72. ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்)

மக்கீ, வசனங்கள்: 28

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلْ اُوْحِیَ اِلَیَّ اَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوْۤا اِنَّا سَمِعْنَا قُرْاٰنًا عَجَبًا ۟ۙ
قُلْகூறுவீராகاُوْحِیَஅறிவிக்கப்பட்டதுاِلَیَّஎனக்குاَنَّهُநிச்சயமாகاسْتَمَعَசெவிமடுத்தனர்نَفَرٌஒரு குழுவினர்مِّنَஇருந்துالْجِنِّஜின்கள்فَقَالُوْۤاஎனவே அவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்سَمِعْنَاசெவிமடுத்தோம்قُرْاٰنًاஒரு குர்ஆனைعَجَبًاۙஆச்சரியமான
குல் ஊஹிய இலய்ய அன்ன்ன ஹுஸ்தம'அ னFபரும் மினல் ஜின்னி Fபகாலூ இன்னா ஸமிஃனா குர்'ஆனன் அஜBபா
நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்:) “நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்” என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.
یَّهْدِیْۤ اِلَی الرُّشْدِ فَاٰمَنَّا بِهٖ ؕ وَلَنْ نُّشْرِكَ بِرَبِّنَاۤ اَحَدًا ۟ۙ
یَّهْدِیْۤவழிகாட்டுகிறதுاِلَیபால்الرُّشْدِநேர்வழியின்فَاٰمَنَّاஎனவே நாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِهٖ ؕஅதில்وَ لَنْஇன்னும் ஒருபோதும்نُّشْرِكَஇணைவைக்க மாட்டோம்بِرَبِّنَاۤஎங்கள் இறைவனுக்குاَحَدًاۙஒருவரையும்
யஹ்தீ இலர் ருஷ்தி Fப ஆமன்னா Bபிஹீ வ லன் னுஷ்ரிக Bபி ரBப்Bபினா 'அஹதா
“அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது; ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்” (என்று அந்த ஜின் கூறலாயிற்று).
وَّاَنَّهٗ تَعٰلٰی جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا ۟ۙ
وَّ اَنَّهٗமேலும் நிச்சயமாக அவன்تَعٰلٰیமிக உயர்ந்ததுجَدُّமகத்துவம்رَبِّنَاஎங்கள் இறைவனின்مَاஇல்லைاتَّخَذَஅவன் ஆக்கிக் கொண்டான்صَاحِبَةًமனைவியைوَّ لَاஇன்னும் இல்லைوَلَدًاۙபிள்ளையை
வ அன்னஹூ த'ஆலா ஜத்து ரBப்Bபினா மத்'தகத ஸாஹிBபத(ன்)வ் வலா வலதா
“மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது; அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.
وَّاَنَّهٗ كَانَ یَقُوْلُ سَفِیْهُنَا عَلَی اللّٰهِ شَطَطًا ۟ۙ
وَّ اَنَّهٗமேலும் நிச்சயமாகكَانَஇருந்தான்یَقُوْلُகூறுபவனாகسَفِیْهُنَاஎங்களிலுள்ள அறிவிலிعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்شَطَطًاۙவரம்பு மீறிய வார்த்தைகளை
வ அன்னஹூ கான யகூலு ஸFபீஹுனா 'அல் அல்லஹி ஷததா
“ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ تَقُوْلَ الْاِنْسُ وَالْجِنُّ عَلَی اللّٰهِ كَذِبًا ۟ۙ
وَّ اَنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்ظَنَنَّاۤஎண்ணினோம்اَنْஎன்றுلَّنْஒருபோதும்تَقُوْلَகூறமாட்டார்கள்الْاِنْسُமனிதர்களும்وَ الْجِنُّமற்றும் ஜின்களும்عَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاۙபொய்யை
வ அன்னா ளனன்னா அல் லன் தகூலல் இன்ஸு வல் ஜின்னு 'அல் அல்லாஹி கதிBபா
மேலும் “மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்” என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.
وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ یَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًا ۟ۙ
وَّ اَنَّهٗமேலும் நிச்சயமாகكَانَஇருந்தார்கள்رِجَالٌசில ஆண்கள்مِّنَஇருந்துالْاِنْسِமனிதர்களில்یَعُوْذُوْنَபாதுகாப்புத் தேடினார்கள்بِرِجَالٍசில ஆண்களிடம்مِّنَஇருந்துالْجِنِّஜின்களில்فَزَادُوْهُمْஅதனால் அவர்களுக்கு அதிகரித்தனர்رَهَقًاۙகர்வத்தை
வ அன்னஹூ கான ரிஜாலுன் மினல் இன்ஸி ய'ஊதூன Bபி ரிஜாலின் மினல் ஜின்னி Fப Zஜாதூஹும் ரஹகா
“ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர்; இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.
وَّاَنَّهُمْ ظَنُّوْا كَمَا ظَنَنْتُمْ اَنْ لَّنْ یَّبْعَثَ اللّٰهُ اَحَدًا ۟ۙ
وَّ اَنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்ظَنُّوْاஎண்ணினார்கள்كَمَاஎதைப்போலظَنَنْتُمْநீங்கள் எண்ணினீர்களோاَنْஎன்றுلَّنْஒருபோதும்یَّبْعَثَஎழுப்பமாட்டான்اللّٰهُஅல்லாஹ்اَحَدًاۙஎவரையும்
வ அன்னஹும் ளன்னூ கமா ளனன்தும் அல் ல(ன்)ய் யBப்'அதல் லாஹு 'அஹதா
“இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.
وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِیْدًا وَّشُهُبًا ۟ۙ
وَّ اَنَّاமேலும் நிச்சயமாக நாம்لَمَسْنَاதொட்டுப் பார்த்தோம்السَّمَآءَவானத்தைفَوَجَدْنٰهَاஅப்போது அதனை நாம் கண்டோம்مُلِئَتْநிரப்பப்பட்டிருப்பதாகحَرَسًاகாவலர்களால்شَدِیْدًاகடுமையானوَّ شُهُبًاۙமற்றும் தீப்பந்தங்களால்
வ அன்னா லமஸ்னஸ் ஸமா'அ Fப வஜத்னாஹா முலி'அத் ஹரஸன் ஷதீத(ன்)வ் வ ஷுஹுBபா
“நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.
وَّاَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ؕ فَمَنْ یَّسْتَمِعِ الْاٰنَ یَجِدْ لَهٗ شِهَابًا رَّصَدًا ۟ۙ
وَّ اَنَّاமேலும் நாங்கள்كُنَّاஇருந்தோம்نَقْعُدُஅமர்வோம்مِنْهَاஅதில்مَقَاعِدَஇடங்களில்لِلسَّمْعِ ؕசெவிமடுப்பதற்காகفَمَنْஎனவே எவர்یَّسْتَمِعِசெவிமடுக்கிறாரோالْاٰنَஇப்போதுیَجِدْகாண்பார்لَهٗதனக்காகشِهَابًاஒரு தீப்பந்தத்தைرَّصَدًاۙகாத்திருப்பதாக
வ அன்னா குன்னா னக்'உது மின்ஹா மகா'இத லிஸ்'ஸம்'இ Fபம(ன்)ய் யஸ்தமி'இல் 'ஆன யஜித் லஹூ ஷிஹாBபர் ரஸதா
“(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான்.
وَّاَنَّا لَا نَدْرِیْۤ اَشَرٌّ اُرِیْدَ بِمَنْ فِی الْاَرْضِ اَمْ اَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا ۟ۙ
وَّ اَنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَاஇல்லைنَدْرِیْۤஅறிவோம்اَشَرٌّதீமையாاُرِیْدَநாடப்பட்டுள்ளதாبِمَنْஎவர்களுக்குفِیஇல்الْاَرْضِபூமிاَمْஅல்லதுاَرَادَநாடியுள்ளானாبِهِمْஅவர்களுக்குرَبُّهُمْஅவர்களின் இறைவன்رَشَدًاۙநேர்வழியை
வ அன்னா லா னத்ரீ அஷர்ருன் உரீத Bபிமன் Fபில் அர்ளி 'அம் 'அராத Bபிஹிம் ரBப்Bபுஹும் ரஷதா
“அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.
