24. ஸூரத்துந் நூர் (பேரொளி)

மதனீ, வசனங்கள்: 64

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
سُوْرَةٌ اَنْزَلْنٰهَا وَفَرَضْنٰهَا وَاَنْزَلْنَا فِیْهَاۤ اٰیٰتٍ بَیِّنٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
سُوْرَةٌஅத்தியாயம்اَنْزَلْنٰهَاஇதனை நாம் அருளினோம்وَ فَرَضْنٰهَاமேலும் இதனை நாம் கடமையாக்கினோம்وَ اَنْزَلْنَاமேலும் நாம் அருளினோம்فِیْهَاۤஇதில்اٰیٰتٍۭவசனங்களைبَیِّنٰتٍதெளிவானلَّعَلَّكُمْநீங்கள்تَذَكَّرُوْنَபடிப்பினை பெறுவதற்காக
ஸூரதுன் அன்Zஜல்னாஹா வ Fபரள்னாஹா வ அன்Zஜல்னா Fபீஹா ஆயாதிம் Bபய்யினாதில் ல'அல்லகும் ததக்கரூன்
(இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.
اَلزَّانِیَةُ وَالزَّانِیْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۪ وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِیْ دِیْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ۚ وَلْیَشْهَدْ عَذَابَهُمَا طَآىِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِیْنَ ۟
اَلزَّانِیَةُவிபச்சாரம் செய்த பெண்وَ الزَّانِیْமற்றும் விபச்சாரம் செய்த ஆண்فَاجْلِدُوْاகசையடியுங்கள்كُلَّஒவ்வொருوَاحِدٍஒருவரையும்مِّنْهُمَاஅவ்விருவரில்مِائَةَநூறுجَلْدَةٍ ۪கசையடிகள்وَّ لَاமேலும் வேண்டாம்تَاْخُذْكُمْஉங்களை ஆட்கொள்ளبِهِمَاஅவ்விருவர் மீதும்رَاْفَةٌஇரக்கம்فِیْவிஷயத்தில்دِیْنِமார்க்கاللّٰهِஅல்லாஹ்வின்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்تُؤْمِنُوْنَநம்பிக்கை கொண்டவர்களாகبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமற்றும் நாளின் மீதுالْاٰخِرِ ۚஇறுதிوَ لْیَشْهَدْஇன்னும் சாட்சியாக இருக்கட்டும்عَذَابَهُمَاஅவ்விருவரின் தண்டனையைطَآىِٕفَةٌஒரு கூட்டத்தினர்مِّنَஇருந்துالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களில்
அZஜ்Zஜானியது வZஜ்Zஜானீ Fபஜ்லிதூ குல்ல வாஹிதிம் மின்ஹுமா மி'அத ஜல்ததி(ன்)வ் வலா தாகுத்கும் Bபிஹிமா ராFபதுன் Fபீ தீனில் லாஹி இன் குன்தும் து'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வல் யஷ்ஹத் 'அதாBபஹுமா தா'இFபதும் மினல் மு'மினீன்
விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
اَلزَّانِیْ لَا یَنْكِحُ اِلَّا زَانِیَةً اَوْ مُشْرِكَةً ؗ وَّالزَّانِیَةُ لَا یَنْكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ ۚ وَحُرِّمَ ذٰلِكَ عَلَی الْمُؤْمِنِیْنَ ۟
اَلزَّانِیْவிபச்சாரம் செய்யும் ஆண்لَاமாட்டான்یَنْكِحُஉறவுاِلَّاதவிரزَانِیَةًவிபச்சாரம் செய்யும் பெண்ணைاَوْஅல்லதுمُشْرِكَةً ؗஇணை வைக்கும் பெண்ணைوَّ الزَّانِیَةُவிபச்சாரம் செய்யும் பெண்لَاமாட்டான்یَنْكِحُهَاۤஅவளைத் திருமணம் செய்யاِلَّاதவிரزَانٍவிபச்சாரம் செய்யும் ஆண்اَوْஅல்லதுمُشْرِكٌ ۚஇணை வைக்கும் ஆண்وَ حُرِّمَஇன்னும் இது தடுக்கப்பட்டுள்ளதுذٰلِكَஅது / அச்செயல்عَلَیமீதுالْمُؤْمِنِیْنَஇறைநம்பிக்கையாளர்கள்
அZஜ்Zஜானீ லா யன்கிஹு இல்லா Zஜானியதன் அவ் முஷ்ரிகத(ன்)வ் வZஜ்Zஜானியது லா யன்கிஹுஹா இல்லா Zஜானின் அவ் முஷ்ரிக்; வ ஹுர்ரிம தாலிக 'அலல் மு'மினீன்
விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் - இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.
وَالَّذِیْنَ یَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ یَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِیْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا ۚ وَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟ۙ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்یَرْمُوْنَஅவதூறு கூறுகிறார்களோالْمُحْصَنٰتِகற்புள்ள பெண்கள் மீதுثُمَّபின்னர்لَمْஇல்லைیَاْتُوْاஅவர்கள் கொண்டு வரبِاَرْبَعَةِநான்குشُهَدَآءَசாட்சிகளைفَاجْلِدُوْهُمْஅவர்களைக் கசையடியுங்கள்ثَمٰنِیْنَஎண்பதுجَلْدَةًகசையடிகள்وَّ لَاமேலும் வேண்டாம்تَقْبَلُوْاநீங்கள் ஏற்றுக்கொள்ளلَهُمْஅவர்களுடையشَهَادَةًசாட்சியத்தைاَبَدًا ۚஎக்காலத்திலும்وَ اُولٰٓىِٕكَமேலும் அத்தகையோர்هُمُஅவர்களேالْفٰسِقُوْنَۙபாவிகள்
வல்லதீன யர்மூனல் முஹ்ஸனாதி தும்ம லம் யாதூ Bபி-அர்Bப'அதி ஷுஹதா'அ Fபஜ்லிதூஹும் தமானீன ஜல்தத(ன்)வ் வலா தக்Bபலூ லஹும் ஷஹாததன் அBபதா; வ உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا ۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்تَابُوْاதவ்பா செய்தார்களோمِنْۢஇருந்துبَعْدِபின்னர்ذٰلِكَஅதற்குوَ اَصْلَحُوْا ۚமேலும் சீர்திருத்திக் கொண்டார்களோفَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
இல்லல் லதீன தாBபூ மிம் Bபஃதி தாலிக வ அஸ்லஹூ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
وَالَّذِیْنَ یَرْمُوْنَ اَزْوَاجَهُمْ وَلَمْ یَكُنْ لَّهُمْ شُهَدَآءُ اِلَّاۤ اَنْفُسُهُمْ فَشَهَادَةُ اَحَدِهِمْ اَرْبَعُ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ ۙ اِنَّهٗ لَمِنَ الصّٰدِقِیْنَ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்یَرْمُوْنَஅவதூறு கூறுகிறார்களோاَزْوَاجَهُمْதங்கள் மனைவியர் மீதுوَ لَمْமேலும் இல்லைیَكُنْஇருக்கلَّهُمْஅவர்களுக்குشُهَدَآءُசாட்சிகள்اِلَّاۤதவிரاَنْفُسُهُمْதங்களையேفَشَهَادَةُஆகவே சாட்சியமாவதுاَحَدِهِمْஅவர்களில் ஒருவருடையاَرْبَعُநான்குشَهٰدٰتٍۭசாட்சியங்கள்بِاللّٰهِ ۙஅல்லாஹ்வின் மீதுاِنَّهٗநிச்சயமாக அவர்لَمِنَநிச்சயமாகالصّٰدِقِیْنَஉண்மையாளர்களில்
வல்லதீன யர்மூன அZஜ்வாஜஹும் வ லம் யகுல் லஹும் ஷுஹதா'உ இல்லா அன்Fபுஸுஹும் Fபஷஹாதது அஹதிஹிம் அர்Bப'உ ஷஹாதாதிம் Bபில்லாஹி இன்னஹூ லமினஸ் ஸாதிகீன்
எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:
وَالْخَامِسَةُ اَنَّ لَعْنَتَ اللّٰهِ عَلَیْهِ اِنْ كَانَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
وَ الْخَامِسَةُஐந்தாவதுاَنَّநிச்சயமாகلَعْنَتَசாபம்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْهِஅவர் மீதுاِنْஒருவேளைكَانَஅவர் இருந்தால்مِنَஒருவராகالْكٰذِبِیْنَபொய்யர்களில்
வல் காமிஸது அன்ன லஃனதல் லாஹி 'அலய்ஹி இன் கான மினல் காதிBபீன்
ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).
وَیَدْرَؤُا عَنْهَا الْعَذَابَ اَنْ تَشْهَدَ اَرْبَعَ شَهٰدٰتٍ بِاللّٰهِ ۙ اِنَّهٗ لَمِنَ الْكٰذِبِیْنَ ۟ۙ
وَ یَدْرَؤُاமேலும் தடுத்துவிடும்عَنْهَاஅவளை விட்டுالْعَذَابَதண்டனையைاَنْஎன்பதுتَشْهَدَஅவள் சாட்சியம் கூறுவதுاَرْبَعَநான்குشَهٰدٰتٍۭசத்தியங்களைبِاللّٰهِ ۙஅல்லாஹ்வின் மீதுاِنَّهٗநிச்சயமாக அவர்لَمِنَஒருவர்தாம் என்றுالْكٰذِبِیْنَۙபொய்யர்களில்
வ யத்ர'உ அன்ஹல் 'அதாBப அன் தஷ்ஹத அர்Bப'அ ஷஹா தாதிம் Bபில்லாஹி இன்னஹூ லமினல் காதிBபீன்
இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:
وَالْخَامِسَةَ اَنَّ غَضَبَ اللّٰهِ عَلَیْهَاۤ اِنْ كَانَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
وَ الْخَامِسَةَமேலும் ஐந்தாவதுاَنَّநிச்சயமாகغَضَبَகோபம்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْهَاۤஅவள் மீதுاِنْஒருவேளைكَانَஅவன் இருந்தால்مِنَஇருந்துالصّٰدِقِیْنَஉண்மையாளர்களில்
வல் காமிஸத அன்ன களBபல் லாஹி 'அலய்ஹா இன் கான மினஸ் ஸாதிகீன்
ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِیْمٌ ۟۠
وَ لَوْ لَاமேலும் இல்லாவிட்டால்فَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ رَحْمَتُهٗஅவனுடைய கருணையும்وَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்تَوَّابٌமன்னிப்பை ஏற்பவன்حَكِیْمٌ۠ஞானமிக்கவன்
வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ வ அன்னல் லாஹ தவ்வாBபுன் ஹகீம்
இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ ؕ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّكُمْ ؕ بَلْ هُوَ خَیْرٌ لَّكُمْ ؕ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ ۚ وَالَّذِیْ تَوَلّٰی كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்جَآءُوْகொண்டு வந்தார்களோبِالْاِفْكِஅவதூறைعُصْبَةٌஒரு குழுவினர்مِّنْكُمْ ؕஉங்களிலிருந்தேلَاவேண்டாம்تَحْسَبُوْهُஅதை நீங்கள் கருதشَرًّاதீமை என்றுلَّكُمْ ؕஉங்களுக்குبَلْமாறாகهُوَஅதுخَیْرٌநன்மையேلَّكُمْ ؕஉங்களுக்குلِكُلِّஒவ்வொருامْرِئٍமனிதனுக்கும்مِّنْهُمْஅவர்களில்مَّاஎதைاكْتَسَبَஅவன் சம்பாதித்தானோمِنَஇருந்துالْاِثْمِ ۚபாவத்தைوَ الَّذِیْமேலும் எவன்تَوَلّٰیபொறுப்பேற்றானோكِبْرَهٗஅதன் பெரும் பகுதியைمِنْهُمْஅவர்களில்لَهٗஅவனுக்குعَذَابٌவேதனைعَظِیْمٌமகத்தான
இன்னல் லதீன ஜா'ஊ BபிலிFப்கி 'உஸ்Bபதும் மின்கும்; லா தஹ்ஸBபூஹு ஷர்ரல் லகும் Bபல் ஹுவ கய்ருல் லகும்; லிகுல் லிம்ரி'இம் மின்ஹும் மக் தஸBப மினல்-இத்ம்; வல்லதீ தவல்லா கிBப்ரஹூ மின்ஹும் லஹூ 'அதாBபுன் 'அளீம்
எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.
لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَیْرًا ۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِیْنٌ ۟
لَوْ لَاۤஏன்اِذْபோதுسَمِعْتُمُوْهُநீங்கள் அதைச் செவியுற்றظَنَّஎண்ணியிருக்கالْمُؤْمِنُوْنَமுஃமினான ஆண்களும்وَ الْمُؤْمِنٰتُமுஃமினான பெண்களும்بِاَنْفُسِهِمْதங்களைப் பற்றிخَیْرًا ۙநல்லதைوَّ قَالُوْاமேலும் அவர்கள் கூறியிருக்கهٰذَاۤஇதுاِفْكٌஅவதூறுمُّبِیْنٌதெளிவான
லவ் லா இத் ஸமிஃதுமூஹு ளன்னல் மு'மினூன வல்மு'மினாது Bபி அன்Fபுஸிஹிம் கய்ர(ன்)வ் வ காலூ ஹாதா இFப்கும் முBபீன்
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா?
لَوْلَا جَآءُوْ عَلَیْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ ۚ فَاِذْ لَمْ یَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓىِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْكٰذِبُوْنَ ۟
لَوْ لَاஏன்جَآءُوْஅவர்கள் கொண்டுவரவில்லைعَلَیْهِஇதற்குبِاَرْبَعَةِநான்குشُهَدَآءَ ۚசாட்சிகளைفَاِذْஎனவேلَمْஇல்லைیَاْتُوْاஅவர்கள் கொண்டுவரبِالشُّهَدَآءِசாட்சிகளைفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்عِنْدَமுன்னிலையில்اللّٰهِஅல்லாஹ்வின்هُمُஅவர்கள்தாம்الْكٰذِبُوْنَபொய்யர்கள்
லவ் லா ஜா'ஊ 'அலய்ஹி Bபி-அர்Bப'அதி ஷுஹதா'; Fப இத் லம் யாதூ Bபிஷ்ஷுஹதா'இ Fப உலா 'இக 'இன்தல் லாஹி ஹுமுல் காதிBபூன்
அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِیْ مَاۤ اَفَضْتُمْ فِیْهِ عَذَابٌ عَظِیْمٌ ۟ۚۖ
وَ لَوْ لَاஇல்லாதிருந்தால்فَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ رَحْمَتُهٗஅவனது கிருபையும்فِیஇல்الدُّنْیَاஇம்மைوَ الْاٰخِرَةِமறுமையிலும்لَمَسَّكُمْஉங்களைத் தீண்டியிருக்கும்فِیْஇல்مَاۤஎதில்اَفَضْتُمْநீங்கள் ஈடுபட்டீர்களோفِیْهِஅதில்عَذَابٌவேதனைعَظِیْمٌۚۖமகத்தான
வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ Fபித்துன்யா வல் ஆகிரதி லமஸ்ஸகும் Fபீ மா அFபள்தும் Fபீஹி 'அதாBபுன் 'அளீம்
இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.
اِذْ تَلَقَّوْنَهٗ بِاَلْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَفْوَاهِكُمْ مَّا لَیْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَیِّنًا ۖۗ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِیْمٌ ۟
اِذْஅப்போதுتَلَقَّوْنَهٗஅதை நீங்கள் பெற்றுக் கொண்டிருந்தீர்கள்بِاَلْسِنَتِكُمْஉங்கள் நாவுகளால்وَ تَقُوْلُوْنَமேலும் நீங்கள் கூறிக் கொண்டிருந்தீர்கள்بِاَفْوَاهِكُمْஉங்கள் வாய்களால்مَّاஎதைلَیْسَஇல்லையோلَكُمْஉங்களுக்குبِهٖஅதைப் பற்றிعِلْمٌஅறிவுوَّ تَحْسَبُوْنَهٗமேலும் அதை நீங்கள் எண்ணினீர்கள்هَیِّنًا ۖۗஇலேசானதாகوَّ هُوَஆனால் அதுعِنْدَமுன்னிலையில்اللّٰهِஅல்லாஹ்வின்عَظِیْمٌமிகப் பெரியதாகும்
இத் தலக்கவ்னஹூ Bபி அல்ஸினதிகும் வ தகூலூன Bபி அFப்வாஹிகும் மா லய்ஸ லகும் Bபிஹீ 'இல்மு(ன்)வ் வ தஹ்ஸBபூ னஹூ ஹய்யின(ன்)வ் வ ஹுவ 'இன்தல் லாஹி 'அளீம்
இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.
وَلَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّتَكَلَّمَ بِهٰذَا ۖۗ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِیْمٌ ۟
وَ لَوْ لَاۤஇன்னும் ஏன்اِذْபோதுسَمِعْتُمُوْهُஅதை நீங்கள் செவியுற்றقُلْتُمْநீங்கள் கூறியிருக்க வேண்டாமாمَّاஇல்லைیَكُوْنُதகுதியாகும்لَنَاۤநமக்குاَنْஎன்பதுنَّتَكَلَّمَநாம் பேசுவதுبِهٰذَا ۖۗஇதைப்பற்றிسُبْحٰنَكَநீ தூய்மையானவன்هٰذَاஇதுبُهْتَانٌஅவதூறுعَظِیْمٌமாபெரும்
வ லவ் லா இத் ஸமிஃது மூஹு குல்தும் மா யகூனு லனா அன் னதகல்லம Bபிஹாதா ஸுBப்ஹானக ஹாத Bபுஹ்தானுன் 'அளீம்
இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?
یَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
یَعِظُكُمُஉங்களுக்கு அறிவுரை கூறுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَنْஎன்றுتَعُوْدُوْاநீங்கள் மீளுவதைلِمِثْلِهٖۤஇது போன்றதற்குاَبَدًاஒருபோதும்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَۚநம்பிக்கையாளர்களாக
ய'இளுகுமுல் லாஹு அன் த'ஊதூ லிமித்லிஹீ அBபதன் இன் குன்தும் மு'மினீன்
நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.
وَیُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
وَ یُبَیِّنُமேலும் தெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَكُمُஉங்களுக்குالْاٰیٰتِ ؕவசனங்களைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
வ யுBபய்யினுல் லாஹு லகுமுல் ஆயாத்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.
اِنَّ الَّذِیْنَ یُحِبُّوْنَ اَنْ تَشِیْعَ الْفَاحِشَةُ فِی الَّذِیْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یُحِبُّوْنَவிரும்புகிறார்களோاَنْஎன்றுتَشِیْعَபரவالْفَاحِشَةُமானக்கேடுفِیமத்தியில்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌ ۙதுன்புறுத்தும்فِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ الْاٰخِرَةِ ؕமேலும் மறுமையிலும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْلَمُநன்கறிவான்وَ اَنْتُمْமேலும் நீங்கள்لَاஇல்லைتَعْلَمُوْنَஅறிகிறீர்கள்
இன்னல் லதீன யுஹிBப்Bபூன அன் தஷீ'அல் Fபாஹிஷது Fபில் லதீன ஆமனூ லஹும் 'அதாBபுன் அலீமுன் Fபித் துன்யா வல் ஆகிரஹ்; வல்லாஹு யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟۠
وَ لَوْ لَاஇன்னும் இல்லையென்றால்فَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ رَحْمَتُهٗஅவனது கிருபையும்وَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்رَءُوْفٌமிக்க இரக்கமுடையவன்رَّحِیْمٌ۠நிகரற்ற அன்புடையவன்
வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ வ அன்னல் லாஹ ர'ஊFபுர் ரஹீம்
இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ وَمَنْ یَّتَّبِعْ خُطُوٰتِ الشَّیْطٰنِ فَاِنَّهٗ یَاْمُرُ بِالْفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰی مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا ۙ وَّلٰكِنَّ اللّٰهَ یُزَكِّیْ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டீர்களோلَاவேண்டாம்تَتَّبِعُوْاநீங்கள் பின்பற்றخُطُوٰتِஅடிச்சுவடுகளைالشَّیْطٰنِ ؕஷைத்தானின்وَ مَنْமேலும் எவர்یَّتَّبِعْபின்பற்றுகிறாரோخُطُوٰتِஅடிச்சுவடுகளைالشَّیْطٰنِஷைத்தானின்فَاِنَّهٗநிச்சயமாக அவன்یَاْمُرُஏவுகிறான்بِالْفَحْشَآءِமானக்கேடானவற்றைوَ الْمُنْكَرِ ؕமேலும் வெறுக்கத்தக்கவற்றைوَ لَوْ لَاமேலும் இல்லாவிட்டால்فَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ رَحْمَتُهٗமேலும் அவனது கருணையும்مَاஇல்லைزَكٰیபரிசுத்தமாகி இருக்கمِنْكُمْஉங்களில்مِّنْஇருந்துاَحَدٍஒருவரும்اَبَدًا ۙஎக்காலத்திலும்وَّ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்یُزَكِّیْபரிசுத்தப்படுத்துகிறான்مَنْஎவரைیَّشَآءُ ؕநாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தBபி'ஊ குதுவாதிஷ் ஷய்தான்; வ ம(ன்)ய்-யத்தBபிஃ குதுவாதிஷ் ஷய்தானி Fப இன்னஹூ யாமுரு Bபில்Fபஹ்ஷா'இ வல்முன்கர்; வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ மா Zஜகா மின்கும் மின் அஹதின் அBபத(ன்)வ் வ லாகின்னல் லாஹ யுZஜக்கீ ம(ன்)ய்-யஷா'; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
وَلَا یَاْتَلِ اُولُوا الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ یُّؤْتُوْۤا اُولِی الْقُرْبٰی وَالْمَسٰكِیْنَ وَالْمُهٰجِرِیْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۪ۖ وَلْیَعْفُوْا وَلْیَصْفَحُوْا ؕ اَلَا تُحِبُّوْنَ اَنْ یَّغْفِرَ اللّٰهُ لَكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَ لَاமேலும் வேண்டாம்یَاْتَلِசத்தியம் செய்யاُولُواஉடையவர்கள்الْفَضْلِஅருட்கொடைمِنْكُمْஉங்களில்وَ السَّعَةِமேலும் வசதிاَنْஎன்றுیُّؤْتُوْۤاகொடுப்பதற்குاُولِیஉடையவர்களுக்குالْقُرْبٰیஉறவுوَ الْمَسٰكِیْنَமேலும் ஏழைகளுக்கும்وَ الْمُهٰجِرِیْنَமேலும் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِ ۪ۖஅல்லாஹ்வின்وَ لْیَعْفُوْاமேலும் அவர்கள் மன்னிக்கட்டும்وَ لْیَصْفَحُوْا ؕமேலும் அவர்கள் பொறுத்துக் கொள்ளட்டும்اَلَاஇல்லையாتُحِبُّوْنَநீங்கள் விரும்புகிறீர்கள்اَنْஎன்றுیَّغْفِرَமன்னிப்பதைاللّٰهُஅல்லாஹ்لَكُمْ ؕஉங்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
வ லா யா'தலி உலுல் Fபள்லி மின்கும் வஸ்ஸ'அதி அய் யு'தூ உலில் குர்Bபா வல்மஸாகீன வல்முஹாஜிரீன Fபீ ஸBபீலில்லாஹி வல்யஃFபூ வல்யஸ்Fபஹூ; அலா துஹிBப்Bபூன அய் யக்Fபிரல் லாஹு லகும்; வல் லாஹு கFபூருர் ரஹீம்
இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.
