40. ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்) / அல் காஃபிர் (மன்னிப்பவன்)

மக்கீ, வசனங்கள்: 85

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
حٰمٓ ۟ۚ
حٰمٓۚஹா மீம்
ஹா-மீம்
முஹம்மது ஜான்
ஹா, மீம்.
அப்துல் ஹமீது பாகவி
ஹா மீம்.
IFT
ஹா மீம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஹாமீம்.
Saheeh International
ha, Meem.
تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟ۙ
تَنْزِیْلُஇறக்கியருளப்பட்டதுالْكِتٰبِஇவ்வேதம்مِنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்الْعَزِیْزِவல்லமை மிக்கவன்الْعَلِیْمِۙமுற்றும் அறிந்தவன்
தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில் அZஜீZஜில் 'அலீம்
முஹம்மது ஜான்
(யாவரையும்) மிகைத்தோனும், மிக அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதே இவ்வேதம்.
அப்துல் ஹமீது பாகவி
(இது அனைவரையும்) மிகைத்தவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதம்.
IFT
இவ்வேதம் அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டிருக்கின்றது. அவனே வல்லமை மிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இது யாவரையும்_) மிகைத்தவனாகிய, (அனைத்தையும்) நன்கறிந்தவனாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கிவைக்கப்பட்ட வேதமாகும்.
Saheeh International
The revelation of the Book [i.e., the Qur’an] is from Allah, the Exalted in Might, the Knowing,
غَافِرِ الذَّنْۢبِ وَقَابِلِ التَّوْبِ شَدِیْدِ الْعِقَابِ ۙ ذِی الطَّوْلِ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ اِلَیْهِ الْمَصِیْرُ ۟
غَافِرِமன்னிப்பவன்الذَّنْۢبِபாவத்தைوَ قَابِلِமேலும் ஏற்றுக்கொள்பவன்التَّوْبِபாவமன்னிப்பைشَدِیْدِகடுமையானவன்الْعِقَابِ ۙதண்டனையில்ذِیஉடையவன்الطَّوْلِ ؕஅருட்கொடைلَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ؕஅவனைத்اِلَیْهِஅவனிடமேالْمَصِیْرُமீளுதல் உள்ளது
காFபிரித் தம்Bபி வ காBபிலித் தவ்Bபி ஷதீதில் 'இகாBபி தித் தவ்லி லா இலாஹ இல்லா ஹுவ இலய்ஹில் மஸீர்
முஹம்மது ஜான்
பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை; அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அவன் (குற்றவாளிகளுடைய) மன்னிப்புக் கோரலை அங்கீகரித்து பாவங்களை மன்னிப்பவன். (மனமுரண்டாக குற்றம் புரியும் பாவிகளை) வேதனை செய்வதிலும் கடினமானவன். (நல்லவர்கள் மீது) அருள் புரிபவன். அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனிடமே (அனைவரும் விசாரணைக்காகச்) செல்ல வேண்டியதிருக்கிறது.
IFT
பாவத்தை மன்னிப்பவன்; பாவமன்னிப்புக் கோரி மீளுவதை ஏற்றுக் கொள்பவன். கடும் தண்டனையளிப்பவன்; அருட்பேறு உடையவன்! அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டி யிருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன்) பாவத்தை மன்னிப்பவன், (குற்றவாளிகளுடைய) தவ்பாவை (பாவ மீட்சியை) ஏற்பவன், (குற்றம் புரிந்தோரைத்) தண்டிப்பதில் கடுமையானவன், (நல்லோர் மீது) அருட்கொடைகள் உடையவன் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அவனிடமே திரும்ப வேண்டியதிருக்கின்றது.
Saheeh International
The forgiver of sin, acceptor of repentance, severe in punishment, owner of abundance. There is no deity except Him; to Him is the destination.
مَا یُجَادِلُ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ اِلَّا الَّذِیْنَ كَفَرُوْا فَلَا یَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِی الْبِلَادِ ۟
مَاஇல்லைیُجَادِلُதர்க்கம் செய்வர்فِیْۤகுறித்துاٰیٰتِவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفَلَاஎனவே வேண்டாம்یَغْرُرْكَஉம்மை ஏமாற்றتَقَلُّبُهُمْஅவர்களின் நடமாட்டம்فِیஇல்الْبِلَادِநாடுகள்
மா யுஜாதிலு Fபீ ஆயாதில் லாஹி இல்லல் லதீன கFபரூ Fபலா யக்ருர்க தகல்லுBபுஹும் Fபில் Bபிலாத்
முஹம்மது ஜான்
நிராகரிப்பவர்களைத் தவிர(வேறு எவரும்) அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்ய மாட்டார்கள். ஆகவே, பட்டணங்களில் அவர்களுடைய (ஆடம்பர) நடமாட்டம் உம்மை ஏமாற்றி விட வேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிராகரிப்பவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே! வீணாகத் தர்க்கிக்கும்) அவர்கள் பல நகரங்களிலும் (ஆடம்பரத்துடன் சுகபோகமாகச்) சுற்றித் திரிவது உம்மை மயக்கிவிட வேண்டாம்.
IFT
அல்லாஹ்வுடைய வசனங்களில் யாரும் தர்க்கம் புரிவதில்லை; நிராகரித்தவர்களைத் தவிர! இதன்பிறகு உலகநாடுகளில் அவர்களுடைய நடமாட்டம் உம்மை எந்த வகையிலும் ஏமாற்றிவிட வேண்டாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிராகரிப்போரைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வுடைய வசனங்களில் தர்க்கிக்கமாட்டார்கள், ஆகவே, அவர்கள், நகரங்களில் (சுதந்திரமாக) சுற்றித்திரிவது உம்மை ஏமாற்றிவிட வேண்டாம்.
Saheeh International
No one disputes concerning the signs of Allah except those who disbelieve, so be not deceived by their [uninhibited] movement throughout the land.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّالْاَحْزَابُ مِنْ بَعْدِهِمْ ۪ وَهَمَّتْ كُلُّ اُمَّةٍ بِرَسُوْلِهِمْ لِیَاْخُذُوْهُ وَجٰدَلُوْا بِالْبَاطِلِ لِیُدْحِضُوْا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ ۫ فَكَیْفَ كَانَ عِقَابِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்قَوْمُசமுதாயம்نُوْحٍநூஹின்وَّ الْاَحْزَابُமேலும் கூட்டத்தினரும்مِنْۢஇருந்துبَعْدِهِمْ ۪அவர்களுக்குப் பின்وَ هَمَّتْமேலும் முனைந்தனர்كُلُّஒவ்வொருاُمَّةٍۭசமுதாயமும்بِرَسُوْلِهِمْதங்கள் தூதரைلِیَاْخُذُوْهُஅவரைப் பிடிப்பதற்காகوَ جٰدَلُوْاமேலும் தர்க்கம் செய்தனர்بِالْبَاطِلِஅசத்தியத்தைக் கொண்டுلِیُدْحِضُوْاவீழ்த்துவதற்காகبِهِஅதன் மூலம்الْحَقَّசத்தியத்தைفَاَخَذْتُهُمْ ۫ஆகவே நான் அவர்களைப் பிடித்தேன்فَكَیْفَஎனவே எப்படிكَانَஇருந்ததுعِقَابِஎனது தண்டனை
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வல் அஹ்ZஜாBபு மின் Bபஃதிஹிம் வ ஹம்மத் குல்லு உம்மதின் Bபி ரஸூலிஹிம் லி ய'குதூஹு வ ஜாதலூ Bபில்Bபாதிலி லி யுத் ஹிளூ Bபிஹில் ஹக்க Fப அகத்துஹும் Fப கய்Fப கான 'இகாBப்
முஹம்மது ஜான்
இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய மக்களும், அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொரு கூட்டத்தினரும் (நம் வசனங்களைப் பொய்யாக்கித்) தங்களிடம் வந்த தூதர்களிடம் குற்றம் கண்டு பிடிக்கவே கருதினார்கள். சத்தியத்தை அழித்து விடுவதற்காகப் பொய்யான விஷயங்களைக் கொண்டு (அவர்களுடன்) தர்க்கித்தார்கள். ஆதலால், அவர்களை நாம் (வேதனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். ஆகவே, (அவர்களுக்கு) எனது தண்டனை எப்படி இருந்தது? (என்பதைக் கவனிப்பீராக!)
IFT
இவர்களுக்கு முன்பு நூஹுடைய சமூகத்தாரும் பொய்யென வாதிட்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பிறகு, வேறு பல கூட்டத்தினரும் இவ்வாறு செய்துள்ளனர். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்களுடைய தூதரைப் பிடிக்கப் பாய்ந்தனர். அவர்கள் அனைவரும் அசத்தியத்தின் ஆயுதங்களால் சத்தியத்தை வீழ்த்திட முயன்றனர். ஆனால், இறுதியில் நான் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களுக்கு முன் நூஹ்வுடைய சமூகத்தாரும், அவர்களுக்குப் பின் (வந்த) பல கூட்டத்தினர்களும் (நம்மால் அனுப்பப்பட்டோரைப்) பொய்யாக்கினார்கள், மேலும், (அவர்களில்) ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்களிடம் வந்த தூதர்களை(க் கொலை செய்ய அல்லது சிறை)ப் பிடிக்க நாட்டங்கொண்டார்கள், அன்றியும், அவர்கள் அசத்தியத்தைக் கொண்டு_அதன் மூலம் சத்தியத்தை அழித்து விடுவதற்காக (அவர்களுடன்) தர்க்கித்தார்கள். ஆதலால், அவர்களை நான் பிடித்துக் கொண்டேன், ஆகவே, என்னுடைய தண்டனை எப்படி இருந்தது?
Saheeh International
The people of Noah denied before them and the [disbelieving] factions after them, and every nation intended [a plot] for their messenger to seize him, and they disputed by [using] falsehood to [attempt to] invalidate thereby the truth. So I seized them, and how [terrible] was My penalty.
وَكَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَی الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّهُمْ اَصْحٰبُ النَّارِ ۟
وَ كَذٰلِكَஅவ்வாறேحَقَّتْஉறுதியாகிவிட்டதுكَلِمَتُவாக்குرَبِّكَஉமது இறைவனின்عَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اَصْحٰبُவாசிகள்النَّارِநரகத்தின்
வ கதாலிக ஹக்கத் கலிமது ரBப்Bபிக 'அலல் லதீன கFபரூ அன்னஹும் அஸ்ஹாBபுன் னார்
முஹம்மது ஜான்
இவ்வாறே, நிராகரிப்பவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு அவர்கள் மீது உறுதியாகிவிட்டது.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே இந்நிராகரிப்பவர்கள் மீதும், நிச்சயமாக இவர்கள் நரகவாசிகள்தான் என்ற உமது இறைவனின் வாக்கு நிறைவேறியது.
IFT
பிறகு பாருங்கள், என்னுடைய தண்டனை எத்துணைக் கடுமையானது! ‘அவர்கள் நரகத்தில் நுழைபவர்களே!’ எனும் உம் அதிபதியின் தீர்ப்பு, இவ்வாறு அந்த நிராகரிப்பாளர்கள் அனைவர் மீதும் சார்ந்து விட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே, நிராகரித்தோர் மீது_நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள் என்ற உமதிரட்சகனின் வாக்கும் கடமையாகி (நிறைவேறி) விட்டது.
Saheeh International
And thus has the word [i.e., decree] of your Lord come into effect upon those who disbelieved that they are companions of the Fire.
اَلَّذِیْنَ یَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَیُؤْمِنُوْنَ بِهٖ وَیَسْتَغْفِرُوْنَ لِلَّذِیْنَ اٰمَنُوْا ۚ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَیْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِیْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِیْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِیْمِ ۟
اَلَّذِیْنَஎவர்கள்یَحْمِلُوْنَசுமக்கிறார்களோالْعَرْشَஅர்ஷைوَ مَنْஇன்னும் எவர்கள்حَوْلَهٗஅதைச் சுற்றியுள்ளார்களோیُسَبِّحُوْنَஅவர்கள் துதிக்கிறார்கள்بِحَمْدِபுகழுடன்رَبِّهِمْதங்கள் இறைவனின்وَ یُؤْمِنُوْنَஇன்னும் நம்பிக்கை கொள்கிறார்கள்بِهٖஅவனில்وَ یَسْتَغْفِرُوْنَஇன்னும் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்لِلَّذِیْنَஎவர்களுக்காகவெனில்اٰمَنُوْا ۚநம்பிக்கை கொண்டார்களோرَبَّنَاஎங்கள் இறைவனேوَسِعْتَநீ சூழ்ந்திருக்கிறாய்كُلَّஒவ்வொருشَیْءٍபொருளையும்رَّحْمَةًஅருளால்وَّ عِلْمًاஇன்னும் அறிவால்فَاغْفِرْஎனவே மன்னிப்பாயாகلِلَّذِیْنَஎவர்கள்تَابُوْاபாவமன்னிப்புத் தேடினார்களோوَ اتَّبَعُوْاஇன்னும் பின்பற்றினார்களோسَبِیْلَكَஉனது வழியைوَ قِهِمْஇன்னும் அவர்களைக் காப்பாயாகعَذَابَவேதனையிலிருந்துالْجَحِیْمِநரகத்தின்
அல்லதீன யஹ்மிலூனல் 'அர்ஷ வ மன் ஹவ்லஹூ யுஸBப்Bபிஹூன Bபிஹம்தி ரBப்Bபிஹிம் வ யு'மினூன Bபிஹீ வ யஸ்தக்Fபிரூன லில்லதீன ஆமனூ ரBப்Bபனா வஸிஃத குல்ல ஷய்'இர் ரஹ்மத(ன்)வ் வ 'இல்மன் Fபக்Fபிர் லில்லதீன தாBபூ வத்தBப'ஊ ஸBபீலக வ கிஹிம் 'அதாBபல் ஜஹீம்
முஹம்மது ஜான்
அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள், ‘அர்ஷை' சுமந்து கொண்டும், அதைச் சூழவும் இருக்கிறார்களோ அவர்கள், தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதி செய்தும், அவனை நம்பிக்கைகொண்டும், நம்பிக்கை கொண்டவர்களின் குற்றங்களை மன்னிக்கும்படி கோரியும், ‘‘எங்கள் இறைவனே! நீ ஞானத்தாலும் கருணையாலும் அனைவரையும்விட மிக்க விசாலமானவன். ஆகவே, (பாவங்களை விட்டு) விலகி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையில் இருந்து நீ பாதுகாத்துக் கொள்வாயாக!'' என்று பிரார்த்தித்துக் கொண்டும்,
IFT
அர்ஷை* சுமந்து கொண்டிருக்கும் வானவர்களும் அதனைச் சுற்றியிருப்பவர்களும் தம் இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருகிறார்கள். (அவர்கள் கூறுகிறார்கள்:) “எங்கள் அதிபதியே! உனது கருணையாலும், உனது ஞானத்தினாலும் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கிறாய். எவர்கள் பாவ மன்னிப்புக்கோரி உன்னுடைய வழியைப் பின்பற்றினார்களோ அவர்களை மன்னிப்பாயாக! மேலும், அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அர்ஷை” சுமந்து கொண்டிருப்பவர்களும், அதனைச் சுற்றி இருப்பவர்களும் தங்களிரட்சகனின் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்கிறார்கள், இன்னும், அவனை விசுவாசிக்கிறார்கள், மேலும், விசுவாசங்கொண்டோருக்காக (அவர்களின் குற்றங்களை) மன்னிக்குமாறு (அல்லாஹ்விடம்) கோருகிறார்கள், “எங்கள் இரட்சகனே! நீ (உன்னுடைய) கருணையாலும் அறிவாலும் ஒவ்வொரு பொருளையும் விசாலமாக அறிந்திருக்கின்றாய், ஆகவே, தவ்பா செய்து உன்னுடைய (நேர்) வழியைப் பின்பற்றியோருக்கும், நீ (பாவத்தை) பொறுத்தருள்வாயாக, அவர்களை நரக வேதனையிலிருந்து நீ காத்தருள்வாயாக!
Saheeh International
Those [angels] who carry the Throne and those around it exalt [Allah] with praise of their Lord and believe in Him and ask forgiveness for those who have believed, [saying], "Our Lord, You have encompassed all things in mercy and knowledge, so forgive those who have repented and followed Your way and protect them from the punishment of Hellfire.
رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ لَّتِیْ وَعَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّیّٰتِهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ۙ
رَبَّنَاஎங்கள் இறைவனே!وَ اَدْخِلْهُمْமேலும் அவர்களைப் புகுத்துவாயாகجَنّٰتِசுவனங்களில்عَدْنِநிலையானِ۟الَّتِیْஎவற்றைوَعَدْتَّهُمْஅவர்களுக்கு நீ வாக்களித்தாயோوَ مَنْமேலும் எவர்صَلَحَநற்செயல் செய்தாரோمِنْஇருந்துاٰبَآىِٕهِمْஅவர்களின் மூதாதையர்களில்وَ اَزْوَاجِهِمْமேலும் அவர்களின் துணைகளில்وَ ذُرِّیّٰتِهِمْ ؕமேலும் அவர்களின் சந்ததியினரில்اِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُۙஞானமிக்கவன்
ரBப்Bபனா வ அத்கில்ஹும் ஜன்னாதி 'அத்னினில் லதீ வ'அத்தஹும் வ மன் ஸலஹ மின் ஆBபா'இஹிம் வ அZஜ்வாஜிஹிம் வ துர்ரிய்யாதிஹிம்; இன்னக அன்தல் 'அZஜீZஜுல் ஹகீம்
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘எங்கள் இறைவனே! நீ இவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சொர்க்கங்களில் இவர்களையும் இவர்களுடைய மூதாதைகள், இவர்களுடைய மனைவிகள், இவர்களுடைய சந்ததிகள் ஆகிய இவர்களில் உள்ள நல்லவர்களையும் புகுத்துவாயாக! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவன், (அனைத்தையும் அறிந்த) ஞானமுடையவன்'' என்றும்,
IFT
மேலும், நீ அவர்களுக்கு வாக்களித்த நிலையான சுவனங்களில் அவர்களை நுழையச் செய்வாயாக! அவர்களுடைய தாய் தந்தையர்களிலும், மனைவியரிலும் மற்றும் அவர்களுடைய வழித்தோன்றல்களிலும் நல்லவர்களாய் இருப்பவர்களையும் (அவர்களுடன் சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக!) திண்ணமாக, நீ வலிமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறாய்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சுவனபதிகளில் அவர்களையும், அவர்களுடைய மூதாதையரிலும், அவர்கள் மனைவியரிலும், அவர்களுடைய சந்ததியினரிலும் (ஈமான் கொண்டு, நற்செயல்புரிந்து) யார் நல்லோராகி விட்டாரோ அவர்களையும் புகுத்துவாயாக! நிச்சயமாக நீயே (யாவரையும்) மிகைத்தோன், (யாவையும் அறிந்த) தீர்க்கமான அறிவுடையோன்.”
Saheeh International
Our Lord, and admit them to gardens of perpetual residence which You have promised them and whoever was righteous among their forefathers, their spouses and their offspring. Indeed, it is You who is the Exalted in Might, the Wise.
وَقِهِمُ السَّیِّاٰتِ ؕ وَمَنْ تَقِ السَّیِّاٰتِ یَوْمَىِٕذٍ فَقَدْ رَحِمْتَهٗ ؕ وَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠
وَ قِهِمُமேலும் அவர்களைக் காப்பாயாகالسَّیِّاٰتِ ؕதீமைகளிலிருந்துوَ مَنْமேலும் எவரைتَقِநீர் காக்கின்றீரோالسَّیِّاٰتِதீமைகளிலிருந்துیَوْمَىِٕذٍஅந்நாளில்فَقَدْநிச்சயமாகرَحِمْتَهٗ ؕஅவருக்கு நீர் அருள்புரிந்துவிட்டீர்وَ ذٰلِكَமேலும் அதுهُوَஅதுவேالْفَوْزُவெற்றிالْعَظِیْمُ۠மகத்தானதாகும்
வ கிஹிமுஸ் ஸய்யிஆத்; வ மன் தகிஸ் ஸய்யிஆதி யவ்ம'இதின் Fபகத் ரஹிம்தஹ்; வ தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
முஹம்மது ஜான்
“இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் கூறுவர்).  
அப்துல் ஹமீது பாகவி
‘‘அவர்களை எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள். அன்றைய தினம் எவர்களை நீ எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக் கொண்டாயோ, அவர்கள் மீது நிச்சயமாக நீ பேரருள் புரிந்துவிட்டாய்'' என்றும் பிரார்த்திப்பார்கள். இதுதான் மிக மகத்தான பெரும் பாக்கியமாகும்.
IFT
மேலும், நீ அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாற்றுவாயாக! மறுமை நாளில் எவரை நீ தீமைகளிலிருந்து காப்பாற்றுகிறாயோ, அவர்மீது பெருங்கருணையைப் பொழிந்துவிட்டாய். இதுவே, மகத்தான வெற்றியாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “(சகல) தீமைகளிலிருந்தும் (அவற்றின் தண்டனையிலிருந்தும்), அவர்களைக் காப்பாயாக! அன்றைய தினம், எவரை நீ தீமைகளிலிருந்து காத்துக்கொள்கிறாயோ அவர்மீது திட்டமாக, நீ அருள் புரிந்துவிட்டாய், இன்னும், அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் கூறுவார்கள்).
Saheeh International
And protect them from the evil consequences [of their deeds]. And he whom You protect from evil consequences that Day - You will have given him mercy. And that is the great attainment."
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یُنَادَوْنَ لَمَقْتُ اللّٰهِ اَكْبَرُ مِنْ مَّقْتِكُمْ اَنْفُسَكُمْ اِذْ تُدْعَوْنَ اِلَی الْاِیْمَانِ فَتَكْفُرُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோیُنَادَوْنَஅவர்கள் அழைக்கப்படுவார்கள்لَمَقْتُநிச்சயமாக வெறுப்புاللّٰهِஅல்லாஹ்வுடையاَكْبَرُமிகப்பெரியதுمِنْவிடمَّقْتِكُمْநீங்கள் வெறுப்பதைاَنْفُسَكُمْஉங்களையேاِذْபோதுتُدْعَوْنَநீங்கள் அழைக்கப்பட்டاِلَیபக்கம்الْاِیْمَانِஈமானின்فَتَكْفُرُوْنَஅப்போது நீங்கள் நிராகரித்தீர்கள்
இன்னல் லதீன கFபரூ யுனாதவ்ன லமக்துல் லாஹி அக்Bபரு மிம் மக்திகும் அன்Fபுஸகும் இத் துத்'அவ்ன இலல் ஈமானி Fபதக்Fபுரூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நிராகரிப்பவர்களிடம்: “இன்று நீங்கள் உங்கள் ஆன்மாக்களைக் கோபித்துக் கொள்வதைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பெரியதாகும்; ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையின் பால் அழைக்கப்பட்ட போது (அதை) நிராகரித்து விட்டீர்களே” என்று அவர்களிடம் கூறப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் நிராகரித்து விட்டார்களோ, அவர்களை நோக்கி, ‘‘இன்றைய தினம் நீங்கள் உங்கள் ஆத்மாவை (நிந்தித்துக்) கோபிப்பதை விட, (உங்கள் மீது) அல்லாஹ்வுடைய (நிந்தனையும்) கோபமும் மிகப் பெரியதாகும். ஏனென்றால், நீங்கள் நம்பிக்கையின் பக்கம் அழைக்கப்பட்ட சமயத்தில், அதை நிராகரித்து விட்டீர்கள்'' என்று அவர்களை நோக்கி சப்தமிட்டுக் கூறப்படும்.
IFT
எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களை (மறுமை நாளில்) அழைத்துக் கூறப்படும்: “இறைநம்பிக்கை கொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்தீர்கள். அப்போது அல்லாஹ் உங்கள் மீது கொண்ட கோபம் (இன்று) நீங்கள் உங்கள் மீது கொள்கின்ற கோபத்தை விடவும் கடுமையானது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நிராகரித்துவிட்டார்களே அவர்கள் _ “உங்களையே நீங்கள் கோபித்துகொள்வதை விட அல்லாஹ்வின் கோபம் (உங்களின் மீது) மிகப்பெரியதாகும், (ஏனென்றால்,) நீங்கள் விசுவாசத்தின்பால் (உலகில்) அழைக்கப்பட்ட சமயத்தில் (அதனை) நிராகரித்துவிட்டீர்கள்” என்றும் (மறுமையில் மலக்குகளால்) _ அழைக்கப்(பட்டு கூறப்)படுவார்கள்.
