15. ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)

மக்கீ, வசனங்கள்: 99

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
الٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ وَقُرْاٰنٍ مُّبِیْنٍ ۟
الٓرٰ ۫அலிஃப், லாம், றாتِلْكَஇவைاٰیٰتُவசனங்கள்الْكِتٰبِவேதத்தின்وَ قُرْاٰنٍமேலும் குர்ஆனின்مُّبِیْنٍதெளிவான
அலிFப்-லாம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBபி வ குர்ஆ-னிம் முBபீன்
முஹம்மது ஜான்
அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான வசனங்களாகவும்.
அப்துல் ஹமீது பாகவி
அலிஃப் லாம் றா. (நபியே!) இவை (முந்திய) வேதங்களுடைய இன்னும் தெளிவான (இந்த) குர்ஆனுடைய (சில) வசனங்களாகும்.
IFT
அலிஃப், லாம், றா. இறைமறையின் மற்றும் தெளிவான குர்ஆனின் வசனங்களாகும் இவை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அலிஃப் லாம் றா. இவை இவ்வேதத்தினுடைய - இன்னும், தெளிவான குர் ஆனுடைய – வசனங்களாகும்.
Saheeh International
Alif, Lam, Ra. These are the verses of the Book and a clear Qur’an [i.e., recitation].
رُبَمَا یَوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِیْنَ ۟
رُبَمَاபலமுறைیَوَدُّவிரும்புவார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَوْஎன்றுكَانُوْاஇருந்திருக்கலாமேمُسْلِمِیْنَமுஸ்லிம்களாக
ருBபமா யவத்துல் லதீன கFபரூ லவ் கானூ முஸ்லிமீன்
முஹம்மது ஜான்
தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே? என்று நிராகரிப்பவர்கள் (மறுமையில்) பெரிதும் விரும்புவர்.
IFT
(இன்று இஸ்லாத்தின் அழைப்பை) ஏற்க மறுத்தவர்கள் “நாமும் இறைவனுக்கு அடிபணிந்தவர்களாக இருந்திருக்கக் கூடாதா?” என்று ஏக்கத்துடன் கூறும் நேரம் விரைவில் வரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரிப்போர் தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே என்று பெரிதும் விரும்புவர்.
Saheeh International
Perhaps those who disbelieve will wish that they had been Muslims.
ذَرْهُمْ یَاْكُلُوْا وَیَتَمَتَّعُوْا وَیُلْهِهِمُ الْاَمَلُ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
ذَرْهُمْஅவர்களை விட்டுவிடுவீராகیَاْكُلُوْاஅவர்கள் உண்ணட்டும்وَ یَتَمَتَّعُوْاமேலும் அவர்கள் சுகமனுபவிக்கட்டும்وَ یُلْهِهِمُமேலும் அவர்களைப் பராக்காக்கட்டும்الْاَمَلُ(வீண்) ஆசைفَسَوْفَவிரைவில்یَعْلَمُوْنَஅவர்கள் அறிந்துகொள்வார்கள்
தர்ஹும் யாகுலூ வ யதமத்த'ஊ வ யுல்ஹிஹிமுல் அமலு Fபஸவ்Fப யஃலமூன்
முஹம்மது ஜான்
(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக; அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் (நன்கு) புசித்துக்கொண்டும், (தங்கள் இஷ்டப்படி) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க (தற்சமயம்) நீர் அவர்களை விட்டுவிடுவீராக. அவர்களுடைய (வீண்) நம்பிக்கைகள் (மறுமையை அவர்களுக்கு) மறக்கடித்து விட்டன. இதன் (பலனை) பின்னர் அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
IFT
(நபியே!) அவர்களை அவர்களுடைய போக்கில் விட்டுவிடும்! அவர்கள் உண்டு மகிழ்ந்து சுகம் அனுபவித்துக் கொள்ளட்டும்! மேலும், அவர்களின் நப்பாசைகள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி வைத்திருக்கட்டும்! இவர்கள் விரைவில் அறிந்து கொள்ளத்தான் போகிறார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் அவர்களை விட்டு விடுவீராக! அவர்கள் உண்ணட்டும், சுகமனுபவிக்கட்டும், (அவர்களுடைய வீண்) ஆசை (மறுமையை) அவர்களுக்கு மறக்கடித்துவிட்டது, (இதன் முடிவை) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
Saheeh International
Let them eat and enjoy themselves and be diverted by [false] hope, for they are going to know.
وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُوْمٌ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَهْلَكْنَاநாம் அழித்தோம்مِنْஎந்த ஓர்قَرْیَةٍஊரையும்اِلَّاதவிரوَ لَهَاஅதற்குكِتَابٌஒரு விதிمَّعْلُوْمٌஅறியப்பட்ட
வ மா அஹ்லக்னா மின் கர்யதின் இல்லா வ லஹா கிதாBபும் மஃலூம்
முஹம்மது ஜான்
எந்த ஊர்(வாசி)களையும் (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அவர்களுக்கெனக் குறிப்பிட்ட காலத்தவணையிலன்றி நாம் அழித்துவிடுவதுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(பாவத்தில் மூழ்கிய) எவ்வூராரையும் அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணையிலேயே தவிர நாம் அவர்களை அழித்து விடவில்லை.
IFT
இதற்கு முன்பு நாம் எந்த ஊரை அழித்திருக்கின்றோமோ அதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தவணை நிர்ணயிக்கப்பட்டே இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவ்வூ(ரா)ரையும், அதற்குக் குறிப்பிட்ட (காலத்) தவணையிலன்றி, நாம் (அவர்களை) அழித்துவிடவில்லை.
Saheeh International
And We did not destroy any city but that for it was a known decree.
مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا یَسْتَاْخِرُوْنَ ۟
مَاஇல்லைتَسْبِقُமுந்தும்مِنْஎந்தவொருاُمَّةٍசமுதாயமும்اَجَلَهَاஅதன் தவணையைوَ مَاமேலும் இல்லைیَسْتَاْخِرُوْنَஅவர்கள் பிந்துவார்கள்
மா தஸ்Bபிகு மின் உம்மதின் அஜலஹா வமா யஸ்தாகிரூன்
முஹம்மது ஜான்
எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணைக்கு முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
IFT
எந்தச் சமூகத்தினரும் தமக்குரிய காலத் தவணை முடியும் முன்பே அழியவும் முடியாது; அது முடிந்த பின்பு வாழவும் முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அழிக்கப்படுவதற்காக உள்ள) எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணையை முந்தவும் மாட்டாது; அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்.
Saheeh International
No nation will precede its term, nor will they remain thereafter.
وَقَالُوْا یٰۤاَیُّهَا الَّذِیْ نُزِّلَ عَلَیْهِ الذِّكْرُ اِنَّكَ لَمَجْنُوْنٌ ۟ؕ
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்یٰۤاَیُّهَاالَّذِیْஎவர்نُزِّلَஅருளப்பட்டதோعَلَیْهِஅவர் மீதுالذِّكْرُஇவ்வுபதேசம்اِنَّكَநிச்சயமாக நீர்لَمَجْنُوْنٌؕநிச்சயமாக ஒரு பைத்தியக்காரர்
வ காலூ யா அய்யுஹல் லதீ னுZஜ்Zஜில 'அலய்ஹித் திக்ரு இன்னக லமஜ்னூன்
முஹம்மது ஜான்
(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நம் நபியாகிய உம்மை நோக்கி) ‘‘வேதம் அருளப்பட்டதாகக் கூறுகின்ற நீர் நிச்சயமாகப் பைத்தியக்காரர்தான்'' என்று கூறுகின்றனர்.
IFT
இம்மக்கள் கூறுகின்றார்கள்: “இறை வாக்கு (திக்ர்) இறக்கியருளப்பட்டிருப்பவரே! திண்ணமாக, நீர் ஒரு பைத்தியக்காரர் ஆவீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (குர் ஆனாகிய) “உபதேசம் எவர்மீது இறக்கப்பட்டுள்ளதோ அத்தகையவரே! நீர் நிச்சயமாக பைத்தியக்காரர்தான்” என அவர்கள் கூறுகின்றனர்.
Saheeh International
And they say, "O you upon whom the message has been sent down, indeed you are mad.
لَوْ مَا تَاْتِیْنَا بِالْمَلٰٓىِٕكَةِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
لَوْஏன்مَاஇல்லைتَاْتِیْنَاஎங்களிடம் கொண்டு வருகிறீர்بِالْمَلٰٓىِٕكَةِவானவர்களைاِنْஎன்றால்كُنْتَநீர் இருந்தால்مِنَஒருவராகالصّٰدِقِیْنَஉண்மையாளர்களில்
லவ் மா தாதீனா Bபில் மலா'இகதி இன் குன்த மினஸ் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
“நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்.)
அப்துல் ஹமீது பாகவி
‘‘மெய்யாகவே நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (உமக்குச் சாட்சியாக) நீர் வானவர்களை அழைத்துக் கொண்டுவர வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.)
IFT
நீர் உண்மையாளராய் இருப்பின் ஏன் எங்களிடம் வானவர்களை நீர் அழைத்து வருவதில்லை?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உண்மையாளர்களில் உள்ளவராக நீர் இருந்தால், (உமக்குச் சாட்சியாக) நீர் எங்களிடம் மலக்குகளை (அழைத்து)க் கொண்டு வந்திருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்.)
Saheeh International
Why do you not bring us the angels, if you should be among the truthful?"
مَا نُنَزِّلُ الْمَلٰٓىِٕكَةَ اِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوْۤا اِذًا مُّنْظَرِیْنَ ۟
مَاஇல்லைنُنَزِّلُநாம் இறக்குகிறோம்الْمَلٰٓىِٕكَةَவானவர்களைاِلَّاதவிரبِالْحَقِّஉண்மையைக் கொண்டுوَ مَاமேலும் இல்லைكَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اِذًاஅப்போதுمُّنْظَرِیْنَஅவகாசம் அளிக்கப்பட்டவர்கள்
மா னுனZஜ்Zஜிலுல் மலா'இ கத இல்லா Bபில்ஹக்கி வமா கானூ இதம் முன்ளரீன்
முஹம்மது ஜான்
நாம் மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு அல்லாமல் இறக்குவதில்லை; அப்(படி இறக்கப்படும்) போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நாம் வானவர்களை இறக்கிவைப்பதெல்லாம் எவருடைய காரியத்தையும் அழித்து முடித்துவிடக் கருதினால்தான். அச்சமயம் அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படுவதில்லை. (உடனே அழிக்கப்பட்டுவிடுவர்.)
IFT
நாம் வான வர்களை (வெறுமனே இறக்குவதில்லை.) அவர்கள் இறங்கும்போது சத்தியத்துடனே இறங்குவார்கள். அதன் பிறகு மக்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உண்மையைக் கொண்டல்லாது மலக்குகளை நாம் இறக்கி வைப்பதில்லை, (எனவே, வேதனையைக்கொண்டு அவர்கள் இறங்கினால்) அச்சமயம் அவர்கள் அவகாசம் கொடுக்கப்படுவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.
Saheeh International
We do not send down the angels except with truth; and they [i.e., the disbelievers] would not then be reprieved.
اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்نَحْنُநாமேنَزَّلْنَاஇறக்கி வைத்தோம்الذِّكْرَஇந்த அறிவுரையைوَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَهٗஅதனைلَحٰفِظُوْنَநிச்சயமாகப் பாதுகாப்பவர்கள்
இன்னா னஹ்னு னZஜல்னத் திக்ர வ இன்னா லஹூ லஹா Fபிளூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உம் மீது) இறக்கிவைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதைப் பாதுகாத்துக் கொள்வோம்.
IFT
திண்ணமாக, இந்த நல்லு ரையை நாம்தாம் இறக்கிவைத்தோம். மேலும், நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம்தான் (திக்ரு என்னும் இவ்)வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம், நிச்சயமாக நாமே அதனை பாதுகாப்பவர்கள்.
Saheeh International
Indeed, it is We who sent down the message [i.e., the Qur’an], and indeed, We will be its guardian.
وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِیْ شِیَعِ الْاَوَّلِیْنَ ۟
وَ لَقَدْநிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مِنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னர்فِیْஇல்شِیَعِபிரிவுகள்الْاَوَّلِیْنَமுன்னோர்களின்
வ லகத் அர்ஸல்னா மின் கBப்லிக Fபீ ஷிய'இல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமக்கு முன்னர் சென்றுபோன கூட்டங்களுக்கும் நிச்சயமாக நாம் தூதர்கள் பலரை அனுப்பிவைத்தோம்.
IFT
(நபியே!) உமக்கு முன் சென்று போன எத்தனையோ சமூகங்களுக்குத் தூதர்களை நாம் அனுப்பியிருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உமக்கு முன்னர் (சென்று போன) முந்தைய பல கூட்டத்தார்களிலும் நிச்சயமாக நாம் தூதர்களை) அனுப்பி வைத்தோம்.
Saheeh International
And We had certainly sent [messengers] before you, [O Muhammad], among the sects of the former peoples.
وَمَا یَاْتِیْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைیَاْتِیْهِمْஅவர்களிடம் வரும்مِّنْஎந்த ஒருرَّسُوْلٍதூதரும்اِلَّاதவிரكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்بِهٖஅவரைப்یَسْتَهْزِءُوْنَபரிகசிப்பவர்களாக
வமா யாதீஹிம் மிர் ரஸூலின் இல்லா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
முஹம்மது ஜான்
எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்,) அவர்களிடம் (நமது) தூதர் எவர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாதிருக்கவில்லை.
IFT
அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதும் அவரை அவர்கள் ஏளனம் செய்யாமல் இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம்முடைய) எந்தத் தூதரும் - அவரை அவர்கள் பரிகாசம் செய்பவர்களாக இருந்தேயல்லாது அவர்களிடம்- அவர் வரவில்லை.
Saheeh International
And no messenger would come to them except that they ridiculed him.
كَذٰلِكَ نَسْلُكُهٗ فِیْ قُلُوْبِ الْمُجْرِمِیْنَ ۟ۙ
كَذٰلِكَஇவ்வாறேنَسْلُكُهٗஅதனை நாம் புகுத்துகிறோம்فِیْஉள்ளேقُلُوْبِஇதயங்களில்الْمُجْرِمِیْنَۙகுற்றவாளிகளின்
கதாலிக னஸ்லுகுஹூ Fபீ குலூBபில் முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி விடுகிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள் உள்ளங்களிலிருந்த) நிராகரிப்பைப் போலவே இக்குற்றவாளிகளின் உள்ளங்களிலும் (நிராகரிப்பைப்) புகுத்திவிட்டோம்.