اِنَّ الَّذِیْنَ یَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۪ وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَرْمُوْنَஅவதூறு கூறுகிறார்களோالْمُحْصَنٰتِகற்புள்ள பெண்களைالْغٰفِلٰتِகள்ளமறியாதவர்களைالْمُؤْمِنٰتِநம்பிக்கைகொண்ட பெண்களைلُعِنُوْاசபிக்கப்பட்டார்கள்فِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ الْاٰخِرَةِ ۪இன்னும் மறுமையில்وَ لَهُمْமேலும் அவர்களுக்குعَذَابٌவேதனைعَظِیْمٌۙமகத்தான
இன்னல் லதீன யர்மூனல் முஹ்ஸனாதில் காFபிலாதில் மு'மினாதி லு'இனூ Fபித் துன்யா வல் ஆகிரதி வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
یَّوْمَ تَشْهَدُ عَلَیْهِمْ اَلْسِنَتُهُمْ وَاَیْدِیْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
یَّوْمَஅந்நாளில்تَشْهَدُசாட்சி சொல்லும்عَلَیْهِمْஅவர்களுக்கு எதிராகاَلْسِنَتُهُمْஅவர்களுடைய நாவுகள்وَ اَیْدِیْهِمْமற்றும் அவர்களுடைய கைகள்وَ اَرْجُلُهُمْமற்றும் அவர்களுடைய கால்கள்بِمَاஎதைப்பற்றிكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
யவ்ம தஷ்ஹ்ஹது 'அலய்ஹிம் அல்ஸினதுஹும் வ அய்தீஹிம் வ அர்ஜுலுஹும் Bபிமா கானூ யஃமலூன்
அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.
یَوْمَىِٕذٍ یُّوَفِّیْهِمُ اللّٰهُ دِیْنَهُمُ الْحَقَّ وَیَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ الْمُبِیْنُ ۟
یَوْمَىِٕذٍஅந்நாளில்یُّوَفِّیْهِمُஅவர்களுக்கு முழுமையாக வழங்குவான்اللّٰهُஅல்லாஹ்دِیْنَهُمُஅவர்களின் கூலியைالْحَقَّஉண்மையானوَ یَعْلَمُوْنَமேலும் அவர்கள் அறிந்துகொள்வார்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவனேالْحَقُّஉண்மையானவன்الْمُبِیْنُதெளிவானவன்
யவ்ம'இதி(ன்)ய் யுவFப் Fபீஹிமுல் லாஹு தீனஹுமுல் ஹக்க வ யஃலமூன அன்னல் லாஹ ஹுவல் ஹக்குல் முBபீன்
அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்குரிய நியாயமான கூலியை, அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான்; இன்னும் அல்லாஹ் தான் “பிரத்தியட்சமான உண்மை(யாளன்) என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
اَلْخَبِیْثٰتُ لِلْخَبِیْثِیْنَ وَالْخَبِیْثُوْنَ لِلْخَبِیْثٰتِ ۚ وَالطَّیِّبٰتُ لِلطَّیِّبِیْنَ وَالطَّیِّبُوْنَ لِلطَّیِّبٰتِ ۚ اُولٰٓىِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا یَقُوْلُوْنَ ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟۠
اَلْخَبِیْثٰتُகெட்ட பெண்கள்لِلْخَبِیْثِیْنَகெட்ட ஆண்களுக்குوَ الْخَبِیْثُوْنَமேலும் கெட்ட ஆண்கள்لِلْخَبِیْثٰتِ ۚகெட்ட பெண்களுக்குوَ الطَّیِّبٰتُமேலும் நல்ல பெண்கள்لِلطَّیِّبِیْنَநல்ல ஆண்களுக்குوَ الطَّیِّبُوْنَமேலும் நல்ல ஆண்கள்لِلطَّیِّبٰتِ ۚநல்ல பெண்களுக்குاُولٰٓىِٕكَஅவர்கள்مُبَرَّءُوْنَதூய்மையானவர்கள்مِمَّاஎதை விட்டும்یَقُوْلُوْنَ ؕஅவர்கள் கூறுகிறார்களோلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّ رِزْقٌமேலும் வாழ்வாதாரம்كَرِیْمٌ۠கண்ணியமான
அல் கBபீதாது லில் கBபீதீன வல் கBபீதூன லில் கBபீதாதி வத் தய்யிBபாது லித் தய்யிBபீன வத் தய்யிBபூன லித் தய்யிBபாத்; உலா'இக முBபர்ர'ஊன மிம்ம யகூலூன லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ بُیُوْتِكُمْ حَتّٰی تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰۤی اَهْلِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تَدْخُلُوْاநீங்கள் நுழையبُیُوْتًاவீடுகளுக்குள்غَیْرَஅல்லாதبُیُوْتِكُمْஉங்கள் வீடுகள்حَتّٰیவரைتَسْتَاْنِسُوْاநீங்கள் அனுமதி பெறும்وَ تُسَلِّمُوْاமேலும் ஸலாம் கூறும்عَلٰۤیமீதுاَهْلِهَا ؕஅதன் வீட்டார்ذٰلِكُمْஅதுவேخَیْرٌசிறந்ததுلَّكُمْஉங்களுக்குلَعَلَّكُمْநீங்கள்تَذَكَّرُوْنَநினைவு கூர்வதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்குலூ Bபுயூதன் கய்ர Bபுயூதிகும் ஹத்தா தஸ்தானிஸூ வ துஸல்லிமூ 'அலா அஹ்லிஹா; தாலிகும் கய்ருல் லகும் ல'அல்லகும் ததக்கரூன்
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
فَاِنْ لَّمْ تَجِدُوْا فِیْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰی یُؤْذَنَ لَكُمْ ۚ وَاِنْ قِیْلَ لَكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا هُوَ اَزْكٰی لَكُمْ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟
فَاِنْஎனவே ஒருவேளைلَّمْஇல்லைتَجِدُوْاநீங்கள் கண்டால்فِیْهَاۤஅதில்اَحَدًاஎவரையும்فَلَاஎனவே வேண்டாம்تَدْخُلُوْهَاஅதில் நுழையحَتّٰیவரைیُؤْذَنَஅனுமதி அளிக்கப்படும்لَكُمْ ۚஉங்களுக்குوَ اِنْமேலும் ஒருவேளைقِیْلَசொல்லப்பட்டால்لَكُمُஉங்களுக்குارْجِعُوْاதிரும்பிச் செல்லுங்கள்فَارْجِعُوْاஎனவே திரும்பிச் செல்லுங்கள்هُوَஅதுاَزْكٰیமிகவும் தூய்மையானதுلَكُمْ ؕஉங்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎதைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோعَلِیْمٌநன்கறிந்தவன்
Fப இல் லம் தஜிதூ Fபீஹா அஹதன் Fபலா தத்குலூஹா ஹத்தா யு'தன லகும் வ இன் கீல லகுமுர்ஜி'ஊ Fபர்ஜி'ஊ ஹுவ அZஜ்கா லகும்; வல்லாஹு Bபிமா தஃமலூன 'அலீம்
அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ مَسْكُوْنَةٍ فِیْهَا مَتَاعٌ لَّكُمْ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ۟
لَیْسَஇல்லைعَلَیْكُمْஉங்கள் மீதுجُنَاحٌகுற்றம்اَنْஎன்றுتَدْخُلُوْاநீங்கள் நுழைவதுبُیُوْتًاவீடுகளில்غَیْرَஅல்லாதمَسْكُوْنَةٍவசிக்கப்படும்فِیْهَاஅவற்றில்مَتَاعٌபயன்لَّكُمْ ؕஉங்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்مَاஎதைتُبْدُوْنَநீங்கள் வெளிப்படுத்துகிறீர்களோوَ مَاமேலும் எதைتَكْتُمُوْنَநீங்கள் மறைக்கிறீர்களோ
லய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் அன்ன் தத்குலூ Bபுயூதன் கய்ர மஸ்கூனதின் Fபீஹா மதா'உல் லகும்; வல்லாஹு யஃலமு மா துBப்தூன வமா தக்துமூன்
(எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; மேலும் அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.
قُلْ لِّلْمُؤْمِنِیْنَ یَغُضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَیَحْفَظُوْا فُرُوْجَهُمْ ؕ ذٰلِكَ اَزْكٰی لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا یَصْنَعُوْنَ ۟
قُلْகூறுவீராகلِّلْمُؤْمِنِیْنَஇறைநம்பிக்கையாளர்களிடம்یَغُضُّوْاதாழ்த்திக் கொள்ளட்டும்مِنْதங்கள்اَبْصَارِهِمْபார்வைகளைوَ یَحْفَظُوْاமேலும் பாதுகாத்துக் கொள்ளட்டும்فُرُوْجَهُمْ ؕதங்களது மறைவிடங்களைذٰلِكَஅதுاَزْكٰیஅதிகத் தூய்மையானதுلَهُمْ ؕஅவர்களுக்குاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்خَبِیْرٌۢநன்கு அறிந்தவன்بِمَاஎவற்றைیَصْنَعُوْنَஅவர்கள் செய்கிறார்களோ
குல் லில்மு' மினீன யகுஉள்ளூ மின் அBப்ஸாரிஹிம் வ யஹ்Fபளூ Fபுரூஜஹும்; தாலிக அZஜ்கா லஹும்; இன்னல்லாஹ கBபீரும் Bபிமா யஸ்ன'ஊன்
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
وَقُلْ لِّلْمُؤْمِنٰتِ یَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَیَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْیَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰی جُیُوْبِهِنَّ ۪ وَلَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآىِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآىِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآىِٕهِنَّ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُنَّ اَوِ التّٰبِعِیْنَ غَیْرِ اُولِی الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِیْنَ لَمْ یَظْهَرُوْا عَلٰی عَوْرٰتِ النِّسَآءِ ۪ وَلَا یَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِیُعْلَمَ مَا یُخْفِیْنَ مِنْ زِیْنَتِهِنَّ ؕ وَتُوْبُوْۤا اِلَی اللّٰهِ جَمِیْعًا اَیُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
