَاَكَ هٰذَا ؕ قَالَ نَبَّاَنِیَ الْعَلِیْمُ الْخَبِیْرُ ۟
وَ اِذْமேலும் (ஒரு சமயம்)اَسَرَّஇரகசியமாகக் கூறினாரோالنَّبِیُّநபிاِلٰیஇடம்بَعْضِஒருاَزْوَاجِهٖதம் மனைவியரில்حَدِیْثًا ۚஒரு செய்தியைفَلَمَّاபின்னர் எப்போதுنَبَّاَتْஅவர் அறிவித்தாரோبِهٖஅதைப்பற்றிوَ اَظْهَرَهُமேலும் அதனை வெளிப்படுத்தினானோاللّٰهُஅல்லாஹ்عَلَیْهِஅவருக்குعَرَّفَஅவர் தெரிவித்தார்بَعْضَهٗஅதில் சிலவற்றைوَ اَعْرَضَமேலும் தவிர்த்துக் கொண்டார்عَنْۢஇருந்துبَعْضٍ ۚசிலவற்றைفَلَمَّاபின்னர் எப்போதுنَبَّاَهَاஅவர் அவருக்கு அறிவித்தாரோبِهٖஅதைப்பற்றிقَالَتْஅவர் கேட்டார்مَنْயார்اَنْۢبَاَكَஉங்களுக்கு அறிவித்ததுهٰذَا ؕஇதனைقَالَஅவர் கூறினார்نَبَّاَنِیَஎனக்கு அறிவித்தான்الْعَلِیْمُஎல்லாம் அறிந்தவன்الْخَبِیْرُநுணுக்கமாக அறிபவன்
வ இத் அஸர்ரன் னBபிய்யு இலா Bபஃளி அZஜ்வாஜிஹீ ஹதீதன் Fபலம்மா னBப்Bப அத் Bபிஹீ வ அள்ஹரஹுல் லாஹு 'அலய்ஹி 'அர்ரFப Bபஃளஹூ வ அ'ரள 'அம் Bபஃளின் Fபலம்மா னBப்Bப அஹா Bபிஹீ காலத் மன் அம்Bப அக ஹாத கால னBப்Bப அனியல் 'அலீமுல் கBபீர்
மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான்; அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்: “(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) எனக்குத் தெரிவித்தான்” என்று (பதில்) கூறினார்.
اِنْ تَتُوْبَاۤ اِلَی اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَا ۚ وَاِنْ تَظٰهَرَا عَلَیْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰىهُ وَجِبْرِیْلُ وَصَالِحُ الْمُؤْمِنِیْنَ ۚ وَالْمَلٰٓىِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِیْرٌ ۟
اِنْஒருவேளைتَتُوْبَاۤநீங்கள் இருவரும் தவ்பா செய்தால்اِلَیபக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்فَقَدْநிச்சயமாகصَغَتْசாய்ந்துவிட்டனقُلُوْبُكُمَا ۚஉங்கள் இருவரின் இதயங்கள்وَ اِنْஇன்னும் ஒருவேளைتَظٰهَرَاநீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டால்عَلَیْهِஅவருக்கு எதிராகفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவன் தான்مَوْلٰىهُஅவருடைய பாதுகாவலன்وَ جِبْرِیْلُஇன்னும் ஜிப்ரீலும்وَ صَالِحُஇன்னும் நல்லோரானالْمُؤْمِنِیْنَ ۚமுஃமின்களும்وَ الْمَلٰٓىِٕكَةُஇன்னும் மலக்குகளும்بَعْدَபிறகுذٰلِكَஅதற்குப்ظَهِیْرٌஉதவியாளர்களாக இருப்பார்கள்
இன் ததூBபா இலல் லாஹி Fபகத் ஸகத் குலூBபுகுமா வ இன் தளாஹரா 'அலய்ஹி Fப இன்னல் லாஹ ஹுவ மவ்லாஹு வ ஜிBப்ரீலு வ ஸாலிஹுல் மு'மினீன்; வல் மலா'இகது Bபஃத தாலிக ளஹீர்
நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்வீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்) ஏனெனில் நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன - தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் (அவருக்கு உதவுவான்; அன்றியும்) ஜிப்ரீலும், ஸாலிஹான முஃமின்களும் (உதவுவார்கள்.) அதன் பின் மலக்குகளும் (அவருக்கு) உதவியாளராக இருப்பார்கள்.
