61. ஸூரத்துஸ் ஸஃப்ஃபு (அணிவகுப்பு)

மதனீ, வசனங்கள்: 14

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
سَبَّحَ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
سَبَّحَதுதிக்கிறதுلِلّٰهِஅல்லாஹ்வைمَاஎவையெல்லாம்فِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاஇன்னும் எவையெல்லாம்فِیஉள்ளதோالْاَرْضِ ۚபூமியில்وَ هُوَமேலும் அவன்الْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
ஸBப்Bபஹ லில்லாஹி மா Fபிஸமாவாதி வமா Fபில் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருக்கின்றன; அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஅத்தகையோரேاٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களேلِمَஏன்تَقُوْلُوْنَநீங்கள் கூறுகிறீர்கள்مَاஎதைلَا(நீங்கள் செய்ய) மாட்டீர்களோتَفْعَلُوْنَநீங்கள் செய்கிறீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லிம தகூலூன மா லா தFப்'அலூன்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ ۟
كَبُرَமிகப்பெரிதுمَقْتًاவெறுப்புعِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்اَنْஎன்பதுتَقُوْلُوْاநீங்கள் கூறுவதுمَاஎதைلَاசெய்யாமல்تَفْعَلُوْنَஇருக்கிறீர்களோ
கBபுர மக்தன் 'இன்தல் லாஹி அன் தகூலூ மா லா தFப்'அலூன்
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
اِنَّ اللّٰهَ یُحِبُّ الَّذِیْنَ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِهٖ صَفًّا كَاَنَّهُمْ بُنْیَانٌ مَّرْصُوْصٌ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الَّذِیْنَஎவர்கள்یُقَاتِلُوْنَபோரிடுகிறார்களோفِیْஇல்سَبِیْلِهٖஅவனது பாதையில்صَفًّاஅணியாகكَاَنَّهُمْஅவர்கள் இருப்பதைப் போல்بُنْیَانٌஒரு கட்டிடம்مَّرْصُوْصٌஈயத்தால் வார்க்கப்பட்ட
இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் லதீன யுகாதிலூன Fபீ ஸBபீலிஹீ ஸFப்Fபன் க அன்னஹும் Bபுன்யானும் மர்ஸூஸ்
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ لِمَ تُؤْذُوْنَنِیْ وَقَدْ تَّعْلَمُوْنَ اَنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ ؕ فَلَمَّا زَاغُوْۤا اَزَاغَ اللّٰهُ قُلُوْبَهُمْ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்)قَالَகூறினார்مُوْسٰیமூஸாلِقَوْمِهٖதம் சமூகத்தாரிடம்یٰقَوْمِஎன் சமூகத்தாரே!لِمَஏன்تُؤْذُوْنَنِیْஎன்னை நோவினை செய்கிறீர்கள்?وَ قَدْஉண்மையாகவேتَّعْلَمُوْنَநீங்கள் அறிவீர்கள்اَنِّیْநிச்சயமாக நான்رَسُوْلُதூதர் (என்பதை)اللّٰهِஅல்லாஹ்வின்اِلَیْكُمْ ؕஉங்களிடம் (அனுப்பப்பட்ட)فَلَمَّاஆகவே, எப்போதுزَاغُوْۤاஅவர்கள் வழிதவறினார்களோاَزَاغَதிருப்பிவிட்டான்اللّٰهُஅல்லாஹ்قُلُوْبَهُمْ ؕஅவர்களின் இதயங்களைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیநேர்வழி காட்டالْقَوْمَசமூகத்திற்குالْفٰسِقِیْنَவரம்பு மீறிய
வ இத் கால மூஸா லிகவ்மிஹீ யா கவ்மி லிம து'தூனனீ வ கத் தஃலமூன அன்னீ ரஸூலுல் லாஹி இலய்கும் Fபலம்மா Zஜாகூ அZஜாகல் லாஹு குலூBபஹும்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்: “என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே அவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
وَاِذْ قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اِنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیَّ مِنَ التَّوْرٰىةِ وَمُبَشِّرًا بِرَسُوْلٍ یَّاْتِیْ مِنْ بَعْدِی اسْمُهٗۤ اَحْمَدُ ؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَیِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟
وَ اِذْமேலும் (நினைவு கூருங்கள்)قَالَகூறினார்عِیْسَیஈஸாابْنُமகன்مَرْیَمَமர்யமின்یٰبَنِیْۤசந்ததியினரே!اِسْرَآءِیْلَஇஸ்ராயீலின்اِنِّیْநிச்சயமாக நான்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَیْكُمْஉங்களிடம்مُّصَدِّقًاஉண்மைப்படுத்துபவராகلِّمَاஉள்ளதைبَیْنَமுன்னால்یَدَیَّஎனக்குمِنَஇருந்துالتَّوْرٰىةِதவ்ராத்தில்وَ مُبَشِّرًۢاமேலும் நற்செய்தி கூறுபவராகبِرَسُوْلٍஒரு தூதரைப்பற்றிیَّاْتِیْஅவர் வருவார்مِنْۢஇருந்துبَعْدِیஎனக்குப் பின்اسْمُهٗۤஅவருடைய பெயர்اَحْمَدُ ؕஅஹ்மத்فَلَمَّاபின்னர், எப்போதுجَآءَهُمْஅவர்களிடம் வந்தாரோبِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்هٰذَاஇதுسِحْرٌசூனியம்مُّبِیْنٌதெளிவான
வ இத் கால 'ஈஸBப்-னு-மர்யம யா Bபனீ இஸ்ரா'ஈல இன்னீ ரஸூலுல் லாஹி இலய்கும் முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ய மினத் தவ்ராதி வ முBபஷ்ஷிரம் Bபி ரஸூலி(ன்)ய் யா'தீ மிம் Bபஃதிஸ் முஹூ அஹ்மத்; Fபலம்மா ஜா'அஹும் Bபில் Bபய்யினாதி காலூ ஹாதா ஸிஹ்ரும் முBபீன்
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ الْكَذِبَ وَهُوَ یُدْعٰۤی اِلَی الْاِسْلَامِ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۚ
وَ مَنْமேலும் எவன்اَظْلَمُமிகப்பெரும் அநியாயக்காரன்مِمَّنِஅவனை விடافْتَرٰیஇட்டுக்கட்டினானோعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்الْكَذِبَபொய்யைوَ هُوَஅவன்یُدْعٰۤیஅழைக்கப்படுகிற நிலையில்اِلَیபால்الْاِسْلَامِ ؕஇஸ்லாத்தின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیநேர்வழி காட்டالْقَوْمَமக்களுக்குالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களான
வ மன் அள்லமு மிம்ம னிFப் தரா 'அலல் லாஹில் கதிBப வ ஹுவ யத்'ஆ இலல் இஸ்லாம்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
மேலும், எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
یُرِیْدُوْنَ لِیُطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ ؕ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟
یُرِیْدُوْنَஅவர்கள் நாடுகிறார்கள்لِیُطْفِـُٔوْاஅணைத்துவிடنُوْرَஒளியைاللّٰهِஅல்லாஹ்வின்بِاَفْوَاهِهِمْதங்கள் வாய்களால்وَ اللّٰهُஅல்லாஹ்வோمُتِمُّமுழுமையாக்குபவன்نُوْرِهٖதன் ஒளியைوَ لَوْஎன்றாலும்كَرِهَவெறுக்கிறார்கள்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்
யுரீதூன லியுத்Fபி'ஊ னூரல் லாஹி Bபி அFப்வாஹிஹிம் வல்லாஹு முதிம்மு னூரிஹீ வ லவ் கரிஹல் காFபிரூன்
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰی وَدِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَی الدِّیْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ ۟۠
هُوَஅவன்الَّذِیْۤஎத்தகையவன்اَرْسَلَஅனுப்பினான்رَسُوْلَهٗதன் தூதரைبِالْهُدٰیநேர்வழியுடன்وَ دِیْنِமேலும் மார்க்கத்துடன்الْحَقِّசத்தியلِیُظْهِرَهٗஅதனை மேலோங்கச் செய்யعَلَیமீதுالدِّیْنِமார்க்கங்கள்كُلِّهٖஅனைத்தின்وَ لَوْஇருந்தபோதிலும்كَرِهَவெறுத்தாலும்الْمُشْرِكُوْنَ۠இணைவைப்பவர்கள்
ஹுவல் லதீ அர்ஸல ரஸூலஹூ Bபில்ஹுதா வ தீனில் ஹக்கி லியுள்ஹிரஹூ 'அலத் தீனி குல்லிஹீ வ லவ் கரிஹல் முஷ்ரிகூன்
(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰی تِجَارَةٍ تُنْجِیْكُمْ مِّنْ عَذَابٍ اَلِیْمٍ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஅத்தகையோரேاٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களேهَلْSlநான்اَدُلُّكُمْஉங்களுக்கு வழிகாட்டட்டுமாعَلٰیஒருتِجَارَةٍவியாபாரத்தின்பால்تُنْجِیْكُمْஅது உங்களைக் காப்பாற்றும்مِّنْஇருந்துعَذَابٍவேதனையில்اَلِیْمٍநோவினை செய்யும்
யா அய்யுஹல் லதீன ஆமனூ ஹல் அதுல்லுகும் 'அலா திஜாரதின் துன்ஜீகும் மின் 'அதாBபின் அலீம்
ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟ۙ
تُؤْمِنُوْنَநீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رَسُوْلِهٖமேலும் அவனுடைய தூதர் மீதும்وَ تُجَاهِدُوْنَமேலும் நீங்கள் அறப்போர் புரியுங்கள்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்بِاَمْوَالِكُمْஉங்கள் செல்வங்களைக் கொண்டுوَ اَنْفُسِكُمْ ؕமேலும் உங்கள் உயிர்களைக் கொண்டும்ذٰلِكُمْஅதுவேخَیْرٌசிறந்ததுلَّكُمْஉங்களுக்குاِنْநீங்கள்كُنْتُمْஇருந்தால்تَعْلَمُوْنَۙஅறிபவர்களாக
