85. ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)

மக்கீ, வசனங்கள்: 22

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالسَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِ ۟ۙ
وَ السَّمَآءِவானத்தின் மீது சத்தியமாகذَاتِஉடையالْبُرُوْجِۙநட்சத்திர மண்டலங்களை
வஸ்ஸமா'இ தாதில் Bபுரூஜ்
கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَالْیَوْمِ الْمَوْعُوْدِ ۟ۙ
وَ الْیَوْمِமேலும் அந்த நாளின் மீதுالْمَوْعُوْدِۙவாக்களிக்கப்பட்ட
வல் யவ்மில் மவ்'ஊத்
இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍ ۟ؕ
وَ شَاهِدٍசாட்சி கூறுபவர் மீதும்وَّ مَشْهُوْدٍؕசாட்சி கூறப்பட்டதன் மீதும்
வ ஷாஹிதி(ன்)வ் வ மஷ்ஹூத்
மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِ ۟ۙ
قُتِلَஅழிக்கப்பட்டனர்اَصْحٰبُதோழர்கள்الْاُخْدُوْدِۙஅகழி
குதில அஸ் ஹாBபுல் உக்தூத்
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
النَّارِ ذَاتِ الْوَقُوْدِ ۟ۙ
النَّارِநெருப்புذَاتِகொண்டالْوَقُوْدِۙஎரிபொருள்
அன்னாரி தாதில் வகூத்
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
اِذْ هُمْ عَلَیْهَا قُعُوْدٌ ۟ۙ
اِذْஅப்போதுهُمْஅவர்கள்عَلَیْهَاஅதன் மீதுقُعُوْدٌۙஅமர்ந்திருந்தார்கள்
இத் ஹும் 'அலய்ஹா கு'ஊத்
அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
وَّهُمْ عَلٰی مَا یَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِیْنَ شُهُوْدٌ ۟ؕ
وَّ هُمْமேலும் அவர்கள்عَلٰیமீதுمَاஎதைیَفْعَلُوْنَஅவர்கள் செய்தார்களோبِالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்குشُهُوْدٌؕசாட்சிகளாக
வ ஹும் 'அலா மா யFப்'அலூன Bபில்மு 'மினீன ஷுஹூத்
முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
وَمَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ یُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟ۙ
وَ مَاமேலும் இல்லைنَقَمُوْاஅவர்கள் பழிவாங்கினார்கள்مِنْهُمْஅவர்களிடமிருந்துاِلَّاۤதவிரاَنْஎன்பதைத்یُّؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொண்டார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுالْعَزِیْزِமிகைத்தவன்الْحَمِیْدِۙபுகழுக்குரியவன்
வமா னகமூ மின்ஹும் இல்லா அய்யு'மினூ Bபில்லாஹில் 'அZஜீZஜில் ஹமீத்
(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
الَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟ؕ
الَّذِیْஎத்தகையவன்لَهٗஅவனுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்شَهِیْدٌؕசாட்சியாளன்
அல்லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லாஹு 'அலா குல்லி ஷய் 'இன் ஷஹீத்
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
اِنَّ الَّذِیْنَ فَتَنُوا الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ یَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِیْقِ ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்فَتَنُواதுன்புறுத்தினார்களோالْمُؤْمِنِیْنَமுஃமினான ஆண்களைوَ الْمُؤْمِنٰتِமுஃமினான பெண்களையும்ثُمَّபின்னர்لَمْஇல்லைیَتُوْبُوْاபாவமன்னிப்புத் தேடفَلَهُمْஎனவே அவர்களுக்குعَذَابُவேதனைجَهَنَّمَநரகத்தின்وَ لَهُمْமேலும் அவர்களுக்குعَذَابُவேதனைالْحَرِیْقِؕசுட்டெரிக்கும்
இன்னல் லதீன Fபதனுல் மு'மினீன வல் மு'மினாதி தும்ம லம் யதூBபூ Fபலஹும் 'அதாBபு ஜஹன்னம வ லஹும் 'அதாBபுல் ஹரீக்
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؔؕ۬ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِیْرُ ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குجَنّٰتٌசுவனச்சோலைகள்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُ ؔؕ۬ஆறுகள்ذٰلِكَஅதுவேالْفَوْزُவெற்றிالْكَبِیْرُؕமகத்தான
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; தாலிகல் Fபவ்Zஜுல் கBபீர்
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِیْدٌ ۟ؕ
اِنَّநிச்சயமாகبَطْشَபிடிرَبِّكَஉமது இறைவனின்لَشَدِیْدٌؕமிகக் கடுமையானது
இன்ன Bபத்ஷ ரBப்Bபிக லஷதீத்
நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
اِنَّهٗ هُوَ یُبْدِئُ وَیُعِیْدُ ۟ۚ
اِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவன்தான்یُبْدِئُமுதல் முறையாகப் படைக்கிறான்وَ یُعِیْدُۚமேலும் மீண்டும் படைக்கிறான்
இன்னஹூ ஹுவ யுBப்தி'உ வ யு'ஈத்
நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்திற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
وَهُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُ ۟ۙ
وَ هُوَமேலும் அவன்الْغَفُوْرُமிக மன்னிப்பவன்الْوَدُوْدُۙபேரன்புடையவன்
வ ஹுவல் கFபூருல் வதூத்
அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
ذُو الْعَرْشِ الْمَجِیْدُ ۟ۙ
ذُوஉடையவன்الْعَرْشِஅர்ஷைالْمَجِیْدُۙமகிமைமிக்கவன்
துல் 'அர்ஷில் மஜீத்
(அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.
فَعَّالٌ لِّمَا یُرِیْدُ ۟ؕ
فَعَّالٌசெய்பவன்لِّمَاஎதனைیُرِیْدُؕநாடுகிறானோ
Fப' 'ஆலுல் லிமா யுரீத்
தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْجُنُوْدِ ۟ۙ
هَلْவந்ததா?اَتٰىكَஉமக்கு வந்ததுحَدِیْثُசெய்திالْجُنُوْدِۙபடைகளின்
ஹல் அதாக ஹதீதுல் ஜுனூத்
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
بَلِ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ تَكْذِیْبٍ ۟ۙ
بَلِமாறாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفِیْஇல்تَكْذِیْبٍۙபொய்ப்பித்தல்
Bபலில் லதீன கFபரூ Fபீ தக்தீBப்
எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
وَّاللّٰهُ مِنْ وَّرَآىِٕهِمْ مُّحِیْطٌ ۟ۚ
وَّ اللّٰهُஅல்லாஹ்வோمِنْஇருந்துوَّرَآىِٕهِمْஅவர்களுக்குப் பின்னால்مُّحِیْطٌۚசூழ்ந்துள்ளான்
வல்லாஹு மி(ன்)வ் வரா'இஹிம் முஹீத்
ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِیْدٌ ۟ۙ
بَلْமாறாகهُوَஅதுقُرْاٰنٌகுர்ஆன்مَّجِیْدٌۙமகிமைமிக்கது
Bபல் ஹுவ குர்'ஆனும் மஜீத்
(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
فِیْ لَوْحٍ مَّحْفُوْظٍ ۟۠
فِیْஇல்لَوْحٍபலகைمَّحْفُوْظٍ۠பாதுகாக்கப்பட்ட
Fபீ லவ்ஹிம் மஹ்Fபூள்
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.