عَسٰی رَبُّهٗۤ اِنْ طَلَّقَكُنَّ اَنْ یُّبْدِلَهٗۤ اَزْوَاجًا خَیْرًا مِّنْكُنَّ مُسْلِمٰتٍ مُّؤْمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓىِٕبٰتٍ عٰبِدٰتٍ سٰٓىِٕحٰتٍ ثَیِّبٰتٍ وَّاَبْكَارًا ۟
عَسٰیஒருவேளைرَبُّهٗۤஅவனுடைய இறைவன்اِنْஒருக்கால்طَلَّقَكُنَّஉங்களை அவர் விவாகரத்துச் செய்தால்اَنْஎன்றுیُّبْدِلَهٗۤஅவருக்குப் பகரமாக மாற்றித் தருவான்اَزْوَاجًاமனைவியரைخَیْرًاசிறந்தمِّنْكُنَّஉங்களை விடمُسْلِمٰتٍமுஸ்லிம்களானمُّؤْمِنٰتٍமுஃமின்களானقٰنِتٰتٍபணிந்து நடப்பவர்களானتٰٓىِٕبٰتٍதவ்பா செய்பவர்களானعٰبِدٰتٍவணங்குபவர்களானسٰٓىِٕحٰتٍநோன்பு நோற்பவர்களானثَیِّبٰتٍமணமாகிப் பிரிந்தவர்களையும்وَّ اَبْكَارًاகன்னிகளையும்
அஸா ரBப்Bபுஹூ இன் தல்லககுன்ன அ(ன்)ய்யுBப்திலஹூ அZஜ்வாஜன் கய்ரம் மின்குன்ன முஸ்லிமாதிம் மு'மினாதின் கானிதாதின் தா'இBபாதின் 'ஆBபிதாதின் ஸா'இஹாதின் தய்யிBபாதி(ன்)வ் வ அBப்காரா
அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்கள் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِیْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَیْهَا مَلٰٓىِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا یَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَیَفْعَلُوْنَ مَا یُؤْمَرُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோقُوْۤاகாத்துக் கொள்ளுங்கள்اَنْفُسَكُمْஉங்களைوَ اَهْلِیْكُمْஉங்கள் குடும்பத்தாரையும்نَارًاநெருப்பிலிருந்துوَّ قُوْدُهَاஅதன் எரிபொருள்النَّاسُமனிதர்களும்وَ الْحِجَارَةُகற்களுமாகும்عَلَیْهَاஅதன் மீதுمَلٰٓىِٕكَةٌவானவர்கள்غِلَاظٌகடுமையானவர்கள்شِدَادٌவலிமையானவர்கள்لَّاமாட்டார்கள்یَعْصُوْنَமாறுசெய்யاللّٰهَஅல்லாஹ்வுக்குمَاۤஎதைاَمَرَهُمْஅவன் அவர்களுக்குக் கட்டளையிட்டானோوَ یَفْعَلُوْنَமேலும் அவர்கள் செய்வார்கள்مَاஎதைیُؤْمَرُوْنَஅவர்கள் கட்டளையிடப்படுகிறார்களோ
யா அய்யுஹல் லதீன ஆமனூ கூ அன்Fபுஸகும் வ அஹ்லீகும் னார(ன்)வ் வகூது ஹன் னாஸு வல் ஹிஜாரது 'அலய்ஹா மலா'இகதுன் கிலாளுன் ஷிதாதுல் லா யஃஸூனல் லாஹ மா அமரஹும் வ யFப்'அலூன மா யு'மரூன்
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ كَفَرُوْا لَا تَعْتَذِرُوا الْیَوْمَ ؕ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟۠
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَاவேண்டாம்تَعْتَذِرُواசாக்குப்போக்குச் சொல்லாதீர்கள்الْیَوْمَ ؕஇன்றுاِنَّمَاநிச்சயமாகتُجْزَوْنَஉங்களுக்குப் பிரதிபலன் வழங்கப்படுகிறதுمَاஎவற்றைكُنْتُمْநீங்கள்تَعْمَلُوْنَ۠செய்து கொண்டிருந்தீர்களோ
யா அய்யுஹல் லதீன கFபரூ ல தஃததிருல் யவ்ம இன்னமா துஜ்Zஜவ்ன மா குன்தும் தஃமலூன்
