8. ஸூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)

மதனீ, வசனங்கள்: 75

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَنْفَالِ ؕ قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَیْنِكُمْ ۪ وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
یَسْـَٔلُوْنَكَஅவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْاَنْفَالِ ؕபோர்ச் செல்வங்களைப்قُلِநீர் கூறுவீராகالْاَنْفَالُபோர்ச் செல்வங்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்கும்وَ الرَّسُوْلِ ۚஅவனது தூதருக்கும் உரியனவாகும்فَاتَّقُواஎனவே அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ اَصْلِحُوْاமேலும் சீர்படுத்திக் கொள்ளுங்கள்ذَاتَஉறவுகளைبَیْنِكُمْ ۪உங்களுக்கு இடையில்وَ اَطِیْعُواமேலும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்கும்وَ رَسُوْلَهٗۤஅவனது தூதருக்கும்اِنْஎனில்كُنْتُمْநீங்கள்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக (இருந்தால்)
யஸ்'அலூனக 'அனில் அன்Fபாலி குலில் அன்Fபாலு லில்லாஹி வர் ரஸூலி Fபத்தகுல் லாஹ வ அஸ்லிஹூ தாத Bபய்னிகும் வ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ இன் குன்தும் மு'மினீன்
முஹம்மது ஜான்
போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ‘அன்ஃபால்' (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘அன்ஃபால்' அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் எதையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்.
IFT
(நபியே!) அன் ஃபால் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றார்கள். கூறுவீராக: “அன் ஃபால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியனவாகும். எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! மேலும், உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீராக்கிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் நம்பிக்கை கொண்டோராயின் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அன்ஃபால் (போர் முனையில் கிடைத்த வெற்றிப் பொருட்களைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர், (அதற்கு) நீர் கூறுவீராக! “அன்ஃபால் அல்லாஹ்வுக்கும் (அவனுடைய) தூதருக்கும் உரியதாகும், ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், (அதில் யாதொன்றையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் (உங்களுடைய) நிலைகளை சீராக்கிக் கொள்ளுங்கள், நீங்கள் உண்மை விசுவாசிகளாயிருந்தால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழப்படிந்து நடந்து கொள்ளுங்கள்.
Saheeh International
They ask you, [O Muhammad], about the bounties [of war]. Say, "The [decision concerning] bounties is for Allah and the Messenger." So fear Allah and amend that which is between you and obey Allah and His Messenger, if you should be believers.
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِیَتْ عَلَیْهِمْ اٰیٰتُهٗ زَادَتْهُمْ اِیْمَانًا وَّعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟ۚۖ
اِنَّمَاநிச்சயமாகالْمُؤْمِنُوْنَஇறைநம்பிக்கையாளர்கள்الَّذِیْنَஎவர்கள் என்றால்اِذَاஎப்பொழுதுذُكِرَநினைவுகூரப்படுகிறதோاللّٰهُஅல்லாஹ்وَ جِلَتْபயந்து நடுங்கும்قُلُوْبُهُمْஅவர்களின் உள்ளங்கள்وَ اِذَاமேலும் எப்பொழுதுتُلِیَتْஓதிக் காண்பிக்கப்படுகிறதோعَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتُهٗஅவனுடைய வசனங்கள்زَادَتْهُمْஅவர்களுக்கு அதிகப்படுத்தும்اِیْمَانًاநம்பிக்கையைوَّ عَلٰیமேலும் மீதுرَبِّهِمْதங்கள் இறைவனின்یَتَوَكَّلُوْنَۚۖஅவர்கள் முழு நம்பிக்கை வைப்பார்கள்
இன்னமல் மு'மினூனல் லதீன இதா துகிரல் லாஹு வஜிலத் குலூBபுஹும் வ இதா துலியத் 'அலய்ஹிம் ஆயாதுஹூ Zஜாதத் ஹும் ஈமான(ன்)வ் வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக்கலூன்
முஹம்மது ஜான்
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்,) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்.
IFT
உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் யாரெனில், அல்லாஹ்வின் பெயர் கூறப்படும்போது, அவர்களுடைய உள்ளங்கள் அஞ்சி நடுங்கும்! மேலும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை அதிகமாகிவிடும். மேலும், அவர்கள் தங்களுடைய இறைவனையே முழுவதும் சார்ந்திருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ் (-அவன் பெயர் அவர்கள் முன்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும், மேலும், (இவ்வேதத்தை இறக்கி வைத்த) அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவை அவர்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும், அவர்கள் தங்கள் இரட்சகனின் மீது (தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கையும் வைப்பார்கள்.
Saheeh International
The believers are only those who, when Allah is mentioned, their hearts become fearful, and when His verses are recited to them, it increases them in faith; and upon their Lord they rely -
الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ؕ
الَّذِیْنَஎவர்கள்یُقِیْمُوْنَநிலைநாட்டுகிறார்களோالصَّلٰوةَதொழுகையைوَ مِمَّاமேலும் எவற்றிலிருந்துرَزَقْنٰهُمْநாம் அவர்களுக்கு வழங்கினோமோیُنْفِقُوْنَؕசெலவு செய்கிறார்களோ
அல்லதீன யுகீமூனஸ் ஸலாத வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
முஹம்மது ஜான்
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.
IFT
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். இன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நம்முடைய வழியில்) செலவு செய்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், தொழுகையை நிறைவேற்றுவார்கள், நாம் அவர்களுக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து (தானமாகச்) செலவும் செய்வார்கள்.
Saheeh International
The ones who establish prayer, and from what We have provided them, they spend.
اُولٰٓىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ؕ لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟ۚ
اُولٰٓىِٕكَஅவர்கள்தாம்هُمُஅவர்களேالْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்حَقًّا ؕஉண்மையாகவேلَهُمْஅவர்களுக்குدَرَجٰتٌபதவிகள்عِنْدَஇடத்தில்رَبِّهِمْதங்கள் இறைவனின்وَ مَغْفِرَةٌமேலும் மன்னிப்பும்وَّ رِزْقٌமற்றும் வாழ்வாதாரமும்كَرِیْمٌۚகண்ணியமான
உலா'இக ஹுமுல் மு'மினூன ஹக்கா; லஹும் தரஜாதுன் 'இன்த ரBப்Bபிஹிம் வ மக் Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
முஹம்மது ஜான்
இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும் மன்னிப்பும் உண்டு; இன்னும், கண்ணியமான உணவும் உண்டு.
IFT
இத்தகையோர்தாம் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உயர்ந்த படித்தரங்கள் இருக்கின்றன. மேலும், தவறுகளுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இத்தகையோர்தாம் உண்மையாகவே விசுவாசிகள், அவர்களுக்கு அவர்கள் இரட்சகனிடத்தில் பல உயர் பதவிகளும், மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.
Saheeh International
Those are the believers, truly. For them are degrees [of high position] with their Lord and forgiveness and noble provision.
كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْ بَیْتِكَ بِالْحَقِّ ۪ وَاِنَّ فَرِیْقًا مِّنَ الْمُؤْمِنِیْنَ لَكٰرِهُوْنَ ۟ۙ
كَمَاۤஎவ்வாறெனில்اَخْرَجَكَஉம்மை வெளியேற்றினானோرَبُّكَஉமது இறைவன்مِنْۢஇருந்துبَیْتِكَஉமது இல்லம்بِالْحَقِّ ۪சத்தியத்தைக் கொண்டுوَ اِنَّமேலும் நிச்சயமாகفَرِیْقًاஒரு பிரிவினர்مِّنَஇருந்துالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்கள்لَكٰرِهُوْنَۙநிச்சயமாக வெறுப்பவர்கள்
கமா அக்ரஜக ரBப்Bபுக மிம் Bபய்திக Bபில்ஹக்க்; வ இன்ன Fபரீகம் மினல் மு'மினீன லகாரிஹூன்
முஹம்மது ஜான்
(நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவன் உமது இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உம்மை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உம்முடன் வர) விரும்பாதவாறே,
IFT
(இந்தப் போர்ப் பொருட்கள் விவகாரத்தில் உருவாகிக் கொண்டிருக்கிற நிலை, முன்பு ஏற்பட்ட நிலையைப் போன்றே உள்ளது. அப்போது) உம் இறைவன் உம்மைச் சத்தியத்துடன் உம் வீட்டிலிருந்து வெளிக் கொணர்ந்தான். இறைநம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினருக்கு அது வெறுப்பாக இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! யுத்தப் பொருட்கள் பங்கீடு விஷயத்தில் அவர்கள் அதிருப்தியுற்றது) உமதிரட்சகன், உம் இல்லத்திலிருந்து உண்மையைக் கொண்டு உம்மை வெளியேற்றியதை (அவர்கள் விரும்பாததை)ப் போன்றிருக்கிறது, நிச்சயமாக விசுவாசிகளில் ஒரு கூட்டத்தினர், (‘பத்ரு’ யுத்தத்தின்போது உம்முடன் வருவதை) வெறுக்கக்கூடியவர்களாக இருக்க,
Saheeh International
[It is] just as when your Lord brought you out of your home [for the battle of Badr] in truth, while indeed, a party among the believers were unwilling,
یُجَادِلُوْنَكَ فِی الْحَقِّ بَعْدَ مَا تَبَیَّنَ كَاَنَّمَا یُسَاقُوْنَ اِلَی الْمَوْتِ وَهُمْ یَنْظُرُوْنَ ۟ؕ
یُجَادِلُوْنَكَஅவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்கிறார்கள்فِیகுறித்துالْحَقِّசத்தியத்தைக்بَعْدَ مَاபிறகுتَبَیَّنَஅது தெளிவானதுكَاَنَّمَاபோன்றேیُسَاقُوْنَஅவர்கள் ஓட்டிச் செல்லப்படுகிறார்கள்اِلَیநோக்கிالْمَوْتِமரணத்தைوَ هُمْமேலும் அவர்கள்یَنْظُرُوْنَؕபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
யுஜாதிலூனக Fபில் ஹக்கி Bபஃத மா தBபய்யன க'அன்னமா யஸாகூன இலல் மவ்தி வ ஹும் யன்ளுரூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கின்றார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
(போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உம்முடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்களால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்!
IFT
அவர்கள் சத்தியம் தெளிவாகி விட்ட பின்னரும் அது குறித்து உம்மிடம் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுடைய நிலைமை, கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மரணத்தின் பக்கமாக இழுத்துச் செல்லப்படுவது போன்று இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யுத்தம் செய்வது அவசியம் என அவர்களுக்குத்) தெளிவான பின்னர்), தாங்கள் (கண்ணால் மரணத்தைப்)பார்த்துக் கொண்டிருக்க (யாரோ ஒருவரால்) மரணத்தின்பால் அவர்கள் இழுத்துச் செல்லப்படுபவர்களைப் போன்று இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்.
Saheeh International
Arguing with you concerning the truth after it had become clear, as if they were being driven toward death while they were looking on.
وَاِذْ یَعِدُكُمُ اللّٰهُ اِحْدَی الطَّآىِٕفَتَیْنِ اَنَّهَا لَكُمْ وَتَوَدُّوْنَ اَنَّ غَیْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُوْنُ لَكُمْ وَیُرِیْدُ اللّٰهُ اَنْ یُّحِقَّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَیَقْطَعَ دَابِرَ الْكٰفِرِیْنَ ۟ۙ
وَ اِذْமேலும் (அச்சமயம்)یَعِدُكُمُஉங்களுக்கு வாக்களித்தான்اللّٰهُஅல்லாஹ்اِحْدَیஒன்றைالطَّآىِٕفَتَیْنِஇரு கூட்டங்களில்اَنَّهَاஅதுلَكُمْஉங்களுக்கு (உரியது என்று)وَ تَوَدُّوْنَமேலும் நீங்கள் விரும்பினீர்கள்اَنَّநிச்சயமாகغَیْرَஅல்லாததுذَاتِஉடையالشَّوْكَةِஆயுத பலம்تَكُوْنُஇருக்க வேண்டும் (என்று)لَكُمْஉங்களுக்குوَ یُرِیْدُஆனால் நாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَنْஎன்றுیُّحِقَّநிலைநாட்டالْحَقَّசத்தியத்தைبِكَلِمٰتِهٖதனது வார்த்தைகளால்وَ یَقْطَعَமேலும் அறுக்கدَابِرَவேரைالْكٰفِرِیْنَۙநிராகரிப்பவர்களின்
வ இத் ய'இதுகுமுல் லாஹு இஹ்தத் தா'இFபதய்னி அன்னஹா லகும் வ தவத்தூன அன்ன கய்ர தாதிஷ் ஷவ்கதி தகூனு லகும் வ யுரீதுல் லாஹு அய் யுஹிக்கல் ஹக்க Bபிகலிமாதிஹீ வ யக்த'அ தாBபிரல் காFபிரீன்
முஹம்மது ஜான்
(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுதமில்லாத (வர்த்தகக் கூட்டமான)து உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் வாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும், நிராகரிப்போரை வேரறுக்கவுமே நாடுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(எதிரிகளின்) இரு கூட்டங்களில் ஒன்று, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்து விடுமென்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த சமயத்தில் நீங்கள் (அவ்விரண்டில்) பலமில்லாத (வர்த்தகக்) கூட்டத்தை (அடைய) விரும்பினீர்கள். எனினும், அல்லாஹ்வோ தன் வாக்கின்படி உண்மையை நிலைநாட்டி நிராகரிப்பவர்களின் வேரை அறுத்து விடவே நாடினான்.
IFT
மேலும், இதனையும் நினைத்துப் பாருங்கள்; “இரு கூட்டத்தாரில் ஒரு கூட்டம் நிச்சயம் உங்கள் கைக்குக் கிடைத்து விடுவர்” என்று அல்லாஹ் உங்களிடம் வாக்குறுதி அளித்தான். ஆனால், நிராயுதபாணிகளான கூட்டத்தினர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினீர்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் வாக்குகளால் சத்தியத்தை சத்தியம் என்று காட்டவும், நிராகரிப்பாளர்களை வேரறுக்கவுமே நாடியிருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (விரோதிகளின் இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒன்றை- நிச்சயமாக அது உங்களுக்குத்தான் என அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை-(நினைவு கூருங்கள், அவ்விரண்டில்) நிச்சயமாக ஆயுதமில்லாத (வர்த்தகக் கூட்டமான)து உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென நீங்கள் விரும்பினீர்கள், இன்னும் அல்லாஹ்வோ, தன் வாக்குகளின் மூலம் உண்மையை நிலைநாட்டவும், நிராகரிப்போரை வேரறுத்துவிடவும் நாடுகிறான்.
Saheeh International
[Remember, O believers], when Allah promised you one of the two groups - that it would be yours - and you wished that the unarmed one would be yours. But Allah intended to establish the truth by His words and to eliminate the disbelievers
لِیُحِقَّ الْحَقَّ وَیُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ ۟ۚ
لِیُحِقَّநிலைநாட்டுவதற்காகالْحَقَّசத்தியத்தைوَ یُبْطِلَமேலும் அழிக்கالْبَاطِلَஅசத்தியத்தைوَ لَوْஎன்றாலும்كَرِهَவெறுத்தالْمُجْرِمُوْنَۚகுற்றவாளிகள்
லியுஹிக்கல் ஹக்க வ யுBப்திலல் Bபாதில வ லவ் கரிஹல் முஜ்ரிமூன்
முஹம்மது ஜான்
மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).
அப்துல் ஹமீது பாகவி
பாவிகள் வெறுத்தபோதிலும் இறுதியில் பொய்யை அழித்து உண்மையை நிலை நாட்(டவே நா)டினான்.
IFT
ஏனெனில், சத்தியம் சத்தியம்தான் என்றும், அசத்தியம் அசத்தியம்தான் என்றும் தெளிவாக்கிட வேண்டும் என்பதற்காக! குற்றவாளிகள் (இதனை எவ்வளவு) வெறுத்தாலும் சரியே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
குற்றவாளிகள் வெறுத்த போதிலும் அவன் உண்மையை நிலைநாட்டி விட மற்றும் பொய்யை அவன் அழித்துவிடவுமே (நாடுகிறான்.)
Saheeh International
That He should establish the truth and abolish falsehood, even if the criminals disliked it.
اِذْ تَسْتَغِیْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ اَنِّیْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُرْدِفِیْنَ ۟
اِذْஅச்சமயம்تَسْتَغِیْثُوْنَநீங்கள் உதவி தேடியபோதுرَبَّكُمْஉங்கள் இறைவனிடம்فَاسْتَجَابَஅப்போது அவன் பதிலளித்தான்لَكُمْஉங்களுக்குاَنِّیْநிச்சயமாக நான்مُمِدُّكُمْஉங்களுக்கு உதவி செய்பவன்بِاَلْفٍஆயிரம் பேரைக் கொண்டுمِّنَஇருந்துالْمَلٰٓىِٕكَةِவானவர்களில்مُرْدِفِیْنَதொடர்ச்சியாக வருபவர்களாக
இத் தஸ்தகீதூன ரBப்Bபகும் Fபஸ்தஜாBப லகும் அன்னீ முமித்துகும் Bபி அல்Fபிம் மினல் மலா'இகதி முர்திFபீன்
முஹம்மது ஜான்
(நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது ‘‘அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்'' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்.
IFT
உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடி முறையிட்டுக் கொண்டிருந்ததையும் நினைத்துப் பாருங்கள்; அப்போது அவன் பதிலளித்தான்; “ஓராயிரம் வானவர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, திண்ணமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடியபோது “(அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்து) வரக் கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் பேர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்” என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.
Saheeh International
[Remember] when you were asking help of your Lord, and He answered you, "Indeed, I will reinforce you with a thousand from the angels, following one another."
وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی وَلِتَطْمَىِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ ۚ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
وَ مَاமேலும் இல்லைجَعَلَهُஅதனை ஆக்கினான்اللّٰهُஅல்லாஹ்اِلَّاதவிரبُشْرٰیநற்செய்தியாகوَ لِتَطْمَىِٕنَّமேலும் அமைதியடைவதற்காகبِهٖஅதைக் கொண்டுقُلُوْبُكُمْ ۚஉங்கள் உள்ளங்கள்وَ مَاமேலும் இல்லைالنَّصْرُஉதவிاِلَّاதவிரمِنْஇருந்துعِنْدِபுறத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌ۠ஞானமிக்கவன்
வமா ஜ'அலஹுல் லாஹு இல்லா Bபுஷ்ரா வ லிதத்ம'இன்ன Bபிஹீ குலூBபுகும்; வ மன் னஸ்ரு இல்லா மின் 'இன்தில் லாஹ்; இன்னல் லாஹ அZஜீZஜுன் ஹகீம்
முஹம்மது ஜான்
உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.  
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் திருப்தியடைவதற்காக ஒரு நற்செய்தியாகவே இதை அல்லாஹ் (உங்களுக்கு) ஆக்கி வைத்தான். அல்லாஹ்விடம் இருந்தே தவிர (உங்களுக்கு) இவ்வுதவி கிடைத்து விடவில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன் ஞானமுடையவன் ஆவான்.
IFT
அல்லாஹ் இதனை அறிவித்தது, உங்களுக்கு ஒரு நற் செய்தியாகவும், இதன் மூலம் உங்கள் இதயங்கள் நிம்மதியடைவதற்காகவுமே! தவிர, வெற்றி என்றைக்கும் அல்லாஹ்விடமிருந்துதான் ஏற்படுகிறது! நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உங்களுக்கு) நன்மாராயமாகவும், அதனால் உங்கள் இதயங்கள் அமைதி பெறுவதற்காகவுமே தவிர அதை அல்லாஹ் ஆக்கவில்லை, இன்னும், உதவி அல்லாஹ்விடமிருந்தே தவிர இல்லை, நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
And Allah made it not but good tidings and so that your hearts would be assured thereby. And victory is not but from Allah. Indeed, Allah is Exalted in Might and Wise.
اِذْ یُغَشِّیْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَیُنَزِّلُ عَلَیْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّیُطَهِّرَكُمْ بِهٖ وَیُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّیْطٰنِ وَلِیَرْبِطَ عَلٰی قُلُوْبِكُمْ وَیُثَبِّتَ بِهِ الْاَقْدَامَ ۟ؕ
اِذْஅச்சமயம்یُغَشِّیْكُمُஅவன் உங்களை ஆட்கொள்ளச் செய்தான்النُّعَاسَசிறு தூக்கத்தைاَمَنَةًஅமைதிக்காகمِّنْهُஅவனிடமிருந்துوَ یُنَزِّلُமேலும் அவன் இறக்கினான்عَلَیْكُمْஉங்கள் மீதுمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்مَآءًநீரைلِّیُطَهِّرَكُمْஉங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகبِهٖஅதன் மூலம்وَ یُذْهِبَமேலும் போக்கடிக்கعَنْكُمْஉங்களிடமிருந்துرِجْزَஅசுத்தத்தைالشَّیْطٰنِஷைத்தானுடையوَ لِیَرْبِطَமேலும் பலப்படுத்தعَلٰیமீதுقُلُوْبِكُمْஉங்கள் உள்ளங்களின்وَ یُثَبِّتَமேலும் நிலைப்படுத்தبِهِஅதன் மூலம்الْاَقْدَامَؕபாதங்களை
இத் யுகஷ்ஷீகுமுன் னு'அஸ்ஸ அமனதம் மின்ஹு வ யுனZஜ்Zஜிலு 'அலய்கும் மினஸ் ஸமா'இ மா'அல் லியுதஹ் ஹிரகும் Bபிஹீ வ யுத்ஹிBப 'அன்கும் ரிஜ்Zஜஷ் ஷய்தானி வ லியர்Bபித 'அல குலூBபிகும் வ யுதBப்Bபித Bபிஹில் அக்தாம்
முஹம்மது ஜான்
(நினைவு கூறுங்கள்:) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந்தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களை சூழ்ந்து கொள்ளும்படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அது சமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களை பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையை பொழியச் செய்தான்.
IFT
இதையும் நினைத்துப் பாருங்கள்; அல்லாஹ் உங்களைச் சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மன நிம்மதியையும் அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் பொழியச் செய்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே! உங்கள் மனம் மிகக் கூடுதலான எதிரிகளைக் கண்டு பயப்படாது) அபயம் பெறுவதற்காக அவனிடமிருந்து உங்களுக்கு சிறிய தூக்கத்தை அவன் போட்டான் என்பதை-(நினைத்துப் பார்ப்பீர்களாக! அது சமயம்) உங்களை அதைக்கொண்டு தூய்மைப் படுத்துவதற்காகவும் உங்களைவிட்டு ஷைத்தானுடைய அச்சத்தை தீய ஊசாட்டத்தை)ப் போக்கிவிடுவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி, அதைக்கொண்டு உங்கள் பாதங்களை உறுதிப் படுத்துவதற்காகவும், அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான்.
