டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 92. ஸூரத்துல் லைல்(இரவு)
மக்கீ, வசனங்கள்: 21
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
92:1 وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக اِذَا يَغْشٰىۙ மூடும் போது
92:1. வல்லய்லி இதா யக்'ஷா
92:1. (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!
92:2 وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ
وَالنَّهَارِ பகலின் மீது சத்தியமாக اِذَا تَجَلّٰىۙ அது வெளிப்படும் போது
92:2. வன்னஹாரி இதா தஜல்லா
92:2. பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக!
92:3 وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰٓىۙ
وَمَا خَلَقَ படைத்தவன் மீது சத்தியமாக الذَّكَرَ ஆணை وَالْاُنْثٰٓىۙ இன்னும் பெண்ணை
92:3. வமா கலகத் தகர வல் உன்தா
92:3. ஆணையும் பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக!
92:4 اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىؕ
اِنَّ நிச்சயமாக سَعْيَكُمْ உங்கள் முயற்சி لَشَتّٰىؕ பலதரப்பட்டதுதான்
92:4. இன்ன ஸஃயகும் லஷத்தா
92:4. நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலனாகும்.
92:5 فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ
فَاَمَّا مَنْ ஆகவே, யார் اَعْطٰى தர்மம் புரிந்தார் وَاتَّقٰىۙ இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்
92:5. Fப அம்மா மன் அஃதா வத்தகா
92:5. எனவே, எவர் (தான தர்மம்) கொடுத்து, (அல்லாஹ்வை) அஞ்சிக்கொண்டாரோ,
92:6 وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ
وَصَدَّقَ இன்னும் உண்மைப்படுத்தினார் بِالْحُسْنٰىۙ மிக அழகியதை
92:6. வ ஸத்தக Bபில் ஹுஸ்னா
92:6. நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
92:7 فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰىؕ
فَسَنُيَسِّرُهٗ அவருக்கு இலகுவாக்குவோம் لِلْيُسْرٰىؕ சொர்க்கப் பாதையை
92:7. Fபஸனு யஸ்ஸிருஹூ லில்யுஸ்ரா
92:7. அவருக்கு நாம் சுலபமானதை (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
92:8 وَاَمَّا مَنْۢ بَخِلَ وَاسْتَغْنٰىۙ
وَاَمَّا مَنْۢ بَخِلَ ஆக யார்?/கஞ்சத்தனம் செய்தான் وَاسْتَغْنٰىۙ இன்னும் தேவையற்றவனாகக் கருதினான்
92:8. வ அம்மா மன் Bபகில வஸ்தக்னா
92:8. ஆனால், எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வின் அருளை விட்டும்) தன்னைத் தேவையற்றவனாக(க் கருது)கிறானோ,
92:9 وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ
وَكَذَّبَ இன்னும் பொய்ப்பித்தான் بِالْحُسْنٰىۙ மிக அழகியதை
92:9. வ கத்தBப Bபில் ஹுஸ்னா
92:9. இன்னும், நல்லவற்றைப் பொய்யாக்குகிறானோ,
92:10 فَسَنُيَسِّرُهٗ لِلْعُسْرٰىؕ
فَسَنُيَسِّرُهٗ அவனுக்கு இலகுவாக்குவோம் لِلْعُسْرٰىؕ நரகத்தின் பாதையை
92:10. Fபஸனு யஸ்ஸிருஹூ லில்'உஸ்ரா
92:10. அப்போது அவனுக்குக் கஷ்டத்திற்கு (நரகவழிக்கு) எளிதாக்கி வைப்போம்.
92:11 وَمَا يُغْنِىْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ
وَمَا يُغْنِىْ இன்னும் பலனளிக்காது عَنْهُ அவனுக்கு مَالُهٗۤ அவனுடைய செல்வம் اِذَا تَرَدّٰىؕ அவன்விழும்போது
92:11. வமா யுக்னீ 'அன்ஹு மாலுஹூ இதா தரத்தா
92:11. ஆகவே, அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
92:12 اِنَّ عَلَيْنَا لَـلْهُدٰىۖ
اِنَّ நிச்சயமாக عَلَيْنَا நம்மீது لَـلْهُدٰىۖ நேர்வழி காட்டுவதுதான்
92:12. இன்ன 'அலய்னா லல் ஹுதா
92:12. நேர்வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம்மீது இருக்கிறது.
