81. ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)
மக்கீ, வசனங்கள்: 29

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
81:1
81:1 اِذَا الشَّمْسُ كُوِّرَتْۙ‏
اِذَا போது الشَّمْسُ சூரியன் كُوِّرَتْۙ‏ மங்க வைக்கப்படும்
81:1. இதஷ் ஷம்ஸு குவ்விரத்
81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-
81:2
81:2 وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது النُّجُوْمُ நட்சத்திரங்கள் انْكَدَرَتْۙ‏ உதிர்ந்துவிடும்
81:2. வ இதன் னுஜூமுன் கதரத்
81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
81:3
81:3 وَاِذَا الْجِبَالُ سُيِّرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْجِبَالُ மலைகள் سُيِّرَتْۙ‏ அகற்றப்படும்
81:3. வ இதல் ஜிBபாலு ஸுய்யிரத்
81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது-
81:4
81:4 وَاِذَا الْعِشَارُ عُطِّلَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْعِشَارُ நிறைமாத ஒட்டகங்கள் عُطِّلَتْۙ‏ கவனிப்பற்று விடப்படும்
81:4. வ இதல் 'இஷாரு 'உத்திலத்
81:4. சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
81:5
81:5 وَاِذَا الْوُحُوْشُ حُشِرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْوُحُوْشُ காட்டு மிருகங்கள் حُشِرَتْۙ‏ ஒன்று சேர்க்கப்படும்
81:5. வ இதல் வுஹூஷு ஹுஷிரத்
81:5. காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
81:6
81:6 وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْبِحَارُ கடல்கள் سُجِّرَتْۙ‏ தீ மூட்டப்படும்
81:6. வ இதல் Bபிஹாரு ஸுஜ்ஜிரத்
81:6. கடல்கள் தீ மூட்டப்படும்போது-
81:7
81:7 وَاِذَا النُّفُوْسُ زُوِّجَتْۙ‏
وَاِذَا இன்னும் போது النُّفُوْسُ உயிர்கள் زُوِّجَتْۙ‏ இணைக்கப்படும்
81:7. வ இதன் னுFபூஸு Zஜுவ்விஜத்
81:7. உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
81:8
81:8 وَاِذَا الْمَوْءٗدَةُ سُٮِٕلَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْمَوْءٗدَةُ புதைக்கப்பட்ட பெண் குழந்தை سُٮِٕلَتْۙ‏ விசாரிக்கப்படும்
81:8. வ இதல் மவ்'ஊதது ஸு'இலத்
81:8. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
81:9
81:9 بِاَىِّ ذَنْۢبٍ قُتِلَتْ‌ۚ‏
بِاَىِّ ذَنْۢبٍ எந்தக் குற்றத்திற்காக قُتِلَتْ‌ۚ‏ கொல்லப்பட்டாள்
81:9. Bபி அய்யி தம்Bபின் குதிலத்
81:9. “எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-
81:10
81:10 وَاِذَا الصُّحُفُ نُشِرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الصُّحُفُ ஏடுகள் نُشِرَتْۙ‏ விரிக்கப்படும்
81:10. வ இதஸ் ஸுஹுFபு னுஷிரத்
81:10. பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
81:11
81:11 وَاِذَا السَّمَآءُ كُشِطَتْۙ‏
وَاِذَا இன்னும் போது السَّمَآءُ வானம் كُشِطَتْۙ‏ அகற்றப்படும்
81:11. வ இதஸ் ஸமா'உ குஷிதத்
81:11. வானம் அகற்றப்படும் போது-
81:12
81:12 وَاِذَا الْجَحِيْمُ سُعِّرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْجَحِيْمُ நரகம் سُعِّرَتْۙ‏ கடுமையாக எரிக்கப்படும்
81:12. வ இதல் ஜஹீமு ஸு'-'இரத்
81:12. நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
81:13
81:13 وَاِذَا الْجَـنَّةُ اُزْلِفَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْجَـنَّةُ சொர்க்கம் اُزْلِفَتْۙ‏ சமீபமாக்கப்படும்
81:13. வ இதல் ஜன்னது உZஜ்லிFபத்
81:13. சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
81:14
81:14 عَلِمَتْ نَفْسٌ مَّاۤ اَحْضَرَتْؕ‏
عَلِمَتْ அறியும் نَفْسٌ ஓர் ஆன்மா مَّاۤ எதை اَحْضَرَتْؕ‏ தான் கொண்டு வந்தது
81:14. அலிமத் னFப்ஸும் மா அஹ்ளரத்
81:14. ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
81:15
81:15 فَلَاۤ اُقْسِمُ بِالْخُنَّسِۙ‏
فَلَاۤ اُقْسِمُ சத்தியம் செய்கிறேன்! بِالْخُنَّسِۙ‏ மறைகின்ற நட்சத்திரங்கள் மீது
81:15. Fபலா உக்ஸிமு Bபில் குன்னஸ்
81:15. எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
81:16
81:16 الْجَوَارِ الْكُنَّسِۙ‏
الْجَوَارِ வேகமாகச் செல்கின்ற நட்சத்திரங்கள் الْكُنَّسِۙ‏ தோன்றுகின்ற
81:16. அல் ஜவாரில் குன்னஸ்
81:16. முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
81:17
81:17 وَالَّيْلِ اِذَا عَسْعَسَۙ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக اِذَا عَسْعَسَۙ‏ பின்செல்லும் போது
81:17. வல்லய்லி இதா 'அஸ்'அஸ்
81:17. பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
81:18
81:18 وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَۙ‏
وَالصُّبْحِ காலைப் பொழுதின் மீது சத்தியமாக اِذَا تَنَفَّسَۙ‏ அது தெளிவாகிவிடும் போது
81:18. வஸ்ஸுBப்ஹி இதா தனFப்Fபஸ்
81:18. மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
81:19
81:19 اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۙ‏
اِنَّهٗ நிச்சயாக இது لَقَوْلُ கூற்றாகும் رَسُوْلٍ தூதர் كَرِيْمٍۙ‏ கண்ணியத்திற்குரியவர்
81:19. இன்னஹூ லகவ்லு ரஸூலின் கரீம்
81:19. நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரீல் மூலம் வந்த) சொல்லாகும்.
