56. ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)

மக்கீ, வசனங்கள்: 96

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ
اِذَاபோதுوَقَعَتِநிகழும்الْوَاقِعَةُۙஅந்நிகழ்ச்சி
இதா வக'அதில் வாகி'அஹ்
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால் -
لَیْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ۟ۘ
لَیْسَஇல்லைلِوَقْعَتِهَاஅதன் நிகழ்வைكَاذِبَةٌۘபொய்ப்பிப்பது
லய்ஸ லிவக்'அதிஹா காதிBபஹ்
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
خَافِضَةٌ رَّافِعَةٌ ۟ۙ
خَافِضَةٌதாழ்த்துவதுرَّافِعَةٌۙஉயர்த்துவது
கFபிளதுர் ராFபி'அஹ்
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும்; (நல்லோரை) உயர்த்தி விடும்.
اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّا ۟ۙ
اِذَاபோதுرُجَّتِகுலுக்கப்படும்الْاَرْضُபூமிرَجًّاۙகடும் குலுக்கலாக
இதா ருஜ்ஜதில் அர்ளு ரஜ்ஜா
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۟ۙ
وَّ بُسَّتِமேலும் தூளாக்கப்படும்الْجِبَالُமலைகள்بَسًّاۙதூள் தூளாக
வ Bபுஸ்ஸதில் ஜிBபாலு Bபஸ்ஸா
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
فَكَانَتْ هَبَآءً مُّنْۢبَثًّا ۟ۙ
فَكَانَتْஅவை ஆகிவிடும்هَبَآءًபுழுதியாகمُّنْۢبَثًّاۙசிதறிய
Fபகானத் ஹBபா'அம் மும்Bபத்தா
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
وَّكُنْتُمْ اَزْوَاجًا ثَلٰثَةً ۟ؕ
وَّ كُنْتُمْமேலும் நீங்கள் ஆகிவிடுவீர்கள்اَزْوَاجًاபிரிவினர்களாகثَلٰثَةًؕமூன்று
வ குன்தும் அZஜ்வாஜன் தலாதஹ்
(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
فَاَصْحٰبُ الْمَیْمَنَةِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ
فَاَصْحٰبُஎனவே தோழர்கள்الْمَیْمَنَةِ ۙ۬வலப்புறத்தின்مَاۤஎன்னاَصْحٰبُதோழர்கள்الْمَیْمَنَةِؕவலப்புறத்தின்
Fப அஸ் ஹாBபுல் மய்மனதி மா அஸ் ஹாBபுல் மய்மனஹ்
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
وَاَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ
وَ اَصْحٰبُஇன்னும் தோழர்கள்الْمَشْـَٔمَةِ ۙ۬இடப்பக்கத்தின்مَاۤஎன்னاَصْحٰبُதோழர்கள்الْمَشْـَٔمَةِؕஇடப்பக்கத்தின்
வ அஸ் ஹாBபுல் மஷ்'அமதி மா அஸ் ஹாBபுல் மஷ்'அமஹ்
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَ ۟ۚۙ
وَ السّٰبِقُوْنَமுந்தியவர்களும்السّٰبِقُوْنَۚۙமுந்தியவர்களே
வஸ்ஸாBபிகூனஸ் ஸாBபிகூன்
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
اُولٰٓىِٕكَ الْمُقَرَّبُوْنَ ۟ۚ
اُولٰٓىِٕكَஅவர்களேالْمُقَرَّبُوْنَۚநெருக்கமாக்கப்பட்டவர்கள்
உலா'இகல் முகர்ரBபூன்
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
فِیْஇல்جَنّٰتِசுவனங்கள்النَّعِیْمِபேரின்பம்
Fபீ ஜன்னாதின் ன'ஈம்
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ
ثُلَّةٌஒரு பெரும் கூட்டம்مِّنَஇருந்துالْاَوَّلِیْنَۙமுன்னோர்கள்
துல்லதும் மினல் அவ்வலீன்
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
وَقَلِیْلٌ مِّنَ الْاٰخِرِیْنَ ۟ؕ