92:13 وَاِنَّ لَـنَا لَـلْاٰخِرَةَ وَالْاُوْلٰى
وَاِنَّ இன்னும் நிச்சயமாக لَـنَا நமக்கே لَـلْاٰخِرَةَ மறுமை وَالْاُوْلٰى இன்னும் இம்மை
92:13. வ இன்ன லனா லல் ஆகிரத வல் ஊலா
92:13. அன்றியும், நிச்சயமாக மறுமையும் இம்மையும் நம்முடையவையே ஆகும்.
92:14 فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰىۚ
فَاَنْذَرْتُكُمْ ஆகவே, உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன் نَارًا நெருப்பை تَلَظّٰىۚ கொழுந்துவிட்டெரிகின்றது
92:14. Fப அன்தர்துகும் னாரன் தலள்ளா
92:14. ஆதலின், கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பைப் பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
92:15 لَا يَصْلٰٮهَاۤ اِلَّا الْاَشْقَىۙ
لَا يَصْلٰٮهَاۤ அதில் பற்றி எரிய மாட்டான் اِلَّا தவிர الْاَشْقَىۙ பெரும் தீயவன்
92:15. லா யஸ்லாஹா இல்லல் அஷ்கா
92:15. மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) (எவனும்) அதில் புகமாட்டான்.
92:16 الَّذِىْ كَذَّبَ وَتَوَلّٰىؕ
الَّذِىْ எவன் كَذَّبَ பொய்ப்பித்தான் وَتَوَلّٰىؕ இன்னும் புறக்கணித்தான்
92:16. அல்லதீ கத்தBப வ தவல்லா
92:16. அவன் எத்தகையவனென்றால், (நம்) வசனங்களைப் பொய்யாக்கிப் புறக்கணித்தான்.
92:17 وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ
وَسَيُجَنَّبُهَا இன்னும் அதிலிருந்து தூரமாக்கப்படுவார் الْاَتْقَىۙ அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர்
92:17. வ ஸ யுஜன்ன்னBபுஹல் அத்கா
92:17. ஆனால், (அல்லாஹ்வுக்கு) அதிகம் அஞ்சிக் கொண்டவர் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
92:18 الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰىۚ
الَّذِىْ எவர் يُؤْتِىْ கொடுக்கிறார் مَالَهٗ தனது செல்வத்தை يَتَزَكّٰىۚ மனத்தூய்மையை நாடியவராக
92:18. அல்லதீ யு'தீ மாலஹூ யதZஜக்கா
92:18. அவர் எத்தகையவரென்றால் (பாவத்திலிருந்து) தம்மைத் தூய்மைப்படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
92:19 وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰٓىۙ
وَمَا இன்னும் இல்லை لِاَحَدٍ ஒருவரின் عِنْدَهٗ அவரிடம் مِنْ نِّعْمَةٍ உபகாரம் ஏதும் تُجْزٰٓىۙ கூலிகொடுக்கப்படும்
92:19. வமா லி அஹதின் 'இன்தஹூ மின் னிஃமதின் துஜ்Zஜா
92:19. மேலும், (மனிதர்களில்) அவர் கைம்மாறு செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது (கடமை) இல்லாதிருந்தும்,
92:20 اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰىۚ
اِلَّا தவிர ابْتِغَآءَ தேடுவதை وَجْهِ முகத்தை رَبِّهِ தன் இறைவனின் الْاَعْلٰىۚ மிக உயர்ந்தவனான
92:20. இல்லBப் திகா'அ வஜ்ஹி ரBப்Bபிஹில் அஃலா
92:20. மிக மேலான தம் இறைவனின் (திருப்) பொருத்தத்தை நாடியே தவிர, (அவர் தானம் கொடுக்கிறார்).
92:21 وَلَسَوْفَ يَرْضٰى
وَلَسَوْفَ திட்டமாக يَرْضٰى திருப்தியடைவார்
92:21. வ லஸவ்Fப யர்ளா
92:21. வெகுவிரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருட்கொடையால்) அவர் திருப்தி பெறுவார்.