89. ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)

மக்கீ, வசனங்கள்: 30

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَّالشَّفْعِ وَالْوَتْرِ ۟ۙ
وَّ الشَّفْعِஇரட்டையின் மீதும்وَ الْوَتْرِۙஒற்றையின் மீதும்
வஷ் ஷFப்'இ வல் வத்ர்
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
وَالَّیْلِ اِذَا یَسْرِ ۟ۚ
وَ الَّیْلِஇரவின் மீதுاِذَاஅதுیَسْرِۚகடந்து செல்லும்போது
வல்லய்லி இதா யஸ்ர்
செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
هَلْ فِیْ ذٰلِكَ قَسَمٌ لِّذِیْ حِجْرٍ ۟ؕ
هَلْஇருக்கிறதாفِیْஇல்ذٰلِكَஅதில்قَسَمٌசத்தியம்لِّذِیْஉடையவருக்குحِجْرٍؕஅறிவு
ஹல் Fபீ தாலிக கஸமுல் லிதீ ஹிஜ்ர்
இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
اَلَمْ تَرَ كَیْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ۟
اَلَمْஇல்லையாتَرَநீர் பார்த்தீராكَیْفَஎவ்வாறுفَعَلَசெய்தான்رَبُّكَஉமது இறைவன்بِعَادٍ۪ۙஆது கூட்டத்தாரை
அலம் தர கய்Fப Fப'அல ரBப்Bபுக Bபி'ஆத்
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
اِرَمَ ذَاتِ الْعِمَادِ ۟
اِرَمَஇரம்ذَاتِஉடையالْعِمَادِ۪ۙதூண்களை
இரமா தாதில் 'இமாத்
(அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,
الَّتِیْ لَمْ یُخْلَقْ مِثْلُهَا فِی الْبِلَادِ ۟
الَّتِیْஎத்தகையதென்றால்لَمْஇல்லைیُخْلَقْபடைக்கப்படمِثْلُهَاஅதைப் போன்றதுفِیஇல்الْبِلَادِ۪ۙநாடுகள்
அல்லதீ லம் யுக்லக் மித்லுஹா Fபில் Bபிலாத்
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
وَثَمُوْدَ الَّذِیْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ ۟
وَ ثَمُوْدَஇன்னும் ஸமூதுالَّذِیْنَஎவர்கள்جَابُواகுடைந்தார்களோالصَّخْرَபாறைகளைبِالْوَادِ۪ۙபள்ளத்தாக்கில்
வ தமூதல் லதீன ஜாBபுஸ் ஸக்ர Bபில் வாத்
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
وَفِرْعَوْنَ ذِی الْاَوْتَادِ ۟
وَ فِرْعَوْنَமற்றும் ஃபிர்அவ்னையும்ذِیஉடையالْاَوْتَادِ۪ۙஆணிகளை
வ Fபிர்'அவ்ன தில் அவ்தாத்
மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
الَّذِیْنَ طَغَوْا فِی الْبِلَادِ ۟
الَّذِیْنَஎவர்கள்طَغَوْاவரம்பு மீறினார்களோفِیஇல்الْبِلَادِ۪ۙநாடுகள்
அல்லதீன தகவ் Fபில் Bபிலாத்
அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
فَاَكْثَرُوْا فِیْهَا الْفَسَادَ ۟
فَاَكْثَرُوْاஅவர்கள் அதிகப்படுத்தினார்கள்فِیْهَاஅதில்الْفَسَادَ۪ۙகுழப்பத்தை
Fப அக்தரூ Fபீஹல் Fபஸாத்
அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
فَصَبَّ عَلَیْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ۟ۚۙ
فَصَبَّஎனவே பொழிந்தான்عَلَیْهِمْஅவர்கள் மீதுرَبُّكَஉமது இறைவன்سَوْطَசாட்டையைعَذَابٍۚۙவேதனையின்
FபஸBப்Bப 'அலய்ஹிம் ரBப்Bபுக ஸவ்த 'அதாBப்
எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
اِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ ۟ؕ
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَبِالْمِرْصَادِؕகண்காணித்துக் கொண்டிருக்கிறான்
இன்ன ரBப்Bபக லBபில் மிர்ஸாத்
நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்.
فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰىهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ ۙ۬ فَیَقُوْلُ رَبِّیْۤ اَكْرَمَنِ ۟ؕ
فَاَمَّاஆனால்الْاِنْسَانُமனிதன்اِذَاஎப்போதுمَاஅவனைابْتَلٰىهُசோதிக்கிறானோرَبُّهٗஅவனது இறைவன்فَاَكْرَمَهٗஅவனைக் கண்ணியப்படுத்திوَ نَعَّمَهٗ ۙ۬மேலும் அவனுக்கு அருள்புரிந்துفَیَقُوْلُஅப்போது அவன் கூறுகிறான்رَبِّیْۤஎன் இறைவன்اَكْرَمَنِؕஎன்னைக் கண்ணியப்படுத்தினான்
Fப அம்மல் இன்ஸானு இதா மBப் தலாஹு ரBப்Bபுஹூ Fப அக்ரமஹூ வ ன' 'அமஹூ Fப யகூலு ரBப்Bபீ அக்ரமன்
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்.
وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰىهُ فَقَدَرَ عَلَیْهِ رِزْقَهٗ ۙ۬ فَیَقُوْلُ رَبِّیْۤ اَهَانَنِ ۟ۚ
وَ اَمَّاۤஆனால்اِذَاஎப்பொழுதுمَاஅவனைابْتَلٰىهُசோதித்துفَقَدَرَசுருக்கிவிடுகிறானோعَلَیْهِஅவனுக்குرِزْقَهٗ ۙ۬அவனது வாழ்வாதாரத்தைفَیَقُوْلُஅப்போது அவன் கூறுகிறான்رَبِّیْۤஎன் இறைவன்اَهَانَنِۚஎன்னை இழிவுபடுத்திவிட்டான்
வ அம்மா இதா மBப்தலாஹு Fபகதர 'அலய்ஹி ரிZஜ்கஹூ Fப யகூலு ரBப்Bபீ அஹானன்
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.
كَلَّا بَلْ لَّا تُكْرِمُوْنَ الْیَتِیْمَ ۟ۙ
كَلَّاஅவ்வாறல்லبَلْமாறாகلَّاஇல்லைتُكْرِمُوْنَநீங்கள் கண்ணியப்படுத்துகிறீர்கள்الْیَتِیْمَۙஅநாதையை
கல்ல Bபல் லா துக்ரிமூ னல் யதீம்
அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
وَلَا تَحٰٓضُّوْنَ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ۙ
وَ لَاமேலும் இல்லைتَحٰٓضُّوْنَநீங்கள் தூண்டுவதும்عَلٰیமீதுطَعَامِஉணவளிக்கالْمِسْكِیْنِۙஏழைக்கு
வ லா தஹாள்ளூன 'அலாத'ஆமில் மிஸ்கீன்
ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
وَتَاْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّمًّا ۟ۙ
وَ تَاْكُلُوْنَமேலும் நீங்கள் உண்கிறீர்கள்التُّرَاثَஅனந்தரச் சொத்தைاَكْلًاவிழுங்குவதாகلَّمًّاۙபேராசையுடன்
வ தாகுலூனத் துராத அக்லல் லம்மா
இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ۟ؕ
وَّ تُحِبُّوْنَமேலும் நீங்கள் நேசிக்கிறீர்கள்الْمَالَசெல்வத்தைحُبًّاநேசமாகجَمًّاؕஅளவுகடந்த
வ துஹிBப்Bபூனல் மால ஹுBப்Bபன் ஜம்மா
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا ۟ۙ
كَلَّاۤஅவ்வாறல்லاِذَاபொழுதுدُكَّتِதூளாக்கப்படும்الْاَرْضُபூமிدَكًّاதூள் தூளாகدَكًّاۙதூள் தூளாக
கல்லா இதா துக்கதில் அர்ளு தக்கன் தக்கா
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ۟ۚ