وَ قَلِیْلٌஇன்னும் ஒரு சிலரேمِّنَஇருந்துالْاٰخِرِیْنَؕபிற்காலத்தவர்கள்
வ கலீலும் மினல் ஆ கிரீன்
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
عَلٰی سُرُرٍ مَّوْضُوْنَةٍ ۟ۙ
عَلٰیமீதுسُرُرٍகட்டில்கள்مَّوْضُوْنَةٍۙஇழைக்கப்பட்ட
அலா ஸுருரிம் மவ்ளூனஹ்
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
مُّتَّكِـِٕیْنَ عَلَیْهَا مُتَقٰبِلِیْنَ ۟
مُّتَّكِـِٕیْنَசாய்ந்தவர்களாகعَلَیْهَاஅவற்றின் மீதுمُتَقٰبِلِیْنَஒருவரை ஒருவர் நோக்கியவர்களாக
முத்தகி'ஈன 'அலய்ஹா முதகாBபிலீன்
ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
یَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۟ۙ
یَطُوْفُசுற்றி வருவார்கள்عَلَیْهِمْஅவர்களைوِلْدَانٌசிறுவர்கள்مُّخَلَّدُوْنَۙஎன்றும் இளமை மாறாதவர்கள்
யதூFபு 'அலய்ஹிம் வில்தா னும் முகல்லதூன்
நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
بِاَكْوَابٍ وَّاَبَارِیْقَ ۙ۬ وَكَاْسٍ مِّنْ مَّعِیْنٍ ۟ۙ
بِاَكْوَابٍகுவளைகளுடனும்وَّ اَبَارِیْقَ ۙ۬கூஜாக்களுடனும்وَ كَاْسٍகோப்பையுடனும்مِّنْஇருந்துمَّعِیْنٍۙஓடும் சுனை
Bபி அக்வாBபி(ன்)வ் வ அBபாரீக், வ காஸிம் மிம் ம'ஈன்
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
لَّا یُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا یُنْزِفُوْنَ ۟ۙ
لَّاஇல்லைیُصَدَّعُوْنَஅவர்களுக்குத் தலைவலி ஏற்படும்عَنْهَاஅதனால்وَ لَاமேலும் இல்லைیُنْزِفُوْنَۙஅவர்கள் மதிமயங்குவார்கள்
லா யுஸத்த'ஊன 'அன்ஹா வலா யுன்ZஜிFபூன்
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.
وَفَاكِهَةٍ مِّمَّا یَتَخَیَّرُوْنَ ۟ۙ
وَ فَاكِهَةٍமேலும் கனிகளும்مِّمَّاஎவற்றைیَتَخَیَّرُوْنَۙஅவர்கள் தேர்ந்தெடுக்கிறார்களோ
வ Fபாகிஹதிம் மிம்மா யதகய்யரூன்
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
وَلَحْمِ طَیْرٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟ؕ
وَ لَحْمِமேலும் இறைச்சிطَیْرٍபறவைகளின்مِّمَّاஎதைیَشْتَهُوْنَؕஅவர்கள் விரும்புகிறார்களோ
வ லஹ்மி தய்ரிம் மிம்மா யஷ்தஹூன்
விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
وَحُوْرٌ عِیْنٌ ۟ۙ
وَ حُوْرٌமேலும் ஹூர்கள்عِیْنٌۙஅகன்ற அழகிய கண்களை உடையவர்கள்
வ ஹூருன்'ஈன்
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
كَاَمْثَالِ اللُّؤْلُوءِ الْمَكْنُوْنِ ۟ۚ
كَاَمْثَالِபோன்றاللُّؤْلُؤِமுத்துக்கள்الْمَكْنُوْنِۚமறைக்கப்பட்ட
க அம்தாலில் லு'லு'இல் மக்னூன்
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
جَزَآءًۢகூலியாகبِمَاகாரணமாகكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்கள்
ஜZஜா'அம் Bபிமா கானூ யஃமலூன்
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا تَاْثِیْمًا ۟ۙ
لَاமாட்டார்கள்یَسْمَعُوْنَஅவர்கள் செவியுறفِیْهَاஅதில்لَغْوًاவீணான பேச்சைوَّ لَاமேலும் இல்லைتَاْثِیْمًاۙபாவமான பேச்சை
லா யஸ்ம'ஊன Fபீஹா லக்வ(ன்)வ் வலா தா'தீமா
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