Saheeh International
[Remember] when He overwhelmed you with drowsiness [giving] security from Him and sent down upon you from the sky, rain by which to purify you and remove from you the evil [suggestions] of Satan and to make steadfast your hearts and plant firmly thereby your feet.
اِذْ یُوْحِیْ رَبُّكَ اِلَی الْمَلٰٓىِٕكَةِ اَنِّیْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِیْنَ اٰمَنُوْا ؕ سَاُلْقِیْ فِیْ قُلُوْبِ الَّذِیْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍ ۟ؕ
اِذْஅச்சமயம்یُوْحِیْஅறிவித்தபோதுرَبُّكَஉமது இறைவன்اِلَیநோக்கிالْمَلٰٓىِٕكَةِவானவர்களிடம்اَنِّیْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன் இருக்கிறேன்فَثَبِّتُواஎனவே உறுதிப்படுத்துங்கள்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْا ؕஈமான் கொண்டார்களோسَاُلْقِیْநான் போடுவேன்فِیْஇல்قُلُوْبِஇதயங்களில்الَّذِیْنَஎவர்கள்كَفَرُواநிராகரித்தார்களோالرُّعْبَதிகிலைفَاضْرِبُوْاஎனவே வெட்டுங்கள்فَوْقَமேலேالْاَعْنَاقِகழுத்துகளுக்குوَ اضْرِبُوْاமேலும் வெட்டுங்கள்مِنْهُمْஅவர்களில்كُلَّஒவ்வொருبَنَانٍؕவிரல் நுனியையும்
இத் யூஹீ ரBப்Bபுக இலல் மலா'இகதி அன்னீ ம'அகும் FபதBப்Bபிதுல் லதீன ஆமனூ; ஸ உல்கீ Fபீ குலூBபில் லதீன கFபருர் ருஃBப Fபள்ரிBபூ Fபவ்கல் அஃனாகி வள்ரிBபூ மின்ஹும் குல்ல Bபனான்
முஹம்மது ஜான்
(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நான் திகிலை உண்டு பண்ணுவேன் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்'' என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள்.
IFT
இதனையும் நினைவுகூருங்கள்: உம் இறைவன் வானவர்களிடம் அறிவித்துக் கொண்டிருந்தான்: “நிச்சயமாக நான் உங்களோடு இருக்கின்றேன். எனவே நம்பிக்கையாளர்களை நீங்கள் உறுதியாக இருக்கச் செய்யுங்கள்! இதோ! நிராகரிப் பாளர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விடுகின்றேன். எனவே, நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள்; அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டுகளிலும் அடியுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உமதிரட்சகன் மலக்குகளின்பால், “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன், ஆகவே, நீங்கள் விசுவாசங்கொண்டோரை உறுதிப்படுத்துங்கள் (என்று கட்டளையிட்டு) நிராகரிப்போருடைய இதயங்களில் திகிலை நான் போட்டு விடுவேன், ஆகவே, நீங்கள் அவர்களுடைய கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள், அவர்களின் (உடலில் உள்ள உறுப்புக்களின்) இணைப்புகளைத் துண்டித்து விடுங்கள்” என்று (விசுவாசிகளுக்குக் கூறுமாறு வஹீமூலம்) அறிவித்ததை நினைத்துப் பார்ப்பீராக!
Saheeh International
[Remember] when your Lord inspired to the angels, "I am with you, so strengthen those who have believed. I will cast terror into the hearts of those who disbelieved, so strike [them] upon the necks and strike from them every fingertip."
ذٰلِكَ بِاَنَّهُمْ شَآقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۚ وَمَنْ یُّشَاقِقِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
ذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்شَآقُّواமாறுசெய்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ رَسُوْلَهٗ ۚஇன்னும் அவனுடைய தூதரைوَ مَنْமேலும் எவர்یُّشَاقِقِமாறுசெய்கிறாரோاللّٰهَஅல்லாஹ்வைوَ رَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதரைفَاِنَّஆக நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِதண்டனை அளிப்பதில்
தாலிக Bபி அன்னஹும் ஷாக்குல் லாஹ வ ரஸூலஹ்; வ மய் யுஷகிகில் லாஹ வ ரஸூலஹூ Fப இன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
முஹம்மது ஜான்
இதற்கு காரணம்: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
இதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். ஆகவே, எவரேனும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிகக் கடுமையாகவே வேதனை செய்வான்.
IFT
இதற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்ததுதான்! மேலும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் யார் எதிர்க்கின்றார்களோ (அவர்களை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர் என்ற காரணத்தினாலாகும், இன்னும், எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முரண்படுகிறாரோ நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) தண்டனை செய்வதில் மிகக் கடினமானவன்.
Saheeh International
That is because they opposed Allah and His Messenger. And whoever opposes Allah and His Messenger - indeed, Allah is severe in penalty.
ذٰلِكُمْ فَذُوْقُوْهُ وَاَنَّ لِلْكٰفِرِیْنَ عَذَابَ النَّارِ ۟
ذٰلِكُمْஇதுவேفَذُوْقُوْهُஆகவே அதனைச் சுவையுங்கள்وَ اَنَّமேலும் நிச்சயமாகلِلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குعَذَابَவேதனைالنَّارِநெருப்பின்
தாலிகும் Fபதூகூஹு வ அன்ன லில்காFபிரீன 'அதாBபன் னார்
முஹம்மது ஜான்
“இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு” என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
(நிராகரிப்பவர்களே! நீங்கள் அடையப்போகும் வேதனை) இதோ! இதை நீங்கள் சுவைத்துப் பாருங்கள். அன்றி (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு (மறுமையில்) நிச்சயமாக நரக வேதனையும் உண்டு.
IFT
“இதுதான் உங்களுக்குரிய தண்டனை. இப்பொழுது இதனைச் சுவையுங்கள்!” மேலும், சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்குத் திண்ணமாக நரக வேதனை இருக்கிறது (என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(“நிராகரிப்போர்களே! நீங்கள் அடையப்போகும் வேதனை) இதோ! இதனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள், (உங்களைப் போன்ற) நிராகரிப்போர்க்கு (மறுமையில்) நிச்சயமாக நரக வேதனையுமுண்டு” (என்று கூறப்படும்).
Saheeh International
"That [is yours], so taste it." And indeed for the disbelievers is the punishment of the Fire.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِیْتُمُ الَّذِیْنَ كَفَرُوْا زَحْفًا فَلَا تُوَلُّوْهُمُ الْاَدْبَارَ ۟ۚ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِذَاபொழுதுلَقِیْتُمُநீங்கள் எதிர்கொண்டால்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோزَحْفًاஅணிவகுத்துفَلَاஎனவே வேண்டாம்تُوَلُّوْهُمُஅவர்களுக்குக் காட்டுங்கள்الْاَدْبَارَۚபுறமுதுகுகளை
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா லகீதுமுல் லதீன கFபரூ Zஜஹ்Fபன் Fபலா துவல்லூஹுமுல் அத்Bபார்
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களின் படையைச் சந்தித்தால் அவர்களுக்குப் புறங்காட்(டி ஓடிவி)டாதீர்கள்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் படையாகத் திரண்டு சென்று இறைநிராகரிப்பாளர்களுடன் போரிட நேர்ந்தால், அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! போர்முனையில் போரிட இரு அணியும் நெருங்கி நிற்கும்போது காஃபிர்களை நீங்கள் சந்தித்தால், நீங்கள் அவர்களுக்குப் புறமுதுகுகளைக் காட்டி ஓடி விடாதீர்கள்.
Saheeh International
O you who have believed, when you meet those who disbelieve advancing [in battle], do not turn to them your backs [in flight].
وَمَنْ یُّوَلِّهِمْ یَوْمَىِٕذٍ دُبُرَهٗۤ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوْ مُتَحَیِّزًا اِلٰی فِئَةٍ فَقَدْ بَآءَ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰىهُ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
وَ مَنْமேலும் எவர்یُّوَلِّهِمْஅவர்களுக்குத் திருப்புகிறாரோیَوْمَىِٕذٍஅந்நாளில்دُبُرَهٗۤதனது முதுகைاِلَّاதவிரمُتَحَرِّفًاபோர் தந்திரத்திற்காகلِّقِتَالٍபோரிடاَوْஅல்லதுمُتَحَیِّزًاசேர்ந்து கொள்வதற்காகاِلٰیஇடம்فِئَةٍஒரு கூட்டத்தார்فَقَدْநிச்சயமாகبَآءَஅவர் ஆளாகிவிட்டார்بِغَضَبٍகோபத்திற்குمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்وَ مَاْوٰىهُமேலும் அவரது தங்குமிடம்جَهَنَّمُ ؕநரகமாகும்وَ بِئْسَமேலும் அது மிகக் கெட்டالْمَصِیْرُசேருமிடம்
வ மய் யுவல்லிஹிம் யவ்ம'இதின் துBபுரஹூ இல்லா முதஹர்ரிFபல் லிகிதாலின் அவ் முதஹய்யிZஜன் இலா Fபி'அதின் Fபகத் Bபா'அ BபிகளBபிம் மினல் லாஹி வ ம'வாஹு ஜஹன்னமு வ Bபி'ஸல் மஸீர்
முஹம்மது ஜான்
(எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே; இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.
அப்துல் ஹமீது பாகவி
(எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ தவிர, எவரேனும் அதுசமயம் புறங்காட்(டி ஓ)டினால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுடைய கோபத்திற்குள்ளாகி விடுவான். அவன் தங்குமிடம் நரகம்தான்; அது மிகக்கெட்ட தங்குமிடம்.
IFT
அந்நாளில் யாரேனும் புறமுதுகு காட்டி ஓடினால் போர்த் தந்திரத்திற்காகவோ, வேறொரு படையுடன் சேர்ந்து கொள்வதற்காகவோ செல்பவரைத் தவிர மற்றவர்கள் திண்ணமாக அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிடுவர். மேலும், அவர்களுடைய புகலிடம் நரகமாகும். அது மோசமான இருப்பிடமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
போருக்காக(ப் பின்சென்று தாக்குவதன் நிமித்தம்) ஒதுங்கக் கூடியவரையும், அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளக்கூடியவரையும் அன்றி, எவரேனும் அது சமயம் புறமுதுகிட்டுச் சென்றால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வுடைய கோபத்தைக் கொண்டு மீண்டு விட்டார், அவர் ஒதுங்குமிடமும் நரகமாகும், இன்னும் சென்றடையும் இடத்தில் அது மிகக் கெட்டது.
Saheeh International
And whoever turns his back to them on such a day, unless swerving [as a strategy] for war or joining [another] company, has certainly returned with anger [upon him] from Allah, and his refuge is Hell - and wretched is the destination.
فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰكِنَّ اللّٰهَ قَتَلَهُمْ ۪ وَمَا رَمَیْتَ اِذْ رَمَیْتَ وَلٰكِنَّ اللّٰهَ رَمٰی ۚ وَلِیُبْلِیَ الْمُؤْمِنِیْنَ مِنْهُ بَلَآءً حَسَنًا ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
فَلَمْஎனவே இல்லைتَقْتُلُوْهُمْஅவர்களை நீங்கள் கொன்றீர்கள்وَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்قَتَلَهُمْ ۪அவர்களைக் கொன்றான்وَ مَاமேலும் இல்லைرَمَیْتَநீர் எறிந்தீர்اِذْபோதுرَمَیْتَநீர் எறிந்தீர்وَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்رَمٰی ۚஎறிந்தான்وَ لِیُبْلِیَமேலும் அவன் சோதிப்பதற்காகالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களைمِنْهُஅவனிடமிருந்துبَلَآءًஒரு சோதனையைحَسَنًا ؕஅழகியاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
Fபலம் தக்துலூஹும் வ லாகின்னல் லாஹ கதலஹும்; வமா ரமய்த இத் ரமய்த வ லாகின்னல் லாஹ ரமா; வ லியுBப்லியல் மு'மினீன மின்ஹு Bபலா'அன் ஹஸனா; இன்னல் லாஹ ஸமீ'உன் அலீம்
முஹம்மது ஜான்
(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களைக் கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதை) நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்.
IFT
உண்மை யாதெனில், நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை; அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான்! மேலும் (நபியே!) நீர் எறிந்தபோது உண்மையில் எறிந்தது நீரல்லர். மாறாக, அல்லாஹ்தான் எறிந்தான். மேலும், (இறை நம்பிக்கையாளர்களை இதில் பங்கேற்கச் செய்தது எதற்காகவெனில், அல்லாஹ் நம்பிக்கையாளர்களை நன்மை தரக்கூடிய சோதனையில் ஆழ்த்தி வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக! திண்ணமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) பத்ருப் போரில் எதிரிகளாகிய) அவர்களை நீங்கள் கொல்லவில்லை, எனினும், அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான், (நபியே! விரோதிகளின் மீது) நீர் (மண்ணை) எறிந்தபோது (அதனை) நீர் எறியவில்லை, எனினும், அல்லாஹ்தான் (உம்மூலம் அதனை) எறிந்தான், (அதன்மூலம்) அழகான முறையில் விசுவாசிகளுக்கு அருட்கொடையை நல்குவதற்காக (இவ்வாறு அல்லாஹ் செய்தான்) நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
Saheeh International
And you did not kill them, but it was Allah who killed them. And you threw not, [O Muhammad], when you threw, but it was Allah who threw that He might test the believers with a good test. Indeed, Allah is Hearing and Knowing.
ذٰلِكُمْ وَاَنَّ اللّٰهَ مُوْهِنُ كَیْدِ الْكٰفِرِیْنَ ۟
ذٰلِكُمْஅதுوَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مُوْهِنُபலவீனமாக்குபவன்كَیْدِசூழ்ச்சியைالْكٰفِرِیْنَநிராகரிப்போரின்
தாலிகும் வ அன்னல் லாஹ மூஹினு கய்தில் காFபிரீன்
முஹம்மது ஜான்
இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை (இழிவுபடுத்தி) பலவீனப்படுத்துவதற்காகவே நிச்சயமாக அல்லாஹ் இவ்வாறு செய்தான்.
IFT
இது உங்கள் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையாகும். ஆனால் நிராகரிப்பாளர் (களின் நிலை யாதெனில் அவர்)களின் சதித்திட்டங்களைத் திண்ணமாக, அல்லாஹ் பலவீனப்படுத்தக்கூடியவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இணை வைப்பவர்கள் கொல்லப்பட்டு முஸ்லிம்கள் வெற்றியடைந்த) அது (அல்லாஹ்விடமிருந்தாகும்.) இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை பலவீனப்படுத்தக்கூடியவன்.
Saheeh International
That [is so], and [also] that Allah will weaken the plot of the disbelievers.
اِنْ تَسْتَفْتِحُوْا فَقَدْ جَآءَكُمُ الْفَتْحُ ۚ وَاِنْ تَنْتَهُوْا فَهُوَ خَیْرٌ لَّكُمْ ۚ وَاِنْ تَعُوْدُوْا نَعُدْ ۚ وَلَنْ تُغْنِیَ عَنْكُمْ فِئَتُكُمْ شَیْـًٔا وَّلَوْ كَثُرَتْ ۙ وَاَنَّ اللّٰهَ مَعَ الْمُؤْمِنِیْنَ ۟۠
اِنْநீங்கள்تَسْتَفْتِحُوْاதீர்ப்பை வேண்டினால்فَقَدْஅப்படியானால் நிச்சயமாகجَآءَكُمُஉங்களிடம் வந்துவிட்டதுالْفَتْحُ ۚஅந்தத் தீர்ப்புوَ اِنْஇன்னும் நீங்கள்تَنْتَهُوْاவிலகிக் கொண்டால்فَهُوَஅதுخَیْرٌசிறந்ததுلَّكُمْ ۚஉங்களுக்குوَ اِنْஇன்னும் நீங்கள்تَعُوْدُوْاமீண்டும் திரும்பினால்نَعُدْ ۚநாமும் திரும்புவோம்وَ لَنْமேலும் ஒருபோதும்تُغْنِیَபயன் தராதுعَنْكُمْஉங்களுக்குفِئَتُكُمْஉங்கள் கூட்டம்شَیْـًٔاசிறிதும்وَّ لَوْஇன்னும்كَثُرَتْ ۙஅது அதிகமாக இருந்தாலும்وَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَعَஉடன் (இருக்கிறான்)الْمُؤْمِنِیْنَ۠நம்பிக்கையாளர்கள்
இன் தஸ்தFப்திஹூ Fபகத் ஜா'அகுமுல் Fபத்ஹு வ இன் தன்தஹூ Fபஹுவ கய்ருல் லகும் வ இன் த'ஊதூ ன'உத் வ லன் துக்னிய 'அன்கும் Fபி'அதுகும் ஷய்'அ(ன்)வ் வ லவ் கதுரத் வ அன்னல் லாஹ ம'அல் மு'மினீன்
முஹம்மது ஜான்
(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது; இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).  
அப்துல் ஹமீது பாகவி
(நிராகரிப்பாளர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றி கொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்கள் கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் (அது) உங்களுக்கு ஒரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்.
IFT
(இந்நிராகரிப்பாளர்களிடம் நீர் கூறுவீராக) “நீங்கள் ஒரு முடிவை விரும்புகின்றீர்கள் என்றால், இதோ! அந்த முடிவு உங்கள் முன் வந்துவிட்டது. இனி நீங்கள் தவறான போக்கைத் தவிர்த்துக் கொண்டால், அது உங்களுக்கு நல்லதாகும். (அறிவற்ற இதே செயலின் பக்கம்) நீங்கள் மீண்டும் திரும்பினால், நாமும் மீண்டும் தண்டிப்போம். உங்களுடைய கூட்டம் எவ்வளவு அதிகமாயினும் சரியே, அது உங்களுக்கு யாதொரு பலனையும் அளிக்காது. திண்ணமாக, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் தீர்ப்பைத் தேடக் கூடியவர்களாக இருந்தால் (இதோ அது பற்றிய) தீர்ப்பு உங்களிடம் திட்டமாக வந்துவிட்டது, இன்னும் நீங்கள் போர் செய்வதை விட்டும்) விலகிக்கொண்டால், அது உங்களுக்கே நன்று, இன்னும் நீங்கள் (போர் செய்யத்) திரும்பினால் (உதவியை நல்க) நாமும் திரும்புவோம், உங்களுடைய கூட்டம் (படை) அது எவ்வளவு பெரியதாக இருந்தபோதிலும் (அது) உங்களுக்கு யாதொரு பலனையும் ஒருபோதும் அளிக்காது, மேலும், நிச்சயமாக அல்லாஹ், விசுவாசிகளுடன் இருக்கின்றான்.
Saheeh International
If you [disbelievers] seek the decision [i.e., victory] - the decision [i.e., defeat] has come to you. And if you desist [from hostilities], it is best for you; but if you return [to war], We will return, and never will you be availed by your [large] company at all, even if it should increase; and [that is] because Allah is with the believers.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَاَنْتُمْ تَسْمَعُوْنَ ۟ۚۖ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டீர்களோاَطِیْعُواகீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلَهٗமேலும் அவனுடைய தூதருக்கும்وَ لَاமேலும் வேண்டாம்تَوَلَّوْاபுறக்கணிக்கعَنْهُஅவரை விட்டும்وَ اَنْتُمْஇன்னும் நீங்கள்تَسْمَعُوْنَۚۖசெவியேற்றுக் கொண்டே
யா அய்யுஹல் லதீன ஆமனூ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ வலா தவல்லவ் 'அன்ஹு வ அன்தும் தஸ்ம'ஊன்
முஹம்மது ஜான்
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! மேலும் (கட்டளையைச்) செவியேற்ற பின் அதைப் புறக்கணிக்காதீர்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள், நீங்கள் (அவருடைய போதனைகளைச் செவியுற்றுக் கொண்டிருக்கும் பொழுது) அவருடைய கட்டளைக்கு மாறு செய்து அவரைவிட்டும் திரும்பிவிடாதீர்கள்.
Saheeh International
O you who have believed, obey Allah and His Messenger and do not turn from him while you hear [his order].
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ قَالُوْا سَمِعْنَا وَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟
وَ لَاமேலும் வேண்டாம்تَكُوْنُوْاநீங்கள் ஆகிவிடكَالَّذِیْنَஅவர்களைப் போலقَالُوْاஅவர்கள் கூறினார்கள்سَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்وَ هُمْமேலும் அவர்கள்لَاஇல்லைیَسْمَعُوْنَசெவியேற்கிறார்கள்
வ லா தகூனூ கல்லதீன காலூ ஸமிஃனா வ ஹும் லா யஸ்ம'ஊன்
முஹம்மது ஜான்
(மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, “நாங்கள் செவியுற்றோம்” என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! மனமாற) செவியுறாது ‘‘செவியுற்றோம்'' என்று (வாயால் மட்டும்) கூறியவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம்.
IFT
மேலும், செவியேற்காமல் இருந்து கொண்டு “நாங்கள் செவியேற்றோம்” என்று கூறியவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாங்கள் செவியுற்றோம்” என்று (வாயால் மட்டும்) கூறி (உண்மையாகச்), செவியேற்காமல் இருந்தவர்களைப்போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம்.
Saheeh International
And do not be like those who say, "We have heard," while they do not hear.
اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِیْنَ لَا یَعْقِلُوْنَ ۟
اِنَّநிச்சயமாகشَرَّமிகக் கெட்டவைالدَّوَآبِّஉயிரினங்களில்عِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்الصُّمُّசெவிடர்கள்الْبُكْمُஊமையர்கள்الَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَعْقِلُوْنَசிந்திக்கிறார்கள்
இன்ன ஷர்ரத் தவாBப்Bபி 'இன்தல் லாஹிஸ் ஸும்முல் Bபுக்முல் லதீன லா யஃகிலூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால்நடைகளில் மிகக் கேவலமானவை (எவையென்றால் சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத செவிடர்களும், ஊமையர்களும்தான்.
IFT
திண்ணமாக சிந்தித்து உணராத செவிடர்களும், ஊமையர்களும்தான் அல்லாஹ்விடத்தில் மிகவும் இழிவான விலங்குகளாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்விடம் நிச்சயமாக (பூமியில்) ஊர்ந்து திரிபவைகளில் மிகக்கெட்டவை (உண்மையை) விளங்கிக் கொள்ளாதவர்களான செவிடர்களும் ஊமையர்களுமேயாவர்.