81:20
81:20 ذِىْ قُوَّةٍ عِنْدَ ذِى الْعَرْشِ مَكِيْنٍۙ‏
ذِىْ قُوَّةٍ பலமுடையவர் عِنْدَ ذِى الْعَرْشِ அர்ஷுடையவனிடம் مَكِيْنٍۙ‏ பதவியாளர்
81:20. தீ குவ்வதின் 'இன்த தில் 'அர்ஷி மகீன்
81:20. (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
81:21
81:21 مُّطَاعٍ ثَمَّ اَمِيْنٍؕ‏
مُّطَاعٍ கீழ்ப்படியப்படுகிறவர் ثَمَّ அங்கு اَمِيْنٍؕ‏ நம்பிக்கைக்குரியவர்
81:21. முதா'இன் தம்ம அமீன்
81:21. (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
81:22
81:22 وَ مَا صَاحِبُكُمْ بِمَجْنُوْنٍ‌ۚ‏
وَ مَا صَاحِبُكُمْ இன்னும் உங்கள் தோழர் இல்லை بِمَجْنُوْنٍ‌ۚ‏ பைத்தியக்காரராக
81:22. வமா ஸாஹிBபுகும் Bபிமஜ்னூன்
81:22. மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
81:23
81:23 وَلَقَدْ رَاٰهُ بِالْاُفُقِ الْمُبِيْنِ‌ۚ‏
وَلَقَدْ இன்னும் திட்டவட்டமாக رَاٰهُ அவர் அவரைக் கண்டார் بِالْاُفُقِ கோடியில் الْمُبِيْنِ‌ۚ‏ தெளிவான
81:23. வ லகத் ர ஆஹு BபிலுFபுகில் முBபீன்
81:23. அவர் திட்டமாக அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
81:24
81:24 وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍ‌ۚ‏
وَمَا هُوَ இன்னும் அவர் இல்லை عَلَى الْغَيْبِ மறைவானவற்றில் بِضَنِيْنٍ‌ۚ‏ கஞ்சனாக
81:24. வமா ஹுவ 'அலல் கய்Bபி Bபிளனீன்
81:24. மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
81:25
81:25 وَمَا هُوَ بِقَوْلِ شَيْطٰنٍ رَّجِيْمٍۙ‏
وَمَا هُوَ இன்னும் அது இல்லை بِقَوْلِ கூற்றாக شَيْطٰنٍ ஷைத்தானின் رَّجِيْمٍۙ‏ எறியப்பட்ட
81:25. வமா ஹுவ Bபிகவ்லி ஷய்தானிர் ரஜீம்
81:25. அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
81:26
81:26 فَاَيْنَ تَذْهَبُوْنَؕ‏
فَاَيْنَ ஆகவே எங்கே? تَذْهَبُوْنَؕ‏ நீங்கள் செல்கிறீர்கள்
81:26. Fப அய்ன தத்ஹBபூன்
81:26. எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
81:27
81:27 اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَۙ‏
اِنْ هُوَ அது இல்லை اِلَّا தவிர ذِكْرٌ ஓர் அறிவுரையாகவே لِّلْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தார்களுக்கு
81:27. இன் ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
81:27. இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
81:28
81:28 لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ يَّسْتَقِيْمَؕ‏
لِمَنْ شَآءَ நாடியவருக்கு مِنْكُمْ உங்களில் اَنْ يَّسْتَقِيْمَؕ‏ நேர்வழி நடக்க
81:28. லிமன் ஷா'அ மின்கும் அய் யஸ்தகீம்
81:28. உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
81:29
81:29 وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ
وَمَا تَشَآءُوْنَ இன்னும் நாடமாட்டீர்கள் اِلَّاۤ தவிர اَنْ يَّشَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் رَبُّ இறைவனான الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களின்
81:29. வமா தஷா'ஊன இல்லா அய் யஷா 'அல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
81:29. ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.