து'மினூன Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ துஜாஹிதூன Fபீ ஸBபீலில் லாஹி Bபி அம்வாலிகும் வ அன்Fபுஸிகும்; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
(அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
یَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَیُدْخِلْكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ وَمَسٰكِنَ طَیِّبَةً فِیْ جَنّٰتِ عَدْنٍ ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ۙ
یَغْفِرْஅவன் மன்னிப்பான்لَكُمْஉங்களுக்குذُنُوْبَكُمْஉங்கள் பாவங்களைوَ یُدْخِلْكُمْமேலும் உங்களைப் புகுத்துவான்جَنّٰتٍசுவனச் சோலைகளில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்وَ مَسٰكِنَமேலும் தங்குமிடங்களைطَیِّبَةًதூய்மையானفِیْஇல்جَنّٰتِசுவனச் சோலைகளில்عَدْنٍ ؕநிலையானذٰلِكَஅதுவேالْفَوْزُவெற்றிالْعَظِیْمُۙமகத்தானதாகும்
யக்Fபிர் லகும் துனூBபகும் வ யுத்கில்கும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வ மஸாகின தய்யிBபதன் Fபீ ஜன்னாதி 'அத்ன்; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
وَاُخْرٰی تُحِبُّوْنَهَا ؕ نَصْرٌ مِّنَ اللّٰهِ وَفَتْحٌ قَرِیْبٌ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
وَ اُخْرٰیமேலும் மற்றொன்றுتُحِبُّوْنَهَا ؕஅதை நீங்கள் விரும்புவீர்கள்نَصْرٌஉதவிمِّنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்وَ فَتْحٌமற்றும் ஒரு வெற்றிقَرِیْبٌ ؕமிக நெருங்கியوَ بَشِّرِமேலும் நற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்கு
வ உக்ரா துஹிBப்Bபூனஹா னஸ்ரும் மினல் லாஹி வ Fபத் ஹுன் கரீBப்; வ Bபஷ்ஷிரில் மு'மினீன்
அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு; (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும்; எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக!
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ لِلْحَوَارِیّٖنَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ فَاٰمَنَتْ طَّآىِٕفَةٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَكَفَرَتْ طَّآىِٕفَةٌ ۚ فَاَیَّدْنَا الَّذِیْنَ اٰمَنُوْا عَلٰی عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِیْنَ ۟۠
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோكُوْنُوْۤاஆகுங்கள்اَنْصَارَஉதவியாளர்களாகاللّٰهِஅல்லாஹ்வின்كَمَاஎவ்வாறுقَالَகூறினாரோعِیْسَیஈஸாابْنُமகன்مَرْیَمَமர்யமின்لِلْحَوَارِیّٖنَசீடர்களிடம்مَنْயார்اَنْصَارِیْۤஎனது உதவியாளர்கள்اِلَیபக்கம்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்قَالَகூறினார்கள்الْحَوَارِیُّوْنَசீடர்கள்نَحْنُநாங்களேاَنْصَارُஉதவியாளர்கள்اللّٰهِஅல்லாஹ்வின்فَاٰمَنَتْஎனவே நம்பிக்கை கொண்டதுطَّآىِٕفَةٌஒரு கூட்டம்مِّنْۢஇருந்துبَنِیْۤசந்ததியினரில்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்وَ كَفَرَتْமேலும் நிராகரித்ததுطَّآىِٕفَةٌ ۚஒரு கூட்டம்فَاَیَّدْنَاஎனவே நாம் பலப்படுத்தினோம்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோعَلٰیஎதிராகعَدُوِّهِمْஅவர்களின் பகைவர்களுக்குفَاَصْبَحُوْاஅதனால் அவர்கள் ஆகிவிட்டார்கள்ظٰهِرِیْنَ۠வெற்றி பெற்றவர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ கூனூ அன்ஸாரல் லாஹி கமா கால 'ஈஸBப்-னு-மர்யம லில் ஹவாரிய்யீன மன் அன்ஸாரீ இலல் லாஹ்; காலல் ஹவாரிய்யூன னஹ்னு அன்ஸா ருல் லாஹி Fப ஆமனத் தா'இFபதும் மிம் Bபனீ இஸ்ரா'ஈல வ கFபரத் தா'இFபதுன் Fப அய்யத்னல் லதீன ஆமனூ 'அலா 'அதுவ்விஹிம் Fப அஸ்Bபஹூ ளாஹிரீன்
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.