Saheeh International
Indeed, the worst of living creatures in the sight of Allah are the deaf and dumb who do not use reason [i.e., the disbelievers].
وَلَوْ عَلِمَ اللّٰهُ فِیْهِمْ خَیْرًا لَّاَسْمَعَهُمْ ؕ وَلَوْ اَسْمَعَهُمْ لَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ ۟
وَ لَوْமேலும், ஒருவேளைعَلِمَஅறிந்திருந்தால்اللّٰهُஅல்லாஹ்فِیْهِمْஅவர்களிடம்خَیْرًاநன்மையைلَّاَسْمَعَهُمْ ؕஅவர்களைச் செவியேற்கச் செய்திருப்பான்وَ لَوْமேலும், ஒருவேளைاَسْمَعَهُمْஅவர்களைச் செவியேற்கச் செய்திருந்தாலும்لَتَوَلَّوْاஅவர்கள் திரும்பியிருப்பார்கள்وَّ هُمْமேலும் அவர்கள்مُّعْرِضُوْنَபுறக்கணிப்பவர்களாகவே
வ லவ் 'அலிமல் லாஹு Fபீஹிம் கய்ரல் ல அஸ்ம'அஹும்; வ லவ் அஸ்ம'அஹும் லதவல்லவ் வ ஹும் முஃரிளூன்
முஹம்மது ஜான்
அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிடம் ஒரு நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால் அவன் அவர்களை செவியுறச் செய்திருப்பான். (அவர்களிடம் ஒரு நன்மையும் இல்லாததனால் அல்லாஹ்) அவர்களைச் செவியுறச் செய்தபோதிலும் அவர்கள் புறக்கணித்து மாறிவிடுவார்கள்.
IFT
அவர்களிடம் கொஞ்சமேனும் நல்லியல்பு இருப்பதாக அல்லாஹ் அறிந்திருந்தால், நிச்சயம் அவர்களுக்குச் செவியுறும் பேற்றினை அருளியிருப்பான். ஆனால் (நல்லியல்பற்றவர்களாய் இருந்தும்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்திருந்தால் புறக்கணித்தவர்களாய் முகம் திருப்பிக் கொண்டு போயிருப்பார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களிடம் ஏதேனும் நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவிமடுக்கச் செய்திருப்பான், (அவர்களிடம் யாதொரு நன்மையும் இல்லாதனால்) அவன் அவர்களைச் செவிமடுக்கச் செய்திருந்தபோதிலும் (அதனைப்)புறக்கணித்தவர்களாகவே அவர்கள் திரும்பிவிடுவார்கள்.
Saheeh International
Had Allah known any good in them, He would have made them hear. And if He had made them hear, they would [still] have turned away, while they were refusing.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اسْتَجِیْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا یُحْیِیْكُمْ ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَحُوْلُ بَیْنَ الْمَرْءِ وَقَلْبِهٖ وَاَنَّهٗۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاسْتَجِیْبُوْاபதிலளியுங்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குوَ لِلرَّسُوْلِமேலும் தூதருக்கும்اِذَاபொழுதுدَعَاكُمْஅவர் உங்களை அழைக்கும்لِمَاஎதன் பக்கம்یُحْیِیْكُمْ ۚஉங்களுக்கு வாழ்வளிக்கிறதோوَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَحُوْلُகுறுக்கிடுகிறான்بَیْنَஇடையேالْمَرْءِமனிதனுக்கும்وَ قَلْبِهٖஅவனுடைய உள்ளத்திற்கும்وَ اَنَّهٗۤமேலும் நிச்சயமாக அவன்اِلَیْهِஅவனிடமேتُحْشَرُوْنَநீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனுஸ் தஜீBபூ லில்லாஹி வ லிர் ரஸூலி இதா த'ஆகும் லிமா யுஹ்யீகும் வஃலமூ அன்னல் லாஹ யஹூலு Bபய்னல் மர்'இ வ கல்Bபிஹீ வ அன்னஹூ இலய்ஹி துஹ்ஷரூன்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளங்களில் உள்ளதற்கும் இடையில் தடையேற்படுத்தி விடுகிறான் என்பதையும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே (கொண்டு வரப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு வாழ்வு அளிக்கக்கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்! அல்லாஹ், மனிதனையும் அவனது உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கின்றான் என்பதையும், திண்ணமாக அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் - உங்களை வாழ வைப்பதன்பால் (அல்லாஹ்வின் தூதராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள், நிச்சயமாக அல்லாஹ், மனிதனுக்கும், அவனுடைய இதயத்திற்கும் மத்தியில் சூழ்ந்து (செயலாற்றிக் கொண்டு) இருக்கிறான், (ஆகவே, மனிதன் எதையும் அல்லாஹ்வின் அருளின்றி செய்யும் ஆற்றல் பெறமாட்டான்) என்பதையும், நிச்சயமாக அவனின் பாலே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
Saheeh International
O you who have believed, respond to Allah and to the Messenger when he calls you to that which gives you life. And know that Allah intervenes between a man and his heart and that to Him you will be gathered.
وَاتَّقُوْا فِتْنَةً لَّا تُصِیْبَنَّ الَّذِیْنَ ظَلَمُوْا مِنْكُمْ خَآصَّةً ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
وَ اتَّقُوْاமேலும் அஞ்சிக்கொள்ளுங்கள்فِتْنَةًஒரு சோதனையைلَّاஅதுتُصِیْبَنَّபாதிக்காதுالَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْاஅநியாயம் செய்தார்களோمِنْكُمْஉங்களில்خَآصَّةً ۚகுறிப்பாகوَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِதண்டனை அளிப்பதில்
வத்தகூ Fபித்னதல் லா துஸீBபன்னல் லதீன ளலமூ மின்கும் காஸ்ஸத் வ'லமூ அன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
முஹம்மது ஜான்
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் ஒரு வேதனையை பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயக் காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
IFT
மேலும் எந்த ஃபித்னாவின் குழப்பத்தின் தீய விளைவு உங்களில் பாவம் புரிந்தவர்களைத் தாக்குவதுடன் மட்டும் நின்றுவிடாதோ அந்தக் குழப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்! மேலும், திண்ணமாக அல்லாஹ் கடுமையாக தண்டனை அளிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உங்களில் அநியாயம் செய்தோரை மட்டுமே குறிப்பாகப் பிடிக்காத வேதனையை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (அதனால் ஏற்படும் விளைவு உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்) நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடினமானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
Saheeh International
And fear a trial which will not strike those who have wronged among you exclusively, and know that Allah is severe in penalty.
وَاذْكُرُوْۤا اِذْ اَنْتُمْ قَلِیْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِی الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ یَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰىكُمْ وَاَیَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ مِّنَ الطَّیِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَ اذْكُرُوْۤاமேலும் நினைவு கூருங்கள்اِذْஅச்சமயம்اَنْتُمْநீங்கள்قَلِیْلٌகுறைந்தவர்களாகمُّسْتَضْعَفُوْنَபலவீனர்களாகفِیஇல்الْاَرْضِபூமியில்تَخَافُوْنَநீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தீர்கள்اَنْஎன்றுیَّتَخَطَّفَكُمُஉங்களை அள்ளிச் செல்வார்கள்النَّاسُமனிதர்கள்فَاٰوٰىكُمْஅப்பொழுது அவன் உங்களுக்குப் புகலிடம் அளித்தான்وَ اَیَّدَكُمْமேலும் உங்களைப் பலப்படுத்தினான்بِنَصْرِهٖதனது உதவியைக் கொண்டுوَ رَزَقَكُمْமேலும் உங்களுக்கு வாழ்வாதாரம் அளித்தான்مِّنَலிருந்துالطَّیِّبٰتِதூய்மையானவற்றைلَعَلَّكُمْநீங்கள் ஆகும் பொருட்டுتَشْكُرُوْنَநன்றி செலுத்துபவர்களாக
வத்குரூ இத் அன்தும் கலீலும் முஸ்தள் 'அFபூன Fபிலர்ளி தகாFபூன அய் யதகத் தFபகுமுன் னாஸு Fப ஆவாகும் வ அய்யதகும் Bபினஸ்ரிஹீ வ ரZஜககும் மினத் தய்யிBபாதி ல'அல்லகும் தஷ்குரூன்
முஹம்மது ஜான்
“நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!”
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து உங்களை எம்மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கிவிடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தி நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
IFT
மேலும், இந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள்: நீங்கள் சிறுபான்மையோராய் இருந்தீர்கள்; பூமியில் வலிமையற்றவர்களாய்க் கருதப்பட்டீர்கள்; பிற மக்கள் உங்களை இறாஞ்சிச் சென்று விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தீர்கள். அப்போது, அல்லாஹ் உங்களுக்கு தஞ்சம் அளித்தான். தனது உதவியின் மூலம் உங்களுடைய கைகளை வலுப்படுத்தினான். மேலும், அவன் நல்ல பொருள்களிலிருந்து உங்களுக்கு உணவு வழங்கினான்; நீங்கள் நன்றி செலுத்தக் கூடும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் (மக்காவெனும்) பூமியில் பலவீனமான மிகச் சிறுபான்மையினராக இருந்து உங்களை எம்மனிதரும், (எந்நேரத்திலும் பலவந்தமாக) இறாய்ஞ்சிக்கொண்டு சென்று விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்தது தன் உதவியைக் கொண்டும் உங்களைப் பலப்படுத்தி பரிசுத்தமான ஆகாரங்களை அவன் உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக (இவ்வாறு செய்தான்).
Saheeh International
And remember when you were few and oppressed in the land, fearing that people might abduct you, but He sheltered you, supported you with His victory, and provided you with good things - that you might be grateful.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْۤا اَمٰنٰتِكُمْ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاசெய்யாதீர்கள்تَخُوْنُواதுரோகம்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ الرَّسُوْلَஇன்னும் தூதருக்கும்وَ تَخُوْنُوْۤاஇன்னும் மோசடி செய்யாதீர்கள்اَمٰنٰتِكُمْஉங்களுடைய அமானிதங்களில்وَ اَنْتُمْநீங்கள்تَعْلَمُوْنَஅறிந்து கொண்டே
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தகூனல் லாஹ வர் ரஸூல வ தகூனூ அமானாதிகும் வ அன்தும் தஃலமூன்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். தவிர, நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்து கொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள்.
IFT
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (அறிந்தும் புரிந்தும்) வஞ்சனை செய்யாதீர்கள்; அறிந்து கொண்டே உங்களுடைய அமானிதங்களில் நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள், மேலும், நீங்கள் (செய்வது அக்கிரமம் என) அறிந்துகொண்டே உங்களிடம் உள்ள அமானிதங்களுக்கும் மோசம் செய்யாதீர்கள்.
Saheeh International
O you who have believed, do not betray Allah and the Messenger or betray your trusts while you know [the consequence].
وَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ۙ وَّاَنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟۠
وَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّمَاۤநிச்சயமாகاَمْوَالُكُمْஉங்கள் செல்வங்களும்وَ اَوْلَادُكُمْஉங்கள் பிள்ளைகளும்فِتْنَةٌ ۙஒரு சோதனைوَّ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عِنْدَهٗۤஅவனிடமேاَجْرٌநற்கூலிعَظِیْمٌ۠மகத்தானது
வஃலமூ அன்னமா அம்வாலுகும் வ அவ்லாதுகும் Fபித்னது(ன்)வ் வ அன்னல் லாஹ 'இன்தஹூ அஜ்ருன் அளீம்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
IFT
உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உண்மையில் சோதனைப் பொருள்களே என்பதையும், திண்ணமாக அல்லாஹ்விடம் மகத்தான கூலி இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும், (உங்களுக்குச்) சோதனையாயிருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்-அவனிடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான (வெகுமதி) நற்கூலி உண்டு என்பதையும் நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
Saheeh International
And know that your properties and your children are but a trial and that Allah has with Him a great reward.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ یَجْعَلْ لَّكُمْ فُرْقَانًا وَّیُكَفِّرْ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டீர்களோاِنْநீங்கள்تَتَّقُواஅஞ்சினால்اللّٰهَஅல்லாஹ்வைیَجْعَلْஅவன் ஏற்படுத்துவான்لَّكُمْஉங்களுக்குفُرْقَانًاபிரித்தறியும் திறனைوَّ یُكَفِّرْமேலும் அவன் போக்கிவிடுவான்عَنْكُمْஉங்களை விட்டும்سَیِّاٰتِكُمْஉங்கள் தீமைகளைوَ یَغْفِرْமேலும் அவன் மன்னிப்பான்لَكُمْ ؕஉங்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்ذُوஉடையவன்الْفَضْلِஅருட்கொடைالْعَظِیْمِமகத்தான
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன் தத்தகுல் லாஹ யஜ்'அல் லகும் Fபுர்கான(ன்)வ் வ யுகFப்Fபிர் 'அன்கும் ஸய்யி ஆதிகும் வ யக்Fபிர் லகும்; வல்லாஹு துல் Fபள்லில் 'அளீம்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தீர்களாயின் உங்களுக்கு (சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக்கூடிய) “உரைகல்லை” வழங்குவான். மேலும், உங்களுடைய தீமைகளை உங்களை விட்டு நீக்கி விடுவான். மேலும், உங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ் மாபெரும் அருளுடையவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்கு (பத்ரில் நடத்தியது போன்று தீர்க்கமான) முடிவை ஆக்குவான், உங்களை விட்டும் பாவங்களைப் போக்கி உங்களை மன்னித்தும் விடுவான், இன்னும் அல்லாஹ் மிக்க மகத்தான பேரருளுடையவன்.
Saheeh International
O you who have believed, if you fear Allah, He will grant you a criterion and will remove from you your misdeeds and forgive you. And Allah is the possessor of great bounty.
وَاِذْ یَمْكُرُ بِكَ الَّذِیْنَ كَفَرُوْا لِیُثْبِتُوْكَ اَوْ یَقْتُلُوْكَ اَوْ یُخْرِجُوْكَ ؕ وَیَمْكُرُوْنَ وَیَمْكُرُ اللّٰهُ ؕ وَاللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ ۟
وَ اِذْமேலும் எப்போதுیَمْكُرُசூழ்ச்சி செய்தார்களோبِكَஉமக்கு எதிராகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلِیُثْبِتُوْكَஉம்மைச் சிறைப்படுத்தاَوْஅல்லதுیَقْتُلُوْكَஉம்மைக் கொல்லاَوْஅல்லதுیُخْرِجُوْكَ ؕஉம்மை வெளியேற்றوَ یَمْكُرُوْنَஅவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள்وَ یَمْكُرُமேலும் சூழ்ச்சி செய்கிறான்اللّٰهُ ؕஅல்லாஹ்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்خَیْرُமிகச் சிறந்தவன்الْمٰكِرِیْنَசூழ்ச்சி செய்வோரில்
வ இத் யம்குரு Bபிகல் லதீன கFபரூ லியுத்Bபிதூக அவ் யக்துலூக அவ் யுக்ரிஜூக்; வ யம்குரூன வ யம்குருல் லாஹு வல்லாஹு கய்ருல் மாகிரீன்
முஹம்மது ஜான்
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பார்ப்பீராக. அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; (அவர்களுக் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன்.
IFT
மேலும், இந்த நேரத்தையும் நினைவுகூருங்கள்: சத்தியத்தை நிராகரித்தவர்கள் உமக்கு எதிராக சதித் திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்; உம்மைக் கைது செய்ய வேண்டும் அல்லது உம்மைக் கொலை செய்ய வேண்டும் அல்லது நாடு கடத்த வேண்டும் என்பதற்காக! (இவ்வாறாக) அவர்கள் தங்களுடைய சூழ்ச்சியைச் செய்துகொண்டிருந்தார்கள்; மேலும், அல்லாஹ் தன்னுடைய சூழ்ச்சியைச் செய்துகொண்டிருந்தான். இன்னும் அல்லாஹ் சூழ்ச்சி செய்வோரில் அனைவரையும்விடச் சிறந்தவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) நிராகரித்துக்கொண்டிருப்போர் உம்மை அவர்கள் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மை அவர்கள் கொலை செய்யவோ, அல்லது உம்மை அவர்கள் (ஊரை விட்டு) வெளியேற்றி விடவோ, உமக்கு விரோதமாக சூழ்ச்சி செய்து கொண்டிருந்த (நேரத்)தை (நினைத்துப் பார்ப்பீராக!) அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர், (அவர்களுக்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான், இன்னும் சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் மிக்க மேலானவன்.
Saheeh International
And [remember, O Muhammad], when those who disbelieved plotted against you to restrain you or kill you or evict you [from Makkah]. But they plan, and Allah plans. And Allah is the best of planners.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا قَالُوْا قَدْ سَمِعْنَا لَوْ نَشَآءُ لَقُلْنَا مِثْلَ هٰذَاۤ ۙ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுتُتْلٰیஓதப்பட்டால்عَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتُنَاநம்முடைய வசனங்கள்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்قَدْநிச்சயமாகسَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்لَوْஒருவேளைنَشَآءُநாங்கள் நாடினால்لَقُلْنَاநாங்களும் கூறியிருப்போம்مِثْلَபோன்றதைهٰذَاۤ ۙஇதைاِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاۤதவிரاَسَاطِیْرُகட்டுக்கதைகளேالْاَوَّلِیْنَமுன்னோர்களின்
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா காலூ கத் ஸமிஃனா லவ் னஷா'உ லகுல்னா மித்ல ஹாதா இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், “நாம் நிச்சயமாக இவற்றை (முன்னரே) கேட்டிருக்கின்றோம்; நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லிவிடுவோம்; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று சொல்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம் வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுமானால் அதற்கவர்கள், ‘‘நிச்சயமாக நாம் (இதை முன்னரே) செவியுற்றுள்ளோம்; நாம் விரும்பினால் இம்மாதிரியான வசனங்களை நாமும் கூறுவோம். இவை முன்னோரின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' என்று கூறுகின்றனர்.
IFT
மேலும், நம் வசனங்கள் அவர்கள் முன் ஓதிக் காண்பிக்கப்படும்போது கூறுவார்கள்: “நாங்கள் கேட்டுக் கொண்டோம்; நாங்கள் நினைத்தால் இதைப் போன்று நாங்களும் உருவாக்கிக் கூறமுடியும்! இவையெல்லாம் முன்னோர்கள் கூறிவரும் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நம்முடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுமானால், அ(தற்க)வர்கள், “திட்டமாக நாம், (இதனை முன்னரே) செவியுற்றுள்ளோம், நாங்கள் நாடினால், இதைப்போன்று நாங்களும் கூறிவிடுவோம், இவை முன்னோரின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று கூறுகின்றனர்.
Saheeh International
And when Our verses are recited to them, they say, "We have heard. If we willed, we could say [something] like this. This is not but legends of the former peoples."
وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَیْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَلِیْمٍ ۟
وَ اِذْஇன்னும் எப்போதுقَالُواஅவர்கள் கூறினார்களோاللّٰهُمَّஇறைவாاِنْஒருவேளைكَانَஇருந்தால்هٰذَاஇதுهُوَஅதுவேالْحَقَّஉண்மைمِنْஇருந்துعِنْدِكَஉன்னிடத்தில்فَاَمْطِرْஎனவே பொழியச் செய்வாயாகعَلَیْنَاஎங்கள் மீதுحِجَارَةًகற்களைمِّنَஇருந்துالسَّمَآءِவானம்اَوِஅல்லதுائْتِنَاஎங்களுக்குக் கொண்டு வருவாயாகبِعَذَابٍவேதனையைاَلِیْمٍநோவினை தரும்
வ இத் காலுல் லாஹும்ம இன் கான ஹாதா ஹுவல் ஹக்க மின் 'இன்திக Fப அம்திர் 'அலய்னா ஹிஜாரதம் மினஸ் ஸமா'இ அவி'தினா Bபி 'அதாBபின் அலீம்
முஹம்மது ஜான்
(இன்னும் நிராகரிப்போர்:) “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பெய்யச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!” என்று கூறினார்கள் (அதையும் நபியே! நீர் நினைவு கூறும்).
அப்துல் ஹமீது பாகவி
மேலும், (அந்நிராகரிப்பவர்கள்) ''எங்கள் அல்லாஹ்வே! இவ்வேதம் உன்னிடமிருந்து வந்தது உண்மையானால் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் ஒரு வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!'' என்று அவர்கள் கூறியதையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக.
IFT
மேலும், அவர்கள் இவ்வாறு கூறியதை நினைத்துப் பாரும்: “இறைவனே! இது உன்னிடமிருந்து அருளப்பட்ட சத்தியம் என்பது உண்மையாயின், எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழிந்து விடு; அல்லது துன்புறுத்தும் வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (நிராகரிப்போர்) “அல்லாஹ்வே! உன்னிடமிருந்து வந்த இதுவே உண்மையானால் எங்கள்மீது வானத்திலிருந்து கல் மாரியைப் பொழியச் செய்வாயாக! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வருவாயாக” என்று அவர்கள் கூறியதை-(நபியே! நீர் நினைத்துப் பார்ப்பீராக!)
Saheeh International
And [remember] when they said, "O Allah, if this should be the truth from You, then rain down upon us stones from the sky or bring us a painful punishment."
وَمَا كَانَ اللّٰهُ لِیُعَذِّبَهُمْ وَاَنْتَ فِیْهِمْ ؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ یَسْتَغْفِرُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஆவான்اللّٰهُஅல்லாஹ்لِیُعَذِّبَهُمْஅவர்களைத் தண்டிப்பதற்குوَ اَنْتَமேலும் நீர்فِیْهِمْ ؕஅவர்களிடையேوَ مَاமேலும் இல்லைكَانَஆவான்اللّٰهُஅல்லாஹ்مُعَذِّبَهُمْஅவர்களைத் தண்டிப்பவனாகوَ هُمْமேலும் அவர்கள்یَسْتَغْفِرُوْنَபாவமன்னிப்புத் தேடுகிறார்கள்
வமா கானல் லாஹு லியு'அத் திBபஹும் வ அன்த Fபீஹிம்; வமா கானல் லாஹு மு'அத் திBபஹும் வ ஹும் யஸ்தக்Fபிரூன்
முஹம்மது ஜான்
ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஆனால், நீர் அவர்களுக்கிடையில் இருக்கும் வரை அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான். மேலும், அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான்.
IFT
ஆனால் நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவனாக இல்லை. மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் மீது வேதனையை இறக்கிவிடுவது அல்லாஹ்வின் நியதியல்ல.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீர் அவர்களுக்கு மத்தியிலிருக்கும் நிலையில், அல்லாஹ் அவர்களை (ஒரு போதும்) வேதனை செய்பவனாக இல்லை, இன்னும் அவர்கள் பாவமன்னிப்பைக் கோரிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.