اِلَّا قِیْلًا سَلٰمًا سَلٰمًا ۟
اِلَّاதவிரقِیْلًاசொல்லைسَلٰمًاஸலாம்سَلٰمًاஸலாம்
இல்லா கீலன் ஸலாமன் ஸலாமா
“ஸலாம், ஸலாம்” என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
وَاَصْحٰبُ الْیَمِیْنِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْیَمِیْنِ ۟ؕ
وَ اَصْحٰبُமேலும் தோழர்கள்الْیَمِیْنِ ۙ۬வலப்பக்கத்தின்مَاۤஎத்தகையவர்கள்اَصْحٰبُதோழர்கள்الْیَمِیْنِؕவலப்பக்கத்தின்
வ அஸ் ஹாBபுல் யமீனி மா அஸ் ஹாBபுல் யமீன்
இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
فِیْ سِدْرٍ مَّخْضُوْدٍ ۟ۙ
فِیْஇடையில்سِدْرٍஇலந்தை மரங்கள்مَّخْضُوْدٍۙமுட்களற்ற
Fபீ ஸித்ரிம் மக்ளூத்
(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்;
وَّطَلْحٍ مَّنْضُوْدٍ ۟ۙ
وَّ طَلْحٍவாழை மரங்களும்مَّنْضُوْدٍۙஅடுக்கடுக்கான
வ தல்ஹிம் மன்ளூத்
(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும்;
وَّمَآءٍ مَّسْكُوْبٍ ۟ۙ
وَّ مَآءٍநீரும்مَّسْكُوْبٍۙஓடிக்கொண்டிருக்கும்
வ மா'இம் மஸ்கூBப்
(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
وَّفَاكِهَةٍ كَثِیْرَةٍ ۟ۙ
وَّ فَاكِهَةٍமேலும் கனிகள்كَثِیْرَةٍۙஏராளமான
வ Fபாகிஹதின் கதீரஹ்
ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
لَّا مَقْطُوْعَةٍ وَّلَا مَمْنُوْعَةٍ ۟ۙ
لَّاஅல்லمَقْطُوْعَةٍஅற்றுப்போகக்கூடியவைوَّ لَاமேலும் அல்லمَمْنُوْعَةٍۙதடுக்கப்பட்டவை
லா மக்தூ'அதி(ன்)வ் வலா மம்னூ'அஹ்
அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -
وَّفُرُشٍ مَّرْفُوْعَةٍ ۟ؕ
وَّ فُرُشٍமேலும் விரிப்புகள்مَّرْفُوْعَةٍؕஉயர்த்தப்பட்டவை
வ Fபுருஷிம் மர்Fபூ'அஹ்
மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
اِنَّاۤ اَنْشَاْنٰهُنَّ اِنْشَآءً ۟ۙ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْشَاْنٰهُنَّஅவர்களை உருவாக்கினோம்اِنْشَآءًۙஒரு (புதிய) உருவாக்கமாக
இன்னா அன்ஷா'னாஹுன்ன இன்ஷா'ஆ
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;
فَجَعَلْنٰهُنَّ اَبْكَارًا ۟ۙ
فَجَعَلْنٰهُنَّமேலும் அவர்களை நாம் ஆக்கினோம்اَبْكَارًاۙகன்னியர்களாக
Fபஜ'அல்னாஹுன்ன அBப்காரா
அப்பெண்களைக் கன்னிகளாகவும்;
عُرُبًا اَتْرَابًا ۟ۙ
عُرُبًاநேசமுடையவர்கள்اَتْرَابًاۙசம வயதுடையவர்கள்
'உருBபன் அத்ராBபா
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
لِّاَصْحٰبِ الْیَمِیْنِ ۟ؕ۠
لِّاَصْحٰبِதோழர்களுக்காகالْیَمِیْنِؕ۠வலப்பக்கத்து
லி அஸ் ஹாBபில் யமீன்
வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).  
ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ
ثُلَّةٌஒரு கூட்டத்தினர்مِّنَஇருந்துالْاَوَّلِیْنَۙமுன்னோர்களில்
துல்லதும் மினல் அவ்வ லீன்
முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
وَثُلَّةٌ مِّنَ الْاٰخِرِیْنَ ۟ؕ
وَ ثُلَّةٌமேலும் ஒரு கூட்டத்தினர்مِّنَஇருந்துالْاٰخِرِیْنَؕபின்னோர்களில்
வ துல்லதும் மினல் ஆகிரீன்
பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).
