10. ஸூரத்து யூனுஸ் (நபி)

மக்கீ, வசனங்கள்: 109

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
الٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْحَكِیْمِ ۟
الٓرٰ ۫அலிஃப் லாம் றாتِلْكَஇவைاٰیٰتُவசனங்கள்الْكِتٰبِவேதத்தின்الْحَكِیْمِஞானம் நிறைந்த
அலிFப்-லாம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBபில் ஹகீம்
அலிஃப், லாம், றா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
اَكَانَ لِلنَّاسِ عَجَبًا اَنْ اَوْحَیْنَاۤ اِلٰی رَجُلٍ مِّنْهُمْ اَنْ اَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْ ؔؕ قَالَ الْكٰفِرُوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ مُّبِیْنٌ ۟
اَكَانَஆகிவிட்டதாلِلنَّاسِமனிதர்களுக்குعَجَبًاஓர் ஆச்சரியமாகاَنْஎன்பதுاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்ததுاِلٰیஒருرَجُلٍமனிதருக்குمِّنْهُمْஅவர்களிலிருந்தேاَنْஎன்றுاَنْذِرِஎச்சரிக்கை செய்வீராகالنَّاسَமனிதர்களைوَ بَشِّرِஇன்னும் நற்செய்தி கூறுவீராகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاஈமான் கொண்டார்களோاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குقَدَمَஉயர்ந்த தகுதிصِدْقٍஉண்மையானعِنْدَஇடத்தில்رَبِّهِمْ ؔؕஅவர்களின் இறைவனின்قَالَகூறினார்கள்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்اِنَّநிச்சயமாகهٰذَاஇவர்لَسٰحِرٌஒரு சூனியக்காரரேمُّبِیْنٌதெளிவான
'அ கான லின்னாஸி 'அஜாBபன் 'அன் 'அவ்ஹய்னா 'இலா ரஜுலின் மின்ஹும் 'அன் அன்திரின் னாஸ வ Bபஷ்ஷிரில் லதீன 'ஆமனூ 'அன்ன லஹும் கதம ஸித்கின் 'இன்த ரBப்Bபிஹிம்; காலல் காFபிரூன 'இன்ன ஹாதா ல ஸாஹிருன் முBபீன்
மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, “நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே” என்று கூறுகின்றனர்.
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ یُدَبِّرُ الْاَمْرَ ؕ مَا مِنْ شَفِیْعٍ اِلَّا مِنْ بَعْدِ اِذْنِهٖ ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
اِنَّநிச்சயமாகرَبَّكُمُஉங்கள் இறைவன்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎவனென்றால்خَلَقَபடைத்தானோالسَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமற்றும் பூமியைفِیْஇல்سِتَّةِஆறுاَیَّامٍநாட்களில்ثُمَّபின்னர்اسْتَوٰیநிலைபெற்றான்عَلَیமீதுالْعَرْشِஅர்ஷின்یُدَبِّرُஅவன் நிர்வகிக்கிறான்الْاَمْرَ ؕகாரியங்களைمَاஇல்லைمِنْஎந்தشَفِیْعٍபரிந்துரைப்பவரும்اِلَّاதவிரمِنْۢஇருந்துبَعْدِபிறகுاِذْنِهٖ ؕஅவனது அனுமதிக்குذٰلِكُمُஅவன்தான்اللّٰهُஅல்லாஹ்رَبُّكُمْஉங்கள் இறைவன்فَاعْبُدُوْهُ ؕஆகவே அவனையே வணங்குங்கள்اَفَلَاஅப்படியிருக்க நீங்கள்تَذَكَّرُوْنَசிந்திக்க மாட்டீர்களா?
இன்ன ரBப்Bபகுமுல் லாஹுல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமின் தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷி யுதBப்Bபிருல் அம்ர மா மின் ஷFபீ'இன் இல்லா மின் Bபஃதி இத்னிஹ்; தலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; அFபலா ததக்கரூன்
நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
اِلَیْهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ اِنَّهٗ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ لِیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِیْمٍ وَّعَذَابٌ اَلِیْمٌ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟
اِلَیْهِஅவனிடமேمَرْجِعُكُمْஉங்கள் மீளுதல்جَمِیْعًا ؕஅனைவரும்وَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வின்حَقًّا ؕஉண்மையானதுاِنَّهٗநிச்சயமாக அவன்یَبْدَؤُاதொடங்குகிறான்الْخَلْقَபடைப்பைثُمَّபிறகுیُعِیْدُهٗஅதனை மீண்டும் உருவாக்குகிறான்لِیَجْزِیَகூலி வழங்குவதற்காகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைبِالْقِسْطِ ؕநீதியுடன்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَهُمْஅவர்களுக்குشَرَابٌபானம்مِّنْஇருந்துحَمِیْمٍகொதிக்கும் நீர்وَّ عَذَابٌமேலும் வேதனைاَلِیْمٌۢநோவினை தரும்بِمَاகாரணமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்یَكْفُرُوْنَநிராகரித்துக் கொண்டு
இலய்ஹி மர்ஜி'உகும் ஜமீ 'அ(ன்)வ் வஃதல் லாஹி ஹக்கா; இன்னஹூ யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ லியஜ்Zஜியல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Bபில்கிஸ்த்; வல்லதீன கFபரூ லஹும் ஷராBபுன் மின் ஹமீ மி(ன்)வ் வ 'அதாBபுன் 'அலீமுன் Bபிமா கானூ யக்Fபுரூன்
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
هُوَ الَّذِیْ جَعَلَ الشَّمْسَ ضِیَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِیْنَ وَالْحِسَابَ ؕ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَقِّ ۚ یُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவன் என்றால்جَعَلَஆக்கினான்الشَّمْسَசூரியனைضِیَآءًசுடரொளியாகوَّ الْقَمَرَசந்திரனையும்نُوْرًاஒளியாகوَّ قَدَّرَهٗமேலும் அதற்கு நிர்ணயித்தான்مَنَازِلَநிலைகளைلِتَعْلَمُوْاநீங்கள் அறிந்துகொள்வதற்காகعَدَدَஎண்ணிக்கையைالسِّنِیْنَஆண்டுகளின்وَ الْحِسَابَ ؕமற்றும் கணக்கையும்مَاஇல்லைخَلَقَபடைத்தான்اللّٰهُஅல்லாஹ்ذٰلِكَஅதனைاِلَّاதவிரبِالْحَقِّ ۚஉண்மையைக் கொண்டுیُفَصِّلُஅவன் விவரிக்கிறான்الْاٰیٰتِஅத்தாட்சிகளைلِقَوْمٍஒரு சமூகத்திற்குیَّعْلَمُوْنَஅறியக்கூடிய
ஹுவல் லதீ ஜ'அலஷ் ஷம்ஸ ளியா'அ(ன்)வ் வல்கமர னூர(ன்)வ் வ கத்தரஹூ மனாZஜில லி தஃலமூ 'அததஸ் ஸினீன வல்ஹிஸாBப்; மா கலகல் லாஹு தாலிக இல்லா Bபில்ஹக்க்; யுFபஸ்ஸிலுல் ஆயாதி லி கவ்மி(ன்)ய் யஃலமூன்
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
اِنَّ فِی اخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَّقُوْنَ ۟
اِنَّநிச்சயமாகفِیஇல்اخْتِلَافِமாறி மாறி வருவதில்الَّیْلِஇரவின்وَ النَّهَارِமற்றும் பகலின்وَ مَاஇன்னும் எவற்றைخَلَقَபடைத்துள்ளானோاللّٰهُஅல்லாஹ்فِیஇல்السَّمٰوٰتِவானங்களில்وَ الْاَرْضِமற்றும் பூமியில்لَاٰیٰتٍநிச்சயமாக அத்தாட்சிகள்لِّقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّتَّقُوْنَஇறையச்சம் கொள்ளும்
இன்ன Fபிக் திலாFபில் லய்லி வன்னஹாரி வமா கலகல் லாஹு Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி ல ஆயாதின் லிகவ்மி(ன்)ய் யத்தகூன்
நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
اِنَّ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا وَرَضُوْا بِالْحَیٰوةِ الدُّنْیَا وَاطْمَاَنُّوْا بِهَا وَالَّذِیْنَ هُمْ عَنْ اٰیٰتِنَا غٰفِلُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَرْجُوْنَஎதிர்பார்க்கிறார்களோلِقَآءَنَاநம்மைச் சந்திப்பதைوَ رَضُوْاமேலும் திருப்தியடைந்தார்களோبِالْحَیٰوةِவாழ்க்கையைக் கொண்டுالدُّنْیَاஇவ்வுலகوَ اطْمَاَنُّوْاமேலும் நிம்மதியடைந்தார்களோبِهَاஅதைக் கொண்டுوَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்هُمْஅவர்கள்عَنْபற்றிاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைغٰفِلُوْنَۙஅலட்சியமாக இருப்பவர்கள்
இன்னல் லதீன லா யர்ஜூன லிகா'அனா வ ரளூ Bபில்ஹயாதித் துன்யா வத்ம' அன்னூ Bபிஹா வல்லதீன ஹும் 'அன் ஆயாதினா காFபிலூன்
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ -
اُولٰٓىِٕكَ مَاْوٰىهُمُ النَّارُ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
اُولٰٓىِٕكَஅத்தகையோர்مَاْوٰىهُمُஅவர்களின் தங்குமிடம்النَّارُநரகம்بِمَاஅதன் காரணமாகكَانُوْاஅவர்கள்یَكْسِبُوْنَசம்பாதித்துக் கொண்டிருந்தார்கள்
உலா'இக ம'வாஹுமுன் னாரு Bபிமா கானூ யக்ஸிBபூன்
அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ یَهْدِیْهِمْ رَبُّهُمْ بِاِیْمَانِهِمْ ۚ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைیَهْدِیْهِمْஅவர்களுக்கு நேர்வழி காட்டுவான்رَبُّهُمْஅவர்களது இறைவன்بِاِیْمَانِهِمْ ۚஅவர்களின் நம்பிக்கையினால்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهِمُஅவர்களுக்குக் கீழேالْاَنْهٰرُஆறுகள்فِیْஇல்جَنّٰتِசுவனச் சோலைகள்النَّعِیْمِஇன்பம் நிறைந்த
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி யஹ்தீஹிம் ரBப்Bபுஹும் Bபி ஈமானிஹிம் தஜ்ரீ மின் தஹ்திஹிமுல் அன்ஹாரு Fபீ ஜன்னாதின் ன'ஈம்
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
دَعْوٰىهُمْ فِیْهَا سُبْحٰنَكَ اللّٰهُمَّ وَتَحِیَّتُهُمْ فِیْهَا سَلٰمٌ ۚ وَاٰخِرُ دَعْوٰىهُمْ اَنِ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
دَعْوٰىهُمْஅவர்களின் பிரார்த்தனைفِیْهَاஅதில்سُبْحٰنَكَநீ தூய்மையானவன்اللّٰهُمَّயா அல்லாஹ்وَ تَحِیَّتُهُمْமேலும் அவர்களின் முகமன்فِیْهَاஅதில்سَلٰمٌ ۚஸலாம்وَ اٰخِرُமேலும் இறுதிدَعْوٰىهُمْஅவர்களின் பிரார்த்தனைاَنِஎன்பதுالْحَمْدُஅனைத்துப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேرَبِّஇறைவன்الْعٰلَمِیْنَ۠அகிலங்களின்
தஃவாஹும் Fபீஹா ஸுBப்ஹானகல் லாஹும்ம வ தஹிய்யதுஹும் Fபீஹா ஸலாம்; வ ஆகிரு தஃவாஹும் அனில் ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
அதில் அவர்கள்: “(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். “எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும்.
وَلَوْ یُعَجِّلُ اللّٰهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَیْرِ لَقُضِیَ اِلَیْهِمْ اَجَلُهُمْ ؕ فَنَذَرُ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
وَ لَوْஇன்னும் ஒருவேளைیُعَجِّلُவிரைவுபடுத்தினால்اللّٰهُஅல்லாஹ்لِلنَّاسِமனிதர்களுக்குالشَّرَّதீமையைاسْتِعْجَالَهُمْஅவர்கள் அவசரப்படுவதைப் போல்بِالْخَیْرِநன்மையைلَقُضِیَநிச்சயமாக முடிக்கப்பட்டிருக்கும்اِلَیْهِمْஅவர்களுக்குاَجَلُهُمْ ؕஅவர்களின் தவணைفَنَذَرُஎனவே நாம் விட்டுவிடுகிறோம்الَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَرْجُوْنَஎதிர்பார்க்கிறார்களோلِقَآءَنَاநம்மைச் சந்திப்பதைفِیْஇல்طُغْیَانِهِمْஅவர்களின் வரம்பு மீறல்یَعْمَهُوْنَஅவர்கள் தட்டழிகிறார்கள்
வ லவ் யு'அஜ்ஜிலுல் லாஹு லின்னாஸிஷ் ஷர்ர ஸ்திஃ ஜாலஹும் Bபில் கய்ரி லகுளிய இலய்ஹிம் 'அஜலுஹும் Fப னதருல் லதீன லா யர்ஜூன லிகா'அனா Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும்; எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம்.
وَاِذَا مَسَّ الْاِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْۢبِهٖۤ اَوْ قَاعِدًا اَوْ قَآىِٕمًا ۚ فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهٗ مَرَّ كَاَنْ لَّمْ یَدْعُنَاۤ اِلٰی ضُرٍّ مَّسَّهٗ ؕ كَذٰلِكَ زُیِّنَ لِلْمُسْرِفِیْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுمَسَّதீண்டுகிறதோالْاِنْسَانَமனிதனைالضُّرُّதுன்பம்دَعَانَاஅவன் நம்மை அழைக்கிறான்لِجَنْۢبِهٖۤதன் விலாப்புறமாகப் படுத்தவனாகاَوْஅல்லதுقَاعِدًاஉட்கார்ந்தவனாகاَوْஅல்லதுقَآىِٕمًا ۚநின்றவனாகفَلَمَّاபின்னர் எப்போதுكَشَفْنَاநாம் நீக்கினோமோعَنْهُஅவனிடமிருந்துضُرَّهٗஅவனுடைய துன்பத்தைمَرَّஅவன் சென்றுவிடுகிறான்كَاَنْபோலلَّمْஒருபோதும்یَدْعُنَاۤஅவன் நம்மை அழைக்காததுاِلٰیகுறித்துضُرٍّஒரு துன்பத்திற்காகمَّسَّهٗ ؕஅவனைத் தீண்டியكَذٰلِكَஅவ்வாறேزُیِّنَஅழகாக்கிக் காட்டப்பட்டுள்ளதுلِلْمُسْرِفِیْنَவரம்பு மீறுபவர்களுக்குمَاஎவற்றைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَعْمَلُوْنَசெய்து கொண்டு
வ இதா மஸ்ஸல் இன்ஸானள் ளுர்ரு த'ஆனா லி ஜம்Bபிஹீ அவ் கா'இதன் அவ் கா'இமன் Fபலம்மா கஷFப்னா 'அன்ஹு ளுர்ரஹூ மர்ர க அன் லம் யத்'உனா இலா ளுர்ரின் மஸ்ஸஹ்; கதாலிக Zஜுய்யின லில்முஸ்ரிFபீன மா கானூ யஃமலூன்
மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன.
وَلَقَدْ اَهْلَكْنَا الْقُرُوْنَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوْا ۙ وَجَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ وَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا ؕ كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ ۟
وَ لَقَدْநிச்சயமாகاَهْلَكْنَاநாம் அழித்தோம்الْقُرُوْنَதலைமுறையினரைمِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்னால்لَمَّاபோதுظَلَمُوْا ۙஅவர்கள் அநியாயம் செய்தார்கள்وَ جَآءَتْهُمْமேலும் அவர்களிடம் வந்தார்கள்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்وَ مَاமேலும் இல்லைكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்لِیُؤْمِنُوْا ؕநம்பிக்கை கொள்வதற்குكَذٰلِكَஇவ்வாறேنَجْزِیநாம் கூலி கொடுக்கிறோம்الْقَوْمَகூட்டத்தாருக்குالْمُجْرِمِیْنَகுற்றவாளிகளான
வ லகத் அஹ்லக்னல் குரூன மின் கBப்லிகும் லம்மா ளலமூ வ ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில் Bபய்யினாதி வமா கானூ லியு'மினூ; கதாலிக னஜ்Zஜில் கவ்மல் முஜ்ரிமீன்
(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.
