இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இவையெல்லாம் நீங்களும், உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களே தவிர (அவை வணங்கத் தகுதியானவை) இல்லை. அ(வை வணங்கத் தகுதியானவை என்ப)தற்காக அல்லாஹ் உங்களுக்கு எந்த ஆதாரத்தையும் (முந்திய வேதங்களிலும்) இறக்கிவைக்கவில்லை. அவர்கள் (தங்கள்) மன இச்சைகளையும் வீண் சந்தேகத்தையும் தவிர, (இறை வேதத்தை பின்பற்றுவது) இல்லை. நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி (இந்த குர்ஆன்) வந்தே இருக்கிறது. (எனினும், அதை அவர்கள் பின்பற்றுவதில்லை.)
IFT
உண்மையில், இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட சில பெயர்களேயன்றி வேறெதுவுமில்லை. இவற்றிற்கு இறைவன் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. உண்மை யாதெனில், மக்கள் வெறும் ஊகத்தையே பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். மனம்போன போக்கில் செல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களின் அதிபதியிடமிருந்து அவர்களுக்கு வழிகாட்டல் வந்துவிட்டிருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக்கொண்ட (வெறும்) பெயர்களே தவிர இல்லை, அ(வை தெய்வங்களென்ப)தற்காக அல்லாஹ் (உங்களுக்கு) யாதொரு சான்றையும் (முந்திய எந்த வேதத்திலும்) இறக்கி வைக்கவில்லை, அவர்கள் வீண் எண்ணத்தையும், மனங்கள் விரும்புவனவற்றையும் தவிர (வேறு எதையும்) பின்பற்றவில்லை, நிச்சயமாக அவர்கள் இரட்சகனிடமிருந்து அவர்களுக்கு நேர் வழி வந்து விட்டது, (ஆனால், அதனை அவர்கள் பின்பற்றுவதில்லை.)
Saheeh International
They are not but [mere] names you have named them - you and your forefathers - for which Allah has sent down no authority. They follow not except assumption and what [their] souls desire, and there has already come to them from their Lord guidance.
அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.
அப்துல் ஹமீது பாகவி
வானத்தில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். (எவருக்காகவும்)அவர்கள் பரிந்து பேசுவது ஒரு பயனும் அளிக்காது. ஆயினும், அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து (அவருக்காக) அவன் அனுமதி கொடுக்கிறானோ அவருக்கே தவிர (மற்றவருக்கு பயனளிக்காது).
IFT
வானங்களில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். அவர்களுடைய பரிந்துரை எந்தப் பயனும் அளிக்காது எவரை அல்லாஹ் விரும்புகின்றானோ, எவரைப் பற்றிய வேண்டுகோளை செவிமடுக்க நாடுகின்றானோ, (அத்தகையவருக்காக) பரிந்துரைக்குமாறு அல்லாஹ் அனுமதித்தாலே தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், வானங்களில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர், அல்லாஹ் தான் நாடியோருக்கு அனுமதியளித்து, அவன் திருப்தியும் கொண்ட பின்னரே தவிர அவர்களின் பரிந்துரை (எவருக்காகவும்) யாதொரு பயனுமளிக்காது.
Saheeh International
And how many angels there are in the heavens whose intercession will not avail at all except [only] after Allah has permitted [it] to whom He wills and approves.
வமா லஹும் Bபிஹீ மின் 'இல்மின் இ(ன்)ய் யத்தBபி'ஊன இல்லள் ளன்ன வ இன்னள் ளன்ன லா யுக்னீ மினல் ஹக்கி ஷய்'ஆ
முஹம்மது ஜான்
எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை; அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை; நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
இதைப் பற்றி அவர்களுக்கு ஒரு ஞானமும் கிடையாது. (ஆதாரமற்ற) வீண் சந்தேகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. வீண் சந்தேகம் எதையும் உறுதிப்படுத்தாது.