وَّاَنَّا مِنَّا الصّٰلِحُوْنَ وَمِنَّا دُوْنَ ذٰلِكَ ؕ كُنَّا طَرَآىِٕقَ قِدَدًا ۟ۙ
وَّ اَنَّاமேலும் நிச்சயமாக நாம்مِنَّاநம்மில்الصّٰلِحُوْنَநல்லவர்கள்وَ مِنَّاமேலும் நம்மில்دُوْنَகீழானவர்கள்ذٰلِكَ ؕஅதற்குكُنَّاநாம் இருந்தோம்طَرَآىِٕقَவழிகளில்قِدَدًاۙபல பிரிவுகளாக
வ அன்னா மின்னஸ் ஸாலிஹூன வ மின்னா தூன தாலிக குன்னா தரா'இக கிததா
“மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர்; அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர்; நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ نُّعْجِزَ اللّٰهَ فِی الْاَرْضِ وَلَنْ نُّعْجِزَهٗ هَرَبًا ۟ۙ
وَّ اَنَّاமேலும் நிச்சயமாக நாம்ظَنَنَّاۤஉறுதியாக அறிந்து கொண்டோம்اَنْஎன்றுلَّنْஒருபோதும் முடியாதுنُّعْجِزَஇயலாமலாக்கاللّٰهَஅல்லாஹ்வைفِیஇல்الْاَرْضِபூமிوَ لَنْமேலும் ஒருபோதும் முடியாதுنُّعْجِزَهٗஅவனை இயலாமலாக்கهَرَبًاۙதப்பியோடியும்
வ அன்னா ளனன் னா அல் லன் னுஃஜிZஜல் லாஹ Fபில் அர்ளி வ லன் னுஃஜிZஜஹூ ஹரBபா
“அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமாலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.
وَّاَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدٰۤی اٰمَنَّا بِهٖ ؕ فَمَنْ یُّؤْمِنْ بِرَبِّهٖ فَلَا یَخَافُ بَخْسًا وَّلَا رَهَقًا ۟ۙ
وَّ اَنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَمَّاபொழுதுسَمِعْنَاநாங்கள் செவியுற்றالْهُدٰۤیநேர்வழியைاٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِهٖ ؕஅதன் மீதுفَمَنْஎனவே எவர்یُّؤْمِنْۢநம்பிக்கை கொள்கிறாரோبِرَبِّهٖதன் இறைவன் மீதுفَلَاஎனவே இல்லைیَخَافُஅவர் அஞ்சுவார்بَخْسًاஇழப்பையோوَّ لَاமேலும் இல்லைرَهَقًاۙஅநீதியையோ
வ அன்னா லம்மா ஸமிஃனல் ஹுதா ஆமன்னா Bபிஹீ Fபம(ன்)ய் யு'மின் Bபி ரBப்Bபிஹீ Fபலா யகாFபு Bபக்ஸ(ன்)வ் வலா ரஹகா
“இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்.” எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.
وَّاَنَّا مِنَّا الْمُسْلِمُوْنَ وَمِنَّا الْقٰسِطُوْنَ ؕ فَمَنْ اَسْلَمَ فَاُولٰٓىِٕكَ تَحَرَّوْا رَشَدًا ۟
وَّ اَنَّاமேலும் நிச்சயமாக நாம்مِنَّاநம்மில்الْمُسْلِمُوْنَமுஸ்லிம்கள்وَ مِنَّاஇன்னும் நம்மில்الْقٰسِطُوْنَ ؕஅநீதியாளர்கள்فَمَنْஆகவே எவர்اَسْلَمَகீழ்ப்படிந்தாரோفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்تَحَرَّوْاதேடிக்கொண்டார்கள்رَشَدًاநேர்வழியை
வ அன்னா மின்னல் முஸ்லிமூன வ மின்னல் காஸிதூன Fபமன் அஸ்லம Fப உலா'இக தஹர்ரவ் ரஷதா
“இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.