ثُمَّ جَعَلْنٰكُمْ خَلٰٓىِٕفَ فِی الْاَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَیْفَ تَعْمَلُوْنَ ۟
ثُمَّபின்னர்جَعَلْنٰكُمْஉங்களை நாம் ஆக்கினோம்خَلٰٓىِٕفَபிரதிநிதிகளாகفِیஇல்الْاَرْضِபூமிمِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்لِنَنْظُرَநாம் பார்ப்பதற்காகكَیْفَஎப்படிتَعْمَلُوْنَநீங்கள் செயல்படுகிறீர்கள்
தும்ம ஜ'அல்னாகும் கலா'இFப Fபில் அர்ளி மின் Bபஃதிஹிம் லி னன்ளுர கய்Fப தஃமலூன்
நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின்தோன்றல்களாக ஆக்கினோம்.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیَاتُنَا بَیِّنٰتٍ ۙ قَالَ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا ائْتِ بِقُرْاٰنٍ غَیْرِ هٰذَاۤ اَوْ بَدِّلْهُ ؕ قُلْ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اُبَدِّلَهٗ مِنْ تِلْقَآئِ نَفْسِیْ ۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ ۚ اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
وَ اِذَاமேலும் எப்போதுتُتْلٰیஓதப்படுகிறதோعَلَیْهِمْஅவர்களுக்குاٰیَاتُنَاநம்முடைய வசனங்கள்بَیِّنٰتٍ ۙதெளிவானவையாகقَالَகூறுகிறார்கள்الَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَرْجُوْنَஎதிர்பார்க்கிறார்களோلِقَآءَنَاநம்மைச் சந்திப்பதைائْتِகொண்டு வாரும்بِقُرْاٰنٍஒரு குர்ஆனைغَیْرِஅல்லாதهٰذَاۤஇதுاَوْஅல்லதுبَدِّلْهُ ؕஅதை மாற்றிவிடும்قُلْநீர் கூறும்مَاஇல்லைیَكُوْنُஆகுமானதுلِیْۤஎனக்குاَنْஎன்பதுاُبَدِّلَهٗநான் அதை மாற்றுவதுمِنْஇருந்துتِلْقَآئِபுறத்திலிருந்துنَفْسِیْ ۚஎன் சுயமாகاِنْஇல்லைاَتَّبِعُநான் பின்பற்றுகிறேன்اِلَّاதவிரمَاஎதுیُوْحٰۤیவஹீ அறிவிக்கப்படுகிறதோاِلَیَّ ۚஎனக்குاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اِنْஒருவேளைعَصَیْتُநான் மாறுசெய்தால்رَبِّیْஎன் இறைவனுக்குعَذَابَவேதனையைیَوْمٍஒரு நாளின்عَظِیْمٍமகத்தான
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் காலல் லதீன லா யர்ஜூன லிகா'அ ன'தி Bபி குர்'ஆனின் கய்ரி ஹாதா அவ் Bபத்தில்ஹ்; குல் மா யகூனு லீ 'அன் 'உBபத்திலஹூ மின் தில்கா'இ னFப்ஸீ இன் அத்தBபி'உ இல்லா மா யூஹா இலய்ய இன்னீ அகாFபு இன் 'அஸய்து ரBப்Bபீ 'அதாBப யவ்மின் 'அளீம்
அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், “இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்” என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
قُلْ لَّوْ شَآءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَیْكُمْ وَلَاۤ اَدْرٰىكُمْ بِهٖ ۖؗ فَقَدْ لَبِثْتُ فِیْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
قُلْகூறுவீராகلَّوْஒருவேளைشَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَاஇல்லைتَلَوْتُهٗஅதனை நான் ஓதிக்காட்டியிருக்கعَلَیْكُمْஉங்களுக்குوَ لَاۤமேலும் இல்லைاَدْرٰىكُمْஅவன் உங்களுக்கு அறிவித்திருக்கبِهٖ ۖؗஅதைப் பற்றிفَقَدْநிச்சயமாகلَبِثْتُநான் வாழ்ந்திருக்கிறேன்فِیْكُمْஉங்களிடையேعُمُرًاஓர் ஆயுள் காலத்தைمِّنْஇருந்துقَبْلِهٖ ؕஇதற்கு முன்னால்اَفَلَاஅப்படியிருக்க, (நீங்கள்)تَعْقِلُوْنَசிந்திக்க மாட்டீர்களா?
குல் லவ் ஷா'அல் லாஹு மா தலவ்துஹூ 'அலய்கும் வ லா அத்ராகும் Bபிஹீ Fபகத் லBபித்து Fபீகும் 'உமுரன் மின் கBப்லிஹ்; அFபலா தஃகிலூன்
“(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الْمُجْرِمُوْنَ ۟
فَمَنْஆகவே எவர்اَظْلَمُஅதிக அநியாயக்காரர்مِمَّنِஅவரை விடافْتَرٰیஇட்டுக்கட்டினாரோعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைاَوْஅல்லதுكَذَّبَபொய்ப்பித்தாரோبِاٰیٰتِهٖ ؕஅவனுடைய வசனங்களைاِنَّهٗநிச்சயமாகلَاஇல்லைیُفْلِحُவெற்றி பெறுவார்கள்الْمُجْرِمُوْنَகுற்றவாளிகள்
Fபமன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கத்தBப Bபி ஆயாதிஹ்; இன்னஹூ லா யுFப்லிஹுல் முஜ்ரிமூன்
அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் - இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.
وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ وَیَقُوْلُوْنَ هٰۤؤُلَآءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِ ؕ قُلْ اَتُنَبِّـُٔوْنَ اللّٰهَ بِمَا لَا یَعْلَمُ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
وَ یَعْبُدُوْنَமேலும் அவர்கள் வணங்குகிறார்கள்مِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைمَاஎவற்றைلَاஇல்லைیَضُرُّهُمْஅவர்களுக்குத் தீங்கு செய்யும்وَ لَاமேலும் இல்லைیَنْفَعُهُمْஅவர்களுக்குப் பயன் அளிக்கும்وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்هٰۤؤُلَآءِஇவர்கள்شُفَعَآؤُنَاஎங்களது பரிந்துரையாளர்கள்عِنْدَஇடத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்قُلْநீர் கூறுவீராகاَتُنَبِّـُٔوْنَநீங்கள் செய்தி அறிவிக்கின்றீர்களா?اللّٰهَஅல்லாஹ்வுக்குبِمَاஎதனைக் கொண்டுلَاஇல்லைیَعْلَمُஅவன் அறிகிறான்فِیஇல்السَّمٰوٰتِவானங்களில்وَ لَاமேலும் இல்லைفِیஇல்الْاَرْضِ ؕபூமியில்سُبْحٰنَهٗஅவன் தூய்மையானவன்وَ تَعٰلٰیமேலும் அவன் உயர்ந்தவன்عَمَّاஎவற்றை விட்டும்یُشْرِكُوْنَஅவர்கள் இணைவைக்கிறார்களோ
வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யளுர்ருஹும் வலா யன்Fப'உஹும் வ யகூலூன ஹா'உலா'இ ஷுFப'ஆ 'உனா 'இன்தல் லாஹ்; குல் 'அ துனBப்Bபி 'ஊனல் லாஹ Bபி மா லா யஃலமு Fபிஸ் ஸமாவாதி வலா Fபில் அர்ள்; ஸுBப்ஹானஹூ வ த'ஆலா 'அம்மா யுஷ்ரிகூன்
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும்.
وَمَا كَانَ النَّاسُ اِلَّاۤ اُمَّةً وَّاحِدَةً فَاخْتَلَفُوْا ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ فِیْمَا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்தார்கள்النَّاسُமனிதர்கள்اِلَّاۤதவிரاُمَّةًஒரு சமுதாயமாகوَّاحِدَةًஒரேفَاخْتَلَفُوْا ؕபின்னர் அவர்கள் மாறுபட்டார்கள்وَ لَوْ لَاஇன்னும் இல்லையென்றால்كَلِمَةٌஒரு வாக்குسَبَقَتْமுந்திவிட்டمِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவன்لَقُضِیَநிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்بَیْنَهُمْஅவர்களுக்கிடையேفِیْمَاஎதில்فِیْهِஅதில்یَخْتَلِفُوْنَஅவர்கள் மாறுபடுகிறார்களோ
வமா கானன் னாஸு இல்லா உம்மத(ன்)வ் வாஹிததன் Fப க்தலFபூ; வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும் Fபீ மா Fபீஹி யக்தலிFபூன்
மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும்.
وَیَقُوْلُوْنَ لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ۚ فَقُلْ اِنَّمَا الْغَیْبُ لِلّٰهِ فَانْتَظِرُوْا ۚ اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟۠
وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்لَوْ لَاۤஏன்اُنْزِلَஅருளப்படவில்லைعَلَیْهِஅவர் மீதுاٰیَةٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّهٖ ۚஅவருடைய இறைவனிடம்فَقُلْஆகவே கூறுவீராகاِنَّمَاநிச்சயமாகالْغَیْبُமறைவானவைلِلّٰهِஅல்லாஹ்வுக்கேفَانْتَظِرُوْا ۚஆகவே காத்திருங்கள்اِنِّیْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன்مِّنَஇருந்துالْمُنْتَظِرِیْنَ۠காத்திருப்பவர்களில்
வ யகூலூன லவ் லா உன்Zஜில 'அலய்ஹி ஆயதுன் மிர் ரBப்Bபிஹீ Fபகுல் இன்னமல் கய்Bபு லில்லாஹி Fபன்தளிரூ இன்னீ ம'அகும் மினல் முன்தளிரீன்
“மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِیْۤ اٰیَاتِنَا ؕ قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًا ؕ اِنَّ رُسُلَنَا یَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ ۟
وَ اِذَاۤஇன்னும் எப்போதுاَذَقْنَاநாம் சுவைக்கச் செய்கிறோமோالنَّاسَமனிதர்களுக்குرَحْمَةًஓர் அருளைمِّنْۢஇருந்துبَعْدِபிறகுضَرَّآءَஒரு துன்பத்திற்குمَسَّتْهُمْஅவர்களைத் தீண்டியاِذَاஉடனேلَهُمْஅவர்களுக்குمَّكْرٌஒரு சூழ்ச்சிفِیْۤஇல்اٰیَاتِنَا ؕநம்முடைய வசனங்களில்قُلِநீர் கூறுவீராகاللّٰهُஅல்லாஹ்اَسْرَعُமிக வேகமானவன்مَكْرًا ؕசூழ்ச்சி செய்வதில்اِنَّநிச்சயமாகرُسُلَنَاநம்முடைய தூதர்கள்یَكْتُبُوْنَஎழுதுகிறார்கள்مَاஎதைتَمْكُرُوْنَநீங்கள் சூழ்ச்சி செய்கிறீர்களோ
வ இதா அதக்னன் னாஸ ரஹ்மதன் மின் Bபஃதி ளர்ரா'அ மஸ்ஸத் ஹும் இதா லஹும் மக்ருன் Fபீ ஆயாதினா; குலில் லாஹு அஸ்ர'உ மக்ரா; இன்ன ருஸுலனா யக்துBபூன மா தம்குரூன்
மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது; “திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
هُوَ الَّذِیْ یُسَیِّرُكُمْ فِی الْبَرِّ وَالْبَحْرِ ؕ حَتّٰۤی اِذَا كُنْتُمْ فِی الْفُلْكِ ۚ وَجَرَیْنَ بِهِمْ بِرِیْحٍ طَیِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَآءَتْهَا رِیْحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْۤا اَنَّهُمْ اُحِیْطَ بِهِمْ ۙ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬ لَىِٕنْ اَنْجَیْتَنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟
هُوَஅவன்الَّذِیْஎவனென்றால்یُسَیِّرُكُمْஉங்களைப் பயணம் செய்ய வைக்கிறான்فِیஇல்الْبَرِّதரைوَ الْبَحْرِ ؕமற்றும் கடல்حَتّٰۤیவரைاِذَاபோதுكُنْتُمْநீங்கள் இருக்கும்فِیஇல்الْفُلْكِ ۚகப்பல்وَ جَرَیْنَமேலும் அவை சென்றனبِهِمْஅவர்களைக் கொண்டுبِرِیْحٍகாற்றைக் கொண்டுطَیِّبَةٍசாதகமானوَّ فَرِحُوْاமேலும் அவர்கள் மகிழ்ந்தார்கள்بِهَاஅதைக் கொண்டுجَآءَتْهَاஅதற்கு வந்ததுرِیْحٌஒரு காற்றுعَاصِفٌபுயல்وَّ جَآءَهُمُமேலும் அவர்களுக்கு வந்ததுالْمَوْجُஅலைمِنْஇருந்துكُلِّஎல்லாمَكَانٍஇடம்وَّ ظَنُّوْۤاமேலும் அவர்கள் எண்ணினார்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اُحِیْطَசூழப்பட்டுவிட்டதுبِهِمْ ۙஅவர்களைدَعَوُاஅவர்கள் பிரார்த்தித்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِیْنَதூய்மையானவர்களாகلَهُஅவனுக்கேالدِّیْنَ ۚ۬வணக்கத்தைلَىِٕنْநிச்சயமாகاَنْجَیْتَنَاஎங்களை நீ காப்பாற்றினால்مِنْஇருந்துهٰذِهٖஇதுلَنَكُوْنَنَّநிச்சயமாக நாங்கள் ஆகிவிடுவோம்مِنَஅவர்களில்الشّٰكِرِیْنَநன்றியுடையவர்கள்
ஹுவல் லதீ யுஸய்யிருகும் Fபில் Bபர்ரி வல்Bபஹ்ரி ஹத்தா இதா குன்தும் Fபில் Fபுல்கி வ ஜரய்ன Bபிஹிம் Bபி ரீஹின் தய்யிBபதி(ன்)வ் வ Fபரிஹூ Bபிஹா ஜா'அத் ஹா ரீஹுன் 'ஆஸிFபு(ன்)வ் வ ஜா'அஹுமுல் மவ்ஜு மின் குல்லி மகானி(ன்)வ் வ ளன்னூ 'அன்னஹும் 'உஹீத Bபிஹிம் த'அ வுல்லாஹ முக்லிஸீன லஹுத் தீன ல'இன் அன்ஜய்தனா மின் ஹாதிஹீ ல னகூனன்ன மினஷ் ஷாகிரீன்
அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.
فَلَمَّاۤ اَنْجٰىهُمْ اِذَا هُمْ یَبْغُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّمَا بَغْیُكُمْ عَلٰۤی اَنْفُسِكُمْ ۙ مَّتَاعَ الْحَیٰوةِ الدُّنْیَا ؗ ثُمَّ اِلَیْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
فَلَمَّاۤபின்னர்اَنْجٰىهُمْஅவர்களை அவன் காப்பாற்றியபோதுاِذَاஉடனேهُمْஅவர்கள்یَبْغُوْنَவரம்பு மீறுகிறார்கள்فِیஇல்الْاَرْضِபூமிبِغَیْرِஇன்றிالْحَقِّ ؕநியாயம்یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேاِنَّمَاநிச்சயமாகبَغْیُكُمْஉங்கள் வரம்பு மீறல்عَلٰۤیஎதிராகاَنْفُسِكُمْ ۙஉங்கள் ஆத்மாக்களுக்கேمَّتَاعَசுகபோகம்الْحَیٰوةِவாழ்க்கையின்الدُّنْیَا ؗஇவ்வுலகثُمَّபின்னர்اِلَیْنَاநம்மிடமேمَرْجِعُكُمْஉங்கள் திரும்புதல்فَنُنَبِّئُكُمْஅப்போது நாம் உங்களுக்கு அறிவிப்போம்بِمَاஎதனைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தீர்களோ
Fபலம்மா அன்ஜாஹும் இதா ஹும் யBப்கூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்க்; யா அய்யுஹன்னாஸு இன்னமா Bபக் யுகும் 'அலா அன்Fபுஸிகும் மதா'அல் ஹயாதித் துன்யா தும்ம இலய்னா மர்ஜி'உகும் FபனுனBப்Bபி 'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டதும் அவர்கள் பூமியின் மேல் நியாயமில்லாது அழிச்சாட்டியம் செய்கிறார்கள்; மனிதர்களே! உங்கள் அழிச்சாட்டியங்களெல்லாம் உங்களுக்கே கேடாகமுடியும்; உலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்; இதன் பின்னர் நம்மிடமே நீங்கள் திரும்ப வர வேண்டியதிருக்கிறது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு நாம் அறிவிப்போம்.