IFT
உண்மை யாதெனில் இவ்விஷயத்தைக் குறித்து ஞானம் எதுவும் இவர்கள் பெற்றிருக்கவில்லை. மேலும், இவர்கள் ஊகத்தைத்தான் பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சத்தியத்திற்கு எதிரில் ஊகம் எந்தப் பயனும் தருவது இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதைபற்றி அவர்களுக்கு எவ்வித அறிவுமில்லை, (வீண்) எண்ணத்தைத் தவிர, (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை, நிச்சயமாக வீண் எண்ணம் உண்மையிலிருந்து (அதற்கு எதிராக) யாதொரு பலனையும் அளிக்காது.
Saheeh International
And they have thereof no knowledge. They follow not except assumption, and indeed, assumption avails not against the truth at all.
ஆகவே, எவன் நம்மை தியானிப்பதை விட்டும் பின் வாங்கிக் கொண்டானோ - இவ்வுலக வாழ்வையன்றி வேறெதையும் நாடவில்லையோ அவனை (நபியே!) நீர் புறக்கணித்து விடும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவன் என்னைத் தியானிக்காது விலகி, இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கிறானோ, அவனை நீர் புறக்கணித்து விடுவீராக.
IFT
(நபியே!) எவன் நம்முடைய அறிவுரையைப் புறக்கணிக்கின்றானோ, மேலும், உலக வாழ்க்கையைத் தவிர வேறெந்த குறிக்கோளும் அவனுக்கு இல்லையோ அவனை அவனது நிலையிலேயே விட்டுவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! எவன் நம்மை நினைவு கூர்வதைவிட்டும் முகம் திருப்பிக் கொண்டானோ. அவனை நீர் புறக்கணித்துவிடும், இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் அவன் நாடவில்லை.
Saheeh International
So turn away from whoever turns his back on Our message and desires not except the worldly life.
ஏனெனில் அவர்களுடைய மொத்தக் கல்வி ஞானம் (செல்வது) அந்த எல்லை வரைதான்; நிச்சயமாக, உம்முடைய இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யார் என்பதை நன்கறிகிறான்; நேரான வழி பெற்றவன் யார் என்பதையும் அவன் நன்கறிகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரம்தான் செல்கிறது (இதற்கு மேல் செல்வதில்லை.) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான்.
IFT
இவர்களின் அறிவின் எல்லை அவ்வளவுதான்! இறைவனே நன்கறிகின்றான் அவனுடைய பாதையை விட்டுப் பிறழ்ந்தவர் யார்; நேரான வழியில் இருப்பவர் யார் என்பதனை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதுதான் கல்வியறிவில் அவர்களின் எல்லையாகும். (இதற்கப்பால்) நிச்சயமாக உமதிரட்சகன், தன்னுடைய வழியிலிருந்து தவறியவர் யாரென்பதையும் மிக அறிந்தவன், அவனே நேர்வழி செல்பவனையும் மிக அறிந்தவன்.
Saheeh International
That is their sum of knowledge. Indeed, your Lord is most knowing of who strays from His way, and He is most knowing of who is guided.
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்).
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. ஆகவே, தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயலுக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுக்கிறான். நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கிறான்.
IFT
மேலும், பூமி மற்றும் வானங்களிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உரிமையாளன் அல்லாஹ்தான்! தீமை செய்தவர்களுக்கு அவர்களின் செயல்களுக்குரிய பிரதிபலனை அல்லாஹ் கொடுப்பதற்காகவும், நற்பணி ஆற்றியவர்களுக்கு நற்கூலியை அவன் வழங்குவதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியன, ஆகவே, தீமை செய்தோருக்கு அவர்களுடைய (தீ) வினைக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுப்பதற்காகவும், நன்மை செய்தோருக்கு நன்மையைக் கூலியாகக் கொடுப்பதற்காகவும் (மறுமையை பிற்படுத்தி வைத்திருக்கின்றான்).
Saheeh International
And to Allah belongs whatever is in the heavens and whatever is in the earth - that He may recompense those who do evil with [the penalty of] what they have done and recompense those who do good with the best [reward] -
(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.