Saheeh International
But Allah would not punish them while you, [O Muhammad], are among them, and Allah would not punish them while they seek forgiveness.
وَمَا لَهُمْ اَلَّا یُعَذِّبَهُمُ اللّٰهُ وَهُمْ یَصُدُّوْنَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَا كَانُوْۤا اَوْلِیَآءَهٗ ؕ اِنْ اَوْلِیَآؤُهٗۤ اِلَّا الْمُتَّقُوْنَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
وَ مَاமேலும் என்னلَهُمْஅவர்களுக்குاَلَّاதண்டிக்காமல் இருப்பதற்குیُعَذِّبَهُمُஅவர்களைத் தண்டிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்وَ هُمْஅவர்கள்یَصُدُّوْنَதடுக்கிறார்கள்عَنِஎன்பதால்الْمَسْجِدِமஸ்ஜிதுல்الْحَرَامِஹராமை விட்டும்وَ مَاமேலும் இல்லைكَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اَوْلِیَآءَهٗ ؕஅதன் பாதுகாவலர்களாகاِنْஇல்லைاَوْلِیَآؤُهٗۤஅதன் பாதுகாவலர்கள்اِلَّاதவிரالْمُتَّقُوْنَபயபக்தியுடையவர்கள்وَ لٰكِنَّஎனினும்اَكْثَرَهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஇல்லைیَعْلَمُوْنَஅறிகிறார்கள்
வமா லஹும் அல்லா யு'அத் திBபஹுமுல் லாஹு வ ஹும் யஸுத்தூன 'அனில் மஸ்ஜிதில்-ஹராமி வமா கானூ அவ்லியா'அஹ்; இன் அவ்லியா' உஹூ இல்லல் முத்தகூன வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
முஹம்மது ஜான்
(இக்காரணங்கள் இல்லாது) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க (வேறு காரணம்) என்ன இருக்கிறது? அவர்கள் (கஃபாவின்) காரியஸ்தர்களாக இல்லாத நிலையில் அந்த சங்கையான பள்ளிக்கு (மக்கள் செல்வதை)த் தடுக்கின்றனர்; அதன் காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இருக்கமுடியாது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்விரு காரணங்களும் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருப்பதற்கு என்ன (தடை) இருக்கிறது? ஏனென்றால், அவர்களோ சிறப்புற்ற மஸ்ஜிதுக்கு (மக்கள்) செல்வதைத் தடுக்கின்றனர். அவர்கள் அதற்கு பொறுப்பாளர்களல்ல. இறையச்சமுடையவர்களைத் தவிர வேறு எவரும் அதன் பொறுப்பாளர்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
IFT
அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்குச் செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்கு உள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுள்ளவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாய் ஆக முடியும்! எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருப்பதற்கு அவர்களுக்கு வேறு (காரணம்) என்ன இருக்கிறது? அவர்களோ (புனிதப் பள்ளியான) மஸ்ஜிதுல் ஹராமை விட்டு (முஸ்லீம்களை)த் தடுக்கின்றனர், அவர்கள் அதற்குரிய காரியஸ்தர்களாகவும் இருக்கவில்லை, அதற்குரிய காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இல்லை, எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதனை) அறியமாட்டார்கள்.
Saheeh International
But why should Allah not punish them while they obstruct [people] from al-Masjid al-haram and they were not [fit to be] its guardians? Its [true] guardians are not but the righteous, but most of them do not know.
وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَیْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِیَةً ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்ததுصَلَاتُهُمْஅவர்களின் தொழுகைعِنْدَஅருகில்الْبَیْتِஅந்த ஆலயத்தின்اِلَّاதவிரمُكَآءًசீழ்க்கையடிப்பதுوَّ تَصْدِیَةً ؕமற்றும் கைதட்டுவதுفَذُوْقُواஎனவே சுவையுங்கள்الْعَذَابَவேதனையைبِمَاஎதன் காரணமாகكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَكْفُرُوْنَநிராகரித்துக் கொண்டு
வமா கான ஸலாதுஹும் 'இன்தல் Bபய்தி இல்லா முகா அ(ன்)வ்-வ தஸ்தியஹ்; Fபதூகுல் 'அதாBப Bபிமா குன்தும் தக்Fபுரூன்
முஹம்மது ஜான்
அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று).
அப்துல் ஹமீது பாகவி
அந்த அல்லாஹ்வின் வீட்டில் அவர்கள் புரியும் வணக்கமெல்லாம் சீட்டியடிப்பதும், கைதட்டுவதும் தவிர வேறில்லை! (ஆகவே, மறுமையில்) ‘‘உங்கள் நிராகரிப்பின் காரணமாக (இன்றைய தினம்) வேதனையை சுவைத்துப் பாருங்கள்'' (என்றே கூறப்படும்.)
IFT
கஅபா ஆலயத்தில் அவர்களுடைய தொழுகை, சீட்டி அடிப்பதும் கை தட்டுவதுமே அன்றி வேறில்லை! எனவே, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (அல்லாஹ்வின்) இல்லத்தில் அவர்களின் தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறு (எதுவுமாக) இருக்கவில்லை, ஆகவே, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (இன்றையத்தினம்) வேதனையைச் சுவையுங்கள். (என்று மறுமையில் கூறப்படும்.)
Saheeh International
And their prayer at the House [i.e., the Kaʿbah] was not except whistling and handclapping. So taste the punishment for what you disbelieved [i.e., practiced of deviations].
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِیَصُدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ فَسَیُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَیْهِمْ حَسْرَةً ثُمَّ یُغْلَبُوْنَ ؕ۬ وَالَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ یُحْشَرُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோیُنْفِقُوْنَஅவர்கள் செலவிடுகிறார்கள்اَمْوَالَهُمْதங்கள் செல்வங்களைلِیَصُدُّوْاதடுப்பதற்காகعَنْவிட்டுسَبِیْلِபாதையைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்فَسَیُنْفِقُوْنَهَاஎனவே அவர்கள் அதனைச் செலவிடுவார்கள்ثُمَّபிறகுتَكُوْنُஅது மாறும்عَلَیْهِمْஅவர்களுக்குحَسْرَةًகைசேதமாகثُمَّபின்னர்یُغْلَبُوْنَ ؕ۬அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاِلٰیநோக்கிجَهَنَّمَநரகத்தைیُحْشَرُوْنَۙஅவர்கள் ஒன்று சேர்க்கப்படுவார்கள்
இன்னல் லதீன கFபரூ யுன்Fபிகூன அம்வாலஹும் லியஸுத்தூ 'அன் ஸBபீலில் லாஹ்; Fபஸயுன்Fபிகூனஹா தும்ம தகூனு 'அலய்ஹிம் ஹஸ்ரதன் தும்ம யுக்லBபூன்; வல் லதீன கFபரூ இலா ஜஹன்ன்னம யுஹ்ஷரூனா
முஹம்மது ஜான்
நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருள்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனர். அவர்கள் மேலும், இவ்வாறே செலவு செய்வார்கள், முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு வெற்றி கொள்ளப்படுவார்கள். (இப்படிப்பட்ட) நிராகரிப்பவர்கள் (மறுமையில்) நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள்.
IFT
சத்தியத்தை மறுத்தவர்கள், அல்லாஹ்வின் வழியில் செல்ல விடாமல் (மக்களைத்) தடுப்பதற்காகத் தங்களுடைய பொருள்களைச் செலவழிக்கின்றார்கள். மென்மேலும் செலவழித்துக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் இறுதியில், இந்தச் செயல்களே அவர்கள் வருந்துவதற்குக் காரணமாய் அமைந்துவிடும். பிறகு அவர்கள் தோல்வி அடைவார்கள். மேலும், இந்நிராகரிப்பாளர்கள் நரகின் பக்கமே ஒன்று சேர்க்கப்படுவார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நிராகரிப்பவர்கள், தங்கள் செல்வங்களை (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையி(ல் செல்வதி)லிருந்து தடை செய்வதற்காக செலவு செய்கின்றனர், இனியும் அவர்கள் அதை (இவ்வாறே) செலவு செய்வர், பின்னர் (முடிவில்) அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும், பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள், மேலும், (இத்ததைகய) நிராகரித்துக் கொண்டிருப்போர் – (மறுமையில்) நரகத்தின்பால் ஒன்று திரட்டப்படுவார்கள்.
Saheeh International
Indeed, those who disbelieve spend their wealth to avert [people] from the way of Allah. So they will spend it; then it will be for them a [source of] regret; then they will be overcome. And those who have disbelieved - unto Hell they will be gathered.
لِیَمِیْزَ اللّٰهُ الْخَبِیْثَ مِنَ الطَّیِّبِ وَیَجْعَلَ الْخَبِیْثَ بَعْضَهٗ عَلٰی بَعْضٍ فَیَرْكُمَهٗ جَمِیْعًا فَیَجْعَلَهٗ فِیْ جَهَنَّمَ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟۠
لِیَمِیْزَபிரித்தெடுப்பதற்காகاللّٰهُஅல்லாஹ்الْخَبِیْثَதீயதைمِنَஇருந்துالطَّیِّبِநல்லதைوَ یَجْعَلَமேலும் வைப்பான்الْخَبِیْثَதீயதைبَعْضَهٗஅதன் சிலதைعَلٰیமீதுبَعْضٍசிலவற்றின்فَیَرْكُمَهٗபிறகு அதைக் குவியலாக்குவான்جَمِیْعًاஅனைத்தையும்فَیَجْعَلَهٗபிறகு அதை வைப்பான்فِیْஇல்جَهَنَّمَ ؕநரகம்اُولٰٓىِٕكَஅவர்கள்هُمُஅவர்கள்தாம்الْخٰسِرُوْنَ۠நஷ்டவாளிகள்
லியமீZஜல் லாஹுல் கBபீத மினத் தய்யிBபி வ யஜ்'அலல் கBபீத Bபஃளஹூ 'அல Bபஃளின் Fபயர்குமஹூ ஜமீ'அன் Fபயஜ்'அலஹூ Fபீ ஜஹன்ன்னம்; உலா'இக ஹுமுல் காஸிரூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ் நல்லவர்களையும் கெட்டவர்களையும் பிரிப்பதற்காகவும், கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பெற்று ஒன்று சேர்க்கப்பட்டபின் அவர்களை நரகத்தில் போடுவதற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்; எனவே) இவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரித்தெடுப்பதற்காகவும்; கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பட்டு ஒன்றாகக் குவிக்கப்பட்ட பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்.) இவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்.
IFT
எதற்காகவெனில், அல்லாஹ் தூய்மையானதிலிருந்து தூய்மையற்றதைப் பிரித்தெடுத்து, தூய்மையற்ற ஒவ்வொன்றையும் ஒன்று சேர்த்து, பிறகு அந்தக் குவியலை நரகத்தில் வீசி எறிவதற்காக! இத்தகையோர் தாம் முற்றிலும் இழப்புக்குரியவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் நல்லவரிலிருந்து கெட்டவரை பிரிப்பதற்காகவும், கெட்டவரை-அவர்களில் சிலரைச் சிலரின் மீது ஆக்கி அவர்கள் அனைவரையும் குவியலாக்கிப் பின்னர், அ(க்குவியலான)தை அவன் நரகத்தில் ஆக்கி விடுவதற்காகவே-(இவ்வாறு செய்தான்.) அவர்கள்தான் நஷ்டம் அடைந்தவர்கள்.
Saheeh International
[It is] so that Allah may distinguish the wicked from the good and place the wicked some of them upon others and heap them all together and put them into Hell. It is those who are the losers.
قُلْ لِّلَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ یَّنْتَهُوْا یُغْفَرْ لَهُمْ مَّا قَدْ سَلَفَ ۚ وَاِنْ یَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِیْنَ ۟
قُلْகூறுவீராகلِّلَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோ அவர்களிடம்اِنْஒருவேளைیَّنْتَهُوْاஅவர்கள் விலகிக்கொண்டால்یُغْفَرْமன்னிக்கப்படும்لَهُمْஅவர்களுக்குمَّاஎதுقَدْஏற்கனவேسَلَفَ ۚகடந்துவிட்டதோوَ اِنْஇன்னும் ஒருவேளைیَّعُوْدُوْاஅவர்கள் திரும்பினால்فَقَدْஅப்படியானால் நிச்சயமாகمَضَتْசென்றுவிட்டதுسُنَّتُவழிமுறைالْاَوَّلِیْنَமுன்னோர்களின்
குல் லில்லதீன கFபரூ இ(ன்)ய் யன்தஹூ யுக்Fபர் லஹும் மா கத் ஸலFப வ இ(ன்)ய் யஃஊதூ Fபகத் மளத் ஸுன்னதுல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்: இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேறி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிராகரிப்பவர்களுக்கு நீர் கூறுவீராக: இனியேனும் அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுடைய) முந்திய குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். (அவ்வாறில்லாமல் விஷமம் செய்யவே) முன் வருவார்களாயின் முன் சென்(ற இவர்கள் போன்)றவர்களின் வழி ஏற்பட்டே இருக்கிறது. (அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்.)
IFT
(நபியே!) இந்நிராகரிப்பாளர்களிடம் நீர் கூறும்: “(இப்போதேனும் அசத்தியப் போக்கிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வார்களாயின், முன்பு செய்த குற்றங்கள் யாவும் மன்னிக்கப்படும். ஆனால், (பழைய போக்கிற்கு) அவர்கள் மீண்டும் திரும்புவார்களாயின் முற்கால மக்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிராகரிப்போருக்கு நீர் கூறுவீராக: (இனியேனும்) அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக்கொண்டால், திட்டமாக சென்றுவிட்ட (முந்திய) குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், (அவ்வாறின்றி விஷமம் செய்யவே) மீண்டும் அவர்கள் திரும்புவார்களாயின் முன் சென்(ற இவர்கள் போன்)றோரின் வழி திட்டமாக சென்றேயிருக்கின்றது, (அவர்களுக்கு ஏற்பட்ட கதி தான் இவர்களுக்கும் ஏற்படும்).
Saheeh International
Say to those who have disbelieved [that] if they cease, what has previously occurred will be forgiven for them. But if they return [to hostility] - then the precedent of the former [rebellious] peoples has already taken place.
وَقَاتِلُوْهُمْ حَتّٰی لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّیَكُوْنَ الدِّیْنُ كُلُّهٗ لِلّٰهِ ۚ فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ بِمَا یَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
وَ قَاتِلُوْهُمْமேலும் அவர்களுடன் போரிடுங்கள்حَتّٰیவரைلَاஇல்லாமல்تَكُوْنَபோகும்فِتْنَةٌகுழப்பம்وَّ یَكُوْنَமேலும் ஆகும்الدِّیْنُமார்க்கம்كُلُّهٗஅது முழுவதும்لِلّٰهِ ۚஅல்லாஹ்வுக்கேفَاِنِஎனவேانْتَهَوْاவிலகிக்கொண்டால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِمَاஎதைیَعْمَلُوْنَசெய்கிறார்களோبَصِیْرٌஉற்று நோக்குபவன்
வ காதிலூஹும் ஹத்தா லா தகூன Fபித்னது(ன்)வ் வ யகூனத்தீனு குல்லுஹூ லில்லாஹ்; Fப இனின் தஹவ் Fப இன்னல்லாஹ Bபிமா யஃமலூன Bபஸீர்
முஹம்மது ஜான்
(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்களின்) விஷமத்தனம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் முழுமையாக நிலைபெறும் வரை (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும்) இவர்களுடன் போர் புரியுங்கள். (விஷமம் செய்வதிலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குகிறான்.
IFT
(இறைநம்பிக்கை கொண்டவர்களே!) குழப்பம் இல்லாதொழிந்து தீன் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும் வரை நீங்கள் இந்நிராகரிப்பாளர்களுடன் போர் புரியுங்கள்! பிறகு, அவர்கள் (அதிலிருந்து) விலகிக்கொண்டால் அவர்களுடைய செயல்களைத் திண்ணமாக அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே! இந்நிராகரிப்போரின் துன்புறுத்தலெனும்) குழப்பம் ஏற்படாமல் (இருக்கவும்,) மார்க்கம் அது முற்றிலும் அல்லாஹ்விற்கு (நிலைபெற்றதாக) ஆகும் வரையிலும் (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும் அவர்களுடன் யுத்தம் புரியுங்கள், (விஷமம் செய்வதிலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதைப் பார்க்கிறான்.
Saheeh International
And fight against them until there is no fitnah and [until] the religion [i.e., worship], all of it, is for Allah. And if they cease - then indeed, Allah is Seeing of what they do.
وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَوْلٰىكُمْ ؕ نِعْمَ الْمَوْلٰی وَنِعْمَ النَّصِیْرُ ۟
وَ اِنْஇன்னும் ஒருவேளைتَوَلَّوْاஅவர்கள் புறக்கணித்தால்فَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَوْلٰىكُمْ ؕஉங்கள் பாதுகாவலன்نِعْمَமிகச்சிறந்தالْمَوْلٰیபாதுகாவலன்وَ نِعْمَஇன்னும் மிகச்சிறந்தالنَّصِیْرُஉதவியாளன்
வ இன் தவல்லவ் Fபஃலமூ அன்னல் லாஹ மவ்லாகும்; னிஃமல் மவ்லா வ னிஃமன் னஸீர்
முஹம்மது ஜான்
அவர்கள் மாறு செய்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் - அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
(இதற்கு) அவர்கள் மாறு செய்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்) என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன்.
IFT
மேலும், அவர்கள் (ஏற்றுக் கொள்ளாமல்) புறக்கணித்தால், அல்லாஹ் உங்கள் பாதுகாவலனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவன் சிறந்த பாதுகாவலனும், சிறந்த முறையில் உதவி புரிபவனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் புறக்கணித்துவிட்டாலோ, நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள், பாதுகாவலனில் அவன் மிக நல்லவன், இன்னும் உதவி செய்கிறவனிலும் அவன் மிக நல்லவன்.
Saheeh International
But if they turn away - then know that Allah is your protector. Excellent is the protector, and excellent is the helper.
وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَیْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَلِلرَّسُوْلِ وَلِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ۙ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰی عَبْدِنَا یَوْمَ الْفُرْقَانِ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّمَاநிச்சயமாக எதனைغَنِمْتُمْநீங்கள் போர்ப்பொருளாகப் பெற்றீர்களோمِّنْஅதிலிருந்துشَیْءٍஏதேனும் ஒரு பொருள்فَاَنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்வுக்குரியதுخُمُسَهٗஅதன் ஐந்தில் ஒரு பங்குوَ لِلرَّسُوْلِமேலும் இத்தூதருக்கும்وَ لِذِیமேலும் நெருங்கியالْقُرْبٰیஉறவினர்களுக்கும்وَ الْیَتٰمٰیஅனாதைகளுக்கும்وَ الْمَسٰكِیْنِஏழைகளுக்கும்وَ ابْنِமேலும் வழிப்السَّبِیْلِ ۙபோக்கர்களுக்கும்اِنْ(உண்மையாகவே)كُنْتُمْநீங்கள்اٰمَنْتُمْநம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதும்وَ مَاۤமேலும் எதனைاَنْزَلْنَاநாம் இறக்கி வைத்தோமோ (அதன் மீதும்)عَلٰیமீதுعَبْدِنَاநம் அடியார்یَوْمَநாளில்الْفُرْقَانِபிரித்தறிவிக்கும்یَوْمَ(அந்த) நாளில்الْتَقَیசந்தித்தனவோالْجَمْعٰنِ ؕஇரு படைகளும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஅனைத்துப்شَیْءٍபொருட்களின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
வஃலமூ அன்னமா கனிம்தும் மின் ஷ'இன் Fப அன்ன லில்லாஹி குமுஸஹூ வ லிர் ரஸூலி வ லிதில் குர்Bப வல்யதாமா வல்மஸாகீனி வBப்னிஸ் ஸBபீலி இன் குன்தும் ஆமன்தும் Bபில்லாஹி வ மா அன்Zஜல்னா 'அல 'அBப்தினா யவ்மல் Fபுர்கானி யவ்மல்தகல் ஜம்'ஆன்; வல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
முஹம்மது ஜான்
(முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு போரில் கிடைத்த எந்தப் பொருளிலும் ஐந்தில் ஒருபாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரித்தானது. உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பதுடன், இரு படைகளும் சந்தித்து (முடிவான) தீர்ப்பளித்த (பத்ரு) நாளில் நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை அவன்தான் இறக்கி வைத்தான் என்பதையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், உறுதியாக இதை அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
IFT
மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! போரில் ஏதேனும் பொருள்களை நீங்கள் பெற்றால் அவற்றில் ஐந்திலொரு பாகம், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் வறியவர்களுக்கும் பயணிகளுக்கும் உரியதாகும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில், அதாவது (பத்ரு போரின்போது) இரு படைகளும் மோதிக் கொண்ட நாளில் நம் அடியாருக்கு நாம் இறக்கியருளியதன் மீதும் நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால் (இந்தப் பாகத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி விடுங்கள்!) அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (விசுவாசிகளே!) நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக நீங்கள் (போர் செய்து) வெற்றிப் பொருளாக அடைந்தது, எப்பொருளாயினும், அப்பொழுது நிச்சயமாக அதனுடைய ஐந்திலொரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும், அல்லாஹ்வையும் இரு படைகளையும் (பத்ரு யுத்தத்தில்) சந்தித்த தீர்ப்பு நாளில், நாம் நம் அடியார்மீது இறக்கி வைத்த (உதவியை அவன்தான் இறக்கிவைத்தான் என்ப))தையும் நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்- (மேற்கூறிய அல்லாஹ்வின் கட்டளை பற்றி உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.) மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
Saheeh International
And know that anything you obtain of war booty - then indeed, for Allah is one fifth of it and for the Messenger and for [his] near relatives and the orphans, the needy, and the [stranded] traveler, if you have believed in Allah and in that which We sent down to Our Servant on the day of criterion [i.e., decisive encounter] - the day when the two armies met [at Badr]. And Allah, over all things, is competent.
اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْیَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰی وَالرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْ ؕ وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِی الْمِیْعٰدِ ۙ وَلٰكِنْ لِّیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۙ۬ لِّیَهْلِكَ مَنْ هَلَكَ عَنْ بَیِّنَةٍ وَّیَحْیٰی مَنْ حَیَّ عَنْ بَیِّنَةٍ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ
اِذْஅப்போதுاَنْتُمْநீங்கள்بِالْعُدْوَةِ(பள்ளத்தாக்கின்) ஓரத்தில்الدُّنْیَاஅருகிலுள்ளوَ هُمْஇன்னும் அவர்கள்بِالْعُدْوَةِ(பள்ளத்தாக்கின்) ஓரத்தில்الْقُصْوٰیதொலைவிலுள்ளوَ الرَّكْبُஇன்னும் வாகனக் கூட்டத்தினர்اَسْفَلَகீழேمِنْكُمْ ؕஉங்களை விடوَ لَوْமேலும் ஒருவேளைتَوَاعَدْتُّمْநீங்கள் ஒருவருக்கொருவர் வாக்களித்திருந்தால்لَاخْتَلَفْتُمْநிச்சயமாக நீங்கள் மாறுபட்டிருப்பீர்கள்فِیஅந்தالْمِیْعٰدِ ۙகுறித்த நேரத்தில்وَ لٰكِنْஆனால்لِّیَقْضِیَநிறைவேற்றுவதற்காகاللّٰهُஅல்லாஹ்اَمْرًاஒரு காரியத்தைكَانَஇருந்ததுمَفْعُوْلًا ۙ۬செய்யப்பட வேண்டியதாகلِّیَهْلِكَஅழிவதற்காகمَنْஎவர்هَلَكَஅழிந்தாரோعَنْۢஅடிப்படையில்بَیِّنَةٍதெளிவான சான்றின்وَّ یَحْیٰیஇன்னும் உயிர் வாழ்வதற்காகمَنْஎவர்حَیَّஉயிர் வாழ்ந்தாரோعَنْۢஅடிப்படையில்بَیِّنَةٍ ؕதெளிவான சான்றின்وَ اِنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَسَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌۙஅறிந்தவன்
இத் அன்தும் Bபில்'உத்வதித் துன்யா வ ஹும் Bபில்'உத்வதில் குஸ்வா வர்ரக்Bபு அஸ்Fபல மின்கும்; வ லவ் தவாத்தும் லக்தலFப்தும் Fபில் மீ'ஆதி வ லாகில் லியக்ளியல் லாஹு அம்ரன் கான மFப்'ஊலல் லியஹ்லிக மன் ஹலக 'அம் Bபய்யினதி(ன்)வ் வ யஹ்யா மன் ஹய்ய 'அம் Bபய்யினஹ்; வ இன்னல் லாஹ ல ஸமீ'உன் 'அலீம்
முஹம்மது ஜான்
(பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (‘பத்ரு' போர்க்களத்தில் மதீனாவுக்குச்) சமீபமாக உள்ள பள்ளத்தாக்கிலும், அவர்கள் (உங்களுக்கு எதிர்புறமுள்ள) தூரமான கோடியிலும், (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழ்ப்புறத்திலும் இருந்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலத்தையும் இடத்தையும் குறிப்பிட்டு) வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் (நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அங்கு வந்து சேர்ந்து) அவ்வாக்குறுதியை நிறைவேற்றி வைப்பதில் நீங்கள் (ஏதும்) தவறிழைத்தே இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் முடிவு செய்துவிட்ட காரியம் நடந்தேறுவதற்காக (உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அங்கு ஒன்று சேர்த்தான்). அழிந்தவர்கள் தக்க ஆதாரத்துடன் அழிவதற்காகவும், (தப்பிப்) பிழைத்தவர்கள் தக்க ஆதாரத்தைக் கொண்டே தப்புவதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
IFT
நீங்கள் (பள்ளத்தாக்கிலிருந்து) மிக நெருங்கிய பகுதியிலும் அவர்கள் மிகத் தொலைவான பகுதியிலும் (தளம் அமைத்து) இருந்ததையும், மேலும் பயணக் கூட்டம் உங்களுக்குக் கீழே (கடற்கரை ஓரமாக) இருந்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்! (முன்னரே) நீங்களும் அவர்களும் (எங்காவது குறிப்பிட்ட இடத்தில் போர் செய்வதென) முடிவு செய்திருப்பீர்களாயின் அப்போது அந்த முடிவிலிருந்து நிச்சயம் நீங்கள் நழுவிச் சென்றிருப்பீர்கள். ஆயினும், தீர்மானிக்கப்பட்டிருந்த விஷயத்தை அல்லாஹ் நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக (இவ்வாறெல்லாம் நிகழ்ந்தன). ஏனெனில், அழிய வேண்டியவன் தக்க காரணத்துடன் அழிய வேண்டும்; மேலும், உயிர்வாழ வேண்டியவன் தக்க காரணத்துடன் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக! மேலும், திண்ணமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கறிபவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(“பத்ரு யுத்த களத்தில் உங்களுக்கு) சமீபமாக உள்ள பள்ளத்தாக்கில் நீங்களும், (உங்களுக்கு எதிர்ப்புறமுள்ள) தூரமான பள்ளத்தாக்கில் அவர்களும் (அபூசுஃப்யானும் அவருடன் இருந்த வர்த்தகக் கூட்டத்தினராகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழ்ப்புறத்திலும் இருந்த நேரத்தை (நீங்கள் நினைத்துப் பாருங்கள்), நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலத்தையும், இடத்தையும் குறிப்பிட்டு) வாக்குறுதி செய்து கொண்டுமிருந்தால் (நீங்கள் மாறுபட்டு இருந்திருப்பீர்கள், எனினும், செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், (உங்கள் யாவரையும் ஒரே நேரத்தில் அங்கு ஒன்று சேர்த்தான்). அழிந்தவர்கள் தக்க முகாந்திரத்துடன் அழிவதற்காகவும், (தப்பிப்) பிழைத்தவர்கள் தக்க முகாந்திரத்தைக் கொண்டே (தப்பிப்) பிழைப்பதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவன், (யாவையும்) நன்கறிகிறவன்.
Saheeh International
[Remember] when you were on the near side of the valley, and they were on the farther side, and the caravan was lower [in position] than you. If you had made an appointment [to meet], you would have missed the appointment. But [it was] so that Allah might accomplish a matter already destined - that those who perished [through disbelief] would perish upon evidence and those who lived [in faith] would live upon evidence; and indeed, Allah is Hearing and Knowing.
اِذْ یُرِیْكَهُمُ اللّٰهُ فِیْ مَنَامِكَ قَلِیْلًا ؕ وَلَوْ اَرٰىكَهُمْ كَثِیْرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَازَعْتُمْ فِی الْاَمْرِ وَلٰكِنَّ اللّٰهَ سَلَّمَ ؕ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
اِذْஅப்போதுیُرِیْكَهُمُஅவர்களை உமக்குக் காண்பித்தான்اللّٰهُஅல்லாஹ்فِیْஇல்مَنَامِكَஉமது கனவில்قَلِیْلًا ؕகுறைவாகوَ لَوْஇன்னும் ஒருவேளைاَرٰىكَهُمْஅவர்களை உமக்குக் காண்பித்திருந்தால்كَثِیْرًاஅதிகமாகلَّفَشِلْتُمْநிச்சயமாக நீங்கள் தைரியம் இழந்திருப்பீர்கள்وَ لَتَنَازَعْتُمْஇன்னும் நிச்சயமாக நீங்கள் தர்க்கித்திருப்பீர்கள்فِیஇல்الْاَمْرِஅக்காரியத்தில்وَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்سَلَّمَ ؕகாப்பாற்றினான்اِنَّهٗநிச்சயமாக அவன்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِஉள்ளிருப்பவற்றைالصُّدُوْرِநெஞ்சங்களின்
இத் யுரீகஹுமுல் லாஹு Fபீ மனாமிக கலீல; வ லவ் அராகஹும் கதீரல் லFபஷில்தும் வ லதனாZஜஃதும் Fபில் அம்ரி வ லாகின்னல் லாஹ ஸல்லம்; இன்னஹூ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
முஹம்மது ஜான்
(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது கனவில் அல்லாஹ், அவர்களை (எண்ணிக்கையில்) குறைத்துக் காண்பித்ததையும் நீர் நினைத்துப் பார்ப்பீராக. அவர்களை அதிகப்படுத்தி உமக்குக் காண்பித்திருந்தால் நீரும் மற்ற நம்பிக்கையாளர்களும் தைரியமிழந்து போர் செய்வதைப் பற்றி உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
IFT
(நபியே!) அல்லாஹ் உம்முடைய கனவில் அவர்களின் எண்ணிக்கையை குறைவாய்க் காண்பித்ததை நீர் நினைத்துப் பாரும். அவன் உமக்கு அவர்களுடைய எண்ணிக்கையை அதிகமாய்க் காண்பித்திருந்தால், நிச்சயம் நீங்கள் ஊக்கம் குன்றியிருப்பீர்கள்; மேலும், போர் விஷயத்தில் ஒருவருக்கொருவர் பிணங்கியிருப்பீர்கள். எனினும், அல்லாஹ்தான் (உங்களை இதிலிருந்து) காத்தருளினான். திண்ணமாக, அவன் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றைக்கூட நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உம்முடைய கனவில் அல்லாஹ் (எண்ணிக்கையில்) அவர்களைக் குறைத்துக் காண்பித்ததையும், (நினைவு கூர்வீராக!) அவர்களை (எண்ணிக்கையில்) அதிகப்படுத்தி உமக்கு காண்பித்திருந்தால், நீங்கள் தைரியமிழந்து யுத்தம் செய்வதைப் பற்றி உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிணங்கிக்கொண்டு இருந்திருப்பீர்கள்; எனினும், அல்லாஹ் (உங்களைப்) பாதுகாத்துவிட்டான்; நிச்சயமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிகிறவன்.
Saheeh International
[Remember, O Muhammad], when Allah showed them to you in your dream as few; and if He had shown them to you as many, you [believers] would have lost courage and would have disputed in the matter [of whether to fight], but Allah saved [you from that]. Indeed, He is Knowing of that within the breasts.
وَاِذْ یُرِیْكُمُوْهُمْ اِذِ الْتَقَیْتُمْ فِیْۤ اَعْیُنِكُمْ قَلِیْلًا وَّیُقَلِّلُكُمْ فِیْۤ اَعْیُنِهِمْ لِیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠
وَ اِذْஇன்னும் அச்சமயம்یُرِیْكُمُوْهُمْஅவன் அவர்களை உங்களுக்குக் காட்டினான்اِذِபோதுالْتَقَیْتُمْநீங்கள் சந்தித்தீர்கள்فِیْۤஇல்اَعْیُنِكُمْஉங்கள் கண்களில்قَلِیْلًاகுறைவாகوَّ یُقَلِّلُكُمْமேலும் உங்களை அவன் குறைத்துக் காட்டினான்فِیْۤஇல்اَعْیُنِهِمْஅவர்களின் கண்களில்لِیَقْضِیَநிறைவேற்றுவதற்காகاللّٰهُஅல்லாஹ்اَمْرًاஒரு காரியத்தைكَانَஅது இருந்ததுمَفْعُوْلًا ؕசெய்யப்பட வேண்டியதாகوَ اِلَیமேலும்اللّٰهِஅல்லாஹ்விடமேتُرْجَعُதிருப்பப்படும்الْاُمُوْرُ۠காரியங்கள் (அனைத்தும்)
வ இத் யுரீகுமூஹும் இதில் தகய்தும் Fபீ அஃயுனிகும் கலீல(ன்)வ் வ யுகல்லிலுகும் Fபீ அஃயுனிஹிம் லியக்ளியல் லாஹு அம்ரன் கான மFப்'ஊலா; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
முஹம்மது ஜான்
நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.  
அப்துல் ஹமீது பாகவி
அவர்களும் நீங்களும் சந்தித்துக்கொண்ட சமயத்தில், அவர்களை உங்கள் கண்களுக்குக் குறைத்தும், உங்களை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் காண்பித்ததெல்லாம், அல்லாஹ் முடிவு செய்த காரியம் நடைபெற்று (அவர்களை அழித்து)த் தீருவதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் சென்று முடிவடைகின்றன.
IFT
மேலும், இதனையும் நினைத்துப்பாருங்கள்: நீங்கள் போரிட்டபோது அவன், உங்களுடைய கண்களுக்கு அவர்களின் எண்ணிக்கையைக் குறைவாகவும், அவர்களுடைய கண்களுக்கு உங்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகவும் காண்பித்தான்; எதற்காகவெனில், நிகழ வேண்டிய செயலை அல்லாஹ் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக! (இறுதியில்) விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே திரும்பக்கொண்டு வரப்பட இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் (இரு படையினரும்) சந்தித்த சமயத்தில் அவர்க(ளுடைய எண்ணிக்கை)களை, உங்கள் கண்களுக்குக் குறைவாக அவன் காட்டியதையும், உங்க(ளுடைய எண்ணிக்கை)களை அவர்களுடைய கண்களுக்குக் குறைவாக அவன் காட்டியதையும், (நினைவு கூருங்கள்.) நடந்தேறப்பட வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக (அல்லாஹ் அவ்வாறு செய்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்). மேலும், அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் திரும்பக் கொண்டு வரப்படும்.
Saheeh International
And [remember] when He showed them to you, when you met, as few in your eyes, and He made you [appear] as few in their eyes so that Allah might accomplish a matter already destined. And to Allah are [all] matters returned.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِیْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِیْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟ۚ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِذَاபொழுதுلَقِیْتُمْநீங்கள் சந்தித்தால்فِئَةًஒரு படையைفَاثْبُتُوْاஆகவே உறுதியாக நில்லுங்கள்وَ اذْكُرُواமேலும் நினைவுகூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைكَثِیْرًاஅதிகமாகلَّعَلَّكُمْநீங்கள்تُفْلِحُوْنَۚவெற்றியடைவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா லகீதும் Fபி'அதன் Fபத்Bபுதூ வத்குருல் லாஹ கதீரல் ல'அல்லகும் துFப்லிஹூன்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (போரின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக (எதிர்த்து) நின்று, அல்லாஹ்வின் திருப்பெயரை நீங்கள் அதிகமாக (உரக்க) சப்தமிட்டுக் கூறுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஏதேனும் ஒரு குழுவினரோடு நீங்கள் போரிடும்போது நிலைகுலையாமல் இருங்கள்! மேலும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருங்கள்! நீங்கள் வெற்றி அடையலாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (யுத்தத்தின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால், (கலக்கமுறாது) உறுதியாக இருங்கள், அல்லாஹ்வை நீங்கள் அதிகமாக நினைவும் கூருங்கள், (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
Saheeh International
O you who have believed, when you encounter a company [from the enemy forces], stand firm and remember Allah much that you may be successful.
وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِیْحُكُمْ وَاصْبِرُوْا ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ ۟ۚ
وَ اَطِیْعُواமேலும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلَهٗஅவனுடைய தூதருக்கும்وَ لَاமேலும் வேண்டாம்تَنَازَعُوْاநீங்கள் தர்க்கித்துக் கொள்ளفَتَفْشَلُوْاஅதனால் நீங்கள் தைரியமிழந்து விடுவீர்கள்وَ تَذْهَبَமேலும் நீங்கிவிடும்رِیْحُكُمْஉங்கள் பலம்وَ اصْبِرُوْا ؕமேலும் பொறுமையாக இருங்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَعَஉடன் இருக்கிறான்الصّٰبِرِیْنَۚபொறுமையாளர்களுடன்
வ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ வலா தனாZஜ'ஊ FபதFப்ஷலூ வ தத்ஹBப ரீஹுகும் வஸ்Bபிரூ; இன்னல் லாஹ ம'அஸ் ஸாBபிரீன்
முஹம்மது ஜான்
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (உங்களுக்குள் ஒற்றுமையாயிருங்கள்.) உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் ஆற்றல் போய்விடும். ஆகவே, நீங்கள் (சிரமங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
IFT
மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்ளாதீர்கள்! அவ்வாறு செய்தால் உங்களிடையே பலவீனம் தோன்றிவிடும். மேலும், உங்கள் மதிப்பும் வலிமையும் அழிந்து போய்விடும். ஆகவே பொறுமையை மேற்கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள், மேலும், உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள், அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்துவிடுவீர்கள், மேலும், உங்கள் வலிமை குன்றிவிடும், ஆகவே, நீங்கள் (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான்.
Saheeh International
And obey Allah and His Messenger, and do not dispute and [thus] lose courage and [then] your strength would depart; and be patient. Indeed, Allah is with the patient.
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ خَرَجُوْا مِنْ دِیَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ وَاللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟
وَ لَاமேலும் வேண்டாம்تَكُوْنُوْاநீங்கள் ஆகிவிடكَالَّذِیْنَஅவர்களைப் போலخَرَجُوْاஅவர்கள் வெளியேறினார்களோمِنْஇருந்துدِیَارِهِمْதங்கள் இல்லங்கள்بَطَرًاகர்வத்துடனும்وَّ رِئَآءَமேலும் முகஸ்துதிக்காகவும்النَّاسِமனிதர்களுக்குوَ یَصُدُّوْنَமேலும் அவர்கள் தடுக்கிறார்கள்عَنْஇருந்துسَبِیْلِபாதைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎவற்றைیَعْمَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோمُحِیْطٌசூழ்ந்தறிபவன்
வ லா தகூனூ கல்லதீன கரஜூ மின் தியாரிஹிம் Bபதர(ன்)வ் வ ரி'ஆ'அன் னாஸி வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹ்; வல்லாஹு Bபிமா யஃமலூன முஹீத்
முஹம்மது ஜான்
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ரு' போருக்குப்) புறப்பட்டும், மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்து கொண்டும் இருந்தவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அல்லாஹ் அவர்களுடைய செயல்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான்.
IFT
மேலும், இறுமாப்புடனும் (தன் மதிப்பை) பிற மக்களுக்குக் காட்டும் வகையிலும் தங்களுடைய இல்லங்களிலிருந்து எவர்கள் வெளியேறினார்களோ, மேலும் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுக்கின்றார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்! அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் சூழ்ந்தறிபவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்தும் (முஸ்லீம்களை எதிர்க்க “பத்ரு” யுத்தத்திற்குப்) புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் (அதில் மனிதர்கள் செல்வதைத்) தடை செய்து கொண்டும் இருந்தவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம், மேலும், அல்லாஹ், அவர்கள் செய்கின்றவற்றை சூழ்ந்து அறிந்துகொண்டிருக்கின்றான்.
Saheeh International
And do not be like those who came forth from their homes insolently and to be seen by people and avert [them] from the way of Allah. And Allah is encompassing of what they do.
وَاِذْ زَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْیَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّیْ جَارٌ لَّكُمْ ۚ فَلَمَّا تَرَآءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰی عَقِبَیْهِ وَقَالَ اِنِّیْ بَرِیْٓءٌ مِّنْكُمْ اِنِّیْۤ اَرٰی مَا لَا تَرَوْنَ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ ؕ وَاللّٰهُ شَدِیْدُ الْعِقَابِ ۟۠
وَ اِذْமேலும் எப்போதுزَیَّنَஅழகாகக் காட்டினான்لَهُمُஅவர்களுக்குالشَّیْطٰنُஷைத்தான்اَعْمَالَهُمْஅவர்களின் செயல்களைوَ قَالَமேலும் கூறினான்لَاஇல்லைغَالِبَவெல்பவர்لَكُمُஉங்களுக்குالْیَوْمَஇன்றுمِنَஇருந்துالنَّاسِமனிதர்களில்وَ اِنِّیْமேலும் நிச்சயமாக நான்جَارٌபாதுகாவலன்لَّكُمْ ۚஉங்களுக்குفَلَمَّاஆனால் எப்போதுتَرَآءَتِநேருக்கு நேர் கண்டனவோالْفِئَتٰنِஇரு படைகளும்نَكَصَஅவன் பின்வாங்கினான்عَلٰیமீதுعَقِبَیْهِதனது குதிங்கால்கள்وَ قَالَமேலும் கூறினான்اِنِّیْநிச்சயமாக நான்بَرِیْٓءٌவிலகியவன்مِّنْكُمْஉங்களை விட்டும்اِنِّیْۤநிச்சயமாக நான்اَرٰیபார்க்கிறேன்مَاஎதைلَاஇல்லைتَرَوْنَநீங்கள் பார்க்கிறீர்களோاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اللّٰهَ ؕஅல்லாஹ்வைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِ۠தண்டிப்பதில்
வ இத் Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் வ கால லா காலிBப லகுமுல் யவ்ம மினன் னாஸி வ இன்னீ ஜாருல் லகும் Fபலம்மா தரா'அதில் Fபி'அதானி னகஸ 'அலா அகிBபய்ஹி வ கால இன்னீ Bபரீ'உம் மின்கும் இன்னீ அரா மா லா தரவ்ன இன்னீ அகாFபுல் லாஹ்; வல்லாஹு ஷதீதுல் 'இகாBப்
முஹம்மது ஜான்
ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை; மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!” என்று கூறினான்; இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது அவன் புறங்காட்டிப் பின்சென்று, “ மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்; நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்” என்று கூறினான்.  
அப்துல் ஹமீது பாகவி
ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து ‘‘எம்மனிதராலும் இன்று உங்களை ஜெயிக்க முடியாது; நிச்சயமாக நானும் உங்களுக்கு(ப் பக்க) துணையாக நிற்கிறேன்'' என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக. (இவ்வாறு கூறிக்கொண்டிருந்த) அவன், இரு படைகளும் நேருக்குநேர் சந்திக்கவே புறங்காட்டி (ஓடி) பின்சென்று ‘‘நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்கமுடியாத ஒன்றை நான் பார்க்கிறேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றன்; வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்'' என்று கூறினான்.
IFT
மேலும், இதையும் நினைத்துப்பாருங்கள்: ஷைத்தான் அவர்களுடைய (தீய) செயல்களை அவர்களின் பார்வையில் அழகாக்கிக் காட்டினான். மேலும், “இன்று மக்களில் எவரும் உங்களை வென்றிட முடியாது. நான் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கின்றேன்” என்றும் அவர்களிடம் கூறினான். ஆயினும் இரு படைகளும் மோதிக்கொண்டபோது அவன் புறங்காட்டித் திரும்பிச் சென்றுவிட்டான். மேலும், அவன் கூறினான்: “நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்காதவற்றை நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். நான் அல்லாஹ்வைக் குறித்து அஞ்சுகின்றேன். மேலும், அல்லாஹ் தண்டனை அளிப்பதில் மிகக் கடுமையானவன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஷைத்தான் அவர்களுடைய (பாவச்) செயல்களை அவர்களுக்கு அலங்கரித்துக் காண்பித்து, “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை, நிச்சயமாக நானும் உங்களுக்கு (ப்பக்க)த் துணையாக நிற்கின்றேன்” என்று கூறிக் கொண்டிருந்ததையும் (நபியே! நினைவு கூர்வீராக! இவ்வாறு கூறிக்கொண்டிருந்த) அவன் இரு படைகளும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டபொழுது புறமுதுகிட்டுச் சென்று, “நிச்சயமாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன், நிச்சயமாக நீங்கள் பார்க்காதவற்றை நான் பார்க்கின்றேன், நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறேன், தண்டிப்பதில் அல்லாஹ் மிக்க கடுமையானவன்” என்றும் கூறினான்.