وَاَمَّا الْقٰسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًا ۟ۙ
وَ اَمَّاஆனால்الْقٰسِطُوْنَஅநீதியாளர்கள்فَكَانُوْاஅவர்கள் ஆகிவிடுவார்கள்لِجَهَنَّمَநரகத்திற்குحَطَبًاۙவிறகாக
வ அம்மல் காஸிதூன Fப கானூ லி ஜஹன்னம ஹதBபா
“அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர்” (என்று அந்த ஜின் கூறிற்று).
وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَی الطَّرِیْقَةِ لَاَسْقَیْنٰهُمْ مَّآءً غَدَقًا ۟ۙ
وَّ اَنْ لَّوِமேலும், (அவர்கள்)اسْتَقَامُوْاஉறுதியாக நிலைத்திருந்தால்عَلَیமீதுالطَّرِیْقَةِஅந்தப் பாதையின்لَاَسْقَیْنٰهُمْநாம் அவர்களுக்குப் புகட்டியிருப்போம்مَّآءًதண்ணீரைغَدَقًاۙதாராளமாக
வ அல்ல விஸ் தகாமூ 'அலத் தரீகதி ல அஸ்கய்னாஹும் மா'அன் கதகா
“(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.
لِّنَفْتِنَهُمْ فِیْهِ ؕ وَمَنْ یُّعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهٖ یَسْلُكْهُ عَذَابًا صَعَدًا ۟ۙ
لِّنَفْتِنَهُمْஅவர்களைச் சோதிப்பதற்காகفِیْهِ ؕஅதில்وَ مَنْமேலும் எவர்یُّعْرِضْபுறக்கணிக்கிறாரோعَنْவிட்டுذِكْرِநினைவைرَبِّهٖதன் இறைவனின்یَسْلُكْهُஅவனைப் புகுத்துவான்عَذَابًاவேதனையில்صَعَدًاۙகடுமையான
லினFப்தினஹும் Fபீஹ்; வ ம(ன்)ய் யுஃரிள் 'அன் திக்ரி ரBப்Bபிஹீ யஸ்லுக் ஹு 'அதாBபன் ஸ'அதா
“அதைக் கொண்டு நாம் அவர்களைச் சோதிப்பதற்காக; ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, அவனைக் கொடிய வேதனையில் அவன் புகுத்தி விடுவான்.
وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۟ۙ
وَّ اَنَّமேலும் நிச்சயமாகالْمَسٰجِدَபள்ளிவாசல்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேفَلَاஎனவேتَدْعُوْاஅழைக்காதீர்கள்مَعَஉடன்اللّٰهِஅல்லாஹ்اَحَدًاۙஎவரையும்
வ அன்னல் மஸாஜித லில் லாஹி Fபலா தத்'ஊ ம'அல் லாஹி 'அஹதா
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.
وَّاَنَّهٗ لَمَّا قَامَ عَبْدُ اللّٰهِ یَدْعُوْهُ كَادُوْا یَكُوْنُوْنَ عَلَیْهِ لِبَدًا ۟ؕ۠
وَّ اَنَّهٗமேலும் நிச்சயமாகلَمَّاபோதுقَامَநின்றعَبْدُஅடியார்اللّٰهِஅல்லாஹ்வின்یَدْعُوْهُஅவனைப் பிரார்த்தித்துكَادُوْاஅவர்கள் நெருங்கினர்یَكُوْنُوْنَஆகிவிடعَلَیْهِஅவர் மீதுلِبَدًاؕ۠நெருக்கமான கூட்டமாக
வ அன்னஹூ லம்மா காம 'அBப்துல் லாஹி யத்'ஊஹு காதூ யகூனூன 'அலய்ஹி லிBபதா
“மேலும், நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் அவனைப் பிரார்த்தித்தவராக நின்றபோது, அவர்பால் அவர்கள் கூட்டம் கூட்டமாக (வந்து) நெருங்கிவிடுகின்றனர்.”  