اِنَّمَا مَثَلُ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا یَاْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُ ؕ حَتّٰۤی اِذَاۤ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّیَّنَتْ وَظَنَّ اَهْلُهَاۤ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَیْهَاۤ ۙ اَتٰىهَاۤ اَمْرُنَا لَیْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِیْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகمَثَلُஉதாரணம்الْحَیٰوةِவாழ்க்கையின்الدُّنْیَاஇவ்வுலகكَمَآءٍநீரைப் போன்றதுاَنْزَلْنٰهُஅதனை நாம் இறக்கினோம்مِنَஇருந்துالسَّمَآءِவானத்தில்فَاخْتَلَطَஅதனால் கலந்ததுبِهٖஅதனுடன்نَبَاتُபயிர்கள்الْاَرْضِபூமியின்مِمَّاஎவற்றிலிருந்துیَاْكُلُஉண்கிறார்களோالنَّاسُமனிதர்களும்وَ الْاَنْعَامُ ؕமேலும் கால்நடைகளும்حَتّٰۤیவரைاِذَاۤபோதுاَخَذَتِஅணிந்து கொண்டالْاَرْضُபூமிزُخْرُفَهَاஅதன் அலங்காரத்தைوَ ازَّیَّنَتْமேலும் அது அலங்கரிக்கப்பட்டதோوَ ظَنَّமேலும் எண்ணினார்களோاَهْلُهَاۤஅதன் உரிமையாளர்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்قٰدِرُوْنَஆற்றல் உடையவர்கள் என்றுعَلَیْهَاۤ ۙஅதன் மீதுاَتٰىهَاۤஅதற்கு வந்ததுاَمْرُنَاநமது கட்டளைلَیْلًاஇரவிலோاَوْஅல்லதுنَهَارًاபகலிலோفَجَعَلْنٰهَاபின்னர் அதனை நாம் ஆக்கினோம்حَصِیْدًاஅறுவடை செய்யப்பட்டதாகكَاَنْபோலلَّمْஇல்லைتَغْنَஅது செழித்திருக்கبِالْاَمْسِ ؕநேற்றுكَذٰلِكَஅவ்வாறேنُفَصِّلُநாம் விவரிக்கிறோம்الْاٰیٰتِவசனங்களைلِقَوْمٍசமூகத்தாருக்குیَّتَفَكَّرُوْنَசிந்திக்கும்
இன்னமா மதலுல் ஹயாதித் துன்யா க மா'இன் அன்Zஜல்னாஹு மினஸ் ஸமா'இ Fபக்தலத Bபிஹீ னBபாதுல் அர்ளி மிம்மா ய'குலுன் னாஸு வல் அன்'ஆம்; ஹத்தா இதா அகததில் அர்ளு Zஜுக்ருFபஹா வZஜ்Zஜய்யனத் வ ளன்ன அஹ்லுஹா அன்னஹும் காதிரூன 'அலய்ஹா அதாஹா அம்ருனா லய்லன் அவ் னஹாரன் Fபஜ'அல்னாஹா ஹஸீதன் க 'அன் லம் தக்ன Bபில்-அம்ஸ்; கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்: (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்
وَاللّٰهُ یَدْعُوْۤا اِلٰی دَارِ السَّلٰمِ ؕ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَدْعُوْۤاஅழைக்கிறான்اِلٰیபக்கம்دَارِஇல்லத்தின்السَّلٰمِ ؕசாந்தியின்وَ یَهْدِیْமேலும் நேர்வழிகாட்டுகிறான்مَنْஎவரைیَّشَآءُநாடுகிறானோاِلٰیபக்கம்صِرَاطٍவழியின்مُّسْتَقِیْمٍநேரான
வல்லாஹு யத்'ஊ இலா தாரிஸ் ஸலாமி வ யஹ்தீ ம(ன்)ய் யஷா'உ இலா ஸிராதின் முஸ்தகீம்
மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
لِلَّذِیْنَ اَحْسَنُوا الْحُسْنٰی وَزِیَادَةٌ ؕ وَلَا یَرْهَقُ وُجُوْهَهُمْ قَتَرٌ وَّلَا ذِلَّةٌ ؕ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
لِلَّذِیْنَஎவர்களுக்குاَحْسَنُواநன்மை செய்தார்களோالْحُسْنٰیஅழகிய நற்கூலிوَ زِیَادَةٌ ؕமேலும் அதிகமும்وَ لَاமேலும் இல்லைیَرْهَقُமூடும்وُجُوْهَهُمْஅவர்களுடைய முகங்களைقَتَرٌகருமைوَّ لَاஇன்னும் இல்லைذِلَّةٌ ؕஇழிவுاُولٰٓىِٕكَஅவர்களேاَصْحٰبُவாசிகள்الْجَنَّةِ ۚசுவனத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَநிலைத்திருப்பார்கள்
லில் லதீன அஹ்ஸனுல் ஹுஸ்னா வ Zஜியாதது(ன்)வ் வலா யர்ஹகு வுஜூஹஹும் கதரு(ன்)வ் வலா தில்லஹ்; உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சுவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
وَالَّذِیْنَ كَسَبُوا السَّیِّاٰتِ جَزَآءُ سَیِّئَةٍ بِمِثْلِهَا ۙ وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ مَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍۚ كَاَنَّمَاۤ اُغْشِیَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّیْلِ مُظْلِمًا ؕ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்كَسَبُواசெய்தார்களோالسَّیِّاٰتِதீமைகளைجَزَآءُகூலிسَیِّئَةٍۭஒரு தீமைக்குبِمِثْلِهَا ۙஅதைப் போன்றதேوَ تَرْهَقُهُمْமேலும் அவர்களை மூடிக்கொள்ளும்ذِلَّةٌ ؕஇழிவுمَاஇல்லைلَهُمْஅவர்களுக்குمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்مِنْஎந்தعَاصمٍ ۚபாதுகாப்பவரும்كَاَنَّمَاۤஎப்படியென்றால்اُغْشِیَتْபோர்த்தப்பட்டதுوُجُوْهُهُمْஅவர்களின் முகங்கள்قِطَعًاதுண்டுகளால்مِّنَஇருந்துالَّیْلِஇரவின்مُظْلِمًا ؕஇருண்டاُولٰٓىِٕكَஅவர்களேاَصْحٰبُவாசிகள்النَّارِ ۚநரகத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَநிரந்தரமானவர்கள்
வல்லதீன கஸBபுஸ் ஸய்யி ஆதி ஜZஜா'உ ஸய்யி'அதின் Bபிமித்லிஹா வ தர்ஹகுஹும் தில்லஹ்; மா லஹும் மினல் லாஹி மின் 'ஆஸிமின் க அன்னமா உக்ஷியத் வுஜூஹுஹும் கித'அன் மினல் லய்லி முள்லிமா; உலா'இக அஸ்-ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
ஆனால் தீமையைச் சம்பாதிப்பவர்களுக்கு, (அவர்கள் செய்த) தீமைக்குக் கூலியாக அதுபோன்ற தீமையாகும்! அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும்; அவர்களை அல்லாஹ்வின் (தண்டனையை) விட்டுக் காப்பாற்றுபவர் எவருமிலர்; இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகம் அவர்கள் முகங்களைச் சூழ்ந்து சுற்றிக் கொள்ளப்பட்டது போல் (அவர்களின்) முகங்கள் காணப்படும். அவர்கள் நரக நெருப்புக்கு உரியவர்கள். அவர்கள் அங்கேயே என்றென்றும் இருப்பார்கள்.
وَیَوْمَ نَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِیْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَآؤُكُمْ ۚ فَزَیَّلْنَا بَیْنَهُمْ وَقَالَ شُرَكَآؤُهُمْ مَّا كُنْتُمْ اِیَّانَا تَعْبُدُوْنَ ۟
وَ یَوْمَமேலும் (அந்த) நாளில்نَحْشُرُهُمْநாம் அவர்களை ஒன்றுதிரட்டுவோம்جَمِیْعًاஅனைவரையும்ثُمَّபின்னர்نَقُوْلُநாம் கூறுவோம்لِلَّذِیْنَஎவர்கள்اَشْرَكُوْاஇணைவைத்தார்களோ அவர்களுக்குمَكَانَكُمْஉங்கள் இடத்திலேயே (நில்லுங்கள்)اَنْتُمْநீங்களும்وَ شُرَكَآؤُكُمْ ۚஉங்கள் இணைத்தெய்வங்களும்فَزَیَّلْنَاஅப்பொழுது நாம் பிரித்துவிடுவோம்بَیْنَهُمْஅவர்களுக்கு இடையில்وَ قَالَமேலும் கூறுவார்கள்شُرَكَآؤُهُمْஅவர்களின் இணைத்தெய்வங்கள்مَّاஇல்லைكُنْتُمْநீங்கள்اِیَّانَاஎங்களைتَعْبُدُوْنَவணங்கிக் கொண்டிருக்கவில்லை
வ யவ்ம னஹ்ஷுருஹும் ஜமீ'அன் தும்ம னகூலு லில் லதீன அஷ்ரகூ மகானகும் அன்தும் வ ஷுரகா'உகும்; FபZஜய்யல்னா Bபய்னஹும் வ கால ஷுரகா'உஹும் மா குன்தும் இய்யானா தஃBபுதூன்
(இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி: “நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்” என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள்” நீங்கள் எங்களை வணங்கவேயில்லை” என்று கூறிவிடும்.
فَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنَنَا وَبَیْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِیْنَ ۟
فَكَفٰیஆகவே போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்شَهِیْدًۢاசாட்சியாகبَیْنَنَاஎங்களுக்கும்وَ بَیْنَكُمْஉங்களுக்கும் இடையில்اِنْநிச்சயமாகكُنَّاநாங்கள் இருந்தோம்عَنْபற்றிعِبَادَتِكُمْஉங்கள் வணக்கத்தைப்لَغٰفِلِیْنَமுற்றிலும் அறியாதவர்களாக
FபகFபா Bபில்லாஹி ஷஹீதன் Bபய்னனா வ Bபய்னகும் இன் குன்னா 'அன் 'இBபாததிகும் லகாFபிலீன்
“நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்” (என்றும் அவை கூறும்).
هُنَالِكَ تَبْلُوْا كُلُّ نَفْسٍ مَّاۤ اَسْلَفَتْ وَرُدُّوْۤا اِلَی اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
هُنَالِكَஅங்கேتَبْلُوْاசோதித்தறியும்كُلُّஒவ்வொருنَفْسٍஆத்மாவும்مَّاۤஎதனைاَسْلَفَتْஅது முன்னனுப்பியதோوَ رُدُّوْۤاமேலும் அவர்கள் திருப்பப்படுவார்கள்اِلَیபால்اللّٰهِஅல்லாஹ்வின்مَوْلٰىهُمُஅவர்களின் எஜமானனாகியالْحَقِّஉண்மையானوَ ضَلَّமேலும் மறைந்துவிடும்عَنْهُمْஅவர்களை விட்டும்مَّاஎவற்றைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَفْتَرُوْنَ۠இட்டுக்கட்டிக்கொண்டு
ஹுனாலிக தBப்லூ குல்லு னFப்ஸின் மா 'அஸ்லFபத்; வ ருத்தூ இலல் லாஹி மவ்லாஹுமுல் ஹக்கி வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.
قُلْ مَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ یَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَمَنْ یُّخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَیُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ وَمَنْ یُّدَبِّرُ الْاَمْرَ ؕ فَسَیَقُوْلُوْنَ اللّٰهُ ۚ فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ ۟
قُلْகூறுவீராகمَنْயார்یَّرْزُقُكُمْஉங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கிறான்مِّنَஇருந்துالسَّمَآءِவானம்وَ الْاَرْضِமற்றும் பூமிاَمَّنْஅல்லது யார்یَّمْلِكُதன்வசம் வைத்துள்ளான்السَّمْعَசெவிப்புலனைوَ الْاَبْصَارَமற்றும் பார்வைகளைوَ مَنْஇன்னும் யார்یُّخْرِجُவெளிக் கொணருகிறான்الْحَیَّஉயிருள்ளதைمِنَஇருந்துالْمَیِّتِஇறந்தவற்றில்وَ یُخْرِجُஇன்னும் வெளிக் கொணருகிறான்الْمَیِّتَஇறந்ததைمِنَஇருந்துالْحَیِّஉயிருள்ளவற்றில்وَ مَنْஇன்னும் யார்یُّدَبِّرُநிர்வகிக்கிறான்الْاَمْرَ ؕகாரியங்களைفَسَیَقُوْلُوْنَஅதற்கு அவர்கள் கூறுவார்கள்اللّٰهُ ۚஅல்லாஹ்فَقُلْஅப்படியாயின் நீர் கூறுவீராகاَفَلَاஅப்படியிருக்க நீங்கள்تَتَّقُوْنَஅஞ்சமாட்டீர்களா
குல் மய் யர்Zஜுகுகும் மினஸ் ஸமா'இ வல் அர்ளி அம்ம(ன்)ய் யம்லிகுஸ் ஸம்'அ வல் அBப்ஸார வ மய் யுக்ரிஜுல் ஹய்ய மினல் மய்யிதி வ யுக்ரிஜுல் மய்யித மினல் ஹய்யி வ மய் யுதBப்Bபிருல் அம்ர்; Fபஸ யகூலூனல் லாஹ்; Fபகுல் அFபலா தத்தகூன்
“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَقُّ ۚ فَمَاذَا بَعْدَ الْحَقِّ اِلَّا الضَّلٰلُ ۖۚ فَاَنّٰی تُصْرَفُوْنَ ۟
فَذٰلِكُمُஅத்தகையவனேاللّٰهُஅல்லாஹ்رَبُّكُمُஉங்கள் இறைவன்الْحَقُّ ۚஉண்மையானவன்فَمَا ذَاவேறு என்னبَعْدَபிறகுالْحَقِّசத்தியத்திற்குப்اِلَّاதவிரالضَّلٰلُ ۖۚவழிகேடுفَاَنّٰیஆகவே எவ்வாறுتُصْرَفُوْنَநீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
Fபதாலிகுமுல் லாஹு ரBப்Bபுகுமுல் ஹக்க்; Fபமாதா Bபஃதல் ஹக்கி இல்லள் ளலாலு Fப அன்ன துஸ்ரFபூன்
உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
كَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَی الَّذِیْنَ فَسَقُوْۤا اَنَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
كَذٰلِكَஅவ்வாறேحَقَّتْஉறுதியாகிவிட்டதுكَلِمَتُவாக்குرَبِّكَஉமது இறைவனின்عَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்فَسَقُوْۤاவரம்பு மீறினார்களோاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَاமாட்டார்கள்یُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள்
கதாலிக ஹக்கத் கலிமது ரBப்Bபிக 'அலல் லதீன Fபஸகூ அன்னஹும் லா யு'மினூன்
பாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
قُلْ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ ؕ قُلِ اللّٰهُ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
قُلْகூறுவீராகهَلْஉண்டாمِنْஇருந்துشُرَكَآىِٕكُمْஉங்கள் இணைத்தெய்வங்களில்مَّنْஎவரேனும்یَّبْدَؤُاதொடங்குகிறாரோالْخَلْقَபடைப்பைثُمَّபின்னர்یُعِیْدُهٗ ؕஅதனை மீண்டும் படைக்கிறாரோقُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்یَبْدَؤُاதொடங்குகிறான்الْخَلْقَபடைப்பைثُمَّபின்னர்یُعِیْدُهٗஅதனை மீண்டும் படைக்கிறான்فَاَنّٰیஅவ்வாறிருக்க எவ்வாறுتُؤْفَكُوْنَநீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்
குல் ஹல் மின் ஷுரகா 'இகும் மய் யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹ்; குலில் லாஹு யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ Fப அன்னா து'Fபகூன்
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா, என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை மீண்டும் படைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.
قُلْ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ ؕ قُلِ اللّٰهُ یَهْدِیْ لِلْحَقِّ ؕ اَفَمَنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ اَحَقُّ اَنْ یُّتَّبَعَ اَمَّنْ لَّا یَهِدِّیْۤ اِلَّاۤ اَنْ یُّهْدٰی ۚ فَمَا لَكُمْ ۫ كَیْفَ تَحْكُمُوْنَ ۟
قُلْகூறுவீராகهَلْஇருக்கிறார்களாمِنْஇருந்துشُرَكَآىِٕكُمْஉங்கள் கூட்டாளிகளில்مَّنْஎவரேனும்یَّهْدِیْۤவழிகாட்டுபவர்اِلَیபக்கம்الْحَقِّ ؕசத்தியத்தின்قُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்یَهْدِیْவழிகாட்டுகிறான்لِلْحَقِّ ؕசத்தியத்திற்குاَفَمَنْஅப்படியானால் எவர்یَّهْدِیْۤவழிகாட்டுகிறாரோاِلَیபக்கம்الْحَقِّசத்தியத்தின்اَحَقُّஅதிக தகுதியானவராاَنْபின்பற்றப்یُّتَّبَعَபடுவதற்குاَمَّنْஅல்லது எவர்لَّاமாட்டாரோیَهِدِّیْۤநேர்வழி பெறاِلَّاۤதவிரاَنْஅவர்یُّهْدٰی ۚநேர்வழி காட்டப்பட்டால்فَمَاஅப்படியிருக்க என்னلَكُمْ ۫உங்களுக்குكَیْفَஎவ்வாறுتَحْكُمُوْنَதீர்ப்பளிக்கிறீர்கள்
குல் ஹல் மின் ஷுரகா 'இகும் மய் யஹ்தீ இலல் ஹக்க்; குலில் லாஹு யஹ்தீ லில்ஹக்க்; அFபமய் யஹ்தீ இலல் ஹக்கி அஹக்கு அய் யுத்தBப'அ அம்மல் லா யஹித்தீ இல்லா அய் யுஹ்தா Fபமா லகும் கய்Fப தஹ்குமூன்
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக; அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.
