82. ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)

மக்கீ, வசனங்கள்: 19

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِذَا السَّمَآءُ انْفَطَرَتْ ۟ۙ
اِذَاபோதுالسَّمَآءُவானம்انْفَطَرَتْۙபிளந்துவிடும்
இதஸ் ஸமா'உன் Fபதரத்
வானம் பிளந்து விடும்போது-
وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ ۟ۙ
وَ اِذَاமேலும் எப்போதுالْكَوَاكِبُநட்சத்திரங்கள்انْتَثَرَتْۙஉதிர்ந்து சிதறுமோ
வ இதல் கவாகிBபுன் ததரத்
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْ ۟ۙ
وَ اِذَاமேலும், எப்போதுالْبِحَارُகடல்கள்فُجِّرَتْۙபொங்கி வழியச் செய்யப்படுமோ
வ இதல் Bபிஹாரு Fபுஜ்ஜிரத்
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْ ۟ۙ
وَ اِذَاமேலும் எப்போதுالْقُبُوْرُமண்ணறைகள்بُعْثِرَتْۙகிளறப்படுமோ
வ இதல் குBபூரு Bபுஃதிரத்
மண்ணறைகள் திறக்கப்படும் போது,
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْ ۟ؕ
عَلِمَتْஅறிந்துகொள்ளும்نَفْسٌஒவ்வோர் ஆத்மாவும்مَّاஎதைقَدَّمَتْமுற்படுத்தியதோوَ اَخَّرَتْؕஇன்னும் பிற்படுத்தியதோ
'அலிமத் னFப்ஸும் மா கத்தமத் வ அக்கரத்
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
یٰۤاَیُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِیْمِ ۟ۙ
یٰۤاَیُّهَاالْاِنْسَانُமனிதனேمَاஎதுغَرَّكَஉன்னை ஏமாற்றியதுبِرَبِّكَஉனது இறைவனைப் பற்றிالْكَرِیْمِۙகண்ணியமிக்க
யா அய்யுஹல் இன்ஸானு மா கர்ரக Bபி ரBப்Bபிகல் கரீம்
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
الَّذِیْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَ ۟ۙ
الَّذِیْஎவன்خَلَقَكَஉன்னைப் படைத்தானோفَسَوّٰىكَபின் உன்னைச் செம்மைப்படுத்தினானோفَعَدَلَكَۙபின் உன்னைச் சீராக்கினானோ
அல்லதீ கலகக Fபஸவ் வாக Fப'அதலக்
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
فِیْۤ اَیِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ ۟ؕ
فِیْۤஇல்اَیِّஎந்தصُوْرَةٍஉருவம்مَّاதான்شَآءَஅவன் நாடினானோرَكَّبَكَؕஉன்னை அமைத்தான்
Fபீ அய்யீ ஸூரதிம் மா ஷா'அ ரக்கBபக்
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّیْنِ ۟ۙ
كَلَّاஅவ்வாறில்லைبَلْமாறாகتُكَذِّبُوْنَநீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்بِالدِّیْنِۙதீர்ப்பு நாளை
கல்லா Bபல் துகத்திBபூன Bபித் தீன்
இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
وَاِنَّ عَلَیْكُمْ لَحٰفِظِیْنَ ۟ۙ
وَ اِنَّமேலும் நிச்சயமாகعَلَیْكُمْஉங்கள் மீதுلَحٰفِظِیْنَۙபாதுகாவலர்கள்
வ இன்ன 'அலய்கும் லஹா Fபிளீன்
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
كِرَامًا كَاتِبِیْنَ ۟ۙ
كِرَامًاகண்ணியமானவர்கள்كَاتِبِیْنَۙஎழுதுபவர்கள்
கிராமன் காதிBபீன்
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
یَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ ۟
یَعْلَمُوْنَஅவர்கள் அறிகிறார்கள்مَاஎதைتَفْعَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
யஃலமூன ம தFப்'அலூன்
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْاَبْرَارَநல்லோர்கள்لَفِیْநிச்சயமாகنَعِیْمٍۚபேரின்பத்தில்
இன்னல் அBப்ரார லFபீ ன'ஈம்
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
وَاِنَّ الْفُجَّارَ لَفِیْ جَحِیْمٍ ۟ۚۖ
وَ اِنَّமேலும் நிச்சயமாகالْفُجَّارَதீயவர்கள்لَفِیْநிச்சயமாகجَحِیْمٍۚۖநரகத்தில்
வ இன்னல் Fபுஜ்ஜார லFபீ ஜஹீம்
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
یَّصْلَوْنَهَا یَوْمَ الدِّیْنِ ۟
یَّصْلَوْنَهَاஅவர்கள் அதில் நுழைவார்கள்یَوْمَநாளில்الدِّیْنِதீர்ப்பு
யஸ்லவ்னஹா யவ்மத் தீன்
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
وَمَا هُمْ عَنْهَا بِغَآىِٕبِیْنَ ۟ؕ
وَ مَاமேலும் இல்லைهُمْஅவர்கள்عَنْهَاஅதிலிருந்துبِغَآىِٕبِیْنَؕமறைந்திருப்பவர்கள்
வமா ஹும் 'அன்ஹா Bபிகா 'இBபீன்
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ۙ
وَ مَاۤமேலும் எதுاَدْرٰىكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்னவென்றுیَوْمُநாள்الدِّیْنِۙதீர்ப்பு
வ மா அத்ராக மா யவ்முத் தீன்
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
ثُمَّ مَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ؕ
ثُمَّமீண்டும்مَاۤஎதுاَدْرٰىكَஉமக்கு அறிவிக்கும்مَاஎன்னیَوْمُநாள்الدِّیْنِؕதீர்ப்பு
தும்ம மா அத்ராக மா யவ்முத் தீன்
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
یَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَیْـًٔا ؕ وَالْاَمْرُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ۟۠
یَوْمَஅந்நாளில்لَاஇல்லைتَمْلِكُசக்திபெறும்نَفْسٌஓர் ஆத்மாلِّنَفْسٍமற்றொரு ஆத்மாவுக்குشَیْـًٔا ؕஎதனையும்وَ الْاَمْرُமேலும் அதிகாரம்یَوْمَىِٕذٍஅன்றைய தினம்لِّلّٰهِ۠அல்லாஹ்வுக்கே
யவ்ம லா தம்லிகு னFப்ஸுல் லினFப்ஸின் ஷய்'அ வல் அம்ரு யவ்ம'இதில் லில்லாஹ்
அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது; அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.