IFT
இவ்வாறே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் இந்நல்லுரையை (கம்பியைப் போன்று) செலுத்துகிறோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே குற்றவாளிகளின் உள்ளங்களிலும் அ(வ்விஷமத்)தை நாம் புகச் செய்கிறோம்.
Saheeh International
Thus do We insert it [i.e., denial] into the hearts of the criminals.
لَا یُؤْمِنُوْنَ بِهٖ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِیْنَ ۟
لَاமாட்டார்கள்یُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்ளبِهٖஇதன் மீதுوَ قَدْமேலும் நிச்சயமாகخَلَتْசென்றுவிட்டதுسُنَّةُவழிமுறைالْاَوَّلِیْنَமுன்னோர்களின்
லா யு'மினூன Bபிஹீ வ கத் கலத் ஸுன்னதுல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
அவர்கள் இ(வ் வேதத்)தின் மீது ஈமான் கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் இந்நடை முறையும் (இறுதியில் அவர்கள் அழிவும்) நிகழ்ந்தே வந்துள்ளன.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே,) இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். முன் சென்றவர்களுடைய நடைமுறை சென்றிருக்கிறது. (அவர்கள் அழிந்தது போல இவர்களும் அழிந்து விடுவர்.)
IFT
அதன்மீது அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. தொன்றுதொட்டே இத்தகைய இயல்புடைய மக்களிடம் இதே நடைமுறைதான் இருந்து வருகிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, வேதமான) இதனை அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள், (இவ்வாறே அவர்களுக்கு) முன் சென்றவர்களின் வழிமுறை திட்டமாகச் சென்றே விட்டது.
Saheeh International
They will not believe in it, while there has already occurred the precedent of the former peoples.
وَلَوْ فَتَحْنَا عَلَیْهِمْ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوْا فِیْهِ یَعْرُجُوْنَ ۟ۙ
وَ لَوْஇன்னும் ஒருவேளைفَتَحْنَاநாம் திறந்தாலும்عَلَیْهِمْஅவர்களுக்குبَابًاஒரு வாசலைمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்فَظَلُّوْاஅவர்கள் தொடர்ந்துفِیْهِஅதில்یَعْرُجُوْنَۙஏறிக்கொண்டிருந்தாலும்
வ லவ் Fபதஹ்னா 'அலய்ஹிம் BபாBபம் மினஸ் ஸமா'இ Fபளலூ Fபீஹி யஃருஜூன்
முஹம்மது ஜான்
இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
வானத்தில் ஒரு வாசலை இவர்களுக்கு நாம் திறந்துவிட்டு, அதில் பகல் நேரத்திலே இவர்கள் ஏறியபோதிலும் (நம்பிக்கை கொள்ளாமல்),
IFT
மேலும், வானத்தின் வாயிலொன்றை நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டிருந்தாலும், அதில் அவர்கள் பட்டப் பகலிலே ஏறத் தொடங்கிவிட்டிருந்தாலும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானத்திலிருந்து ஒரு வாசலை நாம் அவர்களுக்குத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுவதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும், (அவ்வேதத்தை உண்மைப்படுத்த மாட்டார்கள், மாறாக, அவர்கள்)
Saheeh International
And [even] if We opened to them a gate from the heaven and they continued therein to ascend,
لَقَالُوْۤا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ ۟۠
لَقَالُوْۤاநிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்اِنَّمَاமட்டுமேسُكِّرَتْமயக்கப்பட்டுவிட்டனاَبْصَارُنَاஎங்கள் பார்வைகள்بَلْமாறாகنَحْنُநாங்கள்قَوْمٌஒரு சமூகம்مَّسْحُوْرُوْنَ۠சூனியம் செய்யப்பட்டவர்கள்
லகாலூ இன்னமா ஸுக்கிரத் அBப்ஸாருனா Bபல் னஹ்னு கவ்மும் மஸ்ஹூரூன்
முஹம்மது ஜான்
“நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகி விட்டோம்“ என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘எங்கள் கண்கள் மயங்கிவிட்டன; நாங்கள் சூனியம் செய்யப்பட்டு விட்டோம்'' என்றே கூறுவார்கள். (உண்மையை நம்பமாட்டார்கள்.)
IFT
அப்பொழுதும் அவர்கள் இவ்வாறே கூறியிருப்பர்: “எங்கள் கண்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றன; சரியாகச் சொல்வதானால் எங்களுக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பார்க்க முடியாது, தடுக்கப்பட்டு) “மயக்கப்பட்டதெல்லாம் எங்களுடைய பார்வைகள்தான், (அது மட்டும்) அல்ல, நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டத்தினர்” என்றே கூறுவார்கள்.
Saheeh International
They would say, "Our eyes have only been dazzled. Rather, we are a people affected by magic."
وَلَقَدْ جَعَلْنَا فِی السَّمَآءِ بُرُوْجًا وَّزَیَّنّٰهَا لِلنّٰظِرِیْنَ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகجَعَلْنَاநாம் அமைத்தோம்فِیஇல்السَّمَآءِவானம்بُرُوْجًاநட்சத்திர மண்டலங்களைوَّ زَیَّنّٰهَاமேலும் அதனை அழகாக்கினோம்لِلنّٰظِرِیْنَۙபார்ப்பவர்களுக்கு
வ லகத் ஜ'அல்னா Fபிஸ்ஸமா'இ Bபுரூஜ(ன்)வ் வ Zஜய்யன்னாஹா லின்னாளிரீன்
முஹம்மது ஜான்
வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம்தான் வானத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதை அலங்காரமாகவும் ஆக்கி வைத்தோம்.
IFT
(இது நமது செயல் திறனாகும்:) திண்ணமாக நாம், வானத்தில் உறுதி வாய்ந்த அரண்களை அமைத்தோம்; பார்ப்பவர்களுக்காக (நட்சத்திரங்களால்) அவற்றை அலங்கரித்தோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக நாம் வானத்தில் கிரகங்களை அமைத்து பார்ப்போருக்கு அதனை அலங்கரித்துள்ளோம்.
Saheeh International
And We have placed within the heaven great stars and have beautified it for the observers.
وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَیْطٰنٍ رَّجِیْمٍ ۟ۙ
وَ حَفِظْنٰهَاமேலும் நாம் அதனைப் பாதுகாத்தோம்مِنْஇருந்துكُلِّஒவ்வொருشَیْطٰنٍஷைத்தான்رَّجِیْمٍۙவிரட்டப்பட்ட
வ ஹFபிள்னாஹா மின் குல்லி ஷய்தானிர் ரஜீம்
முஹம்மது ஜான்
விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானும் அவற்றை நெருங்காது காத்துக்கொண்டோம்.
IFT
மேலும், விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானைவிட்டும் அவற்றைப் பாதுகாக்கவும் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் அவற்றை நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
Saheeh International
And We have protected it from every devil expelled [from the mercy of Allah]
اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَتْبَعَهٗ شِهَابٌ مُّبِیْنٌ ۟
اِلَّاதவிரمَنِஎவர்اسْتَرَقَதிருட்டுத்தனமாகالسَّمْعَசெவிமடுக்கிறாரோفَاَتْبَعَهٗஅவரைப் பின்தொடரும்شِهَابٌநெருப்புப்பந்துمُّبِیْنٌதெளிவான
இல்லா மனிஸ் தரகஸ் ஸம்'அ Fப அத்Bப'அஹூ ஷிஹாBபும் முBபீன்
முஹம்மது ஜான்
திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர; (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (வானவர்களின்) ஒரு வார்த்தையைத் திருட்டுத்தனமாகக் கேட்டுப் போவதைத் தவிர, (ஷைத்தான் அவற்றை நெருங்க முடியாது. அவ்வாறு ஷைத்தான் நெருங்கினால் சுடர் வீசும்) எரிகின்ற நெருப்பு ஜூவாலை அதை (விரட்டிப்) பின் தொடர்ந்து செல்லும்.
IFT
ஆகையால் எந்த ஒரு ஷைத்தானும் அங்கு செல்ல முடியாது; எதையேனும் ஒட்டுக் கேட்பதைத் தவிர! (அப்படி அவன் ஒட்டுக் கேட்க முயன்றால்) பிரகாசமான ஒரு தீச்சுவாலை அவனைப் பின்சென்று விரட்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திருட்டுத்தனமாக (ஒட்டு)க் கேட்பவ(னான ஷைத்தா)னைத் தவிர, அப்போது பிரகாசமான தீப்பந்தம் அவனை (விரட்டி)ப் பின்தொடர்ந்து செல்லும்.
Saheeh International
Except one who steals a hearing and is pursued by a clear burning flame.
وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَیْنَا فِیْهَا رَوَاسِیَ وَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ شَیْءٍ مَّوْزُوْنٍ ۟
وَ الْاَرْضَமேலும் பூமியைمَدَدْنٰهَاஅதனை நாம் விரித்தோம்وَ اَلْقَیْنَاமேலும் நாம் அமைத்தோம்فِیْهَاஅதில்رَوَاسِیَஉறுதியான மலைகளைوَ اَنْۢبَتْنَاமேலும் நாம் முளைக்கச் செய்தோம்فِیْهَاஅதில்مِنْஇருந்துكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்مَّوْزُوْنٍசீரான அளவில்
வல் அர்ள மதத்னாஹா வ அல்கய்னா Fபீஹா ரவாஸிய வ அம்Bபத்னா Fபீஹா மின் குல்லி ஷய்'இம் மவ்Zஜூன்
முஹம்மது ஜான்
பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் பூமியை விரித்து, அதில் உறுதிமிக்க அசையாத மலைகளை நட்டினோம். ஒவ்வொரு புற்பூண்டையும் (அதற்குரிய) ஒழுங்கான முறையில் அதில் நாம் முளைப்பித்தோம்.
IFT
மேலும், நாம், பூமியை விரித்தோம்; அதில் மலைகளை நாட்டினோம். அதில், எல்லா வகையான தாவரங்களையும் மிகப் பொருத்தமான அளவில் முளைக்கச் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியை – அதனை நாம் விரித்து அதில் அசையாத மலைகளையும் நாட்டினோம், மேலும், ஒவ்வொரு பொருளையும் (அதற்குரிய) அளவின்படி அதில் நாம் முளைக்க வைத்தோம்.
Saheeh International
And the earth - We have spread it and cast therein firmly set mountains and caused to grow therein [something] of every well-balanced thing.
وَجَعَلْنَا لَكُمْ فِیْهَا مَعَایِشَ وَمَنْ لَّسْتُمْ لَهٗ بِرٰزِقِیْنَ ۟
وَ جَعَلْنَاமேலும் நாம் ஏற்படுத்தினோம்لَكُمْஉங்களுக்குفِیْهَاஅதில்مَعَایِشَவாழ்வாதாரங்களைوَ مَنْமேலும் எவரைلَّسْتُمْநீங்கள் இல்லையோلَهٗஅவருக்குبِرٰزِقِیْنَஉணவளிப்பவர்களாக
வ ஜ'அல்னா லகும் Fபீஹா ம'ஆயிஷ வ மல் லஸ்தும் லஹூ BபிராZஜிகீன்
முஹம்மது ஜான்
நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கும், நீங்கள் உணவு கொடுத்து வளர்க்காததுமான (ஆகாயத்திலும் பூமியிலும் வசிக்கின்ற எண்ணற்ற) உயிரினங்களுக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களை நாமே அதில் அமைத்தோம்.
IFT
மேலும், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் நாம் அதில் அமைத்தோம் உங்களுக்காகவும் நீங்கள் எவற்றுக்கு உணவளிப்பவர்களாக இல்லையோ அத்தகைய எண்ணற்ற படைப்பினங்களுக்காகவும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களுக்கும், நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழத்தேவையானவற்றை அதில் நாமே ஆக்கியுள்ளோம்.
Saheeh International
And We have made for you therein means of living and [for] those for whom you are not providers.
وَاِنْ مِّنْ شَیْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآىِٕنُهٗ ؗ وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ ۟
وَ اِنْமேலும் இல்லைمِّنْஎந்தشَیْءٍஒரு பொருளும்اِلَّاதவிரعِنْدَنَاநம்மிடம்خَزَآىِٕنُهٗ ؗஅதன் கருவூலங்கள்وَ مَاமேலும் இல்லைنُنَزِّلُهٗۤஅதனை நாம் இறக்கியருள்வதுاِلَّاதவிரبِقَدَرٍஓர் அளவின்படிمَّعْلُوْمٍநிர்ணயிக்கப்பட்ட
வ இம் மின் ஷய்'இன் இல்லா 'இன்தனா கZஜா 'இனுஹூ வமா னுனZஜ்Zஜிலுஹூ இல்லா Bபிகதரிம் மஃலூம்
முஹம்மது ஜான்
ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வொரு பொருளின் பொக்கிஷங்களும் நம்மிடமே இருக்கின்றன. எனினும், அவற்றை (அந்தந்தக் காலத்தில் அவற்றிற்குக்) குறிப்பிட்ட அளவில்தான் நாம் இறக்கி வைக்கிறோம்.
IFT
எந்தப் பொருள்களாய் இருந்தாலும் சரி, அதன் கருவூலம் நம்மிடம் இல்லாமல் இல்லை. எந்தப் பொருளையும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே நாம் இறக்கி வைக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எந்தப் பொருளும் அதன் களஞ்சியங்கள் நம்மிடமிருந்தே தவிர இல்லை, எனினும், அவற்றை குறிப்பிட்ட அளவிலே தவிர நாம் இறக்கிவைப்பதும் இல்லை.
Saheeh International
And there is not a thing but that with Us are its depositories, and We do not send it down except according to a known [i.e., specified] measure.
وَاَرْسَلْنَا الرِّیٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَیْنٰكُمُوْهُ ۚ وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِیْنَ ۟
وَ اَرْسَلْنَاமேலும் நாம் அனுப்பினோம்الرِّیٰحَகாற்றுகளைلَوَاقِحَசூற்படுத்தக்கூடியவையாகفَاَنْزَلْنَاபின்னர் நாம் இறக்கினோம்مِنَஇருந்துالسَّمَآءِவானம்مَآءًநீரைفَاَسْقَیْنٰكُمُوْهُ ۚபின்னர் அதனை உங்களுக்குப் புகட்டினோம்وَ مَاۤமேலும் இல்லைاَنْتُمْநீங்கள்لَهٗஅதனைبِخٰزِنِیْنَசேகரித்து வைப்பவர்களாக
வ அர்ஸல்னர் ரியாஹ ல வாகிஹ Fப அன்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அன் Fப அஸ்கய் னாகுமூஹு வ மா அன்தும் லஹூ BபிகாZஜினீன்
முஹம்மது ஜான்
இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பிவைக்கிறோம். அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கிறோம். அதை நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். (மழை நீரை மேகத்திலும், நிலத்திலும்) நீங்கள் சேகரித்து வைக்கவில்லை; (நாம்தான் சேகரிக்கிறோம்.)