وَ قُلْமேலும் கூறுவீராகلِّلْمُؤْمِنٰتِநம்பிக்கைகொண்ட பெண்களுக்குیَغْضُضْنَஅவர்கள் தாழ்த்திக் கொள்ளட்டும்مِنْஇருந்துاَبْصَارِهِنَّதங்களது பார்வைகளைوَ یَحْفَظْنَமேலும் காத்துக்கொள்ளட்டும்فُرُوْجَهُنَّதங்களது வெட்கத்தலங்களைوَ لَاமேலும் வேண்டாம்یُبْدِیْنَஅவர்கள் வெளிப்படுத்தزِیْنَتَهُنَّதங்களது அலங்காரத்தைاِلَّاதவிரمَاஎதுظَهَرَவெளிப்படுகிறதோمِنْهَاஅதிலிருந்துوَ لْیَضْرِبْنَமேலும் அவர்கள் போட்டுக்கொள்ளட்டும்بِخُمُرِهِنَّதங்களது முக்காடுகளைعَلٰیமீதுجُیُوْبِهِنَّ ۪தங்களது மார்புகளின்وَ لَاமேலும் வேண்டாம்یُبْدِیْنَஅவர்கள் வெளிப்படுத்தزِیْنَتَهُنَّதங்களது அலங்காரத்தைاِلَّاதவிரلِبُعُوْلَتِهِنَّதங்களது கணவர்களுக்குاَوْஅல்லதுاٰبَآىِٕهِنَّதங்களது தந்தையர்களுக்குاَوْஅல்லதுاٰبَآءِதந்தையர்களுக்குبُعُوْلَتِهِنَّதங்களது கணவர்களின்اَوْஅல்லதுاَبْنَآىِٕهِنَّதங்களது மகன்களுக்குاَوْஅல்லதுاَبْنَآءِமகன்களுக்குبُعُوْلَتِهِنَّதங்களது கணவர்களின்اَوْஅல்லதுاِخْوَانِهِنَّதங்களது சகோதரர்களுக்குاَوْஅல்லதுبَنِیْۤமகன்களுக்குاِخْوَانِهِنَّதங்களது சகோதரர்களின்اَوْஅல்லதுبَنِیْۤமகன்களுக்குاَخَوٰتِهِنَّதங்கள்-சகோதரிகள்اَوْஅல்லதுنِسَآىِٕهِنَّதங்கள்-பெண்கள்اَوْஅல்லதுمَاஎவர்களைمَلَكَتْசொந்தமாக்கியுள்ளதோاَیْمَانُهُنَّஅவர்களின்-வலக்கரங்கள்اَوِஅல்லதுالتّٰبِعِیْنَபணியாளர்கள்غَیْرِஇல்லாதاُولِیஉடையالْاِرْبَةِஇச்சைمِنَஆகியالرِّجَالِஆண்களில்اَوِஅல்லதுالطِّفْلِசிறுவர்கள்الَّذِیْنَஎவர்கள்لَمْஇல்லையோیَظْهَرُوْاஅறிந்துகொள்ளعَلٰیமீதுعَوْرٰتِமறைவிடங்களைالنِّسَآءِ ۪பெண்களின்وَ لَاஇன்னும்-வேண்டாம்یَضْرِبْنَஅவர்கள்-தட்டبِاَرْجُلِهِنَّதங்கள்-கால்களால்لِیُعْلَمَஅறியப்படுவதற்காகمَاஎதனைیُخْفِیْنَஅவர்கள்-மறைக்கிறார்களோمِنْஇலிருந்துزِیْنَتِهِنَّ ؕதங்கள்-அலங்காரத்தைوَ تُوْبُوْۤاஇன்னும்-மீளுங்கள்اِلَیபக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்جَمِیْعًاஅனைவரும்اَیُّهَالْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்களேلَعَلَّكُمْநீங்கள்تُفْلِحُوْنَவெற்றியடையலாம்
வ குல் லில்மு'மினாதி யக்ளுள்ன மின் அBப்ஸாரிஹின்ன வ யஹ்Fபள்ன Fபுரூஜஹுன்ன வலா யுBப்தீன Zஜீனதஹுன்ன இல்லா மா ளஹர மின்ஹா வல் யள்ரிBப்ன Bபிகுமுரிஹின்ன 'அலா ஜுயூBபிஹின்ன வலா யுBப்தீன Zஜீனதஹுன்ன இல்லா லிBபு'ஊலதிஹின்ன அவ் ஆBபா'இ ஹின்ன அவ் ஆBபா'இ Bபு'ஊலதி ஹின்ன அவ் அBப்னா'இஹின்ன அவ் அBப்னா'இ Bபு'ஊலதிஹின்ன்ன அவ் இக்வானிஹின்ன்ன அவ் Bபனீ இக்வானிஹின்ன அவ் Bபனீ அகவாதிஹின்ன அவ் னிஸா'இ ஹின்ன அவ் மா மலகத் அய்மானுஹுன்ன அவித் தாBபி'ஈன கய்ரி இலில் இர்Bபதி மினர் ரிஜாலி அவித் திFப்லில்லதீன லம் யள்ஹரூ 'அலா 'அவ்ராதின் னிஸா'இ வல யள்ரிBப்ன்ன Bபி அர்ஜுலிஹின்ன லியுஃலம மா யுக்Fபீன மின் Zஜீனதிஹின்ன்; வ தூBபூ இலல்லாஹி ஜம்மீ'அன் அய்யுஹல் மு'மினூன ல'அல்லகும் துFப்லிஹூன்
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
وَاَنْكِحُوا الْاَیَامٰی مِنْكُمْ وَالصّٰلِحِیْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآىِٕكُمْ ؕ اِنْ یَّكُوْنُوْا فُقَرَآءَ یُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
وَ اَنْكِحُواநீங்கள் திருமணம் செய்து வையுங்கள்الْاَیَامٰیதுணையில்லாதவர்களுக்குمِنْكُمْஉங்களில்وَ الصّٰلِحِیْنَஇன்னும் நல்லொழுக்கமுள்ளவர்களுக்கும்مِنْஉங்களில்عِبَادِكُمْஆண் அடிமைகளில்وَ اِمَآىِٕكُمْ ؕஉங்கள் பெண் அடிமைகளிலும்اِنْஇருந்தால்یَّكُوْنُوْاஅவர்கள் இருந்தால்فُقَرَآءَஏழைகளாகیُغْنِهِمُஅவர்களைச் செல்வந்தர்களாக்குவான்اللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துفَضْلِهٖ ؕதனது அருட்கொடையைوَ اللّٰهُஅல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
வ அன்கிஹுல் அயாமா மின்கும் வஸ் ஸாலிஹீன மின் 'இBபாளிகும் வ இமா'இகும்; இ(ன்)ய்-யகூனூ Fபுகரா'அ யுக்னி ஹிமுல் லாஹு மின் Fபத்லிஹ்; வல் லாஹு வாஸி'உன் 'அலீம்
இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
وَلْیَسْتَعْفِفِ الَّذِیْنَ لَا یَجِدُوْنَ نِكَاحًا حَتّٰی یُغْنِیَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَالَّذِیْنَ یَبْتَغُوْنَ الْكِتٰبَ مِمَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِیْهِمْ خَیْرًا ۖۗ وَّاٰتُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِیْۤ اٰتٰىكُمْ ؕ وَلَا تُكْرِهُوْا فَتَیٰتِكُمْ عَلَی الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّتَبْتَغُوْا عَرَضَ الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَمَنْ یُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَ لْیَسْتَعْفِفِமேலும் தூய்மையைப் பேணிக்கொள்ளட்டும்الَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَجِدُوْنَவசதிபெறنِكَاحًاதிருமணம் செய்யحَتّٰیவரைیُغْنِیَهُمُஅவர்களுக்குச் செல்வம் அளிக்கும்اللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துفَضْلِهٖ ؕஅவனது அருட்கொடைوَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்یَبْتَغُوْنَநாடுகிறார்களோالْكِتٰبَவிடுதலை ஒப்பந்தத்தைمِمَّاஎவற்றிலிருந்துمَلَكَتْசொந்தமாக்கிக் கொண்டதோاَیْمَانُكُمْஉங்கள் வலக்கரங்கள்فَكَاتِبُوْهُمْஅவர்களுக்கு ஒப்பந்தம் செய்து கொடுங்கள்اِنْஎன்றால்عَلِمْتُمْநீங்கள் அறிந்தால்فِیْهِمْஅவர்களிடத்தில்خَیْرًا ۖۗநன்மையைوَّ اٰتُوْهُمْஇன்னும் அவர்களுக்குக் கொடுங்கள்مِّنْஇருந்துمَّالِசெல்வத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்الَّذِیْۤஎதனைاٰتٰىكُمْ ؕஅவன் உங்களுக்கு வழங்கினானோوَ لَاஇன்னும் வேண்டாம்تُكْرِهُوْاநீங்கள் கட்டாயப்படுத்தفَتَیٰتِكُمْஉங்கள் அடிமைப் பெண்களைعَلَیமீதுالْبِغَآءِவிபச்சாரத்தின்اِنْஎன்றால்اَرَدْنَஅவர்கள் விரும்பினால்تَحَصُّنًاகற்பைப் பேணلِّتَبْتَغُوْاநீங்கள் தேடுவதற்காகعَرَضَஆதாயத்தைالْحَیٰوةِவாழ்க்கையின்الدُّنْیَا ؕஇவ்வுலகوَ مَنْஇன்னும் எவர்یُّكْرِهْهُّنَّஅவர்களைக் கட்டாயப்படுத்துகிறாரோفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مِنْۢஇருந்துبَعْدِபிறகுاِكْرَاهِهِنَّஅவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதற்குغَفُوْرٌமன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
வல் யஸ்தஃFபிFபில் லதீன லா யஜிதூன னிகாஹன் ஹத்தா யுக்னியஹுமுல் லாஹு மின் Fபள்லிஹ்; வல்லதீன யBப்தகூனல் கிதாBப மிம்மா மலகத் அய்மானுகும் FபகாதிBபூஹும் இன் 'அலிம்தும் Fபீஹிம் கய்ர(ன்)வ் வ ஆதூஹும் மிம்மாலில் லாஹில் லதீ ஆதாகும்; வலா துக்ரிஹூ Fபதயாதிகும் 'அலல் Bபிகா'இ இன் அரத்ன தஹஸ்ஸுனல் லிதBப்தகூ 'அரளல் ஹயாதித் துன்யா; வ மய் யுக்ரிஹ்ஹுன்ன Fப இன்னல் லாஹ மிம் Bபஃதி இக்ராஹிஹின்ன கFபூருர் ரஹீம்
விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
وَلَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكُمْ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ وَّمَثَلًا مِّنَ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟۠
وَ لَقَدْநிச்சயமாகاَنْزَلْنَاۤநாம் இறக்கியுள்ளோம்اِلَیْكُمْஉங்களிடம்اٰیٰتٍவசனங்களைمُّبَیِّنٰتٍதெளிவானوَّ مَثَلًاஓர் உதாரணத்தையும்مِّنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்خَلَوْاகடந்து சென்றார்களோمِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்وَ مَوْعِظَةًஓர் அறிவுரையையும்لِّلْمُتَّقِیْنَ۠இறையச்சமுடையோருக்கு
வ லகத் அன்Zஜல்னா இலய்கும் ஆயாதிம் முBபய்யினாதி(ன்)வ் வ மதலம் மின்னல் லதீன கலவ் மின் கBப்லிகும் வ மவ்'இளதல் லில்முத்தகீன்
இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.
اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِیْهَا مِصْبَاحٌ ؕ اَلْمِصْبَاحُ فِیْ زُجَاجَةٍ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّیٌّ یُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰرَكَةٍ زَیْتُوْنَةٍ لَّا شَرْقِیَّةٍ وَّلَا غَرْبِیَّةٍ ۙ یَّكَادُ زَیْتُهَا یُضِیْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ ؕ نُوْرٌ عَلٰی نُوْرٍ ؕ یَهْدِی اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ یَّشَآءُ ؕ وَیَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟ۙ
اَللّٰهُஅல்லாஹ்نُوْرُஒளியாவான்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்مَثَلُஉதாரணம்نُوْرِهٖஅவனது ஒளிக்குكَمِشْكٰوةٍஒரு மாடத்தைப் போன்றதுفِیْهَاஅதில்مِصْبَاحٌ ؕஒரு விளக்குاَلْمِصْبَاحُஅந்த விளக்குفِیْஒருزُجَاجَةٍ ؕகண்ணாடி குடுவையில்اَلزُّجَاجَةُஅந்தக் கண்ணாடி குடுவைكَاَنَّهَاஅது போன்றதுكَوْكَبٌஒரு நட்சத்திரம்دُرِّیٌّஒளிரும் முத்து போன்றیُّوْقَدُஅது ஏற்றப்படுகிறதுمِنْஒருشَجَرَةٍமரத்திலிருந்துمُّبٰرَكَةٍபாக்கியம் பெற்றزَیْتُوْنَةٍஜைத்தூன்لَّاஇல்லைشَرْقِیَّةٍகிழக்கத்தியதும்وَّ لَاமற்றும் இல்லைغَرْبِیَّةٍ ۙமேற்கத்தியதும்یَّكَادُநெருங்கிவிடும்زَیْتُهَاஅதன் எண்ணெய்یُضِیْٓءُஒளியைத் தரوَ لَوْஎன்றாலும்لَمْஇல்லைتَمْسَسْهُஅதைத் தீண்டنَارٌ ؕநெருப்புنُوْرٌஒளிعَلٰیமேல்نُوْرٍ ؕஒளியின்یَهْدِیநேர்வழி காட்டுகிறான்اللّٰهُஅல்லாஹ்لِنُوْرِهٖதனது ஒளியின் பக்கம்مَنْயாரைیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ یَضْرِبُமேலும் எடுத்துரைக்கிறான்اللّٰهُஅல்லாஹ்الْاَمْثَالَஉதாரணங்களைلِلنَّاسِ ؕமனிதர்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌۙநன்கறிந்தவன்
அல்லாஹு னூருஸ் ஸமாவாதி வல் அர்ள்; மதலு னூரிஹீ கமிஷ்காதின் Fபீஹா மிஸ்Bபாஹ்; அல்மிஸ்Bபாஹு Fபீ Zஜுஜாஜதின் அZஜ்Zஜுஜாஜது க அன்னஹா கவ்கBபுன் துர்ரிய்யு(ன்)ய் யூகது மின் ஷஜரதிம் முBபாரகதின் Zஜய்தூனதில் லா ஷரிகிய்யதி(ன்)வ் வலா கர்Bபிய்யதி(ன்)ய் யகாது Zஜய்துஹா யுளீ'உ வ லவ் லம் தம்ஸஷு னார்; னூருன் 'அலா னூர்; யஹ்தில் லாஹு லினூரிஹீ மய் யஷா'; வ யள்ரிBபுல் லாஹுல் அம்தால லின்னாஸ்; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
فِیْ بُیُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَیُذْكَرَ فِیْهَا اسْمُهٗ ۙ یُسَبِّحُ لَهٗ فِیْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۟ۙ
فِیْஇல்بُیُوْتٍஇல்லங்களில்اَذِنَஅனுமதித்தான்اللّٰهُஅல்லாஹ்اَنْஎனتُرْفَعَஉயர்த்தப்படوَ یُذْكَرَமேலும்-நினைவுகூரப்படفِیْهَاஅவற்றில்اسْمُهٗ ۙஅவன்-நாமம்یُسَبِّحُதுதிப்பார்கள்لَهٗஅவனுக்குفِیْهَاஅவற்றில்بِالْغُدُوِّகாலையிலும்وَ الْاٰصَالِۙமேலும்-மாலைகளிலும்
Fபீ Bபுயூதின் அதினல் லாஹு அன் துர்Fப'அ வ யுத்கர Fபீஹஸ்முஹூ யுஸBப்Bபிஹு லஹூ Fபீஹா Bபில்குதுவ்வி வல் ஆஸால்
இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
رِجَالٌ ۙ لَّا تُلْهِیْهِمْ تِجَارَةٌ وَّلَا بَیْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَاِیْتَآءِ الزَّكٰوةِ یَخَافُوْنَ یَوْمًا تَتَقَلَّبُ فِیْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۟ۗۙ
رِجَالٌ ۙஆண்கள்لَّاஇல்லைتُلْهِیْهِمْஅவர்களைத் திசைதிருப்பும்تِجَارَةٌவியாபாரம்وَّ لَاமேலும் இல்லைبَیْعٌவிற்பனைعَنْவிட்டும்ذِكْرِநினைவுகூர்வதைاللّٰهِஅல்லாஹ்வைوَ اِقَامِமேலும் நிலைநாட்டுவதைالصَّلٰوةِதொழுகையைوَ اِیْتَآءِமேலும் வழங்குவதைالزَّكٰوةِ ۪ۙஜகாத்தைیَخَافُوْنَஅவர்கள் அஞ்சுவார்கள்یَوْمًاஒரு நாளைتَتَقَلَّبُபுரண்டுவிடும்فِیْهِஅதில்الْقُلُوْبُஉள்ளங்கள்وَ الْاَبْصَارُۗۙமற்றும் பார்வைகள்
ரிஜாலுல் லா துல்ஹீஹிம் திஜாரது(ன்)வ் வலா Bபய்'உன் 'அன் திக்ரில் லாஹி வ இகாமிஸ் ஸலாதி வ ஈதா'இZஜ் Zஜகாதி யகாFபூன யவ்மன் ததகல்லBபு Fபீஹில் குலூBபு வல் அBப்ஸார்
(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
لِیَجْزِیَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا عَمِلُوْا وَیَزِیْدَهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ وَاللّٰهُ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
لِیَجْزِیَهُمُஅவர்களுக்கு நற்கூலி வழங்குவதற்காகاللّٰهُஅல்லாஹ்اَحْسَنَமிகச் சிறந்ததைمَاஎவற்றைعَمِلُوْاஅவர்கள் செய்தார்களோوَ یَزِیْدَهُمْமேலும் அவர்களுக்கு அதிகப்படுத்துவான்مِّنْஇருந்துفَضْلِهٖ ؕதன் அருட்கொடையின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَرْزُقُவாழ்வாதாரம் அளிக்கிறான்مَنْயாருக்குیَّشَآءُஅவன் நாடுகிறானோبِغَیْرِஇன்றிحِسَابٍகணக்கு
லியஜ்Zஜியஹுமுல் லாஹு அஹ்ஸன மா 'அமிலூ வ யZஜீதஹும் மின் Fபள்லிஹ்; வல் லாஹு யர்Zஜுகு மய் யஷா'உ Bபிகய்ரி ஹிஸாBப்
அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
وَالَّذِیْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۭ بِقِیْعَةٍ یَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ حَتّٰۤی اِذَا جَآءَهٗ لَمْ یَجِدْهُ شَیْـًٔا وَّوَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰىهُ حِسَابَهٗ ؕ وَاللّٰهُ سَرِیْعُ الْحِسَابِ ۟ۙ
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاَعْمَالُهُمْஅவர்களுடைய செயல்கள்كَسَرَابٍۭகானல் நீரைப் போன்றதுبِقِیْعَةٍஒரு சமவெளியில்یَّحْسَبُهُஅதை எண்ணுவான்الظَّمْاٰنُதாகித்தவன்مَآءً ؕதண்ணீர் என்றுحَتّٰۤیவரைاِذَاபோதுجَآءَهٗஅதனிடம் அவன் வந்தلَمْஇல்லைیَجِدْهُஅவன் அதைக் காணشَیْـًٔاஎதனையும்وَّ وَجَدَஇன்னும் அவன் கண்டான்اللّٰهَஅல்லாஹ்வைعِنْدَهٗஅங்குفَوَفّٰىهُஅவனுக்கு முழுமையாகக் கொடுத்தான்حِسَابَهٗ ؕஅவனுடைய கணக்கைوَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்سَرِیْعُமிக விரைவானவன்الْحِسَابِۙகணக்குத் தீர்ப்பதில்
வல்லதீன கFபரூ அஃமாலுஹும் கஸராBபிம் Bபிகீ'அதி(ன்)ய் யஹ்ஸBபுஹுள் ளமானு மா'அன் ஹத்தா இதா ஜா'அஹூ லம் யஜித் ஹு ஷய்'அ(ன்)வ் வ வஜதல் லாஹ 'இன்தஹூ Fப வFப்Fபாஹு ஹிஸாBபஹ்; வல்லாஹு ஸரீ'உல் ஹிஸாBப்
அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.
اَوْ كَظُلُمٰتٍ فِیْ بَحْرٍ لُّجِّیٍّ یَّغْشٰىهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌ ؕ ظُلُمٰتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ ؕ اِذَاۤ اَخْرَجَ یَدَهٗ لَمْ یَكَدْ یَرٰىهَا ؕ وَمَنْ لَّمْ یَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ ۟۠
اَوْஅல்லதுكَظُلُمٰتٍஇருள்களைப் போன்றதுفِیْஉள்ளبَحْرٍகடலில்لُّجِّیٍّஆழமானیَّغْشٰىهُஅதனை மூடுகிறதுمَوْجٌஅலைمِّنْஅதன்فَوْقِهٖமேல்مَوْجٌஅலைمِّنْஅதன்فَوْقِهٖமேல்سَحَابٌ ؕமேகம்ظُلُمٰتٌۢஇருள்கள்بَعْضُهَاஒன்றின்فَوْقَமேல்بَعْضٍ ؕஒன்றாகاِذَاۤபோதுاَخْرَجَஅவன் வெளியே நீட்டினால்یَدَهٗதன் கையைلَمْஇல்லைیَكَدْஅவனால்یَرٰىهَا ؕஅதனைப் பார்க்கوَ مَنْமேலும் எவருக்குلَّمْஇல்லைیَجْعَلِஆக்கவில்லையோاللّٰهُஅல்லாஹ்لَهٗஅவருக்குنُوْرًاஒளியைفَمَاஎனவே இல்லைلَهٗஅவருக்குمِنْஎந்தவொருنُّوْرٍ۠ஒளியும்
அவ் களுலுமாதின் Fபீ Bபஹ்ரில் லுஜ்ஜிய்யி(ன்)ய் யக்'ஷாஹு மவ்ஜுன் மின் Fபவ்கிஹீ மவ்ஜுன் மின் Fபவ்கிஹீ ஸஹாBப்; ளுலுமதுன் Bபஃளுஹா Fபவ்க Bபஃளின் இதா அக்ரஜ யதஹூ லம் யகத் யராஹா வ மன் லம் யஜ்'அலில் லாஹு லஹூ னூரன் Fபமா லஹூ மின் னூர்
அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُسَبِّحُ لَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّیْرُ صٰٓفّٰتٍ ؕ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِیْحَهٗ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِمَا یَفْعَلُوْنَ ۟
اَلَمْநீர்تَرَபார்க்கவில்லையாاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்வைیُسَبِّحُதுதிக்கின்றனர்لَهٗஅவனுக்குمَنْஎவர்கள்فِیஉள்ளالسَّمٰوٰتِவானங்களில்وَ الْاَرْضِமற்றும் பூமியிலும்وَ الطَّیْرُமேலும் பறவைகளும்صٰٓفّٰتٍ ؕஇறக்கைகளை விரித்தவாறுكُلٌّஒவ்வொன்றும்قَدْதிட்டமாகعَلِمَஅறிந்துள்ளதுصَلَاتَهٗதன் தொழுகையைوَ تَسْبِیْحَهٗ ؕமேலும் தன் துதியையும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِمَاஎவற்றைیَفْعَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோ
அலம் தர அன்னல் லாஹ யுஸBப்Bபிஹு லஹூ மன் Fபிஸ்ஸமாவாதி வல் அர்ளி வத் தய்ரு ஸாFப்Fபாதிம் குல்லுன் கத் 'அலிம ஸலாதஹூ வ தஸ்Bபீஹஹ்; வல்லாஹு 'அலீமும் Bபிமா யFப்'அலூன்
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ۚமற்றும் பூமியின்وَ اِلَیஇன்னும்اللّٰهِஅல்லாஹ்விடமேالْمَصِیْرُமீளுதல்
வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வ இலல் லாஹில் மஸீர்
இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது; அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُزْجِیْ سَحَابًا ثُمَّ یُؤَلِّفُ بَیْنَهٗ ثُمَّ یَجْعَلُهٗ رُكَامًا فَتَرَی الْوَدْقَ یَخْرُجُ مِنْ خِلٰلِهٖ ۚ وَیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِیْهَا مِنْ بَرَدٍ فَیُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ وَیَصْرِفُهٗ عَنْ مَّنْ یَّشَآءُ ؕ یَكَادُ سَنَا بَرْقِهٖ یَذْهَبُ بِالْاَبْصَارِ ۟ؕ
اَلَمْநீர் பார்க்கவில்லையாتَرَகாண்பதைاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُزْجِیْமெல்ல நகர்த்துகிறான்سَحَابًاமேகங்களைثُمَّபிறகுیُؤَلِّفُஒன்றிணைக்கிறான்بَیْنَهٗஅவற்றுக்கிடையேثُمَّபிறகுیَجْعَلُهٗஅதனை ஆக்குகிறான்رُكَامًاஅடர்த்தியான குவியலாகفَتَرَیஅப்போது நீர் காண்கிறீர்الْوَدْقَமழையைیَخْرُجُவெளிப்படுவதைمِنْஇருந்துخِلٰلِهٖ ۚஅதன் இடையில்وَ یُنَزِّلُஇன்னும் அவன் இறக்குகிறான்مِنَஇருந்துالسَّمَآءِவானத்தில்مِنْஇருந்துجِبَالٍமலைகளில்فِیْهَاஅதில்مِنْۢஇருந்துبَرَدٍஆலங்கட்டியைفَیُصِیْبُபின் அவன் தாக்குகிறான்بِهٖஅதைக் கொண்டுمَنْஎவரைیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یَصْرِفُهٗஇன்னும் அதனைத் திருப்புகிறான்عَنْவிட்டுمَّنْஎவரைیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோیَكَادُநெருங்கிவிடுகிறதுسَنَاபிரகாசம்بَرْقِهٖஅதன் மின்னலின்یَذْهَبُபறித்துவிடبِالْاَبْصَارِؕபார்வைகளை
அலம் தர அன்னல் லாஹ யுZஜ்ஜீ ஸஹாBபன் தும்ம யு'அல்லிFபு Bபய்னஹூ தும்ம யஜ்'அலுஹூ ருகாமன் Fபதரல் வத்க யக்ருஜு மின் கிலாலிஹீ வ யுனZஜ்Zஜிலு மினஸ் ஸமா'இ மின் ஜிBபாலின் Fபீஹா மிம் Bபரதின் Fப யுஸீBபு Bபிஹீ மய் யஷா'உ வ யஸ்ரிFபுஹூ 'அம் மய் யஷா'உ யக்காது ஸனா Bபர்கிஹீ யத்ஹBபு Bபில் அBப்ஸார்
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.