Saheeh International
Indeed, those who disbelieve will be addressed, "The hatred of Allah for you was [even] greater than your hatred of yourselves [this Day in Hell] when you were invited to faith, but you disbelieved [i.e., refused]."
قَالُوْا رَبَّنَاۤ اَمَتَّنَا اثْنَتَیْنِ وَاَحْیَیْتَنَا اثْنَتَیْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوْبِنَا فَهَلْ اِلٰی خُرُوْجٍ مِّنْ سَبِیْلٍ ۟
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவனேاَمَتَّنَاஎங்களை மரணிக்கச் செய்தாய்اثْنَتَیْنِஇருமுறைوَ اَحْیَیْتَنَاமேலும் எங்களை உயிர்ப்பித்தாய்اثْنَتَیْنِஇருமுறைفَاعْتَرَفْنَاஆகவே நாங்கள் ஒப்புக்கொண்டோம்بِذُنُوْبِنَاஎங்கள் பாவங்களைفَهَلْஎனவே உண்டாاِلٰیநோக்கிخُرُوْجٍவெளியேறمِّنْஏதேனும்سَبِیْلٍவழி
காலூ ரBப்Bபனா அமத் தனத்னதய்னி வ அஹ்யய்தனத் னதய்னி FபஃதரFப்னா Bபிதுனூ Bபினா Fபஹல் இலா குரூஜிம் மின் ஸBபீல்
முஹம்மது ஜான்
அதற்கவர்கள்: “எங்கள் இறைவனே! நீ எங்களை இருமுறை மரணமடையச் செய்தாய்; இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?” எனக் கூறுவர்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘எங்கள் இறைவனே! இருமுறை நீ எங்களை மரணிக்கச் செய்தாய்; இருமுறை நீ எங்களுக்கு உயிர் கொடுத்தாய். நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு விண்ணப்பம் செய்கிறோம். ஆகவே, (இதில் இருந்து நாங்கள்) வெளிப்பட ஏதும் வழி உண்டா?'' என்று கேட்பார்கள்.
IFT
அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ உண்மையில் எங்களுக்கு இரு தடவை இறப்பும், இரு தடவை வாழ்வும் அளித்துவிட்டாய்! இப்போது நாங்கள் எங்கள் தவறுகளை ஒப்புக்கொள்கிறோம். இனி, இங்கிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “எங்கள் இரட்சகனே! இருமுறை நீ எங்களை மரணமடையச் செய்தாய், இன்னும், இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய், ஆகவே, எங்களுடைய பாவங்களை நாங்கள் ஒப்புக்கொண்டோம், எனவே, (இதிலிருந்து நாங்கள் தப்பித்து) வெளியேறுவதற்கு ஏதும் வழி உண்டா?” என்று அவர்கள் கேட்பார்கள்.
Saheeh International
They will say, "Our Lord, You made us lifeless twice and gave us life twice, and we have confessed our sins. So is there to an exit any way?"
ذٰلِكُمْ بِاَنَّهٗۤ اِذَا دُعِیَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْ ۚ وَاِنْ یُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا ؕ فَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِیِّ الْكَبِیْرِ ۟
ذٰلِكُمْஅதுبِاَنَّهٗஏனெனில்اِذَاஎப்பொழுதுدُعِیَஅழைக்கப்பட்டதோاللّٰهُஅல்லாஹ்وَحْدَهٗஅவன் ஒருவனை மட்டுமேكَفَرْتُمْ ۚநீங்கள் நிராகரித்தீர்கள்وَ اِنْஇன்னும்یُّشْرَكْஇணை வைக்கப்பட்டால்بِهٖஅவனுக்குتُؤْمِنُوْا ؕநீங்கள் நம்புகிறீர்கள்فَالْحُكْمُஎனவே தீர்ப்புلِلّٰهِஅல்லாஹ்வுக்கேالْعَلِیِّமிக உயர்ந்தவன்الْكَبِیْرِமிகப் பெரியவன்
தாலிகும் Bபி அன்னஹூ இதா து'இயல் லாஹு வஹ்தஹூ கFபர்தும் வ இ(ன்)ய் யுஷ்ரக் Bபிஹீ து'மினூ; Fபல்ஹுக்மு லில்லாஹில் 'அலிய்யில் கBபீர்
முஹம்மது ஜான்
(பதில் கூறப்படும்:) “அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது.”
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இறைவன்,) ‘‘உங்களுக்கு இ(த்தண்டனை வந்த)தன் காரணமாவது: அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறினால், அதை நீங்கள் மறுத்தீர்கள். அவனுக்கு எவரும் இணை உண்டு என்று கூறப்பட்டால், அதை நீங்கள் நம்பினீர்கள்! ஆதலால், (இன்றைய தினம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இவ்வேதனை) மிகப் பெரியவனும், மேலானவனுமாகிய அல்லாஹ்வுடைய தீர்ப்பே!'' (என்று கூறுவான்).
IFT
(பதில் கூறப்படும்:) இந்நிலை உங்களுக்கு ஏற்பட்டதற்குக் காரணம், ஏக அல்லாஹ்வின் பக்கம் மட்டும் அழைக்கப்பட்டபோது நீங்கள் ஏற்க மறுத்ததும், அவனோடு மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளப்பட்டபோது அதை ஏற்றுக் கொண்டதும்தான்! இனி தீர்ப்பு வழங்குவது, மேலானவனும் உயர்ந்தவனுமாகிய அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இ(த்தண்டனையான)து_ நிச்சயமாக அதன் காரணம்: அல்லாஹ், அவன் தனித்தவனாக அழைக்கப்பட்டால் நீங்கள் நிராகரித்தீர்கள், மேலும், அவனுக்கு (உங்கள் தெய்வங்கள்) இணையாக்கப்பட்டால் (அதை) விசுவாசித்தீர்கள், இப்பொழுது தீர்ப்பு (வழங்குவது) மிக்க உயர்வானவனாகிய மிகப் பெரியவனான அல்லாஹ்விற்கு (மட்டும்) உரியதாகும் (என்று கூறப்படும்).
Saheeh International
[They will be told], "That is because, when Allah was called upon alone, you disbelieved; but if others were associated with Him, you believed. So the judgement is with Allah, the Most High, the Grand."
هُوَ الَّذِیْ یُرِیْكُمْ اٰیٰتِهٖ وَیُنَزِّلُ لَكُمْ مِّنَ السَّمَآءِ رِزْقًا ؕ وَمَا یَتَذَكَّرُ اِلَّا مَنْ یُّنِیْبُ ۟
هُوَஅவன்தான்الَّذِیْஎத்தகையவன் என்றால்یُرِیْكُمْஉங்களுக்குக் காட்டுகிறான்اٰیٰتِهٖதன் அத்தாட்சிகளைوَ یُنَزِّلُமேலும் இறக்கி வைக்கிறான்لَكُمْஉங்களுக்காகمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்رِزْقًا ؕவாழ்வாதாரத்தைوَ مَاமேலும் இல்லைیَتَذَكَّرُபடிப்பினை பெறுபவர்اِلَّاதவிரمَنْஎவர்یُّنِیْبُமீளுகிறாரோ
ஹுவல் லதீ யுரீகும் ஆயாதிஹீ வ யுனZஜ்Zஜிலு லகும் மினஸ் ஸமா'இ ரிZஜ்கா; வமா யததக்கரு இல்லா மய் யுனீBப்
முஹம்மது ஜான்
அவனே தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; உங்களுக்கு வானத்திலிருந்து உணவையும் இறக்கிவைக்கிறான் - எனவே அவனையே முன்னோக்கி நிற்பவர்களைத் தவிர (வேறு யாரும்) நல்லுணர்வு பெறமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவித்து, வானத்தில் இருந்து உங்களுக்கு உணவுகளையும் இறக்கிவைக்கிறான். (ஒவ்வொரு விஷயத்திலும்) அவனையே முன்நோக்குபவர்களைத் தவிர, மற்றெவரும் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெற மாட்டார்கள்.
IFT
அவன்தான் உங்களுக்குத் தன்னுடைய சான்றுகளைக் காண்பிக்கிறான். மேலும், வானத்திலிருந்து உங்களுக்காக உணவை இறக்குகிறான். ஆனால், அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிறவன் மட்டுமே (இந்தச் சான்றுகளைக் கொண்டு) படிப்பினை பெறுகிறான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அவன் காண்பிக்கிறான், மேலும், வானத்திலிருந்து உங்களுக்கு உணவை இறக்கிவைக்கிறான், (ஒவ்வொரு விஷயத்திலும் அவனுக்குக் கீழ்ப்படிந்து அவன் பக்கம்) திரும்புபவர்களைத் தவிர, (வேறெவரும் இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறவுமாட்டார்கள்.
Saheeh International
It is He who shows you His signs and sends down to you from the sky, provision. But none will remember except he who turns back [in repentance].
فَادْعُوا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟
فَادْعُواஎனவே பிரார்த்தியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِیْنَதூய்மையாக்கியவர்களாகلَهُஅவனுக்குالدِّیْنَமார்க்கத்தைوَ لَوْஎன்றபோதிலும்كَرِهَவெறுத்தாலும்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்
Fபத்'உல் லாஹ முக்லிஸீன லஹுத் தீன வ லவ் கரிஹல் காFபிரூன்
முஹம்மது ஜான்
ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிப்பட்டு, கலப்பற்ற மனதுடையவர்களாக அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருங்கள்.
IFT
எனவே (அல்லாஹ்வின் பக்கம் திரும்புகின்றவர்களே!) உங்கள் தீனை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிய வண்ணம் அவனையே அழையுங்கள்; உங்களுடைய இந்தச் செயல் இறைநிராகரிப்பாளர்களுக்கு எவ்வளவு வெறுப்பூட்டக்கூடியதாய் இருந்தாலும் சரியே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நிராகரித்துக் கொண்டிருப்போர் வெறுத்தபோதிலும், நீங்கள் அல்லாஹ்வை_ முற்றிலும் வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றவர்களாக்கி வைக்கிறவர்களாக (பிரார்த்தித்து) அழையுங்கள்.
Saheeh International
So invoke Allah, [being] sincere to Him in religion, although the disbelievers dislike it.
رَفِیْعُ الدَّرَجٰتِ ذُو الْعَرْشِ ۚ یُلْقِی الرُّوْحَ مِنْ اَمْرِهٖ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ لِیُنْذِرَ یَوْمَ التَّلَاقِ ۟ۙ
رَفِیْعُஉயர்த்துபவன்الدَّرَجٰتِபதவிகளைذُوஉடையவன்الْعَرْشِ ۚஅர்ஷின்یُلْقِیஅவன் அருளுகிறான்الرُّوْحَவஹீயைمِنْகொண்டுاَمْرِهٖதனது கட்டளையைعَلٰیமீதுمَنْஎவர்یَّشَآءُநாடுகிறானோمِنْஇருந்துعِبَادِهٖதனது அடியார்களில்لِیُنْذِرَஎச்சரிப்பதற்காகیَوْمَநாளைப் பற்றிالتَّلَاقِۙசந்திப்பு
ரFபீ'உத் தரஜாதி துல் 'அர்ஷி யுல்கிர் ரூஹ மின் அம்ரிஹீ 'அலா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ லியுன்திர யவ்மத் தலாக்
முஹம்மது ஜான்
(அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது தன் கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் மிக்க உயர்ந்த பதவிகள் உடையவன், அர்ஷுக்கு சொந்தக்காரன். (தன்னைச்) சந்திக்கும் நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களின் மீது தன் கட்டளையை வஹ்யி மூலம் அவன் இறக்கிவைக்கிறான்.
IFT
அவன் உயர்ந்த அந்தஸ்துகளை உடையவன்; அர்ஷின் உரிமையாளன்; அவன் தன்னுடைய அடியார்களில் தான் நாடுகின்றவர் மீது தனது கட்டளையால் ரூஹை இறக்கி வைக்கிறான்; சந்திக்கவிருக்கும் நாளைக் குறித்து அவர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன்) பதவிகளை உயர்த்துபவன், அர்ஷூடையவன், (தன்னைச்) சந்திக்கும் நாளை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில், தான் நாடியவர்களின் மீது தன் கட்டளையின்படி வஹீயை இறக்கிவைக்கின்றான்.
Saheeh International
[He is] the Exalted above [all] degrees, Owner of the Throne; He places the inspiration of His command [i.e., revelation] upon whom He wills of His servants to warn of the Day of Meeting.
یَوْمَ هُمْ بٰرِزُوْنَ ۚ۬ لَا یَخْفٰی عَلَی اللّٰهِ مِنْهُمْ شَیْءٌ ؕ لِمَنِ الْمُلْكُ الْیَوْمَ ؕ لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ ۟
یَوْمَஅந்நாளில்هُمْஅவர்கள்بٰرِزُوْنَ ۚ۬வெளிப்படுவார்கள்لَاஇல்லைیَخْفٰیமறைந்திருக்கும்عَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்مِنْهُمْஅவர்களிடமிருந்துشَیْءٌ ؕயாதொன்றும்لِمَنِயாருக்குالْمُلْكُஆட்சிالْیَوْمَ ؕஇன்றைய தினம்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالْوَاحِدِஏகனானالْقَهَّارِஅடக்கியாள்பவனான
யவ்ம ஹும் BபாரிZஜூன லா யக்Fபா 'அலல் லாஹி மின்ஹும் ஷய்; லிமனில் முல்குல் யவ்ம லில்லாஹில் வாஹிதில் கஹ்ஹார்
முஹம்மது ஜான்
அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது; அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(மரணித்த) அவர்கள் அந்நாளில் (சமாதிகளிலிருந்து) வெளிப்பட்டு(த் தங்கள் இறைவனின்) முன் வந்து நிற்பார்கள். அவர்கள் செய்த ஒரு விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்து விடாது. (அவர்களை நோக்கி,) இன்றைய தினம், ‘‘எவருடைய ஆட்சி? (என்று கேட்டு, அனைவரையும்) அடக்கி ஆளும் ஒருவனாகிய அந்த அல்லாஹ்வுக்குரியதே!'' (என்று பதில் கூறப்படும்).
IFT
அந்நாளிலோ மக்கள் எந்தத் திரையுமின்றி வெளிப்பட்டுவிடுவார்கள். அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வை விட்டு மறைந்திருக்காது. (அன்று அழைத்துக் கேட்கப்படும்:) “இன்று ஆட்சியதிகாரம் யாருக்குரியது?” (அனைத்துலகமும் கூறும்:) “எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகன் ஆகிய அல்லாஹ்விற்குரியது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மரணித்த) அவர்கள் (மண்ணறைகளிலிருந்து) வெளிப்பட்டவர்களாக வரும் நாளில், அவர்களிலிருந்து எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது, “ஆட்சி, இன்று யாருக்குரியது?” (என்று கேட்டுவிட்டு, அதற்கு விடையாக, “யாவரையும்) அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது” (என்று அவன் கூறுவான்).
Saheeh International
The Day they come forth nothing concerning them will be concealed from Allah. To whom belongs [all] sovereignty this Day? To Allah, the One, the Prevailing.
اَلْیَوْمَ تُجْزٰی كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ؕ لَا ظُلْمَ الْیَوْمَ ؕ اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
اَلْیَوْمَஇன்றைய தினம்تُجْزٰیகூலி கொடுக்கப்படும்كُلُّஒவ்வொருنَفْسٍۭஆத்மாவுக்கும்بِمَاஅதுكَسَبَتْ ؕசம்பாதித்ததைக் கொண்டுلَاஇல்லைظُلْمَஅநீதிالْیَوْمَ ؕஇன்றைய தினம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَرِیْعُவிரைவாகالْحِسَابِகணக்குத் தீர்ப்பவன்
அல்-யவ்ம துஜ்Zஜா குல்லு னFப்ஸிம் Bபிமா கஸBபத்; லா ளுல்மல் யவ்ம்; இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
முஹம்மது ஜான்
அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
இன்றைய தினம் ஒவ்வொரு ஆத்மாவுக்கும், அவை செய்த செயல்களுக்குத் தக்க கூலி கொடுக்கப்படும். இன்றைய தினம் ஒரு அநியாயமும் நடைபெறாது. அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்(டுத் தீர்ப்பளிப்)பதில் மிகத் தீவிரமானவன்.
IFT
(அப்போது கூறப்படும்:) “இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதைச் சம்பாதித்தானோ, அதற்குரிய கூலி வழங்கப்படும். இன்று எவர் மீதும் எந்தவித அநீதியும் ஏற்படாது. திண்ணமாக, அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிக விரைவானவன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்றையத்தினம் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்தது கொண்டு கூலி கொடுக்கப்படும். இன்றையத் தினம் (எவ்வித) அநியாயமும் இல்லை, நிச்சயமாக அல்லாஹ் (கேள்வி) கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்” (என்றும் கூறப்படும்).
Saheeh International
This Day every soul will be recompensed for what it earned. No injustice today! Indeed, Allah is swift in account.
وَاَنْذِرْهُمْ یَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَی الْحَنَاجِرِ كٰظِمِیْنَ ؕ۬ مَا لِلظّٰلِمِیْنَ مِنْ حَمِیْمٍ وَّلَا شَفِیْعٍ یُّطَاعُ ۟ؕ
وَ اَنْذِرْهُمْஇன்னும் அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராகیَوْمَநாளைப் பற்றிالْاٰزِفَةِநெருங்கி வரும்اِذِஅப்போதுالْقُلُوْبُஇதயங்கள்لَدَیஅருகில்الْحَنَاجِرِதொண்டைக் குழிகளுக்குكٰظِمِیْنَ ؕ۬துக்கத்தை அடக்கியவர்களாகمَاஇல்லைلِلظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குمِنْஎந்த ஒருحَمِیْمٍஉற்ற நண்பனும்وَّ لَاஇன்னும் இல்லைشَفِیْعٍபரிந்துரையாளனும்یُّطَاعُؕஏற்கப்படும்
வ அன்திர்ஹும் யவ்மல் ஆZஜிFபதி இதில் குலூBபு லதல் ஹனாஜிரி காளிமீன்; மா லிள்ளாலிமீன மின் ஹமீமி(ன்)வ் வலா ஷFபீ'இ(ன்)ய்-யுதா'
முஹம்மது ஜான்
(நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக; இருதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில், அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ, அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத்தால் அவர்களின் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும். அநியாயம் செய்பவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்கமாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்கமாட்டார்.
IFT
(நபியே!) அண்மித்துவிட்டிருக்கும் அந்த நாளினைக் குறித்து இவர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வீராக! அன்றோ இதயங்கள் தொண்டையை அடைத்துக் கொள்ளும். மேலும், மக்கள் துக்கத்தை மென்று விழுங்கிக் கொண்டிருப்பார்கள். அப்போது கொடுமைக்காரர்களுக்கு இரக்கம் காட்டுகிற எந்த நண்பனும் கிடைக்கமாட்டான். ஏற்றுக்கொள்ளத் தக்க எந்தப் பரிந்துரையாளனும் கிடைக்க மாட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) சமீபித்து வரும் (மறுமை) நாளைப் பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அழுதவர்களாக, இதயங்கள் தொண்டைக்குழிகளை அடைந்துவிடும் சமயத்தில் (_அந்நாளில்) அநியாயக்காரர்களுக்கு (இரக்கப்படும்) நண்பனோ, (அல்லாஹ்விடம்) அங்கீகரிக்கப்படும் பரிந்துரை செய்பவனோ இருக்கமாட்டான்.
Saheeh International
And warn them, [O Muhammad], of the Approaching Day, when hearts are at the throats, filled [with distress]. For the wrongdoers there will be no devoted friend and no intercessor [who is] obeyed.
یَعْلَمُ خَآىِٕنَةَ الْاَعْیُنِ وَمَا تُخْفِی الصُّدُوْرُ ۟
یَعْلَمُஅவன் அறிகிறான்خَآىِٕنَةَகள்ளத்தனத்தைالْاَعْیُنِகண்களின்وَ مَاமேலும் எதைتُخْفِیமறைக்கின்றனவோالصُّدُوْرُநெஞ்சங்கள்
யஃலமு கா'இனதல் அஃயுனி வமா துக்Fபிஸ் ஸுதூர்
முஹம்மது ஜான்
கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்கள் மறைப்பவற்றையும் அல்லாஹ் நன்கறிவான்.
IFT
கண்களின் கள்ளத்தனங்களையும், நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அல்லாஹ் அறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களின்) கண்களின் மோசடியையும், நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அவன் நன்கறிவான்.
Saheeh International
He knows that which deceives the eyes and what the breasts conceal.
وَاللّٰهُ یَقْضِیْ بِالْحَقِّ ؕ وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَقْضُوْنَ بِشَیْءٍ ؕ اِنَّ اللّٰهَ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟۠
وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَقْضِیْதீர்ப்பளிக்கிறான்بِالْحَقِّ ؕசத்தியத்தைக் கொண்டுوَ الَّذِیْنَஇன்னும் எவர்களைیَدْعُوْنَஅவர்கள் அழைக்கிறார்களோمِنْஅன்றிدُوْنِهٖஅவனையல்லாதவற்றைلَاஇல்லைیَقْضُوْنَஅவர்கள் தீர்ப்பளிப்பார்கள்بِشَیْءٍ ؕஎதனையும் கொண்டுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவனேالسَّمِیْعُசெவியேற்பவன்الْبَصِیْرُ۠பார்ப்பவன்
வல்லாஹு யக்ளீ Bபில்ஹக்க், வல்லதீன யத்'ஊன மின் தூனிஹீ லா யக்ளூன Bபிஷய்'; இன்னல் லாஹ ஹுவஸ் ஸமீ'உல் Bபஸீர்
முஹம்மது ஜான்
மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், முற்றிலும் நீதமாகவே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். இவர்கள் (இறைவனென) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவையோ (அதற்கு மாறாக) எத்தகைய தீர்ப்பும் கூறமுடியாது. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
IFT
மேலும், அல்லாஹ் பாரபட்சமின்றி துல்லியமான தீர்ப்பு வழங்குவான். ஆனால், அல்லாஹ்வை விடுத்து யாரை இவர்கள் (இணைவைப்பாளர்கள்) அழைக்கிறார்களோ அவர்கள் எந்த விஷயத்திலும் தீர்ப்பு வழங்கக்கூடியவர்களல்லர். ஐயமின்றி, அல்லாஹ்தான் அனைத்தையும் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டு (நீதமாகவே) தீர்ப்பளிப்பான், அவனையன்றி அவர்கள் அழைக்கிறார்களே அத்தகையோர் _ (இவர்களுக்காக) எந்த ஒன்றையும் _ அவர்கள் தீர்ப்புச் செய்யமாட்டார்கள், நிச்சயமாக அல்லாஹ், அவனே (யாவையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
Saheeh International
And Allah judges with truth, while those they invoke besides Him judge not with anything. Indeed, Allah - He is the Hearing, the Seeing.
اَوَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْ ؕ كَانُوْا هُمْ اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاٰثَارًا فِی الْاَرْضِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ وَمَا كَانَ لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ۟
اَوَ لَمْமேலும் அவர்கள் ...வில்லையா?یَسِیْرُوْاபயணம் செய்யفِیஇல்الْاَرْضِபூமிفَیَنْظُرُوْاபிறகு அவர்கள் பார்க்கكَیْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالَّذِیْنَஎவர்கள்كَانُوْاஇருந்தார்களோمِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்னால்كَانُوْاஅவர்கள் இருந்தார்கள்هُمْஅவர்கள்اَشَدَّமிக வலிமையானவர்களாகمِنْهُمْஅவர்களை விடقُوَّةًவலிமையால்وَّ اٰثَارًاமற்றும் சுவடுகளால்فِیஇல்الْاَرْضِபூமிفَاَخَذَهُمُஎனவே அவர்களைப் பிடித்தான்اللّٰهُஅல்லாஹ்بِذُنُوْبِهِمْ ؕஅவர்களின் பாவங்களினால்وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்ததுلَهُمْஅவர்களுக்குمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்مِنْஎந்தوَّاقٍபாதுகாப்பவனும்
அவலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன கானூ மின் கBப்லிஹிம்; கானூ ஹும் அஷத்த மின்ஹும் குவ்வத(ன்)வ் வ ஆதாரன் Fபில் அர்ளி Fப அகதஹுமுல் லாஹு BபிதுனூBபிஹிம் வமா கான லஹும் மினல் லாஹி மி(ன்)வ் வாக்
முஹம்மது ஜான்
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? (திரிந்திருந்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். (முன்னிருந்த) அவர்களோ, பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் இவர்களைவிட மிகைத்தவர்களாகவே இருந்தனர். (எனினும்,) அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான். அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள ஒருவரும் இருக்கவில்லை.