(அன்று காஃபிர்களிடம்) நிராகரித்தோரே! இன்று நீங்கள் எந்தப்புகலும் கூறாதீர்கள்; நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்ததற்குத்தான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَی اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا ؕ عَسٰی رَبُّكُمْ اَنْ یُّكَفِّرَ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَیُدْخِلَكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ یَوْمَ لَا یُخْزِی اللّٰهُ النَّبِیَّ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ ۚ نُوْرُهُمْ یَسْعٰی بَیْنَ اَیْدِیْهِمْ وَبِاَیْمَانِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا ۚ اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோتُوْبُوْۤاதவ்பா செய்யுங்கள்اِلَیபால்اللّٰهِஅல்லாஹ்வின்تَوْبَةًபாவமன்னிப்பைنَّصُوْحًا ؕஉண்மையானعَسٰیகூடும்رَبُّكُمْஉங்கள் இறைவன்اَنْஎன்றுیُّكَفِّرَஅவன் போக்கிவிடعَنْكُمْஉங்களிடமிருந்துسَیِّاٰتِكُمْஉங்கள் தீமைகளைوَ یُدْخِلَكُمْமேலும் உங்களை அவன் புகுத்துவான்جَنّٰتٍசுவனங்களில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُ ۙஆறுகள்یَوْمَஅந்நாளில்لَاமாட்டான்یُخْزِیஇழிவுபடுத்தاللّٰهُஅல்லாஹ்النَّبِیَّநபியைوَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோمَعَهٗ ۚஅவருடன்نُوْرُهُمْஅவர்களின் ஒளிیَسْعٰیவிரைந்து செல்லும்بَیْنَமுன்னால்اَیْدِیْهِمْஅவர்களின் கைகளுக்குوَ بِاَیْمَانِهِمْமேலும் அவர்களின் வலதுபுறங்களிலும்یَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவனேاَتْمِمْமுழுமையாக்குவாயாகلَنَاஎங்களுக்குنُوْرَنَاஎங்களது ஒளியைوَ اغْفِرْமேலும் மன்னிப்பாயாகلَنَا ۚஎங்களுக்குاِنَّكَநிச்சயமாக நீعَلٰیமீதுكُلِّஅனைத்துشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றல் உடையவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ தூBபூ இலல் லாஹி தவ்Bபதன் னஸூஹன் 'அஸா ரBப்Bபுகும் அ(ன்)ய்-யுகFப்Fபிர 'அன்கும் ஸய்யி ஆதிகும் வ யுத்கிலகும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு யவ்ம லா யுக்Zஜில் லாஹுன் னBபிய்ய வல்லதீன ஆமனூ ம'அஹூ னூருஹும் யஸ்'ஆ Bபய்ன அய்தீஹிம் வ Bபி அய்மானிஹிம் யகூலூன ரBப்Bபனா அத்மிம் லனா னூரனா வக்Fபிர் லன இன்னக 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.
یٰۤاَیُّهَا النَّبِیُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِیْنَ وَاغْلُظْ عَلَیْهِمْ ؕ وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேجَاهِدِபோராடுவீராகالْكُفَّارَநிராகரிப்பாளர்களுடனும்وَ الْمُنٰفِقِیْنَமற்றும் நயவஞ்சகர்களுடனும்وَ اغْلُظْமேலும் கடுமையாக நடப்பீராகعَلَیْهِمْ ؕஅவர்கள் மீதுوَ مَاْوٰىهُمْமேலும் அவர்களின் தங்குமிடம்جَهَنَّمُ ؕநரகமாகும்وَ بِئْسَமேலும் அது மிகக் கெட்டالْمَصِیْرُசேருமிடமாகும்
யா அய்யுஹன் னBபிய்யு ஜாஹிதில் குFப்Fபார வல்முனா-Fபிகீன வக்லுள் 'அலய்ஹிம்; வ ம'வாஹும் ஜஹன்னமு வ Bபி'ஸல் மஸீர்
நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் போரிட்டு, அவர்களிடம் கண்டிப்புடன் இருப்பீராக! அன்றியும் அவர்கள் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அது மிகவும் கெட்ட சேருமிடம் ஆகும்.
ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّامْرَاَتَ لُوْطٍ ؕ كَانَتَا تَحْتَ عَبْدَیْنِ مِنْ عِبَادِنَا صَالِحَیْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ یُغْنِیَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَیْـًٔا وَّقِیْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِیْنَ ۟
ضَرَبَஎடுத்துக்காட்டுகிறான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஓர் உதாரணத்தைلِّلَّذِیْنَஅவர்களுக்குكَفَرُواநிராகரித்தார்களோامْرَاَتَமனைவியைنُوْحٍநூஹின்وَّ امْرَاَتَமற்றும் மனைவியைلُوْطٍ ؕலூத்தின்كَانَتَاஅவ்விருவரும் இருந்தனர்تَحْتَகீழ்عَبْدَیْنِஇரு அடியார்களின்مِنْஉள்ளعِبَادِنَاநம் அடியார்களில்صَالِحَیْنِநல்லவர்களானفَخَانَتٰهُمَاஆனால் அவ்விருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர்فَلَمْஎனவே இல்லைیُغْنِیَاஅவர்கள் இருவரும் காப்பாற்றعَنْهُمَاஅவ்விருவரையும்مِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்شَیْـًٔاஎதனையும்وَّ قِیْلَமேலும் சொல்லப்பட்டதுادْخُلَاநீங்கள் இருவரும் நுழையுங்கள்النَّارَநரக நெருப்பில்مَعَஉடன்الدّٰخِلِیْنَநுழைபவர்களுடன்
ளரBபல் லாஹு மதலல் லில்லதீன கFபரும் ர அத னூஹி(ன்)வ் வம்ர அத லூத், கானதா தஹ்த 'அBப்தய்னி மின் 'இBபாதினா ஸாலிஹய்னி Fபகானதாஹுமா Fபலம் யுக்னியா 'அன்ஹுமா மினல் லாஹி ஷய் அ(ன்)வ்-வ கீலத் குலன் னார ம'அத் தாகிலீன்
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ اٰمَنُوا امْرَاَتَ فِرْعَوْنَ ۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِیْ عِنْدَكَ بَیْتًا فِی الْجَنَّةِ وَنَجِّنِیْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِیْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟ۙ
وَ ضَرَبَமேலும் கூறுகிறான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஓர் உதாரணத்தைلِّلَّذِیْنَஅவர்களுக்குاٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோامْرَاَتَமனைவியைفِرْعَوْنَ ۘஃபிர்அவ்னின்اِذْபோதுقَالَتْஅவள் கூறினாள்رَبِّஎன் இறைவனேابْنِகட்டுவாயாகلِیْஎனக்காகعِنْدَكَஉன்னிடத்தில்بَیْتًاஒரு வீட்டைفِیஇல்الْجَنَّةِசுவனத்தில்وَ نَجِّنِیْமேலும் என்னைக் காப்பாற்றுவாயாகمِنْஇருந்துفِرْعَوْنَஃபிர்அவ்னிடம்وَ عَمَلِهٖமற்றும் அவனது செயலிலிருந்தும்وَ نَجِّنِیْமேலும் என்னைக் காப்பாற்றுவாயாகمِنَஇருந்துالْقَوْمِகூட்டத்தினரிடம்الظّٰلِمِیْنَۙஅநியாயக்காரர்களான
வ ளரBபல் லாஹு மதலல் லில் லீதீன ஆமனும்ர அத Fபிர்'அவ்ன்; இத் காலத் ரBப் BபிBப்னி லீ 'இன்தக Bபய்தன் Fபில் ஜன்னதி வ னஜ்ஜினீ மின் Fபிர்'அவ்ன வ 'அமலிஹீ வ னஜ்ஜினீ மினல் கவ்மிள் ளாலிமீன்
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
وَمَرْیَمَ ابْنَتَ عِمْرٰنَ الَّتِیْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِیْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمٰتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقٰنِتِیْنَ ۟۠
وَ مَرْیَمَமேலும் மர்யமையும்ابْنَتَமகளானعِمْرٰنَஇம்ரானின்الَّتِیْۤஎவர்اَحْصَنَتْபாதுகாத்துக் கொண்டாரோفَرْجَهَاதனது கற்பைفَنَفَخْنَاஎனவே நாம் ஊதினோம்فِیْهِஅதில்مِنْஇருந்துرُّوْحِنَاநம்முடைய ஆவிوَ صَدَّقَتْமேலும் அவர் மெய்ப்படுத்தினார்بِكَلِمٰتِவார்த்தைகளைرَبِّهَاதனது இறைவனின்وَ كُتُبِهٖமேலும் அவனது வேதங்களைوَ كَانَتْமேலும் அவர் இருந்தார்مِنَஉள்ளவர்களில்الْقٰنِتِیْنَ۠பணிந்து நடப்பவர்கள்
வ மர்யமBப் னத 'இம்ரானல் லதீ அஹ்ஸனத் Fபர்ஜஹா FபனFபக்னா Fபீஹீ மிர் ரூஹினா வ ஸத்தகத் Bபி கலிமாதி ரBப்Bபிஹா வ குதுBபிஹீ வகானத் மினல் கானிதீன்
மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.