قُلْ اِنَّمَاۤ اَدْعُوْا رَبِّیْ وَلَاۤ اُشْرِكُ بِهٖۤ اَحَدًا ۟
قُلْகூறுவீராகاِنَّمَاۤநிச்சயமாகاَدْعُوْاபிரார்த்திக்கிறேன்رَبِّیْஎன் இறைவனைوَ لَاۤமேலும் இல்லைاُشْرِكُஇணைவைக்கிறேன்بِهٖۤஅவனுக்குاَحَدًاஎவரையும்
குல் இன்னமா அத்'ஊ ரBப்Bபீ வ லா உஷ்ரிகு Bபிஹீ 'அஹதா
(நபியே!) நீர் கூறும்: “நான் பிரார்த்திப்பதெல்லாம் என்னுடைய இறைவனைத் தான்; அன்றியும், நான் அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டேன்.”
قُلْ اِنِّیْ لَاۤ اَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا ۟
قُلْகூறுவீராகاِنِّیْநிச்சயமாக நான்لَاۤஇல்லைاَمْلِكُஅதிகாரம் பெற்றுள்ளேன்لَكُمْஉங்களுக்குضَرًّاதீமையைوَّ لَاமேலும் இல்லைرَشَدًاநேர்வழியை
குல் இன்னீ லா அம்லிகு லகும் ளர்ர(ன்)வ் வலா ரஷதா
கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.”
قُلْ اِنِّیْ لَنْ یُّجِیْرَنِیْ مِنَ اللّٰهِ اَحَدٌ ۙ۬ وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۟ۙ
قُلْகூறுவீராகاِنِّیْநிச்சயமாக நான்لَنْஒருபோதும்یُّجِیْرَنِیْஎன்னை பாதுகாக்க முடியாதுمِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்اَحَدٌ ۙ۬எவரும்وَّ لَنْமேலும் ஒருபோதும்اَجِدَநான் காண மாட்டேன்مِنْஇருந்துدُوْنِهٖஅவனையன்றிمُلْتَحَدًاۙபுகலிடத்தை
குல் இன்னீ ல(ன்)ய் யுஜீரனீ மினல் லாஹி 'அஹது(ன்)வ், வ லன் அஜித மின் தூனிஹீ முல்தஹதா
கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.
اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖ ؕ وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۟ؕ
اِلَّاதவிரبَلٰغًاஎத்திவைப்பதைத்مِّنَபுறத்திலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்وَ رِسٰلٰتِهٖ ؕமேலும் அவனுடைய தூதுச் செய்திகளைوَ مَنْமேலும் எவர்یَّعْصِமாறு செய்கிறாரோاللّٰهَஅல்லாஹ்வுக்கும்وَ رَسُوْلَهٗமேலும் அவனுடைய தூதருக்கும்فَاِنَّஆக நிச்சயமாகلَهٗஅவருக்குنَارَநெருப்புதான்جَهَنَّمَநரகத்தின்خٰلِدِیْنَநிரந்தரமாகத் தங்குபவர்களாகفِیْهَاۤஅதில்اَبَدًاؕஎன்றென்றும்
இல்லா Bபலாகம் மினல் லாஹி வ ரிஸாலாதிஹ்; வ ம(ன்)ய் யஃஸில் லாஹ வ ரஸூலஹூ Fப இன்ன லஹூ னார ஜஹன்னம காலிதீன Fபீஹா 'அBபதா
“அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்” என (நபியே!) நீர் கூறும்.
حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ فَسَیَعْلَمُوْنَ مَنْ اَضْعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًا ۟
حَتّٰۤیவரைاِذَاபொழுதுرَاَوْاஅவர்கள் காண்பார்களோمَاஎதைیُوْعَدُوْنَஅவர்களுக்கு வாக்களிக்கப்படுகிறதோفَسَیَعْلَمُوْنَஅப்போது அவர்கள் அறிந்துகொள்வார்கள்مَنْயார்اَضْعَفُமிகவும் பலவீனமானவர்نَاصِرًاஉதவியாளர்களால்وَّ اَقَلُّமேலும் மிகக் குறைவானவர்عَدَدًاஎண்ணிக்கையில்
ஹத்தா இதா ர அவ் மா யூ'அதூன Fபஸயஃலமூன மன் அள்'அFபு னாஸிர(ன்)வ் வ அகல்லு 'அததா
அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும்; எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
قُلْ اِنْ اَدْرِیْۤ اَقَرِیْبٌ مَّا تُوْعَدُوْنَ اَمْ یَجْعَلُ لَهٗ رَبِّیْۤ اَمَدًا ۟
قُلْகூறுவீராகاِنْஇல்லைاَدْرِیْۤநான் அறிவேன்اَقَرِیْبٌசமீபமானதாمَّاஎதுتُوْعَدُوْنَஉங்களுக்கு வாக்களிக்கப்படுகிறதோاَمْஅல்லதுیَجْعَلُஏற்படுத்துவானாلَهٗஅதற்குرَبِّیْۤஎன் இறைவன்اَمَدًاஒரு தவணையை
குல் இன் அத்ரீ அ கரீBபும் மா தூ'அதூன அம் யஜ்'அலு லஹூ ரBப்Bபீ 'அமதா
(நபியே!) நீர் கூறும்: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.
عٰلِمُ الْغَیْبِ فَلَا یُظْهِرُ عَلٰی غَیْبِهٖۤ اَحَدًا ۟ۙ
عٰلِمُஅறிந்தவன்الْغَیْبِமறைவானவற்றைفَلَاஆகவே இல்லைیُظْهِرُவெளிப்படுத்துகிறான்عَلٰیமீதுغَیْبِهٖۤதனது மறைவானவற்றின்اَحَدًاۙஎவரையும்
'ஆலிமுல் கய்Bபி Fபலா யுள்ஹிரு அலா கய்Bபிஹீ 'அஹதா
“(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.
اِلَّا مَنِ ارْتَضٰی مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ یَسْلُكُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًا ۟ۙ
اِلَّاதவிரمَنِஎவரைارْتَضٰیஅவன் பொருந்திக் கொண்டானோمِنْஇருந்துرَّسُوْلٍதூதர்களில்فَاِنَّهٗநிச்சயமாக அவன்یَسْلُكُஏற்படுத்துகிறான்مِنْۢஇருந்துبَیْنِமுன்னால்یَدَیْهِஅவருக்குوَ مِنْமேலும் இருந்துخَلْفِهٖஅவருக்குப் பின்னால்رَصَدًاۙபாதுகாவலரை
இல்லா மனிர் தளா மிர் ரஸூலின் Fப இன்னஹூ யஸ்லுகு மின் Bபய்னி யதய்ஹி வ மின் கல்Fபிஹீ ரஸதா
“தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்.
لِّیَعْلَمَ اَنْ قَدْ اَبْلَغُوْا رِسٰلٰتِ رَبِّهِمْ وَاَحَاطَ بِمَا لَدَیْهِمْ وَاَحْصٰی كُلَّ شَیْءٍ عَدَدًا ۟۠
لِّیَعْلَمَஅவர் அறிந்துகொள்வதற்காகاَنْஎன்றுقَدْநிச்சயமாகاَبْلَغُوْاஅவர்கள் எத்திவைத்துவிட்டார்கள்رِسٰلٰتِதூதுச்செய்திகளைرَبِّهِمْதங்கள் இறைவனின்وَ اَحَاطَமேலும் அவர் சூழ்ந்திருக்கிறார்بِمَاஎவற்றைلَدَیْهِمْஅவர்களிடம் உள்ளதோوَ اَحْصٰیமேலும் அவர் கணக்கிட்டுள்ளார்كُلَّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَدَدًا۠எண்ணிக்கையால்
லியஃலம அன் கத் அBப்லகூ ரிஸாலாதி ரBப்Bபிஹிம் வ அஹாத Bபி மா லதய்ஹிம் வ அஹ்ஸா குல்ல ஷய்'இன் 'அததா
“தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.”