IFT
இவர்கள் என்றாவது பூமியில் சுற்றித் திரிந்து, தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்ததில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக வலிமையுடையவர்களாய் இருந்தார்கள். மேலும், இவர்களைவிட அதிகமாகப் பூமியில் பெரும் பெரும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைப் பிடித்துக் கொண்டான். மேலும், அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுவோர் எவரும் இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (முன்னிருந்த) அவர்களோ, பலத்தாலும், பூமியில் விட்டுச்சென்ற (பூர்வ) அடையாளங்களாலும் இவர்களை விட மிகக் கடினமானவர்களாகவே இருந்தனர். அப்போது, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான், அல்லாஹ்வி(ன் பிடியி)லிருந்து அவர்களைக் காப்பவர் எவரும் இருக்கவில்லை.
Saheeh International
Have they not traveled through the land and observed how was the end of those who were before them? They were greater than them in strength and in impression on the land, but Allah seized them for their sins. And they had not from Allah any protector.
ذٰلِكَ بِاَنَّهُمْ كَانَتْ تَّاْتِیْهِمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَكَفَرُوْا فَاَخَذَهُمُ اللّٰهُ ؕ اِنَّهٗ قَوِیٌّ شَدِیْدُ الْعِقَابِ ۟
ذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்كَانَتْஇருந்தார்கள்تَّاْتِیْهِمْஅவர்களிடம் வந்தார்கள்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَكَفَرُوْاஆகவே அவர்கள் நிராகரித்தார்கள்فَاَخَذَهُمُஎனவே அவர்களைப் பிடித்தான்اللّٰهُ ؕஅல்லாஹ்اِنَّهٗநிச்சயமாக அவன்قَوِیٌّவல்லமையுடையவன்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِதண்டிப்பதில்
தாலிக Bபி அன்னஹும் கானத் தா'தீஹிம் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி FபகFபரூ Fப அகதஹுமுல் லாஹ்; இன்னஹூ கவிய்யுன் ஷதீதுல் 'இகாBப்
முஹம்மது ஜான்
அது (ஏனெனில்): நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்கள்; ஆனால், அவர்கள் நிராகரித்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்தான் - நிச்சயமாக (அல்லாஹ்) வலிமை மிக்கவன்; தண்டிப்பதில் கடுமையானவன்.
அப்துல் ஹமீது பாகவி
இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்களிடம், தெளிவான அத்தாட்சிகளுடன் நம் தூதர்கள் வந்து கொண்டிருந்தனர். (அவர்களை) இவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அவன் மிக பலமுடையவன், (பாவிகளை) வேதனை செய்வதில் மிக கடினமானவன்.
IFT
அவர்களுக்கு நேர்ந்த இந்த கதிக்குக் காரணம், அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தும், அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதுதான். இறுதியில், அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். திண்ணமாக, அவன் வலிமை மிக்கவனாகவும் கடுமையாகத் தண்டிப்பவனாகவும் இருக்கிறான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது (ஏனெனில்) நிச்சயமாக (அத்தாட்சிகளில்) தெளிவானவற்றுடன் அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் வந்து கொண்டிருந்தனர். ஆனால், (அவர்களை) இவர்கள் நிராகரித்துவிட்டனர் என்ற காரணத்தினாலாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்துக்கொண்டான், நிச்சயமாக, அவன் மிக்க பலமுடையவன், (குற்றவாளிகளைத்) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்.
Saheeh International
That was because their messengers were coming to them with clear proofs, but they disbelieved, so Allah seized them. Indeed, He is Powerful and severe in punishment.
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰیமூஸாவைبِاٰیٰتِنَاநம் அத்தாட்சிகளுடன்وَ سُلْطٰنٍமேலும் ஓர் ஆதாரத்துடனும்مُّبِیْنٍۙதெளிவான
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
முஹம்மது ஜான்
மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்-
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம் வசனங்களையும் தெளிவான அத்தாட்சிகளையும் கொடுத்து அனுப்பிவைத்தோம்.
IFT
திண்ணமாக, நாம் மூஸாவை நம் அத்தாட்சிகளுடனும், தெளிவான நியமனச் சான்றுகளுடனும் அனுப்பினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், திட்டமாக நாம், மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டும், தெளிவான சான்றைக் கொண்டும் அனுப்பிவைத்தோம்.
Saheeh International
And We did certainly send Moses with Our signs and a clear authority
اِلٰی فِرْعَوْنَ وَهَامٰنَ وَقَارُوْنَ فَقَالُوْا سٰحِرٌ كَذَّابٌ ۟
اِلٰیநோக்கிفِرْعَوْنَஃபிர்அவ்ன்وَ هَامٰنَமற்றும் ஹாமான்وَ قَارُوْنَமற்றும் காரூன்فَقَالُوْاஎனவே அவர்கள் கூறினார்கள்سٰحِرٌசூனியக்காரன்كَذَّابٌபெரும் பொய்யன்
இலா Fபிர்'அவ்ன வ ஹாமான வ காரூன Fபகாலூ ஸாஹிருன் கத்தாBப்
முஹம்மது ஜான்
ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம்; ஆனால் அவர்களோ: “(இவர்) பொய்யுரைப்பவர், சூனியக்காரர்” என்று கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம் (அவரை அனுப்பி வைத்தோம்). அதற்கவர்கள் (மூஸாவை அவர்) ‘‘பெரும் பொய் சொல்லும் சூனியக்காரர்'' என்று கூறினார்கள்.
IFT
ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். ஆனால் அவர்கள் கூறிவிட்டார்கள், “சூனியக்காரர், பெரும் பொய்யர்” என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஃபிர் அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களின்பால் (அவரை அனுப்பி வைத்தோம்). அப்பொழுது அவர்களோ (அவரைச்) சூனியக்காரர், பெரும் பொய்யர் என்று கூறினார்கள்.
Saheeh International
To Pharaoh, Haman and Qarūn, but they said, "[He is] a magician and a liar."
فَلَمَّا جَآءَهُمْ بِالْحَقِّ مِنْ عِنْدِنَا قَالُوا اقْتُلُوْۤا اَبْنَآءَ الَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ وَاسْتَحْیُوْا نِسَآءَهُمْ ؕ وَمَا كَیْدُ الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟
فَلَمَّاஆகவே எப்போதுجَآءَهُمْஅவர் அவர்களிடம் வந்தாரோبِالْحَقِّசத்தியத்துடன்مِنْஇருந்துعِنْدِنَاநம்மிடம்قَالُواஅவர்கள் கூறினார்கள்اقْتُلُوْۤاகொல்லுங்கள்اَبْنَآءَபுதல்வர்களைالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோمَعَهٗஅவருடன்وَ اسْتَحْیُوْاமேலும் உயிரோடு விடுங்கள்نِسَآءَهُمْ ؕஅவர்களின் பெண்களைوَ مَاமேலும் இல்லைكَیْدُசூழ்ச்சிالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களின்اِلَّاதவிரفِیْஇல்ضَلٰلٍவழிகேடு
Fபலம்ம ஜா'அஹும் Bபில் ஹக்கி மின் 'இன்தினா காலுக் துலூ அBப்னா'அல் லதீன ஆமனூ ம'அஹூ வஸ்தஹ்யூ னிஸா'அஹும்; வமா கய்துல் காFபிரீன இல்லா Fபீ ளலால்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள்: “இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்; மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர், உண்மையான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுசென்ற போதெல்லாம் அதற்கவர்கள், ‘‘(மூஸாவை) நம்பிக்கை கொண்டிருப்பவர்களுடைய ஆண் மக்களை கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ விடுங்கள்'' என்று (தன் மக்களுக்குக்) கூறினார்கள். ஆகவே, இந்நிராகரிப்பவர்களின் சூழ்ச்சி வழிகேட்டிலேயே தவிர (வேறு எதிலும்) செல்லவில்லை.
IFT
பின்னர், அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “எவர்கள் நம்பிக்கை கொண்டு இவர்களுடன் சேர்ந்துவிட்டார்களோ, அவர்கள் அனைவரின் ஆண் மக்களையும் கொன்றுவிடுங்கள்; பெண்மக்களை உயிரோடு விட்டுவிடுங்கள்.” ஆனால், நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி வீணாகவே போயிற்று.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே அவர், நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்தபோது, அவர்கள், (மூஸாவாகிய) “அவருடன் விசுவாசங் கொண்டிருக்கின்றார்களே, அவர்களுடைய ஆண் மக்களைக் கொன்றுவிடுங்கள், இன்னும், அவர்களுடைய பெண் மக்களை உயிருடன் வாழ (விட்டு) விடுங்கள்” என்று கூறினார்கள். மேலும், நிராகரிப்போரின் சூழ்ச்சி வழிகேட்டிலேயே தவிர இல்லை.
Saheeh International
And when he brought them the truth from Us, they said, "Kill the sons of those who have believed with him and keep their women alive." But the plan of the disbelievers is not except in error.
وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِیْۤ اَقْتُلْ مُوْسٰی وَلْیَدْعُ رَبَّهٗ ۚ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّبَدِّلَ دِیْنَكُمْ اَوْ اَنْ یُّظْهِرَ فِی الْاَرْضِ الْفَسَادَ ۟
وَ قَالَமேலும் சொன்னான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்ذَرُوْنِیْۤஎன்னை விடுங்கள்اَقْتُلْநான் கொல்லمُوْسٰیமூஸாவைوَ لْیَدْعُமேலும் அவர் அழைக்கட்டும்رَبَّهٗ ۚதனது இறைவனைاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்اَنْஎன்பதைیُّبَدِّلَஅவர் மாற்றிவிடுவார்دِیْنَكُمْஉங்கள் மார்க்கத்தைاَوْஅல்லதுاَنْஎன்பதைیُّظْهِرَஅவர் பரப்புவார்فِیஇல்الْاَرْضِபூமியில்الْفَسَادَகுழப்பத்தை
வ கால Fபிர்'அவ்னு தரூனீ அக்துல் மூஸா வல்யத்'உ ரBப்Bபஹூ இன்னீ அகாFபு அய் யுBபத்தில தீனகும் அவ் அய் யுள்ஹிர Fபில் அர்ளில் Fபஸாத்
முஹம்மது ஜான்
மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) ‘‘என்னை(த் தடை செய்யாது) விட்டுவிடுங்கள். நான் மூஸாவைக் கொலை செய்து விடுகிறேன். அவர் (தன்னை காத்துக்கொள்ள) தனது இறைவனை அழைக்கட்டும். நிச்சயமாக அவர் உங்கள் மார்க்கத்தையே மாற்றிவிடக்கூடும்; அல்லது பூமியில் விஷமத்தைப் பரப்பி விடக்கூடும் என்று நான் பயப்படுகிறேன்'' என்றும் கூறினான்.
IFT
ஃபிர்அவ்ன் (ஒரு நாள் தன் அவையோரிடம்) கூறினான்: “விடுங்கள் என்னை! நான் இந்த மூஸாவைக் கொன்று விடுகின்றேன். அவர் அழைத்துப் பார்க்கட்டும், தன் அதி பதியை! இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார் அல்லது நாட்டில் அராஜகம் விளைவிப்பார் என்று நான் அஞ்சுகிறேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஃபிர் அவ்ன் (தன் ஜனங்களிடம்) “என்னை விட்டுவிடுங்கள், மூஸாவை நான் கொலை செய்துவிடுவேன், மேலும், அவர் (தன்னைக்காத்துக்கொள்ள) தன் இரட்சகனை அழைக்கட்டும், அவர் உங்களுடைய மார்க்கத்தை மாற்றிவிடுவார், அல்லது, பூமியில் குழப்பத்தை வெளிப்படுத்துவார் என்று நிச்சயமாக, நான் பயப்படுகிறேன்” என்றும் கூறினான்.
Saheeh International
And Pharaoh said, "Let me kill Moses and let him call upon his Lord. Indeed, I fear that he will change your religion or that he will cause corruption in the land."
وَقَالَ مُوْسٰۤی اِنِّیْ عُذْتُ بِرَبِّیْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا یُؤْمِنُ بِیَوْمِ الْحِسَابِ ۟۠
وَ قَالَமேலும் கூறினார்مُوْسٰۤیமூஸாاِنِّیْநிச்சயமாக நான்عُذْتُபாதுகாப்புத் தேடுகிறேன்بِرَبِّیْஎன் இறைவனிடம்وَ رَبِّكُمْமேலும் உங்கள் இறைவனிடமும்مِّنْவிட்டும்كُلِّஒவ்வொருمُتَكَبِّرٍபெருமையடிப்பவனைلَّاஇல்லைیُؤْمِنُநம்பிக்கை கொள்கிறானோبِیَوْمِநாளில்الْحِسَابِ۠கேள்வி கணக்கு
வ கால மூஸா இன்னீ 'உத்து Bபி ரBப்Bபீ வ ரBப்Bபிகும் மின் குல்லி முதகBப்Bபிரில் லாயு'மினு Bபி யவ்மில் ஹிஸாBப்
முஹம்மது ஜான்
மூஸா கூறினார்: “கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.”  
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு மூஸா, (அவனை நோக்கி) ‘‘கேள்வி கணக்கு(க் கேட்கப்படும்) நாளை நம்பாது, கர்வம்கொண்ட (உங்கள்) அனைவருடைய தீங்கை விட்டும், என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அவன் என்னை பாதுகாத்துக் கொள்ளுமாறு கோருகிறேன்'' என்று கூறினார்.
IFT
மூஸா கூறினார்: “கணக்கு வாங்கப்படும் நாளின் மீது நம்பிக்கை கொள்ளாத அனைத்து ஆணவக்காரர்களை விட்டும் நான் என்னுடையவும், உங்களுடையவும் அதிபதியிடம் பாதுகாப்பு தேடியிருக்கிறேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கு மூஸா (அவனிடம், “கேள்வி) கணக்கு(க் கேட்கப்படும்) நாளை நம்பிக்கை கொள்ளாத கர்வங்கொண்ட (தீயவர்களாகிய உங்கள்) ஒவ்வொருவரையும் விட்டு, என் இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாகிய அவனிடமே நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்” என்று கூறினார்.
Saheeh International
But Moses said, "Indeed, I have sought refuge in my Lord and your Lord from every arrogant one who does not believe in the Day of Account."
وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ ۖۗ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَكْتُمُ اِیْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ یَّقُوْلَ رَبِّیَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَیِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ؕ وَاِنْ یَّكُ كَاذِبًا فَعَلَیْهِ كَذِبُهٗ ۚ وَاِنْ یَّكُ صَادِقًا یُّصِبْكُمْ بَعْضُ الَّذِیْ یَعِدُكُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِیْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ ۟
وَ قَالَமேலும் கூறினார்رَجُلٌஒரு மனிதர்مُّؤْمِنٌ ۖۗஇறைநம்பிக்கையாளர்مِّنْஇருந்துاٰلِகுடும்பத்தாரில்فِرْعَوْنَஃபிர்அவ்னின்یَكْتُمُமறைத்துக் கொண்டிருந்தاِیْمَانَهٗۤதனது நம்பிக்கையைاَتَقْتُلُوْنَநீங்கள் கொல்கிறீர்களா?رَجُلًاஒரு மனிதரைاَنْஎன்பதற்காகیَّقُوْلَஅவர் கூறுகிறார்رَبِّیَஎனது இறைவன்اللّٰهُஅல்லாஹ்وَ قَدْமேலும் திண்ணமாகجَآءَكُمْஅவர் உங்களிடம் வந்துள்ளார்بِالْبَیِّنٰتِதெளிவான சான்றுகளுடன்مِنْஇருந்துرَّبِّكُمْ ؕஉங்கள் இறைவனிடம்وَ اِنْமேலும் ஒருவேளைیَّكُஅவர் இருந்தால்كَاذِبًاபொய்யராகفَعَلَیْهِஅவர் மீதேكَذِبُهٗ ۚஅவரது பொய்وَ اِنْமேலும் ஒருவேளைیَّكُஅவர் இருந்தால்صَادِقًاஉண்மையாளராகیُّصِبْكُمْஉங்களை வந்தடையும்بَعْضُசிலالَّذِیْஎதைیَعِدُكُمْ ؕஉங்களுக்கு வாக்களிக்கிறாரோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیْநேர்வழி காட்டمَنْஎவரோهُوَஅவர்مُسْرِفٌவரம்பு மீறுபவர்كَذَّابٌபெரும் பொய்யர்
வ கால ரஜுலும் மு'மினும்மின் ஆலி Fபிர்'அவ்ன யக்துமு ஈமானஹூ அதக்துலூன ரஜுலன் அய் யகூல ரBப்Bபி யல் லாஹு வ கத் ஜா'அகும் Bபில் Bபய்யினாதி மிர் ரBப்Bபிகும் வ இ(ன்)ய் யகு காதிBபன் Fப'அலய்ஹி கதிBபுஹ் வ இ(ன்)ய் யகு ஸாதிக(ன்)ய் யஸிBப்கும் Bபஃளுல் லதீ ய'இதுகும் இன்னல் லாஹ லா யஹ்தீ மன் ஹுவ முஸ்ரிFபுன் கத்தாBப்
முஹம்மது ஜான்
ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.”
அப்துல் ஹமீது பாகவி
ஃபிர்அவ்னுடைய கூட்டத்திலுள்ள ஒரு மனிதர் நம்பிக்கைகொண்டு இருந்தார். அவர் தன் நம்பிக்கையை மறைத்துக்கொண்டுமிருந்தார். அவர் (அச்சமயம் அவர்களை நோக்கி,) ‘‘அல்லாஹ்தான் என் இறைவன் என்று ஒரு மனிதர் கூறியதற்காக அவரை நீங்கள் கொலை செய்துவிடலாமா? அவரோ, உங்கள் இறைவனிடமிருந்து பல தெளிவான அத்தாட்சிகளை மெய்யாகவே உங்களிடம் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய் சொல்பவராயிருந்தால், அவர் சொல்லும் பொய்யின் கேடு அவர் மீதே சாரும். (அதனால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை.) அவர் சொல்வது உண்மையாக இருந்துவிட்டாலோ, அவர் பயமுறுத்துகிற வேதனைகளில் பல உங்களை வந்தடைந்து விடுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறி பொய் சொல்பவர்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்'' என்றார்.
IFT
(இந்தச் சந்தர்ப்பத்தில்) ஃபிர்அவ்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த தம் நம்பிக்கையை மறைத்து வைத்திருந்த இறைநம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்: “ஒரு மனிதர், அல்லாஹ்தான் என் இறைவன் என்று கூறுகிறார் என்பதற்காகவா அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராயிருந்தால், அவருடைய பொய் அவருக்கே கேடாக அமையும். ஆனால், அவர் உண்மையாளராய் இருந்தால், எந்த பயங்கரமான விளைவுகளைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ, அவற்றில் சில அவசியம் உங்களைப் பீடிக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “ஃபிர் அவ்னுடைய குடும்பத்தினரில் தன் ஈமானை மறைத்து வைத்திருந்த விசுவாசியான ஒரு மனிதர், (அச்சமயம் அவர்களிடம்,) ஒரு மனிதரை_அவர் அல்லாஹ்தான் என்னுடைய இரட்சகன் என்று கூறியதற்காக, நீங்கள் கொலை செய்துவிடுவீர்களா? அவரோ உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளைத் திட்டமாக உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றார், அவர் பொய்யராக இருந்தால், அவருடைய பொய் அவரின் மீதே (கேடாக) ஆகும், (ஆனால், வேதனை வருமென்பதில்) அவர் உண்மையாளராகவும் இருந்து விட்டால், அவர் உங்களுக்கு வாக்களிப்பவற்றில் சில உங்களை வந்தடைந்துவிடும். யார் வரம்பு மீறுகிறவரோ, பெரும் பொய்யரோ அவரை நிச்சயமாக அல்லாஹ், நேர் வழியில் செலுத்தமாட்டான்” என்று கூறினார்.
Saheeh International
And a believing man from the family of Pharaoh who concealed his faith said, "Do you kill a man [merely] because he says, 'My Lord is Allah' while he has brought you clear proofs from your Lord? And if he should be lying, then upon him is [the consequence of] his lie; but if he should be truthful, there will strike you some of what he promises you. Indeed, Allah does not guide one who is a transgressor and a liar.
یٰقَوْمِ لَكُمُ الْمُلْكُ الْیَوْمَ ظٰهِرِیْنَ فِی الْاَرْضِ ؗ فَمَنْ یَّنْصُرُنَا مِنْ بَاْسِ اللّٰهِ اِنْ جَآءَنَا ؕ قَالَ فِرْعَوْنُ مَاۤ اُرِیْكُمْ اِلَّا مَاۤ اَرٰی وَمَاۤ اَهْدِیْكُمْ اِلَّا سَبِیْلَ الرَّشَادِ ۟
یٰقَوْمِஎன் சமூகத்தாரேلَكُمُஉங்களுக்குالْمُلْكُஆட்சிالْیَوْمَஇன்றுظٰهِرِیْنَமிகைத்தவர்களாகفِیஇல்الْاَرْضِ ؗபூமிفَمَنْஎனவே யார்یَّنْصُرُنَاநமக்கு உதவி செய்வார்مِنْۢஇருந்துبَاْسِதண்டனைاللّٰهِஅல்லாஹ்வின்اِنْஒருவேளைجَآءَنَا ؕஅது நமக்கு வந்தால்قَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்مَاۤஇல்லைاُرِیْكُمْநான் உங்களுக்குக் காட்டுகிறேன்اِلَّاதவிரمَاۤஎதைاَرٰیநான் காண்கிறேனோوَ مَاۤமேலும் இல்லைاَهْدِیْكُمْநான் உங்களுக்கு வழிகாட்டுகிறேன்اِلَّاதவிரسَبِیْلَவழியைالرَّشَادِநேர்மையான
யா கவ்மி லகுமுல் முல்குல் யவ்ம ளாஹிரீன Fபில் அர்ளி Fபமய் யன்ஸுருனா மிம் Bபாஸில் லாஹி இன் ஜா'அனா; கால Fபிர்'அவ்னு மா உரீகும் இல்லா மா அரா வ மா அஹ்தீகும் இல்லா ஸBபீலர் ரஷாத்
முஹம்மது ஜான்
“என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது; நீங்கள் தாம் (எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்; ஆயினும் அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்து விட்டால், நமக்கு உதவி செய்பவர் யார்?” என்றும் கூறினார்;) அதற்கு: “நான் (உண்மை எனக்) காண்பதையே உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு) எதையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை” என ஃபிர்அவ்ன் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் மக்களே! இன்றைய தினம் அதிகாரம் உங்கள் கையில்தான் இருக்கிறது. இத்தேசத்தில் (நீங்களே) ஆதிக்கம் வகிக்கிறீர்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய வேதனை நமக்கு வந்து விட்டால், (அதைத் தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?'' (என்றும் கூறினார்). அதற்கு, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) ‘‘நான் (சரி என்று) கண்டவற்றை தவிர (வேறொன்றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை. நேரான வழியைத் தவிர மற்றெதனையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை'' என்று கூறினான்.
IFT
என் சமுதாய மக்களே! இன்று உங்களுக்கு ஆட்சியதிகாரம் இருக்கிறது; பூமியில் நீங்கள் மேலோங்கியவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால், இறைவனுடைய தண்டனை நம்மீது வந்து விட்டால் நமக்கு உதவக்கூடியவர் யார் இருக்கிறார்?” ஃபிர்அவ்ன் கூறினான்: “எனக்குப் பொருத்தமாகத் தென்படுகின்ற கருத்தைத்தான் நான் உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். மேலும், நேரான வழியைத்தான் நான் உங்களுக்குக் காண்பிக்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய சமூகத்தாரே! இந்த பூமியில் (நீங்களே) மிகைத்தவர்களாக இருக்க இன்றையத்தினம் ஆட்சி உங்களிடம்தான் இருக்கின்றது. ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து _ அது நமக்கு வந்துவிட்டால், (அதனைத் தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?” (என்றும் கூறினார், அதற்கு) ஃபிர் அவ்ன் (தன் சமூகத்தாரிடம்,) “நான் (சரி என்று) கண்டதைத் தவிர (வேறொன்றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை, நேரான வழியையே தவிர (மற்றெதனையும்) உங்களுக்கு நான் காட்டவில்லை” என்று கூறினான்.
Saheeh International
O my people, sovereignty is yours today, [your being] dominant in the land. But who would protect us from the punishment of Allah if it came to us?" Pharaoh said, "I do not show you except what I see, and I do not guide you except to the way of right conduct."