IFT
மேலும் (மேகங்களை) கருக்கொள்ளச் செய்யும் காற்றை நாமே அனுப்புகின்றோம். பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றோம். மேலும், அதனை உங்களுக்குப் புகட்டுகின்றோம். அதன் கருவூலதாரர் நீங்கள் அல்லவே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம், பின்னர் வானத்திலிருந்து நாமே (மழையெனும்) நீரைப் பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம், நீங்கள் அதனைச் சேமித்து வைப்பவர்களாகவும் இல்லை.
Saheeh International
And We have sent the fertilizing winds and sent down water from the sky and given you drink from it. And you are not its retainers.
وَاِنَّا لَنَحْنُ نُحْیٖ وَنُمِیْتُ وَنَحْنُ الْوٰرِثُوْنَ ۟
وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَنَحْنُநாமேنُحْیٖஉயிர் கொடுக்கிறோம்وَ نُمِیْتُமேலும் மரணிக்கச் செய்கிறோம்وَ نَحْنُமேலும் நாம்الْوٰرِثُوْنَவாரிசுகள்
வ இன்ன்னா ல னஹ்னு னுஹ்யீ வ னுமீது வ னஹ்னுல் வாரிதூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரணிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கச் செய்வோம். அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்).
IFT
திண்ணமாக, வாழ்வையும் மரணத்தையும் நாமே அளிக்கின்றோம். மேலும், அனைத்திற்கும் நாமே வாரிசாவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(படைப்பினங்களுக்கு) நிச்சயமாக நாம் தாம் உயிரும் கொடுக்கிறோம், நாமே (அவற்றை) இறக்கவும் வைக்கிறோம், (யாவற்றிற்கும்) நாமே வாரிசாவோம்.
Saheeh International
And indeed, it is We who give life and cause death, and We are the Inheritor.
وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِیْنَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَاْخِرِیْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகعَلِمْنَاநாம் அறிவோம்الْمُسْتَقْدِمِیْنَமுந்திச் சென்றவர்களைمِنْكُمْஉங்களில்وَ لَقَدْமேலும் நிச்சயமாகعَلِمْنَاநாம் அறிவோம்الْمُسْتَاْخِرِیْنَபிந்தி வருபவர்களை
வ ல கத் 'அலிம்னல் முஸ்தக்திமீன மின்கும் வ லகத் 'அலிம்னல் முஸ்தாகிரீன்
முஹம்மது ஜான்
உங்களில் முந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு முன் சென்றவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்; (உங்களுக்குப்) பின் வரக்கூடியவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்.
IFT
உங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களையும் பின்னால் வரப்போகின்றவர்களையும் நாம் அறிந்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உங்களில் (உங்களுக்கு) முன் சென்றோரையும் நிச்சயமாக நாம் அறிந்துள்ளோம், (உங்களுக்குப்)பின் வரக்கூடியவர்களையும் நிச்சயமாக நாம் அறிந்துள்ளோம்.
Saheeh International
And We have already known the preceding [generations] among you, and We have already known the later [ones to come].
وَاِنَّ رَبَّكَ هُوَ یَحْشُرُهُمْ ؕ اِنَّهٗ حَكِیْمٌ عَلِیْمٌ ۟۠
وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்هُوَஅவனேیَحْشُرُهُمْ ؕஅவர்களை ஒன்று திரட்டுவான்اِنَّهٗநிச்சயமாக அவன்حَكِیْمٌஞானமிக்கவன்عَلِیْمٌ۠முற்றறிந்தவன்
வ இன்ன ரBப்Bபக ஹுவ யஹ்ஷுருஹும்; இன்னஹூ ஹகீமுன் 'அலீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதி நாளில்) அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் இவர்கள் அனைவரையும் (விசாரணைக்காக மறுமையில் தன் முன்) ஒன்று கூட்டுவான். நிச்சயமாக அவன் ஞானமுடையவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
IFT
நிச்சயம் உம் அதிபதியே அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பான்; திண்ணமாக அவன் நுண்ணறிவாளனும் மிக அறிந்தவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன்தான் அவர்களை மறுமையில் ஒன்று திரட்டுவான், நிச்சயமாக அவன் தீர்க்கமான அறிவுடையவன், (யாவற்றையும்) நன்கறிகிறவன்.
Saheeh International
And indeed, your Lord will gather them; indeed, He is Wise and Knowing.
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟ۚ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகخَلَقْنَاநாம் படைத்தோம்الْاِنْسَانَமனிதனைمِنْஇருந்துصَلْصَالٍகாய்ந்த களிமண்مِّنْஇருந்துحَمَاٍகருஞ்சேறுمَّسْنُوْنٍۚஉருமாற்றப்பட்ட
வ லகத் கலக்னல் இன்ஸான மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
முஹம்மது ஜான்
ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(காய்ந்தபின் ‘கன் கன்' என்று) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நிச்சயமாக நாமே (உங்கள் மூலப் பிதாவாகிய முதல்) மனிதனை படைத்தோம்.
IFT
பேதகமடைந்த, (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை நாம் படைத்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (தட்டினால்) சப்தம் வரக்கூடிய மாற்றமடைந்த கறுப்பான களிமண்ணிலிருந்து மனிதனை (-ஆதமை) திட்டமாக நாம் படைத்தோம்.
Saheeh International
And We did certainly create man out of clay from an altered black mud.
وَالْجَآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ ۟
وَ الْجَآنَّஇன்னும் ஜின்களைخَلَقْنٰهُஅதனை நாம் படைத்தோம்مِنْஅதற்குقَبْلُமுன்னரேمِنْஇருந்துنَّارِநெருப்புالسَّمُوْمِகடும் வெப்பமுள்ள
வல்ஜான்ன கலக்னாஹு மின் கBப்லு மின் னாரிஸ் ஸமூம்
முஹம்மது ஜான்
(அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு முன்னதாக ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்.
IFT
அதற்கு முன்பு தீயின் கடும் வெப்பத்திலிருந்து ஜின்களைப் படைத்திருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஜின்னை (அதற்கு) முன்னதாகக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து அதனை நாம் படைத்தோம்.
Saheeh International
And the jinn We created before from scorching fire.
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ خَالِقٌۢ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟
وَ اِذْஇன்னும் (நினைவு கூர்வீராக)قَالَகூறியதைرَبُّكَஉமது இறைவன்لِلْمَلٰٓىِٕكَةِவானவர்களிடம்اِنِّیْநிச்சயமாக நான்خَالِقٌۢபடைக்கப் போகிறேன்بَشَرًاஒரு மனிதனைمِّنْஇருந்துصَلْصَالٍகாய்ந்த களிமண்مِّنْஇருந்துحَمَاٍகருஞ்சேறுمَّسْنُوْنٍமாற்றமடைந்த
வ இத் கால ரBப்Bபுக லில்மலா' இகதி இன்னீ காலிகும் Bபஷரம் மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
முஹம்மது ஜான்
(நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும்,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான், மனிதனை (காய்ந்தபின்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் படைக்கப்போகிறேன்'' என்று கூறிய சமயத்தில்,
IFT
பின்பு உம் அதிபதி வானவர்களை நோக்கிக் கூறியதை நினைவுகூரும்: “பேதகமடைந்த (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து ஒரு மனிதரை திண்ணமாக நான் படைக்கப் போகின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) உமதிரட்சகன் மலக்குகளிடம், “நிச்சயமாக நான் மனிதனை (தட்டினால்) சப்தம் வரக்கூடிய, மாற்றமடைந்த கறுப்புக் களிமண்ணிலிருந்து படைக்கப்போகிறேன்” என்று கூறிய சமயத்தை-(நபியே! நினைவு கூர்வீராக!)
Saheeh International
And [mention, O Muhammad], when your Lord said to the angels, "I will create a human being out of clay from an altered black mud.
فَاِذَا سَوَّیْتُهٗ وَنَفَخْتُ فِیْهِ مِنْ رُّوْحِیْ فَقَعُوْا لَهٗ سٰجِدِیْنَ ۟
فَاِذَاஎனவே எப்போதுسَوَّیْتُهٗநான் அவனைச் செப்பனிட்டுوَ نَفَخْتُமேலும் நான் ஊதிفِیْهِஅவனுள்مِنْஇருந்துرُّوْحِیْஎனது உயிர்فَقَعُوْاஅப்போது விழுங்கள்لَهٗஅவனுக்குسٰجِدِیْنَசிரம் பணிந்தவர்களாக
Fப இதா ஸவ்வய்துஹூ வ னFபக்து Fபீஹி மிர் ரூஹீ Fபக'ஊ லஹூ ஸாஜிதீன்
முஹம்மது ஜான்
அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
அப்துல் ஹமீது பாகவி
‘‘நான் மனிதனை உருவாக்கி அதில் என் (படைப்புக்கு வேண்டிய) உயிரைப் புகுத்தினால் அவருக்கு (மரியாதை செலுத்த) நீங்கள் சிரம் பணியுங்கள்'' (என்று கூறி, பிறகு, சிரம்பணிய கட்டளையிட்டான்.)
IFT
நான் அவரை முழுமையாக்கி, அவருக்குள் என்னுடைய உயிரிலிருந்து ஊதியதும் நீங்கள் அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்திட வேண்டும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், “அவரை நான் சரியாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்தும் நான் ஊதியபோது அவருக்கு சிரம்பணிந்தவர்களாக விழுங்கள்” (என்று மலக்குகளிடம் அல்லாஹ் கூறியதும்)
Saheeh International
And when I have proportioned him and breathed into him of My [created] soul, then fall down to him in prostration."
فَسَجَدَ الْمَلٰٓىِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَ ۟ۙ
فَسَجَدَஎனவே சிரம் பணிந்தார்கள்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்كُلُّهُمْஅவர்கள் அனைவரும்اَجْمَعُوْنَۙஒட்டுமொத்தமாக
Fபஸஜதல் மலா'இகது குல்லுஹும் அஜ்ம'ஊன்
முஹம்மது ஜான்
அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறே வானவர்கள் அனைவரும் (அவருக்கு மரியாதை செலுத்த) சிரம் பணிந்தார்கள்;
IFT
வானவர்கள் அனைவரும் அவ்வாறே சிரம் பணிந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உடனே மலக்குகள் - அவர்கள் ஒவ்வொருவரும் ஒருமித்து (அவருக்கு மரியாதை செலுத்த) சிரம் பணிந்தார்கள்-
Saheeh International
So the angels prostrated - all of them entirely,
اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اَبٰۤی اَنْ یَّكُوْنَ مَعَ السّٰجِدِیْنَ ۟
اِلَّاۤதவிரاِبْلِیْسَ ؕஇப்லீஸைاَبٰۤیமறுத்தான்اَنْஎன்றுیَّكُوْنَஇருக்கمَعَஉடன்السّٰجِدِیْنَசிரம் பணிபவர்கள்
இல்லா இBப்லீஸ அBபா அய் யகூன ம'அஸ் ஸாஜிதீன்
முஹம்மது ஜான்
இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி
இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து சிரம் பணியாது விலகிக் கொண்டான்.
IFT
இப்லீஸைத் தவிர! அவன் சிரம்பணிபவர்களுடன் சேர்ந்திட மறுத்து விட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
- இப்லீஸைத் தவிர சிரம் பணிந்தவர்களுடன் ஆகுவதிலிருந்து அவன் விலகிக் கொண்டான்.
Saheeh International
Except Iblees; he refused to be with those who prostrated.
قَالَ یٰۤاِبْلِیْسُ مَا لَكَ اَلَّا تَكُوْنَ مَعَ السّٰجِدِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்یٰۤاِبْلِیْسُஇப்லீஸேمَاஎன்னلَكَஉனக்குاَلَّاஇல்லாமல்تَكُوْنَநீ இருக்கمَعَஉடன்السّٰجِدِیْنَசிரம் பணிபவர்கள்
கால யா இBப்லீஸு மா லக அல்லா தகூன ம'அஸ் ஸாஜிதீன்
முஹம்மது ஜான்
“இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு உமது இறைவன் இப்லீஸை நோக்கி) ‘‘இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து நீயும் சிரம் பணியாத காரணமென்ன?'' என்று கேட்டான்.
IFT
அப்போது இறைவன் கேட்டான்: “இப்லீஸே! உனக்கு என்ன நேர்ந்து விட்டது? சிரம் பணிந்தவர்களுடன் நீ சேரவில்லையே, ஏன்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அல்லாஹ்) “இப்லீஸே! சிரம் பணிந்தோருடன் நீயும் ஆகாதிருக்க உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டான்.
Saheeh International
[Allah] said, "O Iblees, what is [the matter] with you that you are not with those who prostrate?"
قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟
قَالَஅவன் கூறினான்لَمْஇல்லைاَكُنْநான்لِّاَسْجُدَசிரம் பணிவதற்குلِبَشَرٍஒரு மனிதனுக்குخَلَقْتَهٗநீ அவனைப் படைத்தாய்مِنْஇருந்துصَلْصَالٍகாய்ந்த களிமண்مِّنْஇருந்துحَمَاٍகருப்புச் சேறுمَّسْنُوْنٍஉருமாற்றப்பட்ட
கால லம் அகுல் லி அஸ்ஜுத லிBபஷரின் கலக்தஹூ மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
முஹம்மது ஜான்
அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘(காய்ந்தபின்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம் பணிய தயாரில்லை; (ஏனென்றால், நான் அவரைவிட மேலானவன்)'' என்று கூறினான்.
IFT
அதற்கு அவன் கூறினான்: “இந்த மனிதருக்குச் சிரம்பணிவது என் வேலை அல்ல! ஏனெனில் பேதகமடைந்த (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து அவரை நீ படைத்துள்ளாய்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன், “(தட்டினால்) சப்தம் கொடுக்கக் கூடிய மாற்றமடைந்த கருப்புக் களிமண்ணால் நீ அவரை சிருஷ்டித்த (ஒரு) மனிதனுக்கு, (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம் பணிபவனாக இருப்பதற்கில்லை” என்று கூறினான்.
Saheeh International
He said, "Never would I prostrate to a human whom You created out of clay from an altered black mud."
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِیْمٌ ۟ۙ
قَالَஅவன் கூறினான்فَاخْرُجْஎனவே வெளியேறுمِنْهَاஅதிலிருந்துفَاِنَّكَநிச்சயமாக நீرَجِیْمٌۙவிரட்டப்பட்டவன்
கால Fபக்ருஜ் மின்ஹா Fப இன்னக ரஜீம்
முஹம்மது ஜான்
“அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு; நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்.”