وَمَا یَتَّبِعُ اَكْثَرُهُمْ اِلَّا ظَنًّا ؕ اِنَّ الظَّنَّ لَا یُغْنِیْ مِنَ الْحَقِّ شَیْـًٔا ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِمَا یَفْعَلُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைیَتَّبِعُபின்பற்றுகிறார்கள்اَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்اِلَّاதவிரظَنًّا ؕஊகத்தையேاِنَّநிச்சயமாகالظَّنَّஊகம்لَاஇல்லைیُغْنِیْபயன்தரும்مِنَஎதிராகالْحَقِّசத்தியத்திற்குشَیْـًٔا ؕசிறிதளவும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِمَاஎவற்றைیَفْعَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோ
வமா யத்தBபி'உ அக்தருஹும் இல்லா ளன்னா; இன்னள் ளன்ன லா யுக்னீ மினல் ஹக்கி ஷய்'ஆ; இன்னல் லாஹ 'அலீமுன் Bபிமா யFப்'அலூன்
ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
وَمَا كَانَ هٰذَا الْقُرْاٰنُ اَنْ یُّفْتَرٰی مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ تَصْدِیْقَ الَّذِیْ بَیْنَ یَدَیْهِ وَتَفْصِیْلَ الْكِتٰبِ لَا رَیْبَ فِیْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟۫
وَ مَاமேலும் இல்லைكَانَஆகும்هٰذَاஇந்தالْقُرْاٰنُகுர்ஆன்اَنْஎன்றுیُّفْتَرٰیஇட்டுக்கட்டப்படمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைوَ لٰكِنْஆனால்تَصْدِیْقَஉண்மைப்படுத்துவதாகும்الَّذِیْஎதனைبَیْنَமுன்னால்یَدَیْهِஉள்ளதைوَ تَفْصِیْلَமேலும் விளக்கமாகும்الْكِتٰبِவேதத்தின்لَاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهِஅதில்مِنْஇருந்துرَّبِّஇறைவன்الْعٰلَمِیْنَ۫அகிலங்களின்
வமா கான ஹாதல் குர்'ஆனு அய் யுFப்தரா மின் தூனில் லாஹி வ லாகின் தஸ்தீகல் லதீ Bபய்ன யதய்ஹி வ தFப்ஸீலல் கிதாBபி லா ரய்Bப Fபீஹீ மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை.
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ قُلْ فَاْتُوْا بِسُوْرَةٍ مِّثْلِهٖ وَادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اَمْஅல்லதுیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களாافْتَرٰىهُ ؕஇதனை அவர் இட்டுக்கட்டினார்قُلْநீர் கூறுவீராகفَاْتُوْاஎனவே கொண்டு வாருங்கள்بِسُوْرَةٍஓர் அத்தியாயத்தைمِّثْلِهٖஇதனைப் போன்றوَ ادْعُوْاமேலும் அழையுங்கள்مَنِஎவரைاسْتَطَعْتُمْஉங்களால் முடியுமோمِّنْஅன்றிدُوْنِவேறுاللّٰهِஅல்லாஹ்வைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
'அம் யகூலூனFப் தராஹு குல் Fப'தூ Bபி ஸூரதின் மித்லிஹீ வத்'ஊ மனிஸ் ததஃதும் மின் தூனில் லாஹி இன் குன்தும் ஸாதிகீன்
இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று.
بَلْ كَذَّبُوْا بِمَا لَمْ یُحِیْطُوْا بِعِلْمِهٖ وَلَمَّا یَاْتِهِمْ تَاْوِیْلُهٗ ؕ كَذٰلِكَ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِیْنَ ۟
بَلْமாறாகكَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தார்கள்بِمَاஎதனைلَمْஇல்லைیُحِیْطُوْاஅவர்கள் சூழ்ந்தறியبِعِلْمِهٖஅதன் அறிவைوَ لَمَّاமேலும் இதுவரைیَاْتِهِمْஅவர்களுக்கு வரவில்லையோتَاْوِیْلُهٗ ؕஅதன் விளக்கம்كَذٰلِكَஇவ்வாறேكَذَّبَபொய்ப்பித்தனர்الَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்னால்فَانْظُرْஎனவே நீர் நோக்குவீராகكَیْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களின்
Bபல் கத்தBபூ Bபிமா லம் யுஹீதூ Bபி'இல்மிஹீ வ லம்மா ய'திஹிம் த'வீலுஹ்; கதாலிக கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுத் ளாலிமீன்
அப்படியல்ல; அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.
وَمِنْهُمْ مَّنْ یُّؤْمِنُ بِهٖ وَمِنْهُمْ مَّنْ لَّا یُؤْمِنُ بِهٖ ؕ وَرَبُّكَ اَعْلَمُ بِالْمُفْسِدِیْنَ ۟۠
وَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْஎவர்یُّؤْمِنُநம்பிக்கை கொள்கிறாரோبِهٖஅதனைوَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْஎவர்لَّاஇல்லைیُؤْمِنُநம்பிக்கை கொள்கிறாரோبِهٖ ؕஅதனைوَ رَبُّكَமேலும் உமது இறைவன்اَعْلَمُநன்கறிந்தவன்بِالْمُفْسِدِیْنَ۠குழப்பம் செய்பவர்களை
வ மின்ஹும் மய் யு 'மினு Bபிஹீ வ மின்ஹும் மல் லா யு'மினு Bபிஹ்; வ ரBப்Bபுக அஃலமு Bபில்முFப்ஸிதீன்
அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர்; இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும், உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான்.
وَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ لِّیْ عَمَلِیْ وَلَكُمْ عَمَلُكُمْ ۚ اَنْتُمْ بَرِیْٓـُٔوْنَ مِمَّاۤ اَعْمَلُ وَاَنَا بَرِیْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ۟
وَ اِنْமேலும் ஒருவேளைكَذَّبُوْكَஉம்மை அவர்கள் பொய்ப்பித்தால்فَقُلْநீர் கூறுவீராகلِّیْஎனக்குعَمَلِیْஎனது செயல்وَ لَكُمْமேலும் உங்களுக்குعَمَلُكُمْ ۚஉங்களது செயல்اَنْتُمْநீங்கள்بَرِیْٓـُٔوْنَசம்பந்தமற்றவர்கள்مِمَّاۤஎதிலிருந்துاَعْمَلُநான் செய்கிறேனோوَ اَنَاமேலும் நான்بَرِیْٓءٌசம்பந்தமற்றவன்مِّمَّاஎதிலிருந்துتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
வ இன் கத்தBபூக Fபகுல் லீ 'அமலீ வ லகும் 'அமலுகும் அன்தும் Bபரீ'ஊன மிம்மா அஃமலு வ அன Bபரீ'உம் மிம்மா தஃமலூன்
உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக.
وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُوْنَ اِلَیْكَ ؕ اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوْا لَا یَعْقِلُوْنَ ۟
وَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْஎவர்یَّسْتَمِعُوْنَசெவிமடுக்கிறார்களோاِلَیْكَ ؕஉம்மிடம்اَفَاَنْتَஅப்படியிருக்க நீராتُسْمِعُகேட்கச் செய்வீர்الصُّمَّசெவிடர்களைوَ لَوْஇருந்தபோதிலும்كَانُوْاஅவர்கள்لَاஇல்லைیَعْقِلُوْنَவிளங்குகிறார்கள்
வ மின்ஹும் மய் யஸ்தமி'ஊன இலய்க்; அFப அன்த துஸ்மி'உஸ் ஸும்ம வ லவ் கானூ லா யஃகிலூன்
இன்னும் உம் வார்த்தைகளைக் கேட்பவர்கள் (போல் பாவனை) செய்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர் - எதுவுமே விளங்கிக் கொள்ள இயலாச் செவிடர்களை நீர் கேட்கும்படிச் செய்ய முடியுமா?
وَمِنْهُمْ مَّنْ یَّنْظُرُ اِلَیْكَ ؕ اَفَاَنْتَ تَهْدِی الْعُمْیَ وَلَوْ كَانُوْا لَا یُبْصِرُوْنَ ۟
وَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْசிலர்یَّنْظُرُபார்க்கின்றனர்اِلَیْكَ ؕஉம்மைاَفَاَنْتَஅப்படியிருக்க நீராتَهْدِیநேர்வழி காட்டுவீர்الْعُمْیَகுருடர்களுக்குوَ لَوْஎன்றாலும்كَانُوْاஅவர்கள்لَاபார்க்கیُبْصِرُوْنَமாட்டார்கள்
வ மின்ஹும் மய் யன்ளுரு இலய்க்; அFப அன்த தஹ்தில் 'உம்ய வ லவ் கானூ லா யுBப்ஸிரூன்
உம்மைப் பார்ப்போரும் அவர்களில் இருக்கிறார்கள் - (எதுவும்) பார்க்க இயலாத குருடர்களை நீர் நேர்வழியில் செலுத்த முடியுமா?
اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ النَّاسَ شَیْـًٔا وَّلٰكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیَظْلِمُஅநீதி இழைக்கிறான்النَّاسَமனிதர்களுக்குشَیْـًٔاசிறிதளவும்وَّ لٰكِنَّஆனால்النَّاسَமனிதர்கள்اَنْفُسَهُمْதங்களுக்குத் தாங்களேیَظْلِمُوْنَஅநீதி இழைக்கிறார்கள்
இன்னல் லாஹ லா யள்லிமுன் னாஸ ஷய்'அ(ன்)வ் வ லாகின் னன்னாஸ அன்Fபுஸஹும் யள்லிமூன்
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.
وَیَوْمَ یَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ یَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ یَتَعَارَفُوْنَ بَیْنَهُمْ ؕ قَدْ خَسِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟
وَ یَوْمَமேலும் அந்நாளில்یَحْشُرُهُمْஅவன் அவர்களை ஒன்றுதிரட்டுவான்كَاَنْபோன்றேلَّمْஇல்லைیَلْبَثُوْۤاஅவர்கள் தங்கியிருக்கاِلَّاதவிரسَاعَةًஒரு நாழிகைمِّنَஇருந்துالنَّهَارِபகலில்یَتَعَارَفُوْنَஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொள்வார்கள்بَیْنَهُمْ ؕதங்களுக்குள்قَدْநிச்சயமாகخَسِرَநஷ்டமடைந்தனர்الَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِلِقَآءِசந்திப்பதைاللّٰهِஅல்லாஹ்வைوَ مَاமேலும் இல்லைكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்مُهْتَدِیْنَநேர்வழி பெற்றவர்களாக
வ யவ்ம யஹ்ஷுருஹும் க 'அன் லம் யல்Bபதூ இல்லா ஸா'அதன் மினன் னஹாரி யத'ஆரFபூன Bபய்னஹும்; கத் கஸிரல் லதீன கத்தBபூ Bபி லிகா'இல் லாஹி வமா கானூ முஹ்ததீன்
அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்: அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.
وَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِیْدٌ عَلٰی مَا یَفْعَلُوْنَ ۟
وَ اِمَّاமேலும் ஒருவேளைنُرِیَنَّكَஉமக்கு நாம் காட்டினாலும்بَعْضَசிலவற்றைالَّذِیْஎதைنَعِدُهُمْஅவர்களுக்கு நாம் வாக்களிக்கிறோமோاَوْஅல்லதுنَتَوَفَّیَنَّكَஉம்மை நாம் மரணிக்கச் செய்தாலும்فَاِلَیْنَاஆக நம்மிடமேمَرْجِعُهُمْஅவர்களின் திரும்புதல் இருக்கிறதுثُمَّபின்னர்اللّٰهُஅல்லாஹ்شَهِیْدٌசாட்சியாக இருக்கிறான்عَلٰیமீதுمَاஎதைیَفْعَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோ
வ இம்ம னுரியன்னக Bபஃளல் லதீ ன'இதுஹும் அவ் னதவFப்Fபயன்னக Fப இலய்னா மர்ஜி'உஹும் தும்மல் லாஹு ஷஹீதுன் 'அலா மா யFப்'அலூன்
(உம் வாழ்நாளிலேயே) நாம் அவர்களுக்கு வாக்களித்த (வேதனைகளில்) ஒரு பகுதி (சம்பவிப்பதை) நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு முன்னமேயே) நாம் உம் ஆத்மாவை கைப்பற்றிக் கொண்டாலும் - (எப்படியிருப்பினும்) அவர்கள் நம்மிடமே திரும்பி வர வேண்டியுள்ளது; இறுதியில், அவர்கள் செய்வதற்கெல்லாம் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.
وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ ۚ فَاِذَا جَآءَ رَسُوْلُهُمْ قُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَ لِكُلِّமேலும் ஒவ்வொருاُمَّةٍசமுதாயத்திற்கும்رَّسُوْلٌ ۚஒரு தூதர்فَاِذَاஆகவே எப்போதுجَآءَவந்தாரோرَسُوْلُهُمْஅவர்களுடைய தூதர்قُضِیَதீர்ப்பளிக்கப்படும்بَیْنَهُمْஅவர்களுக்கிடையேبِالْقِسْطِநீதியுடன்وَ هُمْமேலும் அவர்கள்لَاமாட்டார்கள்یُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்பட
வ லிகுல்லி உம்மதிர் ரஸூலுன் Fப இதா ஜா'அ ரஸூலுஹும் குளிய Bபய்னஹும் Bபில்கிஸ்தி வ ஹும் லா யுள்லமூன்
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்مَتٰیஎப்பொழுதுهٰذَاஇந்தالْوَعْدُவாக்குறுதிاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்صٰدِقِیْنَஉண்மையாளர்கள்
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
“நீங்கள் உண்மையாளராக இருந்தால் (அச்ச மூட்டப்படும் வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்போது (அமலுக்கு வரும்)” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِیْ ضَرًّا وَّلَا نَفْعًا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ لِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ؕ اِذَا جَآءَ اَجَلُهُمْ فَلَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟
قُلْகூறுவீராகلَّاۤஇல்லைاَمْلِكُநான் அதிகாரம் பெற்றுள்ளேன்لِنَفْسِیْஎனக்கேضَرًّاதீமையைوَّ لَاமேலும் இல்லைنَفْعًاநன்மையைاِلَّاதவிரمَاஎதைشَآءَநாடினானோاللّٰهُ ؕஅல்லாஹ்لِكُلِّஒவ்வொருاُمَّةٍசமுதாயத்திற்கும்اَجَلٌ ؕஒரு தவணை உண்டுاِذَاஎப்போதுجَآءَவந்துவிடுகிறதோاَجَلُهُمْஅவர்களின் தவணைفَلَاஅப்போது இல்லைیَسْتَاْخِرُوْنَஅவர்கள் பிந்துவார்கள்سَاعَةًஒரு நாழிகைوَّ لَاமேலும் இல்லைیَسْتَقْدِمُوْنَஅவர்கள் முந்துவார்கள்
குல் லா அம்லிகு லினFப்ஸீ ளர்ர(ன்)வ் வலா னFப்'அன் இல்லா மா ஷா'அல் லாஹ்; லிகுல்லி உம்மதின் அஜலுன் இதா ஜா'அ அஜலுஹும் Fப லா யஸ்த'கிரூன ஸா'அத(ன்)வ் வலா யஸ்தக்திமூன்
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையோ, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”
قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُهٗ بَیَاتًا اَوْ نَهَارًا مَّاذَا یَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاَرَءَیْتُمْநீங்கள் கவனித்தீர்களாاِنْஒருவேளைاَتٰىكُمْஉங்களிடம் வந்தால்عَذَابُهٗஅவனுடைய வேதனைبَیَاتًاஇரவில்اَوْஅல்லதுنَهَارًاபகலில்مَّا ذَاஎதனைیَسْتَعْجِلُஅவசரப்படுத்துகிறார்கள்مِنْهُஅதிலிருந்துالْمُجْرِمُوْنَகுற்றவாளிகள்
குல் 'அ ர'அய்தும் இன் அதாகும் 'அதாBபுஹூ Bபயாதன் அவ் னஹாரன் மாதா யஸ்தஃஜிலு மின்ஹுல் முஜ்ரிமூன்
(நபியே!) நீர் கூறுவீராக: “அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால் - (அதைத் தடுத்துவிட முடியுமா? என்பதை) கவனித்தீர்களா? குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?