وَقَالَ الَّذِیْۤ اٰمَنَ یٰقَوْمِ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ مِّثْلَ یَوْمِ الْاَحْزَابِ ۟ۙ
وَ قَالَமேலும் கூறினார்الَّذِیْۤஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோیٰقَوْمِஎன் சமூகத்தாரேاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்عَلَیْكُمْஉங்கள் மீதுمِّثْلَபோன்றதைیَوْمِநாளைப்الْاَحْزَابِۙகூட்டத்தினரின்
வ காலல் லதீ ஆமன யா கவ்மி இன்னீ அகாFபு 'அலய்கும் மித்ல யவ்மில் அஹ்ZஜாBப்
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொண்டிருந்த அவர் இன்னும் கூறினார்: “என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் நிச்சயமாக பயப்படுகிறேன்.”
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு, நம்பிக்கைகொண்(டு தன் நம்பிக்கையை மறைத்துக் கொண்)டிருந்த அவர் (அவர்களை நோக்கி,) ‘‘என் மக்களே! (அழிந்துபோன) மற்ற கூட்டத்தினர்களின் (கெட்ட) நாள்களைப் போன்றவை, உங்கள் மீது வந்துவிடுமென்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.
IFT
இறைநம்பிக்கை கொண்டிருந்த அந்த மனிதர் கூறினார்: “என்னுடைய சமுதாய மக்களே! இதற்கு முன் பல கூட்டத்தார்களின் மீது வந்த அந்த நாள் உங்களின் மீதும் வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், விசுவாசங்கொண்டிருந்தாரே அவர்_ “என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் (கெட்ட) நாள் போன்றது உங்கள் மீதும் (வந்துவிடுமென்று) நிச்சயமாக நான் பயப்படுகின்றேன்” என்று கூறினார்.
Saheeh International
And he who believed said, "O my people, indeed I fear for you [a fate] like the day of the companies -
مِثْلَ دَاْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ؕ وَمَا اللّٰهُ یُرِیْدُ ظُلْمًا لِّلْعِبَادِ ۟
مِثْلَபோன்றدَاْبِநிலையைقَوْمِசமூகத்தின்نُوْحٍநூஹ்وَّ عَادٍஇன்னும் ஆதுوَّ ثَمُوْدَஇன்னும் ஸமூதுوَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்مِنْۢஇருந்துبَعْدِهِمْ ؕஅவர்களுக்குப் பின்وَ مَاமேலும் இல்லைاللّٰهُஅல்லாஹ்یُرِیْدُநாடுகிறான்ظُلْمًاஅநீதியைلِّلْعِبَادِஅடியார்களுக்கு
மித்ல தாBபி கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத வல்லதீன மிம் Bபஃதிஹிம்; வ மல் லாஹு யுரீது ளுல்மல் லில்'இBபாத்
முஹம்மது ஜான்
“நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் “ஆது”, “ஸமூது”டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால் அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் (என்றும்).
அப்துல் ஹமீது பாகவி
(இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய மக்களுக்கும், ஆதுடைய மக்களுக்கும், ஸமூதுடைய மக்களுக்கும், அதற்குப் பின் வந்த மக்களுக்கும் நிகழ்ந்தது போன்ற (ஆபத்)து (உங்களுக்கும்) நிகழ்ந்து விடுமென்று நான் பயப்படுகிறேன். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயம் செய்ய விரும்பமாட்டான்'' என்றும்,
IFT
நூஹின் சமூகத்தினர், ஆத், ஸமூத் சமூகத்தினர் மற்றும் அவர்களுக்குப் பின்வந்த சமுதாயத்தினர் ஆகியோர் மீது வந்த நாளைப் போன்று! மேலும், உண்மையில் அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு எந்த அநீதியும் இழைக்க வேண்டுமென்று கருதுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய சமூகத்தார், ஆது, ஸமூது, இன்னும் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் நிலைமை போன்ற (ஆபத்)து (உங்களுக்கும் வந்துவிடுமென்று நான் பயப்படுகிறேன்), மேலும், அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயத்தை நாடமாட்டான் (என்று கூறினார்).
Saheeh International
Like the custom of the people of Noah and of ʿAad and Thamūd and those after them. And Allah wants no injustice for [His] servants.
وَیٰقَوْمِ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ یَوْمَ التَّنَادِ ۟ۙ
وَ یٰقَوْمِமேலும் என் மக்களேاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்عَلَیْكُمْஉங்கள் மீதுیَوْمَநாளினைالتَّنَادِۙஒருவரையொருவர் அழைக்கும்
வ யா கவ்மி இன்னீ அகாFபு 'அலய்கும் யவ்மத் தனாத்
முஹம்மது ஜான்
“என்னுடைய சமூகத்தாரே! உங்கள் மீது அழைக்கப்படும் (தீர்ப்பு) நாளைப் பற்றியும் நான் பயப்படுகிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் மக்களே! உங்கள் மீது (நீங்கள்) அழைக்கப்படும் (மறுமை) நாளைப் பற்றியும் நான் பயப்படுகிறேன்.
IFT
மேலும் என் சமூகத்தாரே! அழுது புலம்பி ஒருவர் மற்றவரை அழைக்கும் நாள் உங்களுக்கு வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “என்னுடைய சமூகத்தாரே! அழைக்கப்படும் (மறுமை) நாளைப்பற்றியும் உங்கள் மீது நிச்சயமாக நான் பயப்படுகிறேன்(என்றும்),
Saheeh International
And O my people, indeed I fear for you the Day of Calling -
یَوْمَ تُوَلُّوْنَ مُدْبِرِیْنَ ۚ مَا لَكُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ ۚ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟
یَوْمَஅந்நாளில்تُوَلُّوْنَநீங்கள் திரும்புவீர்கள்مُدْبِرِیْنَ ۚமுதுகு காட்டி ஓடுபவர்களாகمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்مِنْஎந்தعَاصِمٍ ۚபாதுகாப்பவனும்وَ مَنْமேலும் எவரைیُّضْلِلِவழிகேட்டில் விடுகிறானோاللّٰهُஅல்லாஹ்فَمَاஆகவே இல்லைلَهٗஅவருக்குمِنْஎந்தهَادٍநேர்வழி காட்டுபவரும்
யவ்ம துவல்லூன முத் Bபிரீன மா லகும் மினல் லாஹி மின் 'ஆஸிம்; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஹாத்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றுபவர் எவருமில்லாத நிலையில் நீங்கள் பின் வாங்கும் நாள் (அது); அன்றியும் அல்லாஹ் யாரைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு நேர்வழி காட்டுவோர் எவருமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (வேதனைக்குப் பயந்து) புறங்காட்டி ஓடும் அந்நாளில், அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றக் கூடியவர் ஒருவரும் இருக்க மாட்டார். அல்லாஹ் எவனை வழி கெடுத்து விடுகிறானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.
IFT
அன்று நீங்கள் திரும்பிப் பாராமல் ஓடிக்கொண்டிருப்பீர்கள். ஆனால், அவ்வேளை அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார். உண்மையாதெனில், எவனை அல்லாஹ் வழிகெடுக்கின்றானோ அவனுக்கு வழிகாட்டுபவர் எவரும் இருப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் (தண்டனைக்கு பயந்து) புறங்காட்டியவர்களாக ஓடும் நாளை (பயப்படுகிறேன், அந்நாளில்) அல்லாஹ்விடமிருந்து காப்பற்றக்கூடியவர் உங்களுக்கு எவருமில்லை, அல்லாஹ் எவரைத் தவறான வழியில் விட்டு விடுகின்றானோ, அவரை நேர்வழியில் செலுத்தக்கூடியவனும் இல்லை.
Saheeh International
The Day you will turn your backs fleeing; there is not for you from Allah any protector. And whoever Allah sends astray - there is not for him any guide.
وَلَقَدْ جَآءَكُمْ یُوْسُفُ مِنْ قَبْلُ بِالْبَیِّنٰتِ فَمَا زِلْتُمْ فِیْ شَكٍّ مِّمَّا جَآءَكُمْ بِهٖ ؕ حَتّٰۤی اِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ یَّبْعَثَ اللّٰهُ مِنْ بَعْدِهٖ رَسُوْلًا ؕ كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابُ ۟ۚۖ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகجَآءَكُمْஉங்களிடம் வந்தார்یُوْسُفُயூஸுஃப்مِنْஇதற்குقَبْلُமுன்னர்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَمَاஆனால்زِلْتُمْநீங்கள் இருந்தீர்கள்فِیْஒருشَكٍّசந்தேகத்தில்مِّمَّاஎதைப்பற்றிجَآءَكُمْஅவர் உங்களிடம் வந்தாரோبِهٖ ؕஅதைக் கொண்டுحَتّٰۤیவரைاِذَاபோதுهَلَكَஅவர் மரணித்தقُلْتُمْநீங்கள் கூறினீர்கள்لَنْஒருபோதும் மாட்டான் என்றுیَّبْعَثَஅனுப்பاللّٰهُஅல்லாஹ்مِنْۢஇருந்துبَعْدِهٖஅவருக்குப் பின்رَسُوْلًا ؕஒரு தூதரைكَذٰلِكَஇவ்வாறேیُضِلُّவழிகெடுக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مَنْஎவனோ அவனைهُوَஅவன்مُسْرِفٌவரம்பு மீறுபவனோمُّرْتَابُۚۖசந்தேகப்படுபவனோ
வ லகத் ஜா'அகும் யூஸுFபு மின் கBப்லு Bபில் Bபய்யினாதி Fபமா Zஜில்தும் Fபீ ஷக்கிம் மிம்மா ஜா'அகும் Bபிஹீ ஹத்தா இதா ஹலக குல்தும் லய் யBப் அதல் லாஹு மிம் Bபஃதிஹீ ரஸூலா; கதாலிக யுளில்லுல் லாஹு மன் ஹுவ முஸ்ரிFபும் முர்தாBப்
முஹம்மது ஜான்
“மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார், எனினும் அவர் இறந்து விடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில் (அவர் இறந்தபின்) “அவருக்குப் பின் எந்த ரஸூலையும் (தூதரையும்) அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்பு மீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
இதற்கு முன்னரும், யூஸுஃப் (நபி) மெய்யாகவே தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்தார். அவர் இறந்துவிடும் வரை, அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகித்துக் கொண்டே இருந்தீர்கள். அவர் இறந்த பின்னரோ, (அவரைப் போற்றிப் புகழ்ந்து, இத்தகைய) ஒரு தூதரை அவருக்குப் பின்னர் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் (என்று கூற முற்பட்டீர்கள்). வரம்பு மீறி (உங்களைப் போல) சந்தேகிப்பவர்களை இவ்வாறே அல்லாஹ் வழிகெடுத்து விடுகிறான்.'' என்றும் கூறினார்.
IFT
இதற்கு முன் யூஸுஃப், உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்கள் அவர் கொண்டு வந்த அறிவுரைகள் குறித்து சந்தேகத்தில் விழுந்து கிடந்தீர்கள். பிறகு அவர் மரணமடைந்தபோது நீங்கள் கூறினீர்கள், “அவருக்குப் பின் அல்லாஹ் எந்தத் தூதரையும் ஒருபோதும் அனுப்பமாட்டான்” என்று இவ்வாறு வரம்பு மீறுவோர், ஐயம் கொள்வோர் அனைவரையும் அல்லாஹ் வழிகேட்டில் தள்ளுகிறான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(மூஸாவுக்கு) முன்னர், யூஸுஃபும் திட்டமாக தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டுவந்தார், பின்னர், அவர் எதை உங்களிடம் கொண்டுவந்தாரோ அதை பற்றிய சந்தேகத்திலேயே (தொடர்ந்து) நீங்கள் இருந்தீர்கள், இறுதியாக அவர் இறந்தபோது, அவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” என்று கூறினீர்கள். (உங்களைப் போல) எவர் (செயலில்) வரம்பு மீறி (உள்ளத்தில்) சந்தேகிக்கிறாரோ அவரை, இவ்வாறே அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகிறான் (என்றும் கூறினார்).
Saheeh International
And Joseph had already come to you before with clear proofs, but you remained in doubt of that which he brought to you, until when he died, you said, 'Never will Allah send a messenger after him.' Thus does Allah leave astray he who is a transgressor and skeptic."
لَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ؕ كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ ۟
ِ۟الَّذِیْنَஎவர்கள்یُجَادِلُوْنَதர்க்கம் செய்கிறார்களோفِیْۤபற்றிاٰیٰتِஅத்தாட்சிகள்اللّٰهِஅல்லாஹ்வின்بِغَیْرِஇன்றிسُلْطٰنٍஆதாரம்اَتٰىهُمْ ؕஅவர்களுக்கு வந்தكَبُرَமிகப்பெரியதுمَقْتًاவெறுப்புعِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ عِنْدَமேலும் இடத்தில்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْا ؕநம்பிக்கை கொண்டார்களோكَذٰلِكَஇவ்வாறேیَطْبَعُமுத்திரையிடுகிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருقَلْبِஇதயத்தின்مُتَكَبِّرٍபெருமையடிக்கும்جَبَّارٍஅடக்குமுறையாளனின்
அல்லதீன யுஜாதிலூன Fபீ ஆயாதில் லாஹி Bபிகய்ரி ஸுல்தானின் அதாஹும் கBபுர மக்தன் 'இன்தல் லாஹி வ 'இன்தல் லதீன ஆமனூ; கதாலிக யத்Bபஹுல் லாஹு 'அலா குல்லி கல்Bபி முதகBப்Bபிரின் ஜBப்Bபார்
முஹம்மது ஜான்
“(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும்; இவ்வாறே, பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்” (என்றும் அவர் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறக்கூடிய ஓர் ஆதாரமுமின்றியே, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கிறார்களோ... (அவர்கள் நஷ்டமடைந்து விடுவார்கள்). ஏனென்றால், இது அல்லாஹ்விடத்திலும், நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் பெரும் அருவருப்பானதாகும். இவ்வாறே, பெருமை கொள்ளும் வம்பர்களின் உள்ளங்களிலெல்லாம் முத்திரையிட்டு விடுகிறான்'' (என்றும் அவர் கூறினார்).
IFT
அவர்கள் எத்தகையவர்கள் எனில், அல்லாஹ்வின் வசனங்களைக் குறித்து தர்க்கம் புரிகிறார்கள், எவ்விதச் சான்றும் ஆதாரமும் தங்களிடம் வராமலேயே! இந்த நடத்தை அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டோரிடமும் மிகவும் வெறுப்புக்குரியதாகும். இவ்வாறே ஒவ்வொரு ஆணவக்காரனுடையவும் கொடுங்கோலனுடையவும் உள்ளத்தின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால் (அல்லாஹ்விடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமின்றி அல்லாஹ்வுடைய வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர், அ(வ்வாறு தர்க்கம் செய்வ)து அல்லாஹ்விடத்திலும், விசுவாசங்கொண்டவர்களிடத்திலும் கோபத்தால் பெரிதாகிவிட்டது, இவ்வாறே பெருமைகொண்ட, வம்பு செய்கின்ற ஒவ்வோர் இதயத்தின் மீது(ம்) அல்லாஹ் முத்திரையிட்டுவிடுகிறான்” (என்றும் அவர் கூறினார்).
Saheeh International
Those who dispute concerning the signs of Allah without an authority having come to them - great is hatred [of them] in the sight of Allah and in the sight of those who have believed. Thus does Allah seal over every heart [belonging to] an arrogant tyrant.
وَقَالَ فِرْعَوْنُ یٰهَامٰنُ ابْنِ لِیْ صَرْحًا لَّعَلِّیْۤ اَبْلُغُ الْاَسْبَابَ ۟ۙ
وَ قَالَமேலும் கூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்یٰهَامٰنُஹாமானேابْنِகட்டுவாயாகلِیْஎனக்காகصَرْحًاஒரு கோபுரத்தைلَّعَلِّیْۤநான் அடையும் பொருட்டுاَبْلُغُநான் எட்டுவேன்الْاَسْبَابَۙவழிகளை
வ கால Fபிர்'அவ்னு யா ஹாமானுBப்-னி லீ ஸர்ஹல் ல'அல்லீ அBப்லுகுல் அஸ்BபாBப்
முஹம்மது ஜான்
(இவ்வளவு உபதேசித்த பின்னரும்:) “ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக - நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு!
அப்துல் ஹமீது பாகவி
(அதற்குப் ஃபிர்அவ்ன் தன் மந்திரி ஹாமானை நோக்கி,) ‘‘ஹாமானே! வானங்களின் வாசல்களை நான் அடையக்கூடிய உயர்ந்ததொரு கோபுரத்தை நீ எழுப்பு.
IFT
ஃபிர்அவ்ன் கூறினான்: “ஹாமானே! நீ எனக்கு ஓர் உயர்ந்த கோபுரம் எழுப்பு. ஏனெனில், நான் வழிகளைச் சென்றடைவதற்காக
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) ஃபிர் அவ்ன், “ஹாமானே! (சகலருக்கும் தெரியும்படியான) உயர்ந்த (ஒரு) மாளிகையை எனக்காக கட்டும் (அதன் மூலம் உயரச் செல்லும்) வழிகளை நான் அறியலாம்” என்று கூறினான்.
Saheeh International
And Pharaoh said, "O Haman, construct for me a tower that I might reach the ways -
اَسْبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰۤی اِلٰهِ مُوْسٰی وَاِنِّیْ لَاَظُنُّهٗ كَاذِبًا ؕ وَكَذٰلِكَ زُیِّنَ لِفِرْعَوْنَ سُوْٓءُ عَمَلِهٖ وَصُدَّ عَنِ السَّبِیْلِ ؕ وَمَا كَیْدُ فِرْعَوْنَ اِلَّا فِیْ تَبَابٍ ۟۠
اَسْبَابَவழிகளைالسَّمٰوٰتِவானங்களின்فَاَطَّلِعَநான் பார்ப்பதற்காகاِلٰۤیநோக்கிاِلٰهِஇறைவனைمُوْسٰیமூஸாவின்وَ اِنِّیْமேலும் நிச்சயமாக நான்لَاَظُنُّهٗநிச்சயமாக அவரை கருதுகிறேன்كَاذِبًا ؕபொய்யர் என்றுوَ كَذٰلِكَஅவ்வாறேزُیِّنَஅழகாக்கப்பட்டதுلِفِرْعَوْنَஃபிர்அவ்னுக்குسُوْٓءُதீமைعَمَلِهٖஅவனது செயலின்وَ صُدَّமேலும் தடுக்கப்பட்டான்عَنِஇருந்துالسَّبِیْلِ ؕநேர்வழிوَ مَاமேலும் இல்லைكَیْدُசூழ்ச்சிفِرْعَوْنَஃபிர்அவ்னுடையاِلَّاதவிரفِیْஇல்تَبَابٍ۠அழிவு
அஸ்BபாBபஸ் ஸமாவாதி Fபாத்தலி'அ இலா இலாஹி மூஸா வ இன்னீ ல அளுன்னுஹூ காதிBபா; வ கதாலிக Zஜுய்யின லி-Fபிர்'அவ்ன ஸூ'உ 'அமலிஹீ வ ஸுத்த 'அனிஸ் ஸBபீல்; வமா கய்து Fபிர்'அவ்ன இல்லா Fபீ தBபாBப்
முஹம்மது ஜான்
“(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;” என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன; இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை.
அப்துல் ஹமீது பாகவி
மூஸாவுடைய ஆண்டவனை நான் பார்க்க வேண்டும். அவர் பொய் சொல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்'' என்று கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு, அவனுடைய தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு, நேரான வழியிலிருந்தும் அவன் தடுக்கப்பட்டு விட்டான். ஃபிர்அவ்னுடைய சூழ்ச்சி எல்லாம் (வீண்) அழிவிலே தவிர (வேறொன்றிலும்) இருக்கவில்லை.
IFT
வானத்தின் வழிகளை! மேலும், மூஸாவின் இறைவனை நான் எட்டிப்பார்க்க வேண்டும். நான் இந்த மூஸாவைப் பொய்யராகத்தான் கருதுகின்றேன்!” இவ்வாறு ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. மேலும், அவன் நேரிய வழியை விட்டுத் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சிகள் அனைத்தும் அவனது அழிவுப்பாதையில்தான் செலவாயின.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களை அடையும் வழிகளை (நான் அறியலாம், அவற்றின் மூலம் சென்று) மூஸாவுடைய வணக்கத்திற்குரியவனை நான் பார்க்கவேண்டும், அவர் பொய் சொல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்” (என்றும் ஃபிர் அவ்ன் கூறினான்). இவ்வாறே ஃபிர் அவ்னுக்கு, அவனுடைய செயலின் தீமை அலங்கரித்துக் காட்டப்பட்டு விட்டது, (நேரான) வழியிலிருந்து அவன் தடுக்கபட்டும்விட்டான், ஃபிர் அவ்னுடைய சூழ்ச்சி அழிவிலேயே தவிர இல்லை.
Saheeh International
The ways into the heavens - so that I may look at the deity of Moses; but indeed, I think he is a liar." And thus was made attractive to Pharaoh the evil of his deed, and he was averted from the [right] way. And the plan of Pharaoh was not except in ruin.
وَقَالَ الَّذِیْۤ اٰمَنَ یٰقَوْمِ اتَّبِعُوْنِ اَهْدِكُمْ سَبِیْلَ الرَّشَادِ ۟ۚ
وَ قَالَமேலும் அவர் கூறினார்الَّذِیْۤஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோیٰقَوْمِஎன் சமூகத்தாரேاتَّبِعُوْنِஎன்னைப் பின்பற்றுங்கள்اَهْدِكُمْநான் உங்களுக்கு வழிகாட்டுவேன்سَبِیْلَபாதைக்குالرَّشَادِۚநேர்வழியின்
வ காலல் லதீ ஆமன யா கவ்மித் தBபி'ஊனி அஹ்திகும் ஸBபீலர் ரஷாத்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டிருந்த அம்மனிதர் மேலும் கூறினார்: “என்னுடைய சமூகத்தாரே! என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களுக்கு நேர்மையுடைய பாதையைக் காண்பிக்கிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு, அவர்களில் நம்பிக்கை (கொண்டு தன் நம்பிக்கையை மறைத்துக்) கொண்டிருந்தவர் கூறினார்: ‘‘என் மக்களே! என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேரான வழியைக் காண்பிப்பேன்.
IFT
இறைநம்பிக்கை கொண்டிருந்த அந்த மனிதர் கூறினார்: “என் சமுதாய மக்களே! நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குச் சரியான வழியைத்தான் காட்டுகின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களில் விசுவாசங்கொண்டிருந்தாரே அவர்_ “என்னுடைய சமூகத்தாரே! என்னை நீங்கள் பின்பற்றுங்கள், நான் உங்களுக்கு நேரான வழியைக் காண்பிக்கிறேன்” என்று கூறினார்.
Saheeh International
And he who believed said, "O my people, follow me; I will guide you to the way of right conduct.
یٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَیٰوةُ الدُّنْیَا مَتَاعٌ ؗ وَّاِنَّ الْاٰخِرَةَ هِیَ دَارُ الْقَرَارِ ۟
یٰقَوْمِஎன் சமூகத்தாரேاِنَّمَاநிச்சயமாகهٰذِهِஇந்தالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகمَتَاعٌ ؗஅற்ப இன்பம்وَّ اِنَّமேலும் நிச்சயமாகالْاٰخِرَةَமறுமைهِیَஅதுதான்دَارُதங்குமிடம்الْقَرَارِநிலையான
யா கவ்மி இன்னமா ஹாதிஹில் ஹயாதுத் துன்யா மதா'உ(ன்)வ் வ இன்னல் ஆகிரத ஹிய தாருல் கரார்
முஹம்மது ஜான்
“என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கை யெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு.
அப்துல் ஹமீது பாகவி
என் மக்களே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் சொற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமை தான் நிலையான (இன்பம் தரும்) வீடு.
IFT
என் சமூகத்தினரே! இந்த உலக வாழ்க்கை சில நாட்கள்தாம்! திண்ணமாக, மறுமைதான் நிலையான தங்குமிடமாகும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய சமூகத்தாரே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் (அழிந்து விடும்) இன்பந்தான்; நிச்சயமாக மறுமையோ_அதுதான் நிலையான (இன்பந்தரும்) வீடாகும்.
Saheeh International
O my people, this worldly life is only [temporary] enjoyment, and indeed, the Hereafter - that is the home of [permanent] settlement.