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு இறைவன் ‘‘நீ இங்கிருந்து அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (நமது சமூகத்திலிருந்து) விரட்டப்பட்டு விட்டாய்'' என்று கூறினான்.
IFT
அதற்கு இறைவன் “அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு! ஏனெனில், திண்ணமாக நீ விரட்டப்பட வேண்டியவனாய் இருக்கின்றாய்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இங்கிருந்து நீ வெளியேறிவிடு, ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன் என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
Saheeh International
[Allah] said, "Then depart from it, for indeed, you are expelled.
وَّاِنَّ عَلَیْكَ اللَّعْنَةَ اِلٰی یَوْمِ الدِّیْنِ ۟
وَّ اِنَّமேலும் நிச்சயமாகعَلَیْكَஉன் மீதுاللَّعْنَةَசாபம்اِلٰیவரைیَوْمِநாள்الدِّیْنِதீர்ப்பு
வ இன்ன 'அலய்கல் லஃனத இலா யவ்மித் தீன்
முஹம்மது ஜான்
“மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!” என்று (இறைவனும்) கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ‘‘விசாரணை நாள் (வரும்) வரை உன் மீது நிச்சயமாக என் சாபமும் (கோபமும்) உண்டாவதாக!'' (என்றும் கூறினான்.)
IFT
இனி கூலி கொடுக் கப்படும் நாள் வரை திண்ணமாக உன்மீது சாபம் விதிக்கப்பட்டிருக்கும்!” என்று கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “நியாயத்தீர்ப்பு நாள் வரையில் உன் மீது நிச்சயமாக (என்னுடைய) சாபம் உண்டாவதாக! (என்றும் அல்லாஹ் கூறினான்).
Saheeh International
And indeed, upon you is the curse until the Day of Recompense."
قَالَ رَبِّ فَاَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்رَبِّஎன் இறைவனேفَاَنْظِرْنِیْۤஎனவே எனக்கு அவகாசம் அளிப்பாயாகاِلٰیவரைیَوْمِநாள்یُبْعَثُوْنَஅவர்கள் எழுப்பப்படுவார்கள்
கால ரBப்Bபி Fப அன்ளிர்னீ இலா யவ்மி யுBப்'அதூன்
முஹம்மது ஜான்
“என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘என் இறைவனே! (இறந்தவர்கள்) உயிர் பெற்றெழும்பும் நாள் (வரும்) வரை நீ எனக்கு அவகாசமளி'' என்று கேட்டான்.
IFT
அதற்கு அவன், “என் இறைவனே! (அப்படியானால்) மக்கள் அனைவரும் மீண்டும் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று வேண்டிக் கொண்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன், “என்னுடைய இரட்சகனே! (இறந்தோரான) அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையில் நீ எனக்கு அவகாசமளிப்பாயாக” என்று கூறினான்.
Saheeh International
He said, "My Lord, then reprieve me until the Day they are resurrected."
قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟ۙ
قَالَஅவன் கூறினான்فَاِنَّكَஎனவே நிச்சயமாக நீمِنَஉள்ளவன்الْمُنْظَرِیْنَۙஅவகாசம் அளிக்கப்பட்டவர்களில்
கால Fப இன்னக மினல் முன்ளரீன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்;”
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (இறைவன்) ‘‘நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது'' என்றான்.
IFT
அதற்கு அல்லாஹ் கூறினான்: “உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அல்லாஹ்,) நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் இருக்கிறாய்” என்று கூறினான்.
Saheeh International
[Allah] said, "So indeed, you are of those reprieved
اِلٰی یَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ ۟
اِلٰیவரைیَوْمِநாள்الْوَقْتِநேரம்الْمَعْلُوْمِஅறியப்பட்ட
இலா யவ்மில் வக்தில் மஃலூம்
முஹம்மது ஜான்
“குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்” என்று அல்லாஹ் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (இறைவன்) ‘‘நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது'' என்றான்.
IFT
“நாம் மட்டுமே அறிந்திருக்கக்கூடிய அந்த நாள் வரும்வரை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரை” (என்று அல்லாஹ் கூறினான்.)
Saheeh International
Until the Day of the time well-known."
قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاُزَیِّنَنَّ لَهُمْ فِی الْاَرْضِ وَلَاُغْوِیَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
قَالَஅவன் கூறினான்رَبِّஎன் இறைவனேبِمَاۤஎதனால்اَغْوَیْتَنِیْநீ என்னை வழிகெடுத்தாயோلَاُزَیِّنَنَّநிச்சயமாக நான் அழகாகக் காட்டுவேன்لَهُمْஅவர்களுக்குفِیஇல்الْاَرْضِபூமிوَ لَاُغْوِیَنَّهُمْமேலும் நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன்اَجْمَعِیْنَۙஅனைவரையும்
கால ரBப்Bபி Bபிமா அக்வய்தனீ ல உZஜய்யின் அன்ன லஹும் Fபில் அர்ளி வ ல உக்வியன் னஹும் அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
(அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘என் இறைவனே! நீ என்னை வழி கெடுத்ததன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்.
IFT
அதற்கு அவன் கூறினான்: “என் இறைவனே! நீ என்னை வழிபிறழச் செய்தது போன்று, திண்ணமாக நானும் உலகில் அவர்களுக்குக் கவர்ச்சிகளை ஏற்படுத்தி, அவர்கள் அனைவரையும் வழிபிறழச் செய்வேன்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன், “என்னுடைய இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டு விட்டதன் காரணமாக பூமியில் (உள்ளவற்றை) நான், நிச்சயமாக அவர்களுக்கு அலங்கரித்துக் காண்பித்து, அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நான் வழிகெடுத்து விடுவேன்” என்று கூறினான்.
Saheeh International
[Iblees] said, "My Lord, because You have put me in error, I will surely make [disobedience] attractive to them [i.e., mankind] on earth, and I will mislead them all
اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاதவிரعِبَادَكَஉமது அடியார்களைمِنْهُمُஅவர்களில்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்களை
இல்லா 'இBபாதக மின்ஹுமுல் முக்லஸீன்
முஹம்மது ஜான்
“அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்களில் கலப்பற்ற (பரிசுத்த) உள்ளத்தை உடைய உன் (நல்ல) அடியார்களைத் தவிர; (அவர்களை வழி கெடுக்க என்னால் முடியாது)'' என்று கூறினான்.
IFT
ஆனால், உன் அடியார்களில் எவர்களை வாய்மையாளர்களாய் நீ ஆக்கினாயோ அவர்களைத் தவிர!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர்களில் (உன்னால்) தேர்ந்தெடுக்கப்பட்ட உன் (அருள் பெற்ற நல்) அடியார்களைத் தவிர”
Saheeh International
Except, among them, Your chosen servants."
قَالَ هٰذَا صِرَاطٌ عَلَیَّ مُسْتَقِیْمٌ ۟
قَالَகூறினான்هٰذَاஇதுصِرَاطٌவழிعَلَیَّஎன்னிடம்مُسْتَقِیْمٌநேரான
கால ஹாத ஸிராதுன் 'அலய்ய முஸ்தகீம்
முஹம்மது ஜான்
(அதற்கு இறைவன் “அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘அதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழி.’‘
IFT
அதற்கு அல்லாஹ் கூறினான்: “இதுதான் (அந்த வாய்மையாளர்களின் வழிதான்) என் பக்கம் கொண்டு வந்து சேர்க்கும் நேரிய வழியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களின் வழியாகிய) “இதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்” என்று கூறினான்.
Saheeh International
[Allah] said, "This is a path [of return] to Me [that is] straight.
اِنَّ عِبَادِیْ لَیْسَ لَكَ عَلَیْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغٰوِیْنَ ۟
اِنَّநிச்சயமாகعِبَادِیْஎனது அடியார்கள்لَیْسَஇல்லைلَكَஉனக்குعَلَیْهِمْஅவர்கள் மீதுسُلْطٰنٌஅதிகாரம்اِلَّاதவிரمَنِஎவர்اتَّبَعَكَஉன்னைப் பின்பற்றினாரோمِنَஉள்ளالْغٰوِیْنَவழிகெட்டவர்கள்
இன்ன 'இBபாதீ லய்ஸ லக 'அலய்ஹிம் ஸுல்தானுன் இல்லா மனித்தBப'அக மினல் காவீன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(மனத்தூய்மையுடைய) என் அடியார்களிடத்தில் நிச்சயமாக உனக்கு ஒரு செல்வாக்கும் இருக்காது. வழிகேட்டில் உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர.
IFT
திண்ணமாக, என்னுடைய வாய்மையான அடியார்கள் மீது உனது அதிகாரம் செல்லுபடியாகாது. ஆனால் எவர்கள் உன்னைப் பின்பற்றி வழிகெட்டுப் போகின்றார்களோ, அவர்களிடம் மட்டும் உனது அதிகாரம் செல்லுபடியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக என்னுடைய அடியார்கள், உனக்கு அவர்கள்மீது யாதொரு அதிகாரமும் இல்லை, (திசை திருப்பப்பட்டு) வழிகெட்டவர்களிலிருந்து உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர.
Saheeh International
Indeed, My servants - no authority will you have over them, except those who follow you of the deviators.
وَاِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِیْنَ ۟۫ۙ
وَ اِنَّமேலும் நிச்சயமாகجَهَنَّمَநரகம்لَمَوْعِدُهُمْஅவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடமாகும்اَجْمَعِیْنَ۫ۙஅவர்கள் அனைவருக்கும்
வ இன்ன ஜஹன்னம லமவ்'இதுஹும் அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(உன்னைப் பின்பற்றிய) அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடம் நிச்சயமாக நரகம்தான்.
IFT
திண்ணமாக, அத்தகையவர்கள் அனைவர்க்கும் நரகம் இருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நரகமாகிறது, (உன்னைப் பின்பற்றிய) அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
Saheeh International
And indeed, Hell is the promised place for them all.
لَهَا سَبْعَةُ اَبْوَابٍ ؕ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ ۟۠
لَهَاஅதற்குسَبْعَةُஏழுاَبْوَابٍ ؕவாசல்கள்لِكُلِّஒவ்வொருبَابٍவாசலுக்கும்مِّنْهُمْஅவர்களில்جُزْءٌஒரு பிரிவுمَّقْسُوْمٌ۠பங்கிடப்பட்டுள்ளது
லஹா ஸBப்'அது அBப்வாBப்; லிகுல்லி BபாBபிம் மின்ஹும் ஜுZஜ்'உம் மக்ஸூம்
முஹம்மது ஜான்
அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.  
அப்துல் ஹமீது பாகவி
அந்நரகத்திற்கு ஏழு வாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் (செல்லக்கூடிய வகையில்) அவர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விடுவார்கள்.
IFT
(இப்லீஸைப் பின்பற்றுவோருக்கு எச்சரிக்கப்பட்டுள்ள) அந்நரகத்திற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு பிரிவினர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அதற்கு ஏழுவாசல்கள் இருக்கின்றன, ஒவ்வொரு வாசலுக்கும் அவர்களிலிருந்து (குறிப்பிட்ட) பங்கீடு செய்யப்பட்ட ஒரு பகுதி உண்டு” (என்றும் அல்லாஹ் கூறினான்.)
Saheeh International
It has seven gates; for every gate is of them [i.e., Satan's followers] a portion designated."
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ؕ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்கள்فِیْஇல்جَنّٰتٍசுவனங்கள்وَّ عُیُوْنٍؕமற்றும் நீரூற்றுகள்
இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக, இறையச்சமுடையவர்களோ சொர்க்கங்களிலும் (அதிலுள்ள) நீரருவிகளிலும் (உல்லாசமாக) இருப்பார்கள்.
IFT
ஆனால், இறையச்சமுள்ளவர்கள் சுவனங்களிலும் (அங்குள்ள) நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (மகிழ்ச்சியுடையோராக) இருப்பார்கள்.
Saheeh International
Indeed, the righteous will be within gardens and springs,
اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِیْنَ ۟
اُدْخُلُوْهَاஅதில் நுழையுங்கள்بِسَلٰمٍசாந்தியுடன்اٰمِنِیْنَஅச்சமற்றவர்களாக
உத்குலூஹா Bபிஸலாமின் ஆமினீன்
முஹம்மது ஜான்
(அவர்களை நோக்கி) “சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) நீங்கள் ஈடேற்றத்துடனும் அச்சமற்றவர்களாகவும் இதில் நுழையுங்கள்'' (என்று கூறப்படும்).
IFT
மேலும், அவர்களிடம் கூறப்படும்: “எவ்வித அச்சமுமின்றி சாந்தியுடன் அவற்றினுள் நுழையுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களிடம்,) “நீங்கள் சாந்தியுடன், அச்சமற்றவர்களாக அவற்றில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்.)
Saheeh International
[Having been told], "Enter it in peace, safe [and secure]."
وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیْنَ ۟
وَ نَزَعْنَاமேலும் நாம் அகற்றிவிடுவோம்مَاஎதைفِیْஉள்ளதோصُدُوْرِهِمْஅவர்களின் நெஞ்சங்களில்مِّنْஇருந்துغِلٍّகுரோதத்தைاِخْوَانًاசகோதரர்களாகعَلٰیமீதுسُرُرٍகட்டில்களின்مُّتَقٰبِلِیْنَஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக
வ னZஜஃனா ம Fபீ ஸுதூரிஹிம் மின் கில்லின் இக்வானன் 'அலா ஸுருரிம் முதகாBபிலீன்
முஹம்மது ஜான்
மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஒருவருக்கு ஒருவர்மீது இம்மையில்) அவர்களின் நெஞ்சங்களில் இருந்த குரோதங்களை நாம் நீக்கிவிடுவோம். (அவர்களும்) சகோதரர்களாக ஒருவர் ஒருவரை முகம் நோக்கி கட்டில்களில் (உல்லாசமாகச் சாய்ந்து) இருப்பார்கள்.
IFT
அவர்களின் உள்ளங்களில் படிந்திருக்கும் குரோதங்களை நாம் அகற்றி விடுவோம். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக கட்டில்களில் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (இம்மையில்) அவர்களின் நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம், (அவர்களும் உண்மையான) சகோதரர்களாக ஒருவரை ஒருவர் முன்னோக்கியவர்களாகக் கட்டில்களில் (மகிழ்ச்சியுடையோராக) சாய்ந்து இருப்பார்கள்.
Saheeh International
And We will remove whatever is in their breasts of resentment, [so they will be] brothers, on thrones facing each other.