وَاَصْحٰبُ الشِّمَالِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الشِّمَالِ ۟ؕ
وَ اَصْحٰبُஇன்னும் தோழர்கள்الشِّمَالِ ۙ۬இடதுபுறத்தின்مَاۤஎன்னاَصْحٰبُதோழர்கள்الشِّمَالِؕஇடதுபுறத்தின்
வ அஸ் ஹாBபுஷ் ஷிமாலி மா அஸ் ஹாBபுஷ் ஷிமால்
இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)
فِیْ سَمُوْمٍ وَّحَمِیْمٍ ۟ۙ
فِیْஇல்سَمُوْمٍஅனல் காற்றுوَّ حَمِیْمٍۙமேலும் கொதிக்கும் நீர்
Fபீ ஸமூமி(ன்)வ் வ ஹமீம்
(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -
وَّظِلٍّ مِّنْ یَّحْمُوْمٍ ۟ۙ
وَّ ظِلٍّமேலும் நிழல்مِّنْஇருந்துیَّحْمُوْمٍۙகரும்புகை
வ ளில்லிம் மி(ன்)ய் யஹ்மூம்
அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
لَّا بَارِدٍ وَّلَا كَرِیْمٍ ۟
لَّاஅல்லبَارِدٍகுளிர்ச்சியானதுوَّ لَاமேலும் அல்லكَرِیْمٍஇதமானது
லா Bபாரிதி(ன்)வ் வலா கரீம்
(அங்கு) குளிர்ச்சியுமில்லை; நலமுமில்லை.
اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُتْرَفِیْنَ ۟ۚۖ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَبْلَமுன்னர்ذٰلِكَஅதற்குمُتْرَفِیْنَۚۖசுகபோகங்களில் திளைத்தவர்களாக
இன்னஹும் கானூ கBப்ல தாலிக முத்ரFபீன்
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
وَكَانُوْا یُصِرُّوْنَ عَلَی الْحِنْثِ الْعَظِیْمِ ۟ۚ
وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்یُصِرُّوْنَபிடிவாதம் பிடிப்பவர்களாகعَلَیமீதுالْحِنْثِபாவத்தின்الْعَظِیْمِۚமகத்தான
வ கானூ யுஸிர்ரூன 'அலல் ஹின்தில் 'அளீம்
ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.
وَكَانُوْا یَقُوْلُوْنَ ۙ۬ اَىِٕذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟ۙ
وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்یَقُوْلُوْنَ ۙ۬கூறிக் கொண்டிருந்தார்கள்اَىِٕذَاஎன்ன? எப்போதுمِتْنَاநாங்கள் மரணித்துوَ كُنَّاமேலும் நாங்கள் ஆகிتُرَابًاமண்ணாகவும்وَّ عِظَامًاஎலும்புகளாகவும்ءَاِنَّاநிச்சயமாக நாங்களாلَمَبْعُوْثُوْنَۙநிச்சயமாக எழுப்பப்படுபவர்களா
வ கானூ யகூலூன அ'இதா மித்னா வ குன்னா துராBப(ன்)வ் வ இளாமன் 'அ-இன்னா லமBப்'ஊதூன்
மேலும், அவர்கள்: “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ ۟
اَوَ اٰبَآؤُنَاஎங்கள் மூதாதையர்களுமாالْاَوَّلُوْنَமுன்னோர்களான
அவ ஆBபா'உனல் அவ்வலூன்
“அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?” என்றும் கூறினர்.)
قُلْ اِنَّ الْاَوَّلِیْنَ وَالْاٰخِرِیْنَ ۟ۙ
قُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகالْاَوَّلِیْنَமுந்தையவர்கள்وَ الْاٰخِرِیْنَۙபிந்தையவர்களும்
குல் இன்னல் அவ்வலீன வல் ஆகிரீன்
(நபியே!) நீர் கூறும்: “(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
لَمَجْمُوْعُوْنَ ۙ۬ اِلٰی مِیْقَاتِ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟
لَمَجْمُوْعُوْنَ ۙ۬நிச்சயமாக ஒன்று திரட்டப்படுவார்கள்اِلٰیநோக்கிمِیْقَاتِகுறிப்பிட்ட நேரத்தைیَوْمٍஒரு நாளின்مَّعْلُوْمٍஅறியப்பட்ட
லமஜ்மூ'ஊன இலா மீகாதி யவ்மிம் மஃலூம்
“குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.
ثُمَّ اِنَّكُمْ اَیُّهَا الضَّآلُّوْنَ الْمُكَذِّبُوْنَ ۟ۙ
ثُمَّபின்னர்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்اَیُّهَاالضَّآلُّوْنَவழிகெட்டவர்களேالْمُكَذِّبُوْنَۙபொய்ப்பிப்பவர்களே
தும்ம இன்னகும் அய்யுஹள் ளால்லூனல் முகத்திBபூன்
அதற்குப் பின்னர்: “பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍ ۟ۙ
لَاٰكِلُوْنَநிச்சயமாக உண்பீர்கள்مِنْஇருந்துشَجَرٍமரம்مِّنْஎனும்زَقُّوْمٍۙஸக்கூம்
ல ஆகிலூன மின் ஷஜ ரிம் மின் Zஜக்கூம்
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ۟ۚ
فَمَالِـُٔوْنَநிரப்புவீர்கள்مِنْهَاஅதைக் கொண்டுالْبُطُوْنَۚவயிறுகளை
Fபமாலி'ஊன மின்ஹல் Bபுதூன்
ஆகவே, “அதைக் கொண்டே வயிறுகளை நிறப்புவீர்கள்.