Saheeh International
And [remember] when Satan made their deeds pleasing to them and said, "No one can overcome you today from among the people, and indeed, I am your protector." But when the two armies sighted each other, he turned on his heels and said, "Indeed, I am disassociated from you. Indeed, I see what you do not see; indeed, I fear Allah. And Allah is severe in penalty."
اِذْ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰۤؤُلَآءِ دِیْنُهُمْ ؕ وَمَنْ یَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
اِذْஅப்போதுیَقُوْلُகூறினர்الْمُنٰفِقُوْنَநயவஞ்சகர்கள்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்فِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்கள்مَّرَضٌநோய்غَرَّஏமாற்றிவிட்டதுهٰۤؤُلَآءِஇவர்களைدِیْنُهُمْ ؕஅவர்களின் மார்க்கம்وَ مَنْஇன்னும் எவர்یَّتَوَكَّلْநம்பிக்கை வைக்கிறாரோعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்فَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
இத் யகூலுல் முனாFபிகூன வல்லதீன Fபீ குலூBபிஹிம் மரளுன் கர்ர ஹா'உலா'இ தீனுஹும்; வ மய் யதவக்கல் 'அலல் லாஹி Fப இன்னல் லாஹ 'அZஜீ Zஜுன் ஹகீம்
முஹம்மது ஜான்
நயவஞ்சகர்களும் தம் இருதயங்களில் நோய் உள்ளவர்களும் (முஸ்லிம்களைச் சுட்டிக்காட்டி) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கி (ஏமாற்றி) விட்டது” என்று கூறினார்கள் - அல்லாஹ்வை எவர் முற்றிலும் நம்புகிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (சக்தியில்) மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் (என்பதில் உறுதி கொள்வார்களாக).
அப்துல் ஹமீது பாகவி
(உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்களும், உள்ளங்களில் (நிராகரிப்பு என்னும்) நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களைச் சுட்டிக் காண்பித்து) ‘‘இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது'' என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக. எவர் அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுகிறாரோ (அவரே வெற்றி அடைந்தவர். ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
IFT
இதனையும் நினைத்துப் பாருங்கள்: நயவஞ்சகர்களும், எவர்கள் உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும் “இவர்களுடைய மார்க்கம் இவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது” என்று கூறினார்கள். உண்மை யாதெனில், எவரேனும் அல்லாஹ்வை முழுதும் சார்ந்து வாழ்வாரானால் (அல்லாஹ் அவருக்குப் போதுமானவன் ஆவான்.) திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வேஷதாரிகளான) முனாஃபிக்குகளும், இதயங்களில் நோயுள்ளவர்களும் (விசுவாசிகளைச் சுட்டிக் காண்பித்து) இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது” என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) இன்னும், எவர் (தன் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கின்றாரோ, (அவரே வெற்றியடைந்தவர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
[Remember] when the hypocrites and those in whose hearts was disease [i.e., arrogance and disbelief] said, "Their religion has deluded those [Muslims]." But whoever relies upon Allah - then indeed, Allah is Exalted in Might and Wise.
وَلَوْ تَرٰۤی اِذْ یَتَوَفَّی الَّذِیْنَ كَفَرُوا ۙ الْمَلٰٓىِٕكَةُ یَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ ۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟
وَ لَوْஇன்னும் ஒருவேளைتَرٰۤیநீர் பார்த்தால்اِذْபோதுیَتَوَفَّیஉயிரைக் கைப்பற்றும்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوا ۙநிராகரித்தார்களோالْمَلٰٓىِٕكَةُவானவர்கள்یَضْرِبُوْنَஅடிக்கிறார்கள்وُجُوْهَهُمْஅவர்களின் முகங்களைوَ اَدْبَارَهُمْ ۚஇன்னும் அவர்களின் முதுகுகளைوَ ذُوْقُوْاஇன்னும் சுவையுங்கள்عَذَابَவேதனையைالْحَرِیْقِசுட்டெரிக்கும்
வ லவ் தரா இத் யதவFப் Fபல் லதீன கFபருல் மலா'இகது யள்ரிBபூன வுஜூஹஹும் வ அத்Bபாரஹும் வ தூகூ 'அதாBபல் ஹரீக்
முஹம்மது ஜான்
மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று.
அப்துல் ஹமீது பாகவி
வானவர்கள் நிராகரிப்பவ(ரின் உயி)ர்களைக் கைப்பற்றும் சமயத்தில், அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்து (நரகத்திற்கு ஓட்டிச் சென்று) ‘‘எரிக்கும் (நரக) வேதனையை சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறுவதை (நபியே!) நீர் பார்க்க வேண்டாமா?
IFT
(வீழ்த்தப்பட்ட) நிராகரிப்பாளர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்ததை நீர் கண்டிருக்க வேண்டுமே! அந்த வானவர்கள் அவர்களின் முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கொண்டிருந்தார்கள். மேலும், (அவர்களிடம்) கூறிக் கொண்டிருந்தார்கள்: “இதோ, சுட்டுப் பொசுக்குகின்ற தண்டனையைச் சுவையுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரிப்போ(ரின் உயி)ர்களை மலக்குகள் கைப்பற்றும் சமயத்தில் (நபியே!) நீர் பார்ப்பீராயின், (பயங்கர நிலையையே நீர் பார்ப்பீர், மலக்குகளான) அவர்கள், அவர்களின் முகங்களிலும், அவர்களின் பின்புறங்களிலும் அடிப்பார்கள், மேலும், “எரிக்கும் (நரக) வேதனையைச் சுவையுங்கள்” (என்றும் கூறுவார்கள்).
Saheeh International
And if you could but see when the angels take the souls of those who disbelieved... They are striking their faces and their backs and [saying], "Taste the punishment of the Burning Fire.
ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَیْدِیْكُمْ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟ۙ
ذٰلِكَஅதுبِمَاஎதன் காரணமாகவென்றால்قَدَّمَتْமுற்படுத்தினவோاَیْدِیْكُمْஉங்கள் கைகள்وَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَیْسَஅல்லன்بِظَلَّامٍஅநீதி இழைப்பவன்لِّلْعَبِیْدِۙஅடியார்களுக்கு
தாலிக Bபிமா கத்தமத் அய்தீகும் வான்னல்லாஹ லய்ஸ Bபிளல்லாமில் லில் 'அBபீத்
முஹம்மது ஜான்
இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், வானவர்கள் அவர்களை நோக்கி) ‘‘முன்னர் உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டவற்றின் காரணமாகவே இது (இவ்வேதனை உங்களுக்கு) ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களில் எவரையும் ஒரு சிறிதும் அநியாயம் செய்வதேயில்லை'' (என்றும் கூறுவார்கள்.)
IFT
உங்கள் கைகள் முன்பே சம்பாதித்த செயல்களினால் விளைந்த தண்டனைதான் இது! திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய அடிமைகளுக்கு அநீதி இழைப்பவன் அல்லன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி மலக்குகள் அவர்களிடம்) அவ்வேதனையான)து உங்கள் கைகள் (தேடி) முற்படுத்தியவைகளின் காரணத்தினாலாகும், நிச்சயமாக, அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனாக இல்லை (என்றும் கூறுவார்கள்.)
Saheeh International
That is for what your hands have put forth [of evil] and because Allah is not ever unjust to [His] servants."
كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ اِنَّ اللّٰهَ قَوِیٌّ شَدِیْدُ الْعِقَابِ ۟
كَدَاْبِநிலையைப் போல்اٰلِகூட்டத்தாரின்فِرْعَوْنَ ۙஃபிர்அவ்னின்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்كَفَرُوْاநிராகரித்தார்களோبِاٰیٰتِஅத்தாட்சிகளைاللّٰهِஅல்லாஹ்வின்فَاَخَذَهُمُஆகவே அவர்களைப் பிடித்தான்اللّٰهُஅல்லாஹ்بِذُنُوْبِهِمْ ؕஅவர்களின் பாவங்களினால்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَوِیٌّவல்லமையுள்ளவன்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِதண்டனையளிப்பதில்
கதாBபி ஆலி Fபிர்'அவ்ன வல் லதீன மின் கBப்லிஹிம்; கFபரூ Bபி ஆயாதில் லாஹி Fப அகதஹு முல் லாஹு BபிதுனூBபிஹிம்; இன்னல் லாஹ கவிய்யுன் ஷதீதுல் 'இகாBப்
முஹம்மது ஜான்
(இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப் போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.
அப்துல் ஹமீது பாகவி
ஃபிர்அவ்னுடைய மக்களின் நிலைமை, இன்னும் அவர்களுக்கு முன்னிருந்த வர்களின் நிலைமை போலவே (இவர்களுடைய நிலைமையும் இருக்கிறது.) அவர்களும் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தனர். ஆதலால், அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவனும், வேதனை செய்வதில் மிகக் கடினமானவனும் ஆவான்.
IFT
இவர்களுக்கு நேர்ந்த கதி ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கும் நேர்ந்தது போன்றதாகும். அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆகையால், அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். திண்ணமாக, அல்லாஹ் மிக்க வலிமையுடையவனாகவும் கடும் தண்டனை அளிப்பவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நாம் தண்டிப்பதில்) “ஃபிர் அவ்னுடைய கூட்டத்தார், இன்னும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையும் போலவே (இவர்களுடைய நிலைமையும்) இருக்கிறது, அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்தனர், ஆதலால், அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான், நிச்சயமாக, அல்லாஹ் வல்லமை மிக்கவன், தண்டிப்பதில் மிகக் கடினமானவன்.
Saheeh International
[Theirs is] like the custom of the people of Pharaoh and of those before them. They disbelieved in the signs of Allah, so Allah seized them for their sins. Indeed, Allah is Powerful and severe in penalty.
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ یَكُ مُغَیِّرًا نِّعْمَةً اَنْعَمَهَا عَلٰی قَوْمٍ حَتّٰی یُغَیِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ ۙ وَاَنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ
ذٰلِكَஅதுبِاَنَّஏனெனில்اللّٰهَஅல்லாஹ்لَمْஇல்லைیَكُஇருக்கமாட்டான்مُغَیِّرًاமாற்றுபவனாகنِّعْمَةًஓர் அருட்கொடையைاَنْعَمَهَاஅவன் அதனை வழங்கினான்عَلٰیமீதுقَوْمٍஒரு சமூகத்தின்حَتّٰیவரைیُغَیِّرُوْاஅவர்கள் மாற்றிக்கொள்ளும்مَاஉள்ளதைبِاَنْفُسِهِمْ ۙதங்களுக்குள்ளேوَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌۙநன்கறிந்தவன்
தாலிக Bபி அன்னல் லாஹ லம் யகுமு கய்யிரன் னிஃமதன் அன்'அமஹா 'அலா கவ்மின் ஹத்தா யுகய்யிரூ மா Bபிஅன்Fபுஸிஹிம் வ அன்னல்லாஹ ஸமீ'உன் 'அலீம்
முஹம்மது ஜான்
“ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை. (அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதனால்தான் அவர்களுக்கு இவ்வேதனை ஏற்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக்க அறிந்தவன் ஆவான்.
IFT
‘எந்தச் சமுதாயத்தாரும் தங்களின் நடை முறையை மாற்றிக் கொள்ளாதவரை நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த எந்த ஓர் அருட் கொடையையும் மாற்றுவதில்லை’ எனும் அல்லாஹ்வின் நியதிக்கேற்பவே இது நடைபெற்றது. அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறு தண்டிப்பது நிச்சயமாக அல்லாஹ் எந்த ஒரு அருட்கொடையையும்-ஒரு சமூகத்தார் மீது அவன் அருட் செய்தானே அதை (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல், அவனுக்குக் கீழ்படிந்து நடத்தல், போன்ற) தங்களுக்குள்ள நிலைகளை அ(ச்சமூகத்த)வர்கள் மாற்றிக்கொள்ளாத வரையில் அவன் மாற்றுபவனாக இல்லை என்ற காரணத்தினாலாகும், நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
Saheeh International
That is because Allah would not change a favor which He had bestowed upon a people until they change what is within themselves. And indeed, Allah is Hearing and Knowing.
كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَذَّبُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ ۚ وَكُلٌّ كَانُوْا ظٰلِمِیْنَ ۟
كَدَاْبِநிலையைப் போலاٰلِகூட்டத்தாரின்فِرْعَوْنَ ۙஃபிர்அவ்னின்وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்னால்كَذَّبُوْاபொய்ப்பித்தார்கள்بِاٰیٰتِஅத்தாட்சிகளைرَبِّهِمْதங்கள் இறைவனுடையفَاَهْلَكْنٰهُمْஎனவே நாம் அவர்களை அழித்தோம்بِذُنُوْبِهِمْஅவர்களின் பாவங்களினால்وَ اَغْرَقْنَاۤமேலும் நாம் மூழ்கடித்தோம்اٰلَகூட்டத்தினரைفِرْعَوْنَ ۚஃபிர்அவ்னின்وَ كُلٌّமேலும் அனைவரும்كَانُوْاஇருந்தார்கள்ظٰلِمِیْنَஅநியாயக்காரர்களாக
கதாBபி ஆலி Fபிர்'அவ்ன வல்லதீன மின் கBப்லிஹிம்; கத்தBபூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் Fபாஹ்லக்னாஹும் BபிதுனூBபிஹிம் வ அக்ரக்னா ஆல Fபிர்'அவ்ன்; வ குல்லுன் கானூ ளாலிமீன்
முஹம்மது ஜான்
ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, இவர்களின் நிலைமை நாம் முன்பு கூறியபடி) ஃபிர்அவ்னின் மக்களின் நிலைமையைப் போலும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையைப் போலுமே இருக்கிறது. (அவர்களும் இவர்களைப் போலவே) தங்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக நாம் (பலவகை வேதனைகளைக் கொண்டு ஃபிர்அவ்னுக்கு முன்னிருந்த) அவர்களை அழித்துவிட்டதுடன் ஃபிர்அவ்னுடைய மக்களையும் நாம் மூழ்கடித்துவிட்டோம். (இவர்கள்) அனைவரும் அநியாயக்காரர்களாகவே இருந்தனர்.
IFT
ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அவர்களுக்கு முன் சென்றவர்களுக்கும் நேர்ந்த கதி இந்த நியதியின்படியே ஏற்பட்டது. தங்களுடைய இறைவனின் சான்றுகளை அவர்கள் பொய்யெனக் கூறினார்கள். அப்போது, அவர்கள் செய்த பாவச் செயல்களின் காரணமாக அவர்களை நாம் அழித்தோம். இன்னும், ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நாம் மூழ்கடித்தோம். ஏனெனில், அவர்கள் அனைவரும் கொடுமை இழைப்பவர்களாய் இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஃபிர் அவ்னுடைய கூட்டத்தார், இன்னும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையைப் போலவே (இவர்களின் நிலைமையும் இருக்கின்றது, அவர்களும், (இவர்களைப்போலவே) தங்கள் இரட்சகனின் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர், ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக நாம் (பலவகை வேதனைகளைக் கொண்டு ஃபிர் அவ்னுக்கு முன்னிருந்த அவர்களை) அழித்துவிட்டோம், மேலும், ஃபிர் அவ்னுடைய கூட்டத்தினரை நாம் (தண்ணீரில்) மூழ்கடித்து விட்டோம், இவர்கள் ஒவ்வொருவருமே அநியாயக்காரர்களாக இருந்தனர்.
Saheeh International
[Theirs is] like the custom of the people of Pharaoh and of those before them. They denied the signs of their Lord, so We destroyed them for their sins, and We drowned the people of Pharaoh. And all [of them] were wrongdoers.
اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الَّذِیْنَ كَفَرُوْا فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟ۖۚ
اِنَّநிச்சயமாகشَرَّமிகக் கெட்டவைالدَّوَآبِّஉயிரினங்களில்عِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفَهُمْஎனவே அவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَۖۚநம்பிக்கை கொள்வார்கள்
இன்ன ஷர்ரத் தவாBப்Bபி 'இன்தல் லாஹில் லதீன கFபரூ Fபஹும் லா யு'மினூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிலெல்லாம் மிகக் கெட்ட மிருகங்கள் (எவையென்றால்) நிராகரிப்பாளர்கள்தான். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
IFT
திண்ணமாக, எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ, பிறகு (எவ்விதத்திலும்) அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லையோ அவர்கள்தாம் பூமியில் நடமாடும் படைப்புகளிலேயே அல்லாஹ்விடத்தில் மிகவும் மோசமானவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (பூமியில்) ஊர்ந்து திரிபவைகளில் மிகக் கெட்டவை நிராகரித்தார்களே அவர்கள்தாம், ஆகவே, அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
Indeed, the worst of living creatures in the sight of Allah are those who have disbelieved, and they will not [ever] believe-
اَلَّذِیْنَ عٰهَدْتَّ مِنْهُمْ ثُمَّ یَنْقُضُوْنَ عَهْدَهُمْ فِیْ كُلِّ مَرَّةٍ وَّهُمْ لَا یَتَّقُوْنَ ۟
اَلَّذِیْنَஎவர்கள்عٰهَدْتَّநீர் உடன்படிக்கை செய்தீரோمِنْهُمْஅவர்களில்ثُمَّபின்னர்یَنْقُضُوْنَஅவர்கள் முறிக்கிறார்கள்عَهْدَهُمْதங்களது உடன்படிக்கையைفِیْஇல்كُلِّஒவ்வொருمَرَّةٍமுறையும்وَّ هُمْமேலும் அவர்கள்لَاஇல்லைیَتَّقُوْنَஅஞ்சுகிறார்கள்
அல்லதீன'ஆஹத்த மின் ஹும் தும்ம யன்குளூன 'அஹ்தஹும் Fபீ குல்லி மர்ரதி(ன்)வ் வ ஹும் லா யத்தகூன்
முஹம்மது ஜான்
(நபியே!) இவர்களில் நீர் எவருடன் உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றனர்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவதேயில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களில்) எவர்களுடன் நீர் உடன்படிக்கை செய்தபோதிலும் பின்னர், அந்த உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறித்தே வருகின்றனர். இன்னும், அவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதேயில்லை.
IFT
(குறிப்பாக) உம்மோடு ஒப்பந்தம் செய்து கொண்டு பின்னர் ஒவ்வொரு முறையும் தங்களுடைய ஒப்பந்தத்தை எவர்கள் முறிக்கின்றார்களோ, மேலும் கொஞ்சமும் இறையச்சம் கொள்ளாதிருக்கின்றார்களோ அவர்கள்தாம் இவர்களில் மிகவும் கெட்டவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களில் (உள்ளோருடன்) நீர் உடன்படிக்கை செய்து கொண்டீர்; (அத்தகையோர் அல்லாஹ்விடத்தில் மிகக் கெட்டவர்களாவர்) பின்னர், அவர்களின் உடன்படிக்கையை ஒவ்வொரு தடவையும் அவர்கள் முறித்து விடுகின்றனர், அவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதுமில்லை.
Saheeh International
The ones with whom you made a treaty but then they break their pledge every time, and they do not fear Allah.
فَاِمَّا تَثْقَفَنَّهُمْ فِی الْحَرْبِ فَشَرِّدْ بِهِمْ مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
فَاِمَّاஎனவேتَثْقَفَنَّهُمْநீர் அவர்களை அகப்படுத்திக் கொண்டால்فِیஇல்الْحَرْبِபோர்فَشَرِّدْசிதறடியுங்கள்بِهِمْஅவர்களைக் கொண்டுمَّنْஎவர்களைخَلْفَهُمْஅவர்களுக்குப் பின்னால்لَعَلَّهُمْஅவர்கள்یَذَّكَّرُوْنَபடிப்பினை பெறுவார்கள்
Fப இம்மா தத்கFபன்னஹும் Fபில் ஹர்Bபி Fபஷர்ரித் Bபிஹிம் மன் கல்Fபஹும் ல'அல்லஹும் யத்தக்கரூன்
முஹம்மது ஜான்
எனவே போரில் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
போரில் நீர் அவர்களைச் சந்தித்தால் அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களும் (திடுக்கிட்டு) பயந்தோடும்படி அவர்களைச் சிதறடித்து விடுவீராக. (இதனால்) அவர்கள் நல்லறிவு பெறலாம்.
IFT
எனவே, போரில் அவர்களை நீர் சந்தித்தால் அவர்களைச் சின்னாபின்னமாய்ச் சிதற அடித்து அவர்களுக்குப் பின்வருவோரைத் திகிலடையச் செய்திட வேண்டும். (உடன்படிக்கையை மீறுவதால் ஏற்படும் தீய கதியினைக் கண்டு) அவர்கள் படிப்பினை பெறக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, யுத்தத்தில் நீங்கள் அவர்களை(த்தாக்கும் வாய்ப்பை)ப் பெற்றுவிட்டால், அவர்களைக் கொலை செய்வது கொண்டு, சிறை பிடிப்பது கொண்டு பின்னிருப்பவர்களை (பயந்தோடுமாறு) சிதறடித்து விடுவீராக! (இதனால்) அவர்கள் படிப்பினை பெறலாம்.
Saheeh International
So if you, [O Muhammad], gain dominance over them in war, disperse by [means of] them those behind them that perhaps they will be reminded.
وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِیَانَةً فَانْۢبِذْ اِلَیْهِمْ عَلٰی سَوَآءٍ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْخَآىِٕنِیْنَ ۟۠
وَ اِمَّاமேலும் ஒருவேளைتَخَافَنَّநீர் அஞ்சினால்مِنْஎந்தவொருقَوْمٍசமூகத்தாரிடமிருந்தும்خِیَانَةًமோசடியைفَانْۢبِذْஎனவே எறிந்துவிடுவீராகاِلَیْهِمْஅவர்களிடம்عَلٰیமீதுسَوَآءٍ ؕசமமாகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்الْخَآىِٕنِیْنَ۠மோசடி செய்பவர்களை
வ இம்மா தகாFபன மின் கவ்மின் கியானதன் Fபம்Bபித் இலய்ஹிம் 'அலா ஸவா'; இன்னல் லாஹ லாயுஹிBப்Bபுல் கா'இனீன்
முஹம்மது ஜான்
(உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.  
அப்துல் ஹமீது பாகவி
(உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீர் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடுவீராக. நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை.
