அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ; அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்” என்று (கூறினார்).
اِنَّநிச்சயமாகالسَّاعَةَஇறுதி வேளைاٰتِیَةٌவரக்கூடியதுاَكَادُநான் நாடுகிறேன்اُخْفِیْهَاஅதனை மறைத்து வைக்கلِتُجْزٰیகூலி வழங்கப்படுவதற்காகكُلُّஒவ்வொருنَفْسٍۭஆத்மாவிற்கும்بِمَاஎதைக் கொண்டுتَسْعٰیஅது முயற்சி செய்கிறதோ
“ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.
(அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.
اَنِஎன்றுاقْذِفِیْهِஅவனை வைப்பாயாகفِیஇல்التَّابُوْتِபெட்டிفَاقْذِفِیْهِபின்னர் அதனைப் போடுவாயாகفِیஇல்الْیَمِّநதிفَلْیُلْقِهِபின்னர் அதனை ஒதுக்கட்டும்الْیَمُّநதிبِالسَّاحِلِகரையில்یَاْخُذْهُஅவனை எடுத்துக்கொள்வான்عَدُوٌّஓர் எதிரிلِّیْஎனக்குوَ عَدُوٌّமேலும் ஓர் எதிரிلَّهٗ ؕஅவனுக்குوَ اَلْقَیْتُமேலும் நான் பொழிந்தேன்عَلَیْكَஉன் மீதுمَحَبَّةًஅன்பைمِّنِّیْ ۚ۬என்னிடமிருந்துوَ لِتُصْنَعَமேலும் நீ வளர்க்கப்படுவதற்காகعَلٰیமுன்عَیْنِیْۘஎன் கண்
அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும்; அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்). மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.
(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டாள்; ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும்; அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம்; பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.
فَقُوْلَاஆகவே நீங்கள் இருவரும் கூறுங்கள்لَهٗஅவனிடம்قَوْلًاஒரு சொல்லைلَّیِّنًاமென்மையானلَّعَلَّهٗஒருவேளை அவன்یَتَذَكَّرُநல்லுணர்வு பெறலாம்اَوْஅல்லதுیَخْشٰیஅஞ்சலாம்
“எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.
(அதற்கு அல்லாஹ்) “நீங்களிருவரும் அஞ்ச வேண்டாம்; நிச்சயமாக நான் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் உங்களிருவருடனும் இருக்கிறேன்” என்று கூறினான்.
“ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: “நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள்; பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு; மேலும் அவர்களை வேதனை படுத்தாதே; திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக” என்று சொல்லுங்கள்” (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்).
“எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து, புறக்கணிக்கிறானோ அவன் மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது” (என்று நீங்கள் இருவரும் அவனுக்குக் கூறுங்கள்).
“(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).
இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
فَلَنَاْتِیَنَّكَஎனவே நிச்சயமாக நாம் உன்னிடம் கொண்டு வருவோம்بِسِحْرٍஒரு சூனியத்தைمِّثْلِهٖஅதைப் போன்றفَاجْعَلْஎனவே ஏற்படுத்துவாயாகبَیْنَنَاநமக்கிடையேوَ بَیْنَكَஉனக்கிடையேயும்مَوْعِدًاஒரு தவணையைلَّاமாட்டோம்نُخْلِفُهٗஅதை மீறنَحْنُநாமும்وَ لَاۤமேலும் இல்லைاَنْتَநீயும்مَكَانًاஓரிடத்தைسُوًیசமமான
Fபலனாதியன்னக Bபிஸிஹ்ரிம் மித்லிஹீ Fபஜ்'அல் Bபய்னனா வ Bபய்னக மவ்'இதல் லா னுக்லிFபுஹூ னஹ்னு வ லா அன்த மகானன் ஸுவா
“அவ்வாறாயின் இதைப் போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குத் திடனாகச் செய்து காண்பிப்போம்; ஆகவே, நாங்களோ அல்லது நீரோ மாற்றம் செய்ய முடியாதபடி நமக்கும் உமக்குமிடையே ஒரு வார்த்தைப் பாட்டை (எல்லோரும் வந்து காணக் கூடிய) ஒரு சரியான தலத்தில் ஏற்படுத்தும் (என்றான்).
قَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குمُّوْسٰیமூஸாوَیْلَكُمْஉங்களுக்குக் கேடுதான்لَاவேண்டாம்تَفْتَرُوْاஇட்டுக்கட்டعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைفَیُسْحِتَكُمْஅதனால் அவன் உங்களை அழித்துவிடுவான்بِعَذَابٍ ۚஒரு வேதனையைக் கொண்டுوَ قَدْமேலும் நிச்சயமாகخَابَநஷ்டமடைந்தார்مَنِஎவர்افْتَرٰیஇட்டுக்கட்டினாரோ
கால லஹும் மூஸா வய்லகும் லா தFப்தரூ 'அலல் லாஹி கதிBபன் Fப யுஸ் ஹிதகும் Bபி 'அதாBப், வ கத் காBப மனிFப் தரா
(அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்” என்று கூறினார்.
فَتَنَازَعُوْۤاஎனவே அவர்கள் விவாதித்துக் கொண்டனர்اَمْرَهُمْதங்கள் காரியத்தைبَیْنَهُمْதங்களுக்குள்وَ اَسَرُّواமேலும் அவர்கள் மறைத்துக் கொண்டனர்النَّجْوٰیஇரகசிய ஆலோசனையை
FபதனாZஜ'ஊ அம்ரஹும் Bபய்னஹும் வ அஸர்ருன் னஜ்வா
சூனியக்காரர்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்து(த் தங்களிடையே) விவாதித்து, (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர்.
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنْநிச்சயமாகهٰذٰىنِஇவ்விருவரும்لَسٰحِرٰنِஇரு சூனியக்காரர்களேیُرِیْدٰنِநாடுகிறார்கள்اَنْஎன்றுیُّخْرِجٰكُمْஉங்களை வெளியேற்றمِّنْஇருந்துاَرْضِكُمْஉங்கள் நாட்டில்بِسِحْرِهِمَاதங்கள் சூனியத்தால்وَ یَذْهَبَاமேலும் போக்கிவிடبِطَرِیْقَتِكُمُஉங்கள் வழிமுறையைالْمُثْلٰیமிகச் சிறந்த
காலூ இன் ஹாதானி லஸாஹிரானி யுரீதானி அய் யுக்ரிஜாகும் மின் அர்ளிகும் Bபிஸிஹ்ரிஹிமா வ யத்ஹBபா Bபிதரீகதிகுமுல் முத்லா
(சூனியக்காரர்கள் மக்களை நோக்கி:) “நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தம்மிருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்கப்) பாதையைப் போக்கிவிடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்.
“ஆகவே உங்கள் திட்டத்தை ஒரு சேரத் தீர்மானித்துக் கொண்டு அணி அணியாக வாருங்கள்; இன்றைய தினம் எவருடைய (கை) மேலோங்குகிறதோ, நிச்சயமாக அவர்தாம் வெற்றியடைவார்” (என்றுங் கூறினார்).
قَالَஅவர் கூறினார்بَلْமாறாகاَلْقُوْا ۚநீங்கள் எறியுங்கள்فَاِذَاஅப்பொழுதுحِبَالُهُمْஅவர்களின் கயிறுகள்وَ عِصِیُّهُمْமற்றும் அவர்களின் தடிகளும்یُخَیَّلُதோற்றமளித்ததுاِلَیْهِஅவருக்குمِنْகாரணமாகسِحْرِهِمْஅவர்களின் சூனியத்தின்اَنَّهَاஅவைتَسْعٰیஓடுகின்றன
கால Bபல் அல்கூ Fப இதா ஹிBபாலுஹும் வ 'இஸிய்யுஹும் யுகய்யலு இலய்ஹி மின் ஸிஹ்ரிஹிம் அன்னஹா தஸ்'ஆ
அதற்கவர்: “அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.
“இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்).
(மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ(அவன்) கூறினான்اٰمَنْتُمْநீங்கள் நம்பிக்கை கொண்டீர்களாلَهٗஅவருக்குقَبْلَமுன்னதாகاَنْநான்اٰذَنَஅனுமதி அளிப்பதற்குلَكُمْ ؕஉங்களுக்குاِنَّهٗநிச்சயமாக அவன்لَكَبِیْرُكُمُநிச்சயமாக உங்கள் தலைவன்الَّذِیْஎவன்عَلَّمَكُمُஉங்களுக்குக் கற்றுக்கொடுத்தானோالسِّحْرَ ۚசூனியத்தைفَلَاُقَطِّعَنَّஎனவே நான் நிச்சயமாக வெட்டுவேன்اَیْدِیَكُمْஉங்கள் கைகளைوَ اَرْجُلَكُمْஉங்கள் கால்களையும்مِّنْஇருந்துخِلَافٍமாறுபட்ட பக்கங்களில்وَّ لَاُصَلِّبَنَّكُمْமேலும் நான் உங்களை நிச்சயமாகச் சிலுவையில் அறைவேன்فِیْமீதுجُذُوْعِதண்டுகளின்النَّخْلِ ؗபேரீச்ச மரத்தின்وَ لَتَعْلَمُنَّமேலும் நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்வீர்கள்اَیُّنَاۤநம்மில் யார்اَشَدُّமிகக் கடுமையானவர்عَذَابًاவேதனையில்وَّ اَبْقٰیமேலும் மிக நிலையானவர்
“நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார், அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.
(மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) “எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்; ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்துகொள்; நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்” என்று கூறினார்.
“எங்களின் தவறுகளையும், எங்களை நீ கட்டாயப் படுத்தியதினால் (நாங்கள் செய்ய நேர்ந்த) சூனியத்தையும், எங்களுக்கு மன்னிப்பதற்காக எங்கள் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும், அல்லாஹ் தான் மிக்க மேலானவனாகவும், (என்றும்) நிலைத்திருப்பவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்கள்).
وَ مَنْமேலும் எவர்یَّاْتِهٖஅவனிடம் வருவாரோمُؤْمِنًاநம்பிக்கையாளராகقَدْநிச்சயமாகعَمِلَசெய்தவராகالصّٰلِحٰتِநற்செயல்களைفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمُஅவர்களுக்குالدَّرَجٰتُபதவிகள்الْعُلٰیۙமிக உயர்ந்த
(அத்தகையவர்க்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர்; இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும்.
இன்னும்: “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!” என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.
“இஸ்ராயீலின் சந்ததியினரே! நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம்; மேலும், தூர்(ஸினாய் மலையின்) வலப்பக்கத்தில் நாம் (தவ்ராத் வேதத்தை அருள்வதாக) உங்களுக்கு வாக்குறுதியளித்தோம்; இன்னும் “மன்னு ஸல்வாவை” (உணவாக) உங்கள் மீது நாம் இறக்கி வைத்தோம்.
“நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்; (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான்.
“எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்” (என்று கூறினோம்).
قَالَஅவர் கூறினார்هُمْஅவர்கள்اُولَآءِஇதோعَلٰۤیமீதேاَثَرِیْஎன் அடிச்சுவடுகளின்وَ عَجِلْتُமேலும் நான் விரைந்தேன்اِلَیْكَஉன்னிடமேرَبِّஎன் இறைவாلِتَرْضٰیநீ திருப்தியடைவதற்காக
கால ஹும் உலா'இ 'அலா அதரீ வ 'அஜில்து இலய்க ரBப்Bபி லிதர்ளா
(அதற்கவர்) “அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்” என்று கூறினார்.
قَالَஅவன் கூறினான்فَاِنَّاஆகவே நிச்சயமாக நாம்قَدْதிண்ணமாகفَتَنَّاசோதித்தோம்قَوْمَكَஉமது சமுதாயத்தைمِنْۢஇருந்துبَعْدِكَஉமக்குப் பின்னர்وَ اَضَلَّهُمُமேலும் அவர்களை வழிகெடுத்தான்السَّامِرِیُّஸாமிரி
ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).
“உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை; ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்” என்று அவர்கள் கூறினார்கள்.
فَاَخْرَجَபின்னர் அவன் வெளிப்படுத்தினான்لَهُمْஅவர்களுக்குعِجْلًاஒரு கன்றுக்குட்டியைجَسَدًاஒரு உடலாகلَّهٗஅதற்குخُوَارٌகத்தும் சத்தம்فَقَالُوْاபின்னர் அவர்கள் கூறினார்கள்هٰذَاۤஇதுவேاِلٰهُكُمْஉங்கள் இறைவன்وَ اِلٰهُமேலும் இறைவன்مُوْسٰی ۬மூஸாவின்فَنَسِیَؕஎனவே அவர் மறந்துவிட்டார்
பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.
வ லகத் கால லஹும் ஹாரூனு மின் கBப்லு யா கவ்மி இன்னமா Fபுதின்தும் Bபிஹீ வ இன்ன ரBப்Bபகுமுர் ரஹ்மானு Fபத்தBபி'ஊனீ வ அதீ'ஊ அம்ரீ
இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் “அர்ரஹ்மானே” ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.
قَالَஅவர் கூறினார்یٰهٰرُوْنُஹாரூனேمَاஎதுمَنَعَكَஉம்மைத் தடுத்ததுاِذْபோதுرَاَیْتَهُمْஅவர்களை நீர் கண்டضَلُّوْۤاۙவழிகெட்டுப் போனதை
கால யா ஹாரூனு மா மன 'அக இத் ர அய்தஹும் ளல்லூ
(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
(இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.
قَالَஅவன் கூறினான்بَصُرْتُநான் பார்த்தேன்بِمَاஎதைلَمْஇல்லைیَبْصُرُوْاஅவர்கள் பார்க்கبِهٖஅதைفَقَبَضْتُஎனவே நான் எடுத்தேன்قَبْضَةًஒரு பிடிمِّنْஇருந்துاَثَرِசுவடுالرَّسُوْلِதூதருடையفَنَبَذْتُهَاஎனவே அதை நான் எறிந்தேன்وَ كَذٰلِكَமேலும் இவ்வாறேسَوَّلَتْதூண்டியதுلِیْஎனக்குنَفْسِیْஎன் மனம்
கால Bபஸுர்து Bபிமா லம் யBப்ஸுரூ Bபிஹீ FபகBபள்து கBப்ளதம் மின் அதரிர் ரஸூலி FபனBபத்துஹா வ கதாலிக ஸவ்வலத் லீ னFப்ஸீ
“அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.
قَالَ(அவர்) கூறினார்فَاذْهَبْஎனவே நீர் போفَاِنَّஆகவே நிச்சயமாகلَكَஉமக்குفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கையில்اَنْஎன்றுتَقُوْلَநீர் சொல்வதுلَاஇல்லைمِسَاسَ ۪தீண்டுதல்وَ اِنَّமேலும் நிச்சயமாகلَكَஉமக்குمَوْعِدًاஒரு வாக்களிக்கப்பட்ட நேரம்لَّنْஒருபோதும்تُخْلَفَهٗ ۚஅது உமக்கு மீறப்படாதுوَ انْظُرْமேலும் நீர் பாரும்اِلٰۤیபக்கம்اِلٰهِكَஉம்முடைய தெய்வத்தின்الَّذِیْஎத்தகையதென்றால்ظَلْتَநீர் இருந்தீரேعَلَیْهِஅதன் மேல்عَاكِفًا ؕதரிபட்டவராகلَنُحَرِّقَنَّهٗநிச்சயமாக நாம் அதனை எரித்துவிடுவோம்ثُمَّபிறகுلَنَنْسِفَنَّهٗநிச்சயமாக நாம் அதனைத் தூற்றிவிடுவோம்فِیஇல்الْیَمِّகடலில்نَسْفًاமுற்றாகத் தூற்றுதல்
“நீ இங்கிருந்து போய் விடு; நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) “தீண்டாதீர்கள்” என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு; அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்: நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த “நாயனைப்” பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்” என்றார்.