அப்துல் ஹமீது பாகவி
(நன்மை செய்யும்) அவர்கள் (ஏதும் தவறாக ஏற்பட்டுவிடும்) அற்பமான பாவங்களைத் தவிர, மற்ற பெரும்பாவங்களிலிருந்தும், மானக்கேடான விஷயங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன். உங்களைப் பூமியிலிருந்து உற்பத்தி செய்த சமயத்தில் (உங்கள் தன்மையை) அவன் நன்கறிவான். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கர்ப்பப்பிண்டமாயிருந்த சமயத்திலும் உங்களை அவன் நன்கறிவான். ஆகவே, ‘‘தூய்மையானவர்கள்' என உங்களை நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான்.
IFT
அவர்களோ பெரும் பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துக் கொள்வார்கள்; ஏதோ ஒரு சில பிழைகளைத் தவிர! சந்தேகமின்றி உம் இறைவனின் மன்னிப்பு மிகவும் விசாலமானதாகும். அவன் உங்களை எப்போது மண்ணிலிருந்து படைத்தானோ மேலும், எப்போது நீங்கள் உங்கள் அன்னையரின் வயிற்றில் கருவாக இருந்தீர்களோ அப்போதிருந்தே உங்களை அவன் நன்கு அறிந்திருக்கின்றான். எனவே, நீங்கள் உங்களைத் தூயவர்களென வாதிடாதீர்கள்! உண்மையில் யார் இறையச்சமுடையவர் என்பதை அவனே நன்கறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், (தவிர்க்க முடியாத) சிறு பாவங்கள் தவிர, மற்ற பெரும் பாவங்களையும், மானக்கேடான விஷயங்களையும் தவிர்த்துக் கொள்கிறார்கள், நிச்சயமாக உமதிரட்சகன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன், உங்களை பூமியிலிருந்து உற்பத்திச் செய்த சமயத்திலும், இன்னும் நீங்கள் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த சமயத்திலும், உங்களைப்பற்றி அவன் மிக அறிந்தவன், ஆகவே, நீங்களே உங்களை (தூய்மையானவர்களென எண்ணிக்கொண்டு) பரிசுத்தப்படுத்திக் கொள்ளவேண்டாம், (உங்களில்) பயபக்தியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.
Saheeh International
Those who avoid the major sins and immoralities, only [committing] slight ones. Indeed, your Lord is vast in forgiveness. He was most knowing of you when He produced you from the earth and when you were fetuses in the wombs of your mothers. So do not claim yourselves to be pure; He is most knowing of who fears Him.
وَقَوْمَஇன்னும் மக்களையும்نُوْحٍநூஹூடையمِّنْ قَبْلُؕஇதற்கு முன்னர்اِنَّهُمْநிச்சயமாக இவர்கள்كَانُوْا هُمْஇவர்கள் இருந்தனர்اَظْلَمَமிகப் பெரிய அநியாயக்காரர்களாகوَاَطْغٰىؕஇன்னும் மிகப் பெரிய வரம்பு மீறிகளாக
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய மக்களையும் (அழித்தவன் அவன்தான்). நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) அநியாயக்காரர்களாகவும், வரம்பு மீறியவர்களாகவும் இருந்தனர்.
IFT
மேலும் அவர்களுக்கு முன்பு நூஹின் சமூகத்தினரை அழித்தான். ஏனெனில், அவர்கள் பெரும் கொடுமைக்காரர்களாகவும் வரம்பு மீறியவர்களாகவும் இருந்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்களுக்கு) முன்னர் நூஹ்வுடைய சமூகத்தாரையும், (அழித்தவன் அவன்தான்.) நிச்சயமாக, அவர்கள் தாம் பெரும் அநியாயக்காரர்களாக, மற்றும் மிகுந்த வரம்பு மீறியவர்களாக இருந்தார்கள்.
Saheeh International
And the people of Noah before. Indeed, it was they who were [even] more unjust and oppressing.