یُقَلِّبُ اللّٰهُ الَّیْلَ وَالنَّهَارَ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِی الْاَبْصَارِ ۟
یُقَلِّبُமாற்றுகிறான்اللّٰهُஅல்லாஹ்الَّیْلَஇரவைوَ النَّهَارَ ؕபகலையும்اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَعِبْرَةًஒரு படிப்பினைلِّاُولِیஉடையவர்களுக்குالْاَبْصَارِபார்வை
யுகல்லிBபுல் லாஹுல் லய்ல வன்னஹார்; இன்ன Fபீ தாலிக ல'இBப்ரதல் லி உலில் அBப்ஸார்
இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான்; நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது.
وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ ۚ فَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰی بَطْنِهٖ ۚ وَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰی رِجْلَیْنِ ۚ وَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰۤی اَرْبَعٍ ؕ یَخْلُقُ اللّٰهُ مَا یَشَآءُ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَ اللّٰهُமேலும் அல்லாஹ்خَلَقَபடைத்தான்كُلَّஒவ்வொருدَآبَّةٍஉயிரினத்தையும்مِّنْஇருந்துمَّآءٍ ۚநீரால்فَمِنْهُمْஆகவே அவற்றில்مَّنْசிலیَّمْشِیْநடக்கின்றனعَلٰیமீதுبَطْنِهٖ ۚதன் வயிற்றின்وَ مِنْهُمْஇன்னும் அவற்றில்مَّنْசிலیَّمْشِیْநடக்கின்றனعَلٰیமீதுرِجْلَیْنِ ۚஇரு கால்களின்وَ مِنْهُمْஇன்னும் அவற்றில்مَّنْசிலیَّمْشِیْநடக்கின்றனعَلٰۤیமீதுاَرْبَعٍ ؕநான்கின்یَخْلُقُபடைக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مَاஎதைیَشَآءُ ؕநாடுகிறானோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
வல்லாஹு கலக குல்ல தாBப்Bபதிம் மிம் மா'இன் Fபமின்ஹும் மய் யம்ஷீ 'அலா Bபத்னிஹீ வ மின்ஹும் மய் யம்ஷீ 'அலா ரிஜ்லய்னீ வ மின்ஹும் மய் யம்ஷீ 'அலா அர்Bப'; யக்லுகுல் லாஹு மா யஷா'; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
لَقَدْ اَنْزَلْنَاۤ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ ؕ وَاللّٰهُ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
لَقَدْநிச்சயமாகاَنْزَلْنَاۤநாம் அருளினோம்اٰیٰتٍவசனங்களைمُّبَیِّنٰتٍ ؕதெளிவாக்கும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَهْدِیْவழிகாட்டுகிறான்مَنْஎவரைیَّشَآءُஅவன் நாடுகிறானோاِلٰیநோக்கிصِرَاطٍபாதையைمُّسْتَقِیْمٍநேரான
லகத் அன்Zஜல்னா ஆயாதிம் முBபய்யினாத்; வல்லாஹு யஹ்தீ மய் யஷா'உ இலா ஸிராதிம் முஸ்தகீம்
நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.
وَیَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ یَتَوَلّٰی فَرِیْقٌ مِّنْهُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ ؕ وَمَاۤ اُولٰٓىِٕكَ بِالْمُؤْمِنِیْنَ ۟
وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ بِالرَّسُوْلِமேலும் தூதர் மீதும்وَ اَطَعْنَاமேலும் நாங்கள் கீழ்ப்படிந்தோம்ثُمَّபின்னர்یَتَوَلّٰیபுறக்கணித்துத் திரும்புகின்றனர்فَرِیْقٌஒரு பிரிவினர்مِّنْهُمْஅவர்களில்مِّنْۢஇருந்துبَعْدِபிறகுذٰلِكَ ؕஅதற்குوَ مَاۤமேலும் இல்லைاُولٰٓىِٕكَஅவர்கள்بِالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
வ யகூலூன ஆமன்னா Bபில்லாஹி வ Bபிர் ரஸூலி வ அதஃனா தும்ம யதவல்லா Fபரீகும் மின்ஹும் மிம் Bபஃதி தாலிக்; வ மா உலா'இக Bபில்மு'மினீன்
“அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம்” என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் - எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர்.
وَاِذَا دُعُوْۤا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ لِیَحْكُمَ بَیْنَهُمْ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ ۟
وَ اِذَاமேலும், எப்போதுدُعُوْۤاஅவர்கள் அழைக்கப்படுகிறார்களோاِلَیபால்اللّٰهِஅல்லாஹ்வின்وَ رَسُوْلِهٖமேலும் அவனுடைய தூதரின்لِیَحْكُمَஅவர் தீர்ப்பளிப்பதற்காகبَیْنَهُمْஅவர்களுக்கிடையேاِذَاஅப்பொழுதுفَرِیْقٌஒரு பிரிவினர்مِّنْهُمْஅவர்களில்مُّعْرِضُوْنَபுறக்கணிப்பவர்கள்
வ இதா து'ஊ இலல் லாஹி வ ரஸூலிஹீ லி யஹ்கும Bபய்னஹும் இதா Fபரீகும் மின்ஹும் முஃரிளூன்
மேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு, அதுபற்றிய) தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்களில் ஒரு பிரிவார் (அவ்வழைப்பைப்) புறக்கணிக்கிறார்கள்.
وَاِنْ یَّكُنْ لَّهُمُ الْحَقُّ یَاْتُوْۤا اِلَیْهِ مُذْعِنِیْنَ ۟ؕ
وَ اِنْஆனால்یَّكُنْஇருக்குமானால்لَّهُمُஅவர்களுக்குالْحَقُّநியாயம்یَاْتُوْۤاஅவர்கள் வருவார்கள்اِلَیْهِஅவரிடம்مُذْعِنِیْنَؕகீழ்ப்படிந்தவர்களாக
வ இ(ன்)ய்-யகுல் லஹுமுல் ஹக்கு யாதூ இலய்ஹி முத்'இனீன்
ஆனால், அவர்களின் பக்கம் - உண்மை (நியாயம்) இருக்குமானால், வழி பட்டவர்களாக அவரிடம் வருகிறார்கள்.
اَفِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ یَخَافُوْنَ اَنْ یَّحِیْفَ اللّٰهُ عَلَیْهِمْ وَرَسُوْلُهٗ ؕ بَلْ اُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟۠
اَفِیْஉள்ளதா?قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்களில்مَّرَضٌஒரு நோய்اَمِஅல்லதுارْتَابُوْۤاஅவர்கள் சந்தேகிக்கிறார்களாاَمْஅல்லதுیَخَافُوْنَஅவர்கள் அஞ்சுகிறார்களாاَنْஎன்றுیَّحِیْفَஅநீதி இழைப்பான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْஅவர்களுக்குوَ رَسُوْلُهٗ ؕமேலும் அவனுடைய தூதரும்بَلْமாறாகاُولٰٓىِٕكَஅவர்கள்هُمُஅவர்கள்தாம்الظّٰلِمُوْنَ۠அநியாயக்காரர்கள்
அFபீ குலூBபிஹிம் மரளுன் அமிர்தாBபூ அம் யகாFபூன அ(ன்)ய் யஹீFபல்லாஹு 'அலய்ஹிம் வ ரஸூலுஹ்; Bபல் உலா'இக ஹுமுள் ளாலிமூன்
அவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? அல்ல! அவர்களே அநியாயக் காரர்கள்.
اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِیْنَ اِذَا دُعُوْۤا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ لِیَحْكُمَ بَیْنَهُمْ اَنْ یَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகكَانَஆகும்قَوْلَகூற்றுالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களின்اِذَاபோதுدُعُوْۤاஅவர்கள் அழைக்கப்பட்டால்اِلَیபால்اللّٰهِஅல்லாஹ்வின்وَ رَسُوْلِهٖமேலும் அவனுடைய தூதரின்لِیَحْكُمَதீர்ப்பளிப்பதற்காகبَیْنَهُمْஅவர்களுக்கு இடையில்اَنْஎன்றுیَّقُوْلُوْاஅவர்கள் கூறுவதுسَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்وَ اَطَعْنَا ؕமேலும் நாங்கள் கீழ்ப்படிந்தோம்وَ اُولٰٓىِٕكَமேலும் அத்தகையோர்هُمُஅவர்களேالْمُفْلِحُوْنَவெற்றியாளர்கள்
இன்னமா கான கவ்லல் மு'மினீன இதா து'ஊ இலல் லாஹி வ ரஸூலிஹீ லி யஹ்கும Bபய்னஹும் அய் யகூலூ ஸமிஃனா வ அதஃனா; வ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَخْشَ اللّٰهَ وَیَتَّقْهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
وَ مَنْமேலும் எவர்یُّطِعِகீழ்ப்படிகிறாரோاللّٰهَஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلَهٗஅவனது தூதருக்கும்وَ یَخْشَஇன்னும் அஞ்சுகிறாரோاللّٰهَஅல்லாஹ்வைوَ یَتَّقْهِஅவனையும் அஞ்சி நடக்கிறாரோفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்களேالْفَآىِٕزُوْنَவெற்றியாளர்கள்
வ மய் யுதி'இல் லாஹ வ ரஸூலஹூ வ யக்-ஷல் லாஹ வ யத்தக்ஹி Fப உலா'இக ஹுமுல் Fபா'இZஜூன்
இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ لَىِٕنْ اَمَرْتَهُمْ لَیَخْرُجُنَّ ؕ قُلْ لَّا تُقْسِمُوْا ۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
وَ اَقْسَمُوْاமேலும் அவர்கள் சத்தியம் செய்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுجَهْدَஉறுதியானاَیْمَانِهِمْதங்கள் சத்தியங்களைلَىِٕنْநிச்சயமாகاَمَرْتَهُمْஅவர்களுக்குக் கட்டளையிட்டால்لَیَخْرُجُنَّ ؕஅவர்கள் நிச்சயமாகப் புறப்படுவார்கள்قُلْநீர் கூறுவீராகلَّاவேண்டாம்تُقْسِمُوْا ۚநீங்கள் சத்தியம் செய்யطَاعَةٌகீழ்ப்படிதல்مَّعْرُوْفَةٌ ؕஅறியப்பட்டதாகும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்خَبِیْرٌۢநன்கு அறிந்தவன்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
வ அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் ல'இன் அமர்தஹும் ல யக்ருஜுன்ன குல் லா துக்ஸிமூ தா'அதும் மஃரூFபஹ் இன்னல் லாஹ கBபீரும் Bபிமா தஃமலூன்
இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து கூறுகிறார்கள்; (அவர்களை நோக்கி:) “நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள். (உங்கள்) கீழ்படிதல் தெரிந்தது தான்- நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்” என்று கூறுவீராக.