لَا یَمَسُّهُمْ فِیْهَا نَصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا بِمُخْرَجِیْنَ ۟
لَاஇல்லைیَمَسُّهُمْஅவர்களைத் தீண்டும்فِیْهَاஅதில்نَصَبٌசோர்வுوَّ مَاமேலும் இல்லைهُمْஅவர்கள்مِّنْهَاஅதிலிருந்துبِمُخْرَجِیْنَவெளியேற்றப்படுபவர்கள்
லா யமஸ் ஸுஹும் Fபீஹா னஸBபு(ன்)வ் வமா ஹும் மின்ஹா Bபிமுக்ரஜீன்
முஹம்மது ஜான்
அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் அவர்களை ஒரு சிரமமும் அணுகாது. அதில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.
IFT
அங்கு அவர்களுக்கு யாதொரு சிரமமும் ஏற்படாது; அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவற்றில் அவர்களை யாதொரு சிரமமும் அணுகாது, அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களும் அல்லர்.
Saheeh International
No fatigue will touch them therein, nor from it will they [ever] be removed.
نَبِّئْ عِبَادِیْۤ اَنِّیْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟ۙ
نَبِّئْஅறிவிப்பீராகعِبَادِیْۤஎன் அடியார்களுக்குاَنِّیْۤநிச்சயமாக நான்اَنَاநானேالْغَفُوْرُமிக்க மன்னிப்பவன்الرَّحِیْمُۙநிகரற்ற அன்புடையவன்
னBப்Bபி' 'இBபாதீ அன்ன்னீ அனல் கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
(நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக: “நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் என் அடியார்களுக்கு அறிவிப்பீராக: ‘‘நிச்சயமாக நான் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவேன்.
IFT
‘திண்ணமாக நான் பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணை புரிபவனாகவும் இருக்கின்றேன்’ என்பதை என் அடிமைகளுக்கு (நபியே!) நீர் அறிவித்து விடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) “நிச்சயமாக, நானே மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்” என என் அடியார்களுக்குத் தெரிவிப்பீராக!
Saheeh International
[O Muhammad], inform My servants that it is I who am the Forgiving, the Merciful,
وَاَنَّ عَذَابِیْ هُوَ الْعَذَابُ الْاَلِیْمُ ۟
وَ اَنَّமேலும் நிச்சயமாகعَذَابِیْஎனது வேதனைهُوَஅதுவேالْعَذَابُவேதனைالْاَلِیْمُமிகத் துன்புறுத்தும்
வ அன்ன 'அதாBபீ ஹுவல் 'அதாBபுல் அலீம்
முஹம்மது ஜான்
“(ஆயினும்) நிச்சயமாக என்னுடைய வேதனையும் நோவினைமிக்கதாகவே இருக்கும்” (என்றும் சொல்லும்).
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் நிச்சயமாக என் வேதனைதான் மிக்க கொடிய வேதனை.
IFT
‘அத்துடன் என்னுடைய வேதனை மிகவும் துன்புறுத்தும் வேதனையாய் இருக்கும்’ என்பதையும் அறிவித்துவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய வேதனையோ, அதுவே நோவினை தரும் வேதனையாகும்” (என்றும் நபியே! நீர் தெரிவிப்பீராக!)
Saheeh International
And that it is My punishment which is the painful punishment.
وَنَبِّئْهُمْ عَنْ ضَیْفِ اِبْرٰهِیْمَ ۟ۘ
وَ نَبِّئْهُمْமேலும் அவர்களுக்குத் தெரிவிப்பீராகعَنْபற்றிضَیْفِவிருந்தினர்களைப்اِبْرٰهِیْمَۘஇப்ராஹீமுடைய
வ னBப்Bபி'ஹும் 'அன் ளய்Fபி இBப்ராஹீம்
முஹம்மது ஜான்
இன்னும், இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இப்றாஹீமுடைய விருந்தாளிகளின் வரலாற்றை நீர் அவர்களுக்கு அறிவிப்பீராக.
IFT
மேலும், இப்ராஹீமின் விருந்தாளிகளைப் பற்றியும் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) இப்றாஹீமுடைய விருந்தாளிகள் பற்றி நீர் அவர்களுக்கு தெரிவிப்பீராக!
Saheeh International
And inform them about the guests of Abraham,
اِذْ دَخَلُوْا عَلَیْهِ فَقَالُوْا سَلٰمًا ؕ قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ ۟
اِذْபோதுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தார்கள்عَلَیْهِஅவரிடம்فَقَالُوْاஅவர்கள் கூறினார்கள்سَلٰمًا ؕஸலாம்قَالَஅவர் கூறினார்اِنَّاநிச்சயமாக நாங்கள்مِنْكُمْஉங்களைக் கண்டுوَ جِلُوْنَஅச்சமடைகிறோம்
இத் தகலூ 'அலய்ஹி Fபகாலூ ஸலாமன் கால இன்னா மின்கும் வஜிலூன்
முஹம்மது ஜான்
அவர்கள் அவரிடம் வந்து, “உங்களுக்குச் சாந்தி (ஸலாமுன்) உண்டாவதாக!” என்று சொன்ன போது அவர், “நாம் உங்களைப்பற்றி பயப்படுகிறோம்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் இப்றாஹீமிடம் சென்று ‘ஸலாமுன்' (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) என்று கூறியதற்கு, அவர் ‘‘நிச்சயமாக நான் உங்களைப் பற்றி பயப்படுகிறேன்' என்றார்.
IFT
அவ்விருந்தாளிகள், “உம் மீது சாந்தி நிலவுவதாக!” என்று கூறி அவரிடம் வந்தபோது “உங்களைக் குறித்து எங்களுக்குப் பயமாக இருக்கிறது!” என்று அவர் கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் அவரிடம் நுழைந்தபோது “ஸலாமுன்” (சாந்தி உண்டாவதாக!) என்று கூறினார்கள். “நிச்சயமாக அவர், நாம் உங்களைப் பற்றி பயப்படக்கூடியவர்கள்” என்றார்.
Saheeh International
When they entered upon him and said, "Peace." [Abraham] said, "Indeed, we are fearful [i.e., apprehensive] of you."
قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِیْمٍ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَاவேண்டாம்تَوْجَلْஅஞ்சاِنَّاநிச்சயமாக நாம்نُبَشِّرُكَஉமக்கு நற்செய்தி கூறுகிறோம்بِغُلٰمٍஒரு சிறுவனைப் பற்றிعَلِیْمٍமிக்க அறிவுடைய
காலூ ல தவ்ஜல் இன்னா னுBபஷ்ஷிருக Bபிகுலாமின் 'அலீம்
முஹம்மது ஜான்
அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘நீர் பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு மிக்க ஞானமுடைய ஓர் மகன் ஒருவரைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள், “நீர் அஞ்ச வேண்டாம்! அறிவுக் கூர்மையுள்ள ஒரு குழந்தையைப் பற்றிய நற்செய்தியை உமக்கு நாங்கள் அறிவிக்கின்றோம்” என்று பதில் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நீர் பயப்படாதீர், நிச்சயமாக நாம் உமக்கு மிக்க அறிவார்ந்த ஒரு குமாரனைக் கொண்டு நன்மாராயங் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
[The angels] said, "Fear not. Indeed, we give you good tidings of a learned boy."
قَالَ اَبَشَّرْتُمُوْنِیْ عَلٰۤی اَنْ مَّسَّنِیَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்اَبَشَّرْتُمُوْنِیْஎனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா?عَلٰۤیநிலையிலும்اَنْஎன்றمَّسَّنِیَஎன்னைத் தீண்டிவிட்டதுالْكِبَرُமுதுமைفَبِمَஎனவே எதைக் கொண்டுتُبَشِّرُوْنَநற்செய்தி கூறுகிறீர்கள்?
கால அBபஷ்ஷர்துமூனீ 'அலா அம் மஸ்ஸனியல் கிBபரு FபBபிம துBபஷ்ஷிரூன்
முஹம்மது ஜான்
அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘இம்முதுமையிலா நீங்கள் எனக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறீர்கள்!'' என்று கூறினார்.
IFT
அதற்கு இப்ராஹீம், “இந்தத் தள்ளாத வயதிலா எனக்கு (குழந்தைப்பேறு பற்றி) நற்செய்தி அறிவிக்கின்றீர்கள்? நீங்கள் எப்படிப்பட்ட நற்செய்தியை அறிவிக்கிறீர்கள் என்பதைச் சற்று சிந்தியுங்கள்!” என்று கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “என்னை முதுமை வந்தடைந்துவிட்டபோதா நீங்கள் எனக்கு (குமாரனைக் கொண்டு) நன்மாராயங் கூறுகின்றீர்கள்? எதனைக் கொண்டு நீங்கள் எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.
Saheeh International
He said, "Have you given me good tidings although old age has come upon me? Then of what [wonder] do you inform?"
قَالُوْا بَشَّرْنٰكَ بِالْحَقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்بَشَّرْنٰكَஉமக்கு நற்செய்தி கூறினோம்بِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுفَلَاஎனவே வேண்டாம்تَكُنْநீர் ஆகிவிடمِّنَஉள்ளவர்களில்الْقٰنِطِیْنَநம்பிக்கையிழந்தவர்கள்
காலூ Bபஷ்ஷர்னாக Bபில்ஹக்கி Fபலா தகும் மினல் கானிதீன்
முஹம்மது ஜான்
அதற்கவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், (‘‘பரிகாசமாக அல்ல) மெய்யாகவே நாங்கள் உமக்கு (மகனைப் பற்றி) நற்செய்தி கூறுகிறோம். (அதைப் பற்றி) நீர் அவநம்பிக்கைக் கொள்ளாதீர்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள், “நாங்கள் சத்தியமான நற்செய்தியைத்தான் உமக்கு அறிவிக்கின்றோம்; நீர் நம்பிக்கை இழந்துவிடாதீர்!” என்று பதில் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “உண்மையைக் கொண்டே நாங்கள் உமக்கு (மகனைப் பற்றி) நன்மாராயம் கூறுகின்றோம், (அதைப்பற்றி) நிராசை கொண்டோரில் நீர் ஆகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "We have given you good tidings in truth, so do not be of the despairing."
قَالَ وَمَنْ یَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ ۟
قَالَஅவர் கூறினார்وَ مَنْமேலும் யார்یَّقْنَطُநம்பிக்கையிழப்பார்مِنْஇருந்துرَّحْمَةِஅருளில்رَبِّهٖۤதன் இறைவனின்اِلَّاதவிரالضَّآلُّوْنَவழிகெட்டவர்கள்
கால வ மய் யக்னது மிர் ரஹ்மதி ரBப்Bபிஹீ இல்லள் ளாலூன்
முஹம்மது ஜான்
“வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்,
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர், ‘‘வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவனுடைய அருளைப் பற்றி எவன்தான் அவநம்பிக்கை கொள்ளக்கூடும்'' என்றார்.
IFT
“வழிபிறழ்ந்தவர்கள் தாம் தம் இறைவனின் கருணை குறித்து நம்பிக்கையிழப்பார்கள்” என்று இப்ராஹீம் கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தன் இரட்சகனின் அருளைப்பற்றி நிராசை கொள்வார்?” என்றார்.
Saheeh International
He said, "And who despairs of the mercy of his Lord except for those astray?"
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்فَمَاஅப்படியானால் என்னخَطْبُكُمْஉங்கள் காரியம்اَیُّهَاالْمُرْسَلُوْنَதூதர்களே
கால Fபமா கத்Bபுகும் அய்யுஹல் முர்ஸலூன்
முஹம்மது ஜான்
“(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?” என்று (இப்ராஹீம்) கேட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் வானவர்களை நோக்கி, ‘‘இறைவனால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் விஷயமென்ன?'' என்று கேட்டார்.
IFT
பிறகு, “இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டிருப்பவர்களே! உங்கள் வருகையின் முக்கிய நோக்கம் என்ன?” என்று அவர் வினவினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர் மலக்குகளிடம் “அல்லாஹ்வினால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் செய்தி என்ன? என்று கேட்டார்.
Saheeh International
[Abraham] said, "Then what is your business [here], O messengers?"
قَالُوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمٍ مُّجْرِمِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اُرْسِلْنَاۤஅனுப்பப்பட்டுள்ளோம்اِلٰیநோக்கிقَوْمٍஒரு கூட்டத்தாரைمُّجْرِمِیْنَۙகுற்றவாளிகளான
காலூ இன்னா உர்ஸில்னா இலா கவ்மிம் முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
அதற்கவர்கள், “குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘(மிகப்பெரிய) குற்றம் செய்து கொண்டிருக்கும் மக்களிடம் (அவர்களை அழித்துவிட) மெய்யாகவே நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “குற்றம் புரிந்த சமுதாயத்தினரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தறக)வர்கள் “பாவிகளான ஒரு கூட்டத்தார்பால் (அவர்களை அழித்துவிட) நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Indeed, we have been sent to a people of criminals,
اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
اِلَّاۤதவிரاٰلَகுடும்பத்தாரைلُوْطٍ ؕலூத்தின்اِنَّاநிச்சயமாக நாம்لَمُنَجُّوْهُمْஅவர்களைக் காப்பாற்றுவோம்اَجْمَعِیْنَۙஅனைவரையும்
இல்லா ஆல லூத்; இன்னா லமுனஜ்ஜூஹும் அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
“லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘எனினும், லூத்துடைய சந்ததிகளைத் தவிர (மற்ற அனைவரையும் அழித்து விடுவோம்). நிச்சயமாக நாங்கள் அவர் (சந்ததி)கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்வோம்
IFT
ஆனால் லூத்துடைய குடும்பத்தார்கள் விதிவிலக்கானவர்கள். திண்ணமாக, அவர்கள் அனைவரையும் நாம் காப்பாற்றுவோம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர- நிச்சயமாக நாங்கள் அவர்கள் அனைவரையும் காப்பாற்றுகிறவர்கள்.
Saheeh International
Except the family of Lot; indeed, we will save them all
اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِیْنَ ۟۠
اِلَّاதவிரامْرَاَتَهٗஅவரது மனைவியைقَدَّرْنَاۤ ۙநாம் நிர்ணயித்துவிட்டோம்اِنَّهَاநிச்சயமாக அவள்لَمِنَநிச்சயமாகالْغٰبِرِیْنَ۠பின்தங்கியவர்களில்
இல்லம் ர அதஹூ கத்தர்னா இன்னஹா லமினல் காBபிரீன்
முஹம்மது ஜான்
ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்” என்று (வானவர்கள்) கூறினார்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவருடைய மனைவியைத் தவிர, நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கி விடுவாளென்று நாம் முடிவு செய்துவிட்டோம்'' (என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்.)