IFT
(உடன்படிக்கை செய்து கொண்டு) ஏதாவது ஒரு கூட்டத்தினர் உம்மிடம் நம்பிக்கைத் துரோகமாக நடந்து கொள்வார்களோ என்று நீர் அஞ்சினால் (அவர்களின் உடன்படிக்கையை) வெளிப்படையாக அவர்களிடமே எறிந்து விடும்! திண்ணமாக, அல்லாஹ் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஏதாவது ஒரு கூட்டத்தினரிடமிருந்து துரோகத்தை நீர் பயந்தால், (அதற்குச்) சமமாக(வே அவ்வுடன்படிக்கையை) அவர்கள்பால் எறிந்துவிடும், நிச்சயமாக அல்லாஹ் துரோகம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
Saheeh International
If you [have reason to] fear from a people betrayal, throw [their treaty] back to them, [putting you] on equal terms. Indeed, Allah does not like traitors.
وَلَا یَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَبَقُوْا ؕ اِنَّهُمْ لَا یُعْجِزُوْنَ ۟
وَ لَاமேலும் வேண்டாம்یَحْسَبَنَّஎண்ணالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோسَبَقُوْا ؕதப்பித்துவிட்டதாகاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَاமுடியாதுیُعْجِزُوْنَதோற்கடிக்க
வ லா யஹ்ஸBபன்னல் லதீன கFபரூ ஸBபகூ; இன்னஹும் லா யுஃஜிZஜூன்
முஹம்மது ஜான்
நிராகரிப்பவர்கள் தாங்கள் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொண்டதாக எண்ணவேண்டாம்; நிச்சயமாக அவர்கள் (இறையச்சமுடையோரைத்) தோற்கடிக்கவே முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொண்டதாக ஒருபோதும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மைத்) தோற்கடிக்க முடியாது.
IFT
மேலும், இறைமறுப்பாளர்கள், தாம் தப்பித்து விட்டதாக எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். திண்ணமாக, அவர்கள் நம்மை இயலாமையில் ஆழ்த்திட முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரித்துக் கொண்டிருப்போர் (நம் தண்டனையிலிருந்து) தாங்கள் தப்பித்துவிட்டதாக அவர்கள் எண்ணவும் வேண்டாம், நிச்சயமாக அவர்கள் (நம்மை எதிலும்) இயலாமையில் ஆக்கிவிட மாட்டார்கள்.
Saheeh International
And let not those who disbelieve think they will escape. Indeed, they will not cause failure [to Allah].
وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَیْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِیْنَ مِنْ دُوْنِهِمْ ۚ لَا تَعْلَمُوْنَهُمْ ۚ اَللّٰهُ یَعْلَمُهُمْ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ شَیْءٍ فِیْ سَبِیْلِ اللّٰهِ یُوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟
وَ اَعِدُّوْاஇன்னும் தயார் செய்யுங்கள்لَهُمْஅவர்களுக்காகمَّاஎதைاسْتَطَعْتُمْஉங்களால் இயலுமோمِّنْஇருந்துقُوَّةٍபலத்தையும்وَّ مِنْஇன்னும் இருந்துرِّبَاطِலாயத்தில் கட்டப்பட்டالْخَیْلِகுதிரைகளையும்تُرْهِبُوْنَநீங்கள் அச்சமூட்டுவதற்காகبِهٖஅதன் மூலம்عَدُوَّஎதிரியைاللّٰهِஅல்லாஹ்வின்وَ عَدُوَّكُمْஇன்னும் உங்கள் எதிரியையும்وَ اٰخَرِیْنَஇன்னும் மற்றவர்களையும்مِنْஇருந்துدُوْنِهِمْ ۚஅவர்களைத் தவிரلَاஇல்லைتَعْلَمُوْنَهُمْ ۚஅவர்களை நீங்கள் அறிவீர்கள்اَللّٰهُஅல்லாஹ்یَعْلَمُهُمْ ؕஅவர்களை நன்கறிவான்وَ مَاஇன்னும் எதைتُنْفِقُوْاநீங்கள் செலவு செய்கிறீர்களோمِنْஇருந்துشَیْءٍஎந்தப் பொருளையும்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்یُوَفَّமுழுமையாக வழங்கப்படும்اِلَیْكُمْஉங்களுக்குوَ اَنْتُمْமேலும் நீங்கள்لَاஇல்லைتُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்படுவீர்கள்
வ அ'இத்தூ லஹும் மஸ்ததஃதும் மின் குவ்வதி(ன்)வ் வ மிர்ரிBபாதில் கய்லி துர்ஹிBபூன Bபிஹீ 'அதுவ்வல் லாஹி வ 'அதுவ்வகும் வ ஆகரீன மின் தூனிஹிம் லா தஃலமூ னஹும் அல்லாஹு யஃலமுஹும்; வமா துன்Fபிகூ மின் ஷய்'இன் Fபீ ஸBபீலில் லாஹி யுவFப்Fப இலய்கும் வ அன்தும் லா துள்லமூன்
முஹம்மது ஜான்
அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களைத் தவிர (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.
IFT
மேலும், அவர்களை எதிர்ப்பதற்கென உங்களால் முடிந்த அளவு அதிகமான வலிமையையும் தயார்நிலையிலுள்ள குதிரைப் படையையும் திரட்டி வையுங்கள்! இவற்றின் மூலம் அல்லாஹ்வுக்கும், உங்களுக்கும் பகைவர்களாய் உள்ளவர்களையும் இவர்கள் அல்லாத வேறு பகைவர்களையும் நீங்கள் திகிலடையச் செய்திட வேண்டும். அந்தப் பகைவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆனால் அல்லாஹ் அவர்களை அறிவான். மேலும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதனைச் செலவு செய்தாலும் அதற்குரிய முழுமையான கூலி உங்களுக்கு வழங்கப்படும். மேலும், நீங்கள் ஒருபோதும் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களுக்காக (அவர்களோடு போர் செய்வதற்காக) உங்களுக்கு பலத்தால் சாத்தியமானதையும், (திறமையான) போர்க் குதிரைகளைக் கட்டி வைப்பதையும் நீங்கள் (எந்நேரமும் தயார் செய்து வையுங்கள், இதனால், அல்லாஹ்வுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் இவர்களல்லாத மற்றவர்களையும் பயப்படச் செய்வீர்கள், அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள், அல்லாலாஹ்தான் அவர்களை அறிவான், (இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் அதன் கூலியை உங்களுக்குப் பூரணமாகவே வழங்கப்படும், (அதில் ஒரு சிறிதும்) நீங்கள் அநீதி இழைக்கப்படவுமாட்டீர்கள்.
Saheeh International
And prepare against them whatever you are able of power and of steeds of war by which you may terrify the enemy of Allah and your enemy and others besides them whom you do not know [but] whom Allah knows. And whatever you spend in the cause of Allah will be fully repaid to you, and you will not be wronged.
وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَ اِنْமேலும் ஒருவேளைجَنَحُوْاஅவர்கள் சாய்ந்தால்لِلسَّلْمِசமாதானத்தின் பக்கம்فَاجْنَحْஎனவே நீரும் சாய்வீராகلَهَاஅதன்பால்وَ تَوَكَّلْமேலும் நம்பிக்கை வைப்பீராகعَلَیமீதுاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالسَّمِیْعُசெவியேற்பவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
வ இன் ஜனஹூ லிஸ்ஸல்மி Fபஜ்னஹ் லஹா வ தவக்கல் 'அலல் லாஹ்; இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
முஹம்மது ஜான்
அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே) அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீரும் அதன் பக்கம் இணங்கிவருவீராக. அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுவீராக; நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன்.
IFT
(நபியே!) பகைவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால், நீரும் அதற்குத் தயாராகிவிடும். இன்னும், அல்லாஹ்வையே முழுவதும் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் அவர்கள் சமாதானத்தின்பக்கம் சாய்ந்தால் அப்பொழுது நபியே! நீரும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே (காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கையும் வைப்பீராக! நிச்சயமாக அவனே செவியுறுவோன், (யாவற்றையும்) நன்கறிந்தோன்.
Saheeh International
And if they incline to peace, then incline to it [also] and rely upon Allah. Indeed, it is He who is the Hearing, the Knowing.
وَاِنْ یُّرِیْدُوْۤا اَنْ یَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُ ؕ هُوَ الَّذِیْۤ اَیَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِیْنَ ۟ۙ
وَ اِنْஇன்னும் ஒருவேளைیُّرِیْدُوْۤاஅவர்கள் நாடினால்اَنْஎன்றுیَّخْدَعُوْكَஉம்மை ஏமாற்றفَاِنَّஆகவே நிச்சயமாகحَسْبَكَஉமக்குப் போதுமானவன்اللّٰهُ ؕஅல்லாஹ்هُوَஅவனேالَّذِیْۤஎத்தகையவன் என்றால்اَیَّدَكَஉம்மை வலுவூட்டினான்بِنَصْرِهٖதன் உதவியைக் கொண்டுوَ بِالْمُؤْمِنِیْنَۙமேலும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும்
வ இ(ன்)ய் யுரீதூ அ(ன்)ய்-யக்த'ஊக Fப இன்ன ஹஸ்Bபகல் லாஹ்; ஹுவல் லதீ அய்யதக Bபினஸ்ரிஹீ வ Bபில்மு'மினீன்
முஹம்மது ஜான்
அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (உம்மைப் பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கிறான். அவன்தான் உம்மை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
IFT
அவர்கள் உம்மை ஏமாற்ற முனைந்தால் அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கின்றான். தன்னுடைய உதவியினாலும் இறைநம்பிக்கையாளர் மூலமாகவும் உமக்கு வலுவூட்டியவனும் அவனே.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) அவர்கள் ஏமாற்றி உமக்குச் சதி செய்யக் கருதினால் அப்பொழுது (உம்மைப் பாதுகாக்க) நிச்சயமாக, அல்லாஹ் உமக்குப் போதுமானவன், அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், விசுவாசிகளைக் கொண்டும் பலப்படுத்தினான்.
Saheeh International
But if they intend to deceive you - then sufficient for you is Allah. It is He who supported you with His help and with the believers
وَاَلَّفَ بَیْنَ قُلُوْبِهِمْ ؕ لَوْ اَنْفَقْتَ مَا فِی الْاَرْضِ جَمِیْعًا مَّاۤ اَلَّفْتَ بَیْنَ قُلُوْبِهِمْ وَلٰكِنَّ اللّٰهَ اَلَّفَ بَیْنَهُمْ ؕ اِنَّهٗ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
وَ اَلَّفَமேலும் அவன் இணைத்தான்بَیْنَஇடையேقُلُوْبِهِمْ ؕஅவர்களின் உள்ளங்களைلَوْஒருவேளைاَنْفَقْتَநீர் செலவு செய்திருந்தாலும்مَاஎவற்றைفِیஉள்ளالْاَرْضِபூமியில்جَمِیْعًاஅனைத்தையும்مَّاۤஇல்லைاَلَّفْتَநீர் இணைத்திருக்கبَیْنَஇடையேقُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்களைوَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்اَلَّفَஇணைத்தான்بَیْنَهُمْ ؕஅவர்களுக்கிடையேاِنَّهٗநிச்சயமாக அவன்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
வ அல்லFப Bபய்ன குலூBபிஹிம்; லவ் அன்Fபக்த மா Fபில் அர்ளி ஜமீ'அம் மா அல்லFப்த Bபய்ன குலூBபிஹிம் வ லாகின்னல்லாஹ அல்லFப Bபய்னஹும்; இன்னாஹூ 'அZஜீZஜுன் ஹகீம்
முஹம்மது ஜான்
மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அந்த நம்பிக்கையாளர்களுடைய உள்ளங்களில் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி (சிதறிக்கிடந்த அவர்களை) ஒன்று சேர்த்தான். பூமியிலுள்ள அனைத்தையும் நீர் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட உம்மால் முடியாது. எனினும், அல்லாஹ்தான் அவர்களை (அன்பின் மூலம்) ஒன்று சேர்த்தான். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன்.
IFT
அவர்களுக்கிடையே உளப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியவனும் அவனே! உலகத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் நீர் செலவழித்தாலும் அவர்களிடையே உளப்பூர்வமான இணைப்பை உம்மால் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆயினும், அல்லாஹ் அவர்களின் உள்ளங்களைப் பிணைத்தான். திண்ணமாக, அவன் வலிமைமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (விசுவாசிகளாகிய) அவர்களுடைய இதயங்களுக்கிடையில் (சிதறிக்கிடந்த அவர்களை இஸ்லாத்தின் மூலம்) அன்பையூட்டினான், பூமியிலுள்ள யாவையும் நீர் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய இதயங்களில் அன்பையூட்ட உம்மால் முடிந்திருக்காது, எனினும், அல்லாஹ்தான் அவர்களுக்கிடையில் அன்பை உண்டாக்கினான், நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
And brought together their hearts. If you had spent all that is in the earth, you could not have brought their hearts together; but Allah brought them together. Indeed, He is Exalted in Might and Wise.
یٰۤاَیُّهَا النَّبِیُّ حَسْبُكَ اللّٰهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟۠
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேحَسْبُكَஉமக்குப் போதுமானவன்اللّٰهُஅல்லாஹ்وَ مَنِமேலும் எவர்اتَّبَعَكَஉம்மைப் பின்பற்றினாரோمِنَஇருந்துالْمُؤْمِنِیْنَ۠முஃமின்கள்
யா அய்யுஹன் னBபிய்யு ஹஸ்Bபுகல் லாஹு வ மனித்தBப 'அக மினல் மு'மினீன்
முஹம்மது ஜான்
நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
நபியே! உமக்கும், நம்பிக்கையாளர்களில் உம்மைப் பின்பற்றியவர்களுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
IFT
நபியே! உமக்கும், உம்மைப் பின்பற்றுகின்ற இறைநம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! உமக்கும் உம்மைப் பின்பற்றிய விசுவாசிகளுக்கும் அல்லாஹ் போதுமானவன்.
Saheeh International
O Prophet, sufficient for you is Allah and for whoever follows you of the believers.
یٰۤاَیُّهَا النَّبِیُّ حَرِّضِ الْمُؤْمِنِیْنَ عَلَی الْقِتَالِ ؕ اِنْ یَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صٰبِرُوْنَ یَغْلِبُوْا مِائَتَیْنِ ۚ وَاِنْ یَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ یَّغْلِبُوْۤا اَلْفًا مِّنَ الَّذِیْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேحَرِّضِஆர்வமூட்டுவீராகالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களைعَلَیமீதுالْقِتَالِ ؕபோரின்اِنْஒருவேளைیَّكُنْஇருந்தால்مِّنْكُمْஉங்களில்عِشْرُوْنَஇருபதுصٰبِرُوْنَபொறுமையாளர்கள்یَغْلِبُوْاஅவர்கள் வெற்றி கொள்வார்கள்مِائَتَیْنِ ۚஇருநூறு பேரைوَ اِنْமேலும் ஒருவேளைیَّكُنْஇருந்தால்مِّنْكُمْஉங்களில்مِّائَةٌநூறு பேர்یَّغْلِبُوْۤاஅவர்கள் வெற்றி கொள்வார்கள்اَلْفًاஆயிரம் பேரைمِّنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்قَوْمٌஒரு சமூகத்தினர்لَّاஇல்லைیَفْقَهُوْنَவிளங்கிக் கொள்கிறார்கள்
யா அய்யுஹன் னBபிய்யு ஹர்ரிளில் மு'மினீன 'அலல் கிதால்; இ(ன்)ய்-யகும் மின்கும் 'இஷ்ரூன ஸாBபிரூன யக்லிBபூ மி'அதய்ன்; வ இ(ன்)ய்-யகும் மின்கும் மி'அது(ன்)ய் யக்லிBபூ அல்Fபம் மினல் லதீன கFபரூ Bபி அன்னஹும் கவ்முல் லா யFப்கஹூன்
முஹம்மது ஜான்
நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).
அப்துல் ஹமீது பாகவி
நபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் (தயாராகும்படித்) தூண்டுவீராக. உங்களில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் உடைய இருபது பேர்கள் இருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு பேர்கள் இருந்தால் நிராகரிப்பவர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். (நீங்கள் மிகக் குறைவாக இருந்தும் அவர்களை துணிவுடன் எதிர்க்கலாம் என்று கூறியது, உங்களுக்கு அல்லாஹ் புரியும் உதவியை). நிச்சயமாக அவர்கள் அறியாத மக்களாக இருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.
IFT
நபியே! போர்புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக! உங்களில் நிலைகுலையாத இருபது பேர் இருப்பின் (இறைமறுப்பாளர்களில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும், இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால், இறை மறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்; ஏனெனில், இவர்கள் புரிந்துகொள்ளாத மக்களாக இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! நீர், விசுவாசிகளை யுத்தத்திற்குத் (தயாராகும்படி) தூண்டுவீராக! உங்களில் (சகிப்புத்,தன்மையும், உறுதியும் கொண்ட) பொறுமையாளர்களான இருபது பேர்களிருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள், உங்களில் (அத்தகைய) நூறு பேர்களிருந்தால், நிராகரிப்போரில் ஆயிரம்பேரை வெற்றிக்கொண்டு விடுவார்கள், நிச்சயமாக இவர்கள், விளங்கிக் கொள்ளாத கூட்டத்தினராக இருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.
Saheeh International
O Prophet, urge the believers to battle. If there are among you twenty [who are] steadfast, they will overcome two hundred. And if there are among you one hundred [who are steadfast], they will overcome a thousand of those who have disbelieved because they are a people who do not understand.
اَلْـٰٔنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِیْكُمْ ضَعْفًا ؕ فَاِنْ یَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ یَّغْلِبُوْا مِائَتَیْنِ ۚ وَاِنْ یَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ یَّغْلِبُوْۤا اَلْفَیْنِ بِاِذْنِ اللّٰهِ ؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟
اَلْـٰٔنَஇப்பொழுதுخَفَّفَஇலகுவாக்கினான்اللّٰهُஅல்லாஹ்عَنْكُمْஉங்களுக்குوَ عَلِمَமேலும் அறிந்தான்اَنَّஎன்றுفِیْكُمْஉங்களிடம்ضَعْفًا ؕபலவீனம்فَاِنْஎனவேیَّكُنْஇருந்தால்مِّنْكُمْஉங்களில்مِّائَةٌநூறுصَابِرَةٌபொறுமையாளர்கள்یَّغْلِبُوْاவெற்றி கொள்வார்கள்مِائَتَیْنِ ۚஇருநூறு பேரைوَ اِنْமேலும்یَّكُنْஇருந்தால்مِّنْكُمْஉங்களில்اَلْفٌஆயிரம் பேர்یَّغْلِبُوْۤاவெற்றி கொள்வார்கள்اَلْفَیْنِஇரண்டாயிரம் பேரைبِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்مَعَஉடன் இருக்கிறான்الصّٰبِرِیْنَபொறுமையாளர்கள்
அல்'ஆன கFப்FபFபல் லாஹு 'அன்கும் வ 'அலிம அன்ன Fபீகும் ளஃFபா; Fப-இ(ன்)ய் யகும் மின்கும் மி'அதுன் ஸாBபிரது(ன்)ய் யக்லிBபூ மி'அதய்ன்; வ இ(ன்)ய்-யகும் மின்கும் அல்Fபு(ன்)ய் யக்லிBபூ அல்Fபய்னி Bபி இத்னில் லாஹ்; வல்லாஹு ம'அஸ் ஸாBபிரீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு தற்சமயம் (அதை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். ஆகவே, உங்களில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் உடைய நூறு பேர்களிருந்தால் (மற்ற) இருநூறு பேர்களை வென்றுவிடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களில் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கொண்டு (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வென்று விடுவார்கள். அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
IFT
இப்போது அல்லாஹ் உங்கள் சுமையைக் குறைத்துவிட்டான். இப்பொழுதும் உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே, உங்களில் நூறு பேர் உறுதி குலையாதவர்களாய் இருந்தால், இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். அத்தகையோர் உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இரண்டாயிரம் பேரை அவர்கள் வென்று விடுவார்கள். மேலும், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு - இப்பொழுது (அதனை) உங்களுக்கு இலேசாக்கி விட்டான், ஆகவே – உங்களில் (சகிப்புத் தன்மையும்- உறுதியும் கொண்ட) பொறுமையுடைய நூறு பேர்களிருந்தால், (மற்ற) இரு நூறு பேர்களை அவர்கள் வெற்றி கொண்டு விடுவார்கள், (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களில் இருந்தால் அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு (மற்ற) இரண்டாயிரம் பேர்களை அவர்கள் வெற்றி கொண்டு விடுவார்கள். அல்லாஹ்வோ பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
Saheeh International
Now, Allah has lightened [the hardship] for you, and He knows that among you is weakness. So if there are from you one hundred [who are] steadfast, they will overcome two hundred. And if there are among you a thousand, they will overcome two thousand by permission of Allah. And Allah is with the steadfast.
مَا كَانَ لِنَبِیٍّ اَنْ یَّكُوْنَ لَهٗۤ اَسْرٰی حَتّٰی یُثْخِنَ فِی الْاَرْضِ ؕ تُرِیْدُوْنَ عَرَضَ الدُّنْیَا ۖۗ وَاللّٰهُ یُرِیْدُ الْاٰخِرَةَ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
مَاஇல்லைكَانَதகாதுلِنَبِیٍّஒரு நபிக்குاَنْஎன்றுیَّكُوْنَஇருக்கلَهٗۤஅவருக்குاَسْرٰیபோர்க்கைதிகள்حَتّٰیவரைیُثْخِنَஅவர் முற்றிலும் முறியடிக்கும்فِیஇல்الْاَرْضِ ؕபூமிتُرِیْدُوْنَநீங்கள் நாடுகிறீர்கள்عَرَضَஆதாயத்தைالدُّنْیَا ۖۗஇவ்வுலகின்وَ اللّٰهُஆனால் அல்லாஹ்یُرِیْدُநாடுகிறான்الْاٰخِرَةَ ؕமறுமையைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
மா கான லி னBபிய்யின் அய் யகூன லஹூ அஸ்ரா ஹத்தா யுத்கின Fபில் அர்ள்; துரீதூன அரளத் துன்யா வல்லாஹு யுரீதுல் ஆகிரஹ்; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
முஹம்மது ஜான்
(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளை கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்க்கையை விரும்புகிறான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
IFT
பூமியில் பகைவர்களை முற்றிலும் முறியடிக்காத வரையில் அவர்களைச் சிறைப்பிடிப்ப(தில் ஈடுபடுவ)து எந்த நபிக்கும் உகந்ததல்ல. நீங்கள் உலக ஆதாயங்களை விரும்புகிறீர்கள். ஆனால், அல்லாஹ் (உங்களுக்கு) மறுமை நலன்களை விரும்புகின்றான். மேலும், அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எந்த நபிக்கும் இரத்தத்தைப் பூமியில் ஓட்டாத வரையில் போர்க்கைதிகள் அவருக்கு இருப்பது தகுமானதல்ல; நீங்கள் இவ்வுலகப் பொருளை நாடுகின்றீர்கள், அல்லாஹ்வோ (உங்களுடைய) மறுமை (வாழ்க்கை)யை நாடுகின்றான், இன்னும் அல்லாஹ் மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
It is not for a prophet to have captives [of war] until he inflicts a massacre [upon Allah's enemies] in the land. You [i.e., some Muslims] desire the commodities of this world, but Allah desires [for you] the Hereafter. And Allah is Exalted in Might and Wise.
