90. ஸூரத்துல் பலத் (நகரம்)

மக்கீ, வசனங்கள்: 20

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
لَاۤஇல்லைاُقْسِمُநான் சத்தியம் செய்கிறேன்بِهٰذَاஇந்தالْبَلَدِۙநகரத்தின் மீது
லா உக்ஸிமு Bபிஹாதல் Bபலத்
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
وَ اَنْتَமேலும் நீர்حِلٌّۢவசிக்கிறீர்بِهٰذَاஇந்தالْبَلَدِۙநகரத்தில்
வ அன்த ஹில்லும் Bபிஹாதல் Bபலத்
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۟ۙ
وَ وَالِدٍபெற்றவர் மீதும்وَّ مَاஇன்னும் எதனைوَلَدَۙஅவர் பெற்றெடுத்தாரோ
வ வாலிதி(ன்)வ் வமா வலத்
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْ كَبَدٍ ۟ؕ
لَقَدْநிச்சயமாகخَلَقْنَاநாம் படைத்தோம்الْاِنْسَانَமனிதனைفِیْஇல்كَبَدٍؕசிரமம்
லகத் கலக்னல் இன்ஸான Fபீ கBபத்
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
اَیَحْسَبُ اَنْ لَّنْ یَّقْدِرَ عَلَیْهِ اَحَدٌ ۟ۘ
اَیَحْسَبُஅவன் எண்ணுகிறானா?اَنْஎன்றுلَّنْஒருபோதும் முடியாதுیَّقْدِرَஆற்றல் பெறعَلَیْهِஅவன் மீதுاَحَدٌۘஎவரும்
அயஹ்ஸBபு அல்-லய் யக்திர 'அலய்ஹி அஹத்
“ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்” என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
یَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ۟ؕ
یَقُوْلُஅவன் கூறுகிறான்اَهْلَكْتُநான் அழித்துவிட்டேன்مَالًاசெல்வத்தைلُّبَدًاؕகுவியலாக
யகூலு அஹ்லக்து மாலல் லுBபதா
“ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.
اَیَحْسَبُ اَنْ لَّمْ یَرَهٗۤ اَحَدٌ ۟ؕ
اَیَحْسَبُஅவன் எண்ணுகிறானாاَنْஎன்றுلَّمْஇல்லைیَرَهٗۤஅவனைப் பார்க்கاَحَدٌؕஎவரும்
அயஹ்ஸBபு அல் லம் யரஹூ அஹத்
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَیْنَیْنِ ۟ۙ
اَلَمْநாம் ... வில்லையாنَجْعَلْஅமைக்கلَّهٗஅவனுக்குعَیْنَیْنِۙஇரு கண்களை
அலம் னஜ்'அல் லஹூ 'அய்னய்ன்
அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
وَلِسَانًا وَّشَفَتَیْنِ ۟ۙ
وَ لِسَانًاஒரு நாவையும்وَّ شَفَتَیْنِۙஇரு உதடுகளையும்
வ லிஸான(ன்)வ் வ ஷFபதய்ன்
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
وَهَدَیْنٰهُ النَّجْدَیْنِ ۟ۚ
وَ هَدَیْنٰهُமேலும் அவனுக்கு நாம் வழிகாட்டினோம்النَّجْدَیْنِۚஇரு வழிகளை
வ ஹதய்னாஹுன் னஜ்தய்ன்
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۟ؗۖ
فَلَاஆயினும் அவன்اقْتَحَمَகடக்கவில்லைالْعَقَبَةَؗۖஅந்த மலைப்பாதையை
Fபலக் தஹமல்-'அகBபஹ்
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُ ۟ؕ
وَ مَاۤமேலும் எதுاَدْرٰىكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்னவென்றுالْعَقَبَةُؕஅந்த மலைப்பாதை
வ மா அத்ராக மல்'அகBபஹ்
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
اَوْ اِطْعٰمٌ فِیْ یَوْمٍ ذِیْ مَسْغَبَةٍ ۟ۙ
اَوْஅல்லதுاِطْعٰمٌஉணவளிப்பதுفِیْஒருیَوْمٍநாளில்ذِیْஉடையمَسْغَبَةٍۙகடும் பசி
அவ் இத்'ஆமுன் Fபீ யவ்மின் தீ மஸ்கBபஹ்
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
یَّتِیْمًا ذَا مَقْرَبَةٍ ۟ۙ
یَّتِیْمًاஓர் அநாதையைذَاஉடைய / கொண்டمَقْرَبَةٍۙநெருங்கிய உறவு
யதீமன் தா மக்ரBபஹ்
உறவினனான ஓர் அநாதைக்கோ,
اَوْ مِسْكِیْنًا ذَا مَتْرَبَةٍ ۟ؕ
اَوْஅல்லதுمِسْكِیْنًاவறியவரைذَاஉடையمَتْرَبَةٍؕகடும் வறுமை
அவ் மிஸ்கீனன் தா மத்ரBபஹ்
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
ثُمَّ كَانَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ۟ؕ
ثُمَّபின்னர்كَانَஅவர் ஆனார்مِنَஒருவராகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ تَوَاصَوْاமேலும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொண்டார்களோبِالصَّبْرِபொறுமையைக் கொண்டுوَ تَوَاصَوْاமேலும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொண்டார்களோبِالْمَرْحَمَةِؕகருணையைக் கொண்டு
தும்ம கான மினல் லதீன ஆமனூ வ தவாஸவ் Bபிஸ்ஸBப்ரி வ தவாஸவ் Bபில்மர்ஹமஹ்
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ
اُولٰٓىِٕكَஅவர்களேاَصْحٰبُதோழர்கள்الْمَیْمَنَةِؕவலப்பக்கத்தின்
உலா'இக அஸ்-ஹாBபுல் மய்மனஹ்
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைهُمْஅவர்கள்தாம்اَصْحٰبُதோழர்கள்الْمَشْـَٔمَةِؕஇடப்பக்கத்து
வல்லதீன கFபரூ Bபி ஆயாதினா ஹும் அஸ்-ஹாBபுல் மஷ்'அமஹ்
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
عَلَیْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ۟۠
عَلَیْهِمْஅவர்கள் மீதுنَارٌநெருப்புمُّؤْصَدَةٌ۠மூடப்பட்டிருக்கும்
அலய்ஹிம் னாரும் மு'ஸதஹ்
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.