IFT
ஆனால், அவருடைய மனைவியைத் தவிர! (அவளைக் குறித்து இறைவன் கூறுகின்றான்: “வேதனையை அனுபவிக்க) தங்கியிருப்பவர்களுள் அவளும் ஒருத்தியாவாள் என்று நாம் விதித்துவிட்டோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
–“அவருடைய மனைவியைத் தவிர, நிச்சயமாக அவள் (வேதனையடைவதில்) தங்கியவர்களில் உள்ளவளென்று நாம் நிர்ணயித்துவிட்டோம்” என்று அல்லாஹ் கூறியதாகக் கூறினார்கள்.)
Saheeh International
Except his wife." We [i.e., Allah] decreed that she is of those who remain behind.
فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ لْمُرْسَلُوْنَ ۟ۙ
فَلَمَّاஆகவே எப்போதுجَآءَவந்தார்களோاٰلَகுடும்பத்தாரிடம்لُوْطِலூத்துடையلْمُرْسَلُوْنَۙதூதர்கள்
Fபலம்ம ஜா'அ ஆல லூதினில் முர்ஸலூன்
முஹம்மது ஜான்
(இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.
அப்துல் ஹமீது பாகவி
(இறைவனால்) அனுப்பப்பட்ட (அவ்)வானவர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபொழுது,
IFT
பிறகு அந்தத் தூதர்கள் லூத்திடம் வந்தபோது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வால்) அனுப்ப்பபட்ட (மலக்குகளான அத்தூது)வர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபொழுது-
Saheeh International
And when the messengers came to the family of Lot,
قَالَ اِنَّكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟
قَالَகூறினார்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்قَوْمٌஒரு கூட்டத்தினர்مُّنْكَرُوْنَஅறிமுகமில்லாதவர்கள்
கால இன்னகும் கவ்மும் முன்கரூன்
முஹம்மது ஜான்
(அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (லூத்) சொன்னார்,
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் (நான்) அறியாத மக்களாய் இருக்கிறீர்களே!'' என்று அவர் கூறினார்.
IFT
“நீங்கள் அறிமுகமற்றவர்களாய் இருக்கிறீர்களே” என்று லூத் கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் (அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் (எனக்கு) அறிமுகமில்லாக் கூட்டத்தவர்” என்று கூறினார்.
Saheeh International
He said, "Indeed, you are people unknown."
قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِیْهِ یَمْتَرُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்بَلْமாறாகجِئْنٰكَஉம்மிடம் நாங்கள் வந்திருக்கிறோம்بِمَاஎதனைக் கொண்டுكَانُوْاஅவர்கள்فِیْهِஅதில்یَمْتَرُوْنَசந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ
காலூ Bபல் ஜி'னாக Bபிமா கானூ Fபீஹி யம்தரூன்
முஹம்மது ஜான்
(அதற்கு அவர்கள்,) “அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘(உங்கள் மக்களாகிய) இவர்கள் எதைச் சந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ அதை நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்.
IFT
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “இல்லை! எதனைக் குறித்து இவர்கள் சந்தேகம் கொண்டிருந்தார்களோ அதனையே நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “அல்ல! அவர்கள் எதை சந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "But we have come to you with that about which they were disputing,
وَاَتَیْنٰكَ بِالْحَقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
وَ اَتَیْنٰكَமேலும் நாம் உம்மிடம் வந்துள்ளோம்بِالْحَقِّசத்தியத்துடன்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَصٰدِقُوْنَஉண்மையாளர்களாகவே இருக்கின்றோம்
வ அதய்னாக Bபில்ஹக்கி வ இன்னா லஸாதிகூன்
முஹம்மது ஜான்
(உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யான விஷயத்தையே நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். நிச்சயமாக நாம் (அவர்களை அழித்து விடுவோம், என்று உங்களுக்கு) உண்மையே கூறுகிறோம்.
IFT
நாங்கள் சத்தியத்துடன் உம்மிடம் வந்திருக்கின்றோம். நாங்கள் உண்மையைத்தான் சொல்கிறோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(நடந்தேறக்கூடியதான) உண்மையையே நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம், நிச்சயமாக நாம் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
Saheeh International
And we have come to you with truth, and indeed, we are truthful.
فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّیْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا یَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَیْثُ تُؤْمَرُوْنَ ۟
فَاَسْرِஎனவே புறப்படுவீராகبِاَهْلِكَஉமது குடும்பத்தாருடன்بِقِطْعٍஒரு பகுதியில்مِّنَஇருந்துالَّیْلِஇரவின்وَ اتَّبِعْமேலும் பின்தொடர்வீராகاَدْبَارَهُمْஅவர்களின் பின்னால்وَ لَاமேலும் வேண்டாம்یَلْتَفِتْதிரும்பிப் பார்க்கمِنْكُمْஉங்களில்اَحَدٌஎவரும்وَّ امْضُوْاமேலும் செல்லுங்கள்حَیْثُஎங்குتُؤْمَرُوْنَநீங்கள் கட்டளையிடப்படுகிறீர்களோ
Fப அஸ்ரி Bபி அஹ்லிக Bபிகித்'இம் மினல் லய்லி வத்தBபிஃ அத்Bபாரஹும் வலா யல்தFபித் மின்கும் அஹது(ன்)வ் வம்ளூ ஹய்து து'மரூன்
முஹம்மது ஜான்
ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, இன்றிரவில் சிறிது நேரம் இருக்கும்பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு, (அவர்கள் முன்னும்) நீங்கள் பின்னுமாகச் செல்லுங்கள். உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்காது உங்களுக்கு ஏவப்பட்ட இடத்திற்குச் சென்று விடுங்கள்'' என்றார்கள்.
IFT
எனவே, நீர் இரவு சற்று இருக்கும்போதே உம்முடைய குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு வெளியேறிவிடும்; மேலும், நீர் அவர்களைப் பின்தொடர்ந்தே செல்லும்! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; எங்கு செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்படுகின்றதோ அங்கு நேராகச் செல்லுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, இரவின் ஒரு பகுதியில் நீர் உம் குடும்பத்தினருடன் சென்று விடுவீராக! அன்றியும், அவர்களுக்குப் பின்னால் நீர் தொடர்ந்து செல்வீராக! உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்கவும் வேண்டாம், நீங்கள் ஏவப்பட்ட இடத்திற்குச் சென்றும் விடுங்கள்” (என்றார்கள்.)
Saheeh International
So set out with your family during a portion of the night and follow behind them and let not anyone among you look back and continue on to where you are commanded."
وَقَضَیْنَاۤ اِلَیْهِ ذٰلِكَ الْاَمْرَ اَنَّ دَابِرَ هٰۤؤُلَآءِ مَقْطُوْعٌ مُّصْبِحِیْنَ ۟
وَ قَضَیْنَاۤமேலும் நாம் அறிவித்தோம்اِلَیْهِஅவருக்குذٰلِكَஅந்தالْاَمْرَகாரியத்தைاَنَّநிச்சயமாகدَابِرَவேர்هٰۤؤُلَآءِஇவர்களுடையمَقْطُوْعٌஅறுக்கப்பட்டுவிடும்مُّصْبِحِیْنَஅதிகாலையில்
வ களய்னா இலய்ஹி தாலிகல் அம்ர அன்ன தாBபிர ஹா'உலா'இ மக்தூ'உம் முஸ்Bபிஹீன்
முஹம்மது ஜான்
மேலும், “இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்”.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், நிச்சயமாக இவர்கள் அனைவரும் விடிவதற்குள்ளாகவே வேரறுக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நாம் (அவ்வானவர்கள் மூலமாக) அவருக்கு அறிவித்தோம்.
IFT
மேலும், விடிவதற்குள் இவர்கள் அனைவரும் வேரோடு அழிக்கப்பட்டு விடுவார்கள் என்ற நமது இந்த முடிவை நாம் திட்டவட்டமாக அவருக்கு அறிவித்து விட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், நிச்சயமாக இவர்கள் அனைவரும் காலைப்பொழுதை அடைந்தவர்களாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நாம் முடிவெடுத்து அவருக்கு அறிவித்தோம்.
Saheeh International
And We conveyed to him [the decree] of that matter: that those [sinners] would be eliminated by early morning.
وَجَآءَ اَهْلُ الْمَدِیْنَةِ یَسْتَبْشِرُوْنَ ۟
وَ جَآءَமேலும் வந்தார்கள்اَهْلُமக்கள்الْمَدِیْنَةِநகரத்தின்یَسْتَبْشِرُوْنَமகிழ்ச்சியடைந்தவர்களாக
வ ஜா'அ அஹ்லுல் மதீனதி யஸ்தBப்ஷிரூன்
முஹம்மது ஜான்
(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இதற்கிடையில் லூத் நபியின் வீட்டிற்கு வாலிபர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்து) அவ்வூரார் மிக்க சந்தோஷத்துடன் (லூத் நபியின் வீட்டிற்கு) வந்து (கூடி) விட்டனர்.
IFT
(இதற்குள்ளாக) ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தவர்களாக லூத்தின் இல்லம் வந்(து சூழ்ந்)தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (வாலிபர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்த) அந்நகரவாசிகள், மிக்க மகிழ்ச்சியடைந்தவர்களாக வந்து விட்டனர்.
Saheeh International
And the people of the city came rejoicing.
قَالَ اِنَّ هٰۤؤُلَآءِ ضَیْفِیْ فَلَا تَفْضَحُوْنِ ۟ۙ
قَالَகூறினார்اِنَّநிச்சயமாகهٰۤؤُلَآءِஇவர்கள்ضَیْفِیْஎன் விருந்தினர்கள்فَلَاஆகவேتَفْضَحُوْنِۙஎன்னை அவமானப்படுத்தாதீர்கள்
கால இன்ன ஹா'உலா'இ ளய்Fபீ Fபலா தFப்ளஹூன்
முஹம்மது ஜான்
(லூத் வந்தவர்களை நோக்கி:) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;”
அப்துல் ஹமீது பாகவி
(லூத் நபி அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இவர்கள் என் விருந்தாளிகள். ஆகவே, (அவர்கள் முன்பாக) நீங்கள் என்னை இழிவு படுத்தாதீர்கள்.
IFT
லூத் கூறினார்; “(சகோதரர்களே!) இவர்கள் என்னுடைய விருந்தாளிகள்; என்னை அவமானப்படுத்திவிடாதீர்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(லூத் நபி அவர்களிடம்) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தாளிகள், ஆகவே, (அவர்கள் விஷயத்தில்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்” என்று கூறினார்.
Saheeh International
[Lot] said, "Indeed, these are my guests, so do not shame me.
وَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ ۟
وَ اتَّقُواமேலும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ لَاமேலும் வேண்டாம்تُخْزُوْنِஎன்னை இழிவுபடுத்த
வத்தகுல் லாஹ வலா துக்Zஜூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்” என்றும் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; என்னை அவமானப்படுத்தாதீர்கள்'' என்று கூறினார்.
IFT
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அன்றியும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், என்னை இழிவுபடுத்தியும் விடாதீர்கள்” (என்று கூறினார்.)
Saheeh International
And fear Allah and do not disgrace me."
قَالُوْۤا اَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعٰلَمِیْنَ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَوَ لَمْநாங்கள் ... இல்லையா?نَنْهَكَஉம்மைத் தடுக்கعَنِவிட்டும்الْعٰلَمِیْنَஉலகத்தாரை
காலூ அவலம் னன்ஹக 'அனில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அதற்கவர்கள், “உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘உலகில் யாராயிருந்தாலும் (சிபாரிசுக்கு) நீங்கள் வரக்கூடாதென்று நாம் உங்களைத் தடுத்திருக்கவில்லையா?'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள், “ஊர் உலகத்துக்கெல்லாம் நீர் வக்காலத்து வாங்க வேண்டாமென்று நாம் பலமுறை உம்மைத் தடுக்கவில்லையா?” என்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்கவர்கள், “அகிலத்தார் பற்றியெல்லாம் (பேச வேண்டாம் என) நாம் உம்மைத் தடுக்கவில்லையா?” எனறு கூறினார்கள்.
Saheeh International
They said, "Have we not forbidden you from [protecting] people?"
قَالَ هٰۤؤُلَآءِ بَنٰتِیْۤ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟ؕ
قَالَஅவர் கூறினார்هٰۤؤُلَآءِஇவர்கள்بَنٰتِیْۤஎன் புதல்விகள்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்فٰعِلِیْنَؕசெய்பவர்களாக
கால ஹா'உலா'இ Bபனாதீ இன் குன்தும் Fபா'இலீன்
முஹம்மது ஜான்
அதற்கவர், “இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘இதோ! என் பெண் மக்கள் இருக்கின்றனர். நீங்கள் (ஏதும்) செய்தே தீரவேண்டுமென்று கருதினால் (இவர்களைத் திருமணம்) செய்து கொள்ளலாம்'' என்று கூறினார்.
IFT
அதற்கு லூத், “நீங்கள் எதையும் செய்தே தீர வேண்டுமென்றால் இதோ என்னுடைய பெண் மக்கள் இருக்கின்றனர்!” என்று கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “இவர்கள் என்னுடைய பெண்மக்கள், நீங்கள் (ஏதும்) செய்பவர்களாக இருந்தால்) இவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” (என்று கூறினார்)
Saheeh International
[Lot] said, "These are my daughters - if you would be doers [of lawful marriage]."
لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِیْ سَكْرَتِهِمْ یَعْمَهُوْنَ ۟
لَعَمْرُكَஉம் வாழ்நாளின் மீது சத்தியமாகاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَفِیْஉறுதியாகسَكْرَتِهِمْதங்கள் போதையில்یَعْمَهُوْنَதடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்
ல'அம்ருக இன்னஹும் லFபீ ஸக்ரதிஹிம் யஃமஹூன்
முஹம்மது ஜான்
(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உம் மீது சத்தியமாக! அவர்கள் புத்தி மயங்கி (வழிகேட்டில்) தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (ஆதலால், அதற்கு செவி சாய்க்கவில்லை.)
IFT
(நபியே!) உம்முடைய உயிர் மீது ஆணையாக! சந்தேகமின்றி அவர்கள் ஒருவிதமான மயக்கத்தில் சிக்கி, அதில் தங்களை மறந்து தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உம்முடைய உயிரின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்கள் தங்களுடைய மதிமயக்கத்திலேயே தட்டழிந்து கொண்டிருக்கிறார்கள்.
Saheeh International
By your life, [O Muhammad], indeed they were, in their intoxication, wandering blindly.
فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُشْرِقِیْنَ ۟ۙ
فَاَخَذَتْهُمُஆகவே அவர்களைப் பிடித்துக்கொண்டதுالصَّیْحَةُஅந்தப் பேரொலிمُشْرِقِیْنَۙசூரியன் உதிக்கும் வேளையில்
Fப அகதத் ஹுமுஸ் ஸய்ஹது முஷ்ரிகீன்
முஹம்மது ஜான்
ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, சூரியன் உதித்ததற்கு பின்னுள்ள நேரத்தை அடைந்தபோது அவர்களை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது.
IFT
இறுதியில் விடியும் வேளையில் பயங்கரமான பேரோசை ஒன்று அவர்களைத் தாக்கியது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே,பொழுது உதயத்திற்குப்பிறகுள்ள நேரத்தை அவர்கள் அடைய பேரிடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
Saheeh International
So the shriek seized them at sunrise.
فَجَعَلْنَا عَالِیَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَیْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّیْلٍ ۟ؕ
فَجَعَلْنَاஎனவே நாம் ஆக்கினோம்عَالِیَهَاஅதன் மேல் பகுதியைسَافِلَهَاஅதன் கீழ்ப்பகுதியாகوَ اَمْطَرْنَاமேலும் நாம் மழையாகப் பொழியச் செய்தோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுحِجَارَةًகற்களைمِّنْஆனسِجِّیْلٍؕசுடப்பட்ட களிமண்ணால்
Fபஜ'அல்னா 'ஆலியஹா ஸாFபிலஹா வ அம்தர்னா 'அலய்ஹிம் ஹிஜாரதம் மின் ஸிஜ்ஜீல்
முஹம்மது ஜான்
பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அச்சமயம் அவர்கள் மீது செங்கற்களை பொழியச் செய்து அவர்களுடைய ஊரை தலைக் கீழாகப் புரட்டிவிட்டோம்.
IFT
மேலும், நாம் அவ்வூரைத் தலைகீழாகப் புரட்டினோம்; அவர்கள் மீது சுடப்பட்ட கற்களைப் பொழியச் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(வ்வூரான)தன் மேற்பகுதியை அதன் கீழ்ப்பகுதியாக (-மேல் கீழாக) ஆக்கிவிட்டோம், இன்னும் (களிமண்ணாலான) சுடப்பட்ட கற்களை அவர்கள்மீது நாம் பொழியச் செய்தோம்.
Saheeh International
And We made the highest part [of the city] its lowest and rained upon them stones of hard clay.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّلْمُتَوَسِّمِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیٰتٍஅத்தாட்சிகள்لِّلْمُتَوَسِّمِیْنَகூர்ந்து கவனிப்பவர்களுக்கு
இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லில்முதவஸ்ஸிமீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
உண்மையைக் கண்டறிபவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
திண்ணமாக, இந்நிகழ்ச்சிகளில் நுணுக்கமாய் சிந்திப்பவர்களுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சிந்திப்போருக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
Indeed in that are signs for those who discern.
وَاِنَّهَا لَبِسَبِیْلٍ مُّقِیْمٍ ۟
وَ اِنَّهَاமேலும் நிச்சயமாக அதுلَبِسَبِیْلٍஒரு பாதையில்مُّقِیْمٍநிலைத்திருக்கிறது
வ இன்னஹா லBபி ஸBபீலிம் முகீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் யாத்திரைக்கு) வரப் போகக்கூடிய வழியில்தான் (இன்னும்) இருக்கிறது.
IFT
மேலும், இந்த (நிகழ்ச்சி நடைபெற்ற) இடம் முதன்மைச் சாலையிலேயே அமைந்துள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அ(வ்வூரான)து, (நீங்கள் பிரயாணத்தில் சென்று திரும்பும்) நேரான பாதையில்தான் இருக்கிறது.
Saheeh International
And indeed, they [i.e., those cities] are [situated] on an established road.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ
اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیَةًஓர் அத்தாட்சிلِّلْمُؤْمِنِیْنَؕநம்பிக்கையாளர்களுக்கு
இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லில்மு'மினீன்
முஹம்மது ஜான்
திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இதில் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது.
IFT
நிச்சயமாக நம்பிக்கையாளர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இதில் விசுவாசங்கொண்டோர்க்கு ஒரு அத்தாட்சி இருக்கிறது.
Saheeh International
Indeed in that is a sign for the believers.
وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَیْكَةِ لَظٰلِمِیْنَ ۟ۙ
وَ اِنْநிச்சயமாகكَانَஇருந்தார்கள்اَصْحٰبُவாசிகள்الْاَیْكَةِஅய்க்காلَظٰلِمِیْنَۙஅநியாயக்காரர்களாக
வ இன் கான அஸ்ஹாBபுல் அய்கதி லளாலிமீன்
முஹம்மது ஜான்
இன்னும், அடர்ந்த சோலைகளில் வசித்திருந்த (ஷுஐபுடைய) சமூகத்தாரும் அக்கிரமக்காரர்களாக இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களைப் போலவே ஷுஐபுடைய மக்களாகிய) தோப்புடையவர்களும் நிச்சயமாக அநியாயக்காரர்களாகவே இருந்தனர்.
IFT
திண்ணமாக, ‘அய்கா’ வாசிகள் அக்கிரமக்காரர்களாய் இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஷுஐபுடைய சமூகத்தாராகிய) அடர்ந்த தோப்புடையோரும் நிச்சயமாக அநியாயக்காரர்களாகவே இருந்தனர்.
Saheeh International
And the companions of the thicket [i.e., the people of Madyan] were [also] wrongdoers,
فَانْتَقَمْنَا مِنْهُمْ ۘ وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِیْنٍ ۟ؕ۠
فَانْتَقَمْنَاஎனவே நாம் பழிவாங்கினோம்مِنْهُمْ ۘஅவர்களிடமிருந்துوَ اِنَّهُمَاமேலும் நிச்சயமாக அவ்விரு (ஊர்களும்)لَبِاِمَامٍஒரு பெருவழியில்مُّبِیْنٍؕ۠தெளிவான
Fபன்தகம்னா மின்ஹும் வ இன்னஹுமா லBபி இமாமிம் முBபீன்
முஹம்மது ஜான்
எனவே அவர்களிடமும் நாம் பழிவாங்கினோம்; (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான (போக்குவரத்து) வழியில் தான் இருக்கின்றன.  
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்களையும் நாம் பழி வாங்கினோம். (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் தெளிவான வழியில்தான் இருக்கின்றன.
IFT
எனவே, நாம் அவர்களையும் பழி வாங்கினோம் (என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்)! இவ்விரு சமூகத்தாரின் (பாழடைந்துபோன) பகுதிகள் அனைவரும் அறியக்கூடிய பாதையில் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்களை நாம் தண்டித்தோம், நிச்சயமாக (அழிக்கப்பட்ட) இவ்விரண்டு (ஊர்களு)ம் பகிரங்கமான வழியில்தான் இருக்கின்றன.
Saheeh International
So We took retribution from them, and indeed, both [cities] are on a clear highway.
وَلَقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِیْنَ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகவேكَذَّبَபொய்ப்பித்தனர்اَصْحٰبُவாசிகள்الْحِجْرِஹிஜ்ர்الْمُرْسَلِیْنَۙதூதர்களை
வ லகத் கத்தBப அஸ்ஹாBபுல் ஹிஜ்ரில் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறே) ‘ஹிஜ்ர்' என்னும் இடத்திலிருந்த (ஸமூது என்னும்) மக்களும் நம் தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
IFT
“ஹிஜ்ர் வாசிகளும் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மதீனாவிற்கும், தபூக்கிற்கும் இடைப்பகுதியிலுள்ள “ஹிஜ்ர்” என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஸமூது கூட்டத்தினரான) ஹிஜ்ருவாசிகளும் (நம்) தூதர்களை திட்டமாகப் பொய்யாக்கினர்.
Saheeh International
And certainly did the companions of al-hijr [i.e., the Thamūd] deny the messengers.
وَاٰتَیْنٰهُمْ اٰیٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟ۙ
وَ اٰتَیْنٰهُمْமேலும் நாம் அவர்களுக்கு வழங்கினோம்اٰیٰتِنَاநம்முடைய அத்தாட்சிகளைفَكَانُوْاஆனால் அவர்கள் இருந்தார்கள்عَنْهَاஅவற்றைمُعْرِضِیْنَۙபுறக்கணிப்பவர்களாக
வ ஆதய்னாஹும் ஆயாதினா Fபகானூ 'அன்ஹா முஃரிளீன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவர்களுக்கு நமது (பல) அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தும், அவற்றை அவர்கள் புறக்கணித்துக் கொண்டே வந்தார்கள்.
IFT
நாம் நம்முடைய வசனங்களை அவர்களுக்கு அருளி (நம்முடைய சான்றுகளைக் காட்டி)னோம். ஆனால், அவர்கள் அவை அனைத்தையும் புறக்கணித்துக் கொண்டேயிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் அவர்களுக்கு நம்முடைய பல அத்தாட்சிகளையும் கொடுத்தோம், அப்பொழுது அவற்றைவிட்டும் அவர்கள் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.
Saheeh International
And We gave them Our signs, but from them they were turning away.
وَكَانُوْا یَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُیُوْتًا اٰمِنِیْنَ ۟
وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்یَنْحِتُوْنَகுடைந்து கொண்டிருந்தார்கள்مِنَஇருந்துالْجِبَالِமலைகளில்بُیُوْتًاவீடுகளைاٰمِنِیْنَஅச்சமற்றவர்களாக
வ கானூ யன்ஹிதூன மினல் ஜிBபாலி Bபுயூதன் ஆமினீன்
முஹம்மது ஜான்
அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அச்சமற்று வாழலாம் எனக் கருதி அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்தார்கள்.
IFT
மலைகளைக் குடைந்து, வீடுகள் அமைத்து அவற்றில் (எவ்வித அச்சமுமின்றி) நிம்மதியாக இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் அச்சமற்றவர்களாக மலைகளிலிருந்து வீடுகளைக் குடை(ந்து உருவாக்கு)பவர்களாகவும் இருந்தனர்.
Saheeh International
And they used to carve from the mountains, houses, feeling secure.
فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُصْبِحِیْنَ ۟ۙ
فَاَخَذَتْهُمُஅவர்களைப் பிடித்துக்கொண்டதுالصَّیْحَةُபேரொலிمُصْبِحِیْنَۙஅதிகாலையில்
Fப அகதத் ஹுமுஸ் ஸய்ஹது முஸ்Bபிஹீன்
முஹம்மது ஜான்
ஆனால், அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது,
அப்துல் ஹமீது பாகவி
அவர்களையும் விடியற்காலையில் (பெரும்) சப்தம் பிடித்துக்கொண்டது.
IFT
இறுதியில் கடுமையான பேரோசையொன்று அதிகாலையில் அவர்களைத் தாக்கியது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் அதிகாலைப்பொழுதை அடைந்தவர்களாக இருக்க பேரிடி முழக்கம் அவர்களைப் பிடித்துக்கொண்டது.
Saheeh International
But the shriek seized them at early morning,
فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟ؕ
فَمَاۤஆகவே இல்லைاَغْنٰیபயனளித்ததுعَنْهُمْஅவர்களுக்குمَّاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَكْسِبُوْنَؕசம்பாதித்துக் கொண்டிருந்தார்களோ
Fபமா அக்னா 'அன்ஹும் மா கானூ யக்ஸிBபூன்
முஹம்மது ஜான்
அப்போது அவர்கள் (தம் பாதுகாப்புக்கென) அமைத்துக் கொண்டிருந்தவை எதுவும் அவர்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (தங்களை பாதுகாத்துக் கொள்ள) செய்திருந்தவற்றில் ஒன்றுமே அவர்களுக்குப் பலனளிக்க வில்லை.
IFT
அப்போது அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (தங்களைப் பாதுகாத்துக் கொள்ளச்) செய்திருந்தவைகளில் ஏதும் அவர்களுக்கு அப்போது பலனளிக்கவில்லை.
Saheeh International
So nothing availed them [from] what they used to earn.
وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ ؕ وَاِنَّ السَّاعَةَ لَاٰتِیَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِیْلَ ۟
وَ مَاமேலும் இல்லைخَلَقْنَاநாம் படைத்தோம்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَபூமியையும்وَ مَاஇன்னும் எவற்றைبَیْنَهُمَاۤஅவ்விரண்டிற்கும் இடையில்اِلَّاதவிரبِالْحَقِّ ؕசத்தியத்தைக் கொண்டேوَ اِنَّமேலும் நிச்சயமாகالسَّاعَةَஇறுதி வேளைلَاٰتِیَةٌநிச்சயமாக வரக்கூடியதேفَاصْفَحِஎனவே மன்னிப்பீராகالصَّفْحَமன்னிப்பைالْجَمِیْلَஅழகிய
வமா கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா இல்லா Bபில்ஹக்க்; வ இன்னஸ் ஸா'அத ல ஆதியதுன் Fபஸ்Fபஹிஸ் ஸFப்ஹல் ஜமீல்
முஹம்மது ஜான்
நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வருவதாகவே உள்ளது; ஆதலால் (இவர்களின் தவறுகளை) முற்றாகப் புறக்கணித்துவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும் பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் தக்க காரணமின்றி நாம் படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வரக்கூடியதே! (அதுவரை இத்தீயவர்களின் விஷமத்தை) நீர் கண்ணியமான முறையில் புறக்கணித்து வருவீராக.
IFT
நாம் வானங்களையும், பூமியையும் இன்னும் அவற்றில் இருக்கின்ற அனைத்தையும் சத்தியத்தின் அடிப்படையிலேயே அன்றி படைக்கவில்லை. திண்ணமாக, இறுதித் தீர்ப்பு நாள் வரத்தான் போகிறது! எனவே (நபியே!) நீர் (அவர்களுடைய முறையற்ற செயல்களை) பொருட்படுத்தாமல் கண்ணியமான முறையில் விட்டுவிடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களையும், பூமியையும் இவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் உண்மையைக் கொண்டேயல்லாது நாம் படைக்கவில்லை, (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய காலமான) மறுமை நாள் நிச்சயமாக வரச்கூடியதே! (அது வரையில் இத் தீயவர்களின் துன்புறுத்தலை) நீர் முற்றாகப் புறக்கணித்து அழகாக மன்னித்துவிடுவீராக!
Saheeh International
And We have not created the heavens and earth and that between them except in truth. And indeed, the Hour is coming; so forgive with gracious forgiveness.
اِنَّ رَبَّكَ هُوَ الْخَلّٰقُ الْعَلِیْمُ ۟
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்هُوَஅவனேالْخَلّٰقُபடைப்பவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
இன்ன ரBப்Bபக ஹுவல் கல்லாகுல் 'அலீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உமது இறைவனே (அனைத்தையும்) படைத்தவன், இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவன் ஆவான்.
