75. ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)

மக்கீ, வசனங்கள்: 40

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
لَاۤ اُقْسِمُ بِیَوْمِ الْقِیٰمَةِ ۟ۙ
لَاۤஇல்லைاُقْسِمُநான் சத்தியம் செய்கிறேன்بِیَوْمِநாளின் மீதுالْقِیٰمَةِۙகியாமத்
லா உக்ஸிமு Bபி யவ்மில் கியாமஹ்
கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ ۟ؕ
وَ لَاۤமேலும்اُقْسِمُநான் சத்தியம் செய்கிறேன்بِالنَّفْسِஆன்மாவின் மீதுاللَّوَّامَةِؕதன்னைத்தானே நிந்தித்துக் கொள்ளும்
வ லா உக்ஸிமு Bபின் னFப்ஸில் லவ்வாமஹ்
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗ ۟ؕ
اَیَحْسَبُஎண்ணுகிறானா?الْاِنْسَانُமனிதன்اَلَّنْமாட்டோம் என்றுنَّجْمَعَநாம் ஒன்றுசேர்க்கعِظَامَهٗؕஅவனுடைய எலும்புகளை
அயஹ்ஸBபுல் இன்ஸானு அல் லன் னஜ்ம்'அ 'இளாமஹ்
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
بَلٰى قٰدِرِیْنَ عَلٰۤی اَنْ نُّسَوِّیَ بَنَانَهٗ ۟
بَلٰىஅப்படியல்லقٰدِرِیْنَஆற்றலுடையவர்களாகعَلٰۤیமீதுاَنْஎன்பதற்குنُّسَوِّیَசீரமைக்கبَنَانَهٗஅவனுடைய விரல் நுனிகளை
Bபலா காதிரீன 'அலா அன் னுஸவ்விய Bபனானஹ்
அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
بَلْ یُرِیْدُ الْاِنْسَانُ لِیَفْجُرَ اَمَامَهٗ ۟ۚ
بَلْமாறாகیُرِیْدُநாடுகிறான்الْاِنْسَانُமனிதன்لِیَفْجُرَபாவம் செய்யاَمَامَهٗۚதனக்கு முன்னால்
Bபல் யுரீதுல் இன்ஸானு லியFப்ஜுர அமாமஹ்
எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
یَسْـَٔلُ اَیَّانَ یَوْمُ الْقِیٰمَةِ ۟ؕ
یَسْـَٔلُஅவன் கேட்கிறான்اَیَّانَஎப்போதுیَوْمُநாள்الْقِیٰمَةِؕமறுமை
யஸ்'அலு அய்ய்யான யவ்முல் கியாமஹ்
“கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
فَاِذَا بَرِقَ الْبَصَرُ ۟ۙ
فَاِذَاஎனவே எப்போதுبَرِقَதிகைத்துவிடுமோالْبَصَرُۙபார்வை
Fப இதா Bபரிகல் Bபஸர்
ஆகவே, பார்வையும் மழுங்கி-
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ ۟ۙ
وَ جُمِعَமேலும் ஒன்று சேர்க்கப்படும்الشَّمْسُசூரியன்وَ الْقَمَرُۙசந்திரனும்
வ ஜுமி'அஷ் ஷம்ஸு வல் கமர்
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
یَقُوْلُ الْاِنْسَانُ یَوْمَىِٕذٍ اَیْنَ الْمَفَرُّ ۟ۚ
یَقُوْلُகூறுவான்الْاِنْسَانُமனிதன்یَوْمَىِٕذٍஅந்நாளில்اَیْنَஎங்கேالْمَفَرُّۚதப்பி ஓடுமிடம்
யகூலுல் இன்ஸானு யவ் ம 'இதின் அய்னல் மFபர்ர்
அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.
كَلَّا لَا وَزَرَ ۟ؕ
كَلَّاஅவ்வாறல்லلَاஇல்லைوَزَرَؕபுகலிடம்
கல்லா லா வZஜர்
“இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ لْمُسْتَقَرُّ ۟ؕ
اِلٰىபால்رَبِّكَஉமது இறைவனின்یَوْمَىِٕذِஅந்நாளில்لْمُسْتَقَرُّؕதங்குமிடம்
இலா ரBப்Bபிக யவ்ம 'இதினில் முஸ்தகர்ர்
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
یُنَبَّؤُا الْاِنْسَانُ یَوْمَىِٕذٍۭ بِمَا قَدَّمَ وَاَخَّرَ ۟ؕ
یُنَبَّؤُاஅறிவிக்கப்படுவான்الْاِنْسَانُமனிதன்یَوْمَىِٕذٍۭஅந்நாளில்بِمَاஎவற்றைقَدَّمَமுற்படுத்தினானோوَ اَخَّرَؕஇன்னும் பிற்படுத்தினானோ
யுனBப்Bப 'உல் இன்ஸானு யவ்ம 'இதிம் Bபிமா கத்தம வ அக்கர்
அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
بَلِ الْاِنْسَانُ عَلٰی نَفْسِهٖ بَصِیْرَةٌ ۟ۙ
بَلِமாறாகالْاِنْسَانُமனிதன்عَلٰىமீதுنَفْسِهٖதன் ஆத்மாவின்بَصِیْرَةٌۙதெளிவான சாட்சியாவான்
Bபலில் இன்ஸானு 'அலா னFப்ஸிஹீ Bபஸீரஹ்
எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.