قُلْ اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَیْهِ مَا حُمِّلَ وَعَلَیْكُمْ مَّا حُمِّلْتُمْ ؕ وَاِنْ تُطِیْعُوْهُ تَهْتَدُوْا ؕ وَمَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
قُلْகூறுவீராகاَطِیْعُواகீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ اَطِیْعُواமேலும் கீழ்ப்படியுங்கள்الرَّسُوْلَ ۚஇத்தூதருக்குفَاِنْஆனால் ஒருவேளைتَوَلَّوْاநீங்கள் புறக்கணித்தால்فَاِنَّمَاநிச்சயமாகعَلَیْهِஅவர் மீதுள்ளதெல்லாம்مَاஎதுحُمِّلَஅவர் மீது சுமத்தப்பட்டதோ (அதுவே)وَ عَلَیْكُمْமேலும் உங்கள் மீதுள்ளதெல்லாம்مَّاஎதுحُمِّلْتُمْ ؕஉங்கள் மீது சுமத்தப்பட்டதோ (அதுவே)وَ اِنْமேலும் ஒருவேளைتُطِیْعُوْهُஅவருக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால்تَهْتَدُوْا ؕநீங்கள் நேர்வழி பெறுவீர்கள்وَ مَاமேலும் இல்லைعَلَیமீதுالرَّسُوْلِஇத்தூதர்اِلَّاதவிரالْبَلٰغُஎடுத்துரைப்பதைத்الْمُبِیْنُதெளிவாக
குல் அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல Fப இன் தவல்லவ் Fப இன்னமா 'அலய்ஹி மா ஹும்மில வ 'அலய்கும் மா ஹும்மில்தும் வ இன் துதீ'ஊஹு தஹ்ததூ; வ மா'அலர் ரஸூலி இல்லல் Bபலாகுல் முBபீன்
“அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.
وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَیَسْتَخْلِفَنَّهُمْ فِی الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۪ وَلَیُمَكِّنَنَّ لَهُمْ دِیْنَهُمُ الَّذِی ارْتَضٰی لَهُمْ وَلَیُبَدِّلَنَّهُمْ مِّنْ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا ؕ یَعْبُدُوْنَنِیْ لَا یُشْرِكُوْنَ بِیْ شَیْـًٔا ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
وَعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோمِنْكُمْஉங்களில்وَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَیَسْتَخْلِفَنَّهُمْஅவன் அவர்களை நிச்சயமாகப் பிரதிநிதிகளாக்குவான்فِیஇல்الْاَرْضِபூமியில்كَمَاஎவ்வாறுاسْتَخْلَفَஅவன் பிரதிநிதிகளாக்கினானோالَّذِیْنَஎவர்களைمِنْஇருந்துقَبْلِهِمْ ۪அவர்களுக்கு முன்னிருந்தوَ لَیُمَكِّنَنَّமேலும் அவன் நிச்சயமாக நிலைப்படுத்துவான்لَهُمْஅவர்களுக்காகدِیْنَهُمُஅவர்களுடைய மார்க்கத்தைالَّذِیஎதனைارْتَضٰیஅவன் பொருந்திக் கொண்டானோلَهُمْஅவர்களுக்காகوَ لَیُبَدِّلَنَّهُمْமேலும் அவன் அவர்களுக்கு நிச்சயமாக மாற்றிக் கொடுப்பான்مِّنْۢஇருந்துبَعْدِபிறகுخَوْفِهِمْஅவர்களுடைய அச்சத்திற்குப்اَمْنًا ؕபாதுகாப்பைیَعْبُدُوْنَنِیْஅவர்கள் என்னையே வணங்குவார்கள்لَاமாட்டார்கள்یُشْرِكُوْنَஇணைவைக்கبِیْஎனக்குشَیْـًٔا ؕஎதனையும்وَ مَنْஇன்னும் எவர்كَفَرَநிராகரிக்கிறாரோبَعْدَபிறகுذٰلِكَஅதற்குப்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُதாம்الْفٰسِقُوْنَபாவிகளாவார்கள்
வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ மின்கும் வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ல யஸ்தக்லிFபன் னஹும் Fபில் அர்ளி கமஸ்தக் லFபல் லதீன மின் கBப்லிஹிம் வ ல யுமக்கினன்ன லஹும் தீனஹுமுல் லதிர் தளா லஹும் வ ல யுBபத்திலன்னஹும் மிம் Bபஃதி கவ்Fபிஹிம் அம்னா; யஃBபுதூனனீ லாயுஷ்ரிகூன Bபீ ஷய்'ஆ; வ மன் கFபர Bபஃத தாலிக Fப உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
وَ اَقِیْمُواமேலும் நிலைநாட்டுங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتُواமேலும் கொடுங்கள்الزَّكٰوةَஜகாத்தைوَ اَطِیْعُواமேலும் கீழ்ப்படியுங்கள்الرَّسُوْلَதூதருக்குلَعَلَّكُمْ(அதனால்) நீங்கள்تُرْحَمُوْنَஅருள் செய்யப்படுவீர்கள்
வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வ அதீ'உர் ரஸூல ல'அல்லகும் துர்ஹமூன்
(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.
لَا تَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْا مُعْجِزِیْنَ فِی الْاَرْضِ ۚ وَمَاْوٰىهُمُ النَّارُ ؕ وَلَبِئْسَ الْمَصِیْرُ ۟۠
لَاஒருபோதும்تَحْسَبَنَّநீர் எண்ண வேண்டாம்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمُعْجِزِیْنَதப்பிக்கக் கூடியவர்கள் என்றுفِیஇல்الْاَرْضِ ۚபூமிوَ مَاْوٰىهُمُமேலும் அவர்களின் தங்குமிடம்النَّارُ ؕநரக நெருப்புوَ لَبِئْسَமேலும் நிச்சயமாக மிகக் கெட்டதுالْمَصِیْرُ۠சேருமிடம்
லா தஹ்ஸBபன்னல் லதீன கFபரூ முஃஜிZஜீன Fபில் அர்ள்; வ மாவாஹுமுன் னாரு வ லBபி'ஸல் மஸீர்
நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لِیَسْتَاْذِنْكُمُ الَّذِیْنَ مَلَكَتْ اَیْمَانُكُمْ وَالَّذِیْنَ لَمْ یَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍ ؕ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِیْنَ تَضَعُوْنَ ثِیَابَكُمْ مِّنَ الظَّهِیْرَةِ وَمِنْ بَعْدِ صَلٰوةِ الْعِشَآءِ ؕ۫ ثَلٰثُ عَوْرٰتٍ لَّكُمْ ؕ لَیْسَ عَلَیْكُمْ وَلَا عَلَیْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ ؕ طَوّٰفُوْنَ عَلَیْكُمْ بَعْضُكُمْ عَلٰی بَعْضٍ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلِیَسْتَاْذِنْكُمُஉங்களிடம் அனுமதி கேட்கட்டும்الَّذِیْنَஎவர்களைمَلَكَتْசொந்தமாக்கிக் கொண்டனவோاَیْمَانُكُمْஉங்கள் வலது கரங்கள்وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்لَمْஇல்லைیَبْلُغُواஅடைந்தார்களோالْحُلُمَபருவ வயதைمِنْكُمْஉங்களில்ثَلٰثَமூன்றுمَرّٰتٍ ؕதடவைகள்مِنْஇருந்துقَبْلِமுன்னதாகصَلٰوةِதொழுகைக்குالْفَجْرِஃபஜ்ர்وَ حِیْنَஇன்னும் அந்த நேரத்தில்تَضَعُوْنَநீங்கள் கழற்றி வைக்கிறீர்களோثِیَابَكُمْஉங்கள் ஆடைகளைمِّنَநேரத்தில்الظَّهِیْرَةِநண்பகல்وَ مِنْۢஇன்னும் இருந்துبَعْدِபின்னதாகصَلٰوةِதொழுகைக்குالْعِشَآءِ ؕ۫இஷாثَلٰثُமூன்றுعَوْرٰتٍஅந்தரங்க நேரங்கள்لَّكُمْ ؕஉங்களுக்குلَیْسَஇல்லைعَلَیْكُمْஉங்கள் மீதுوَ لَاஇன்னும் இல்லைعَلَیْهِمْஅவர்கள் மீதுجُنَاحٌۢகுற்றம்بَعْدَهُنَّ ؕஅவற்றுக்குப் பிறகுطَوّٰفُوْنَசுற்றி வருபவர்கள்عَلَیْكُمْஉங்கள் மீதுبَعْضُكُمْஉங்களில் சிலர்عَلٰیமீதுبَعْضٍ ؕசிலரின்كَذٰلِكَஅவ்வாறேیُبَیِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَكُمُஉங்களுக்குالْاٰیٰتِ ؕவசனங்களைوَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லி யஸ்த'தின்குமுல் லதீன மலகத் அய்மானுகும் வல்லதீன லம் யBப்லுகுல் ஹுலும மின்கும் தலாத மர்ராத்; மின் கBப்லி ஸலாதில் Fபஜ்ரி வ ஹீன தள'ஊன தியா Bபகும் மினள் ளஹீரதி வ மின் Bபஃதி ஸலாதில் இஷா'; தலாது 'அவ்ராதில் லகும்; லய்ஸ 'அலய்கும் வலா 'அலய்ஹிம் ஜுனாஹுன் Bபஃதஹுன்ன்; தவ்வாFபூன 'அலய்கும் Bபஃளுகும் 'அலா Bபஃள்; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகுமுல் ஆயாத்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் “லுஹர்” நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْیَسْتَاْذِنُوْا كَمَا اسْتَاْذَنَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
وَ اِذَاமேலும் எப்போதுبَلَغَஅடைந்துவிட்டால்الْاَطْفَالُசிறுவர்கள்مِنْكُمُஉங்களிலுள்ளالْحُلُمَபருவ வயதைفَلْیَسْتَاْذِنُوْاஅவர்கள் அனுமதி கேட்கட்டும்كَمَاஎவ்வாறுاسْتَاْذَنَஅனுமதி கேட்டார்களோالَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்னால்كَذٰلِكَஅவ்வாறேیُبَیِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَكُمْஉங்களுக்குاٰیٰتِهٖ ؕதனது வசனங்களைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
வ இதா Bபலகல் அத்Fபாலு மின்குமுல் ஹுலும Fபல் யஸ்த'தினூ கமஸ் த'தனல் லதீன மின் கBப்லிஹிம்; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகும் ஆயாதிஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
وَالْقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِیْ لَا یَرْجُوْنَ نِكَاحًا فَلَیْسَ عَلَیْهِنَّ جُنَاحٌ اَنْ یَّضَعْنَ ثِیَابَهُنَّ غَیْرَ مُتَبَرِّجٰتٍ بِزِیْنَةٍ ؕ وَاَنْ یَّسْتَعْفِفْنَ خَیْرٌ لَّهُنَّ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
وَ الْقَوَاعِدُஇன்னும் முதிர்ந்த பெண்கள்مِنَஇருந்துالنِّسَآءِபெண்களில்الّٰتِیْஎவர்கள்لَاஇல்லைیَرْجُوْنَஅவர்கள் எதிர்பார்க்கிறார்கள்نِكَاحًاதிருமணத்தைفَلَیْسَஎனவே இல்லைعَلَیْهِنَّஅவர்கள் மீதுجُنَاحٌகுற்றம்اَنْஅவர்கள்یَّضَعْنَகளைந்து கொள்வதில்ثِیَابَهُنَّதங்களது ஆடைகளைغَیْرَஇன்றிمُتَبَرِّجٰتٍۭவெளிப்படுத்துபவர்களாகبِزِیْنَةٍ ؕஅலங்காரத்தைوَ اَنْமேலும்یَّسْتَعْفِفْنَஅவர்கள் பேணுதலாக இருப்பதுخَیْرٌமிகச் சிறந்ததுلَّهُنَّ ؕஅவர்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