IFT
திண்ணமாக, உம் அதிபதி அனைத்தையும் படைத்தவனும் நன்கறிந்தவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உமதிரட்சகன் - அவனே (அனைத்தையும்) படைத்தோன், (இவர்களைப்பற்றி) நன்கறிந்தோன்.
Saheeh International
Indeed, your Lord - He is the Knowing Creator.
وَلَقَدْ اٰتَیْنٰكَ سَبْعًا مِّنَ الْمَثَانِیْ وَالْقُرْاٰنَ الْعَظِیْمَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنٰكَஉமக்கு நாம் வழங்கினோம்سَبْعًاஏழினைمِّنَஇருந்துالْمَثَانِیْதிரும்பத் திரும்ப ஓதப்படுபவற்றில்وَ الْقُرْاٰنَமேலும் குர்ஆனைالْعَظِیْمَமகத்தான
வ லகத் ஆதய்னாக ஸBப்'அம் மினல் மதானீ வல் குர்ஆனல் 'அளீம்
முஹம்மது ஜான்
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களை (உடைய ‘அல்ஹம்து' என்னும் அத்தியாயத்தை)யும், இந்த மகத்தான (முழு) குர்ஆனையும் அளித்திருக்கிறோம்.
IFT
திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்துவமிக்க குர்ஆனையும் திண்ணமாக நாம் உமக்கு வழங்கியுள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய ஏழு வசனங்களை(யுடைய அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை)யும் இந்த மகத்தான குர் ஆனையும் தந்திருக்கிறோம்.
Saheeh International
And We have certainly given you, [O Muhammad], seven of the often repeated [verses] and the great Qur’an.
لَا تَمُدَّنَّ عَیْنَیْكَ اِلٰی مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِیْنَ ۟
لَاவேண்டாம்تَمُدَّنَّநீர் செலுத்தعَیْنَیْكَஉமது இரு கண்களைاِلٰیநோக்கிمَاஎதைمَتَّعْنَاநாம் சுகமனுபவிக்கச் செய்தோமோبِهٖۤஅதைக் கொண்டுاَزْوَاجًاபல பிரிவினருக்குمِّنْهُمْஅவர்களில்وَ لَاமேலும் வேண்டாம்تَحْزَنْநீர் கவலைப்படعَلَیْهِمْஅவர்களுக்காகوَ اخْفِضْஇன்னும் தாழ்த்துவீராகجَنَاحَكَஉமது சிறகைلِلْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்கு
லா தமுத்தன்ன 'அய்னய்க இலா மா மத்தஃனா Bபிஹீ அZஜ்வாஜம் மின்ஹும் வலா தஹ்Zஜன் 'அலய்ஹிம் வக்Fபிள் ஜனாஹக லில்மு 'மினீன்
முஹம்மது ஜான்
அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவற்றின் பக்கம் நீர் உமது இரு கண்களையும் நீட்டாதீர்; நீர் இவர்களுக்காக கவலையும் படாதீர். எனினும், நீர் நம்பிக்கையாளர்களுக்கு உமது பணிவான அன்பைக் காட்டுவீராக.
IFT
நாம் இம்மக்களில் பலதரப்பட்டவர்களுக்கு அளித்திருக்கும் வாழ்க்கை வசதிகளை நீர் ஏறிட்டும் பார்க்காதீர்! இவர்களின் நிலை குறித்து வருந்தாதீர். (இவர்களை விட்டுவிட்டு) நம்பிக்கையார்களின்பால் பணிவுடனும் கனிவுடனும் இருப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எதை நாம் அவர்களில் பலதரப்பட்டவர்களுக்கு சுகமனுபவிக்க வைத்துள்ளோமோ, அதன்பால் உம்முடைய இருகண்களை(பார்வைகளை)யும் நிச்சயமாக நீர் நீட்டாதீர்! நீர் அவர்களுக்காக கவலையும் படாதீர், இன்னும், நீர் விசுவாசிகளுக்கு (பணிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக.
Saheeh International
Do not extend your eyes toward that by which We have given enjoyment to [certain] categories of them [i.e., the disbelievers], and do not grieve over them. And lower your wing [i.e., show kindness] to the believers.
وَقُلْ اِنِّیْۤ اَنَا النَّذِیْرُ الْمُبِیْنُ ۟ۚ
وَ قُلْமேலும் கூறுவீராகاِنِّیْۤநிச்சயமாக நான்اَنَاநான்النَّذِیْرُஅச்சமூட்டி எச்சரிப்பவன்الْمُبِیْنُۚதெளிவானவன்
வ குல் இன்னீ அனன் னதீருல் முBபீன்
முஹம்மது ஜான்
“பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்” என்று நீர் கூறுவீராக;
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நான் தெளிவான அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்'' என்றும் கூறுவீராக.
IFT
“திண்ணமாக, நான் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கக்கூடியவனே!” என்று (சத்தியத்தை ஏற்க மறுப்பவர்களிடம்) நீர் கூறிவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், “நிச்சயமாக நானே பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்” என்றும் நீர் கூறுவீராக!
Saheeh International
And say, "Indeed, I am the clear warner" -
كَمَاۤ اَنْزَلْنَا عَلَی الْمُقْتَسِمِیْنَ ۟ۙ
كَمَاۤபோன்றுاَنْزَلْنَاநாம் இறக்கினோம்عَلَیமீதுالْمُقْتَسِمِیْنَۙபிரித்தவர்கள்
கமா அன்Zஜல்னா 'அலல் முக்தஸிமீன்
முஹம்மது ஜான்
(நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,
IFT
இந்த எச்சரிக்கை, பிளவை ஏற்படுத்தியவர்களுக்கு நாம் அனுப்பியிருந்த எச்சரிக்கையைப் போன்றதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) முந்தைய வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தோர் மீது இறக்கியவாறே (வேதனையை நாம் இறக்குவோம்-)
Saheeh International
Just as We had revealed [scriptures] to the separators
الَّذِیْنَ جَعَلُوا الْقُرْاٰنَ عِضِیْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்جَعَلُواஆக்கினார்களோالْقُرْاٰنَகுர்ஆனைعِضِیْنَதுண்டு துண்டாக
அல்லதீன ஜ'அலுல் குர்'ஆன'இளீன்
முஹம்மது ஜான்
இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).
அப்துல் ஹமீது பாகவி
இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்பவர்கள் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).
IFT
அவர்களோ (தங்களுடைய) வேதத்தைப் பல கூறுகளாகப் பிரித்து விட்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால் (இந்தக்) குர் ஆனைப் பல பாகங்களாக ஆக்கி விட்டனர்.
Saheeh International
Who have made the Qur’an into portions.
فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
فَوَرَبِّكَஆகவே, உமது இறைவன் மீது சத்தியமாகلَنَسْـَٔلَنَّهُمْநிச்சயமாக நாம் அவர்களை விசாரிப்போம்اَجْمَعِیْنَۙஅனைவரையும்
Fபவ ரBப்Bபிக லனஸ்'அ லன்னஹும் அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே,) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரிடமும் கேள்வி கணக்குக் கேட்போம்,
IFT
உம் இறைவன் மீது ஆணையாக, இவர்கள் அனைவரையும் நாம் நிச்சயமாக விசாரிப்போம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, உமதிரட்சகன்மீது சத்தியமாக, அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் (விசாரணை செய்து) கேட்போம்.
Saheeh International
So by your Lord, We will surely question them all
عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
عَمَّاஎதைப் பற்றிكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
'அம்மா கானூ யஃமலூன்
முஹம்மது ஜான்
அவர்கள் செய்து கொண்டிருந்த (எல்லாச்) செயல்களைப் பற்றியும், (நாம் விசாரிப்போம்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி.
IFT
இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி.
Saheeh International
About what they used to do.
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِیْنَ ۟
فَاصْدَعْஆகவே பகிரங்கப்படுத்துவீராகبِمَاஎதைக் கொண்டுتُؤْمَرُநீர் ஏவப்படுகிறீரோوَ اَعْرِضْமேலும் புறக்கணிப்பீராகعَنِவிட்டுالْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களை
Fபஸ்தஃ Bபிமா து'மரு வ அஃரிள் அனில் முஷ்ரிகீன்
முஹம்மது ஜான்
ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, உமக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீர் அவர்களுக்கு விவரித்தறிவித்து விடுவீராக. மேலும், இணைவைத்து வணங்கும் இவர்களைப் புறக்கணித்து விடுவீராக.
IFT
எனவே, (நபியே!) உமக்குக் கட்டளையிடப்படுகின்றவற்றை வெளிப்படையாகக் கூறிவிடும்; மேலும், இணைவைப்போரைச் சிறிதும் பொருட்படுத்தாதீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, உமக்கு ஏவப்பட்டதை (த் தயக்கமின்றி) நீர் அவர்களுக்குத் தெளிவாகக் கூறி விடுவீராக! இணை வைத்துக் கொண்டிருப்போரை புறக்கணித்தும் விடுவீராக!
Saheeh International
Then declare what you are commanded and turn away from the polytheists.
اِنَّا كَفَیْنٰكَ الْمُسْتَهْزِءِیْنَ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்كَفَیْنٰكَஉமக்குப் போதுமானவர்களாக இருக்கிறோம்الْمُسْتَهْزِءِیْنَۙபரிகசிப்பவர்களுக்கு
இன்னா கFபய்னாகல் முஸ்தஹ்Zஜி'ஈன்
முஹம்மது ஜான்
உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
பரிகாசம் செய்யும் (இவர்களுடைய தீங்கை விட்டு) நிச்சயமாக நாமே உம்மைப் பாதுகாப்போம்.
IFT
(உம்மை) ஏளனம் செய்கின்ற இந்த மக்களைக் கவனித்துக்கொள்ள உமக்காக நாமே போதுமாக இருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உம்மைப்) பரிகாசம் செய்பவர்களுக்கு (தண்டனை அளிக்க) நிச்சயமாக நாமே உமக்குப் போதுமானவர்களாக இருக்கிறோம்.
Saheeh International
Indeed, We are sufficient for you against the mockers
الَّذِیْنَ یَجْعَلُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۚ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்یَجْعَلُوْنَஆக்குகிறார்களோمَعَஉடன்اللّٰهِஅல்லாஹ்اِلٰهًاஇறைவனைاٰخَرَ ۚவேறொருفَسَوْفَஆகவே விரைவில்یَعْلَمُوْنَஅறிந்து கொள்வார்கள்
அல்லதீன யஜ்'அலூன ம'அல் லாஹி இலாஹன் ஆகர்; Fபஸவ்Fப யஃலமூன்
முஹம்மது ஜான்
இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள்; (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் (உம்மைப் பரிகசிப்பது மட்டுமா?) அல்லாஹ்வுக்கு மற்றொரு (பொய்த்) தெய்வத்தைக் கூட்டாக்குகிறார்கள். (இதன் பலனை) பின்னர் இவர்கள் அறிந்து கொள்வார்கள்.
IFT
அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் கடவுளாக்குகின்றவர்கள் விரைவில் அறிந்துகொள்ளத்தான் போகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால்- அல்லாஹ்வுடன் (பொய்யாக) மற்றொரு வணக்கத்திற்குரிய (தெய்வத்)தையும் (இணையாக) ஆக்குகிறார்கள். (இதன் முடிவைப் பின்னர்) அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
Saheeh International
Who make [equal] with Allah another deity. But they are going to know.
وَلَقَدْ نَعْلَمُ اَنَّكَ یَضِیْقُ صَدْرُكَ بِمَا یَقُوْلُوْنَ ۟ۙ
وَ لَقَدْநிச்சயமாகவேنَعْلَمُநாம் அறிவோம்اَنَّكَநிச்சயமாக நீர்یَضِیْقُநெருக்கடி அடைகிறதுصَدْرُكَஉமது நெஞ்சம்بِمَاஅதனால்یَقُوْلُوْنَۙஅவர்கள் கூறுகிறார்கள்
வ லகத் னஃலமு அன்னக யளீகு ஸத்ருக Bபிமா யகூலூன்
முஹம்மது ஜான்
(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை உமது உள்ளத்தை நெருக்குகிறது என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீர் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்.)
IFT
(உம்மைக் குறித்து) இவர்கள் கூறும் கூற்றுகளால் உமது உள்ளம் வருந்துவதை திண்ணமாக நாம் அறிவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவற்றின் காரணமாக உமது நெஞ்சம் கலக்கத்திற்குள்ளாவதை நிச்சயமாக நாம் அறிவோம்.
Saheeh International
And We already know that your breast is constrained by what they say.
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِیْنَ ۟ۙ
فَسَبِّحْஆகவே துதிப்பீராகبِحَمْدِபுகழுடன்رَبِّكَஉமது இறைவனின்وَ كُنْமேலும் ஆவீராகمِّنَஉள்ளவர்களில்السّٰجِدِیْنَۙசிரம் பணிபவர்கள்
FபஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக வ கும் மினஸ் ஸாஜிதீன்
முஹம்மது ஜான்
நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
நீர் உமது இறைவனைத் துதி செய்து புகழ்ந்து அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குவீராக;
IFT
(அதற்கான நிவாரணம் இதுதான்:) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! அவன் முன் சிரம்பணிபவராய்த் திகழ்வீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே நீர் (அவர்களின் கூற்றைப் பொருட்படுத்தாது) உமதிரட்சகனின் புகழைக் கொண்டு துதிப்பீராக! இன்னும், சிரம் பணிவோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!
Saheeh International
So exalt [Allah] with praise of your Lord and be of those who prostrate [to Him].
وَاعْبُدْ رَبَّكَ حَتّٰی یَاْتِیَكَ الْیَقِیْنُ ۟۠
وَ اعْبُدْமேலும் வணங்குவீராகرَبَّكَஉமது இறைவனைحَتّٰیவரைیَاْتِیَكَஉமக்கு வரும்الْیَقِیْنُ۠உறுதி
வஃBபுத் ரBப்Bபக ஹத்தா யாதியகல் யகீன்
முஹம்மது ஜான்
உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!
அப்துல் ஹமீது பாகவி
உமக்கு ‘எகீன்' (என்னும் மரணம்) ஏற்படும் வரை (இவ்வாறே) உமது இறைவனை வணங்கிக் கொண்டிருப்பீராக!
IFT
மேலும், கட்டாயம் வரக்கூடிய அந்தக் கடைசி நேரம் வரை உம் இறைவனுக்கு அடிபணிந்து கொண்டிருப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உமக்கு (யகீன் என்னும்) மரணம் வரும் வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக!
Saheeh International
And worship your Lord until there comes to you the certainty [i.e., death].