وَّلَوْ اَلْقٰى مَعَاذِیْرَهٗ ۟ؕ
وَّ لَوْஇருந்தபோதிலும்اَلْقٰىஅவன் முன்வைத்தாலும்مَعَاذِیْرَهٗؕதன் சாக்குப்போக்குகளை
வ லவ் அல்கா ம'ஆதீரஹ்
அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖ ۟ؕ
لَاவேண்டாம்تُحَرِّكْஅசைக்கبِهٖஅதைக் கொண்டுلِسَانَكَஉமது நாவைلِتَعْجَلَஅவசரப்படுவதற்காகبِهٖؕஅதைக் கொண்டு
லா துஹர்ரிக் Bபிஹீ லிஸா னக லிதஃஜல Bபிஹ்
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.
اِنَّ عَلَیْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ ۟ۚۖ
اِنَّநிச்சயமாகعَلَیْنَاநம் மீதேجَمْعَهٗஅதை ஒன்று சேர்ப்பதும்وَ قُرْاٰنَهٗۚۖமேலும் அதை ஓதச் செய்வதும்
இன்ன 'அலய்னா ஜம்'அஹூ வ குர் ஆனஹ்
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ ۟ۚ
فَاِذَاஆகவே எப்போதுقَرَاْنٰهُநாம் அதனை ஓதிவிட்டால்فَاتَّبِعْபின்பற்றுவீராகقُرْاٰنَهٗۚஅதன் ஓதுதலை
Fப இதா கரானாஹு Fபத்தBபிஃ குர் ஆனஹ்
எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
ثُمَّ اِنَّ عَلَیْنَا بَیَانَهٗ ۟ؕ
ثُمَّபின்னர்اِنَّநிச்சயமாகعَلَیْنَاநம் மீதேبَیَانَهٗؕஅதனை விளக்குவது
தும்ம இன்ன 'அலய்னா Bபயானஹ்
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۟ۙ
كَلَّاஅவ்வாறில்லைبَلْமாறாகتُحِبُّوْنَநீங்கள் விரும்புகிறீர்கள்الْعَاجِلَةَۙஅவசரமானதை
கல்லா Bபல் துஹிBப்Bபூனல் 'ஆஜிலஹ்
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ
وَ تَذَرُوْنَஇன்னும் நீங்கள் விட்டுவிடுகிறீர்கள்الْاٰخِرَةَؕமறுமையை
வ ததரூனல் ஆகிரஹ்
ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاضِرَةٌ ۟ۙ
وُجُوْهٌமுகங்கள்یَّوْمَىِٕذٍஅந்நாளில்نَّاضِرَةٌۙமலர்ச்சியானவை
வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதின் னாளிரஹ்
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۟ۚ
اِلٰىநோக்கிرَبِّهَاதன் இறைவனைنَاظِرَةٌۚபார்த்துக் கொண்டிருக்கும்
இலா ரBப்Bபிஹா னாளிரஹ்
தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍۭ بَاسِرَةٌ ۟ۙ
وَ وُجُوْهٌஇன்னும் சில முகங்கள்یَّوْمَىِٕذٍۭஅந்நாளில்بَاسِرَةٌۙகடுகடுத்திருக்கும்
வ வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதிம் Bபாஸிரஹ்
ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
تَظُنُّ اَنْ یُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ۟ؕ
تَظُنُّஎண்ணும்اَنْஎன்றுیُّفْعَلَசெய்யப்படும்بِهَاஅவற்றுக்குفَاقِرَةٌؕமுதுகுத்தண்டை முறிக்கும் ஒரு பேரழிவு
தளுன்னு அ(ன்)ய் யுFப்'அல Bபிஹா Fபாகிரஹ்
இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ ۟ۙ
كَلَّاۤஅவ்வாறல்லاِذَاபோதுبَلَغَتِஅடையும்التَّرَاقِیَۙதொண்டைக் குழியை
கல்லா இதா Bபலகதித் தராகீ
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-
وَقِیْلَ مَنْ ٚ رَاقٍ ۟ۙ
وَ قِیْلَமேலும் கூறப்படும்مَنْ ٚயார்رَاقٍۙஓதிப்பார்ப்பவர்
வ கீல மன் ராக்
“மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.
وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُ ۟ۙ
وَّ ظَنَّமேலும் அவர் உறுதியாக எண்ணுவார்اَنَّهُநிச்சயமாக அதுالْفِرَاقُۙபிரிவு
வ ளன்ன அன்னஹுல் Fபிராக்
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ۟ۙ
وَ الْتَفَّتِமேலும் பின்னிக்கொள்ளும்السَّاقُகெண்டைக்கால்بِالسَّاقِۙகெண்டைக்காலுடன்
வல்தFப்Fபதிஸ் ஸாகு Bபிஸ்ஸாக்
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ لْمَسَاقُ ۟ؕ۠
اِلٰىநோக்கிرَبِّكَஉமது இறைவனைیَوْمَىِٕذِஅந்நாளில்لْمَسَاقُؕ۠ஓட்டிச் செல்லப்படுதல்
இலா ரBப்Bபிக யவ்ம'இதினில் மஸாக்
உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.  
فَلَا صَدَّقَ وَلَا صَلّٰى ۟ۙ
فَلَاஎனவே இல்லைصَدَّقَஉண்மையென ஏற்றான்وَ لَاமேலும் இல்லைصَلّٰىۙதொழுதான்
Fபலா ஸத்தக வலா ஸல்லா
ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.
وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّٰى ۟ۙ
وَ لٰكِنْஆனால்كَذَّبَபொய்யாக்கினான்وَ تَوَلّٰىۙமேலும் புறக்கணித்தான்
வ லாகின் கத்தBப வ தவல்லா
ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
ثُمَّ ذَهَبَ اِلٰۤی اَهْلِهٖ یَتَمَطّٰى ۟ؕ
ثُمَّபின்னர்ذَهَبَசென்றான்اِلٰۤیநோக்கிاَهْلِهٖதன் குடும்பத்தாரைیَتَمَطّٰىؕபெருமையடித்துக் கொண்டு
தும்ம தஹBப இலா அஹ்லிஹீ யதமத்தா
பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ۙ
اَوْلٰىகேடுلَكَஉனக்குفَاَوْلٰىۙபின்னரும் கேடு
அவ்லா லக Fப அவ்லா
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ؕ
ثُمَّமீண்டும்اَوْلٰىகேடுلَكَஉனக்குفَاَوْلٰىؕஎனவே கேடு
தும்ம அவ்லா லக Fப அவ்லா
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَنْ یُّتْرَكَ سُدًی ۟ؕ
اَیَحْسَبُஎண்ணுகிறானாالْاِنْسَانُமனிதன்اَنْஎன்றுیُّتْرَكَவிட்டுவிடப்படுவான்سُدًیؕவீணாக
அயஹ்ஸBபுல் இன்ஸானு அய் யுத்ரக ஸுதா
வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
اَلَمْ یَكُ نُطْفَةً مِّنْ مَّنِیٍّ یُّمْنٰى ۟ۙ
اَلَمْஅவன் இல்லையாیَكُஇருந்தான்نُطْفَةًஒரு துளியாகمِّنْஇலிருந்துمَّنِیٍّவிந்துیُّمْنٰىۙவெளிப்படுத்தப்படும்
அலம் யகு னுத்Fபதம் மிம் மனிய்யி(ன்)ய் யும்னா
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰى ۟ۙ
ثُمَّபின்னர்كَانَஇருந்தான்عَلَقَةًஇரத்தக் கட்டியாகفَخَلَقَபிறகு படைத்தான்فَسَوّٰىۙபிறகு சீராக்கினான்
தும்ம கான 'அலகதன் Fபகலக Fபஸவ்வா
பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ
فَجَعَلَபின்னர் ஆக்கினான்مِنْهُஅதிலிருந்துالزَّوْجَیْنِஜோடியைالذَّكَرَஆணைوَ الْاُنْثٰىؕமற்றும் பெண்ணை
Fபஜ'அல மின்ஹுZஜ் Zஜவ்ஜய்னித் தகர வல் உன்தா
பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
اَلَیْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یُّحْیِ الْمَوْتٰى ۟۠
اَلَیْسَஇல்லையாذٰلِكَஅவன்بِقٰدِرٍஆற்றலுடையவன்عَلٰۤیமீதுاَنْஎன்பதற்குیُّحْیِ َۧஉயிர்ப்பிக்கالْمَوْتٰى۠இறந்தவர்களை
அலய்ஸ தாலிக Bபிகாதிரின் 'அலா அ(ன்)ய் யுஹ்யியல் மவ்தா
(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?