فَشٰرِبُوْنَ عَلَیْهِ مِنَ الْحَمِیْمِ ۟ۚ
فَشٰرِبُوْنَபின்னர் அருந்துவீர்கள்عَلَیْهِஅதன் மீதுمِنَஇருந்துالْحَمِیْمِۚகொதிக்கும் நீர்
FபஷாரிBபூன 'அலய்ஹி மினல் ஹமீம்
அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
فَشٰرِبُوْنَ شُرْبَ الْهِیْمِ ۟ؕ
فَشٰرِبُوْنَபருகுவீர்கள்شُرْبَபருகுவதைப் போல்الْهِیْمِؕதாகித்த ஒட்டகங்கள்
FபஷாரிBபூன ஷுர்Bபல் ஹீம்
“பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.”
هٰذَا نُزُلُهُمْ یَوْمَ الدِّیْنِ ۟ؕ
هٰذَاஇதுவேنُزُلُهُمْஅவர்களுக்குரிய விருந்துیَوْمَநாளில்الدِّیْنِؕதீர்ப்பு
ஹாதா னுZஜுலுஹும் யவ்மத் தீன்
இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
نَحْنُ خَلَقْنٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُوْنَ ۟
نَحْنُநாமேخَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்فَلَوْ لَاஅவ்வாறிருக்க, ஏன்تُصَدِّقُوْنَநீங்கள் உண்மையென நம்ப மாட்டீர்களா
னஹ்னு கலக்னாகும் Fபலவ் லா துஸத்திகூன்
நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
اَفَرَءَیْتُمْ مَّا تُمْنُوْنَ ۟ؕ
اَفَرَءَیْتُمْநீங்கள் கவனித்தீர்களா?مَّاஎதனைتُمْنُوْنَؕநீங்கள் (விந்துவாக) வெளியாக்குகிறீர்களோ
அFபர'அய்தும் மா தும்னூன்
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗۤ اَمْ نَحْنُ الْخٰلِقُوْنَ ۟
ءَاَنْتُمْநீங்களாتَخْلُقُوْنَهٗۤஅதனைப் படைக்கிறீர்கள்اَمْஅல்லதுنَحْنُநாமாالْخٰلِقُوْنَபடைப்பவர்கள்
'அ-அன்தும் தக்லுகூ னஹூ அம் னஹ்னுல் காலிகூன்
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
نَحْنُ قَدَّرْنَا بَیْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِیْنَ ۟ۙ
نَحْنُநாம்قَدَّرْنَاநிர்ணயித்தோம்بَیْنَكُمُஉங்களிடையேالْمَوْتَமரணத்தைوَ مَاமேலும் இல்லைنَحْنُநாம்بِمَسْبُوْقِیْنَۙமுந்தப்படுபவர்கள்
னஹ்னு கத்தர்னா Bபய்ன குமுல் மவ்த வமா னஹ்னு Bபிமஸ்Bபூகீன்
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
عَلٰۤی اَنْ نُّبَدِّلَ اَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِیْ مَا لَا تَعْلَمُوْنَ ۟
عَلٰۤیமீதுاَنْஎன்றுنُّبَدِّلَநாம் மாற்றுவதற்குاَمْثَالَكُمْஉங்களைப் போன்றவர்களைوَ نُنْشِئَكُمْமேலும் உங்களை நாம் உருவாக்குவதற்குفِیْஇல்مَاஎதைلَاஇல்லைتَعْلَمُوْنَநீங்கள் அறிகிறீர்கள்
அலா அன் னுBபத்தில அம்தாலகும் வ னுன்ஷி'அகும் Fபீ மா லா தஃலமூன்
(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰی فَلَوْلَا تَذَكَّرُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகعَلِمْتُمُநீங்கள் அறிந்துள்ளீர்கள்النَّشْاَةَபடைப்பைالْاُوْلٰیமுதலாவதுفَلَوْ لَاபின் ஏன்تَذَكَّرُوْنَநீங்கள் சிந்தித்துப் பார்க்கக் கூடாது?