اَثُمَّ اِذَا مَا وَقَعَ اٰمَنْتُمْ بِهٖ ؕ آٰلْـٰٔنَ وَقَدْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟
اَثُمَّபின்னராاِذَاபொழுதுمَاஅதுوَقَعَநிகழ்ந்துவிட்டاٰمَنْتُمْநீங்கள் நம்பிக்கை கொள்வீர்களா?بِهٖ ؕஅதைآٰلْـٰٔنَஇப்பொழுதா?وَ قَدْதிண்ணமாகكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்بِهٖஅதற்காகتَسْتَعْجِلُوْنَஅவசரப்பட்டுக் கொண்டு
அ தும்ம இதா மா வக'அ ஆமன்தும் Bபிஹ்; ஆல் 'ஆன வ கத் குன்தும் Bபிஹீ தஸ்தஃஜிலூன்
“அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அவ்வேதனை வந்ததும்) இதோ! நீங்கள் எது (வர வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது வந்து விட்டது” (என்று தான் கூறப்படும்).
ثُمَّ قِیْلَ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ ۚ هَلْ تُجْزَوْنَ اِلَّا بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟
ثُمَّபிறகுقِیْلَகூறப்படும்لِلَّذِیْنَஎவர்களுக்குظَلَمُوْاஅநியாயம் செய்தார்களோذُوْقُوْاசுவையுங்கள்عَذَابَவேதனையைالْخُلْدِ ۚநிலையானهَلْஎன்னتُجْزَوْنَகூலி வழங்கப்படுவீர்கள்اِلَّاதவிரبِمَاஎதற்காகكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَكْسِبُوْنَசம்பாதித்துக் கொண்டிருந்தீர்களோ
தும்ம கீல லில் லதீன ளலமூ தூகூ 'அதாBபல் குல்தி ஹல் துஜ்Zஜவ்ன இல்லா Bபிமா குன்தும் தக்ஸிBபூன்
அன்றியும், அந்த அநியாயக்காரர்களை நோக்கி; “என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய இவ்வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள் - நீங்கள் சம்பாதித்ததைத் தவிர (வேறு) கூலி கொடுக்கப்படுவீர்களா?” என்று கூறப்படும்.
وَیَسْتَنْۢبِـُٔوْنَكَ اَحَقٌّ هُوَ ؔؕ قُلْ اِیْ وَرَبِّیْۤ اِنَّهٗ لَحَقٌّ ؔؕۚ وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ ۟۠
وَ یَسْتَنْۢبِـُٔوْنَكَமேலும் அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள்اَحَقٌّஉண்மையாهُوَ ؔؕஅதுقُلْகூறுவீராகاِیْஆம்وَ رَبِّیْۤஎன் இறைவன் மீது சத்தியமாகاِنَّهٗநிச்சயமாக அதுلَحَقٌّ ؔؕۚஉண்மையானதேوَ مَاۤமேலும் இல்லைاَنْتُمْநீங்கள்بِمُعْجِزِیْنَ۠தப்பிக்கக் கூடியவர்கள்
வ யஸ்தன்Bபி'ஊனக 'அ ஹக்குன் ஹுவ குல் ஈ வ ரBப்Bபீ இன்னஹூ லஹக்க்; வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன்
மேலும் “அது உண்மை தானா?” என்று (நபியே! அவர்கள்) உம்மிடம் வினவுகிறார்கள்; “ஆம்! என் இறைவன் மீது சத்தியமாய் நிச்சயமாக அது உண்மையே. (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது” என்று கூறுவீராக.
وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِی الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖ ؕ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ۚ وَقُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَ لَوْமேலும் இருந்தால்اَنَّநிச்சயமாகلِكُلِّஒவ்வொருنَفْسٍஆத்மாவிற்கும்ظَلَمَتْஅநியாயம் செய்தمَاஎவையெல்லாம்فِیஇல்الْاَرْضِபூமிلَافْتَدَتْஈடாகக் கொடுத்திருக்கும்بِهٖ ؕஅதைக் கொண்டுوَ اَسَرُّواமேலும் அவர்கள் மறைப்பார்கள்النَّدَامَةَகைசேதத்தைلَمَّاபொழுதுرَاَوُاஅவர்கள் கண்டالْعَذَابَ ۚவேதனையைوَ قُضِیَமேலும் தீர்ப்பளிக்கப்படும்بَیْنَهُمْஅவர்களுக்கிடையேبِالْقِسْطِநீதியுடன்وَ هُمْமேலும் அவர்கள்لَاஇல்லைیُظْلَمُوْنَஅநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
வ லவ் அன்ன லிகுல்லி னFப்ஸின் ளலமத் மா Fபில் அர்ளி லFப்ததத் Bபிஹ்; வ அஸர்ருன் னதாமத லம்மா ர அவுல் 'அதாBப், வ குளிய Bபய்னஹும் Bபில்கிஸ்த்; வ ஹும் லா யுள்லமூன்
(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.
اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ اَلَاۤ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
اَلَاۤஅறிந்து கொள்கاِنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்வுக்கேمَاஎவையெல்லாம்فِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமிاَلَاۤஅறிந்து கொள்கاِنَّநிச்சயமாகوَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّஉண்மையானதுوَّ لٰكِنَّஆனால்اَكْثَرَهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஅறியیَعْلَمُوْنَமாட்டார்கள்
அலா இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; அலா இன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்பதைத் திடமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதியும் நிச்சயமாகவே உண்மையானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் - எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிந்து கொள்வதில்லை.
هُوَ یُحْیٖ وَیُمِیْتُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
هُوَஅவனேیُحْیٖஉயிர்ப்பிக்கிறான்وَ یُمِیْتُமேலும் மரணிக்கச் செய்கிறான்وَ اِلَیْهِஇன்னும் அவனிடமேتُرْجَعُوْنَநீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்
ஹுவ யுஹ்யீ வ யுமீது வ இலய்ஹி துர்ஜ'ஊன்
அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரணிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِی الصُّدُوْرِ ۙ۬ وَهُدًی وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۟
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேقَدْநிச்சயமாகجَآءَتْكُمْஉங்களிடம் வந்துள்ளதுمَّوْعِظَةٌஓர் அறிவுரைمِّنْஇடமிருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனின்وَ شِفَآءٌநிவாரணமும்لِّمَاஎவற்றுக்குفِیஉள்ளதோالصُّدُوْرِ ۙ۬நெஞ்சங்களில்وَ هُدًیநேர்வழியும்وَّ رَحْمَةٌஅருளும்لِّلْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்கு
யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அத்கும் மவ்'இளதுன் மிர் ரBப்Bபிகும் வ ஷிFபா'உல் லிமா Fபிஸ் ஸுதூரி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லில் மு'மினீன்
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْیَفْرَحُوْا ؕ هُوَ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟
قُلْகூறுவீராகبِفَضْلِஅருட்கொடையினால்اللّٰهِஅல்லாஹ்வின்وَ بِرَحْمَتِهٖமேலும் அவனது கருணையினால்فَبِذٰلِكَஆகவே அதைக் கொண்டுفَلْیَفْرَحُوْا ؕஅவர்கள் மகிழ்ச்சியடையட்டும்هُوَஅதுخَیْرٌசிறந்ததுمِّمَّاஎவற்றைவிடیَجْمَعُوْنَஅவர்கள் சேகரிக்கிறார்களோ
குல் Bபி Fபள்லில் லாஹி வ Bபி ரஹ்மதிஹீ Fப Bபி தாலிக Fபல் யFப்ரஹூ ஹுவ கய்ருன் மிம்மா யஜ்ம'ஊன்
“அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்.
قُلْ اَرَءَیْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ؕ قُلْ آٰللّٰهُ اَذِنَ لَكُمْ اَمْ عَلَی اللّٰهِ تَفْتَرُوْنَ ۟
قُلْகூறுவீராகاَرَءَیْتُمْநீங்கள் கவனித்தீர்களா?مَّاۤஎதனைاَنْزَلَஇறக்கி வைத்தானோاللّٰهُஅல்லாஹ்لَكُمْஉங்களுக்குمِّنْஇருந்துرِّزْقٍஉணவைفَجَعَلْتُمْபின்பு நீங்கள் ஆக்கினீர்கள்مِّنْهُஅதிலிருந்துحَرَامًاதடுக்கப்பட்டதாகவும்وَّ حَلٰلًا ؕமற்றும் அனுமதிக்கப்பட்டதாகவும்قُلْகூறுவீராகآٰللّٰهُஅல்லாஹ்வா?اَذِنَஅனுமதி அளித்தான்لَكُمْஉங்களுக்குاَمْஅல்லதுعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்تَفْتَرُوْنَநீங்கள் இட்டுக்கட்டுகிறீர்களா?
குல் அர'அய்தும் மா அன்Zஜலல் லாஹு லகும் மிர் ரிZஜ்கின் Fபஜ'அல்தும் மின்ஹு ஹராம(ன்)வ் வ ஹலாலன் குல் ஆல்லாஹு அதின லகும்; அம் 'அலல் லாஹி தFப்தரூன்
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”
وَمَا ظَنُّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ یَوْمَ الْقِیٰمَةِ ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَشْكُرُوْنَ ۟۠
وَ مَاமேலும் என்னظَنُّஎண்ணம்الَّذِیْنَஎவர்கள்یَفْتَرُوْنَஇட்டுக்கட்டுகிறார்களோعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்الْكَذِبَபொய்யைیَوْمَநாளில்الْقِیٰمَةِ ؕமறுமைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَذُوْநிச்சயமாக உடையவன்فَضْلٍஅருட்கொடைعَلَیமீதுالنَّاسِமனிதர்கள்وَ لٰكِنَّஎனினும்اَكْثَرَهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஇல்லைیَشْكُرُوْنَ۠நன்றி செலுத்துகிறார்கள்
வமா ளன்னுல் லதீன யFப்தரூன 'அலல் லாஹில் கதிBப யவ்மல் கியாமஹ்; இன்னல் லாஹ லதூ Fபள்லின் 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரஹும் லா யஷ்குரூன்
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
وَمَا تَكُوْنُ فِیْ شَاْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَیْكُمْ شُهُوْدًا اِذْ تُفِیْضُوْنَ فِیْهِ ؕ وَمَا یَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
وَ مَاமேலும் எந்தتَكُوْنُநீர் இருக்கிறீரோفِیْஇல்شَاْنٍகாரியம்وَّ مَاமேலும் எதனைتَتْلُوْاநீர் ஓதுகிறீரோمِنْهُஅதிலிருந்துمِنْஎந்தقُرْاٰنٍகுர்ஆனைوَّ لَاமேலும் இல்லைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்கள்مِنْஎந்தعَمَلٍசெயலைاِلَّاதவிரكُنَّاநாம் இருக்கிறோம்عَلَیْكُمْஉங்கள் மீதுشُهُوْدًاசாட்சிகளாகاِذْபோதுتُفِیْضُوْنَநீங்கள் ஈடுபடுகிறீர்களோفِیْهِ ؕஅதில்وَ مَاமேலும் இல்லைیَعْزُبُமறையாதுعَنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்مِنْஓர்مِّثْقَالِஎடையளவும்ذَرَّةٍஅணுவின்فِیஇல்الْاَرْضِபூமிوَ لَاமேலும் இல்லைفِیஇல்السَّمَآءِவானம்وَ لَاۤமேலும் இல்லைاَصْغَرَசிறியதோمِنْவிடذٰلِكَஅதைوَ لَاۤமேலும் இல்லைاَكْبَرَபெரியதோاِلَّاதவிரفِیْஇல்كِتٰبٍஏடுمُّبِیْنٍதெளிவான
வமா தகூனு Fபீ ஷ'னி(ன்)வ் வமா தத்லூ மின்ஹு மின் குர்'ஆனி(ன்)வ் வலா தஃமலூன மின் 'அமலின் இல்லா குன்னா 'அலய்கும் ஷுஹூதன் இத் துFபீளூன Fபீஹ்; வமா யஃZஜுBபு 'அர் ரBப்Bபிக மின் மித்காலி தர்ரதின் Fபில் அர்ளி வலா Fபிஸ் ஸமா'இ வ லா அஸ்கர மின் தாலிக வ லா அக்Bபர இல்லா Fபீ கிதாBபின் முBபீன்
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், “குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைந்து விடுவதில்லை. இதை விடச் சிறியதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
اَلَاۤ اِنَّ اَوْلِیَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۚۖ
اَلَاۤஅறிந்து கொள்ளுங்கள்اِنَّநிச்சயமாகاَوْلِیَآءَநேசர்கள்اللّٰهِஅல்லாஹ்வின்لَاஇல்லைخَوْفٌஅச்சம்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَاமேலும்هُمْஅவர்கள்یَحْزَنُوْنَۚۖகவலைப்பட மாட்டார்கள்
அலா இன்னா அவ்லியா'அல் லாஹி லா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟ؕ
الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ كَانُوْاமேலும் அவர்கள்یَتَّقُوْنَؕஇறையச்சமுடையவர்களாக இருந்தார்களோ
அல்லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
لَهُمُ الْبُشْرٰی فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ؕ لَا تَبْدِیْلَ لِكَلِمٰتِ اللّٰهِ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ؕ
لَهُمُஅவர்களுக்குالْبُشْرٰیநற்செய்திفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகوَ فِیமேலும் இல்الْاٰخِرَةِ ؕமறுமைلَاஇல்லைتَبْدِیْلَமாற்றம்لِكَلِمٰتِவார்த்தைகளுக்குاللّٰهِ ؕஅல்லாஹ்வின்ذٰلِكَஅதுهُوَதான்الْفَوْزُவெற்றிالْعَظِیْمُؕமகத்தான
லஹுமுல் Bபுஷ்ரா Fபில் ஹயாதித் துன்யா வ Fபில் ஆகிரஹ்; லா தBப்தீல லி கலிமாதில் லாஹ்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.
وَلَا یَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِیْعًا ؕ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَ لَاமேலும் வேண்டாம்یَحْزُنْكَஉம்மைக் கவலையடையச் செய்யقَوْلُهُمْ ۘஅவர்களின் கூற்றுاِنَّநிச்சயமாகالْعِزَّةَகண்ணியம்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேجَمِیْعًا ؕமுழுவதும்هُوَஅவனேالسَّمِیْعُசெவியேற்பவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
வ லா யஹ்Zஜுன்க கவ்லுஹும்; இன்னல் 'இZஜ்Zஜத லில்லாஹி ஜமீ'ஆ; ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
(நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ ؕ وَمَا یَتَّبِعُ الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ شُرَكَآءَ ؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟
اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்اِنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்வுக்கேمَنْஎவர்فِیஉள்ளாரோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَنْமேலும் எவர்فِیஉள்ளாரோالْاَرْضِ ؕபூமியில்وَ مَاமேலும் இல்லைیَتَّبِعُபின்பற்றுகிறார்கள்الَّذِیْنَஎவர்கள்یَدْعُوْنَஅழைக்கிறார்களோمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைشُرَكَآءَ ؕஇணை தெய்வங்களைاِنْஇல்லைیَّتَّبِعُوْنَஅவர்கள் பின்பற்றுகிறார்கள்اِلَّاதவிரالظَّنَّஊகத்தைوَ اِنْமேலும் இல்லைهُمْஅவர்கள்اِلَّاதவிரیَخْرُصُوْنَபொய்யுரைக்கிறார்கள்
அலா இன்ன லில்லாஹி மன் Fபிஸ் ஸமாவாதி வ மன் Fபில் அர்ள்; வமா யத்தBபி'உல் லதீன யத்'ஊன மின் தூனில் லாஹி ஷுரகா'; இ(ன்)ய் யத்தBபி'ஊன இல்லள் ளன்ன வ இன் ஹும் இல்லா யக்ருஸூன்
அறிந்து கொள்ளுங்கள் வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின்பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே.
هُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِتَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّسْمَعُوْنَ ۟
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவனென்றால்جَعَلَஆக்கினான்لَكُمُஉங்களுக்குالَّیْلَஇரவைلِتَسْكُنُوْاநீங்கள் ஓய்வெடுப்பதற்காகفِیْهِஅதில்وَ النَّهَارَபகலையும்مُبْصِرًا ؕவெளிச்சமானதாகاِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதிலேلَاٰیٰتٍஅத்தாட்சிகள்لِّقَوْمٍசமூகத்தாருக்குیَّسْمَعُوْنَசெவிமடுக்கும்
ஹுவல் லதீ ஜ'அல லகுமுல் லய்ல லிதஸ்குனூ Fபீஹி வன்னஹார முBப்ஸிரா; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லி கவ்மி(ன்)ய் யஸ்ம'ஊன்
நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காக இரவையும், (பொருட்களைப்) பார்ப்பதற்கு ஏற்றவாறு பகலையும் உங்களுக்காக அவனே உண்டாக்கினான்; நிச்சயமாக இதில் (அவன் வசனங்களைச்) செவிசாய்த்துக் (கவனமாகக்) கேட்கும் மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ هُوَ الْغَنِیُّ ؕ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍ بِهٰذَا ؕ اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
قَالُواஅவர்கள் கூறினார்கள்اتَّخَذَஏற்படுத்திக்கொண்டான்اللّٰهُஅல்லாஹ்وَلَدًاஒரு மகனைسُبْحٰنَهٗ ؕஅவன் தூய்மையானவன்هُوَஅவன்الْغَنِیُّ ؕதேவையற்றவன்لَهٗஅவனுக்கே உரியதுمَاஎவைفِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ مَاஇன்னும் எவைفِیஇல்الْاَرْضِ ؕபூமிاِنْஇல்லைعِنْدَكُمْஉங்களிடம்مِّنْஎந்த ஒருسُلْطٰنٍۭஆதாரம்بِهٰذَا ؕஇதற்குاَتَقُوْلُوْنَநீங்கள் கூறுகிறீர்களாعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்مَاஎதைلَاஇல்லைتَعْلَمُوْنَநீங்கள் அறிவீர்கள்
காலுத் தகதல் லாஹு வலதன் ஸுBப்ஹானஹூ ஹுவல் கனிய்யு லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; இன் 'இன்தகும் மின் ஸுல்தானின் Bபிஹாதா; அ' தகூலூன 'அல் அல்லாஹி மா லா தஃலமூன்
அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன; (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?
قُلْ اِنَّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ لَا یُفْلِحُوْنَ ۟ؕ
قُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَفْتَرُوْنَஇட்டுக்கட்டுகிறார்களோعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்الْكَذِبَபொய்யைلَاமாட்டார்கள்یُفْلِحُوْنَؕவெற்றிபெற
குல் இன்னல் லதீன யFப்தரூன 'அல் அல்லாஹில் கதிBப லா யுFப்லிஹூன்
“அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும்.
مَتَاعٌ فِی الدُّنْیَا ثُمَّ اِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِیْقُهُمُ الْعَذَابَ الشَّدِیْدَ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟۠
مَتَاعٌசுகபோகம்فِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்ثُمَّபின்னர்اِلَیْنَاநம்மிடமேمَرْجِعُهُمْஅவர்களின் திரும்புதல்ثُمَّபின்னர்نُذِیْقُهُمُநாம் அவர்களுக்குச் சுவைக்கச் செய்வோம்الْعَذَابَவேதனையைالشَّدِیْدَகடுமையானبِمَاகாரணத்தால்كَانُوْاஅவர்கள்یَكْفُرُوْنَ۠நிராகரித்துக் கொண்டிருந்த
மதா'உன் Fபித்துன்யா தும்ம இலய்னா மர்ஜி'உஹும் தும்ம னுதீகுஹுமுல் 'அதாBபஷ் ஷதீத Bபிமா கானூ யக்Fபுரூன்
உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சுகமே யாகும்; பின்னர் அவர்கள் நம்மிடமே மீண்டும் வர வேண்டியிருக்கிறது; அப்பொழுது, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததின் காரணமாக, நாம் அவர்களைக் கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ نُوْحٍ ۘ اِذْ قَالَ لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَیْكُمْ مَّقَامِیْ وَتَذْكِیْرِیْ بِاٰیٰتِ اللّٰهِ فَعَلَی اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا یَكُنْ اَمْرُكُمْ عَلَیْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَیَّ وَلَا تُنْظِرُوْنِ ۟
وَ اتْلُமேலும் ஓதிக்காட்டுவீராகعَلَیْهِمْஅவர்களுக்குنَبَاَசெய்தியைنُوْحٍ ۘநூஹின்اِذْஅப்போதுقَالَஅவர் கூறினார்لِقَوْمِهٖதன் சமூகத்தாரிடம்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاِنْஎன்றால்كَانَஇருந்தால்كَبُرَபெரும் பாரமாகعَلَیْكُمْஉங்கள் மீதுمَّقَامِیْநான் தங்கியிருப்பதும்وَ تَذْكِیْرِیْமேலும் நான் நினைவூட்டுவதும்بِاٰیٰتِவசனங்களைக் கொண்டுاللّٰهِஅல்லாஹ்வின்فَعَلَیஎனவே மீதுاللّٰهِஅல்லாஹ்வின்تَوَكَّلْتُநான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்فَاَجْمِعُوْۤاஆகவே நீங்கள் ஒன்று திரட்டுங்கள்اَمْرَكُمْஉங்கள் காரியத்தைوَ شُرَكَآءَكُمْமேலும் உங்கள் கூட்டாளிகளையும்ثُمَّபிறகுلَاவேண்டாம்یَكُنْஇருக்கاَمْرُكُمْஉங்கள் காரியம்عَلَیْكُمْஉங்கள் மீதுغُمَّةًமறைவானதாகثُمَّபிறகுاقْضُوْۤاசெய்து முடித்து விடுங்கள்اِلَیَّஎனக்கெதிராகوَ لَاமேலும் வேண்டாம்تُنْظِرُوْنِஎனக்கு அவகாசம் அளிக்க
வத்லு 'அலய்ஹிம் னBப-அ-னூஹின் இத் கால லிகவ்மிஹீ யா கவ்மி இன் கான கBபுர 'அலய்கும் மகாமீ வ தத்கீரீ Bபி ஆயாதில் லாஹி Fப'அலல் லாஹி தவக்கல்து Fப அஜ்மி'ஊ அம்ரகும் வ ஷுரகா'அகும் தும்ம லா யகுன் அம்ருகும் 'அலய்கும் கும்மதன் தும்மக் ளூ இலய்ய வலா துன்ளிரூன்
மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.
فَاِنْ تَوَلَّیْتُمْ فَمَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍ ؕ اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ ۙ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
فَاِنْஎனவேتَوَلَّیْتُمْநீங்கள் புறக்கணித்துவிட்டால்فَمَاஆகவே இல்லைسَاَلْتُكُمْநான் உங்களிடம் கேட்டதுمِّنْஎந்த ஒருاَجْرٍ ؕகூலியையும்اِنْஇல்லைاَجْرِیَஎனது கூலிاِلَّاதவிரعَلَیமீதுاللّٰهِ ۙஅல்லாஹ்வின்وَ اُمِرْتُமேலும் நான் ஏவப்பட்டுள்ளேன்اَنْஎன்றுاَكُوْنَநான் இருக்க வேண்டும்مِنَஒருவனாகالْمُسْلِمِیْنَமுஸ்லிம்களில்
Fப இன் தவல்லய்தும் Fபமா ஸ அல்துகும் மின் அஜ்ரின்; இன் அஜ்ரிய இல்லா 'அல் அல்லாஹி வ உமிர்து அன் அகூன மினல் முஸ்லிமீன்
“ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று கூறினார்).
فَكَذَّبُوْهُ فَنَجَّیْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِی الْفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰٓىِٕفَ وَاَغْرَقْنَا الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِیْنَ ۟
فَكَذَّبُوْهُஎனவே அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்فَنَجَّیْنٰهُஎனவே நாம் அவரைக் காப்பாற்றினோம்وَ مَنْமேலும் எவர்கள்مَّعَهٗஅவருடன்فِیஇல்الْفُلْكِகப்பல்وَ جَعَلْنٰهُمْமேலும் நாம் அவர்களை ஆக்கினோம்خَلٰٓىِٕفَபிரதிநிதிகளாகوَ اَغْرَقْنَاமேலும் நாம் மூழ்கடித்தோம்الَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَا ۚநம்முடைய அத்தாட்சிகளைفَانْظُرْஎனவே நீர் கவனிப்பீராகكَیْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُنْذَرِیْنَஎச்சரிக்கப்பட்டவர்களின்
Fப கத்தBபூஹு Fப னஜ்ஜய்னாஹு வ மன் ம'அஹூ Fபில் Fபுல்கி வ ஜ'அல்னாஹும் கலா'இFப வ அக்ரக்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முன்தரீன்
அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம் - மேலும் அவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாகவும் ஆக்கினோம் - நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை மூழ்கடித்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهٖ رُسُلًا اِلٰی قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَیِّنٰتِ فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ ؕ كَذٰلِكَ نَطْبَعُ عَلٰی قُلُوْبِ الْمُعْتَدِیْنَ ۟
ثُمَّபின்னர்بَعَثْنَاநாம் அனுப்பினோம்مِنْۢஇருந்துبَعْدِهٖஅவருக்குப் பின்رُسُلًاதூதர்களைاِلٰیநோக்கிقَوْمِهِمْஅவர்களின் சமூகத்தாரிடம்فَجَآءُوْهُمْஆகவே அவர்கள் அவர்களிடம் வந்தார்கள்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَمَاஆனால் இல்லைكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்لِیُؤْمِنُوْاநம்பிக்கை கொள்வதற்குبِمَاஎதனைكَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தார்களோبِهٖஅதைمِنْஇருந்துقَبْلُ ؕமுன்னர்كَذٰلِكَஇவ்வாறேنَطْبَعُநாம் முத்திரையிடுகிறோம்عَلٰیமீதுقُلُوْبِஉள்ளங்களின்الْمُعْتَدِیْنَவரம்பு மீறுபவர்களின்
தும்ம Bப'அத்னா மின் Bபஃதிஹீ ருஸுலன் இலா கவ்மிஹிம் Fபஜா'ஊஹும் Bபில் Bபய்யினாதி Fபமா கானூ லியு'மினூ Bபிமா கத்தBபூ Bபிஹீ மின் கBப்ல்; கதாலிக னத்Bப'உ 'அலா குலூBபில் முஃததீன்
அவருக்கு பின், அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எந்த (உண்மையைப்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை - வரம்பு மீறும் இத்தகையவர்களின் நெஞ்சங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی وَهٰرُوْنَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ بِاٰیٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
ثُمَّபின்னர்بَعَثْنَاநாம் அனுப்பினோம்مِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்مُّوْسٰیமூஸாவைوَ هٰرُوْنَமேலும் ஹாரூனைاِلٰیநோக்கிفِرْعَوْنَஃபிர்அவ்னைوَ مَلَاۡىِٕهٖமேலும் அவனது தலைவர்களைبِاٰیٰتِنَاநம் அத்தாட்சிகளுடன்فَاسْتَكْبَرُوْاஎனவே அவர்கள் பெருமையடித்தார்கள்وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்قَوْمًاஒரு கூட்டத்தினராகمُّجْرِمِیْنَகுற்றவாளிகளாக
தும்ம Bப'அத்னா மின் Bபஃதிஹிம் மூஸா வ ஹாரூன இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Bபி ஆயாதினா Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மன் முஜ்ரிமீன்
இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْۤا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِیْنٌ ۟
فَلَمَّاஆகவே எப்போதுجَآءَهُمُஅவர்களிடம் வந்ததோالْحَقُّசத்தியம்مِنْஇருந்துعِنْدِنَاநம்மிடம்قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَسِحْرٌஒரு சூனியமேمُّبِیْنٌதெளிவானது
Fபலம்மா ஜா'அஹுமுல் ஹக்கு மின் 'இன்தினா காலூ இன்ன ஹாதா ல ஸிஹ்ருன் முBபீன்
நம்மிடமிருந்து அவர்களுக்குச் சத்தியம் வந்த போது, “நிச்சயமாக இது தெளிவான சூனியமே யாகும்” என்று கூறினார்கள்.
قَالَ مُوْسٰۤی اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ ؕ اَسِحْرٌ هٰذَا ؕ وَلَا یُفْلِحُ السّٰحِرُوْنَ ۟
قَالَகூறினார்مُوْسٰۤیமூஸாاَتَقُوْلُوْنَநீங்கள் கூறுகிறீர்களாلِلْحَقِّசத்தியத்தைப் பற்றிلَمَّاபோதுجَآءَكُمْ ؕஉங்களிடம் வந்தاَسِحْرٌசூனியமாهٰذَا ؕஇதுوَ لَاமேலும் இல்லைیُفْلِحُவெற்றி பெறுவர்السّٰحِرُوْنَசூனியக்காரர்கள்
காலா மூஸா 'அ தகூலூன லில் ஹக்கி லம்ம்மா ஜா'அ கும் 'அ ஸிஹ்ருன் ஹாதா வலா யுFப்லிஹுஸ் ஸாஹிரூன்
அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.
قَالُوْۤا اَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا وَتَكُوْنَ لَكُمَا الْكِبْرِیَآءُ فِی الْاَرْضِ ؕ وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِیْنَ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَجِئْتَنَاநீர் எங்களிடம் வந்திருக்கிறீராلِتَلْفِتَنَاஎங்களைத் திருப்புவதற்காகعَمَّاஎதிலிருந்துوَجَدْنَاநாங்கள் கண்டோமோعَلَیْهِஅதன் மீதுاٰبَآءَنَاஎங்கள் முன்னோர்களைوَ تَكُوْنَமேலும் ஆவதற்காகلَكُمَاஉங்கள் இருவருக்கும்الْكِبْرِیَآءُமேலாதிக்கம்فِیஇல்الْاَرْضِ ؕபூமிوَ مَاமேலும் இல்லைنَحْنُநாங்கள்لَكُمَاஉங்கள் இருவரையும்بِمُؤْمِنِیْنَநம்பிக்கை கொள்பவர்களாக
காலூ அஜி'தனா லிதல்Fபிதனா 'அம்மா வஜத்னா 'அலய்ஹி ஆBபா'அனா வ தகூன லகுமல் கிBப்ரியா'உ Fபில் அர்ளி வமா னஹ்னு லகுமா Bபி மு'மினீன்
(அதற்கு) அவர்கள்: எங்கள் மூதாதையர்களை எதன் மீது நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இந்த பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? ஆனால் நாங்கள் உங்களிருவர் மீதும் நம்பிக்கை கொள்பவர்களல்லர்” என்று கூறினார்கள்.
وَقَالَ فِرْعَوْنُ ائْتُوْنِیْ بِكُلِّ سٰحِرٍ عَلِیْمٍ ۟
وَ قَالَமேலும் கூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்ائْتُوْنِیْஎன்னிடம் கொண்டு வாருங்கள்بِكُلِّஒவ்வொருسٰحِرٍசூனியக்காரரையும்عَلِیْمٍநன்கு அறிந்த
வ கால Fபிர்'அவ்னு' தூனீ Bபிகுல்லி ஸாஹிரின் 'அலீம்
ஃபிர்அவ்ன் (தன் கூட்டத்தாரிடம்) “தேர்ச்சி பெற்ற சூனியக்காரர் ஒவ்வொரு வரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக் கூறினான்.
فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟
فَلَمَّاஎனவேجَآءَவந்தபோதுالسَّحَرَةُசூனியக்காரர்கள்قَالَகூறினார்لَهُمْஅவர்களிடம்مُّوْسٰۤیமூஸாاَلْقُوْاஎறியுங்கள்مَاۤஎதைاَنْتُمْநீங்கள்مُّلْقُوْنَஎறியப்போகிறீர்களோ
Fபலம்மா ஜா'அஸ்ஸ ஹரது கால லஹும் மூஸா அல்கூ மா அன்தும் முல்கூன்
அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.