وَّ جَآءَமேலும் வருவான்رَبُّكَஉமது இறைவன்وَ الْمَلَكُவானவர்களும்صَفًّاஅணிصَفًّاۚஅணியாக
வ ஜா'அ ரBப்Bபுக வல் மலகு ஸFப்Fபன் ஸFப்Fபா
இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்
وَجِایْٓءَ یَوْمَىِٕذٍۭ بِجَهَنَّمَ ۙ۬ یَوْمَىِٕذٍ یَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰی لَهُ الذِّكْرٰی ۟ؕ
وَ جِایْٓءَகொண்டு வரப்படும்یَوْمَىِٕذٍۭஅந்நாளில்بِجَهَنَّمَ ۙ۬நரகம்یَوْمَىِٕذٍஅந்நாளில்یَّتَذَكَّرُநினைவு கூர்வான்الْاِنْسَانُமனிதன்وَ اَنّٰیஆனால் எவ்வாறுلَهُஅவனுக்குالذِّكْرٰیؕநினைவு கூர்வது
வ ஜீ'அ யவ்ம'இதிம் Bபி ஜஹன்ன்னம்; யவ்ம 'இதி(ன்)ய் யததக்கருல் இன்ஸானு வ அன்னா லஹுத் திக்ரா
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
یَقُوْلُ یٰلَیْتَنِیْ قَدَّمْتُ لِحَیَاتِیْ ۟ۚ
یَقُوْلُஅவன் கூறுவான்یٰلَیْتَنِیْஅந்தோ! நான்قَدَّمْتُமுற்படுத்தியிருக்கலாமேلِحَیَاتِیْۚஎன் வாழ்விற்காக
யகூலு யா லய்தனீ கத்தம்து லிஹயாதீ
“என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.
فَیَوْمَىِٕذٍ لَّا یُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۟ۙ
فَیَوْمَىِٕذٍஅந்நாளில்لَّاமாட்டார்یُعَذِّبُவேதனை செய்யعَذَابَهٗۤஅவனது வேதனையைاَحَدٌۙஎவரும்
Fப யவ்ம இதில் லா யு'அத்திBபு 'அதாBபஹூ அஹத்
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
وَّلَا یُوْثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ۟ؕ
وَّ لَاமேலும் இல்லைیُوْثِقُகட்டுவான்وَ ثَاقَهٗۤஅவனது கட்டைப் போல்اَحَدٌؕஎவரும்
வ லா யூதிகு வதாக ஹூ அஹத்
மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
یٰۤاَیَّتُهَا النَّفْسُ الْمُطْمَىِٕنَّةُ ۟ۗۖ
یٰۤاَیَّتُهَاالنَّفْسُஆன்மாவேالْمُطْمَىِٕنَّةُۗۖஅமைதியுற்ற
யா அய்யதுஹன் னFப்ஸுல் முத்ம 'இன்னஹ்
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
ارْجِعِیْۤ اِلٰی رَبِّكِ رَاضِیَةً مَّرْضِیَّةً ۟ۚ
ارْجِعِیْۤதிரும்புவாயாகاِلٰیநோக்கிرَبِّكِஉன் இறைவனைرَاضِیَةًதிருப்தியடைந்தவளாகمَّرْضِیَّةًۚதிருப்தி கொள்ளப்பட்டவளாக
இர்ஜி'ஈ இலா ரBப்Bபிகி ராளியதம் மர்ளிய்யஹ்
நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
فَادْخُلِیْ فِیْ عِبٰدِیْ ۟ۙ
فَادْخُلِیْஎனவே நுழைந்துவிடுفِیْகூட்டத்தில்عِبٰدِیْۙஎன் அடியார்கள்
Fபத்குலீ Fபீ 'இBபாதீ
நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
وَادْخُلِیْ جَنَّتِیْ ۟۠
وَ ادْخُلِیْமேலும் நுழைவாயாகجَنَّتِیْ۠எனது சுவனத்தில்
வத்குலீ ஜன்னதீ
மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).