مَنْ عَمِلَ سَیِّئَةً فَلَا یُجْزٰۤی اِلَّا مِثْلَهَا ۚ وَمَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ یُرْزَقُوْنَ فِیْهَا بِغَیْرِ حِسَابٍ ۟
مَنْஎவர்عَمِلَசெய்தாரோسَیِّئَةًதீமையைفَلَاஎனவே இல்லைیُجْزٰۤیகூலி வழங்கப்படுவார்اِلَّاஅன்றிمِثْلَهَا ۚஅதைப் போன்றதேوَ مَنْமேலும் எவர்عَمِلَசெய்தாரோصَالِحًاநற்செயலைمِّنْஇருந்துذَكَرٍஆண்اَوْஅல்லதுاُنْثٰیபெண்وَ هُوَமேலும் அவர்مُؤْمِنٌஇறைநம்பிக்கையாளராகفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்یَدْخُلُوْنَநுழைவார்கள்الْجَنَّةَசுவனத்தில்یُرْزَقُوْنَவாழ்வாதாரம் அளிக்கப்படுவார்கள்فِیْهَاஅதில்بِغَیْرِஇன்றிحِسَابٍகணக்கு
மன் 'அமில ஸய்யி'அதன் Fபலா யுஜ்Zஜா இல்லா மித்லஹா வ மன் 'அமில ஸாலிஹம் மின் தகரின் அவ் உன்தா வ ஹுவ மு'மினுன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத யுர்Zஜகூன Fபீஹா Bபிகய்ரி ஹிஸாBப்
முஹம்மது ஜான்
“எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவனேனும் தீங்கு செய்தால், அதைப் போன்ற தீங்கே தவிர (அதற்கதிகமாய்) அவனுக்குக் கூலியாகக் கொடுக்கப்பட மாட்டாது. ஆணோ பெண்ணோ எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார்கள். அதில் கணக்கின்றி (அதிகமாகவும்) கொடுக்கப்படுவார்கள்.
IFT
தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர் ஒரு தீமையைச் செய்கிறாரோ, அவர் அதைப்போன்றதையே தவிர (அதற்கதிமாய்) கூலியாகக் கொடுக்கப்படமாட்டார், இன்னும், எவர் ஆணாயினும், அல்லது பெண்ணாயினும் அவர் விசுவாசங்கொண்டவராக இருக்கும் நிலையில், நல்ல செயலைச் செய்தாரோ அ(த்தகைய)வர்கள் சுவனபதியில் நுழைந்துவிடுவார்கள், அதில் கணக்கின்றியே (அனைத்து சுவனத்து அருட்கொடைகளிலிருந்தும்) அவர்கள் கொடுக்கப்படுவார்கள்.
Saheeh International
Whoever does an evil deed will not be recompensed except by the like thereof; but whoever does righteousness, whether male or female, while he is a believer - those will enter Paradise, being given provision therein without account.
وَیٰقَوْمِ مَا لِیْۤ اَدْعُوْكُمْ اِلَی النَّجٰوةِ وَتَدْعُوْنَنِیْۤ اِلَی النَّارِ ۟ؕ
وَ یٰقَوْمِமேலும் என் சமூகத்தாரேمَاஎன்னلِیْۤஎனக்குاَدْعُوْكُمْநான் உங்களை அழைக்கிறேன்اِلَیபக்கம்النَّجٰوةِஈடேற்றத்தின்وَ تَدْعُوْنَنِیْۤமேலும் நீங்கள் என்னை அழைக்கிறீர்கள்اِلَیபக்கம்النَّارِؕநெருப்பின்
வ யா கவ்மி மா லீ அத்'ஊகும் இலன் னஜாதி வ தத்'ஊனனீ இலன் னார்
முஹம்மது ஜான்
“என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நான் உங்களை ஈடேற்றத்தின்பால் அழைக்கிறேன்; ஆனால் நீங்களோ என்னை (நரக) நெருப்பின்பால் அழைக்கிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
என் மக்களே! எனக்கென்ன, (ஆச்சரியமாக இருக்கிறது!) நானோ உங்களை ஈடேற்றத்திற்கு அழைக்கிறேன். நீங்கள் என்னை நரகத்திற்கு அழைக்கிறீர்கள்.
IFT
மேலும், என் சமூகத்தினரே, இது என்ன நியாயம்? நானோ உங்களை ஈடேற்றத்தின் பக்கம் அழைக்கின்றேன். ஆனால், நீங்களோ என்னை நெருப்பின் பக்கம் அழைக்கின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், “என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நானோ, உங்களை ஈடேற்றத்தின் பால் அழைக்கின்றேன், நீங்களோ என்னை நரகத்தின் பக்கம் அழைக்கின்றீர்கள்,
Saheeh International
And O my people, how is it that I invite you to salvation while you invite me to the Fire?
تَدْعُوْنَنِیْ لِاَكْفُرَ بِاللّٰهِ وَاُشْرِكَ بِهٖ مَا لَیْسَ لِیْ بِهٖ عِلْمٌ ؗ وَّاَنَا اَدْعُوْكُمْ اِلَی الْعَزِیْزِ الْغَفَّارِ ۟
تَدْعُوْنَنِیْநீங்கள் என்னை அழைக்கிறீர்கள்لِاَكْفُرَநான் நிராகரிப்பதற்குبِاللّٰهِஅல்லாஹ்வைوَ اُشْرِكَமேலும் நான் இணைவைப்பதற்குبِهٖஅவனுக்குمَاஎதைلَیْسَஇல்லையோلِیْஎனக்குبِهٖஅதைப்பற்றிعِلْمٌ ؗஅறிவுوَّ اَنَاஆனால் நான்اَدْعُوْكُمْஉங்களை அழைக்கிறேன்اِلَیபால்الْعَزِیْزِமிகைத்தவன்الْغَفَّارِபெரும் மன்னிப்பவன்
தத்'ஊனனீ லி-அக்Fபுர Bபில்லாஹி வ உஷ்ரிக Bபிஹீ மா லய்ஸ லீ Bபிஹீ 'இல்மு(ன்)வ் வ அன அத்'ஊகும் இலல்'அZஜீZஜில் கFப்Fபார்
முஹம்மது ஜான்
“நான் அல்லாஹ்வுக்கு (மாறு செய்து அவனை) நிராகரிக்க வேண்டுமென்றும், எனக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ அதை நான் அவனுக்கு இணைவைக்க வேண்டுமென்றும் என்னை அழைக்கின்றீர்கள். ஆனால் நானோ யாவரையும் மிகைத்தவனும், மிக மன்னிப்பவனுமாகியவனிடம் அழைக்கின்றேன்.
அப்துல் ஹமீது பாகவி
தவிர, நான் அல்லாஹ்வை நிராகரித்துவிட்டு (இறைவனென) நான் நம்பாததை அவனுக்கு இணைவைக்கும்படி என்னை நீங்கள் அழைக்கிறீர்கள். நானோ, உங்களை (அனைவரையும்) மிகைத்தவன், மிக மன்னிப்புடையவனின் பக்கம் அழைக்கிறேன்.
IFT
அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும், நான் அறிந்திடாதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கும் நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள். அதே நேரத்தில் நானோ வல்லமை மிக்கவனும் பெரும் மன்னிப்பாளனுமான இறைவனின் பக்கம் உங்களை அழைத்துக்கொண்டிருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நான் அல்லாஹ்வை நிராகரிக்கவும், எதைப்பற்றி எனக்கு அறிவில்லையோ அதை அவனுக்கு நான் இணையாக்கவும் என்னை நீங்கள் அழைக்கின்றீர்கள், நானோ, (யாவரையும்) மிகைத்தவன், மிக்க மன்னிப்பவனின் பக்கம் உங்களை அழைக்கிறேன்.
Saheeh International
You invite me to disbelieve in Allah and associate with Him that of which I have no knowledge, and I invite you to the Exalted in Might, the Perpetual Forgiver.
لَا جَرَمَ اَنَّمَا تَدْعُوْنَنِیْۤ اِلَیْهِ لَیْسَ لَهٗ دَعْوَةٌ فِی الدُّنْیَا وَلَا فِی الْاٰخِرَةِ وَاَنَّ مَرَدَّنَاۤ اِلَی اللّٰهِ وَاَنَّ الْمُسْرِفِیْنَ هُمْ اَصْحٰبُ النَّارِ ۟
لَاஇல்லைجَرَمَசந்தேகம்اَنَّمَاநிச்சயமாக எதன்تَدْعُوْنَنِیْۤநீங்கள் என்னை அழைக்கிறீர்களோاِلَیْهِஅதன் பக்கம்لَیْسَஇல்லைلَهٗஅதற்குدَعْوَةٌஅழைப்புفِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ لَاமேலும் இல்லைفِیஇல்الْاٰخِرَةِமறுமைوَ اَنَّமேலும் நிச்சயமாகمَرَدَّنَاۤநமது திரும்புதல்اِلَیபக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்وَ اَنَّமேலும் நிச்சயமாகالْمُسْرِفِیْنَவரம்பு மீறுபவர்கள்هُمْஅவர்களேاَصْحٰبُவாசிகள்النَّارِநரகத்தின்
லா ஜரம அன்னமா தத்'ஊனனீ இலய்ஹி லய்ஸ லஹூ தஃவதுன் Fபித் துன்யா வலா Fபில் ஆகிரதி வ அன்ன மரத்தனா இலல் லாஹி வ அன்னல் முஸ்ரிFபீனஹும் அஸ்ஹாBபுன் னார்
முஹம்மது ஜான்
“என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (நாயன் என) அழைப்பதற்கு சிறிதும் தகுதியில்லாதது; மேலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்விடமே திரும்பச் செல்வோம். இன்னும் நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரக வாசிகளாகவே இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ, அது இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி (இறைவனென்று) அழைக்கப்படுவதற்கு ஒரு சிறிதும் நிச்சயமாக அதற்குத் தகுதி இல்லை என்பதில் சந்தேகமில்லை. அல்லாஹ்விடமே நாம் அனைவரும் திரும்பச் செல்வோம் (என்பதிலும் அறவே சந்தேகமில்லை). வரம்பு மீறுபவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் (என்பதிலும் அறவே சந்தேகமில்லை).
IFT
இல்லை; சத்தியம் இதுதான்; இதற்கு மாறாக நடக்காது; அதாவது, நீங்கள் என்னை எவற்றின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கின்றீர்களோ அவற்றிற்கு எவ்வித அழைப்பும் இந்த உலகில் இல்லை. மறுமையிலும் இல்லை. மேலும், நாம் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்ப வேண்டியுள்ளது. வரம்பு மீறுவோர் நரகம் செல்லக்கூடியவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது இம்மையிலும், மறுமையிலும் (நாயனென்று) அழைப்பதற்கு நிச்சயமாக, ஒரு, சிறிதும் தகுதியற்றது நம்முடைய திரும்புமிடம் அல்லாஹ்வின் பக்கமேயாகும், இன்னும் நிச்சயமாக வரம்பு மீறுவோர் நரகவாசிகள் தாம் என்பதில் சந்தேகமில்லை.
Saheeh International
Assuredly, that to which you invite me has no [response to a] supplication in this world or in the Hereafter; and indeed, our return is to Allah, and indeed, the transgressors will be companions of the Fire.
فَسَتَذْكُرُوْنَ مَاۤ اَقُوْلُ لَكُمْ ؕ وَاُفَوِّضُ اَمْرِیْۤ اِلَی اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟
فَسَتَذْكُرُوْنَஆகவே விரைவில் நீங்கள் நினைப்பீர்கள்مَاۤஎதைاَقُوْلُநான் கூறுகிறேனோلَكُمْ ؕஉங்களுக்குوَ اُفَوِّضُமேலும் நான் ஒப்படைக்கிறேன்اَمْرِیْۤஎன் காரியத்தைاِلَیபால்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بَصِیْرٌۢஉற்று நோக்குபவன்بِالْعِبَادِஅடியார்களை
Fபஸதத்குரூன மா அகூலு லகும்; வ உFபவ்விளு அம்ரீ இலல் லாஹ்; இன்னல்லாஹ Bபஸீரும் Bபில்'இBபாத்
முஹம்மது ஜான்
“எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் - நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்” (என்றும் அவர் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
நான் உங்களுக்குக் கூறுவதன் உண்மையை நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நீங்கள் (அறிந்து) நினைத்துப் பார்ப்பீர்கள். எனது எல்லா காரியங்களையும் அல்லாஹ்விடமே ஒப்படைக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களை உற்று நோக்குபவன்'' (என்று கூறினார்.)
IFT
இன்று உங்களுக்கு நான் சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கும் ஒரு நேரம் அதிவிரைவில் வந்துவிடும். மேலும், நான் என் விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கின்றேன். திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளை கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நான் உங்களுக்குக் கூறுவதை நிச்சயமாக நீங்கள் நினைவு கூர்வீர்கள், மேலும் என்னுடைய காரியத்தை அல்லாஹ்விடம் நான் ஒப்படைக்கின்றேன், நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைப் பார்க்கிறவன்” (என்றும் கூறினார்).
Saheeh International
And you will remember what I [now] say to you, and I entrust my affair to Allah. Indeed, Allah is Seeing of [His] servants."
فَوَقٰىهُ اللّٰهُ سَیِّاٰتِ مَا مَكَرُوْا وَحَاقَ بِاٰلِ فِرْعَوْنَ سُوْٓءُ الْعَذَابِ ۟ۚ
فَوَقٰىهُஎனவே அவரைப் பாதுகாத்தான்اللّٰهُஅல்லாஹ்سَیِّاٰتِதீமைகளிலிருந்துمَاஎவற்றைمَكَرُوْاஅவர்கள் சூழ்ச்சி செய்தார்களோوَ حَاقَமேலும் சூழ்ந்து கொண்டதுبِاٰلِகூட்டத்தாரைفِرْعَوْنَஃபிர்அவ்னின்سُوْٓءُகொடியالْعَذَابِۚவேதனை
Fப வகாஹுல் லாஹு ஸய்யிஆதி மா மகரூ வ ஹாக Bபி ஆலி-Fபிர்'அவ்ன ஸூ'உல் 'அதாBப்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான். மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளிலிருந்து அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனை சூழ்ந்துகொண்டது.
IFT
இறுதியில், (அந்நம்பிக்கையாளருக்கு எதிராக) அந்த மக்கள் கையாண்ட எல்லாவிதமான மோசமான சூழ்ச்சிகளிலிருந்தும் அல்லாஹ் அவரைக் காப்பாற்றிக் கொண்டான். மேலும், ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கொடிய வேதனை சூழ்ந்து கொண்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் சூழ்ச்சி செய்ததின் தீமைகளை விட்டும் (ஈமானை மறைத்துக்கொண்டிருந்த) அவரை அல்லாஹ் பாதுகாத்துக்கொண்டான், மேலும் ஃபிர் அவ்னைச் சார்ந்தோரை தீயவேதனை சூழ்ந்து கொண்டது.
Saheeh International
So Allah protected him from the evils they plotted, and the people of Pharaoh were enveloped by the worst of punishment -
اَلنَّارُ یُعْرَضُوْنَ عَلَیْهَا غُدُوًّا وَّعَشِیًّا ۚ وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ ۫ اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ ۟
اَلنَّارُநெருப்புیُعْرَضُوْنَஅவர்கள் காட்டப்படுவார்கள்عَلَیْهَاஅதன் முன்னேغُدُوًّاகாலையிலும்وَّ عَشِیًّا ۚமாலையிலும்وَ یَوْمَமேலும் அந்த நாளில்تَقُوْمُநிகழும்السَّاعَةُ ۫இறுதி வேளைاَدْخِلُوْۤاநுழையச் செய்யுங்கள்اٰلَகூட்டத்தினரைفِرْعَوْنَஃபிர்அவ்னின்اَشَدَّமிகக் கடுமையானالْعَذَابِவேதனையில்
அன் னாரு யுஃரளூன 'அலய்ஹா குதுவ்வ(ன்)வ் வ 'அஷிய்ய(ன்)வ் வ யவ்ம தகூமுஸ் ஸா'ஆது அத்கிலூ ஆல Fபிர்'அவ்ன அஷத்தல் 'அதாBப்
முஹம்மது ஜான்
காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என்று கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றனர். மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னுடைய மக்களை மிகக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும்.
IFT
நரக நெருப்பு! அதன் முன்பு காலையிலும் மாலையிலும் அவர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். மேலும், மறுமைநாள் வந்துவிடும்போது ஆணையிடப்படும்: ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மிகக் கடுமையான வேதனையில் புகுத்துங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்(நரக)நெருப்பு_அதன் மீது காலையிலும், மாலையிலும் அவர்கள் எடுத்துக் காட்டப்படுகிறார்கள், மேலும் மறுமை நாள் நிலைபெற்று விடும் நாளில், “ஃபிர் அவ்னைச் சார்ந்தோரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என மலக்குகளுக்குக் கூறப்படும்).
Saheeh International
The Fire; they are exposed to it morning and evening. And the Day the Hour appears [it will be said], "Make the people of Pharaoh enter the severest punishment."
وَاِذْ یَتَحَآجُّوْنَ فِی النَّارِ فَیَقُوْلُ الضُّعَفٰٓؤُا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِیْبًا مِّنَ النَّارِ ۟
وَ اِذْஇன்னும் (அவர்கள்)یَتَحَآجُّوْنَதர்க்கித்துக் கொள்ளும் போதுفِیஇல்النَّارِநரக நெருப்ப(ில்)فَیَقُوْلُஅப்போது கூறுவார்கள்الضُّعَفٰٓؤُاபலவீனமானவர்கள்لِلَّذِیْنَஎவர்கள்اسْتَكْبَرُوْۤاபெருமையடித்துக் கொண்டிருந்தார்களோ (அவர்களிடம்)اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்لَكُمْஉங்களுக்குتَبَعًاபின்பற்றுபவர்களாகفَهَلْஎனவேاَنْتُمْநீங்கள்مُّغْنُوْنَதடுத்துக் கொள்பவர்களாعَنَّاஎங்களை விட்டும்نَصِیْبًاஒரு பகுதியைمِّنَஇருந்துالنَّارِநரக நெருப்ப(ில்)
வ இத் யதஹாஜ்ஜூன Fபின் னாரி Fப-யகூலுள் ளு'அFபா'உ லில்லதீனஸ் தக்Bபரூ இன்னா குன்னா லகும் தBப'அன் Fபஹல் அன்தும் முக்னூன அன்னா னஸீBபம் மினன் னார்
முஹம்மது ஜான்
அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலஹீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி: “நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம் - எனவே, எங்களை விட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது விலக்கி வைப்பீர்களாக?” என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவுட்டுவீராக!).
அப்துல் ஹமீது பாகவி
நரகத்தில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (அவர்களில் உள்ள) பலவீனமானவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்த (தலை)வர்களை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களையே பின்பற்றியிருந்தோம். இன்றைய தினம் நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு சிறிதேனும் எங்களை விட்டு நீங்கள் தடுத்துவிட முடியுமா?'' என்று கேட்பார்கள்.
IFT
பிறகு, நரகத்தில் இவர்கள் ஒருவர் மற்றவருடன் தர்க்கம் செய்துகொண்டிருக்கும் நேரத்தைச் சற்று நினைத்துப் பாருங்கள். (உலகில்) பலவீனர்களாய் இருந்த மக்கள், பெரியவர்கள் போல் காட்டிக் கொண்டவர்களை நோக்கிச் சொல்வார்கள்: “நாங்கள் உங்களைப் பின்பற்றுவோராய் இருந்தோம். (இப்போது இங்கு) நரக வேதனையிலிருந்து சிறிதளவாவது எங்களைக் காப்பாற்றுவீர்களா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நரகவாசிகளாகிய) அவர்கள் நரகத்தில் தர்க்கம் செய்துகொள்ளும் சமயத்தில், அப்போது (அவர்களிலுள்ள) பலவீனமானவர்கள், பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களிடம், “நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றுவோராக இருந்தோம், ஆகவே, (இன்று) நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு பகுதியையேனும் எங்களை விட்டும் நீங்கள் தடுத்துவிடக்கூடியவர்களா?” என்று கேட்பர்.
Saheeh International
And [mention] when they will argue within the Fire, and the weak will say to those who had been arrogant, "Indeed, we were [only] your followers, so will you relieve us of a share of the Fire?"
قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُلٌّ فِیْهَاۤ ۙ اِنَّ اللّٰهَ قَدْ حَكَمَ بَیْنَ الْعِبَادِ ۟
قَالَகூறுவார்கள்الَّذِیْنَஎவர்கள்اسْتَكْبَرُوْۤاபெருமையடித்தார்களோاِنَّاநிச்சயமாக நாம்كُلٌّஅனைவரும்فِیْهَاۤ ۙஅதில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَدْதிட்டமாகحَكَمَதீர்ப்பளித்துவிட்டான்بَیْنَஇடையேالْعِبَادِஅடியார்களுக்கு
காலல் லதீனஸ் தக்Bபரூ இன்னா குல்லுன் Fபீஹா இன்னல் லாஹ கத் ஹகம Bபய்னல்'இBபாத்
முஹம்மது ஜான்
(அப்போது:) “நிச்சயமாக நாம் எல்லோருமே இதிலிருக்கிறோம்; நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களுக்கிடையில் தீர்ப்புச் செய்து விட்டான்” என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு, பெருமையடித்துக் கொண்டிருந்த அ(வர்களுடைய தலை)வர்கள், ‘‘மெய்யாகவே (நாங்களும், நீங்களும் ஆக) நாம் அனைவரும் நரகத்தில்தான் இருக்கிறோம். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு(ச் செய்ய வேண்டிய) தீர்ப்பைச் செய்து விட்டான். (ஆகவே, உங்களுக்காக நாங்கள் ஒன்றும் உதவி செய்வதற்கில்லை)'' என்று கூறுவார்கள்.
IFT
பெரியவர்கள் போல் காட்டிக் கொண்டிருந்தவர்கள் பதில் அளிப்பார்கள்: “நாம் அனைவரும் இங்கு ஒரே நிலையில் இருக்கின்றோம்; அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து விட்டான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அவர்களுடைய தலைவர்களான) பெருமையடித்துக் கொண்டிருந்தோர் “நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் இதில்தான் இருக்கிறோம், நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கிடையே திட்டமாக தீர்ப்பளித்துவிட்டான்” என்று கூறுவர்.
Saheeh International
Those who had been arrogant will say, "Indeed, all [of us] are in it. Indeed, Allah has judged between the servants."
وَقَالَ الَّذِیْنَ فِی النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ یُخَفِّفْ عَنَّا یَوْمًا مِّنَ الْعَذَابِ ۟
وَ قَالَமேலும் கூறுவார்கள்الَّذِیْنَஎவர்கள்فِیஉள்ளالنَّارِநெருப்பில்لِخَزَنَةِகாவலர்களிடம்جَهَنَّمَநரகத்தின்ادْعُوْاபிரார்த்தியுங்கள்رَبَّكُمْஉங்கள் இறைவனிடம்یُخَفِّفْஅவன் இலேசாக்கعَنَّاஎங்களை விட்டும்یَوْمًاஒரு நாள்مِّنَஇலிருந்துالْعَذَابِவேதனையை
வ காலல் லதீன Fபின் னாரி லிகZஜனதி ஜஹன்னமத்-'ஊ ரBப்Bபகும் யுகFப்FபிFப் 'அன்னா யவ்மம் மினல் 'அதாBப்
முஹம்மது ஜான்
“இவ்வேதனையை ஒரு நாளைக்கு (மட்டுமாவது) எங்களுக்கு இலேசாக்கும்படி உங்கள் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று (நரக) நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலாளிகளை நோக்கி கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், நரகத்திலுள்ளவர்கள் நரகத்தின் காவலாளர்களை நோக்கி ‘‘வேதனையை ஒரு நாளேனும் எங்களுக்கு இலேசாக்குமாறு உங்கள் இறைவனிடம் நீங்கள் கேளுங்கள்'' எனக் கூறுவார்கள்.
IFT
மேலும், நரகத்தில் வீழ்ந்துகிடக்கும் அம்மக்கள் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்: “எங்களின் வேதனையை ஒரு நாளைக்கேனும் குறைப்பதற்கு நீங்கள் உங்கள் இறைவனிடம் இறைஞ்சுங்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நரகத்திலுள்ளவர்கள்; நரகக்காவலர்களிடம், “உங்கள் இரட்சகனிடம் (எங்களுக்காக) நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள், வேதனையை ஒரு நாளேனும் எங்களுக்கு அவன் இலேசாக்குவான்” என்று கூறுவார்கள்.
Saheeh International
And those in the Fire will say to the keepers of Hell, "Supplicate your Lord to lighten for us a day from the punishment."