فَلَمَّاۤ اَلْقَوْا قَالَ مُوْسٰی مَا جِئْتُمْ بِهِ ۙ السِّحْرُ ؕ اِنَّ اللّٰهَ سَیُبْطِلُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَا یُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِیْنَ ۟
فَلَمَّاۤபின்னர் எப்போதுاَلْقَوْاஅவர்கள் எறிந்தார்களோقَالَகூறினார்مُوْسٰیமூஸாمَاஎதைجِئْتُمْநீங்கள் கொண்டு வந்தீர்களோبِهِ ۙஅதைக் கொண்டுالسِّحْرُ ؕசூனியம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَیُبْطِلُهٗ ؕஅதனை அழித்துவிடுவான்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُصْلِحُசீராக்குவான்عَمَلَசெயலைالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களின்
Fபலம்மா அல்கவ் கால மூஸா மா ஜி'தும் Bபிஹிஸ் ஸிஹ்ர்; இன்னல் லாஹ ஸ யுBப்திலுஹூ; இன்னல் லாஹ லா யுஸ்லிஹு 'அமலல் முFப்ஸிதீன்
அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா: “நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்” என்று கூறினார்.
وَیُحِقُّ اللّٰهُ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ ۟۠
وَ یُحِقُّமேலும் நிலைநாட்டுகிறான்اللّٰهُஅல்லாஹ்الْحَقَّசத்தியத்தைبِكَلِمٰتِهٖதன் வார்த்தைகளால்وَ لَوْஇருந்தபோதிலும்كَرِهَவெறுத்தالْمُجْرِمُوْنَ۠குற்றவாளிகள்
வ யுஹிக்குல் லாஹுல் ஹக்க Bபி கலிமாதிஹீ வ லவ் கரிஹல் முஜ்ரிமூன்
இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான் (என்றும் கூறினார்).
فَمَاۤ اٰمَنَ لِمُوْسٰۤی اِلَّا ذُرِّیَّةٌ مِّنْ قَوْمِهٖ عَلٰی خَوْفٍ مِّنْ فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهِمْ اَنْ یَّفْتِنَهُمْ ؕ وَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِی الْاَرْضِ ۚ وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِیْنَ ۟
فَمَاۤஎனவே இல்லைاٰمَنَநம்பிக்கை கொண்டனர்لِمُوْسٰۤیமூஸாவைاِلَّاதவிரذُرِّیَّةٌஒரு சந்ததியினர்مِّنْஇருந்துقَوْمِهٖஅவருடைய சமூகத்தின்عَلٰیமீதுخَوْفٍஅச்சத்தின்مِّنْஇருந்துفِرْعَوْنَஃபிர்அவ்ன்وَ مَلَاۡىِٕهِمْமற்றும் அவர்களின் தலைவர்கள்اَنْஎன்றுیَّفْتِنَهُمْ ؕஅவர்களைத் துன்புறுத்துவான்وَ اِنَّமேலும் நிச்சயமாகفِرْعَوْنَஃபிர்அவ்ன்لَعَالٍநிச்சயமாக மேலோங்கியவன்فِیஇல்الْاَرْضِ ۚபூமிوَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அவன்لَمِنَநிச்சயமாகالْمُسْرِفِیْنَவரம்பு மீறியவர்களில்
Fபமா ஆமன லி-மூஸா இல்லா துர்ரிய்யதுன் மின் கவ்மிஹீ 'அலா கவ்Fபின் மின் Fபிர்'அவ்ன வ மல'இஹிம் 'அ(ன்)ய் யFப்தினஹும்; வ இன்ன Fபிர்'அவ்ன ல'ஆலின் Fபில் அர்ளி வ இன்னஹூ லமினல் முஸ்ரிFபீன்
ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.
وَقَالَ مُوْسٰی یٰقَوْمِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ فَعَلَیْهِ تَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّسْلِمِیْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்مُوْسٰیமூஸாیٰقَوْمِஎன் சமூகத்தாரேاِنْஎனின்كُنْتُمْநீங்கள் இருந்தால்اٰمَنْتُمْஈமான் கொண்டவர்களாகبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுفَعَلَیْهِஅவன் மீதேتَوَكَّلُوْۤاமுழுமையாகச் சார்ந்திருங்கள்اِنْஎனின்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّسْلِمِیْنَமுஸ்லிம்களாக
வ கால மூஸா யா கவ்மி இன் குன்தும் ஆமன்தும் Bபில்லாஹி Fப'அலய்ஹி தவக்கலூ இன் குன்தும் முஸ்லிமீன்
மூஸா (தம் சமூகத்தவரிடம்): “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லிம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார்.
فَقَالُوْا عَلَی اللّٰهِ تَوَكَّلْنَا ۚ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟ۙ
فَقَالُوْاஆகவே அவர்கள் கூறினார்கள்عَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்تَوَكَّلْنَا ۚநாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்رَبَّنَاஎங்கள் இறைவாلَاஆக்கிவிடாதேتَجْعَلْنَاஎங்களைفِتْنَةًசோதனையாகلِّلْقَوْمِகூட்டத்தாருக்குالظّٰلِمِیْنَۙஅநியாயக்காரர்களான
Fபகாலூ 'அலல் லாஹி தவக்கல்னா ரBப்Bபனா லா தஜ்'அல்னா Fபித்னதல் லில்கவ்மிள் ளாலிமீன்
(அதற்கு) அவர்கள்: “நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள்.
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟
وَ نَجِّنَاஇன்னும் எங்களைக் காப்பாற்றுவாயாகبِرَحْمَتِكَஉனது அருளால்مِنَஇருந்துالْقَوْمِகூட்டத்தாரிடம்الْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களான
வ னஜ்ஜினா Bபிரஹ்மதிக மினல் கவ்மில் காFபிரீன்
“(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰی وَاَخِیْهِ اَنْ تَبَوَّاٰ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُیُوْتًا وَّاجْعَلُوْا بُیُوْتَكُمْ قِبْلَةً وَّاَقِیْمُوا الصَّلٰوةَ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
وَ اَوْحَیْنَاۤமேலும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰیபால்مُوْسٰیமூஸாوَ اَخِیْهِஇன்னும் அவருடைய சகோதரர்اَنْஎன்றுتَبَوَّاٰநீங்கள் இருவரும் அமைத்துக் கொள்ளுங்கள்لِقَوْمِكُمَاஉங்கள் இருவருடைய சமூகத்தாருக்காகبِمِصْرَஎகிப்தில்بُیُوْتًاவீடுகளைوَّ اجْعَلُوْاமேலும் ஆக்குங்கள்بُیُوْتَكُمْஉங்கள் வீடுகளைقِبْلَةًகிப்லாவாகوَّ اَقِیْمُواமேலும் நிலைநாட்டுங்கள்الصَّلٰوةَ ؕதொழுகையைوَ بَشِّرِமேலும் நற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்கு
வ அவ்ஹய்னா இலா மூஸா வ அகீஹி அன் தBபவ் வ ஆலி கவ்மிகும Bபி மிஸ்ர Bபுயூத(ன்)வ் வஜ்'அலூ Bபுயூதகும் கிBப்லத(ன்)வ் வ அகீமுஸ் ஸலாஹ்; வ Bபஷ்ஷிரில் மு'மினீன்
ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்: “நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (கிப்லாவாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!” என்று வஹீ அறிவித்தோம்.
وَقَالَ مُوْسٰی رَبَّنَاۤ اِنَّكَ اٰتَیْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِیْنَةً وَّاَمْوَالًا فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۙ رَبَّنَا لِیُضِلُّوْا عَنْ سَبِیْلِكَ ۚ رَبَّنَا اطْمِسْ عَلٰۤی اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰی قُلُوْبِهِمْ فَلَا یُؤْمِنُوْا حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟
وَ قَالَமேலும் கூறினான்مُوْسٰیமூஸாرَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّكَநிச்சயமாக நீاٰتَیْتَவழங்கியுள்ளாய்فِرْعَوْنَஃபிர்அவ்னுக்கும்وَ مَلَاَهٗமேலும் அவனுடைய பிரதானிகளுக்கும்زِیْنَةًஅலங்காரத்தையும்وَّ اَمْوَالًاமேலும் செல்வங்களையும்فِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَا ۙஇவ்வுலகرَبَّنَاஎங்கள் இறைவாلِیُضِلُّوْاஅவர்கள் வழிகெடுப்பதற்காகعَنْஇருந்துسَبِیْلِكَ ۚஉனது பாதையில்رَبَّنَاஎங்கள் இறைவாاطْمِسْஅழித்துவிடுவாயாகعَلٰۤیமீதுاَمْوَالِهِمْஅவர்களின் செல்வங்களின்وَ اشْدُدْமேலும் கடினமாக்குவாயாகعَلٰیமீதுقُلُوْبِهِمْஅவர்களின் இதயங்களின்فَلَاஎனவே அவர்கள் மாட்டார்கள்یُؤْمِنُوْاநம்பிக்கை கொள்ளحَتّٰیவரைیَرَوُاஅவர்கள் காணும்الْعَذَابَவேதனையைالْاَلِیْمَதுன்புறுத்தும்
வ கால மூஸா ரBப்Bபனா இன்னக ஆதய்த Fபிர்'அவ்ன வ மல அஹூ Zஜீனத(ன்)வ் வ அம்வாலன் Fபில் ஹயாதித் துன்யா ரBப்Bபனா லியுளில்லூ 'அன்ஸBபீலிக ரBப்Bபனத் மிஸ் 'அலா அம்வாலிஹிம் வஷ்துத் 'அலா குலூBபிஹிம் Fபலா யு'மினூ ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
قَالَ قَدْ اُجِیْبَتْ دَّعْوَتُكُمَا فَاسْتَقِیْمَا وَلَا تَتَّبِعٰٓنِّ سَبِیْلَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்قَدْநிச்சயமாகاُجِیْبَتْஏற்கப்பட்டதுدَّعْوَتُكُمَاஉங்கள் இருவரின் பிரார்த்தனைفَاسْتَقِیْمَاஎனவே நீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள்وَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعٰٓنِّநீங்கள் இருவரும் பின்பற்றسَبِیْلَவழியைالَّذِیْنَஎவர்கள்لَاஇல்லையோیَعْلَمُوْنَஅவர்கள் அறிகிறார்கள்
கால கத் உஜீBபத் தஃவதுகுமா Fபஸ்தகீமா வலா தத்தBபி'ஆன்னி ஸBபீலல் லதீன லா யஃலமூன்
இறைவன் கூறினான்: “உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒருபோதும்) பின் பற்றாதீர்கள்” என்று.
وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْیًا وَّعَدْوًا ؕ حَتّٰۤی اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ ۙ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِیْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِیْلَ وَاَنَا مِنَ الْمُسْلِمِیْنَ ۟
وَ جٰوَزْنَاநாம் கடக்கச் செய்தோம்بِبَنِیْۤசந்ததியினரைاِسْرَآءِیْلَஇஸ்ராயீல்الْبَحْرَகடலைفَاَتْبَعَهُمْஅவர்களைப் பின்தொடர்ந்தான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்وَ جُنُوْدُهٗஅவனது படைகளும்بَغْیًاஅநியாயமாகவும்وَّ عَدْوًا ؕஅக்கிரமமாகவும்حَتّٰۤیவரைاِذَاۤபோதுاَدْرَكَهُஅவனை அடைந்தالْغَرَقُ ۙமூழ்குதல்قَالَஅவன் கூறினான்اٰمَنْتُநான் ஈமான் கொண்டேன்اَنَّهٗநிச்சயமாகلَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரالَّذِیْۤஎவனைاٰمَنَتْஈமான் கொண்டார்களோبِهٖஅவன் மீதுبَنُوْۤاசந்ததியினர்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்وَ اَنَاஇன்னும் நான்مِنَஉள்ளவன்الْمُسْلِمِیْنَமுஸ்லிம்களில்
வ ஜாவZஜ்னா Bபி Bபனீ இஸ்ரா'ஈலல் Bபஹ்ர Fப அத்Bப'அஹும் Fபிர்'அவ்னு வ ஜுனூதுஹூ Bபக்ய(ன்)வ் வ 'அத்வா; ஹத்தா இதா அத்ரகஹுல் கரகு கால ஆமன்து அன்னஹூ லா இலாஹ இல்லல் லதீ ஆமனத் Bபிஹீ Bபனூ இஸ்ரா'ஈல வ அன மினல் முஸ்லிமீன்
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
آٰلْـٰٔنَ وَقَدْ عَصَیْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِیْنَ ۟
آٰلْـٰٔنَஇப்பொழுதாوَ قَدْமேலும் நிச்சயமாகعَصَیْتَநீ மாறு செய்தாய்قَبْلُமுன்னர்وَ كُنْتَமேலும் நீ இருந்தாய்مِنَஇருந்துالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்கள்
ஆல் 'ஆன வ கத் 'அஸய்த கBப்லு வ குன்த மினல் முFப்ஸிதீன்
“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.
فَالْیَوْمَ نُنَجِّیْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰیَةً ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰیٰتِنَا لَغٰفِلُوْنَ ۟۠
فَالْیَوْمَஎனவே இன்றுنُنَجِّیْكَஉன்னை நாம் பாதுகாப்போம்بِبَدَنِكَஉனது உடலுடன்لِتَكُوْنَநீ இருப்பதற்காகلِمَنْஅவர்களுக்குخَلْفَكَஉனக்குப் பின்னால்اٰیَةً ؕஓர் அத்தாட்சியாகوَ اِنَّமேலும் நிச்சயமாகكَثِیْرًاஅதிகமானோர்مِّنَஇருந்துالنَّاسِமனிதர்களில்عَنْபற்றிاٰیٰتِنَاநம் அத்தாட்சிகளைلَغٰفِلُوْنَ۠அலட்சியமாகவே இருக்கின்றனர்
Fபல்யவ்ம னுனஜ்ஜீக BபிBபதனிக லிதகூன லிமன் கல்Fபக ஆயஹ்; வ இன்ன கதீரன் மினன் னாஸி 'அன் ஆயாதினா லகாFபிலூன்
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).
وَلَقَدْ بَوَّاْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ ۚ فَمَا اخْتَلَفُوْا حَتّٰی جَآءَهُمُ الْعِلْمُ ؕ اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகبَوَّاْنَاநாம் குடியமர்த்தினோம்بَنِیْۤசந்ததியினரைاِسْرَآءِیْلَஇஸ்ராயீலின்مُبَوَّاَதங்குமிடத்தில்صِدْقٍஉண்மையானوَّ رَزَقْنٰهُمْமேலும் அவர்களுக்கு நாம் உணவளித்தோம்مِّنَஇருந்துالطَّیِّبٰتِ ۚதூய்மையானவைகளைفَمَاஎனவே இல்லைاخْتَلَفُوْاஅவர்கள் மாறுபட்டார்கள்حَتّٰیவரைجَآءَهُمُஅவர்களிடம் வரும்الْعِلْمُ ؕஅறிவுاِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்یَقْضِیْதீர்ப்பளிப்பான்بَیْنَهُمْஅவர்களுக்கிடையேیَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைفِیْمَاஎதில்كَانُوْاஅவர்கள் இருந்தார்களோفِیْهِஅதில்یَخْتَلِفُوْنَஅவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ
வ லகத் Bபவ்வ'னா Bபனீ இஸ்ரா'ஈல முBபவ்வ 'அ ஸித்கி(ன்)வ் வ ரZஜக்னாஹும் மினத் தய்யிBபாதி Fப மக்தலFபூ ஹத்தா ஜா'அஹ்முல் 'இல்ம்; இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியினரை, தகுந்த இருப்பிடத்தில் இருத்தி, நல்ல உணவுகளையும் கொடுத்து வந்தோம்; எனினும் உண்மையான ஞானம் அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் மாறுபாடு செய்யவில்லை; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எது பற்றி மாறுபாடு செய்து கொண்டிருந்தார்களோ அ(து விஷயத்)தில் இறுதி நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.
فَاِنْ كُنْتَ فِیْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ فَسْـَٔلِ الَّذِیْنَ یَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ ۚ لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟ۙ
فَاِنْஎனவே ஒருவேளைكُنْتَநீர் இருந்தால்فِیْஇல்شَكٍّசந்தேகம்مِّمَّاۤஎதைப்பற்றிاَنْزَلْنَاۤநாம் அருளினோமோاِلَیْكَஉமக்குفَسْـَٔلِநீர் கேளும்الَّذِیْنَஎவர்கள்یَقْرَءُوْنَஓதுகிறார்களோالْكِتٰبَவேதத்தைمِنْஇருந்துقَبْلِكَ ۚஉமக்கு முன்لَقَدْநிச்சயமாகجَآءَكَஉம்மிடம் வந்துவிட்டதுالْحَقُّசத்தியம்مِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்فَلَاஎனவே வேண்டாம்تَكُوْنَنَّநீர் ஆகிவிடمِنَஅவர்களில்الْمُمْتَرِیْنَۙசந்தேகிப்பவர்களில்
Fப இன் குன்த Fபீ ஷக்கின் மிம்மா அன்Zஜல்னா இலய்க Fபஸ்'அலில் லதீன யக்ர'ஊனல் கிதாBப மின் கBப்லிக்; லகத் ஜா'அகல் ஹக்கு மிர் ரBப்Bபிக Fப லா தகூனன்ன மினல் மும்தரீன்
(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.