لَوْلَا كِتٰبٌ مِّنَ اللّٰهِ سَبَقَ لَمَسَّكُمْ فِیْمَاۤ اَخَذْتُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟
لَوْ لَاஇல்லாவிட்டால்كِتٰبٌஒரு விதிمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்سَبَقَமுந்தியிருக்கلَمَسَّكُمْஉங்களைத் தீண்டியிருக்கும்فِیْمَاۤஎதில்اَخَذْتُمْநீங்கள் எடுத்தீர்களோعَذَابٌவேதனைعَظِیْمٌமகத்தான
லவ் லா கிதாBபும் மினல் லாஹி ஸBபக லமஸ்ஸகும் Fபீ மா அகத்தும் 'அதாBபுன் 'அளீம்
முஹம்மது ஜான்
அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்விடம் (உங்களுக்கு மன்னிப்பு) ஏற்கனவே உறுதி செய்யப் படாமலிருப்பின் நீங்கள் (பத்ரு போரில் கைதிகளிடமிருந்து பிணைத் தொகையை) வாங்கியதில் பெரியதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும்.
IFT
அல்லாஹ்வின் தீர்ப்பு முன்னரே எழுதப்படாமல் இருந்தால், நீங்கள் (கைதிகளிடமிருந்து) பெற்றுக் கொண்டவற்றுக்குப் பகரமாக உங்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்விடமிருந்து ஓர் எழுத்து முந்தி விடாதிருப்பின், நீங்கள், (பத்ருப்போரின் போது ஈட்டுப் பணத்தை) எடுத்துக்கொண்டதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும்.
Saheeh International
If not for a decree from Allah that preceded, you would have been touched for what you took by a great punishment.
فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلًا طَیِّبًا ۖؗ وَّاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
فَكُلُوْاஎனவே உண்ணுங்கள்مِمَّاஎவற்றிலிருந்துغَنِمْتُمْநீங்கள் போரில் பெற்றீர்களோحَلٰلًاஆகுமாக்கப்பட்டதாகطَیِّبًا ۖؗதூய்மையானதாகوَّ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌ۠நிகரற்ற அன்புடையவன்
Fபகுலூ மிம்மா கனிம்தும் ஹலாலன் தய்யிBபா; வத்த குல்லாஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலானவையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.  
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (எதிரிகளிடமிருந்து) உங்களுக்குக் கிடைத்தவற்றை, நல்ல ஆகுமான பொருள்களாகவே (கருதிப்) புசியுங்கள். (இனி இத்தகைய விஷயங்களில்) அல்லாஹ் வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.
IFT
எனவே, நீங்கள் போரில் கைப்பற்றிய பொருள்களை உண்ணுங்கள்; அவை அனுமதிக்கப்பட்டவையும் தூய்மையானவையுமாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்து வாருங்கள்! திண்ணமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, போரில் நீங்கள் அடைந்த வெற்றிப்பொருளிலிருந்து (அதை) ஆகுமானதாக, நல்லதாக(ப்) புசியுங்கள், மேலும், அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் மிக்க நன்கறிகிறவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
So consume what you have taken of war booty [as being] lawful and good, and fear Allah. Indeed, Allah is Forgiving and Merciful.
یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّمَنْ فِیْۤ اَیْدِیْكُمْ مِّنَ الْاَسْرٰۤی ۙ اِنْ یَّعْلَمِ اللّٰهُ فِیْ قُلُوْبِكُمْ خَیْرًا یُّؤْتِكُمْ خَیْرًا مِّمَّاۤ اُخِذَ مِنْكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேقُلْகூறுவீராகلِّمَنْஎவர்களிடம்فِیْۤஉள்ளார்களோاَیْدِیْكُمْஉங்கள் கைகளில்مِّنَஇருந்துالْاَسْرٰۤی ۙகைதிகளில்اِنْஎன்றால்یَّعْلَمِஅறிந்தால்اللّٰهُஅல்லாஹ்فِیْஉள்ளقُلُوْبِكُمْஉங்கள் இதயங்களில்خَیْرًاநன்மையைیُّؤْتِكُمْஅவன் உங்களுக்கு வழங்குவான்خَیْرًاசிறந்ததைمِّمَّاۤஎதை விடاُخِذَஎடுக்கப்பட்டதோمِنْكُمْஉங்களிடமிருந்துوَ یَغْفِرْமேலும் அவன் மன்னிப்பான்لَكُمْ ؕஉங்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
யா அய்யுஹன் னBபிய்யு குல் லிமன் Fபீ அய்தீகும் மினல் அஸ்ரா இ(ன்)ய்-யஃலமில்லஹு Fபீ குலூBபிகும் கய்ர(ன்)ய் யு'திகும் கய்ரம் மிம்மா உகித மின்கும் வ யக்Fபிர் லகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக: “உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுத்துக் கொள்ளப்பட்டதைவிட (இவ்வுலகில்) மேலானதை உங்களுக்கு அவன் கொடுப்பான்; (மறுமையில்) உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் - அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நபியே! உங்களிடம் சிறைப்பட்டிருப்பவர்களை நோக்கிக் கூறும்: ‘‘உங்கள் உள்ளங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டவற்றைவிட மிக்க மேலானவற்றை உங்களுக்குக் கொடுத்து உங்கள் குற்றங்களை (அவன்) மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.
IFT
நபியே! உங்கள் கைவசத்திலுள்ள கைதிகளிடம் நீர் கூறும்: “உங்கள் உள்ளங்களில் (சிறிதளவாவது) நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிவானாகில், உங்களிட மிருந்து வாங்கப்பட்டதை விடவும் சிறப்பானதை அவன் உங்களுக்கு வழங்குவான். உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! உங்கள் கைகளின் வசத்தில் இருக்கும் கைதிகளிடம் கூறுவீராக! “உங்களுடைய உள்ளங்களில் ஏதேனும் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுக்கப்பட்டதைவிட மிக சிறந்ததை உங்களுக்குக் கொடுப்பான், இன்னும் அல்லாஹ், மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
O Prophet, say to whoever is in your hands of the captives, "If Allah knows [any] good in your hearts, He will give you [something] better than what was taken from you, and He will forgive you; and Allah is Forgiving and Merciful."
وَاِنْ یُّرِیْدُوْا خِیَانَتَكَ فَقَدْ خَانُوا اللّٰهَ مِنْ قَبْلُ فَاَمْكَنَ مِنْهُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
وَ اِنْமேலும், ஒருவேளைیُّرِیْدُوْاஅவர்கள் நாடினால்خِیَانَتَكَஉமக்குத் துரோகம் செய்யفَقَدْநிச்சயமாகخَانُواஅவர்கள் துரோகம் செய்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குمِنْஇதற்குقَبْلُமுன்னரேفَاَمْكَنَஎனவே அவன் வாய்ப்பளித்தான்مِنْهُمْ ؕஅவர்கள் மீதுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
வ இ(ன்)ய்-யுரீதூ கியா னதக Fபகத் கானுல்லாஹ மின் கBப்லு Fப அம்கன மின்ஹும்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
முஹம்மது ஜான்
(நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (கவலைப்படாதீர்); இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கே மோசம் செய்யக் கருதினார்கள்; (ஆதலால் தான் அவர்களைச் சிறை பிடிக்க) அவர்கள் மீது உமக்கு சக்தியை அவன் அளித்தான். அல்லாஹ் (எல்லாம்) அறிபவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர்.) இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கும் சதி செய்யக் கருதினார்கள். ஆதலால்தான் அவர்களைச் சிறைப்படுத்த (உங்களுக்கு) வசதியளித்தான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவன் ஞானமுடையவன் ஆவான்.
IFT
ஆயினும், அவர்கள் உமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய நினைத்தால் - இதற்கு முன் அவர்கள் அல்லாஹ்வுக்கே நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள். அதனால்தான் அல்லாஹ் உம்மைக் கொண்டு அவர்களைக் கைது செய்ய வைத்தான் அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம்.) இதற்கு முன்னரும் அவர்கள், அல்லாஹ்வுக்கு மோசம் செய்திருக்கிறார்கள், ஆதலால்தான், அவர்களிலிருந்து(ச் சிறைப்படுத்த உமக்கு) அவன் சக்தி அளித்தான், அல்லாஹ் (அனைத்தையும்) மிக்க அறிந்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
But if they intend to betray you - then they have already betrayed Allah before, and He empowered [you] over them. And Allah is Knowing and Wise.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالَّذِیْنَ اٰوَوْا وَّنَصَرُوْۤا اُولٰٓىِٕكَ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَلَمْ یُهَاجِرُوْا مَا لَكُمْ مِّنْ وَّلَایَتِهِمْ مِّنْ شَیْءٍ حَتّٰی یُهَاجِرُوْا ۚ وَاِنِ اسْتَنْصَرُوْكُمْ فِی الدِّیْنِ فَعَلَیْكُمُ النَّصْرُ اِلَّا عَلٰی قَوْمٍ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோوَ هَاجَرُوْاமேலும் ஹிஜ்ரத் செய்தார்களோوَ جٰهَدُوْاமேலும் அறப்போர் செய்தார்களோبِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களைக் கொண்டுوَ اَنْفُسِهِمْமேலும் தங்கள் உயிர்களைக் கொண்டுفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰوَوْاபுகலிடம் அளித்தார்களோوَّ نَصَرُوْۤاமேலும் உதவி செய்தார்களோاُولٰٓىِٕكَஅத்தகையோர்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِیَآءُபாதுகாவலர்கள்بَعْضٍ ؕசிலருக்குوَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோوَ لَمْமேலும் இல்லைیُهَاجِرُوْاஅவர்கள் ஹிஜ்ரத் செய்யمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஇருந்துوَّلَایَتِهِمْஅவர்களின் பாதுகாப்பில்مِّنْஇருந்துشَیْءٍயாதொன்றும்حَتّٰیவரைیُهَاجِرُوْا ۚஅவர்கள் ஹிஜ்ரத் செய்யும்وَ اِنِமேலும் ஒருவேளைاسْتَنْصَرُوْكُمْஅவர்கள் உங்களிடம் உதவி கோரினால்فِیஇல்الدِّیْنِமார்க்கத்தில்فَعَلَیْكُمُஅப்போது உங்கள் மீது கடமையாகும்النَّصْرُஉதவி செய்வதுاِلَّاதவிரعَلٰیஎதிராகقَوْمٍۭஒரு சமூகத்திற்குبَیْنَكُمْஉங்களுக்கும்وَ بَیْنَهُمْஅவர்களுக்கும் இடையில்مِّیْثَاقٌ ؕஉடன்படிக்கைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோبَصِیْرٌஉற்று நோக்குபவன்
இன்னல் லதீன ஆமனூ வ ஹாஜரூ வ ஜாஹதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன ஆவவ் வ னஸரூ உலா'இக Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; வல்லதீன ஆமனூ வ லம் யுஹாஜிரூ மா லகும் மி(ன்)வ் வலாயதிஹிம் மின் ஷய்'இன் ஹத்தா யுஹாஜிரூ; வ இனிஸ்தன் ஸரூகும் Fபித் தீனி Fப'அலய்கு முன்னஸ்ரு இல்லா 'அலா கவ்மின் Bபய்னகும் வ Bபய்னஹும் மீதாக்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும்; எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள் - எவர் ஈமான் கொண்டு (இன்னும் தம்) ஊரைவிட்டு வெளியேறவில்லையோ, அவர்கள் நாடுதுறக்கும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளியல்ல; எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும் - ஆனால் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தியாகம் செய்து போர் புரிந்தார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மற்றும் பல) உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இவ்விரு வகுப்பாரும் ஒருவருக்கொருவர் பொறுப்பு வகிக்கும் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆயினும், நம்பிக்கை கொண்டவர்களில் எவர்கள் இன்னும் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படாமல் இருக்கின்றனரோ அவர்கள் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படும் வரை நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திற்கும் பொறுப்பாளிகளல்லர். எனினும், அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். ஆயினும், உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு வகுப்பினருக்கு எதிராக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
IFT
எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் ஹிஜ்ரத் செய்து (நாட்டைத் துறந்து சென்று) அல்லாஹ்வின் வழியில் தங்களின் உயிர்களாலும் உடைமைகளாலும் போர் புரிகின்றார்களோ அவர்களும், எவர்கள் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு) தஞ்சம் அளித்து உதவியும் புரிந்தார்களோ அவர்களும் உண்மையில் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். ஆனால் எவர்கள் நம்பிக்கை கொண்ட பின்பும் (தாருல் இஸ்லாமிற்கு) ஹிஜ்ரத் செய்யவில்லையோ, அவர்களுடைய எந்த விஷயத்திற்கும் நீங்கள் பொறுப்பாளர்கள் அல்லர்; அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரையில்! ஆயினும் மார்க்க விவகாரங்களில் உங்களிடம் அவர்கள் உதவிகோரினால் அவர்களுக்கு உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும். ஆனால், (இந்த உதவிகூட) உங்களோடு உடன்படிக்கை செய்துள்ள கூட்டத்தாருக்கு எதிரானதாக இருக்கக்கூடாது. நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசங் கொண்டு (தங்கள்) ஊரைவிட்டும் வெளியேறி அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தார்களே அத்தகையோரும், அவர்களுக்கு(த் தங்கள் வீடுகளில் இடமளித்து (வைத்துக் கொண்டு) உதவியும் புரிந்தார்களே அத்தகையோருமாகிய இவர்கள்-இவர்களில் சிலர் சிலருக்கு உற்ற நண்பர்களாவார்கள், இன்னும் விசுவாசங்கொண்டு (தங்கள்) ஊரைவிட்டு ஹிஜ்ரத்துச் செய்து புறப்படாமலிருக்கின்றனரே அத்தகையவர்கள்-அவர்கள், (தங்களுடைய) ஊரைவிட்டு புறப்படும் (ஹிஜ்ரத்துச் செய்யும்) வரையில் அவர்களுடைய நட்பில் உங்களுக்கு எதுவும் இல்லை, (எனினும்) அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும், (ஆயினும் வேறொரு சமூகத்தாராகிய) அவர்களுக்கும், உங்களுக்குமிடையில் உடன்படிக்கை உள்ள(தோ அந்த) சமூகத்தாரைத் தவிர, (அவர்களுக்கு விரோதமாக உதவி செய்வது கூடாது.) மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை பார்க்கிறவன்.
Saheeh International
Indeed, those who have believed and emigrated and fought with their wealth and lives in the cause of Allah and those who gave shelter and aided - they are allies of one another. But those who believed and did not emigrate - for you there is no support of them until they emigrate. And if they seek help of you for the religion, then you must help, except against a people between yourselves and whom is a treaty. And Allah is Seeing of what you do.
وَالَّذِیْنَ كَفَرُوْا بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ اِلَّا تَفْعَلُوْهُ تَكُنْ فِتْنَةٌ فِی الْاَرْضِ وَفَسَادٌ كَبِیْرٌ ۟ؕ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِیَآءُபாதுகாவலர்கள்بَعْضٍ ؕசிலருக்குاِلَّاஇல்லையெனில்تَفْعَلُوْهُநீங்கள் அதைச் செய்யாவிட்டால்تَكُنْஏற்படும்فِتْنَةٌகுழப்பம்فِیஇல்الْاَرْضِபூமிوَ فَسَادٌமேலும் சீர்குலைவுكَبِیْرٌؕமிகப் பெரிய
வல்லதீன கFபரூ Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; இல்லா தFப்'அலூஹு தகுன் Fபித்னதுன் Fபில் அர்ளி வ Fபஸாதுன் கBபீர்
முஹம்மது ஜான்
நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களில் சிலர், அவர்களில் சிலருக்கு நண்பர்களே! (ஆகவே, அவர்களில் சிலர் சிலருடைய பொருளை சுதந்திரமாக அடைய விட்டுவிடுங்கள்.) இவ்வாறு நீங்கள் செய்யாவிடில், பூமியில் பெரும் கலகமும் குழப்பமும் ஏற்பட்டுவிடும்.
IFT
சத்தியத்தை நிராகரித்துக் கொண்டிருப்போர் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். எனவே, நீங்கள் இவ்வாறு செய்யாவிடில் பூமியில் குழப்பமும் பெரும் சீர்குலைவும் ஏற்பட்டுவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிராகரித்துக் கொண்டிருப்பவர்கள்-அவர்களில் சிலர், சிலருக்கு பாதுகாவலர்களாவர், (இணை வைப்பவர்களைத் தவிர்த்து விசுவாசிகளை நீங்கள் உங்களின் காரியஸ்தர்களாக ஆக்கிக் கொள்ளும்) இதை நீங்கள் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டுவிடும்.
Saheeh International
And those who disbelieved are allies of one another. If you do not do so [i.e., ally yourselves with other believers], there will be fitnah [i.e., disbelief and oppression] on earth and great corruption.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالَّذِیْنَ اٰوَوْا وَّنَصَرُوْۤا اُولٰٓىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ هَاجَرُوْاமேலும் நாடு துறந்தார்களோوَ جٰهَدُوْاமேலும் அறப்போர் செய்தார்களோفِیْஇல்سَبِیْلِபாதைاللّٰهِஅல்லாஹ்வின்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰوَوْاபுகலிடம் அளித்தார்களோوَّ نَصَرُوْۤاமேலும் உதவி செய்தார்களோاُولٰٓىِٕكَஅவர்கள்தாம்هُمُஅவர்கள்الْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்حَقًّا ؕஉண்மையாகவேلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّ رِزْقٌமேலும் வாழ்வாதாரம்كَرِیْمٌகண்ணியமான
வல்லதீன ஆமனூ வ ஹாஜரூ வ ஜாஹதூ Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன ஆவவ் வ னஸரூ உலா'இக ஹுமுல் மு'மினூன ஹக்கா; லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
முஹம்மது ஜான்
எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்கு புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள் - அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் போர்புரிகிறார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மேலும், பல) உதவியும் செய்கிறார்களோ அவர்களும்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு.
IFT
மேலும், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, மேலும் ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் வழியில் போராடினார்களோ அவர்களும், எவர்கள் தஞ்சம் அளித்து உதவி புரிந்தார்களோ அவர்களும்தாம் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாவர். அவர்களுக்குப் பாவமன்னிப்பு இருக்கிறது. மேலும் நற்பேறுகளும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டு (தங்களுடைய) ஊரை விட்டும் வெளியேறி (ஹிஜ்ரத்தும் செய்து) அல்லாஹ்வுடைய பாதையில் யுத்தம் புரிகின்றார்களே அத்தகையோரும் இன்னும், இவர்களுக்கு இடமளித்து(த் தங்களுடைய வீடுகளில்) வைத்துக் கொண்டு இவர்களுக்கு உதவியும் செய்கின்றார்களே அத்தகையோருமாகிய இவர்கள் தாம் உண்மையான விசுவாசிகள், அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான ஆகாரமும் உண்டு.
Saheeh International
But those who have believed and emigrated and fought in the cause of Allah and those who gave shelter and aided - it is they who are the believers, truly. For them is forgiveness and noble provision.
وَالَّذِیْنَ اٰمَنُوْا مِنْ بَعْدُ وَهَاجَرُوْا وَجٰهَدُوْا مَعَكُمْ فَاُولٰٓىِٕكَ مِنْكُمْ ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰی بِبَعْضٍ فِیْ كِتٰبِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோمِنْۢஇருந்துبَعْدُபின்னர்وَ هَاجَرُوْاமேலும் ஹிஜ்ரத் செய்தார்களோوَ جٰهَدُوْاமேலும் அறப்போர் செய்தார்களோمَعَكُمْஉங்களுடன்فَاُولٰٓىِٕكَஅத்தகையவர்கள்مِنْكُمْ ؕஉங்களைச் சேர்ந்தவர்களேوَ اُولُواமேலும் உடையவர்கள்الْاَرْحَامِஇரத்த உறவுகள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلٰیஅதிக உரிமையுடையவர்கள்بِبَعْضٍசிலருக்குفِیْஇல்كِتٰبِவேதத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌ۠நன்கறிந்தவன்
வல்லதீன ஆமனூ மின் Bபஃது வ ஹாஜரூ வ ஜாஹதூ ம'அகும் Fப உலா'இக மின்கும்; வ உலுல் அர்ஹாமி Bபஃளுஹும் அவ்லா BபிBபஃளின் Fபீ கிதாBபில் லாஹ்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
முஹம்மது ஜான்
இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மார்க்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே; ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(இதன் பின்னரும் மக்காவாசிகளில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து (எதிரியை எதிர்த்து) போர் புரிகிறார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே! இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே, ஒருவர் மற்றவருக்கு பொறுப்பு வகிப்பார்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
IFT
மேலும் அவர்களுக்குப் பின்னர் எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து, மேலும் உங்களுடன் சேர்ந்து போராடினார்களோ, அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்கள்தாம். ஆயினும், அல்லாஹ்வின் வேதப்படி, இரத்தபந்தமுடையவர்கள்தாம் ஒருவர் மற்றொருவருக்கு உதவுவதில் அதிக உரிமையுடையவர்களாவர். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதன் பின்னரும் விசுவாசங்கொண்டு (தங்களுடைய) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து விரோதியை எதிர்த்து யுத்தம் புரிகின்றார்களே அத்தகையோர் - அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள்; (இன்னும்) இரத்தக்கலப்புடைய பந்துக்கள் அல்லாஹ்வுடைய வேதத்தில் உள்ளபடி அவர்களில் சிலர் சிலருக்கு (வாரிசு உரிமை பெற) மிக உரியவர்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகிறவன்.
Saheeh International
And those who believed after [the initial emigration] and emigrated and fought with you - they are of you. But those of [blood] relationship are more entitled [to inheritance] in the decree of Allah. Indeed, Allah is Knowing of all things.