வ லகத் 'அலிம்துமுன் னஷ் அதல் ஊலா Fபலவ் லா ததக்கரூன்
முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
اَفَرَءَیْتُمْ مَّا تَحْرُثُوْنَ ۟ؕ
اَفَرَءَیْتُمْநீங்கள் பார்த்தீர்களா?مَّاஎதனைتَحْرُثُوْنَؕநீங்கள் பயிரிடுகிறீர்களோ
அFபர'அய்தும் மா தஹ்ருதூன்
(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤ اَمْ نَحْنُ الزّٰرِعُوْنَ ۟
ءَاَنْتُمْநீங்களாتَزْرَعُوْنَهٗۤஅதனை விளைவிக்கிறீர்கள்اَمْஅல்லதுنَحْنُநாம்الزّٰرِعُوْنَவிளைவிப்பவர்கள்
'அ-அன்தும் தZஜ்ர'ஊனஹூ அம் னஹ்னுZஜ் Zஜாரி'ஊன்
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
لَوْ نَشَآءُ لَجَعَلْنٰهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُوْنَ ۟
لَوْஒருவேளைنَشَآءُநாம் நாடினால்لَجَعَلْنٰهُநிச்சயமாக அதனை நாம் ஆக்கியிருப்போம்حُطَامًاசருகாகفَظَلْتُمْஅப்பொழுது நீங்கள் ஆகிவிடுவீர்கள்تَفَكَّهُوْنَவியப்படைவீர்கள்
லவ் னஷா'உ லஜ'அல் னாஹு ஹுதாமன் Fபளல்தும் தFபக்கஹூன்
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
اِنَّا لَمُغْرَمُوْنَ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்لَمُغْرَمُوْنَۙநஷ்டமடைந்தவர்கள்
இன்னா லமுக்ரமூன்
“நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟
بَلْமாறாகنَحْنُநாங்கள்مَحْرُوْمُوْنَபாக்கியமிழந்தவர்கள்
Bபல் னஹ்னு மஹ்ரூமூன்
“மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்” (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
اَفَرَءَیْتُمُ الْمَآءَ الَّذِیْ تَشْرَبُوْنَ ۟ؕ
اَفَرَءَیْتُمُநீங்கள் கவனித்தீர்களா?الْمَآءَநீரைالَّذِیْஎதனைتَشْرَبُوْنَؕநீங்கள் அருந்துகிறீர்களோ
அFபர'அய்துமுல் மா'அல்லதீ தஷ்ரBபூன்
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
ءَاَنْتُمْ اَنْزَلْتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ ۟
ءَاَنْتُمْநீங்களாاَنْزَلْتُمُوْهُஅதனை இறக்கினீர்கள்مِنَஇருந்துالْمُزْنِமேகத்தில்اَمْஅல்லதுنَحْنُநாம்الْمُنْزِلُوْنَஇறக்குபவர்கள்
'அ-அன்தும் அன்Zஜல்துமூஹு மினல் முZஜ்னி அம் னஹ்னுல் முன்Zஜிலூன்
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ ۟
لَوْநாம்نَشَآءُநாடியிருந்தால்جَعَلْنٰهُஅதனை ஆக்கியிருப்போம்اُجَاجًاஉவர்ப்பானதாகفَلَوْ لَاஏன் நீங்கள்تَشْكُرُوْنَநன்றி செலுத்த மாட்டீர்கள்
லவ் னஷா'உ ஜ'அல்னாஹு உஜாஜன் Fபலவ் லா தஷ்குரூன்
நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
اَفَرَءَیْتُمُ النَّارَ الَّتِیْ تُوْرُوْنَ ۟ؕ
اَفَرَءَیْتُمُநீங்கள் கவனித்தீர்களா?النَّارَநெருப்பைالَّتِیْஎதனைتُوْرُوْنَؕநீங்கள் மூட்டுகிறீர்களோ
அFபர'அய்துமுன் னாரல் லதீ தூரூன்
நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
ءَاَنْتُمْ اَنْشَاْتُمْ شَجَرَتَهَاۤ اَمْ نَحْنُ الْمُنْشِـُٔوْنَ ۟
ءَاَنْتُمْநீங்களாاَنْشَاْتُمْஉருவாக்கினீர்கள்شَجَرَتَهَاۤஅதன் மரத்தைاَمْஅல்லதுنَحْنُநாம்الْمُنْشِـُٔوْنَஉருவாக்குபவர்கள்
'அ-அன்தும் அன்ஷா'தும் ஷஜரதஹா அம் னஹ்னுல் முன்ஷி'ஊன்
அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِیْنَ ۟ۚ