قَالُوْۤا اَوَلَمْ تَكُ تَاْتِیْكُمْ رُسُلُكُمْ بِالْبَیِّنٰتِ ؕ قَالُوْا بَلٰی ؕ قَالُوْا فَادْعُوْا ۚ وَمَا دُعٰٓؤُا الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟۠
قَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اَوَ لَمْஎன்ன, இல்லையா?تَكُஇருக்கتَاْتِیْكُمْஉங்களிடம் வரرُسُلُكُمْஉங்கள் தூதர்கள்بِالْبَیِّنٰتِ ؕதெளிவான அத்தாட்சிகளுடன்قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلٰی ؕஆம்قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்فَادْعُوْا ۚஎனவே பிரார்த்தியுங்கள்وَ مَاமேலும் இல்லைدُعٰٓؤُاபிரார்த்தனைالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களின்اِلَّاதவிரفِیْஇல்ضَلٰلٍ۠வழிகேடு
காலூ அவலம் தகு தாதீகும் ருஸுலுகும் Bபில்Bபய்யினாதி காலூ Bபலா' காலூ Fபத்'ஊ; வமா து'ஆ'உல் காFபிரீன இல்லா Fபீ ளலால்
முஹம்மது ஜான்
“உங்கள் ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?” என (அக்காவலாளிகள்) கேட்பார்கள். “ஆம்! நிச்சயமாக” என அவர்கள் பதில் கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை.  
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) ‘‘உங்களிடம் வந்த (இறைவனுடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வரவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு இவர்கள் ‘‘ஆம்! மெய்தான் (வந்தார்கள்)'' என்று கூறுவார்கள். அதற்கவர்கள், ‘‘அவ்வாறாயின், (நாங்கள் இறைவனிடம் கேட்பதற்கில்லை.) நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்'' என்று கூறிவிடுவார்கள். இந்நிராகரிப்பவர்களின் பிரார்த்தனை ஒரு பயனும் அளிக்காது.
IFT
அதற்கு அவர்கள் கேட்பார்கள்: “உங்களிடம் இறைத்தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்து கொண்டிருக்கவில்லையா? அதற்கு அவர்கள் “ஆம்” என்று பதிலளிப்பார்கள். அப்பொழுது நரகத்தின் காவலர்கள் கூறுவர்: “அப்படியாயின் நீங்களே இறைஞ்சிக் கொள்ளுங்கள்!” நிராகரிப்பாளர்களின் இறைஞ்சுதல் பயனற்றுப் போய்விடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் (இவர்களிடம் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) “உங்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்து கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்பார்கள், அ(தற்க)வர்கள், “ஆம்,!” என்று கூறுவார்கள், அ(தற்க)வர்கள், “அவ்வாறாயின் (நாங்கள் அல்லாஹ்விடம் கேட்க மாட்டோம்) நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிடுவார்கள், மேலும், நிராகரிப்போரின் பிரார்த்தனை வழிகேட்டிலேயே தவிர இல்லை.
Saheeh International
They will say, "Did there not come to you your messengers with clear proofs?" They will say, "Yes." They will reply, "Then supplicate [yourselves], but the supplication of the disbelievers is not except in error [i.e., futility]."
اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیَوْمَ یَقُوْمُ الْاَشْهَادُ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்لَنَنْصُرُதிண்ணமாக உதவி செய்வோம்رُسُلَنَاநம்முடைய தூதர்களுக்குوَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகوَ یَوْمَஇன்னும் நாளில்یَقُوْمُஎழுந்து நிற்கும்الْاَشْهَادُۙசாட்சிகள்
இன்னா லனன்ஸுரு ருஸுலனா வல்லதீன ஆமனூ Fபில் ஹயாதித் துன்யா வ யவ்ம யகூமுல் அஷ்ஹாத்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் நம் தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் (உதவி செய்வோம். இவர்களுக்காக) சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம்.
IFT
உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்: நாம் நம்முடைய தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்விலும் அவசியம் உதவி செய்கின்றோம்; சாட்சிகள் நிற்கும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம், நம்முடைய தூதர்களுக்கும், விசுவாசங்கொண்டோருக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் (மறுமை) நாளிலும் திண்ணமாக உதவி செய்வோம்.
Saheeh International
Indeed, We will support Our messengers and those who believe during the life of this world and on the Day when the witnesses will stand -
یَوْمَ لَا یَنْفَعُ الظّٰلِمِیْنَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ ۟
یَوْمَஅந்நாளில்لَاஇல்லைیَنْفَعُபயனளிக்கும்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குمَعْذِرَتُهُمْஅவர்களின் சாக்குப்போக்குகள்وَ لَهُمُமேலும் அவர்களுக்குاللَّعْنَةُசாபம்وَ لَهُمْமேலும் அவர்களுக்குسُوْٓءُதீயالدَّارِஇருப்பிடம்
யவ்ம லா யன்Fப'உள் ளாலிமீன மஃதிரதுஹும் வ லஹுமுல் லஃனது வ லஹும் ஸூஉத் தார்
முஹம்மது ஜான்
அந்நாளில், அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகல் கூறுதல் பயனளிக்காது - அவர்களுக்கு லஃனத்தும் (சாபமும்) உண்டு; தீய இருப்பிடமும் அவர்களுக்குண்டு.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் கூறும் புகல்கள் ஒன்றுமே பயனளிக்காது. அவர்களுக்கு (இறைவனின்) சாபமும் உண்டு; அவர்களுக்குத் தீய இருப்பிடமும் உண்டு.
IFT
அந்நாளில் கொடுமைக்காரர்களுக்கு அவர்களுடைய சாக்குப்போக்குகள் எந்தப் பயனையும் அளித்திடமாட்டா; அவர்கள் மீது சாபம் உண்டாகும். மேலும், மிக மோசமான தங்குமிடம் அவர்களுக்குக் கிடைக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந் நாள்) அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகல் (கூறுதல் ஒன்றுமே) பயனளிக்காத நாள், அவர்களுக்கு (அல்லாஹ்வின்) சாபமும் உண்டு, அவர்களுக்கு (வேதனையால் மறுமை) வீட்டின் கெடுதியுமுண்டு.
Saheeh International
The Day their excuse will not benefit the wrongdoers, and they will have the curse, and they will have the worst home [i.e., Hell].
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْهُدٰی وَاَوْرَثْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ الْكِتٰبَ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْهُدٰیநேர்வழியைوَ اَوْرَثْنَاமேலும் நாம் வாரிசாக்கினோம்بَنِیْۤசந்ததியினருக்குاِسْرَآءِیْلَஇஸ்ராயீல்الْكِتٰبَۙவேதத்தை
வ லகத் ஆதய்னா மூஸல் ஹுதா வ அவ்ரத்னா Bபனீ இஸ்ரா 'ஈலல் கிதாBப்
முஹம்மது ஜான்
நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி (காட்டும் வேதத்தை) நாம் அளித்தோம் - அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத் வேதத்தில்) நேரான வழியைக் கொடுத்து, இஸ்ராயீலின் சந்ததிகளை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கி வைத்தோம்.
IFT
தெரிந்துகொள்ளுங்கள்: மூஸாவுக்கு நாம் நேர்வழி காட்டினோம். மேலும், இஸ்ராயீலின் வழித் தோன்றல்களை வேதத்தின் வாரிசுகளாய் ஆக்கினோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், திட்டமாக நாம் மூஸாவுக்கு (தவ்ராத் வேதமாகிய) நேர் வழியைக் கொடுத்தோம், இஸ்ராயீலின் மக்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாகவும் ஆக்கினோம்.
Saheeh International
And We had certainly given Moses guidance, and We caused the Children of Israel to inherit the Scripture
هُدًی وَّذِكْرٰی لِاُولِی الْاَلْبَابِ ۟
هُدًیநேர்வழியாகوَّ ذِكْرٰیமேலும் நினைவூட்டலாகلِاُولِیஉடையவர்களுக்குالْاَلْبَابِஅறிவை
ஹுத(ன்)வ் வ திக்ரா லி உலில் அல்BபாBப்
முஹம்மது ஜான்
(அது) நேரான வழிகாட்டியாகவும் அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
அது நேரான வழியாகவும் அறிவுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது. (எனினும், அதை அவர்கள் பின்பற்றவில்லை.)
IFT
அவ்வேதம் அறிவுடையோருக்கு வழிகாட்டியாகவும் அறிவுரையாகவும் திகழ்ந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது) நேர்வழியாகவும் அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் (இருந்தது).
Saheeh International
As guidance and a reminder for those of understanding.
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟
فَاصْبِرْஎனவே பொறுத்திருப்பீராகاِنَّநிச்சயமாகوَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّஉண்மையானதாகும்وَّ اسْتَغْفِرْமேலும் மன்னிப்புத் தேடுவீராகلِذَنْۢبِكَஉமது பாவத்திற்காகوَ سَبِّحْமேலும் துதிப்பீராகبِحَمْدِபுகழுடன்رَبِّكَஉமது இறைவனின்بِالْعَشِیِّமாலையிலும்وَ الْاِبْكَارِஅதிகாலையிலும்
Fபஸ்Bபிர் இன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வஸ்தக்Fபிர் லிதம்Bபிக வ ஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக Bபில்'அஷிய்யி வல் இBப்கார்
முஹம்மது ஜான்
ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டு பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. நீர் உமது தவறுகளுக்கு மன்னிப்பைக் கோரிக்கொண்டும், காலையிலும், மாலையிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருப்பீராக!
IFT
எனவே, (நபியே!) நீர் பொறுமையாய் இரும்! அல்லாஹ்வின் வாக்குறுதி முற்றிலும் உண்மையானது. மேலும், உம் தவறுக்காக மன்னிப்புக் கோரும்! காலையிலும் மாலையிலும் உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதித்துக் கொண்டுமிரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (நபியே!) நீர் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும், மேலும், நீர் உம்முடைய பாவத்திற்காக மன்னிப்புக்கோருவீராக! மேலும், மாலையிலும், காலையிலும் உமதிரட்சிகனின் புகழைக் கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக!
Saheeh International
So be patient, [O Muhammad]. Indeed, the promise of Allah is truth. And ask forgiveness for your sin and exalt [Allah] with praise of your Lord in the evening and the morning.
اِنَّ الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ۙ اِنْ فِیْ صُدُوْرِهِمْ اِلَّا كِبْرٌ مَّا هُمْ بِبَالِغِیْهِ ۚ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یُجَادِلُوْنَதர்க்கம் செய்கிறார்களோفِیْۤகுறித்துاٰیٰتِவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்بِغَیْرِஇன்றிسُلْطٰنٍஎந்த ஆதாரமும்اَتٰىهُمْ ۙஅவர்களுக்கு வந்தاِنْஇல்லைفِیْஇல்صُدُوْرِهِمْஅவர்களின் நெஞ்சங்கள்اِلَّاதவிரكِبْرٌபெருமைمَّاஇல்லைهُمْஅவர்கள்بِبَالِغِیْهِ ۚஅதை அடையக்கூடியவர்கள்فَاسْتَعِذْஎனவே பாதுகாப்புத் தேடுவீராகبِاللّٰهِ ؕஅல்லாஹ்விடம்اِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالسَّمِیْعُயாவற்றையும் செவியேற்பவன்الْبَصِیْرُயாவற்றையும் பார்ப்பவன்
இன்னல் லதீன யுஜாதி லூன Fபீ ஆயாதில் லாஹி Bபிகய்ரி ஸுல்தானின் அதாஹும் இன் Fபீ ஸுதூரிஹிம் இல்லா கிBப்ரும் மா ஹும் BபிBபாலிகீஹ்; Fபஸ்த'இத் Bபில்லாஹி இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் Bபஸீர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர (வேறு எதுவும்) இல்லை; ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் ஆதாரம் ஏதும் இல்லாதிருக்க அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிக்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் (வெறும்) பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. (அப்பெருமையை) அவர்கள் அடையவும் மாட்டார்கள். ஆகவே, (உம்மை) பாதுகாத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் நீர் கோருவீராக. நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
IFT
சான்றோ, ஆதாரமோ எதுவுமே தங்களிடம் வந்திருக்காத நிலையில், எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் புரிகின்றார்களோ அவர்களின் நெஞ்சங்களில் (தாமே பெரியவர்கள் எனும்) அகங்காரம் நிறைந்துள்ளது. ஆனாலும், அவர்கள் அந்தப் பெருமையை அடையப் போவதில்லை. எனவே (நபியே!) அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக! திண்ணமாக, அவன் அனைத்தையும் பார்ப்பவனாகவும் கேட்பவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ்வுடைய வசனங்களில், தங்களுக்கு வந்த எவ்வித சான்றுமில்லாமல் தர்க்கம் செய்கின்றார்களே அத்தகையவர்கள் _ அவர்களுடைய இதயங்களில் (வெறும்) பெருமையல்லாது (வேறு) இல்லை, அதை அவர்கள் அடையக்கூடியவர்களல்லர், ஆகவே, நீர் அல்லாஹ்வைக்கொண்டு பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
Saheeh International
Indeed, those who dispute concerning the signs of Allah without [any] evidence having come to them - there is not within their breasts except pride, [the extent of] which they cannot reach. So seek refuge in Allah. Indeed, it is He who is the Hearing, the Seeing.
لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
لَخَلْقُநிச்சயமாகப் படைப்புالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்اَكْبَرُமிகப் பெரியதுمِنْவிடخَلْقِபடைப்பைالنَّاسِமனிதர்களின்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஅறியیَعْلَمُوْنَமாட்டார்கள்
லகல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி அக்Bபரு மின் கல்கின் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது, (இறந்த) மனிதர்களை (மறு முறை) படைப்பதைவிட நிச்சயமாக மிகப் பெரிய காரியமாகும். ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதைக்கூட அறிந்து கொள்வதில்லை.
IFT
வானங்களையும் பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட நிச்சயம் மாபெரும் சாதனையாகும். எனினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக வானங்களையும், பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதைவிட மிகப்பெரியதாகும், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறியமாட்டார்கள்.
Saheeh International
The creation of the heavens and earth is greater than the creation of mankind, but most of the people do not know.
وَمَا یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۙ۬ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الْمُسِیْٓءُ ؕ قَلِیْلًا مَّا تَتَذَكَّرُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைیَسْتَوِیசமமாவார்கள்الْاَعْمٰیபார்வையற்றவரும்وَ الْبَصِیْرُ ۙ۬மேலும் பார்வையுடையவரும்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ لَاமேலும் இல்லைالْمُسِیْٓءُ ؕதீமை செய்பவரும்قَلِیْلًاமிகக் குறைவாகவேمَّاதான்تَتَذَكَّرُوْنَநீங்கள் சிந்திக்கிறீர்கள்
வமா யஸ்தவில் அஃமா வல்Bபஸீரு வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ லல் முஸீ'; கலீலம் மா தததக்கரூன்
முஹம்மது ஜான்
குருடரும், பார்வையுடையோரும் சமமாகார்; அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்; உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (அவ்வாறே) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களும் (நம்பிக்கை கொள்ளாத) பாவிகளும் சமமாக மாட்டார்கள். வெகு சொற்பமாகவே இதைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள்.
IFT
மேலும், குருடனும் பார்வையுள்ளவனும் சமமாக முடியாது; இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவரும் தீயவரும் சமமாக முடியாது; ஆனால், நீங்கள் மிகக் குறைவாகவே உணர்கின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
குருடரும், பார்வையுடையவரும் சமமாக மாட்டார்கள், (அவ்வாறே,) விசுவாசங்கொண்டு நற்கருமங்கள் செய்தார்களே அவர்களும், தீயவரும் (சமமாக மாட்டார்கள்) வெகு சொற்பமாகவே (இதனைக்கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள்.
Saheeh International
And not equal are the blind and the seeing, nor are those who believe and do righteous deeds and the evildoer. Little do you remember.
اِنَّ السَّاعَةَ لَاٰتِیَةٌ لَّا رَیْبَ فِیْهَا وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالسَّاعَةَமறுமை நாள்لَاٰتِیَةٌநிச்சயமாக வரக்கூடியதேلَّاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهَاஅதில்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்
இன்னஸ் ஸா'அத ல ஆதியதுல் லா ரய்Bப Fபீஹா வ லாகின்ன அக்தரன் னாஸி லா யு'மினூன்
முஹம்மது ஜான்
(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் ஈமான் கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
விசாரணைக் காலம் நிச்சயமாக வந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) நம்புவதில்லை.
IFT
திண்ணமாக, மறுமை நாள் வரத்தான் போகின்றது; அதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும், மக்களில் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக மறுமைநாள் வரக்கூடியதே, அதில் சந்தேகமே இல்லை, எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்பமாட்டார்கள்.
Saheeh International
Indeed, the Hour is coming - no doubt about it - but most of the people do not believe.
وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِیْۤ اَسْتَجِبْ لَكُمْ ؕ اِنَّ الَّذِیْنَ یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِیْ سَیَدْخُلُوْنَ جَهَنَّمَ دٰخِرِیْنَ ۟۠
وَ قَالَமேலும் கூறினான்رَبُّكُمُஉங்கள் இறைவன்ادْعُوْنِیْۤஎன்னிடம் பிரார்த்தியுங்கள்اَسْتَجِبْநான் பதிலளிப்பேன்لَكُمْ ؕஉங்களுக்குاِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَسْتَكْبِرُوْنَபெருமையடிக்கிறார்களோعَنْவிட்டுعِبَادَتِیْஎன்னை வணங்குவதைسَیَدْخُلُوْنَஅவர்கள் விரைவில் நுழைவார்கள்جَهَنَّمَநரகத்தில்دٰخِرِیْنَ۠சிறுமையடைந்தவர்களாக
வ கால ரBப்Bபுகுமுத் 'ஊனீ அஸ்தஜிBப் லகும்; இன்னல் லதீன யஸ்தக்Bபிரூன அன் 'இBபாததீ ஸ யத்குலூன ஜஹன்னம தாகிரீன்
முஹம்மது ஜான்
உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘‘நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்.
IFT
உங்கள் இறைவன் கூறுகின்றான்: “என்னிடம் இறைஞ்சுங்கள்! நான் உங்கள் இறைஞ்சுதலை ஏற்றுக் கொள்வேன். திண்ணமாக, எவர்கள் தற்பெருமை கொண்டு எனக்கு வழிபட மறுக்கின்றார்களோ அவர்கள் இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாகி அவசியம் நரகில் நுழைவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், “நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன், நிச்சயமாக, என்னை வணங்குவதைவிட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர்_ அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள்”.
Saheeh International
And your Lord says, "Call upon Me; I will respond to you." Indeed, those who disdain My worship will enter Hell [rendered] contemptible.
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِتَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎத்தகையவன்جَعَلَஆக்கினான்لَكُمُஉங்களுக்குالَّیْلَஇரவைلِتَسْكُنُوْاநீங்கள் அமைதி பெறுவதற்காகفِیْهِஅதில்وَ النَّهَارَபகலையும்مُبْصِرًا ؕவெளிச்சமானதாகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَذُوْஉடையவன்فَضْلٍஅருட்கொடைعَلَیமீதுالنَّاسِமனிதர்கள்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیَشْكُرُوْنَநன்றி செலுத்துகிறார்கள்
அல்லாஹுல் லதீ ஜ'அல லகுமுல் லய்ல லித்தஸ்குனூ Fபீஹி வன்னஹார முBப்ஸிரா; இன்னல் லாஹ லதூ Fபள்லின் 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஷ்குரூன்
முஹம்மது ஜான்
நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்தான், நீங்கள் (இளைப்பாறி) சுகமடைவதற்காக இரவையும், (வெளிச்சத்தால் பலவற்றையும்) நீங்கள் பார்க்கும்படி பகலையும் படைத்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது பேரருள் புரிகிறான். ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவதில்லை.
IFT
அல்லாஹ்தான் உங்களுக்காக இரவைப் படைத்தான்; அதில் நீங்கள் அமைதி பெறுவதற்காக! மேலும், பகலை ஒளியுடையதாக்கினான். உண்மையில், அல்லாஹ் மக்கள் மீது அருள்புரிபவனாக இருக்கின்றான். ஆனால், மக்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்_அவன் எத்தகையவனென்றால், உங்களுக்காக இரவை_அதில் நீங்கள் ஓய்வு பெறுவதற்க்காகவும், பகலைப் பார்ப்பதற்க்காகவும் அவன் அமைத்தான், நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பேரருள் உடையவன், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்தமாட்டர்கள்.
Saheeh International
It is Allah who made for you the night that you may rest therein and the day giving sight. Indeed, Allah is the possessor of bounty for the people, but most of them are not grateful.
ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَیْءٍ ۘ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚؗ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
ذٰلِكُمُஅத்தகையவனேاللّٰهُஅல்லாஹ்رَبُّكُمْஉங்கள் இறைவன்خَالِقُபடைப்பவன்كُلِّஒவ்வொருشَیْءٍ ۘபொருளையும்لَاۤஇல்லைاِلٰهَஇறைவன்اِلَّاதவிரهُوَ ۚؗஅவனைفَاَنّٰیபின் எவ்வாறுتُؤْفَكُوْنَநீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் காலிகு குல்லி ஷய்'இன்; லா இலாஹ இல்லா ஹுவ Fப அன்னா து'Fபகூன்
முஹம்மது ஜான்
அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை; எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் இறைவனான அந்த அல்லாஹ்தான் (மற்ற) பொருள்கள் அனைத்தையும் படைப்பவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
IFT
(உங்களுக்காக இவை அனைத்தையும் செய்திருக்கும்) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன்; ஒவ்வொரு பொருளின் படைப்பாளன்; அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. பின்னர் நீங்கள் எங்கிருந்து வழிபிறழச் செய்யப்படுகின்றீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன்தான் அல்லாஹ்_உங்களுடைய இரட்சகன், ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன், அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, ஆகவே (அவனைப் புறக்கணித்து விட்டு) நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள்?
Saheeh International
That is Allah, your Lord, Creator of all things; there is no deity except Him, so how are you deluded?
كَذٰلِكَ یُؤْفَكُ الَّذِیْنَ كَانُوْا بِاٰیٰتِ اللّٰهِ یَجْحَدُوْنَ ۟
كَذٰلِكَஅவ்வாறேیُؤْفَكُதிருப்பப்படுகிறார்கள்الَّذِیْنَஎவர்கள்كَانُوْاஇருந்தார்களோبِاٰیٰتِஅத்தாட்சிகளைاللّٰهِஅல்லாஹ்வின்یَجْحَدُوْنَமறுத்துக்கொண்டு
கதாலிக யு'Fபகுல் லதீன கானூ Bபி ஆயாதில் லாஹி யஜ்ஹதூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்களும் இவ்வாறே திருப்பப்பட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்துக்கொண்டு (முன்னர்) இருந்தவர்களும், இவ்வாறுதான் வெருண்டோடிச் சென்றனர்.
IFT
இவ்வாறே, அல்லாஹ்வின் வசனங்களை மறுத்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் வழிபிறழச் செய்யப்படுகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்துக்கொண்டிருந்தார்களே, அவர்களும் இவ்வாறே திருப்பப்படுகிறார்கள்.
Saheeh International
Thus were those [before you] deluded who were rejecting the signs of Allah.
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ قَرَارًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِّنَ الطَّیِّبٰتِ ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ۖۚ فَتَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎத்தகையவன் என்றால்جَعَلَஆக்கினான்لَكُمُஉங்களுக்குالْاَرْضَபூமியைقَرَارًاதங்குமிடமாகوَّ السَّمَآءَவானத்தையும்بِنَآءًமேற்கூரையாகوَّ صَوَّرَكُمْமேலும் உங்களை உருவமைத்தான்فَاَحْسَنَபின் அழகாக்கினான்صُوَرَكُمْஉங்கள் உருவங்களைوَ رَزَقَكُمْமேலும் உங்களுக்கு உணவளித்தான்مِّنَஇருந்துالطَّیِّبٰتِ ؕதூய்மையானவற்றில்ذٰلِكُمُஅத்தகையவன்தான்اللّٰهُஅல்லாஹ்رَبُّكُمْ ۖۚஉங்கள் இறைவன்فَتَبٰرَكَஆகவே மிக்க மேலானவன்اللّٰهُஅல்லாஹ்رَبُّஇறைவன்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
அல்லாஹுல் லதீ ஜ'அல லகுமுல் அர்ள கரார(ன்)வ் வஸ்ஸ மா'அ Bபினா'அ(ன்)வ் வ ஸவ்வரகும் Fப அஹ்ஸன ஸுவரகும் வ ரZஜககும் மினத் தய்யிBபாத்; தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் FபதBபாரகல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை (நீங்கள்) வசித்திருக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, உங்களைச் சித்தரித்து, அழகான கோலத்திலும் உங்களை அமைத்தான். அவனே உங்களுக்கு மேலான உணவுகளையும் வழங்குகிறான். அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன். அகிலத்தார்களின் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியம் உடையவன்.