வல்கவா'இது மினன் னிஸா'இல் லாதீ லா யர்ஜூன னிகாஹன் Fப லய்ஸ 'அலய்ஹின்ன ஜுனாஹுன் அய் யளஃன தியாBபஹுன்ன கய்ர முதBபர்ரிஜாதின் Bபி Zஜீனஹ்; வ அய் யஸ்தஃFபிFப் ன கய்ருல் லஹுன்ன்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
لَیْسَ عَلَی الْاَعْمٰی حَرَجٌ وَّلَا عَلَی الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَی الْمَرِیْضِ حَرَجٌ وَّلَا عَلٰۤی اَنْفُسِكُمْ اَنْ تَاْكُلُوْا مِنْ بُیُوْتِكُمْ اَوْ بُیُوْتِ اٰبَآىِٕكُمْ اَوْ بُیُوْتِ اُمَّهٰتِكُمْ اَوْ بُیُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُیُوْتِ اَخَوٰتِكُمْ اَوْ بُیُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُیُوْتِ عَمّٰتِكُمْ اَوْ بُیُوْتِ اَخْوَالِكُمْ اَوْ بُیُوْتِ خٰلٰتِكُمْ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗۤ اَوْ صَدِیْقِكُمْ ؕ لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَاْكُلُوْا جَمِیْعًا اَوْ اَشْتَاتًا ؕ فَاِذَا دَخَلْتُمْ بُیُوْتًا فَسَلِّمُوْا عَلٰۤی اَنْفُسِكُمْ تَحِیَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَیِّبَةً ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟۠
لَیْسَஇல்லைعَلَیமீதுالْاَعْمٰیபார்வையற்றவர்حَرَجٌகுற்றம்وَّ لَاமேலும் இல்லைعَلَیமீதுالْاَعْرَجِமுடவர்حَرَجٌகுற்றம்وَّ لَاமேலும் இல்லைعَلَیமீதுالْمَرِیْضِநோயாளிحَرَجٌகுற்றம்وَّ لَاமேலும் இல்லைعَلٰۤیமீதுاَنْفُسِكُمْஉங்கள் மீதும்اَنْநீங்கள்تَاْكُلُوْاஉண்பதில்مِنْۢஇருந்துبُیُوْتِكُمْஉங்கள் வீடுகள்اَوْஅல்லதுبُیُوْتِவீடுகள்اٰبَآىِٕكُمْஉங்கள் தந்தையரின்اَوْஅல்லதுبُیُوْتِவீடுகள்اُمَّهٰتِكُمْஉங்கள் தாய்மாரின்اَوْஅல்லதுبُیُوْتِவீடுகள்اِخْوَانِكُمْஉங்கள் சகோதரர்களின்اَوْஅல்லதுبُیُوْتِவீடுகள்اَخَوٰتِكُمْஉங்கள் சகோதரிகளின்اَوْஅல்லதுبُیُوْتِவீடுகள்اَعْمَامِكُمْஉங்கள் தந்தையின் சகோதரர்களின்اَوْஅல்லதுبُیُوْتِவீடுகள்عَمّٰتِكُمْஉங்கள் தந்தையின் சகோதரிகளின்اَوْஅல்லதுبُیُوْتِவீடுகள்اَخْوَالِكُمْஉங்கள் தாயின் சகோதரர்களின்اَوْஅல்லதுبُیُوْتِவீடுகள்خٰلٰتِكُمْஉங்கள் தாயின் சகோதரிகளின்اَوْஅல்லதுمَاஎதனைمَلَكْتُمْநீங்கள் உரிமையாக்கி இருக்கிறீர்களோمَّفَاتِحَهٗۤஅதன் சாவிகளைاَوْஅல்லதுصَدِیْقِكُمْ ؕஉங்கள் நண்பர்களின்لَیْسَஇல்லைعَلَیْكُمْஉங்கள் மீதுجُنَاحٌகுற்றம்اَنْநீங்கள்تَاْكُلُوْاஉண்பதில்جَمِیْعًاகூட்டாகاَوْஅல்லதுاَشْتَاتًا ؕதனித்தனியாகفَاِذَاஎனவே எப்போதுدَخَلْتُمْநீங்கள் நுழைந்தால்بُیُوْتًاவீடுகளுக்குள்فَسَلِّمُوْاஸலாம் கூறுங்கள்عَلٰۤیமீதுاَنْفُسِكُمْஉங்கள் மீதேتَحِیَّةًமுகமன்مِّنْஇருந்துعِنْدِஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்مُبٰرَكَةًஅருள்வளம் மிக்கطَیِّبَةً ؕதூய்மையானكَذٰلِكَஅவ்வாறேیُبَیِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَكُمُஉங்களுக்குالْاٰیٰتِவசனங்களைلَعَلَّكُمْநீங்கள்تَعْقِلُوْنَ۠சிந்தித்து உணர்வதற்காக
லய்ஸ 'அலல் அஃமா ஹரஜு(ன்)வ் வலா 'அலல் அஃரஜி ஹரஜு(ன்)வ் வலா 'அலல் மரீளி ஹரஜுன் வலா 'அலா அன்Fபுஸிகும் 'அன் த'குலூ மின் Bபுயூதிகும் அவ் Bபுயூதி ஆBபா'இகும் அவ் Bபுயூதி உம்மஹாதிகும் அவ் Bபுயூதி இக்வானிகும் அவ் Bபுயூதி அகவாதிகும் அவ் Bபுயூதி அஃமாமிகும் அவ் Bபுயூதி 'அம்மாதிகும் அவ் Bபுயூதி அக்வாலிகும் அவ் Bபுயூதி காலாதிகும் அவ் மா மலக்தும் மFபாதிஹஹூ அவ் ஸதீகிகும்; லய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் 'அன் த'குலூ ஜமீ'அன் அவ் அஷ்தாத; Fப இதா தகல்தும் Bபுயூதன் Fப ஸல்லிமூ 'அலா அன்Fபுஸிகும் தஹிய்யதன் மின் 'இன்தில் லாஹி முBபாரகதன் தய்யிBபஹ்; கதாலிக யுBபய் யினுல் லாஹு லகுமுல் ஆயாதி ல'அல்லகும் தஃகிலூன்
(முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; உங்கள் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால் நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான - பாக்கியம் மிக்க - பரிசுத்தமான (“அஸ்ஸலாமு அலைக்கும்” என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள் - நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.  
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰۤی اَمْرٍ جَامِعٍ لَّمْ یَذْهَبُوْا حَتّٰی یَسْتَاْذِنُوْهُ ؕ اِنَّ الَّذِیْنَ یَسْتَاْذِنُوْنَكَ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ۚ فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ فَاْذَنْ لِّمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِنَّمَاநிச்சயமாகالْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رَسُوْلِهٖஇன்னும் அவனுடைய தூதர் மீதும்وَ اِذَاமேலும் எப்போதுكَانُوْاஅவர்கள் இருக்கிறார்களோمَعَهٗஅவருடன்عَلٰۤیமீதுاَمْرٍஒரு காரியத்தின்جَامِعٍபொதுவானلَّمْமாட்டார்கள்یَذْهَبُوْاஅவர்கள் செல்லحَتّٰیவரைیَسْتَاْذِنُوْهُ ؕஅவரிடம் அனுமதி கேட்கும்اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَسْتَاْذِنُوْنَكَஉம்மிடம் அனுமதி கேட்கிறார்களோاُولٰٓىِٕكَஅவர்கள் தான்الَّذِیْنَஎவர்கள்یُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رَسُوْلِهٖ ۚஇன்னும் அவனுடைய தூதர் மீதும்فَاِذَاஎனவே எப்போதுاسْتَاْذَنُوْكَஅவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால்لِبَعْضِசிலشَاْنِهِمْஅவர்களுடைய காரியங்களுக்காகفَاْذَنْநீர் அனுமதி கொடுப்பீராகلِّمَنْஎவருக்குشِئْتَநீர் நாடுகிறீரோمِنْهُمْஅவர்களில்وَ اسْتَغْفِرْமேலும் மன்னிப்புத் தேடுவீராகلَهُمُஅவர்களுக்காகاللّٰهَ ؕஅல்லாஹ்விடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
இன்னமல் மு'மினூனல் லதீன ஆமனூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ இதா கானூ ம'அஹூ 'அலா அம்ரின் ஜாமி'இல் லம் யத்ஹBபூ ஹத்தா யஸ்த'தினூஹ்; இன்னல் லதீன யஸ்த'தினூனக உலா'இகல் லதீன யு'மினூன Bபில்லாஹி வ ரஸூலிஹ்; Fப இதஸ் த'தனூக லி Bபஃளி ஷ'னிஹிம் Fப'தல் லிமன் ஷி'த மின்ஹும் வஸ்தக்Fபிர் லஹுமுல் லாஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக; இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்.
لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَیْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا ؕ قَدْ یَعْلَمُ اللّٰهُ الَّذِیْنَ یَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا ۚ فَلْیَحْذَرِ الَّذِیْنَ یُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِیْبَهُمْ فِتْنَةٌ اَوْ یُصِیْبَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
لَاஆக்காதீர்கள்تَجْعَلُوْاநீங்கள்دُعَآءَஅழைப்பைالرَّسُوْلِதூதரின்بَیْنَكُمْஉங்களுக்கு இடையேكَدُعَآءِஅழைப்பதைப் போலبَعْضِكُمْஉங்களில் சிலர்بَعْضًا ؕசிலரைقَدْதிண்ணமாகیَعْلَمُநன்கறிவான்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்یَتَسَلَّلُوْنَநழுவிச் செல்கிறார்களோمِنْكُمْஉங்களிலிருந்துلِوَاذًا ۚபதுங்கிفَلْیَحْذَرِஎனவே எச்சரிக்கையாக இருக்கட்டும்الَّذِیْنَஎவர்கள்یُخَالِفُوْنَமாறுபடுகிறார்களோعَنْவிட்டுاَمْرِهٖۤஅவருடைய கட்டளையைاَنْஎனتُصِیْبَهُمْஅவர்களுக்கு ஏற்படும்فِتْنَةٌஒரு சோதனைاَوْஅல்லதுیُصِیْبَهُمْஅவர்களுக்கு ஏற்படும்عَذَابٌவேதனைاَلِیْمٌதுன்பகரமான
லா தஜ்'அலூ து'ஆ'அர் ரஸூலி Bபய்னகும் க து'ஆ'இ Bபஃளிகும் Bபஃளா; கத் யஃலமுல் லாஹுல் லதீன யதஸல்லலூன மின்கும் லிவாதா; Fபல் யஹ்தரில் லதீன யுகாலிFபூன 'அன் அம்ரிஹீ 'அன் துஸீBபஹும் Fபித்னதுன் அவ் யுஸீBபஹும் 'அதாBபுன் அலீம்
(முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.
اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ قَدْ یَعْلَمُ مَاۤ اَنْتُمْ عَلَیْهِ ؕ وَیَوْمَ یُرْجَعُوْنَ اِلَیْهِ فَیُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
اَلَاۤஅறிந்து கொள்ளுங்கள்اِنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்வுக்கேمَاஎவைفِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியில்قَدْதிண்ணமாகیَعْلَمُஅவன் அறிகிறான்مَاۤஎதில்اَنْتُمْநீங்கள்عَلَیْهِ ؕஇருக்கிறீர்களோوَ یَوْمَமேலும் அந்நாளில்یُرْجَعُوْنَஅவர்கள் திருப்பப்படுவார்கள்اِلَیْهِஅவனிடம்فَیُنَبِّئُهُمْஅப்போது அவன் அவர்களுக்கு அறிவிப்பான்بِمَاஎவற்றைعَمِلُوْا ؕஅவர்கள் செய்தார்களோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌ۠நன்கறிந்தவன்
'அலா இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி கத் யஃலமு மா அன்தும் 'அலய்ஹி வ யவ்ம யுர்ஜ'ஊன இலய்ஹி Fப யுனBப்Bபி'உஹும் Bபிமா 'அமிலூ; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்.