نَحْنُநாமேجَعَلْنٰهَاஅதனை ஆக்கினோம்تَذْكِرَةًஒரு நினைவூட்டலாகوَّ مَتَاعًاமேலும் ஒரு பயனாகவும்لِّلْمُقْوِیْنَۚவழிப்போக்கர்களுக்கு
னஹ்னு ஜ'அல்னாஹா தத்கிர த(ன்)வ் வ மதா'அல் லில்முக்வீன்
நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠
فَسَبِّحْஆகவே துதிப்பீராகبِاسْمِதிருநாமத்தைக் கொண்டுرَبِّكَஉமது இறைவனின்الْعَظِیْمِ۠மகத்தான
FபஸBப்Bபிஹ் Bபிஸ்மி ரBப்Bபிகல் 'அளீம்
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِ ۟ۙ
فَلَاۤஅவ்வாறல்லاُقْسِمُநான் சத்தியம் செய்கிறேன்بِمَوٰقِعِஅமைவிடங்களின் மீதுالنُّجُوْمِۙநட்சத்திரங்களின்
Fபலா உக்ஸிமு Bபிம வாகி'இன்னுஜூம்
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِیْمٌ ۟ۙ
وَ اِنَّهٗநிச்சயமாக அதுلَقَسَمٌஒரு சத்தியமாகும்لَّوْநீங்கள்تَعْلَمُوْنَஅறிவீர்களானால்عَظِیْمٌۙமகத்தானதாகும்
வ இன்னஹூ லகஸமுல் லவ்தஃலமூன'அளீம்
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.
اِنَّهٗ لَقُرْاٰنٌ كَرِیْمٌ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக இதுلَقُرْاٰنٌநிச்சயமாக குர்ஆன்كَرِیْمٌۙகண்ணியமிக்கது
இன்னஹூ ல குர்'ஆனுன் கரீம்
நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
فِیْ كِتٰبٍ مَّكْنُوْنٍ ۟ۙ
فِیْஇல்كِتٰبٍஒரு வேதத்தில்مَّكْنُوْنٍۙபாதுகாக்கப்பட்ட
Fபீ கிதாBபிம் மக்னூன்
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
لَّا یَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَ ۟ؕ
لَّاஇல்லைیَمَسُّهٗۤஅதனைத் தீண்டுவார்கள்اِلَّاதவிரالْمُطَهَّرُوْنَؕதூய்மையாக்கப்பட்டவர்கள்
லா யமஸ்ஸுஹூ இல்லல் முதஹ்ஹரூன்
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
تَنْزِیْلٌஇறக்கியருளப்பட்டதாகும்مِّنْஇருந்துرَّبِّஇறைவன்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
தன்Zஜீலும் மிர் ரBப்Bபில்'ஆலமீன்
அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
اَفَبِهٰذَا الْحَدِیْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَ ۟ۙ
اَفَبِهٰذَاஇந்தالْحَدِیْثِசெய்தியையாاَنْتُمْநீங்கள்مُّدْهِنُوْنَۙஅலட்சியப்படுத்துகிறீர்கள்
அFபBபிஹாதல் ஹதீதி அன்தும் முத்ஹினூன்
அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
وَتَجْعَلُوْنَ رِزْقَكُمْ اَنَّكُمْ تُكَذِّبُوْنَ ۟
وَ تَجْعَلُوْنَமேலும் நீங்கள் ஆக்குகிறீர்கள்رِزْقَكُمْஉங்கள் வாழ்வாதாரத்தைاَنَّكُمْநிச்சயமாக நீங்கள்تُكَذِّبُوْنَபொய்ப்பிக்கிறீர்கள்
வ தஜ்'அலூன ரிZஜ்ககும் அன்னகும் துகத்திBபூன்
நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُلْقُوْمَ ۟ۙ
فَلَوْ لَاۤஅப்படியிருக்கاِذَاபோதுبَلَغَتِஅடையும்الْحُلْقُوْمَۙதொண்டைக்குழியை
Fபலவ் லா இதா Bபலகதில் ஹுல்கூம்
மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
وَاَنْتُمْ حِیْنَىِٕذٍ تَنْظُرُوْنَ ۟ۙ
وَ اَنْتُمْமேலும் நீங்கள்حِیْنَىِٕذٍஅந்நேரத்தில்تَنْظُرُوْنَۙபார்த்துக் கொண்டிருப்பீர்கள்
வ அன்தும் ஹீன'இதின் தன்ளுரூன்
அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