(நபியே!) இவ்வாறே முன் சென்று போனவர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; மேலும் திட்டமாக நம்மிடமிருந்து நினைவூட்டும் நல்லுபதேசத்தை (இத்திருக் குர்ஆனை) நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம்.
یَّوْمَநாளில்یُنْفَخُஊதப்படும்فِیஇல்الصُّوْرِஎக்காளம்وَ نَحْشُرُமேலும் நாம் ஒன்று திரட்டுவோம்الْمُجْرِمِیْنَகுற்றவாளிகளைیَوْمَىِٕذٍஅந்நாளில்زُرْقًاۚۖநீல நிறக் கண்களுடையவர்களாக
نَحْنُநாம்اَعْلَمُநன்கு அறிவோம்بِمَاஎதைیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களோاِذْஅப்போதுیَقُوْلُகூறுவான்اَمْثَلُهُمْஅவர்களில் மிகச் சிறந்தவன்طَرِیْقَةًவழியால்اِنْஇல்லைلَّبِثْتُمْநீங்கள் தங்கியிருந்தீர்கள்اِلَّاதவிரیَوْمًا۠ஒரு நாள்
وَ یَسْـَٔلُوْنَكَமேலும் அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْجِبَالِமலைகளைப்فَقُلْஎனவே நீர் கூறுவீராகیَنْسِفُهَاஅவற்றைத் தூளாக்கிவிடுவான்رَبِّیْஎன் இறைவன்نَسْفًاۙதவிடுபொடியாக
அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச் சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.
یَوْمَىِٕذٍஅந்நாளில்لَّاஇல்லைتَنْفَعُபயனளிக்கும்الشَّفَاعَةُபரிந்துரைاِلَّاதவிரمَنْஎவருக்குاَذِنَஅனுமதியளித்தானோلَهُஅவருக்குالرَّحْمٰنُஅளவற்ற அருளாளன்وَ رَضِیَமேலும் அவன் பொருந்திக்கொண்டானோلَهٗஅவருடையقَوْلًاசொல்லை
அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.
எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான- நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்துவிடுமென்றோ பயப்படமாட்டார்கள்.
மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
وَ لَقَدْமேலும் நிச்சயமாகعَهِدْنَاۤநாம் உடன்படிக்கை செய்தோம்اِلٰۤیஇடம்اٰدَمَஆதம்مِنْஇதற்குقَبْلُமுன்னர்فَنَسِیَஎனவே அவர் மறந்துவிட்டார்وَ لَمْமேலும் இல்லைنَجِدْநாம் காணلَهٗஅவரிடம்عَزْمًا۠உறுதியை
முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை.
“நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.
فَقُلْنَاஎனவே நாம் கூறினோம்یٰۤاٰدَمُஆதமேاِنَّநிச்சயமாகهٰذَاஇவன்عَدُوٌّபகைவன்لَّكَஉமக்கும்وَ لِزَوْجِكَஉமது மனைவிக்கும்فَلَاஎனவே வேண்டாம்یُخْرِجَنَّكُمَاஉங்கள் இருவரையும் அவன் வெளியேற்றிவிடمِنَஇருந்துالْجَنَّةِசுவனத்தில்فَتَشْقٰیபிறகு நீர் சிரமப்படுவீர்
அப்பொழுது “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.
فَوَسْوَسَபிறகு ஊசலாட்டத்தை உண்டாக்கினான்اِلَیْهِஅவனிடம்الشَّیْطٰنُஷைத்தான்قَالَஅவன் கூறினான்یٰۤاٰدَمُஆதமே!هَلْSlஎன்ன?اَدُلُّكَஉமக்கு நான் வழிகாட்டவாعَلٰیபற்றிشَجَرَةِமரத்தைالْخُلْدِநிலையானوَ مُلْكٍமேலும் ஓர் ஆட்சியைلَّاஇல்லைیَبْلٰیஅழியும்
Fப வஸ்வஸ இலய்ஹிஷ் ஷய்தானு கால யா ஆதமு ஹல் அதுல்லுக 'அலா ஷஜரதில் குல்தி வ முல்கில் லா யBப்லா
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.
“இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவே யிருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.
وَ مَنْமேலும் எவர்اَعْرَضَபுறக்கணிக்கிறாரோعَنْவிட்டுذِكْرِیْஎன் நினைவைفَاِنَّஆகவே நிச்சயமாகلَهٗஅவருக்குمَعِیْشَةًவாழ்க்கைضَنْكًاநெருக்கடியானوَّ نَحْشُرُهٗமேலும் நாம் அவரை எழுப்புவோம்یَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைاَعْمٰیகுருடராக
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
قَالَ(அவன்) கூறுவான்كَذٰلِكَஅப்படியேاَتَتْكَஉன்னிடம் வந்தனاٰیٰتُنَاநம்முடைய வசனங்கள்فَنَسِیْتَهَا ۚஅவற்றை நீ மறந்துவிட்டாய்وَ كَذٰلِكَஅவ்வாறேالْیَوْمَஇன்றைய தினம்تُنْسٰیநீ மறக்கப்படுகிறாய்
கால கதாலிக அதத்க ஆயாதுனா Fபனஸீதஹா வ கதாலிகல் யவ்ம துன்ஸா
(அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான்.
ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.
இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.
ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக; இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக; மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக; இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தி பெறலாம்.
இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவை யெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும்.
(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்لَوْ لَاஏன் இல்லைیَاْتِیْنَاஅவர் நம்மிடம் கொண்டு வரبِاٰیَةٍஓர் அத்தாட்சியைمِّنْஇருந்துرَّبِّهٖ ؕஅவரது இறைவனிடம்اَوَ لَمْமேலும் இல்லையாتَاْتِهِمْஅவர்களுக்கு வரبَیِّنَةُதெளிவான சான்றுمَاஎதுفِیஇல்الصُّحُفِவேதங்கள்الْاُوْلٰیமுந்தைய
வ காலூ லவ் லா ய'தீனா Bபி ஆயதின் மிர் ரBப்Bபிஹ்; அவ லம் த'திஹிம் Bபய்யினது மா Fபிஸ் ஸுஹுFபில் ஊலா
“தம் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை ஏன் அவர் நம்மிடம் கொண்டு வரவில்லை?” என்று (நிராகரிப்போர்) கேட்கின்றனர்; முந்தைய வேதங்களில் உள்ள தெளிவான அத்தாட்சிகள் அவர்களுக்கு வரவில்லையா?
வ லவ் அன்னா அஹ்லக்னாஹும் Bபி 'அதாBபின் மின் கBப்லிஹீ லகாலூ ரBப்Bபனா லவ் லா அர்ஸல்த இலய்னா ரஸூலன் Fபனத்தBபி'அ ஆயாதிக மின் கBப்லி அன் னதில்ல வ னக்Zஜா
இன்னும் (நம் தூதர்) வருவதற்கு முன், நாம் இவர்களை வேதனை செய்து அழித்திருந்தால், அவர்கள், “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? அவ்வாறாயின் நாங்கள் சிறுமைப்படுவதற்கும், கேவலப்படுவதற்கும் முன் உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே” என்று கூறுவார்கள்.
قُلْகூறுவீராகكُلٌّஒவ்வொருவரும்مُّتَرَبِّصٌஎதிர்பார்த்திருக்கின்றனர்فَتَرَبَّصُوْا ۚஆகவே எதிர்பாருங்கள்فَسَتَعْلَمُوْنَவிரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்مَنْயார்اَصْحٰبُஉரியவர்கள்الصِّرَاطِபாதையின்السَّوِیِّநேரானوَ مَنِமேலும் யார்اهْتَدٰی۠நேர்வழி பெற்றார்
(நபியே! “இறுதி நாளை) அனைவரும் எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள், நேரான வழியை உடையவர் யார்? நேர் வழி அடைந்து விட்டவர்கள் யார்? என்பதையும் திடமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று நீர் கூறுவீராக.