102. ஸூரத்துத் தகாஸுர்(பேராசை)

மக்கீ, வசனங்கள்: 8

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اَلْهٰىكُمُ التَّكَاثُرُ ۟ۙ
اَلْهٰٮكُمُஉங்களை ஈடுபடுத்தியதுالتَّكَاثُرُۙ‏அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல்
அல் ஹாகு முத் தகதுர்
முஹம்மது ஜான்
செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).
IFT
பிறரைவிடக் கூடுதலாக உலக வசதிகளைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(செல்வத்தையும், மக்களையும்) ஒருவருக்கொருவர் அதிகமாகத் தேடிக் கொள்வது உங்களைப் பராக்காக்கிவிட்டது.
Saheeh International
Competition in [worldly] increase diverts you
حَتّٰی زُرْتُمُ الْمَقَابِرَ ۟ؕ
حَتّٰى زُرْتُمُநீங்கள் சந்திக்கின்ற வரைالْمَقَابِرَؕ‏புதை குழிகளை
ஹத்த Zஜுர்துமுல்-மகாBபிர்
முஹம்மது ஜான்
நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).
IFT
நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மண்ணறைகளை நீங்கள் சந்திக்கும்வரை.
Saheeh International
Until you visit the graveyards.
كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ۟ۙ
كَلَّاஅவ்வாறல்லسَوْفَ تَعْلَمُوْنَۙ‏(விரைவில்) அறிவீர்கள்
கல்லா ஸவ்Fப தஃலமூன்
முஹம்மது ஜான்
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.
IFT
அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உண்மை நிலை) அவ்வாறல்ல! (அதன் விளைவை) அடுத்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
Saheeh International
No! You are going to know.
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ۟ؕ
ثُمَّபிறகுكَلَّاஅவ்வாறல்லسَوْفَ تَعْلَمُوْنَؕ‏(விரைவில்) அறிவீர்கள்
தும்ம கல்லா ஸவ்Fப தஃலமூன்
முஹம்மது ஜான்
பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவற்றின் பலன்களையும்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.
IFT
இன்னும் (கேட்டுக் கொள்ளுங்கள்:) அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவ்வாறல்ல! (அதன் விளைவை) அடுத்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
Saheeh International
Then, no! You are going to know.
كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْیَقِیْنِ ۟ؕ
كَلَّاஅவ்வாறல்லلَوْ تَعْلَمُوْنَநீங்கள் அறிந்தால்عِلْمَ الْيَقِيْنِؕ‏மிக உறுதியாக அறிவது
கல்லா லவ் தஃலமூன 'இல்மல் யகீன்
முஹம்மது ஜான்
அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற உறுதியாக நீங்கள் அறிவீர்களாயின்,
IFT
(இந்த நடத்தையின் இறுதி முடிவினை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால் (உங்கள் நடத்தை இப்படி இருந்திருக்காது).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உண்மை நிலை) அவ்வாறால்ல! (எதன்பால் உங்கள் முடிவிருக்குமோ அதுபற்றி) நீங்கள் உறுதியான அறிவாக அறிவீர்களாயின் (நீங்கள் ஈடுபட்டிருக்கும் பயனற்ற செயல் உங்களைப் பராக்காக்கியிருக்காது)
Saheeh International
No! If you only knew with knowledge of certainty...
لَتَرَوُنَّ الْجَحِیْمَ ۟ۙ
لَتَرَوُنَّநிச்சயமாகப் பார்ப்பீர்கள்الْجَحِيْمَۙ‏ஜஹீம் நரகத்தை
லதர-வுன் னல் ஜஹீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்.
IFT
திண்ணமாக, நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வின் மீது) சத்தியமாக (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் நரகத்தை (வெகுதூரத்திலிருந்து) பார்ப்பீர்கள்.
Saheeh International
You will surely see the Hellfire.
ثُمَّ لَتَرَوُنَّهَا عَیْنَ الْیَقِیْنِ ۟ۙ
ثُمَّபிறகுلَتَرَوُنَّهَاஅதை நிச்சயமாகப் பார்ப்பீர்கள்عَيْنَ الْيَقِيْنِۙ‏கண்கூடாக
தும்ம லதர வுன்னஹா 'அய்னல் யகீன்
முஹம்மது ஜான்
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள்.
IFT
இன்னும் (கேட்டுக் கொள்ளுங்கள்) திண்ணமாக நீங்கள் அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகின்றீர்கள்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நீங்கள் அதை கண்ணுக்கெதிரில் (வெகு அருகில்) பார்ப்பீர்கள்.
Saheeh International
Then you will surely see it with the eye of certainty.
ثُمَّ لَتُسْـَٔلُنَّ یَوْمَىِٕذٍ عَنِ النَّعِیْمِ ۟۠
ثُمَّபிறகுلَـتُسْــٴَــلُنَّநிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்يَوْمَٮِٕذٍஅந்நாளில்عَنِ النَّعِيْمِ‏அருட்கொடையைப் பற்றி
தும்ம லதுஸ் அலுன்ன யவ்ம-இதின் 'அனின் ன'ஈம்
முஹம்மது ஜான்
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
IFT
பிறகு அந்நாளில் இந்த அருட்கொடைகளைப் பற்றி கட்டாயம் நீங்கள் வினவப் படத்தான் போகின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அந்நாளில் (உலகில் நீங்கள் அனுபவித்து வந்த அனைத்து) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
Saheeh International
Then you will surely be asked that Day about pleasure.