112. ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)

மக்கீ, வசனங்கள்: 4

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۟ۚ
قُلْகூறுவீராகهُوَஅவன்اللّٰهُஅல்லாஹ்اَحَدٌ‌ ۚ‏ஒருவன்
குல் ஹுவல் லாஹு அஹத்
முஹம்மது ஜான்
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.
IFT
கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக அவன் “அல்லாஹ்” ஒருவனே!
Saheeh International
Say, "He is Allah, [who is] One,
اَللّٰهُ الصَّمَدُ ۟ۚ
اَللّٰهُஅல்லாஹ்الصَّمَدُ‌ ۚ‏தலைவன்
அல்லாஹ் ஹுஸ்-ஸமத்
முஹம்மது ஜான்
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
IFT
அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். (அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன், (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன!).
Saheeh International
Allah, the Eternal Refuge.
لَمْ یَلِدْ ۙ۬ وَلَمْ یُوْلَدْ ۟ۙ
لَمْ يَلِدْ   ۙஅவன் பெற்றெடுக்கவில்லைوَلَمْ يُوْلَدْ ۙ‏இன்னும் பெற்றெடுக்கப்படவுமில்லை
லம் யலித் வ லம் யூலத்
முஹம்மது ஜான்
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
IFT
அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை.
Saheeh International
He neither begets nor is born,
وَلَمْ یَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ۟۠
وَلَمْ يَكُنْஇன்னும் இல்லைلَّهٗஅவனுக்குكُفُوًاநிகராகاَحَدٌ‏ஒருவரும்
வ லம் யகுல்-லஹூ குFபுவன் அஹத்
முஹம்மது ஜான்
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை.
IFT
மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.
Saheeh International
Nor is there to Him any equivalent."