وَلَا تَكُوْنَنَّ مِنَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ فَتَكُوْنَ مِنَ الْخٰسِرِیْنَ ۟
وَ لَاமேலும் வேண்டாம்تَكُوْنَنَّநீர் ஆகிவிடمِنَஅவர்களில்الَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِاٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்فَتَكُوْنَஅதனால் நீர் ஆகிவிடுவீர்مِنَஅவர்களில்الْخٰسِرِیْنَநஷ்டமடைந்தவர்கள்
வ லா தகூனன்ன மினல் லதீன கத்தBபூ Bபி ஆயாதில் லாஹி Fபதகூன மினல் காஸிரீன்
அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர்.
اِنَّ الَّذِیْنَ حَقَّتْ عَلَیْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்حَقَّتْஉறுதியாகிவிட்டதோعَلَیْهِمْஅவர்கள் மீதுكَلِمَتُவாக்குرَبِّكَஉமது இறைவனின்لَاமாட்டார்கள்یُؤْمِنُوْنَۙநம்பிக்கை கொள்ள
இன்னல் லதீன ஹக்கத் 'அலய்ஹிம் கலிமது ரBப்Bபிக லா யு'மினூன்
நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகள் என்று) உம் இறைவனுடைய வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள்.
وَلَوْ جَآءَتْهُمْ كُلُّ اٰیَةٍ حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟
وَ لَوْமேலும் ஒருவேளைجَآءَتْهُمْஅவர்களிடம் வந்தாலும்كُلُّஒவ்வொருاٰیَةٍஅத்தாட்சியும்حَتّٰیவரைیَرَوُاஅவர்கள் காணும்الْعَذَابَவேதனையைالْاَلِیْمَநோவினை தரும்
வ லவ் ஜா'அத் ஹும் குல்லு ஆயதின் ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அவர்களிடம் எல்லா அத்தாட்சிகளும் வந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.).
فَلَوْلَا كَانَتْ قَرْیَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِیْمَانُهَاۤ اِلَّا قَوْمَ یُوْنُسَ ؕ لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْیِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَمَتَّعْنٰهُمْ اِلٰی حِیْنٍ ۟
فَلَوْ لَاஏன்كَانَتْஇருக்கவில்லைقَرْیَةٌஓர் ஊர்اٰمَنَتْநம்பிக்கை கொண்டுفَنَفَعَهَاۤஅதனால் அதற்குப் பயனளித்திருக்கاِیْمَانُهَاۤஅதன் நம்பிக்கைاِلَّاதவிரقَوْمَசமூகத்தாரைیُوْنُسَ ؕயூனுஸுடையلَمَّاۤபொழுதுاٰمَنُوْاஅவர்கள் நம்பிக்கை கொண்டكَشَفْنَاநாம் நீக்கினோம்عَنْهُمْஅவர்களை விட்டுعَذَابَவேதனையைالْخِزْیِஇழிவானفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகوَ مَتَّعْنٰهُمْமேலும் அவர்களுக்கு சுகமளித்தோம்اِلٰیவரைحِیْنٍஒரு காலம்
Fபலவ் லா கானத் கர்யதுன் ஆமனத் Fப னFப'அஹா ஈமானுஹா இல்லா கவ்ம யூனுஸ லம்மா ஆமனூ கஷFப்னா 'அன்ஹும் 'அதாBபல் கிZஜ்யி Fபில் ஹயாதித் துன்யா வ மத்தஃனாஹும் இலா ஹீன்
எனவே, (வேதனை வரும்போது) ஓர் ஊர் (மக்கள்) நம்பிக்கைக் கொண்டு, அதனுடைய நம்பிக்கை அதற்குப் பயனளித்ததாக இருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த ஊரும் இருக்கவில்லை!) யூனுஸின் சமுதாயத்தாரைத் தவிர; அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களைவிட்டும் நாம் அகற்றினோம்; சிறிதுகாலம் சுகம் அனுபவிக்க செய்தோம்.
وَلَوْ شَآءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِی الْاَرْضِ كُلُّهُمْ جَمِیْعًا ؕ اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰی یَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟
وَ لَوْமேலும்شَآءَநாடியிருந்தால்رَبُّكَஉமது இறைவன்لَاٰمَنَநிச்சயமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள்مَنْஎவர்فِیஉள்ளார்களோالْاَرْضِபூமியில்كُلُّهُمْஅவர்கள் அனைவரும்جَمِیْعًا ؕஒட்டுமொத்தமாகاَفَاَنْتَஎனவே நீராتُكْرِهُநிர்ப்பந்திப்பீர்النَّاسَமனிதர்களைحَتّٰیவரைیَكُوْنُوْاஅவர்கள் ஆகும்مُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
வ லவ் ஷா'அ ரBப்Bபுக ல ஆமன மன் Fபில் அர்ளி குல்லுஹும் ஜமீ'ஆ; அFப அன்த துக்ரிஹுன் னாஸ ஹத்தா யகூனூ மு'மினீன்
மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?
وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تُؤْمِنَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَیَجْعَلُ الرِّجْسَ عَلَی الَّذِیْنَ لَا یَعْقِلُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஇயலும்لِنَفْسٍஓர் ஆத்மாவிற்கும்اَنْஎன்றுتُؤْمِنَநம்பிக்கை கொள்ளاِلَّاதவிரبِاِذْنِஅனுமதியைக் கொண்டுاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ یَجْعَلُமேலும் அவன் ஏற்படுத்துகிறான்الرِّجْسَவேதனையைعَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَعْقِلُوْنَசிந்திக்கிறார்களோ
வமா கான லினFப்ஸின் அன் து'மின இல்லா Bபி இத்னில் லாஹ்; வ யஜ்'அலுர் ரிஜ்ஸ 'அலல் லதீன லா யஃகிலூன்
எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.
قُلِ انْظُرُوْا مَاذَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَمَا تُغْنِی الْاٰیٰتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ ۟
قُلِகூறுவீராகانْظُرُوْاபாருங்கள்مَا ذَاஎன்னவெல்லாம்فِیஉள்ளன என்றுالسَّمٰوٰتِவானங்களில்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியில்وَ مَاஆயினும் இல்லைتُغْنِیபயனளிக்கும்الْاٰیٰتُஅத்தாட்சிகளும்وَ النُّذُرُஎச்சரிக்கைகளும்عَنْஒருقَوْمٍசமூகத்திற்குلَّاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிற
குலின் ளுரூ மாதா Fபிஸ்ஸமாவாதி வல் அர்ள்; வமா துக்னில் ஆயாது வன்னுதுரு 'அன் கவ்மில் லா யு'மினூன்
“வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக; எனினும் ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டா.
فَهَلْ یَنْتَظِرُوْنَ اِلَّا مِثْلَ اَیَّامِ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِهِمْ ؕ قُلْ فَانْتَظِرُوْۤا اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟
فَهَلْஎனவேیَنْتَظِرُوْنَஅவர்கள் எதிர்பார்க்கிறார்களாاِلَّاதவிரمِثْلَபோன்றاَیَّامِநாட்களைالَّذِیْنَஎவர்கள்خَلَوْاகடந்து சென்றார்களோمِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்னால்قُلْகூறுவீராகفَانْتَظِرُوْۤاஎனவே எதிர்பாருங்கள்اِنِّیْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன்مِّنَஆகியோரில்الْمُنْتَظِرِیْنَஎதிர்பார்ப்பவர்கள்
Fபஹல் யன்தளிரூன இல்லா மித்ல அய்யாமில் லதீன கலவ் மின் கBப்லிஹிம்; குல் Fபன்தளிரூ இன்னீ ம'அகும் மினல் முன்தளிரீன்
தங்களுக்கு முன் சென்று விட்டார்களே அவர்களுக்கு ஏற்பட்ட நாள்களைப் போன்றதையேயன்றி, அவர்கள் (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? (அப்படியானால் அந்த கஷ்டகாலத்தை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
ثُمَّ نُنَجِّیْ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا كَذٰلِكَ ۚ حَقًّا عَلَیْنَا نُنْجِ الْمُؤْمِنِیْنَ ۟۠
ثُمَّபின்னர்نُنَجِّیْநாம் காப்பாற்றுவோம்رُسُلَنَاநம் தூதர்களைوَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோكَذٰلِكَ ۚஇவ்வாறேحَقًّاகடமையாகعَلَیْنَاநம் மீதுنُنْجِநாம் காப்பாற்றுவோம்الْمُؤْمِنِیْنَ۠நம்பிக்கையாளர்களை
தும்ம னுனஜ்ஜீ ருஸுலன வல்லதீன ஆமனூ; கதாலிக ஹக்கன் 'அலய்னா னுன்ஜில் மு'மினீன்
(அவ்வாறு வேதனை வருங்காலத்தில்) நம் தூதர்களையும், ஈமான் கொண்டவர்களையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம் - (ஏனெனில்) ஈமான் கொண்டவர்களைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்.
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِیْ شَكٍّ مِّنْ دِیْنِیْ فَلَاۤ اَعْبُدُ الَّذِیْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ اَعْبُدُ اللّٰهَ الَّذِیْ یَتَوَفّٰىكُمْ ۖۚ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۙ
قُلْகூறுவீராகیٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேاِنْஒருவேளைكُنْتُمْநீங்கள் இருந்தால்فِیْஇல்شَكٍّசந்தேகம்مِّنْபற்றிدِیْنِیْஎனது மார்க்கத்தைப்فَلَاۤஎனவே இல்லைاَعْبُدُநான் வணங்குவதுالَّذِیْنَஎவர்களைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்களோمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைوَ لٰكِنْஆனால்اَعْبُدُநான் வணங்குகிறேன்اللّٰهَஅல்லாஹ்வைالَّذِیْஎவன்یَتَوَفّٰىكُمْ ۖۚஉங்களை மரணிக்கச் செய்கிறானோوَ اُمِرْتُமேலும் நான் ஏவப்பட்டுள்ளேன்اَنْஎன்றுاَكُوْنَநான் இருக்கمِنَஇருந்துالْمُؤْمِنِیْنَۙநம்பிக்கையாளர்களில்
குல் யா அய்யுஹன் னாஸு இன் குன்தும் Fபீ ஷக்க்-இன் மின் தீனீ Fப லா அஃBபுதுல் லதீன தஃBபுதூன மின் தூனில் லாஹி வ லாகின் அஃBபுதுல் லாஹல் லதீ யதவFப்Fபாகும் வ உமிர்து அன் அகூன மினல் மு'மினீன்
“மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்கமாட்டேன்; ஆனால் உங்களை மரணிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், நான் முஃமின்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَاَنْ اَقِمْ وَجْهَكَ لِلدِّیْنِ حَنِیْفًا ۚ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
وَ اَنْமேலும்اَقِمْநிலைநிறுத்துவீராகوَجْهَكَஉமது முகத்தைلِلدِّیْنِமார்க்கத்தின் பால்حَنِیْفًا ۚநேர்மையானவராகوَ لَاமேலும்تَكُوْنَنَّநிச்சயமாக ஆகிவிடாதீர்مِنَஇருந்துالْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களில்
வ அன் அகிம் வஜ்ஹக லித்தீனி ஹனீFப(ன்)வ் வலா தகூனன்ன மினல் முஷ்ரிகீன்
நேர்மையான மார்க்கத்தின்பாலே உம் முகத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்; முஷ்ரிக்குகளில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُكَ وَلَا یَضُرُّكَ ۚ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِیْنَ ۟
وَ لَاஇன்னும் வேண்டாம்تَدْعُபிரார்த்திக்கمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைمَاஎதைلَاஇல்லைیَنْفَعُكَஉமக்கு பலன் தரும்وَ لَاமேலும் இல்லைیَضُرُّكَ ۚஉமக்கு தீங்கு செய்யும்فَاِنْஅவ்வாறுفَعَلْتَநீர் செய்தால்فَاِنَّكَநிச்சயமாக நீர்اِذًاஅப்போதுمِّنَஇருந்துالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களில்
வ லா தத்'உ மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உக வலா யளுர்ருக்; Fப இன் Fப'அல்த Fப இன்னக இதம் மினள் ளாலிமீன்
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்.
وَاِنْ یَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ۚ وَاِنْ یُّرِدْكَ بِخَیْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ ؕ یُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
وَ اِنْமேலும் ஒருவேளைیَّمْسَسْكَஉம்மைத் தீண்டினால்اللّٰهُஅல்லாஹ்بِضُرٍّஒரு துன்பத்தைفَلَاஎவரும் இல்லைكَاشِفَநீக்குபவர்لَهٗۤஅதனைاِلَّاதவிரهُوَ ۚஅவனைوَ اِنْமேலும் ஒருவேளைیُّرِدْكَஉமக்கு நாடினால்بِخَیْرٍஒரு நன்மையைفَلَاஎவரும் இல்லைرَآدَّதடுப்பவர்لِفَضْلِهٖ ؕஅவனது அருளைیُصِیْبُஅவன் அடையச் செய்கிறான்بِهٖஅதனைمَنْயாரைیَّشَآءُஅவன் நாடுகிறானோمِنْஇருந்துعِبَادِهٖ ؕஅவனது அடியார்களில்وَ هُوَமேலும் அவன்الْغَفُوْرُமிக்க மன்னிப்பவன்الرَّحِیْمُநிகரற்ற அன்புடையவன்
வ இ(ன்)ய் யம்ஸஸ்கல் லாஹு Bபிளுர்ரின் Fபலா காஷிFப லஹூ இல்லா ஹூ;வ இ(ன்)ய் யுரித்க Bபிகய்ரின் Fபலா ராத்த லிFபள்லிஹ்; யுஸீBபு Bபிஹீ ம(ன்)ய் யஷா'உ மின் 'இBபாதிஹ்; வ ஹுவல் கFபூருர் ரஹீம்
அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۚ فَمَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ۚ وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِوَكِیْلٍ ۟ؕ
قُلْகூறுவீராகیٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேقَدْநிச்சயமாகجَآءَكُمُஉங்களிடம் வந்துவிட்டதுالْحَقُّசத்தியம்مِنْஇருந்துرَّبِّكُمْ ۚஉங்கள் இறைவனிடம்فَمَنِஎனவே எவர்اهْتَدٰیநேர்வழி பெறுகிறாரோفَاِنَّمَاநிச்சயமாக அவர்یَهْتَدِیْநேர்வழி பெறுகிறார்لِنَفْسِهٖ ۚதமக்காகவேوَ مَنْஇன்னும் எவர்ضَلَّவழிகெடுகிறாரோفَاِنَّمَاநிச்சயமாக அவர்یَضِلُّவழிகெடுகிறார்عَلَیْهَا ۚதமக்கு எதிராகவேوَ مَاۤமேலும் இல்லைاَنَاநான்عَلَیْكُمْஉங்கள் மீதுبِوَكِیْلٍؕபொறுப்பாளராக
குல் யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அகுமுல் ஹக்கு மிர் ரBப்Bபிகும்; Fபமனிஹ் ததா Fப இன்னமா யஹ்ததீ லி னFப்ஸிஹ்; வ மன் ளல்ல Fப இன்னமா யளில்லு 'அலய்ஹா; வ மா அன 'அலய்கும் Bபி வகீல்
(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர் தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்.”
وَاتَّبِعْ مَا یُوْحٰۤی اِلَیْكَ وَاصْبِرْ حَتّٰی یَحْكُمَ اللّٰهُ ۖۚ وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟۠
وَ اتَّبِعْமேலும் பின்பற்றுவீராகمَاஎதுیُوْحٰۤیவஹீயாக அறிவிக்கப்படுகிறதோاِلَیْكَஉமக்குوَ اصْبِرْமேலும் பொறுத்திருப்பீராகحَتّٰیவரைیَحْكُمَதீர்ப்பளிக்கும்اللّٰهُ ۖۚஅல்லாஹ்وَ هُوَமேலும் அவன்خَیْرُமிகச் சிறந்தவன்الْحٰكِمِیْنَ۠தீர்ப்பளிப்பவர்களில்
வத்தBபிஃ மா யூஹா இலய்க வஸ்Bபிர் ஹத்தா யஹ்குமல் லாஹ்; வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
(நபியே!) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றி நடந்து கொள்வீராக; அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் பொறுமையாகவும், உறுதியாகவும் இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்.