IFT
அல்லாஹ்தான் உங்களுக்காகப் பூமியைத் தங்குமிடமாகவும் மேலே வானத்தை முகடாகவும் அமைத்தான். அவனே உங்களுக்கு வடிவங்கள் அமைத்தான்; உங்கள் வடிவங்களை மிகவும் அழகுபட அமைத்தான். மேலும், அவன் உங்களுக்குத் தூய்மையான பொருள்களிலிருந்து உணவளித்தான். (இவற்றைச் செய்த) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன்; அகில உலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்_அவன் எத்தகையவனென்றால், உங்களுக்காக பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை முகடாகவும் அவன் அமைத்தான், மேலும், உங்க(ள் தோற்றங்க)ளை உருவகப்படுத்தினான், பின்னர், உங்களின் தோற்றங்களை அவன் அழகாக்கினான், இன்னும், (பரிசுத்தமான) நல்லவைகளிலிருந்து உங்களுக்கு அவன் உணவும் அளித்தான், (இத்தகுதிகளுக்குரியவனான) அவன் தான் உங்களுடய இரட்சகனாகிய அல்லாஹ்; ஆகவே, அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் மிக்க பாக்கியமிக்கவன்.
Saheeh International
It is Allah who made for you the earth a place of settlement and the sky a structure [i.e., ceiling] and formed you and perfected your forms and provided you with good things. That is Allah, your Lord; then blessed is Allah, Lord of the worlds.
هُوَ الْحَیُّ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَادْعُوْهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ؕ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
هُوَஅவன்الْحَیُّஎன்றும் உயிருள்ளவன்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைத்فَادْعُوْهُஎனவே அவனைப் பிரார்த்தியுங்கள்مُخْلِصِیْنَதூய்மையாக்கியவர்களாகلَهُஅவனுக்கேالدِّیْنَ ؕவழிபாட்டைاَلْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேرَبِّஇறைவன்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
ஹுவல் ஹய்யு லா இலாஹ இல்லா ஹுவ Fபத்'ஊஹு முக் லிஸீன லஹுத்-தீன்; அல்ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் நிரந்தரமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. ஆகவே, அவனுக்கு நீங்கள் முற்றிலும் வழிப்பட்டுக் கலப்பற்ற மனதுடன் அவனை அழைப்பீர்களாக! உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது.
IFT
அவனே நித்திய ஜீவனாக இருக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறெவரும் இல்லை. ஆகவே, அவனிடமே இறைஞ்சுங்கள்; உங்களுடைய தீனை கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கியவர்களாய்! புகழ் அனைத்தும் அகில உலகங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனே உயிரோடிருப்பவன், அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, எனவே, நீங்கள் வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை பிரார்த்தி(த்து அழை)யுங்கள். அனைத்துப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியவையாகும்.
Saheeh International
He is the Ever-Living; there is no deity except Him, so call upon Him, [being] sincere to Him in religion. [All] praise is [due] to Allah, Lord of the worlds.
قُلْ اِنِّیْ نُهِیْتُ اَنْ اَعْبُدَ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَمَّا جَآءَنِیَ الْبَیِّنٰتُ مِنْ رَّبِّیْ ؗ وَاُمِرْتُ اَنْ اُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
قُلْகூறுவீராகاِنِّیْநிச்சயமாக நான்نُهِیْتُதடுக்கப்பட்டுள்ளேன்اَنْஎன்றுاَعْبُدَநான் வணங்குவதைالَّذِیْنَஎவர்களைتَدْعُوْنَநீங்கள் அழைக்கிறீர்களோمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைلَمَّاபோதுجَآءَنِیَஎன்னிடம் வந்தالْبَیِّنٰتُதெளிவான அத்தாட்சிகள்مِنْஇருந்துرَّبِّیْ ؗஎன் இறைவன்وَ اُمِرْتُமேலும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்اَنْஎன்றுاُسْلِمَநான் பணிய வேண்டும்لِرَبِّஇறைவனுக்குالْعٰلَمِیْنَஅகிலங்களின்
குல் இன்னீ னுஹீது அன் அஃBபுதல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி லம்மா ஜா'அ னியல் Bபய்யினாது மிர் ரBப்Bபீ வ உமிர்து அன் உஸ்லிம லி ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
(நபியே!) கூறுவீராக: “என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் - அன்றியும் - அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் என்னிடம் வந்ததன் பின்னர், அல்லாஹ்வையன்றி நீங்கள் (இறைவனென)அழைப்பவற்றை நான் வணங்கக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ளேன். நிச்சயமாக உலகத்தாரின் இறைவனுக்கே நான் முற்றிலும் பணிந்து வழிபட்டு நடக்கும்படியும் ஏவப்பட்டுள்ளேன்''
IFT
(நபியே! இம்மக்களிடம்) கூறிவிடும்: “நீங்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு எவற்றையெல்லாம் அழைக்கின்றீர்களோ அவற்றை வணங்குவதைவிட்டு நான் தடுக்கப்பட்டிருக்கின்றேன்; என் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகள் என்னிடம் வந்திருக்கும்போது (நான் இதனை எப்படிச் செய்ய முடியும்?) அகில உலகங்களின் அதிபதியின் முன்னால் கீழ்ப்படிந்துவிட வேண்டும் என நான் பணிக்கப்பட்டிருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக: “என் இரட்சகனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்தபோது, அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வங்களாக) அழைப்பவைகளை நான் வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டு விட்டேன். அன்றியும், அகிலத்தாரின் இரட்சகனுக்கே நான் முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்குமாறு நான் கட்டளையிடப்பட்டு விட்டேன்.”
Saheeh International
Say, [O Muhammad], "Indeed, I have been forbidden to worship those you call upon besides Allah once the clear proofs have come to me from my Lord, and I have been commanded to submit to the Lord of the worlds."
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ یُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ثُمَّ لِتَكُوْنُوْا شُیُوْخًا ۚ وَمِنْكُمْ مَّنْ یُّتَوَفّٰی مِنْ قَبْلُ وَلِتَبْلُغُوْۤا اَجَلًا مُّسَمًّی وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவன் என்றால்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்مِّنْஇருந்துتُرَابٍமண்ثُمَّபின்னர்مِنْஇருந்துنُّطْفَةٍஒரு விந்துثُمَّபின்னர்مِنْஇருந்துعَلَقَةٍஒரு கருக்கட்டிثُمَّபின்னர்یُخْرِجُكُمْஉங்களை வெளிப்படுத்துகிறான்طِفْلًاகுழந்தையாகثُمَّபின்னர்لِتَبْلُغُوْۤاநீங்கள் அடையும்பொருட்டுاَشُدَّكُمْஉங்கள் வாலிபத்தைثُمَّபின்னர்لِتَكُوْنُوْاநீங்கள் ஆகும்பொருட்டுشُیُوْخًا ۚமுதியவர்கள்وَ مِنْكُمْஇன்னும் உங்களில்مَّنْயார் / எவர்یُّتَوَفّٰیமரணிக்கச் செய்யப்படுகிறாரோمِنْஇருந்துقَبْلُமுன்னதாகوَ لِتَبْلُغُوْۤاநீங்கள் அடையும்பொருட்டுاَجَلًاஒரு தவணைمُّسَمًّیகுறிக்கப்பட்ட / நிர்ணயிக்கப்பட்டوَّ لَعَلَّكُمْஇன்னும் நீங்கள் (ஆகிடலாம்)تَعْقِلُوْنَசிந்தித்துப் புரிந்து கொள்பவர்களாக
ஹுவல் லதீ கலககும் மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம மின் 'அலகதின் தும்ம யுக்ரிஜுகும் திFப்லன் தும்ம லிதBப்லுகூ அஷுத்தகும் தும்ம லிதகூனூ ஷுயூகா; வ மின்கும் மய் யுதவFப்Fபா மின் கBப்லு வ லிதBப்லுகூ அஜலம் முஸம் ம(ன்)வ்-வ ல'அல்லகும் தஃகிலூன்
முஹம்மது ஜான்
அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் - இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்).
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்தும் பின்னர், இந்திரியத்துளியிலிருந்தும், பின்னர், கருவிலிருந்தும் படைத்தான். பிறகு, அவனே உங்களை ஒரு சிசுவாகவும் வெளிப்படுத்துகிறான். பின்னர், (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் நீங்கள் முதியவர்களாக ஆகிறீர்கள். இதற்கு முன்னரும் உங்களில் பலர் இறந்து விடுகின்றனர். ஆயினும், (உங்களில் ஒவ்வொருவரும்) குறிப்பிட்ட தவணையை அடைந்தே தீருகிறீர்கள். இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!
IFT
அவனே உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின்னர் விந்திலிருந்து பின்னர் இரத்தக்கட்டியிலிருந்து! பின்னர், அவன் உங்களைக் குழந்தையின் வடிவில் வெளிக்கொணர்கின்றான். பின்னர், நீங்கள் உங்கள் முழு வலிமையை அடையும் வரை உங்களை வளர்த்து வருகின்றான்; பிறகு நீங்கள் முதுமையை அடையும் வரையிலும் வளர்க்கின்றான்! மேலும், உங்களில் சிலர் முன்னதாகவே திரும்ப அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். எதற்காக இவையனைத்தும் செய்யப்படுகின்றனவெனில் உங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை நீங்கள் அடைவதற்காகவும் நீங்கள் உண்மையை அறிவதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்து படைத்தான், பின்னர், இந்திரியத் துளியிலிருந்தும், பின்னர், இரத்தத் கட்டியிலிருந்தும் (உருவாக்கி) பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான், பின்னர் (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைவதற்காகவும், பின்னர் நீங்கள் முதியோராக ஆவதற்காகவும், (உங்களைப் படைத்தான். இதற்கு) முன்னரே மரணிப்பவரும் உங்களில் இருக்கிறார்கள், இன்னும், குறிப்பிடப்பட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும், (இதிலிருந்து அவனின் சக்தியை) நீங்கள் விளங்கிக் கொள்வதற்காகவும் (இவ்வாறு செய்தான்).
Saheeh International
It is He who created you from dust, then from a sperm-drop, then from a clinging clot; then He brings you out as a child; then [He develops you] that you reach your [time of] maturity, then [further] that you become elders. And among you is he who is taken in death before [that], so that you reach a specified term; and perhaps you will use reason.
هُوَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۚ فَاِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟۠
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவன்یُحْیٖஉயிர்ப்பிக்கிறான்وَ یُمِیْتُ ۚமேலும் மரணிக்கச் செய்கிறான்فَاِذَاஆகவே எப்போதுقَضٰۤیஅவன் தீர்மானிக்கிறானோاَمْرًاஒரு காரியத்தைفَاِنَّمَاஅப்போது நிச்சயமாகیَقُوْلُஅவன் கூறுகிறான்لَهٗஅதற்குكُنْ'ஆகு'فَیَكُوْنُ۠உடனே அது ஆகிவிடுகிறது
ஹுவல் லதீ யுஹ்யீ வ யுமீது Fப இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fப யகூன்
முஹம்மது ஜான்
அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்: “ஆகுக!” என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது.  
அப்துல் ஹமீது பாகவி
அவனே உயிர் கொடுக்கிறான்; உயிர் வாங்குகின்றான். எதையும் (படைக்க) அவன் தீர்மானித்தால் அதை ‘ஆகுக' என்று அவன் கூறியவுடன் அது ஆகிவிடுகிறது.
IFT
அவனே வாழ்வளிப்பவனும் மரணிக்கச் செய்பவனும் ஆவான். அவன் எந்த விஷயத்தைத் தீர்மானித்தாலும் ‘ஆகு!’ என்றுதான் ஆணையிடுகின்றான். உடனே அது ஆகிவிடுகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், அவனே உயிரளிக்கின்றான், இன்னும், மரணிக்கச் செய்கின்றான், எனவே, ஏதேனும் ஒரு காரியத்தை(ச் செய்ய) அவன் தீர்மானித்தால், அப்போது அதற்கு அவன் கூறுவதெல்லாம் ஆகுக! என்பதைத்தான் (அப்போது) உடனே அது ஆகிவிடும்.
Saheeh International
He it is who gives life and causes death; and when He decrees a matter, He but says to it, "Be," and it is.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ ؕ اَنّٰی یُصْرَفُوْنَ ۟
اَلَمْஇல்லையாتَرَநீர் பார்த்தீராاِلَیநோக்கிالَّذِیْنَஎவர்கள்یُجَادِلُوْنَதர்க்கிக்கிறார்களோفِیْۤபற்றிاٰیٰتِவசனங்களைப்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اَنّٰیஎவ்வாறுیُصْرَفُوْنَதிருப்பப்படுகிறார்கள்
அலம் தர இலல் லதீன யுஜாதிலூன Fபீ ஆயாதில் லாஹி அன்னா யுஸ்ரFபூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்பவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? எவ்வாறு அவர்கள் (சத்தியத்தை விட்டும்) திருப்பப்படுகின்றனர்?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாக)த் தர்க்கிப்பவர்கள் எவ்வாறு (உண்மையை விட்டும்) திருப்பப்படுகின்றனர் என்பதை நீர் பார்க்கவில்லையா?
IFT
அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றவர்களை நீர் பார்க்கவில்லையா? எங்கிருந்து அவர்கள் திசைதிருப்பப்படுகின்றார்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அல்லாஹ்வின் (அத்தாட்சிகளாகிய அவனது) வசனங்களில் தர்க்கம் செய்கின்றார்களே அத்தகையோர்பால்_அவர்கள் எவ்வாறு (சத்தியத்திலிருந்து) திருப்பப்படுகின்றனர் என்று நீர் பார்க்கவில்லையா?
Saheeh International
Do you not consider those who dispute concerning the signs of Allah - how are they averted?
الَّذِیْنَ كَذَّبُوْا بِالْكِتٰبِ وَبِمَاۤ اَرْسَلْنَا بِهٖ رُسُلَنَا ۛ۫ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟ۙ
الَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِالْكِتٰبِவேதத்தைوَ بِمَاۤமேலும் எதனைக் கொண்டுاَرْسَلْنَاநாம் அனுப்பினோமோبِهٖஅதனைக் கொண்டுرُسُلَنَا ۛ۫நம் தூதர்களைفَسَوْفَஆகவே விரைவில்یَعْلَمُوْنَۙஅவர்கள் அறிந்துகொள்வார்கள்
அல்லதீன கத்தBபூ Bபில் கிதாBபி வ Bபிமா அர்ஸல்னா Bபிஹீ ருஸுலனா Fபஸவ்Fப யஃலமூன்
முஹம்மது ஜான்
எவர் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் இந்த வேதத்தையும், நமது (மற்ற) தூதர்கள் கொண்டு வந்த (வேதத்)தையும் பொய்யாக்குகின்றனரோ, அவர்கள் (பின்னர் அதை உண்மைதான் என்று) நிச்சயமாக அறிந்து கொள்வார்கள்.
IFT
இவர்கள் இந்த வேதத்தையும் நாம், நம் தூதர்களுடன் அனுப்பிவைத்திருந்த அனைத்து வேதங்களையும் பொய்யெனக் கூறுகின்றார்கள். விரைவில் இவர்களுக்குத் தெரிந்துவிடும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், (நம்முடைய) இவ் வேதத்தையும், இன்னும், எ(வ்வேதத்)தைக் கொண்டு நமது தூதர்களை நாம் அனுப்பி வைத்தோமோ, அதையும் பொய்யாக்கினார்கள், ஆகவே (விரைவில் அதன் பலனை) அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
Saheeh International
Those who deny the Book [i.e., the Qur’an] and that with which We sent Our messengers - they are going to know,
اِذِ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ وَالسَّلٰسِلُ ؕ یُسْحَبُوْنَ ۟ۙ
اِذِபோதுالْاَغْلٰلُவிலங்குகள்فِیْۤஉள்ளேاَعْنَاقِهِمْஅவர்களின் கழுத்துகளில்وَ السَّلٰسِلُ ؕசங்கிலிகளும்یُسْحَبُوْنَۙஇழுக்கப்படுவார்கள்
இதில் அக்லாலு Fபீ அஃனாகி-ஹிம் வஸ்ஸலாஸிலு யுஸ்ஹBபூன்
முஹம்மது ஜான்
அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன் விலங்குகளுடனும் இழுத்துக் கொண்டு வரப்பட்டு;
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய கழுத்துகளில் விலங்கிட்டு, சங்கிலிகளால் கட்டப்பட்டு (வேதனை செய்ய) இழுத்துக் கொண்டு போகப்படுவார்கள்.
IFT
அப்பொழுது அவர்களுடைய கழுத்துகள் விலங்குகளாலும் சங்கிலிகளாலும் பிணைக்கப்பட்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களின் கழுத்துக்களில் வளையங்களாலும், சங்கிலிகளாலும் (கட்டப்பட்டு மலக்குகளால்) அவர்கள் இழுத்து வரப்படும் போது_(அதனை அறிவார்கள்).
Saheeh International
When the shackles are around their necks and the chains; they will be dragged
فِی الْحَمِیْمِ ۙ۬ ثُمَّ فِی النَّارِ یُسْجَرُوْنَ ۟ۚ
فِیஇல்الْحَمِیْمِ ۙ۬கொதிநீர்ثُمَّபின்னர்فِیஇல்النَّارِநெருப்புیُسْجَرُوْنَۚஎரிக்கப்படுவார்கள்
Fபில் ஹமீமி தும்ம Fபின் னாரி யுஸ்ஜரூன்
முஹம்மது ஜான்
கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள்) முதலில் கொதிக்கும் நீரின் பக்கமும், பின்னர் நரகத்திற்கும் (கொண்டு போகப்பட்டு, அதில்) எரிக்கப்படுவார்கள்.
IFT
அவர்கள் கொதிநீரின் பக்கம் இழுத்துவரப்படுவார்கள்; பின்னர் நரகத்தில் வீசியெறியப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கொதிக்கும் நீரில், பின்னர், நரகத்தில் (அவர்களைக் கொண்டுவந்து தீ) மூட்டப்படுவார்கள்.
Saheeh International
In boiling water; then in the Fire they will be filled [with flame].
ثُمَّ قِیْلَ لَهُمْ اَیْنَ مَا كُنْتُمْ تُشْرِكُوْنَ ۟ۙ
ثُمَّபின்னர்قِیْلَகூறப்படும்لَهُمْஅவர்களுக்குاَیْنَஎங்கேمَاஎவற்றைكُنْتُمْநீங்கள்تُشْرِكُوْنَۙஇணைவைத்துக் கொண்டிருந்தீர்களோ
தும்மா கீல லஹும் அய்ன மா குன்தும் துஷ்ரிகூன்
முஹம்மது ஜான்
பிறகு அவர்களுக்குச் சொல்லப்படும்: “(அல்லாஹ்வையன்றி,) நீங்கள் (அவனுக்கு) இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே?” என்று.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவர்களை நோக்கி ‘‘(அல்லாஹ்வுக்கு) இணையென்று நீங்கள் கூறிக்கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று கேட்கப்படும்.
IFT
“அல்லாஹ்வை விடுத்து நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்த மற்ற கடவுள்கள் இப்போது எங்கே?” என்று அவர்களிடம் கேட்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர்களிடமே நீங்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்துக் கொண்டிருந்தவை எங்கே? என்று கேட்கப்படும்.
Saheeh International
Then it will be said to them, "Where is that which you used to associate [with Him in worship]
مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا بَلْ لَّمْ نَكُنْ نَّدْعُوْا مِنْ قَبْلُ شَیْـًٔا ؕ كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ الْكٰفِرِیْنَ ۟
مِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِ ؕஅல்லாஹ்வைقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்ضَلُّوْاஅவர்கள் மறைந்துவிட்டனர்عَنَّاஎங்களை விட்டுبَلْமாறாகلَّمْஇல்லைنَكُنْநாங்கள் இருந்தோம்نَّدْعُوْاநாங்கள் அழைத்தோம்مِنْஇருந்துقَبْلُமுன்னர்شَیْـًٔا ؕஎதனையும்كَذٰلِكَஇவ்வாறேیُضِلُّவழிகேட்டில் விடுகிறான்اللّٰهُஅல்லாஹ்الْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களை
மின் தூனில் லாஹி காலூ ளல்லூ 'அன்னா Bபல் லம் னகுன் னத்'ஊ மின் கBப்லு ஷய்'ஆ; கதாலிக யுளில்லுல் லாஹுல் காFபிரீன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வையன்றி” (நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே என்று கேட்கப்பட்டதும்): “அவை எங்களை விட்டும் மறைந்து விட்டன; அன்றியும் முன்னர் நாங்கள் (அல்லாஹ்வைத் தவிர எதையும்) அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!” என்று கூறுவார்கள். இவ்வாறுதான் காஃபிர்களை அல்லாஹ் வழி கெடச் செய்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘அவையெல்லாம் எங்களை விட்டும் மறைந்து விட்டன. இதற்கு முன்னர் நாம் (அல்லாஹ் அல்லாத) எதையுமே அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!'' என்று (பொய்) கூறுவார்கள். இவ்வாறு நிராகரிப்பவர்கள் (உடைய புத்தி) தடுமாறும்படி அல்லாஹ் செய்துவிடுவான்.
IFT
அப்போது அவர்கள் பதில் அளிப்பார்கள்: “அவர்கள் எங்களை விட்டும் காணாமல் போய் விட்டார்கள். உண்மையில், நாங்கள் இதற்கு முன்பு எதனையும் அழைத்துக் கொண்டிருக்கவில்லை.” இவ்வாறாக, நிராகரிப்பாளர்கள் வழிகெட்டிருப்பதை அல்லாஹ் உறுதிப்படுத்தி விடுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வையன்றி (நீங்கள் இணை வைத்துக் கொண்டிருந்தவை எங்கே? எனக் கேட்கப்படும், அதற்கு) “எங்களை விட்டும் அவை மறைந்து விட்டன, எனினும் இதற்கு முன்னர் நாங்கள் (அல்லாஹ் அல்லாத) யாதொன்றையும் (ஆண்டவனென) அழைத்துக் கொண்டிருக்கவில்லையே” என்று (பொய்) கூறுவார்கள். இவ்வாறு நிராகரிப்போரை அல்லாஹ் வழிகெடச் செய்கிறான்.
Saheeh International
Other than Allah?" They will say, "They have departed from us; rather, we did not used to invoke previously anything." Thus does Allah put astray the disbelievers.
ذٰلِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَمْرَحُوْنَ ۟ۚ
ذٰلِكُمْஇதுبِمَاஎதனாலென்றால்كُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்تَفْرَحُوْنَமகிழ்ந்துفِیஇல்الْاَرْضِபூமிبِغَیْرِஇன்றிالْحَقِّநியாயம்وَ بِمَاமேலும் எதனாலென்றால்كُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்تَمْرَحُوْنَۚஆணவம் கொண்டு
தாலிகும் Bபிமா குன்தும் தFப்ரஹூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ Bபிமா குன்தும் தம்ரஹூன்
முஹம்மது ஜான்
“இது, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் (பெருமையடித்து) மகிழ்ந்து பூரித்துக் கொண்டிருந்தீர்களே (அதற்கான தண்டனையாகும்).
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர், அவர்களை நோக்கி) ‘‘பூமியில் நீங்கள் செய்த உண்மையற்றதைக் கொண்டு அளவுகடந்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்ததாலும், இறுமாப்போடு இருந்ததாலும் இதுவே உங்களுக்கு (தகுமான கூலியாகும்)
IFT
அவர்களிடம் கூறப்படும்: “உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டதற்குக் காரணம், நீங்கள் உண்மைக்கு மாற்றமானதைக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தீர்கள்; பூரிப்பில் இறுமாந்து கொண்டும் இருந்தீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர் அவர்களிடம்,) “அ(வ்வாறு வழி கெடுத்த)து நீங்கள் பூமியில் நியாயமின்றி (அளவு கடந்து) மகிழ்ச்சியடைந்தவர்களாக இருந்ததன் காரணமாகவும், இறுமாப்புக் கொண்டவர்களாக இருந்ததன் காரணத்தினாலுமாகும்” (என்றும்),
Saheeh International
[The angels will say], "That was because you used to exult upon the earth without right and you used to behave insolently.
اُدْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ۚ فَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟
اُدْخُلُوْۤاநுழையுங்கள்اَبْوَابَவாயில்களில்جَهَنَّمَநரகத்தின்خٰلِدِیْنَநிரந்தரமாகத் தங்குபவர்களாகفِیْهَا ۚஅதில்فَبِئْسَஆகவே மிகக் கெட்டதுمَثْوَیதங்குமிடம்الْمُتَكَبِّرِیْنَபெருமையடிப்பவர்களின்
உத்குலூ அBப்வாBப ஜஹன்னம காலிதீன Fபீஹா FபBபி'ஸ மத்வல் முதகBப்Bபிரீன்
முஹம்மது ஜான்
“நீங்கள் நரகத்தின் வாயில்களுள் அதில் என்றென்றும் தங்குபவர்களாக - பிரவேசியுங்கள்” (என்று கூறப்படும்). எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள். அதில் என்றென்றும் தங்கி விடுங்கள்'' (என்று கூறப்படும்). கர்வம்கொண்ட இவர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது.
IFT
இப்போது நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள்; நீங்கள் அதிலேயே நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க வேண்டியுள்ளது, அகங்காரம் கொண்டவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நரகத்தின் வாயல்களில் நுழையுங்கள், அ(ந்நரகத்)தில் நிரந்தரமக(த்தங்கி) இருப்பவர்களாக நீங்கள் இருக்கும் நிலையில்,“ (என்றும் கூறப்படும்), எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் ஒதுங்குமிடம் மிகக் கெட்டது.
Saheeh International
Enter the gates of Hell to abide eternally therein, and wretched is the residence of the arrogant."
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚ فَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟
فَاصْبِرْஎனவே பொறுமையாக இருப்பீராகاِنَّநிச்சயமாகوَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّ ۚஉண்மையானதாகும்فَاِمَّاஎனவே ஒருவேளைنُرِیَنَّكَஉமக்கு நாம் காண்பித்தாலும்بَعْضَசிலவற்றைالَّذِیْஎதனைنَعِدُهُمْஅவர்களுக்கு நாம் வாக்களிக்கிறோமோاَوْஅல்லதுنَتَوَفَّیَنَّكَஉம்மை நாம் மரணிக்கச் செய்தாலும்فَاِلَیْنَاபின்னர் நம்மிடமேیُرْجَعُوْنَஅவர்கள் திருப்பிக் கொண்டுவரப்படுவார்கள்
Fபஸ்Bபிர் இன்ன வஃதல் லாஹி ஹக்க்; Fப இம்மா னுரியன்னக் Bபஃளல் லதீ ன'இ துஹும் அவ் னதவFப்Fபயன்னக Fப இலய்னா யுர்ஜ'ஊன்
முஹம்மது ஜான்
ஆகவே, (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிலவற்றை, நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது அதற்கு முன்னரே நிச்சயமாக நாம் உம்மை மரணமடையச் செய்தாலும், அவர்கள் நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) பொறுமையுடன் (உறுதியாக) இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. அவர்களை நாம் பயமுறுத்துகின்ற வேதனைகளில் சிலவற்றை (உமது வாழ்நாளில்) நாம் உமக்குக் காண்பித்தாலும் சரி, அல்லது, (அவை வருவதற்கு முன்னதாகவே) நாம் உம்மைக் கைப்பற்றி (நீர் இறந்து) விட்டாலும் சரி, நிச்சயமாக அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.
IFT
(நபியே!) பொறுமையைக் கைக்கொள்ளும்! திண்ணமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எந்தத் தீய விளைவுகளைப் பற்றி நாம் இவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றோமோ அவற்றில் சிலவற்றை நாம் உம் கண்ணெதிரில் காட்டித் தந்தாலும் சரி; அல்லது (அதற்கு முன்பே) உலகைவிட்டு உம்மை எடுத்துக் கொண்டாலும் சரி. இவர்கள் நம் பக்கமே திரும்பி வர வேண்டியுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) நீர் பொறுமையுடன் (உறுதியாக) இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானதாகும், ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிலவற்றை நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு முன்) நாம் உம்மை மரணிக்கச் செய்தாலும் (இரு நிலையிலும்) அவர்கள் பின்னர், நம்மிடமே திருப்பிக்கொண்டு வரப்படுவார்கள்.
Saheeh International
So be patient, [O Muhammad]; indeed, the promise of Allah is truth. And whether We show you some of what We have promised them or We take you in death, it is to Us they will be returned.
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ مِنْهُمْ مَّنْ قَصَصْنَا عَلَیْكَ وَمِنْهُمْ مَّنْ لَّمْ نَقْصُصْ عَلَیْكَ ؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ یَّاْتِیَ بِاٰیَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۚ فَاِذَا جَآءَ اَمْرُ اللّٰهِ قُضِیَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُوْنَ ۟۠
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்رُسُلًاதூதர்களைمِّنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னால்مِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்களைப் பற்றிقَصَصْنَاநாம் விவரித்துள்ளோம்عَلَیْكَஉமக்குوَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْஎவர்களைப் பற்றிلَّمْஇல்லைنَقْصُصْநாம் விவரிக்கعَلَیْكَ ؕஉமக்குوَ مَاமேலும் இல்லைكَانَசாத்தியமானதுلِرَسُوْلٍஎந்த ஒரு தூதருக்கும்اَنْஎன்பதுیَّاْتِیَஅவர் கொண்டு வருவதுبِاٰیَةٍஓர் அத்தாட்சியைاِلَّاதவிரبِاِذْنِஅனுமதியைக் கொண்டுاللّٰهِ ۚஅல்லாஹ்வின்فَاِذَاஆகவே எப்போதுجَآءَவந்ததோاَمْرُகட்டளைاللّٰهِஅல்லாஹ்வின்قُضِیَதீர்ப்பளிக்கப்படும்بِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ خَسِرَமேலும் நஷ்டமடைவார்கள்هُنَالِكَஅங்குالْمُبْطِلُوْنَ۠பொய்யர்கள்
வ லகத் அர்ஸல்னா ருஸுலம் மின் கBப்லிக மின்ஹும் மன் கஸஸ்னா 'அலய்க வ மின்ஹும் மல் லம் னக்ஸுஸ் 'அலய்க்; வமா கான லி ரஸூலின் அ(ன்)ய் யாதிய Bபி ஆயதின் இல்லா Bபி இத்னில் லாஹ்; Fப இதா ஜா'அ அம்ருல் லாஹி குளிய Bபில்ஹக்கி வ கஸிர ஹுனாலிகல் முBப்திலூன்
முஹம்மது ஜான்
திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதர்கள் பலரை அனுப்பியிருக்கிறோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தையே நாம் உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை. (இவ்விரு வகுப்பாரில்) எந்தத் தூதராயினும் சரி, அல்லாஹ்வுடைய அனுமதியின்றி ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவது அவருக்குச் சாத்தியமானதல்ல. அல்லாஹ்வுடைய கட்டளை வரும் சமயத்தில் (அவர்களுக்கு) நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். அதைப் பொய்யாக்கியவர்கள் அந்நேரத்தில் நஷ்டத்திற்குள்ளாவார்கள்.
IFT
மேலும், (நபியே!) நாம் உமக்கு முன்பு இறைத்தூதர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலரைக் குறித்து உமக்கு எடுத்துரைத்திருக்கின்றோம். வேறு சிலரைப் பற்றி உமக்கு நாம் எடுத்துரைக்கவில்லை. அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த ஒரு சான்றையும் சுயமாகக் கொண்டு வரும் ஆற்றல் எந்தத் தூதருக்கும் இருக்கவில்லை. பிறகு, அல்லாஹ்வின் கட்டளை வந்தபோது சத்தியத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது; மேலும், அப்போது தவறு செய்தவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) திட்டமாக, நாம் உமக்கு முன்னர் (பல) தூதர்களை அனுப்பி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை நாம் உமக்குக் கூறி இருக்கின்றோம்; இன்னும், அவர்களில் சிலருடைய வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை, (இவ்விரு சாராரில்) எந்தத் தூதருக்கும் அல்லாஹ்வுடைய அனுமதியின்றி யாதோர் அத்தாட்சியையும் அவர் கொண்டு வருவதற்கு (அதிகாரம்) இல்லை; ஆகவே, அல்லாஹ்வுடைய கட்டளை வந்து விடுமானால் நீதியைக் கொண்டு தீர்ப்பளிக்கப்படும், மேலும், (அதனைப்) பொய்யாக்கியவர்கள் அந்த இடத்தில் நஷ்டமடைவார்கள்.
Saheeh International
And We have already sent messengers before you. Among them are those [whose stories] We have related to you, and among them are those [whose stories] We have not related to you. And it was not for any messenger to bring a sign [or verse] except by permission of Allah. So when the command of Allah comes, it will be concluded [i.e., judged] in truth, and the falsifiers will thereupon lose [all].
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَنْعَامَ لِتَرْكَبُوْا مِنْهَا وَمِنْهَا تَاْكُلُوْنَ ۟ؗ
اَللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎத்தகையவன் என்றால்جَعَلَஆக்கினான்لَكُمُஉங்களுக்காகالْاَنْعَامَகால்நடைகளைلِتَرْكَبُوْاநீங்கள் ஏறிச் செல்வதற்காகمِنْهَاஅவற்றிலிருந்துوَ مِنْهَاமேலும் அவற்றிலிருந்துتَاْكُلُوْنَؗநீங்கள் உண்கிறீர்கள்
அல்லாஹுல் லதீ ஜ'அல லகுமுல் அன்'ஆம லிதர்கBபூ மின்ஹா வ மின்ஹா தாகுலூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்தான் கால் நடைகளை உங்களுக்காக உண்டாக்கியிருக்கிறான் - அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள் - இன்னும் அவற்றி(ல் சிலவற்றி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்தான் உங்களுக்காக ஆடு, மாடு, ஒட்டகங்களைப் படைத்திருக்கிறான். (அவற்றில்) சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள்; சிலவற்றை நீங்கள் புசிக்கிறீர்கள்.
IFT
அல்லாஹ்தான் உங்களுக்காக இந்தக் கால்நடைகளைப் படைத்திருக்கின்றான் அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்வதற்காகவும், வேறு சிலவற்றின் இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்_அவன் எத்தகையவனென்றால் கால் நடைகளை உங்களுக்காக உண்டாக்கி இருக்கிறான், அவற்றில் (சிலவற்றின்மீது) நீங்கள் சவாரி செய்வதற்காக, இன்னும், அவைகளி(ல் சிலவற்றி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.
Saheeh International
It is Allah who made for you the grazing animals upon which you ride, and some of them you eat.
وَلَكُمْ فِیْهَا مَنَافِعُ وَلِتَبْلُغُوْا عَلَیْهَا حَاجَةً فِیْ صُدُوْرِكُمْ وَعَلَیْهَا وَعَلَی الْفُلْكِ تُحْمَلُوْنَ ۟ؕ
وَ لَكُمْமேலும் உங்களுக்குفِیْهَاஅவற்றில்مَنَافِعُபயன்கள்وَ لِتَبْلُغُوْاமேலும் நீங்கள் அடைவதற்காகعَلَیْهَاஅவற்றின் மீதுحَاجَةًஒரு தேவையைفِیْஇல்صُدُوْرِكُمْஉங்கள் நெஞ்சங்கள்وَ عَلَیْهَاமேலும் அவற்றின் மீதும்وَ عَلَیமேலும் மீதும்الْفُلْكِகப்பல்களின்تُحْمَلُوْنَؕநீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்
வ லகும் Fபீஹா மனாFபி'உ வ லிதBப்லுகூ 'அலய்ஹா ஹாஜதன் Fபீ ஸுதூரிகும் வ 'அலய்ஹா வ 'அலல் Fபுல்கி துஹ்மலூன்
முஹம்மது ஜான்
இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல) பயன்களும் இருக்கின்றன; மேலும் உங்கள் உள்ளங்களிலுள்ள விருப்பங்களை அதனால் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவற்றில் உங்களுக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன. உங்கள் மனதிலுள்ள கோரிக்கைகளை நீங்கள் அடைவதற்காக அவற்றிலும் கப்பல்களிலும் (பல இடங்களுக்கு) நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்.
IFT
அவற்றில் உங்களுக்கு இன்னும் பல பயன்கள் உள்ளன. உங்கள் இதயம் விரும்புகின்ற இடத்தை நீங்கள் அடைவதற்கு அவற்றின் மீது சவாரி செய்கிறீர்கள். அந்தக் கால்நடைகளின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் ஏற்றிச்செல்லப் படுகின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல) பயன்களும் இருக்கின்றன; மேலும், உங்கள் நெஞ்சங்களிலுள்ள தேவையை அவற்றின் மூலம் நீங்கள் அடைந்து கொள்வதற்காகவும் (படைத்தான்); அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் (பல பகுதிகளுக்கும்) நீங்கள் சுமந்து செல்லப் படுகிறீர்கள்.
Saheeh International
And for you therein are [other] benefits and that you may realize upon them a need which is in your breasts; and upon them and upon ships you are carried.
وَیُرِیْكُمْ اٰیٰتِهٖ ۖۗ فَاَیَّ اٰیٰتِ اللّٰهِ تُنْكِرُوْنَ ۟
وَ یُرِیْكُمْமேலும் அவன் உங்களுக்குக் காட்டுகிறான்اٰیٰتِهٖ ۖۗஅவனுடைய அத்தாட்சிகளைفَاَیَّஎனவே எதனைاٰیٰتِஅத்தாட்சிகளில்اللّٰهِஅல்லாஹ்வின்تُنْكِرُوْنَநீங்கள் மறுக்கிறீர்கள்
வ யுரீகும் ஆயாதிஹீ Fப அய்ய ஆயாதில் லாஹி துன்கிரூன்
முஹம்மது ஜான்
இன்னும், அவன் தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; ஆகவே அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், அவன் உங்களுக்குத் தனது (கணக்கற்ற) அத்தாட்சிகளைக் காண்பிப்பான். அல்லாஹ்வுடைய அந்த அத்தாட்சிகளில் எதைத்தான் நீங்கள் நிராகரிப்பீர்கள்?
IFT
அல்லாஹ் இத்தகைய தன்னுடைய சான்றுகளை உங்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கின்றான். அவ்வாறிருக்க, அவனுடைய எந்தெந்தச் சான்றுகளை நீங்கள் மறுப்பீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவன் உங்களுக்கு தன் அத்தாட்சிகளைக் காண்பிக்கிறான், ஆகவே அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் எதனை நீங்கள் நிராகரிக்கிறீர்கள்.
Saheeh International
And He shows you His signs. So which of the signs of Allah do you deny?
اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَانُوْۤا اَكْثَرَ مِنْهُمْ وَاَشَدَّ قُوَّةً وَّاٰثَارًا فِی الْاَرْضِ فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
اَفَلَمْஅவர்கள்...வில்லையா?یَسِیْرُوْاபயணம் செய்துفِیஇல்الْاَرْضِபூமியில்فَیَنْظُرُوْاஅவர்கள் பார்க்க வேண்டாமாكَیْفَஎப்படிكَانَஇருந்தது என்றுعَاقِبَةُமுடிவுالَّذِیْنَஎவர்களுடையمِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்னால்كَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اَكْثَرَஅதிகமானவர்களாகمِنْهُمْஅவர்களை விடوَ اَشَدَّமேலும் பலமிக்கவர்களாகقُوَّةًபலத்தால்وَّ اٰثَارًاமேலும் சுவடுகளால்فِیஇல்الْاَرْضِபூமியில்فَمَاۤஎனவே இல்லைاَغْنٰیபயனளிக்கعَنْهُمْஅவர்களுக்குمَّاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَكْسِبُوْنَசம்பாதித்துக் கொண்டு
அFபலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம்; கானூ அக்தர மின்ஹும் வ அஷத்த குவ்வத(ன்)வ் வ ஆதாரன் Fபில் அர்ளி Fபமா அக்னா 'அன்ஹும் மா கானூ யக்ஸிBபூன்
முஹம்மது ஜான்
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள் இவர்களை விட (எண்ணிக்கையில்) அதிகமாகவும், பலத்திலும், பூமியில் விட்டுச் சென்ற சின்னங்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள் - எனினும், அவர்கள் சம்பாதித்தது (எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நிராகரிக்கும்) இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? அப்போது, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். அவர்கள், இவர்களை விட மக்கள் தொகையில் அதிகமானவர்களாகவும் பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள். எனினும், அவர்கள் தேடி சேகரித்து வைத்திருந்தவற்றில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
IFT
பூமியில் சுற்றித் திரிந்து, தமக்கு முன் வாழ்ந்து சென்றவர்களுக்கு நேர்ந்த கதியை இவர்கள் காணவில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக எண்ணிக்கையுடையவர்களாகவும், மிக்க பலமுடையவர்களாகவும் இருந்தனர். மேலும், பூமியில் இவர்களைவிட மாபெரும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அவர்கள் எவற்றையெல்லாம் சம்பாதித்தார்களோ அவை இறுதியில் அவர்களுக்கு என்ன பயனைத் தந்தது?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? அப்போது அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை அவர்கள் பார்த்திருப்பர். அவர்களோ இவர்களை விட (எண்ணிக்கையால்) மிக அதிகமானவர்களாகவும், (உடல்களின்) பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற) அடையாளச் சின்னங்களாலும் (மற்றவர்களைவிட) மிகக் கடினமானவர்களாக இருந்தார்கள், பின்னர் அவர்கள் சம்பாதித்(து வைத்)திருந்தது அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
Saheeh International
Have they not traveled through the land and observed how was the end of those before them? They were more numerous than themselves and greater in strength and in impression on the land, but they were not availed by what they used to earn.
فَلَمَّا جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَرِحُوْا بِمَا عِنْدَهُمْ مِّنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
فَلَمَّاஎனவே எப்போதுجَآءَتْهُمْஅவர்களிடம் வந்தார்களோرُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَرِحُوْاஅவர்கள் பெருமிதம் கொண்டார்கள்بِمَاஅதைக் கொண்டுعِنْدَهُمْஅவர்களிடம்مِّنَஉள்ளالْعِلْمِகல்வியைوَ حَاقَமேலும் சூழ்ந்து கொண்டதுبِهِمْஅவர்களைمَّاஎதுكَانُوْاஅவர்கள்بِهٖஅதைக் கொண்டுیَسْتَهْزِءُوْنَபரிகசித்துக் கொண்டிருந்தார்களோ
Fபலம்மா ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபரிஹூ Bபிமா 'இன்தஹும் மினல் 'இல்மி வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்த போது, அவர்கள் தங்களிடமிருந்த கல்வியைக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள், எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களை சூழ்ந்து கொண்டது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களு(க்காக அனுப்பப்பட்ட நம்மு)டைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுவந்த சமயத்தில் (அதை அவர்கள் பரிகாசம் செய்து நிராகரித்துவிட்டு, இவ்வுலக வாழ்க்கைச் சம்பந்தமாகத்) தங்களிடமுள்ள கல்வி (திறமைகளைப்) பற்றிப் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். எனினும், (இறுதியில்) அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தது அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
IFT
அவர்களின் இறைத்தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது, தங்களிடம் என்ன ஞானம் இருந்ததோ அதிலேயே அவர்கள் மகிழ்ந்துபோயிருந்தார்கள். பின்னர், அவர்கள் எதைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தார்களோ அதன் சுழற்சியிலேயே அவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்த சமயத்தில் (அதனை அவர்கள் பரிகாசம் செய்து நிராகரித்து விட்டு) கல்வியினால் தங்களிடமுள்ளதைக் கொண்டு பெரு மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள், இன்னும், அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
Saheeh International
And when their messengers came to them with clear proofs, they [merely] rejoiced in what they had of knowledge, but they were enveloped by what they used to ridicule.
فَلَمَّا رَاَوْا بَاْسَنَا قَالُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَحْدَهٗ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهٖ مُشْرِكِیْنَ ۟
فَلَمَّاஆகவே, எப்போதுرَاَوْاஅவர்கள் கண்டார்களோبَاْسَنَاஎமது தண்டனையைقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَحْدَهٗஅவன் ஒருவனையேوَ كَفَرْنَاமேலும் நாங்கள் நிராகரித்தோம்بِمَاஎவற்றைكُنَّاநாங்கள் இருந்தோமோبِهٖஅவனுக்குمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களாக
Fபலம்மா ர அவ் Bபாஸனா காலூ ஆமன்னா Bபில்லாஹி வஹ்தஹூ வ கFபர்னா Bபிமா குன்னா Bபிஹீ முஷ்ரிகீன்
முஹம்மது ஜான்
எனவே அவர்கள் நம்(கட்டளையால் உண்டான) வேதனையை கண்டபோது, “நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நமது வேதனையை அவர்கள் கண்ணால் கண்ட சமயத்தில் அவர்கள், ‘‘அல்லாஹ் ஒருவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டு, நாங்கள் இணைவைத்து வணங்கி வந்த தெய்வங்களை நிராகரிக்கிறோம்'' என்று கூறினார்கள்.
IFT
அவர்கள் நம்முடைய தண்டனையைக் கண்டபோது, “இணை துணையற்ற ஏகனாகிய அல்லாஹ்வை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்; அவனுக்கு இணையானவையாக நாங்கள் ஏற்படுத்தியிருந்த தெய்வங்கள் அனைத்தையும் நிராகரிக்கின்றோம்” என்று உரக்கக் கூறினர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு நம்முடைய வேதனையைக் (கண் கூடாக) கண்ட சமயத்தில், அவர்கள் “அல்லாஹ்வை அவன் தனித்தவன் என நாங்கள் விசுவாசிக்கின்றோம். நாங்கள் இணைவைக்கக்கூடியவர்களாக இருந்தவற்றை நாங்கள் நிராகரித்தும் விட்டோம்” எனக் கூறினார்கள்.
Saheeh International
And when they saw Our punishment, they said, "We believe in Allah alone and disbelieve in that which we used to associate with Him."
فَلَمْ یَكُ یَنْفَعُهُمْ اِیْمَانُهُمْ لَمَّا رَاَوْا بَاْسَنَا ؕ سُنَّتَ اللّٰهِ الَّتِیْ قَدْ خَلَتْ فِیْ عِبَادِهٖ ۚ وَخَسِرَ هُنَالِكَ الْكٰفِرُوْنَ ۟۠
فَلَمْஆனால் இல்லைیَكُஇருந்ததுیَنْفَعُهُمْஅவர்களுக்குப் பயனளிக்கاِیْمَانُهُمْஅவர்களின் நம்பிக்கைلَمَّاபோதுرَاَوْاஅவர்கள் கண்டبَاْسَنَا ؕநம் தண்டனையைسُنَّتَவழிமுறைاللّٰهِஅல்லாஹ்வின்الَّتِیْஅத்தகையقَدْநிச்சயமாகخَلَتْகடந்து சென்றுவிட்டதுفِیْமத்தியில்عِبَادِهٖ ۚஅவனுடைய அடியார்கள்وَ خَسِرَமேலும் நஷ்டமடைந்தனர்هُنَالِكَஅவ்விடத்தில்الْكٰفِرُوْنَ۠நிராகரிப்பாளர்கள்
Fபலம் யகு யன்Fப 'உஹும் ஈமானுஹும் லம்மா ர-அவ் Bப'ஸன ஸுன்னதல் லாஹில் லதீ கத் கலத் Fபீ 'இBபாதிஹீ வ கஸிர ஹுனாலிகல் காFபிரூன்
முஹம்மது ஜான்
ஆயினும், நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், நம் வேதனையைக் கண்ணால் கண்ட பின்னர், அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. இதுவே, அல்லாஹ்வுடைய வழி. (இதற்கு முன்னரும்) அவனுடைய அடியார்களில் (இவ்வாறே) நிகழ்ந்திருக்கிறது. ஆதலால், (வேதனை இறங்கிய) அந்த நேரத்தில் நிராகரிப்பவர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.
IFT
ஆனால், நம்முடைய தண்டனையைக் கண்ட பின்னால் அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது போயிற்று. ஏனெனில், இதுவே அல்லாஹ்வின் நியதி; இது அவனுடைய அடிமைகளுக்கிடையே என்றென்றும் நடைபெற்று வருகின்றது. மேலும், அந்நேரம் நிராகரிப்பாளர்கள் நஷ்டத்துக்கு ஆளாகி விட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நம்முடைய வேதனையை அவர்கள் கண்டபோது, அவர்களின் விசுவாசம் அவர்களுக்குப் பயனளிப்பதாக இருக்கவில்லை,_(இதற்கு முன்னர்) அவனுடைய அடியார்களில் சென்றுவிட்டதே அத்தகைய அல்லாஹ்வுடைய வழி முறையாக_(இது நடந்தேறியது) அவ்விடத்தில் நிராகரிப்போர் நஷ்டத்தையே அடைந்தார்கள்.
Saheeh International
But never did their faith benefit them once they saw Our punishment. [It is] the established way of Allah which has preceded among His servants. And the disbelievers thereupon lost [all].