وَنَحْنُ اَقْرَبُ اِلَیْهِ مِنْكُمْ وَلٰكِنْ لَّا تُبْصِرُوْنَ ۟
وَ نَحْنُமேலும் நாம்اَقْرَبُமிக நெருக்கமானவர்கள்اِلَیْهِஅவனிடம்مِنْكُمْஉங்களை விடوَ لٰكِنْஆனால்لَّا(அதை) நீங்கள்تُبْصِرُوْنَபார்ப்பதில்லை
வ னஹ்னு அக்ரBபு இலய்ஹி மின்கும் வ லாகில் லா துBப்ஸிரூன்
ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ غَیْرَ مَدِیْنِیْنَ ۟ۙ
فَلَوْ لَاۤஅப்படியிருக்க ஏன்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்غَیْرَஅல்லாதவர்களாகمَدِیْنِیْنَۙகூலி கொடுக்கப்படுபவர்களாக
Fபலவ் லா இன் குன்தும் கய்ர மதீனீன்
எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
تَرْجِعُوْنَهَاۤஅதனைத் திருப்புவீர்களாاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
தர்ஜி'ஊனஹா இன் குன்தும் ஸாதிகீன்
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ
فَاَمَّاۤஎனவேاِنْஒருவேளைكَانَஅவர் இருந்தால்مِنَஒருவராகالْمُقَرَّبِیْنَۙநெருக்கமாக்கப்பட்டவர்களில்
Fப அம்மா இன் கான மினல் முகர்ரBபீன்
(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
فَرَوْحٌ وَّرَیْحَانٌ ۙ۬ وَّجَنَّتُ نَعِیْمٍ ۟
فَرَوْحٌஆறுதலும்وَّ رَیْحَانٌ ۙ۬நறுமணமும்وَّ جَنَّتُசுவனமும்نَعِیْمٍஇன்பம் நிறைந்த
Fபரவ்ஹு(ன்)வ் வ ரய்ஹா னு(ன்)வ் வ ஜன்னது ன'ஈம்
அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
وَاَمَّاۤ اِنْ كَانَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟ۙ
وَ اَمَّاۤமேலும்اِنْஎனில்كَانَஅவர் இருந்தால்مِنْஒருவராகاَصْحٰبِதோழர்களில்الْیَمِیْنِۙவலதுபுறத்து
வ அம்மா இன் கான மின் அஸ் ஹாBபில் யமீன்
அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟ؕ
فَسَلٰمٌசாந்தி உண்டாகட்டும்لَّكَஉமக்குمِنْஇருந்துاَصْحٰبِதோழர்கள்الْیَمِیْنِؕவலதுபுறத்து
Fபஸலாமுல் லக மின் அஸ் ஹாBபில் யமீன்
“வலப்புறத்தோரே! உங்களுக்கு “ஸலாம்” உண்டாவதாக” (என்று கூறப்படும்).
وَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِیْنَ الضَّآلِّیْنَ ۟ۙ
وَ اَمَّاۤஇன்னும் ஆனால்اِنْஎனில்كَانَஅவர் இருந்தால்مِنَசேர்ந்தவராகالْمُكَذِّبِیْنَபொய்ப்பிப்பவர்களில்الضَّآلِّیْنَۙவழிகேடர்களில்
வ அம்மா இன் கான மினல் முகத்திBபீனள் ளால்லீன்
ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்
فَنُزُلٌ مِّنْ حَمِیْمٍ ۟ۙ
فَنُزُلٌஆகவே விருந்துمِّنْஆனحَمِیْمٍۙகொதிக்கும் நீர்
FபனுZஜுலும் மின் ஹமீம்
கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
وَّتَصْلِیَةُ جَحِیْمٍ ۟
وَّ تَصْلِیَةُமேலும் எரிதலும்جَحِیْمٍநரக நெருப்பில்
வ தஸ்லியது ஜஹீம்
நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الْیَقِیْنِ ۟ۚ
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَهُوَஅதுவேحَقُّஉண்மைالْیَقِیْنِۚஉறுதி
இன்ன ஹாத லஹுவ ஹக்குல் யகீன்
நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠
فَسَبِّحْஎனவே துதிப்பீராகبِاسْمِதிருநாமத்தைக் கொண்டுرَبِّكَஉமது இறைவனின்الْعَظِیْمِ۠மகத்தான
FபஸBப்Bபிஹ் Bபிஸ்மி ரBப்Bபிகல் 'அளீம்
எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.