107. ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)

மக்கீ, வசனங்கள்: 7

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اَرَءَیْتَ الَّذِیْ یُكَذِّبُ بِالدِّیْنِ ۟ؕ
اَرَءَيْتَபார்த்தீரா?الَّذِىْ يُكَذِّبُபொய்ப்பிப்பவனைبِالدِّيْنِؕ‏கூலி கொடுக்கப்படுவதை
அர 'அய்தல் லதீ யுகத்திBபு Bபித்தீன்
முஹம்மது ஜான்
(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
IFT
மறுமையில் நற்கூலி, தண்டனை கொடுக்கப்படுவதைப் பொய்யென்று கூறுபவனை நீர் பார்த்திருக்கிறீரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! மறுமையில் நல்லவற்றுக்கு நற்கூலியும், தீயவைக்கு தண்டனையும் வழங்கப்படும்) நியாயத்தீர்ப்பை பொய்யாக்குவோனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Saheeh International
Have you seen the one who denies the Recompense?
فَذٰلِكَ الَّذِیْ یَدُعُّ الْیَتِیْمَ ۟ۙ
فَذٰلِكَஆகவே அவன்الَّذِىْஎவன்يَدُعُّவிரட்டுகிறான்الْيَتِيْمَۙ‏அநாதையை
Fபதாலிகல் லதீ யது'உல்-யதீம்
முஹம்மது ஜான்
பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.
IFT
அவன்தான் அநாதையை மிரட்டி விரட்டுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே அத்தகையோனே அநாதைகளை (ஈவிரக்கமின்றி) விரட்டுகிறான்.
Saheeh International
For that is the one who drives away the orphan
وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ؕ
وَ لَا يَحُضُّஇன்னும் தூண்ட மாட்டான்عَلٰى طَعَامِஉணவிற்குالْمِسْكِيْنِؕ‏ஏழையின்
வ ல யஹுள்ளு 'அலா த'ஆமில் மிஸ்கீன்
முஹம்மது ஜான்
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.
IFT
மேலும், வறியவரின் உணவை அளிக்கும்படித் தூண்டுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதுமில்லை.
Saheeh International
And does not encourage the feeding of the poor.
فَوَیْلٌ لِّلْمُصَلِّیْنَ ۟ۙ
فَوَيْلٌஆக, கேடுதான்لِّلْمُصَلِّيْنَۙ‏தொழுகையாளிகளுக்கு
Fப வய்லுல்-லில் முஸல்லீன்
முஹம்மது ஜான்
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.
IFT
மேலும் கேடுதான், தொழுகையாளிகளுக்கு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, தொழுகையாளிகளுக்கு கேடுதான்.
Saheeh International
So woe to those who pray
الَّذِیْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَ ۟ۙ
الَّذِيْنَஎவர்கள்هُمْஅவர்கள்عَنْ صَلَاتِهِمْதங்கள் தொழுகையை விட்டுسَاهُوْنَۙ‏மறந்தவர்கள்
அல்லதீன ஹும் 'அன் ஸலாதிஹிம் ஸாஹூன்
முஹம்மது ஜான்
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
IFT
அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையை (நிறைவேற்றுவதை)விட்டும் பராமுகமாக இருப்போர்.
Saheeh International
[But] who are heedless of their prayer -
الَّذِیْنَ هُمْ یُرَآءُوْنَ ۟ۙ
الَّذِيْنَஎவர்கள்هُمْஅவர்கள்يُرَآءُوْنَۙ‏பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்
அல்லதீன ஹும் யுரா'ஊன்
முஹம்மது ஜான்
அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.
IFT
அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர்தான் (மற்றவர்களுக்குக்) காண்பிக்(கவே தொழு)கிறார்கள்.
Saheeh International
Those who make show [of their deeds]
وَیَمْنَعُوْنَ الْمَاعُوْنَ ۟۠
وَيَمْنَعُوْنَஇன்னும் தடுக்கிறார்கள்الْمَاعُوْنَ‏சிறிய பொருளை
வ யம்ன'ஊனல் மா'ஊன்
முஹம்மது ஜான்
மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.
IFT
மேலும், சாதாரணத் தேவைகளுக்கான பொருள்களைக் கூட (மக்களுக்குக்) கொடுத்துதவுவதைத் தடுக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (அன்றாடம் உபயோகமாகும்) அற்பமான பொருட்களை (மற்றவர்களுக்குக் கொடுப்பதைவிட்டும்) தடுக்கிறார்கள்.
Saheeh International
And withhold [simple] assistance.