அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
அப்துல் ஹமீது பாகவி
ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீர் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர்.
IFT
அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். (நீர் அங்கு இருந்திருந்தால்) இற்றுப்போன ஈச்சமரத் தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அதை அவன் வசப்படுத்தி (வீசச்செய்து) இருந்தான், ஆகவே, (நபியே! அப்பொழுது நீர் அங்கிருந்திருப்பின்) அவற்றில் அக்கூட்டத்தினரை-நிச்சயமாக அவர்கள், அடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கும் ஈச்சமரங்களைப் போன்று பிணங்களாக(க் கிடப்பதை) நீர் காண்பீர்.
Saheeh International
Which He [i.e., Allah] imposed upon them for seven nights and eight days in succession, so you would see the people therein fallen as if they were hollow trunks of palm trees.
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும் தலைகீழாகப் புறட்டப்பட்ட ஊரிலிருந்த (லூத்துடைய) மக்களும் (அந்த உண்மையான சம்பவத்தை நிராகரித்துப்) பாவம் செய்துகொண்டே வந்தார்கள்.
IFT
ஃபிர்அவ்னும் அவனுக்கு முன்பிருந்த மக்களும், தலை கீழாகப் புரட்டப்பட்ட ஊர் (வாசி)களும் இதே பெருந்தவறைச் செய்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஃபிர் அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும், தலை கீழாய்ப் புரட்டப்பட்ட ஊரிலிருந்தவர்களும் (இணைவைத்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரித்துப்) பாவச்செயலைச் செய்து வந்தார்கள்.
Saheeh International
And there came Pharaoh and those before him and the overturned cities with sin.
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
அப்துல் ஹமீது பாகவி
அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்).
IFT
இச்சம்பவங்களை நாம் படிப்பினையூட்டும் ஒரு பாடமாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும், நினைவுகூரும் செவிகள் இதனை நினைவிலிருத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்குவதற்காகவும், பேணிப்பாதுகாக்கும் செவி, அதனை (க்கேட்ட பின் நினைவில் வைத்து) பேணிப் பாதுகாப்பதற்காகவும் (அவ்வாறு செய்தோம்).
Saheeh International
That We might make it for you a reminder and [that] a conscious ear would be conscious of it.
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), “இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்” எனக் கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
எவருடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுகிறாரோ அவர் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்)கூறுவார்: ‘‘இதோ! என் ஏடு; இதை நீங்கள் படித்துப் பாருங்கள்,
IFT
அன்று தன் வலக்கையில் யாருக்குச் செயலேடு தரப்படு கிறதோ அவர் கூறுவார்: “இதோ, பாருங்கள்! படியுங்கள், என் வினைச் சுவடியை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எவர், தன்னுடைய பதிவுப்புத்தகத்தை வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ அவர், (மற்றவர்களிடம்) வாருங்கள், என்னுடைய பதிவுப் புத்தகத்தை நீங்கள் படித்துப் பாருங்கள்” என்று (மகிழ்ச்சியுடன்) கூறுவார்.
Saheeh International
So as for he who is given his record in his right hand, he will say, "Here, read my record!
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திலிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும்.
IFT
அங்கு பழக்குலைகள் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதன் கனிகள் (அவர்களின் கைக்கெட்டும் விதமாக பறிப்பதற்கு மிக) நெருங்கியவையாக இருக்கும்.
“சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களை நோக்கி) ‘‘சென்ற நாள்களில் நீங்கள் சேகரித்து வைத்திருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, மிக்க தாராளமாக இவற்றைப் புசியுங்கள்! அருந்துங்கள்'' (என்று கூறப்படும்).
IFT
(இத்தகையவர்களிடம்) கூறப்படும்: “சுவையாக உண்ணுங்கள்; பருகுங்கள்! கடந்து சென்ற நாட்களில் நீங்கள் ஆற்றிய நற்காரியங்களுக்குப் பகரமாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்களிடம்,) “சென்று போன நாட்களில் (உலகில் மறுமைக்காக நன்மையானவற்றை) நீங்கள் முற்படுத்தி வைத்திருந்த காரணத்திற்காக, மகிழ்வோடு (இவைகளை) உண்ணுங்கள், இன்னும், அருந்துங்கள்” (என்று கூறப்படும்)
Saheeh International
[They will be told], "Eat and drink in satisfaction for what you put forth in the days past."
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
அப்துல் ஹமீது பாகவி
எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான்.
IFT
மேலும், தன்னுடைய இடக்கையில் செயலேடு கொடுக்கப்படுபவர் கூறுவார்: “அந்தோ! என்னுடைய செயலேடு எனக்குத் தரப்படாமல் இருந்திருக்கக் கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவன் தன்னுடைய (பதிவுப்) புத்தகத்தை இடக்கையில் கொடுக்கப்பட்டானோ அவன், “என்னுடைய (செயல்கள் பதியப்பட்ட) புத்தகத்தை நான் கொடுக்கப்படாமலிருந்திருக்க வேண்டுமே!” என்று கூறுவான்.
Saheeh International
But as for he who is given his record in his left hand, he will say, "Oh, I wish I had not been given my record